காதல் காலமிது -9
ப்யார் தோ ஹோனா ஹி தா
“ஹாய் ஹலோ வியூவர்ஸ்! முந்தின வீடியோல நம்ம லந்துவும் பந்துவும் ஒரு டீக்கடைக்காரர் கிட்ட மொக்க வாங்க வீடியோக் காட்சிகளைப் பார்த்தீங்க. இப்ப நாம ரிசார்ட்டுக்குள்ளே இருக்குற ஒரு விண்டேஜ் காபி ஷாப்ல உட்கார்ந்து இருக்கோம். இந்த டீக்கடை, சாரி சாரி காபி ஷாப் மேனேஜர் என்ன சொல்றாருன்னு கேட்கலாமா?”
நந்து தாத்தா காபி ஷாப் வாசலில் இருந்து அடுத்த வீடியோவுக்கான முதல் சில வரிகளை உதிர்க்க ஆரம்பித்திருந்தார்.
அதற்குள் இவர்களது வீடியோ எடுக்கும் மொக்கைக்குப் பழகிவிட்ட ரிசார்ட் ஊழியர்களும், மற்ற விருந்தினர்களும், “மொக்க வாங்கினதையும் ஒரு வீடியோவா போடுவான்யா இந்த ஆளு. கன்டென்ட் கிடைச்சா கடவுளே கிடைச்ச மாதிரி இவனுகளுக்கு” என்று போகிற போக்கில் சொல்லிச் சென்றனர்.
சிறிது நேரத்தில் வெளியே சென்றிருந்த மித்ரன் உள்ளே நுழைந்து பார்க்கிங்கில் காரை நிறுத்தினான். அவன் காரில் இருந்து பெர்ஷியா பூனை குதித்து ஓடியது. போய் பார்க்கிங்கின் அருகில் இருந்த ஒரு மரத்தினடியில் எதையோ தோண்ட ஆரம்பித்தது.
அதை ஒரு பார்வை பார்த்தபடியே விசில் அடித்தபடி மித்ரன் கார் கதவைப் பூட்டிவிட்டு இறங்க, லந்துவும் பந்துவும் நந்து தாத்தாவிடம் ஏதோ கிசுகிசுத்தனர்.
தாத்தா கேமரா மேனிடம் சைகை காட்ட, அவன் மித்திரனை நோக்கி கேமராவைத் திருப்பினான்.
“இதோ இப்ப வர்றாரே ஒரு யங் ஜென்டில்மேன்.. அவரு வெளியில இருக்கிற ஒரு ஃபேமஸ் டீக்கடையில் போய் டீ சாப்பிட்டு வந்திருக்கிறார். எங்கே டீ நல்லா இருக்கு உள்ளேயா, வெளியேவா என்று அவரையே கேட்கலாமா?” என்று தாத்தா கூற, தன்னை நோக்கி கேமரா வருவது ஏன் என்று தெரியாமல் திருதிருவென்று விழித்தான் மித்ரன்.
“ஏங்க என்னை வம்புல மாட்டி விடாதீங்க. நீங்க பாட்டுக்கு அவர்கிட்ட மைக்க நீட்ட, அவரும் வெளியில இருந்த டீக்கடையோட டீ தான் நல்லா இருக்குன்னு சொல்லிட போறாரு..” காபி ஷாப் மேனேஜர் நந்து தாத்தாவிடம் கெஞ்சினார்.
அதற்குள் மித்ரனை அணுகி அவனை ஏதோ சொல்லி, தாக்காட்டி, காபி ஷாப் வாசலுக்கு வந்து நிறுத்தி இருந்தனர் லந்து பந்து இருவரும்.
காபி ஷாப் மேனேஜர் கண்கலங்க ஏதோ சொல்வதை பார்த்துவிட்டு உற்சாகமான கேமரா மேன் அவரை நோக்கி கேமராவைத் திருப்பினார்.
“சார் அதை ஆஃப் பண்ணச் சொல்லுங்க சார்.. முதல்ல உங்க கிட்ட பேசணும்” என்றார் காபி ஷாப் மேனேஜர்.
