• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நான் போடுற கோட்டுக்குள்ளே -18

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
322
நான் போடுற கோட்டுக்குள்ளே -18

கையில் காஃபி கோப்பையுடன் சிட் அவுட்டில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து சென்னை மாநகரின் போக்குவரத்தை வெறித்துக் கொண்டிருந்தாள் சுபிக்ஷா. நுங்கம்பாக்கத்தில் கடற்கரையை நோக்கிச் செல்லும் பிரதான சாலையில், பலநூறு வீடுகள் கொண்ட ஒரு புகழ்பெற்ற அபார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸின் முதல் மாடியில் இருந்த இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட ஃப்ளாட் அது.

சம்பத்தின் சுயசம்பாத்தியம். வேலையில் சேர்ந்த அடுத்த வருடமே அவனை வீடு வாங்க வைத்த புண்ணியம் எல்லாம் இந்திய வருமான வரிச் சட்டத்தையே சேரும். லோனுக்கு லட்சம் லட்சமாக வட்டி கட்டிக் கொண்டு, ஆயிரங்களில் வருமானவரியைச் சேமிக்கும் லட்சக்கணக்கான புத்திசாலிகளை இங்கே மட்டுமே காணலாம்.

மூர்த்தி சிறியது என்றாலும் கீர்த்தி பெரியது, இரண்டே படுக்கை அறை தான் என்றாலும் சகல வசதிகளையும் உள்ளடக்கியது. தேவிகா மற்றும் முரளிதரன் தம்பதியர் மகனுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் பார்த்துப் பார்த்து வாங்கியிருந்தனர். தனிக்குடித்தனம் என்ற கண்டிஷனுக்கு ஓகே சொன்ன போதே தேவிகா, மகனது வீட்டை உருவாக்கத் தொடங்கி விட்டார். அதுவரையில் பூட்டிக் கிடந்த வீடு, தேவிகாவின் கைவண்ணத்தில் ஜொலித்தது.

திருமணத்திற்கு முன்பு வீட்டைப் பார்க்க வந்த அனுராதா கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுத் தேடிப் பார்த்த போதும் குறை என்று எதையும் கண்டு பிடிக்க முடியாமல் போய்விட்டது. சென்னையின் பிரதான சாலையில், இரண்டு பெற்றோரது வீட்டுக்கும் நடுவே, அவர்களது அலுவலகத்தில் இருந்து நடந்தே செல்லும் தூரத்தில் சகல வசதிகளோடு சொந்த வீடென்று ஒன்றை எதிர்பாராத அனுராதா, அதன் பின்னர் வாய் திறந்து எதையும் பேசவே இல்லை.

வாழப் போகும் வீடு சுபிக்ஷாவிற்கும் மிகவும் பிடித்துவிட்டது. அதுவும் ஹாலுடன் இணைந்திருந்த ப்ரைவேட் டெரேஸும், அங்கே இருந்த ஊஞ்சலும், அதைச் சுற்றி அழகாய் பூத்துக் குலுங்கிய வண்ண மலர்களும் அவளது பிடித்தத்தை அதிகரிக்கும் வேலையைச் சிறப்பாகச் செய்தது. கடந்த நான்கு நாட்களில் இந்த ஊஞ்சலில் அவள் செலவழித்த நேரம் அதிகம். அப்போதெல்லாம் கணவனும் அவள் அருகில் இருந்தான்.

இன்று தனிமையில் இனிமை காண முடியுமா என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறாள். பெரும்பாலான சென்னை வாழ் மக்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை என்றாலே வீட்டில் இருக்கக் கூடாது என்ற கொள்கை உடையவர்கள் போல. கார்களிலும் டூவீலர்களிலும் மக்கள் கடற்கரையை நோக்கிப் படையெடுத்துக் கொண்டிருந்தனர்.

இவளும் அப்படி எல்லாம் நண்பர்களுடன் விதம் விதமாக ஞாயிற்றுக்கிழமையைக் கொண்டாடியவள் தான். அதெல்லாம் க.மு.. (அதாங்க கல்யாணத்துக்கு முன்) க.பி. (கல்யாணத்துக்கு பின்) அவள் மாறிவிட்டாளா என்பதைக் காலம் முடிவு செய்யும். ஆனால் இன்று கண் முன்னே இருந்த கடமை அழைத்ததால் சொந்த விருப்பங்களை சிலமணி நேரங்களுக்குத் தள்ளி வைத்து விட்டு குடும்ப இஸ்திரியாக மாறி இருக்கிறாள்.

திருமணம் முடிந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கழித்து சம்பத்தும் சுபிக்ஷாவும் அடுத்த நாள் முதல் அலுவலகம் செல்ல இருக்கிறார்கள். இருவரும் அன்று காலை எழுந்தது முதல் அதற்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டு இருந்தார்கள்.

