• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

காதல் காலமிது - 1942 எ லவ் ஸ்டோரி

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
173
காதல் காலமிது


IMG-20250303-WA0017.jpg
1942 எ லவ் ஸ்டோரி

“இன்னிக்கு நாம என்னோட சைல்ட்ஹுட் கேர்ள் பெஸ்டி சிவகாமியோட கிரேட் கிராண்ட் டாட்டர், அதாவது பேத்தியோட பொண்ணு, இல்ல பொண்ணோட பேட்டி எப்படினாலும் சொல்லலாம். அவளோட மேரேஜ்க்கு வந்திருக்கோம். கல்யாண பொண்ணு பேரு மோனிகா. உங்களுக்கே தெரியும் என்னோட கேர்ள் பெஸ்டி சிவகாமி எங்க வீட்டு பங்க்ஷன்க்கு எல்லாம் நீ சாகுற வரைக்கும் வந்துரனும் டா அப்படின்னு சொல்லி இருக்கா. அவ இறந்து போய் 20 வருஷம் ஆச்சு. ஆனால் இன்னும் நான் ஞாபகார்த்தமா வந்துகிட்டே இருக்கேன். இன்னிக்கு இந்த வெட்டிங் ஒரு டெஸ்டினேஷன் வெட்டிங்கா, சூப்பரா ஒரு ஹில் ஸ்டேஷன்ல நடந்துகிட்டு இருக்கு. இப்ப நாம பஃபேல என்னென்ன ஃபுட் செட் பண்ணி இருக்காங்கன்னு பாக்கப் போறோம்.

இப்போ மணி சாய்ங்காலம் ஆறாகப் போகுது. நான் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்ல இருக்குறதால இப்பவே நான் என்னோட டின்னர முடிச்சுக்க போறேன். இன்னிக்கு நம்ம டயட்டீஷியன் குடுத்திருக்கிற மெனு படி என் டின்னர் சாலடும், சிக்கனும். என்ன சாலட், என்ன சிக்கன் வச்சிருக்காங்கன்னு பாக்கலாமா? வாங்க போகலாம்!”

தோற்றத்திலும் குரலிலும் தாத்தாவுக்கு 95 வயது என்று அடித்துச் சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள். அவருடைய வீல்சேரை ஒரு உதவியாளர் தள்ள, இன்னொரு உதவியாளர் கேமராவை எடுத்துக்கொண்டு பின்னாடியே சென்றார். தாத்தா youtube லைவில் இருந்தார்.

“இதோ நாம இந்த கிரீன் ஹில்ஸ் ரிசார்ட் ஓட பஃபே இன்சார்ஜ் மிஸ்டர் சத்யமூர்த்தியைப் பார்க்கப் போறோம். அவரை நான் காலைலயே உங்களுக்கு இன்ட்ரடியூஸ் பண்ணிட்டேன்” என்றபடி அங்கே மூடி வைக்கப்பட்டிருந்த உணவுப் பதார்த்தங்களை திறந்து பார்த்து, தன் வீடியோவை தொடர்ந்து கொண்டிருந்தார்.

“என்ன சொல்லு சுசித்ரா.. உங்க வீட்டு ஃபங்க்ஷனுக்கு நான் வர்றதுக்கு முக்கிய காரணமே இந்த நந்தகுமார் தாத்தா தான்.. எவ்வளவு லைவ்லி இல்ல? இவரை பார்த்து தான் எனக்கு வாழனும்னு ஆசையே வருது.. என் முட்டு வலி கூட கொஞ்ச நேரம் மறந்து போகுது” என்று வலியெடுத்த தன் கால் முட்டைத் தடவி விட்டபடியே சொல்லிக் கொண்டிருந்தார் 70 வயதான ஒரு பாட்டி.

அதேசமயம், “உங்க வீட்டு ஃபங்க்ஷன்க்கு வரதுக்கு எனக்கு பிடிக்காத விஷயமே இந்த கிழவன் தான் டி. இவனும் இவன் பண்ற அல்ட்டாப்பும்.. தாங்க முடியல!” என்று ஒரு பூமர் அங்கிள் தன் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

இப்படியாக பெண்ணையும் மாப்பிள்ளையும் விட்டுவிட்டு பெரும் கூட்டம் நந்தகுமார் தாத்தாவைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தது.

மித்ரன் தன் புதிய நண்பனிடம், “பாருடா! இங்க இந்த கூட்டத்திலேயே நான் மட்டும் தான் சோகமா இருக்கேன்.. என்ன விட 60, 65 வயசு பெரியவரு அவர்.. எவ்வளவு ஜாலியா இருக்கார் பாத்தியா? நான் ஏன்டா இப்படி ஒரு youtube சேனல் ஆரம்பிக்கக்கூடாது?”

அந்தப் புதிய நண்பன் “மியாவ்” என்றான்.