தாத்தா காட்டிய சிக்னலைப் புரிந்து கொண்ட கேமராமேன், கேமராவை அணைத்து வைக்க, “சார் நானே வெளியே டீ கடை வச்சு ஜாம் ஜாம்னு இருந்தவன் தான்.. இவங்க ஆக்கிரமிச்ச இடத்துல என்னோட டீக்கடை இருந்த ஏரியாவும் கவர் ஆயிடுச்சு. ஒரே நாள்ல என் தொழில் போச்சு. எங்க ஏரியா வார்டு மெம்பர் மூலமா நியாயம் கேட்க வந்தேன். அவருக்கு ஒரு லைஃப் டைம் மெம்பர்ஷிப் கார்டும் எனக்கும் இந்த காபி ஷாப் வேலையும் கிடைச்சது. 20 ரூபாய்க்கு அருமையான டீ போட்டுக்கிட்டு இருந்தவன் இப்ப 200 ரூபாய்க்கு சுமாரான டீ போடுறேன். எனக்குத் துணைக்கு ரெண்டு மைதா மாவுங்கள அப்பாயின்ட் பண்ணி இருக்காங்க.. அவங்கள விட எனக்கு சம்பளம் ஜாஸ்தி. அவ்வளவுதான். இப்ப நீங்க பாட்டு ஏதாவது வீடியோ எடுத்துப் போட்டு இந்த வேலைக்கும் உலை வச்சிடாதீங்க” என்று நீளமாக வேண்டுகோள் விடுத்தார்.
அவரது உருக்கமான வேண்டுகோளைக் கேட்ட லந்து, “விட்டுலாம்” என்று நந்து தாத்தாவிடம் கூற, பந்து வேறொரு விஷயத்தை நந்து தாத்தா காதில் சொன்னான்.
“அட! இது அதைவிட நல்ல கான்செப்ட்டா இருக்கே!” என்ற தாத்தா,
“இப்ப நாம லைவ்ல போகப் போறோம்! யூ டியூப், ஃபேஸ்புக் எல்லாத்துலயும்!” என்று தடாலடியாக அறிவித்தவர், மித்ரனை நோக்கித் தன் சக்கர நாற்காலியைத் தள்ளிக் கொண்டு விரைந்தார்.
பந்து அவனிடம் மைக்கை நீட்ட, “தம்பி! உங்க கேர்ள் பிரண்டை நீங்க வெளியே ஒரு இனிமையான சூழ்நிலையில் சந்தித்து மீட் பண்ணி பேசினீங்களாமே? என்ன ஆச்சு? லவ்வ ப்ரொபோஸ் பண்ணிட்டீங்களா? எப்ப கல்யாணம்? எங்களுக்கெல்லாம் அழைப்பு உண்டா.. இதோ இந்த கல்யாணத்தை நாங்க பாதிக்கு மேல தான் கவர் பண்ண ஆரம்பிச்சோம்.. உங்க மேரேஜை லவ் ப்ரொபோசல் ஸ்டார்ட் ஆன நாள்ல இருந்து காட்ட ஆரம்பிச்சிடுவோம். என்ன சொல்றீங்க?” என்று கேட்டால் நந்து தாத்தா.
மித்ரன் வெட்கப்படுவான் கோபப்படுவான் என்று அவர்கள் ஆர்வமாக காத்திருக்க மித்ரன் முகத்திலோ குழப்ப ரேகைகள்.
“வாட்!? யாருங்க நீங்க? நான் எப்ப ப்ரொபோஸ் பண்ணினேன்? யார்கிட்ட? என்ன உளர்றீங்க?” என்றான். கடந்த இரு தினங்களில் எத்தனையாவது முறையாக வாட் சொன்னான் என்பது அவனுக்கு நினைவில் இல்லை.
நந்து தாத்தா லந்து பந்து இருவரையும் பார்க்க நாங்கள் சொன்னது சரிதான் இவன் பொய் சொல்கிறான் என்பது போல் கண் ஜாடை காட்டினார்கள் இருவரும்.
மித்ரனை நன்றாக நெருங்கி வந்த தாத்தா அவன் இடுப்பில் கிச்சிகிச்சு மூட்டுவது போல் கையை வைத்து, “தம்பி வெட்கப்படாதீங்க தம்பி! சும்மா சொல்லுங்க.. நாங்க ஒன்னும் நினைச்சுக்க மாட்டோம். எங்க வியூவர்ஸும் ஒன்னும் நினைச்சுக்க மாட்டாங்க. அப்படித்தானே வியூவர்ஸ்?” என்று கேமராவை நோக்கிக் கேட்க,
லைவில் குவிந்திருந்த ஏக்கச்சக்கமான வியூவர்ஸ் தொடர்ந்து ஹார்ட்க்களை பறக்க விட்டனர். அப்போது பார்த்து ரித்திகாவின் புல்லட் அங்கு வந்து சேர்ந்தது.
