• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. P

    ஆடியிலே முத்தெடுத்து - 4

    அத்தியாயம் – 4 அன்று காலையில் எழுகையிலேயே நிரஞ்சனின் மனம் புத்துணர்ச்சியில் குளித்திருந்ததைப் போல் புதுப்பொலிவுடன் இருந்தது. எப்பொழுதையும் விட நேரத்திலேயே கிளம்பி உற்சாகத்துடன் வேலைக்குச் சென்றான். அவன் அலுவலகத்துக்குச் சென்று பார்க்க வேண்டிய பணிகளைக் கவனிக்க, ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர்...
  2. P

    ஆடியிலே முத்தெடுத்து - 3

    அத்தியாயம் – 3 அன்றிரவு தூங்கச் சென்ற மதுமிதாவின் சிந்தனையை நிரஞ்சனே ஆக்கிரமித்து அட்டூழியம் செய்து கொண்டிருந்தான். அவள் இங்கே பணியில் சேர்கையில் அவன் இவளிடம் இயல்பாகவே பழகினான். ஆனால் சமீப காலமாக அவளை மேலும் நெருங்கி நட்பு பாராட்ட ஆரம்பித்திருந்தான். ஒருவேளை அவள் மேல் பிடித்தம் இருப்பதால்...
  3. P

    ஆடியிலே முத்தெடுத்து - 2

    அத்தியாயம் – 2 அடுத்து வந்த இரண்டு நாட்களைத் தோழியுடன் கழித்துவிட்டு ஹைதராபாத் நோக்கிப் பயணித்தாள் மதுமிதா. முதல் வேலையாக அலுவலகம் சென்று என்னென்ன செய்ய வேண்டும் என மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டாள். முடிக்க வேண்டிய வேலையை முடித்துவிட்டு, பிறகு அவள் மேலாளரிடம் போய்ப் பேச வேண்டும் எனத்...
  4. P

    ஆடியிலே முத்தெடுத்து - 1

    அத்தியாயம் – 1 மதுமிதாவும் அவளது தோழி, மதுரவாணியும் அன்று சென்னையில் உள்ள ஒரு பிரபல மாலுக்குச் சென்றிருந்தனர். இருவரின் பெயரில் மது இருப்பதாலோ என்னவோ அதில் ஈர்க்கப்பட்டுக் கல்லூரியில் இணைபிரியாத் தோழிகளாக மாறிவிட்டனர். இளங்கலை படித்து இப்போது இருவரும் வெவ்வேறு நிறுவனங்களில் பணியில்...
  5. P

    கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 17

    அத்தியாயம் – 17 பிரெஞ்ச் நாட்டவர்களின் ஆதிக்கத்தில் 1954 வரையில் புதுச்சேரி இருந்ததால் இன்றும் பிரான்ஸ் மக்களின் கலாச்சாரம் அங்கிருப்பவர்களிடம் ஊன்றியிருப்பதைக் காணலாம். அன்று ஞாயிற்றுகிழமை என்பதால் மக்கள் கடைவலம் செல்லக் கூட்டம் கூட்டமாகக் கிளம்பிவிட்டனர். ஆதிநந்தனும், நேத்ராவும் முதலில்...
  6. P

    கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 16

    அத்தியாயம் – 16 தயாராகி நேத்ராவும் பங்கஜம்மாளும் உணவு மேஜையில் அமர்ந்திருக்க, எட்டரை மணியளவில் ஆதிநந்தனும் அவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டான். வசீகரிக்கும் புன்னகையுடன் வந்தமர்ந்தவனைக் குறுகுறுவென்ற விழிகளுடன் ஏறிட்டு நோக்கினாள் நேத்ரா. நேற்றிரவு அவள் பாட்டி சொன்னது உண்மையா என அவரின்...
  7. P

    கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 15

    அத்தியாயம் – 15 இரவு எட்டு மணியளவில் காரைப் புதுச்சேரியில் உள்ள தன் பாட்டியின் வீட்டின் முன்னால் நிறுத்தியிருந்தாள் நேத்ரா. பக்கத்து இருக்கையில் இதழ் பிரித்து ஒரு குழந்தையைப் போல் உறங்கும் ஆதிநந்தனை எழுப்பவே அவளுக்கு மனம் வரவில்லை. எத்தனை நாட்கள் உறக்கமில்லாமல் கஷ்டப்பட்டானோ? கண்டிப்பாக...
  8. P

    கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 14

    அத்தியாயம் – 14 யாருமில்லாத இடத்துக்கு ஓடினால் நிம்மதியாக நாட்களைக் கழிக்கலாம். அத்துடன் தான் விரும்பும் பணியையும் செய்யலாம் என்றே கப்பலில் கிடைத்த வேலையை ஒப்புக் கொண்டாள் நேத்ரா. அதற்கும் கூடத் தடங்கல் வந்துவிட்டதே என்ற எரிச்சல் நேத்ராவை அலைக்கழித்தது. என்று அருணின் கொலை வழக்கு பற்றித்...
  9. P

    கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 13

    அத்தியாயம் – 13 இரண்டு நாட்கள் கழிந்திருக்க, அருணின் வீட்டுக்குச் சென்றிருந்தான் ஆதிநந்தன். அருணின் இறுதி சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆதிநந்தன் அங்கே நேத்ராவைப் பார்க்க நேரிட்டாலும் அவனால் எதுவும் பேச முடியவில்லை. அவளும் இவனைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. இவ்வளவு ஏன் அவன் ஒருவன்...
  10. P

    கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 12

    அத்தியாயம் – 12 சுனிலின் கன்னத்தில் துருவன் விட்ட அறையில் அனைவரும் திகைத்துப் போய்ப் பார்க்க, கீழே விழுந்தவனின் அருகில் குனிந்து, “நீயா சொல்லப் போறியா, இல்லை...” என துருவன் முடிக்காமல் நிறுத்த, “என்னை ஏன் அடிக்கறீங்க? எதுக்கு என்னை மிரட்டறீங்க? நான் யார் தெரியுமா?” என இடது கன்னத்தில் கையை...
  11. P

    கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 11

    அத்தியாயம் – 11 தன்னறையில் இருந்தான் என்ற நேத்ராவின் பேச்சைக் கேட்டதும் அனைவரும் அருகில் நின்றிருந்தவர்களுடன் குசுகுசுவென்று பேச ஆரம்பித்தனர். கண்டிப்பாக நல்ல வார்த்தைகளை அவர்கள் சொல்லவில்லை என்பது திண்ணம். இப்படி உண்மையை வெளியிடுவதால் தன் பெயர் கெடும். அது பரவாயில்லை போகட்டும் எனச் சில...
  12. P

    கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 10

    அத்தியாயம் – 10 துருவன் அந்தக் கப்பலில் கால் பதித்து நான்கு மணி நேரமாகிவிட்டது. அயராது தன் விசாரணையை மேற்கொண்டிருந்தான். அங்கிருந்த சிசிடிவியைச் சுழலவிட்டு பல விஷயங்களைச் சேகரித்தான். தேவைப்படும் என்று எண்ணிய சிலதை எடுத்துப் பத்திரப்படுத்திக் கொண்டான். ஆதிநந்தன் சொன்னதைப் போல் அருண் கடைசியாக...
  13. P

    கார்காலப் பனித்துளி - அத்தியாயம் -9

    அத்தியாயம் – 9 மிடுக்காக நடந்து வந்த துருவனைப் பார்த்து முறைத்தவாறே ஆதிநந்தன் நின்று கொண்டிருந்தான். துருவன் நேராகச் சென்று அருணின் பெற்றோர்களிடமும், ஆராதனாவின் தந்தையிடமும் தன்னை ‘துருவன் ஐ. பி. எஸ்.’ என அறிமுகப்படுத்திக் கொண்டான். அவனைப் பார்த்த நேத்ராவுக்கோ மனதில் அப்படி ஒரு நிம்மதியுணர்வு...
  14. P

    கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 8

    அத்தியாயம் – 8 யாரோ கதவை பட் பட்டென்று தட்டும் சத்தம் கேட்டது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நேத்ரா அடித்துப் பிடித்து எழுந்தாள். நேரமாகிவிட்டதோ என்ற பதட்டத்தில் மணியைப் பார்க்க, நடுசாமம் இரண்டு மணி தான் ஆகியிருந்தது. அவள் எழுந்து பணியை ஆரம்பிக்க இன்னும் இரண்டு மணி நேரம் பாக்கியிருக்கிறதே...
  15. P

    கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 7

    அத்தியாயம் – 7 ‘நேத்ராவை ஏதாவது செய்ய வேண்டும்’ என்ற வேகம் ஆதிநந்தனுக்குள் பெருகியது. அதே சமயத்தில் அப்போது சுனில் கையில் ட்ரேயுடன் அவர்களை நோக்கிச் செல்வது தெரிந்தது. விரைந்து அவனருகில் சென்று, “யாருக்கு?” எனக் கேட்க, “அருண் சாருக்கு. மேடம் கொண்டு வரச் சொன்னாங்க” என்றான். ‘இப்படியே எதையாவது...
  16. P

    கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 6

    மறுநாள்! அன்று காலையில் அருண் மற்றும் ஆராதனாவின் நிச்சயார்த்தம் நடக்க ஏற்பாடாகியிருந்தது. அதற்கேற்ப சின்ன மேடை ஒன்றை அலங்காரத்துடன் கடலின் பின்னணியில் போட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தனர். ஏற்கனவே பெண் வீட்டினரிடம் பேசியிருந்ததால் எல்லாவற்றையும் தயாராகவே வைத்திருந்தாள் நேத்ரா. அன்று...
  17. P

    கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 5

    அத்தியாயம் – 5 அன்றிரவு! கப்பலுக்குள் ஒளி வெள்ளம் மிதந்து கொண்டிருக்க, கப்பலோ நிலவொளி குளிப்பாட்டிய தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. நேத்ரா சற்று பரபரப்புடன் திரிந்து கொண்டிருந்தாள். விருந்தினர்கள் அனைவரும் வந்துவிட, கப்பல் மெள்ள நகர ஆரம்பித்தது. அவர்களை வரவேற்கவென்று அன்று மாலையில் ஒரு சிறு...
  18. P

    கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 4

    அத்தியாயம் – 4 அந்தக் கப்பல் ஒரு ராணியின் கம்பீரத்துடன் வங்கப் பெருங்கடலில் நின்று கொண்டிருந்தது. அதில் பயணிப்பவர்கள் இன்னும் சற்றுநேரத்தில் வந்துவிடுவார்கள். அமைதியாக இருக்கும் அந்த இடம் கூடிய விரைவில் அமர்களமாக மாறிவிடும். அதற்காகப் பணியாளர்கள் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள்...
  19. P

    கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 3

    அத்தியாயம் – 3 அருணின் வீட்டுக்குச் சென்ற பொழுது அவன் அன்னை உணவறையில் அமர்ந்து அழுது கொண்டிருக்க, தந்தையோ முகத்தைக் கோபத்தில் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். அவர்களின் முகங்களைப் பார்த்ததும் ஏதோ சரியில்லை என்று ஆதிநந்தனுக்குப் புரிந்து போனது. எலும்பு முறிவு காரணமாக அருண் கீழிருந்த...
  20. P

    கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 2

    அத்தியாயம் – 2 உணவகத்தில் இருந்து அப்படித் திடீரென்று அருண் கிளம்பிச் செல்வான் என நேத்ரா சற்றும் எதிர்பார்க்கவில்லை. கண்டிப்பாக அவனுக்கு ஏதோ பிரச்சனை என்று ஊகித்தவள், அவன் சென்ற சிறிது நேரத்திலேயே அவன் அலைபேசிக்கு அழைத்தாள். அவன் வேறு யாருடனோ பேசிக் கொண்டிருக்க, அழைப்பை வைத்துவிட்டாள்...
Top Bottom