சுமாராக சந்தோஷம் வந்தது மித்ரனுக்கு.

நீ எப்படி சுமாரா சந்தோஷமா இருக்கலாம் என்று சொல்லாமல் சொன்னபடியே புதினாவும் இஞ்சியும் போட்ட மாலை நேரத்தைய வெல்கம் ட்ரிங்க்கான லெமன் ஜூஸை எடுத்துக்கொண்டு அவன் அருகில் வந்து அவன் தோளைச் சுற்றி கையைப் போட்டு அமர்ந்தான் அவனுடைய ஒரே அண்ணன் அர்ஜுன்.

“தம்பி! என் வாழ்க்கைல ஒளி ஏத்தி வைப்பா!”

“அர்ஜுன்! என்ன தம்பி கிம்பின்னு எல்லாம் ஒளர்ற.. சரக்கு போட்டுருக்கியா? அண்ணி கிட்ட பேச வேண்டிய டயலாக்குடா இது. என்கிட்ட வந்து பேசிகிட்டு இருக்க? அதுவும் அண்ணி இருக்கற கோபத்துக்கு இப்ப பேசினா எடுபடுமான்னு தெரியல. குறைஞ்சது ஒரு வருஷம் முன்னாடி பேசி இருக்கணும்”

“சரக்கு எல்லாம் அடிக்கலடா! உன் கிட்ட தான் கேட்கிறேன். என் வாழ்க்கையில் ஒளியை ஏத்தி வை”

“புரியல?”

“உங்க அண்ணி புதுசா ஒரு ரூல் போட்டு இருக்கா.. அவளோட ஒண்ணு விட்டு தங்கச்சியை நீ கல்யாணம் பண்ணிக்கணுமாம்.. அப்பதான் என் கூட சேர்ந்து வாழுவாளாம்”

“வ்வாட்?”

“எத்தனை தடவை கேட்டாலும் அதேதாண்டா! நீ யாரையும் லவ் பண்ணலன்னு சொல்லிட்ட... அம்மா பாக்குறதுலயும் ஒரு பொண்ணும் அமைய மாட்டேங்குது.. பேசாம அவ ஒண்ணு விட்டு தங்கச்சியையே கல்யாணம் பண்ணிக்கோடா..‌ பொண்ணு ஒன்னும் அவ்வளவு மோசம் இல்லை.. நல்லா தான் இருக்கு”

“யாரைச் சொல்ற?”

“ரித்திகா”

மித்ரன் பேச்சடைத்து வாயடைத்துப் போய் நிற்க, பூனை மறுபடியும் மியாவ் என்றது.

இதுதான் விதியா? இந்த விஷயம் அந்த ரித்திகாவுக்கு தெரியுமா? அதுதான் தன்னை குறுகுறு என்று பார்த்தாலா இல்லையே வாய்ப்பில்லையே.. என்று இந்த மூலையில் இருந்து அந்த மூலைக்கு மித்ரன் எட்டிப் பார்க்க, ரித்திகா அங்கு அவ்வளவு சித்தியுடன் வாக்குவாதம் பண்ணிக் கொண்டிருந்தாள்.

பஃபேயை விட்டுவிட்டு நந்தகுமார் தாத்தா அடுத்த வீடியோவுக்குத் தாவி இருந்தார். “இந்த சந்தோஷமான ஈவண்ட்ல ரெண்டு அழகான பொண்ணுங்க ஆர்க்யூ பண்ணிக்கிட்டு இருக்காங்க. ஏன்னு பாப்போம் வாங்க” என்று அவர் கூற,

“ஐயோ வீடியோ தாத்தா வராரு.. சிரிச்ச மாதிரி மூஞ்சியை வை” என்றார் செவ்வந்தி. ரித்திகாவுக்கு நடிப்புக்குக் கூட சிரிப்பு வரவில்லை.

“ஹிஹி!” என்று செவ்வந்தி சொல்ல,

“பியூட்டிஃபுல் லேடிஸ்! ஒய் ஆர் யூ ஃபைட்டிங்?”

“தாத்தா.. இல்லைங்க தாத்தா..கூடுதலா ரெண்டு நகை போடச் சொன்னேன்.. இந்தப் பொண்ணு மாட்டேங்குறா”

“இருக்கட்டும் இருக்கட்டும்.. இதுதான் இன்னைக்கு யங் கேர்ஸோட ஃபேஷன். ஜென் இசட் டோட ஃபேஷன் சென்ஸ் பத்தி ஒரு வீடியோ போட்டிருக்கேன். என்னோட சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி அதுல போய் பாருங்க. 1 மில்லியன் வியூஸ் போயிருக்கு” என்றார் தாத்தா.