“பாஸ் பாஸ்! இவங்க தான் பாஸ் அந்தப் பொண்ணு” என்று, தான் மைக்கை பிடித்திருப்பதை மைக்கை பிடித்து இருப்பதை மறந்து விட்டு பந்து கத்தி விட, ரித்திகா லாவகமாக அரை வட்டம் அடித்து புல்லட்டை ஸ்டாண்ட் போட்டு நிறுத்துவதை ஞாபகமாக படம் பிடித்தான் கேமராமேன்.
அவள் நிறுத்திய இடத்தில் அங்கே தோட்ட வேலை செய்து கொண்டிருந்த இரு பெண்கள் அவளைப் பார்த்து நட்பாய் புன்னகைத்தனர். ரித்திகாவும் அவர்கள் அருகில் சென்று மகிழ்ச்சியாக ஓரிரு நிமிடங்கள் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.
பின் இங்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் இந்தப் பக்கமாக ரித்திகா வர, “அண்ணலும் நோக்கினாள், அவளும் நோக்கினாள்னு நம்ம லந்து பந்து சொல்றாங்க. அண்ணல் வெட்கப்படுறாரு, ‘அவள்’ என்ன சொல்றாங்கன்னு பாக்கலாமா?” என்று கேட்ட நந்து தாத்தா ரித்திகாவை கவர் செய்யத் தலைப்பட்டார்.
மித்ரனுக்கு அந்த இடத்திலிருந்து நழுவி விடுவது தான் சிறந்தது என்று தோன்றியது. ஆனால் நழுவ வழி இல்லை. அதற்குள் நந்து தாத்தாவின் லைவ்வை ரிசாட்டில் இருந்த ஒன்றிரண்டு வாசகப் பெருமக்கள் பார்க்க ஆரம்பித்து விட்டனர். அவர்கள் அருகில் இருந்தவர்களுக்கு செய்தியைப் பரப்ப, திருமணம் முடித்து அலுத்துப் படுத்திருந்தவர்கள் திடீரென்று சுறுசுறுப்பு ஒட்டிக்கொண்டவர்களாக காபி ஷாப்பில் நோக்கி விரைந்து வந்தனர்.
ரித்திகாவை நோக்கி மைக் நீட்டப்பட, அவள் முகத்திலும் குழப்ப ரேகைகள். மித்ரன் சுதாரித்தான். லைவில் நூற்றுக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இப்போது நந்து தாத்தாவிடம் பேசிப் புரிய வைப்பது எடுபடாது என்று நினைத்தவனாக, ரித்திகாவிடம்,
“ஏங்க உங்களை நான் வெளிய பாத்து காஷுவலா ஹாய் ஹலோனு சொன்னதை இவங்க ஏதோ தப்பா புரிஞ்சுட்டு இருக்காங்க.. நான் உங்ககிட்ட ப்ரபோஸ் பண்ணினதாவும், நமக்குக் கல்யாணம் நடக்கப் போறதாவும் எனக்கு வாழ்த்து தெரிவிச்சுட்டு இருக்காங்க” என்றான்.
அங்கிருந்தபடியே ரித்திகா கேமரா, மைக், நந்து தாத்தா, பந்து லந்து அனைவரையும் நிதானமாக ஒரு முறை பார்த்தாள். பின், காபி ஷாப் மேனேஜரையும் பார்த்தவள், “நீங்க சார்?” என்று கேட்டாள் அவரிடம்.
“மேம்! நான் பாட்டுக்கு டீ ஆத்திக்கிட்டு இருந்தேன்.. இவங்க என்ன கூப்பிட்டு வச்சு நிக்க வச்சுட்டாங்க” என்று மேனேஜர் பாய் விட்டே புலம்பினார்.
அவருடைய சூப்பர்வைசரோ, யாரோ சற்றுத் தள்ளி நின்று, இந்த வீடியோ எல்லாம் ரிசார்ட்க்கு லாபத்தையும், விளம்பரத்தையும் பெற்றுத் தருமா, தராதா என்று யோசித்துக் கொண்டிருந்தார்.
