• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

காதல் காலமிது -8 குச் குச் ஹோத்தா ஹே

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
186
காதல் காலமிது 8

IMG-20250409-WA0002.jpg

“அண்ணா இன்னொரு டீ போடுங்க”

“என்ன தம்பி வெளியூரா? அதுக்குள்ள நாலாவது டீ ஆச்சு. அம்புட்டு நல்லாவா இருக்கு என்னோட டீ?”

“நல்லா தான் இருக்கு. சும்மா குடுங்க” புகைப் பிடிக்கும் பழக்கம் இல்லை. மாறி மாறி தேநீர்க் குவளைகளைக் காலி செய்து கொண்டிருந்தாள் மித்ரன்.


ரிசார்ட்டில் இருந்து வெளியே வந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் தள்ளி ஒரு கிராமத்து டீக் கடையைக் கண்டுபிடித்து அங்கிருந்து மரத்தடி பெஞ்சில் அமர்ந்திருந்தான். அங்கும் அவனுடைய பெர்ஷியா பூனை அவனுடன் வந்திருந்தது.

பறந்து விரிந்த ரிசார்ட் தான், பலருக்கு மன நிம்மதியைக் கொடுக்கக்கூடிய இடம்தான். ஆனால் அவனுக்கு அவன் மேல் அழுத்திக் கொண்டிருக்கும் பிரச்சனைக்குத் தீர்வு வராமல் அந்த இடத்தில் இருப்பது மூச்சு முட்டுவது போல் இருந்தது. அதனால் தான் காரை எடுத்துக்கொண்டு ஒரு ரவுண்டு போய் வருவோம் என்று வெளியே வந்தது. வருகையில் அந்தப் பூனையும் பின்னாடியே வர அதைத் தூக்கிக் கொண்டு காரில் ஏறினான்.

“சார் பெட்ஸ் வெளியே எடுத்துட்டுப் போகக்கூடாது. நாட் அலவ்ட்” என்றார் செக்யூரிட்டி. அந்தப் பக்கமாக வந்த சூப்பர்வைசர், “சும்மா எடுத்துட்டுப் போங்க சார், அந்தப் பூனை யார் கூடயும் சேராமல் டிப்ரெஷன்ல இருந்தது.. ஏதோ புண்ணியத்துக்கு உங்க கூட சேருது”

“என்ன? பூனைக்கு டிப்ரெஷனா?”

“ஆடு மாடு கோழி இதுக்கெல்லாம் கூட டிப்ரஷன் வரும். தெரியாதா உங்களுக்கு? ஒண்ணு, ரொம்ப சோகமா இருக்கிறவங்க இந்த ரிசார்ட்டுக்கு வராங்க, இல்ல பைத்தியம் புடிச்ச மாதிரி கொண்டாடி தீர்க்கணும்னு நினைக்கிறவங்க வராங்க. அவங்கள எல்லாம் பார்த்துப் பார்த்து இந்தப் பூனைக்கு மனசுல ஏதோ பிரச்சனை ஆயிடுச்சு. மத்த பூனைங்க ஒரு மாதிரி அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க.. இது கொஞ்சம் சென்சிட்டிவ். நீங்க ஒரு ரவுண்ட் கூட்டிட்டு போயிட்டு வந்துடுங்க எப்படியும் ஒரு டூ ஹவர்ஸ்ல எல்லாம் வந்துட மாட்டீங்க?”


அந்த சூப்பர்வைசரை மித்ரன் அவனது ஓரக்கண்ணால் பார்த்து ஒரு முறை முறைக்க, “சாரி, உங்க ஹாலிடே உங்க கார். எப்ப வேணா வாங்க இந்த பூனையை வச்சு நாங்க என்ன பண்ணப் போறோம் ஹிஹி”

என்ன செய்வது என்று இலக்கில்லாமல் வந்து நான்கு டீக்களை உள்ளே தள்ளிவிட்டு அப்படியே யோசித்துக் கொண்டிருக்கையில் தெரிந்த முகங்கள் ஒன்றிரண்டு அந்த டீக்கடையில் தட்டுப்பட்டன.

“இப்ப நாம ரிசார்ட் டூர் எல்லாம் முடிச்சிட்டோம்.. இந்த ஹில் ஸ்டேஷன்ல இருக்கக்கூடிய மத்த புகழ்பெற்ற இடங்களுக்கு வருவோம். இதோ இங்கே ஒரு டீக்கடை இருக்குங்க, வாங்க இந்த டீக்கடை ஓனர் இந்த ஊரைப் பற்றி என்ன சொல்றார்னு கேட்போம்” என்று வீடியோ எடுத்துக் கொண்டே வந்தது நந்து தாத்தாவின் அசிஸ்டன்ட் களான இரண்டு இளைஞர்கள். நல்ல வேலையாக நந்து தாத்தா ரிசார்ட்டிலேயே இருந்து கொண்டார்.