‘இந்த கிழவன் வேற.. என்னைக்காவது எனக்கு ஜெயிலுக்கு போகணும்னு ஆசை இருந்தா, இந்தக் கிழவனைப் போட்டுத் தள்ளிட்டுத் தான் போவேன்’ என்று முணுமுணுத்தபடி ரித்திகாவை விட்டுவிட்டு செவ்வந்தி அவளுடைய அக்காவும், இந்தக் குழப்பங்களுக்கெல்லாம் காரண கர்த்தாவுமான மேனகாவிடம் போய் நின்றார்.

“இங்கே பாரு உன் ஹஸ்பண்ட் அர்ஜுன் கூட நீ சண்டை போட முக்கிய காரணம் என்ன? அவன் ஸ்கூல் ஃபிரண்ட் ஒரு பொண்ணு கூட பேசுறான், அப்படின்னு தானே.. அதான் இனிமே பேச மாட்டேன்னு சொல்லிட்டானே? இந்த கிழத்தைப் பாத்தியா? எட்டு வயசு, பத்து வயசுல லவ் பண்ண பொண்ணு வீட்டுக்கு 80 வருஷமா வந்து டார்ச்சர் பண்ணிட்டு இருக்காரு.. அவங்க குடும்பத்துல யாராவது தப்பா நினைச்சாங்களா?”

“எதையும் எதையும் குழப்புறீங்க? இந்த தாத்தா எதையும் பப்ளிக்கா சொல்றார். அறியாத வயசுல புரியாம லவ் பண்ணவங்க, அது லவ்னு தெரிஞ்சுக்க முன்னாடியே ரெண்டு பேருக்கும் வேற வேற இடத்துல பால்ய விவாகம் ஆயிடுச்சு.. அர்ஜுன் அப்படியா? அந்தப் பொண்ணு இவனுக்கு லவ் லெட்டர் குடுத்து இருக்குது.. அதை என்கிட்ட சொல்லவே இல்ல. அடுத்து இப்ப பேஸ்புக்ல பிரண்ட் ரெக்வெஸ்ட் கொடுக்குது, இன்ஸ்டாகிராமில் பாலோ பண்ணுது.. இது எதையுமே சொல்லல”

“உன் புருஷனுக்கு ஆயிரம் ஃபாலோயர்ஸ்.. அதுல தொள்ளாயிரத்துத் தொண்ணூறு பேர் பொண்ணுங்க தான்.. அவ்வளவு பேரையும் பத்தியா சொல்லுவாரு உன்கிட்ட?” என்று சித்தி கேட்க,

“அப்ப அந்த ஆளோட போக்கு சரியில்லைன்னு தானே அவனுக்கு யார் யார் ஃபாலோவரா இருக்காங்க அதெல்லாம் நீங்க நோட் பண்ணி வச்சிருக்கீங்க? அப்புறம் எப்படி அவன் கூட என்னை சேர்ந்து வாழ சொல்றீங்க? ஒரு நாள், ஒரே ஒரு நாள் என் ஆபீஸ் கலீக் கூட வண்டியில வந்து இறங்குனதுக்கு அர்ஜுன் என்ன சொன்னான் தெரியுமா? இந்தக் காலத்துல ஒருத்தரோட டூவீலர்ல வந்தா தப்பா?”

“அதேதான்! இந்த காலத்துல ஒரு ஆம்பள தன்னோட சின்ன வயசு ஃப்ரெண்ட் கூட பேசினா தப்பா?”

“சின்ன வயசு பிரெண்டு கூட பேசுறது தப்பு இல்ல சித்தி.. ஆனா அவ இவரை ஒன்சைடா லவ் பண்ணி இருக்கா.. அவ கூட பேசறது தான் தப்பு”

“இந்த டயலாக் எல்லாம் நிறைய தடவை கேட்டாச்சு.. அங்க ரித்திகாவும் திட்றா.. நீயும் இங்க குதிக்கிற.. நான் என்னதான் செய்றது?”

“என்னோட முடிவு நான் சொல்லிட்டேன் என்கூட வாழனும்னா, அவன் அவனோட தம்பியை கன்வின்ஸ் பண்ணி ரித்திகாவுக்கு கட்டி வைக்கட்டும்”

“அவ தம்பி ஒத்துக்குறது இருக்கட்டும், ரித்திகா ஒத்துக்குவாளான்னே தெரியலயே..”

“என்னமோ பண்ணுங்க!” என்றபடி “சுஜித்..” என்று தன் குழந்தையை தேடியவாறு சென்றாள்

“அது 1942ம் வருஷம். அப்ப என்னோட அப்பா சுதந்திரப் போராட்டத்தில் பங்கு எடுத்துகிட்டார் சிவகாமியோட அப்பா இருக்காரே…”அங்கே நந்தகுமார் தாத்தா தன்னுடைய சிறுவயது பப்பி லவ்வைப்
பற்றி ஆயிரமாவது முறையாகத் தன்னுடைய பார்வையாளர்களுக்கு சொல்ல ஆரம்பித்திருந்தார்.
 
Top Bottom