“ஏன் தாத்தா இங்கேயே நீங்க உருப்படியான எத்தனையோ விஷயங்களைப் பேசலாம் தெரியுமா? நானும் இங்கே வந்து ரெண்டு நாளா நிறைய விஷயங்கள் சேகரிச்சிருக்கேன். இதோ இந்த காபி ஷாப் மேனேஜர் வெற்றிகரமா ஒரு டீக்கடை நடத்திட்டு இருந்திருக்காரு. இந்த டைனோசரோட அசுர வளர்ச்சியில் அந்த டீக்கடை காணாம போயிடுச்சு. அதோ அங்க தோட்ட வேலை செஞ்சிட்டு இருக்காங்களே, பெண்கள். அவங்கெல்லாம் மலைப்பாங்கான இந்த பகுதியில காலம் காலமா நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செஞ்சிட்டு இருந்தவங்க. அதுவும் இந்த ரிசார்ட் என்கிற முதலை வாய்க்குள்ள போயிடுச்சு.. நமக்கு உணவு கொடுக்க பாடுபட்டுக்கிட்டு இருந்த அவங்க இப்போ தினக் கூலிக்குப் புல்லு வெட்டிக்கிட்டு இருக்காங்க. இதை பத்தி எல்லாம் பேச மாட்டீங்களா?” என்று கேட்டாள் ரித்திகா.
“அவ்வளவுதானே பேசிடுவோம்!” என்றவர் லந்து பந்துவிடம் அந்த செடி வெட்டிக்கிட்டு இருக்கிற பாப்பா ரெண்டு பேரையும் கூப்பிடுங்க” என்றார். அவர் பாப்பா என்று விளித்தவர்களுக்குக் குறைந்தது ஐம்பது வயதாவது இருக்கும்.
“அதெல்லாம் இவங்க நேத்தே இன்டர்வியூ பண்ணி இவங்களோட பெண்மையைப் போற்றுவோம் யூடியூப் சேனல்ல போட்டுட்டாங்க” என்றான் மித்ரன் ரித்திகாவை சுட்டிக்காட்டி.
“அட! நீங்களும் என்னை மாதிரி யூடியூபரா? இன்ஃப்ளூயன்சர் ஸ்டேட்டஸ் வந்துட்டீங்களா, வரலையா?” என்று கேட்டார் நந்து தாத்தா.
காபி ஷாப் மேனேஜர் மெல்ல நழுவிச் சென்றார். நந்து தாத்தாவின் யூ டியூப் சேனல்கள் பின் தொடர்பவர்கள் பலர், அப்போதே பெண்மையைப் போற்றுவோம் youtube லிங்கைச் சொடுக்க ஆரம்பித்தனர்.
‘அப்படியா? நேத்து போட்ட வீடியோ வரைக்கும் நீங்க பாத்துட்டீங்களா?’ என்பதாக ரித்திகா மித்ரனைப் பார்த்தாள்.
ஏற்கனவே அங்கு வந்து விட்டிருந்த அர்ஜுன், “அடேய்.. என்னாங்கடா நடக்குது.. இவன் அந்தப் பொண்ணோட புகழ் பாடுறான்? அவ வீடியோக்களுக்கு பார்த்துப் பார்த்தே அந்தப் பிள்ளையை கரெக்ட் பண்ணிடுவான் போலிருக்கு” என்றான் மேனகாவிடம்.
“அதுதானே எனக்கு வேணும்!” என்றாள் மேனகா.
(இந்த தலைப்புக்கு என்ன அர்த்தம்னா ‘காதல் வந்துதானே தீரும்’ அப்படிங்கறது. கஜோலும் அஜய் தேவ்கனும் நடிச்ச படம். இது நம்ம விஜய்- திரிஷா நடித்த குருவி படம் மாதிரி போகும் கதை. ஒரு லவ் ட்ரையாங்கில் கொண்டு வர்றதற்காக கஜோலுக்கு நிச்சயம் பண்ணின மாப்பிளைன்னு ஒருத்தரும் வருவாரு.. பாருங்களேன், அந்த
காலத்துல காதலை எப்படியெல்லாம் டிசைன் டிசைனா போட்டு தாளிச்சி இருக்காங்கன்னு!)

Author: SudhaSri
Article Title: காதல் காலமிது -9 ப்யார் தோ ஹோனா ஹி தா
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.