“அங்கேயே நில்லுங்க.. ஒழுங்கா ஓடிடுறீங்களா? இல்ல சுடுதண்ணிய மூஞ்சில ஊத்தவா?” என்று டீக்கடைக்காரர் கேட்க,

“டீக்கடைக்காரர் ரொம்ப கோவமா இருக்காருங்க.. நாம் இன்னொரு நாளைக்கு வரலாம். Until then it's me.. லந்து சைனிங் ஆஃப்.. me பந்து சைனிங் ஆஃப்..” என்று இருவரும் விடை பெற்றனர்.

“ஹாஹா இவனுக்கு பேரு லந்து பந்தா? தாத்தா பேரு நந்து. ரைமிங்கா தான் வச்சிருக்காங்க..” மனம் விட்டுச் சிரித்தான் மித்ரன்.

“பின்ன என்னங்க சார்.. வியாபாரம் நடக்குதோ இல்லையோ, கேமராவும் கையுமா படம் பிடிக்க வந்துடுறானுங்க.. வந்தது தான் வந்தானுங்க.. ஒரு நூறு ரூபாய்க்காவது போணி பண்றானுங்களா.. அதுவும் இல்ல.. இப்படி நில்லுங்க, அப்படியே நில்லுங்க வேற சட்டை போடுங்க, அப்படின்னு ஒருத்தரையும் வேலை பார்க்க விடுறதில்லை” புலம்பினார் டீக்கடைக்காரர்.


சற்றுத் தள்ளி இன்னொரு சிரிப்பொலி கேட்டது. சிரிப்பொலி புதிது தான். ஆனால் அந்தக் குரல் பழசு போல் தோன்றியது. திரும்பிப் பார்த்தான் மித்ரன்.

அவன் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை. ரித்திகா தான் அமர்ந்திருந்தாள். அந்தக் காட்சியை அந்தப் புறம் யாரோ தோழியிடம் விவரித்துக் கொண்டிருந்தாள்.

அவள் பேசி முடிக்கும் வரை காத்திருந்த மித்ரன், “எக்ஸ்யூஸ் மீ ரித்திகா! என்னை ஏங்க ஃபாலோ பண்றீங்க?”

அப்போதுதான் அவனைப் பார்ப்பது போல் பார்த்தவள், “நான் உங்களை பாலோவ் பண்றேனா? நான் ஏங்க ஃபாலோ பண்ணப் போறேன்? போர் அடிச்சுது அங்க வந்திருந்த ரெண்டு பசங்களோட புல்லட்டை வாங்கிட்டு வந்தேன்” அங்கே ஓங்குதாங்காக நின்றிருந்த ஒரு புல்லட்டைக் காட்டினாள் ரித்திகா.

“ஓ! நீங்க பைக் ரைடரா? சூப்பருங்க” மித்ரன் முகம் வியப்பைக் காட்டியது.

“ஏங்க தெரியாத மாதிரி நடிக்கிறீங்க நீங்க என்னோட வீடியோஸ் எல்லாம் பார்த்து இருக்கீங்க. என்ன ஃபாலோ பண்றீங்கன்னு தெரிஞ்சப்புறம் நானும் உங்களைப் பத்திக் கொஞ்சம் ரிசர்ச் பண்ணினேன். நான் பைக் பத்தி போட்டே வீடியோ, எங்களோட பைக் ரேஸ் போட்டோ எல்லாத்துலயும் நீங்க கமெண்ட் பண்ணி இருக்கீங்க”

“அப்ப என்னைத் தெரிஞ்சுக்கிறதுக்கு முயற்சி பண்ணியிருக்கீங்க ன்னு சொல்லுங்க..”

“ஆமா இவர் பெரிய செலிபிரிட்டி.. தெரிஞ்சுக்கறதுக்காக முயற்சி பண்றாங்க. போவீங்களா?” முணு முணுத்தாள் ரித்திகா.

“ஏங்க, உண்மையௌ ஒத்துக்கோங்க. உங்க வீடியோஸ் எல்லாம் தேடித் தேடிப பார்த்தேன். இதை பப்ளிக்கா ஒத்துக்குவேன். எனக்கு ஒன்னும் உங்கள மாதிரி வெட்கம் தயக்கம் எல்லாம் இல்ல.. அப்புறம் அப்புறம்.. அப்புறம் உங்களை நான் பாராட்டியே ஆகணும். நீங்க சொல்ற கருத்துக்கள் ஒண்ணொண்ணும் ரொம்ப தரமானதுங்க. ப்ரிப்பேர் பண்ணிட்டு பேசுற மாதிரியே இல்லை. அப்படியே உள்ளத்தில் இருந்து வருது. நிறைய படிப்பீங்க போல.. நிறைய விமன் என்பவர்மெண்டுக்காக ஃபீல்ட் ஒர்க்கும் பண்ணுவீங்க போல”

“என்ன ஃபிளர்ட் (flirt) பண்றீங்களா?”

“அப்படியா தெரியுது? நான் இங்கே ரொம்ப நேரமா உக்காந்து இருக்கேன். நீங்களா தான் என்னைத் தேடி வந்தீங்க அப்ப நீங்க என்னை ஸ்டாக் (stalk) பண்றீங்களா?”


“ஒரு பொண்ணப் பார்த்து இப்படி கேட்கிறீங்க? பொண்ணுங்க எங்கேயாவது ஸ்டாக் பண்ணுவாங்களா?”

“இல்லையா என்ன? பல நாடு சுத்துறவங்க தானே நீங்க? பொண்ணுங்க பசங்க பின்னாடி துரத்தி துரத்தி வர்றது இப்ப எல்லாம் காமன் ஆயிடுச்சு தெரியுமா?”

“அப்படியே பைக் எடுத்துட்டு வந்தேன். இங்கதான் ரெஸ்ட் எடுக்கணும்னு தோணுச்சு பார்த்தா நீங்க நிக்கிறீங்க” நியாயமாகப் பார்த்தால் ரித்திகாவுக்கு கோபம் வர வேண்டும், ஆனால் தன்னிலை விளக்கம் நான் வாயில் வந்தது.

“அதே மாதிரி தான் நானும். பால் எடுக்கலாம்னு அந்த பாத்ரூமுக்கு வந்திருக்கேன். பார்த்தா நீங்க குளிச்சிட்டு இருந்திருக்கீங்க. It's all about coincidence. இப்பொழுது லேசாகப் புன்னகை பிறந்தது ரித்திகாவுக்கு.

“ஐயோ விட மாட்டீங்களா அந்தப் பேச்சை?

“நீங்க விட்டுட்டீங்களா அப்ப?” மித்ரன் கேட்டதற்கு ரித்திகாவிடம் பதில் இல்லை.

எந்த அழுத்தமும் இல்லாமல், அந்த இனிமையான சூழ்நிலையில் ,சாலையில் போகும் யாரோ ஒருவர் போல் இயல்பாக சந்தித்துப் பேசுவது மன இறுக்கங்களைத் தளர்த்துவதாகத் தான் இருந்தது ரித்திகாவுக்கு.

அதே சிந்தனை மித்ரனுக்குள்ளும் ஓடியிருக்க வேண்டும். “ஹப்பா! ஒன்றரை நாளா மூச்சு முட்டிடுச்சுங்க. இப்பதான் ஐ அம் பிரீதிங் ஈசி” என்றான்.

“எனக்குமே ரொம்ப இறுக்கமா இருந்துது. இங்க வர்றதுக்கு ரெண்டு நாள் முன்னாடியிலிருந்து எல்லாரும் என் முகத்தையே பார்க்கிற மாதிரி ஒரு ஃபீலிங். முன்னாடியே பிளான் பண்ணிட்டாங்கன்னு நினைக்கிறேன்”

“என்ன பிளான்?” என்று கேட்டான் மித்ரன். இப்போதும் தெரியாதவன் போலவே முகத்தை வைத்துக் கொண்டு.

“அதான் நம்ம ரெண்டு பேருக்கும் முடிச்சுப் போடுற பிளான். அதுபத்தி கொஞ்ச நாளாவே பேசிட்டு இருக்காங்க போலத் தெரியுது”

“அப்படிங்கிறீங்க? எனக்கு ஒன்னும் சைன்ஸ் (signs) தெரியலையே”

“இந்தப் பசங்களே இப்படித்தாங்க.. எல்லா விஷயத்துலயும் எனக்கு என்னன்னு சீரியஸ்னெஸ் இல்லாம இருக்கீங்க பாத்தீங்களா?”

“பாத்தீங்களா.. இப்ப நீங்க ஆம்பளைங்களே இப்படித்தான்னு
ஜெனரலைஸ் பண்றீங்க. நான் வெக்கேஷன்காகன்னு வந்து இறங்கின வந்து மறுநாள் இங்கே கூட்டிட்டு வந்துட்டாங்க. ஆனா ஒரு விஷயம் ஒத்துக்கிறேன். அந்த ரிசார்ட்ல இருக்கிறப்ப எல்லாம் யாராவது நம்மள கண்காணிச்சுட்டே இருக்க மாதிரி, நம்ம முடிவுக்காக காத்திருக்கிற மாதிரியே தோணுச்சு. இல்ல?”

“நானும் அக்ரி பண்றேன்”

“அதிசயமா இருக்கு. ஒரு பெண்ணியவாதி ஆணோட கருத்துக்களை பண்ணி இருக்கீங்க”

“ஏங்க, உண்மையைத் தானேங்க சொன்னீங்க. அதெல்லாம் மறுத்துப் பேசுறதுக்கு நான் என்ன மென்டலா?” என்றாள் ரித்திகா. அதை அவள் கேட்ட விதத்தில் அவனுக்கு சிரிப்பு வந்தது.

என்ன பேச என்று தெரியாத இரண்டு நிமிட மௌனம் அவர்களுக்கு இடையே.

“சரி என்ன டிசைட் பண்ணி இருக்கீங்க” மௌனத்தைக் கலைத்தது ரித்திகா.

“அதான் வேண்டாம்னு சொல்லிட்டோமே.. ரீ கன்சிடர் பண்றோமா என்ன?” என்று மித்ரன் கேட்க,

தெளிவாக இருந்த கிருத்திகாவின் முகம் கொஞ்சம் குழப்பத்துக்குள் போனது. மாறாக அதுவரை குழம்பிக் கிடந்த மித்ரனுக்கு அவள் முகத்தில் குழப்ப ரேகைகள் தோன்றுவதைப் பார்த்து கொஞ்சமே கொஞ்சம் தெளிவு பிறந்தாற்போல் தோன்றியது.

“அக்கா உங்களுக்கு டீ ரெடி” என்றார் கடைக்காரர். பெர்ஷியா பூனை மியாவ் என்று சொல்லாமல் சும்மா வாயைத் திறந்து பார்த்தது.

(குச் குச் ஹோத்தா ஹை-


இந்த படம் ஷாருக்கான் கஜோல் ராணி முகர்ஜி நடிச்சது. ராணி முகர்ஜிய இந்த படத்தில் அவ்வளவு புடிச்சிருந்தது. கஜோல் லூசு பொண்ணா ஷாருக்கோட குழந்தை பருவ ஃபிரண்டா வருவாங்க. ரெண்டு பேரும் ஒரே காலேஜ்ல படிப்பாங்க. கஜோல் ஷாருக்கை ஒன் சைடா லவ் பண்ண, புதுசா அறிமுகம் ஆகிற ராணிக்கும் ஷாருக்குக்கும் லவ். ஷாரூக்- ராணி ரொம்ப சீக்கிரமா கல்யாணம் பண்ணி ஒரு குழந்தையும் பொறக்குது. தன் காதலை சொல்லாமலேயே மனசுக்குள்ள வச்சுட்டு இருக்கிற கஜோல் லூசுப் பெண்ணே கேரக்டரில் இருந்து மெச்சூர்ட் லேடி ஆயிடுறாங்க. எதிர்பாராத விதமா ராணி முகர்ஜி சீக்கிரமே இறந்து போக, அவங்க பொண்ணு வளர்ந்து வந்து ஷாருக்கையும் கஜோலையும் சேர்த்து வைக்கிறது தான் கதை. இது மாதிரி நிறைய கதைகளை பார்த்திருப்பீங்க. ஆனா ஸ்டோரி டெல்லிங்ல இந்த கதையில ஒரு மேஜிக் இருக்கும். வாய்ப்பு இருந்தா பாருங்க!

அப்புறம் இந்த தலைப்புக்கு என்ன அர்த்தம்னா, ‘என்னமோ ஏதோ

நடந்துக்கிட்டு இருக்கு’ன்னு. இப்ப புரிஞ்சிருக்குமே இந்த அத்தியாயத்திற்கு ஏன் இந்தத் தலைப்புன்னு 😅😅)
 
Last edited:

Author: SudhaSri
Article Title: காதல் காலமிது -8 குச் குச் ஹோத்தா ஹே
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

dharani

Member
Joined
Jul 6, 2024
Messages
25
ரெண்டு பேரும் reconsider பண்ண முடிவு பண்ணி இருக்க மாதிரி தெரியுது....
 
Top Bottom