அரைமணி நேரம் முன்பு வரை மிகவும் பரபரப்பாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்பட்டவள், உடலும் உள்ளமும் சற்று பிரேக் வேண்டும் என்று கேட்டதால் தானே தயாரித்த முதல்(?!) காஃபியைக் குடிப்பதா வேண்டாமா என்ற ஆராய்ச்சியுடன் அங்கே அமர்ந்திருந்தாள்.

இவள் எழுவதற்கு முன்பிருந்தே வேலை பார்த்துக்கொண்டு இருந்த சம்பத்தும் பிரேக் வேண்டும் என்று வெளியே சென்று விட்டான். அவன் செல்லும் இடத்தைச் சொல்லாவிட்டாலும் இவளுக்குப் புரிந்து தான் இருந்தது. போகட்டுமா என்றோ நீயும் வருகிறாயா என்றோ அவன் கேட்காதது ஒரு குற்றம் என்றால், அவள் தனியே புது இடத்தில் என்ன செய்வாள் என்பதை நினைக்காமல் அவனைப் பற்றி மட்டுமே யோசித்தது மாபெரும் குற்றம்.

அவளுக்கும் பிரேக் தேவைப்பட்டது தான். ஆனால் அது ஒன்லி பால்கனி வரையிலான பிரேக்காக, கணவன் மனைவி மட்டுமே இருக்கும் பிரேக்காக இருக்க வேண்டும் என்று நினைத்தாள்.
அவர்களுக்கு இடையில் யாரும் வரக் கூடாது என்று நினைத்தவள், முழுமையாக இரண்டு நாட்கள் தனிக்குடித்தனம் ஆரம்பித்த புது மணமக்களின் கூடவே இருந்த அனுராதாவைப் பற்றி நினைக்க மறந்தது ஏனோ?

நான்கு நாட்களுக்கு முன்பு தான் சுபிக்ஷாவின் தனி சாம்ராஜ்ஜியம் அங்கே ஆரம்பமாகி இருந்தது. புதன் கிழமை காலையில் இவர்களுக்கு முன்பே அங்கே ஆஜராகி இரண்டு நாட்கள் அங்கே தங்கி ராஜ்ஜியத்தை ஆளத் தேவையான முக்கியமான (சதி)ஆலோசனைகளை விழித்திருக்கும் நேரம் எல்லாம் தாராளமாக வழங்கி, மகளின் நன்றியையும் மாப்பிள்ளையின் வெற்றுப் பார்வையையும் வாங்கிக் கொண்டு மனமே இல்லாமல் கிளம்பி இருந்தாள் அனுராதா.

சம்பத்தோ மாமியாரின் வருகை பற்றியும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை, அனுராதா கிளம்பிய போதும் எதுவும் சொல்லவில்லை. தேவைக்கதிமாக எதுவும் பேசவும் இல்லை. சுபிக்ஷா தான் அனுராதா கிளம்பிய போது திருமண தினத்தன்று அழுததை விட அதிகமாக அழுதாள். சொல்லப் போனால் திருமணம் முடிந்து கிளம்பிய போது சிரித்துக் கொண்டே பெற்றவருக்கு டாடா காட்டிவிட்டு வந்தவள் அவள்.

ஆனால் இன்று அவளது வீட்டில் அனுராதாவை மேலும் இரண்டு நாட்கள் தங்கி விட்டுச் செல்ல வேண்டும் என்று சொல்ல நினைத்தாள். அதையும் சம்பத் அனுராதாவிடம் சொல்ல வேண்டும் என்று அவள் எதிர்பார்த்ததை அவனிடம் சொன்னதன் விளைவு தான் இன்றைய சம்பத்தின் வெளிநடப்புக்குக் காரணமோ? இருக்கலாம்..

கையில் இருந்த காஃபி ஆறிக்கொண்டிருப்பதை உணராதவளாக தனது திருமணத்தை, அதன் பின்னான தனது வாழ்க்கையை மெதுவாக அசைபோட ஆரம்பித்தாள் சுபிக்ஷா.

திருமணம், இரு வீட்டு குலதெய்வம் வழிபாடு, மறு வீடு, உற்றார் உறவினர் வீட்டு விருந்துகள் என்று சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்த போது பதினைந்து நாட்கள் காணாமல் போயிருந்தது. திருமணம் முடிந்த உடன் தனிக்குடித்தனம் போய்விடலாம் என்று அவள் நினைத்திருக்க, அவளது தாயும் அதற்கு முயற்சி செய்ய அந்த ஆசை நிராசையானது. அரைகுறை மனதுடன் மாமியார் வீடு வந்த சுபிக்ஷா பட்டும் படாமல் நடந்து கொண்டாலும் மற்றவர்கள் அவளிடம் நன்றாகவே பழகினார்கள்.

சித்தப்பாக்கள், மாமா, அத்தை வீடுகளுக்கு அழைத்துச் சென்ற போது சுபிக்ஷா சிறியவர்களிடம் நெருக்கத்தைக் காட்டினாலும் பெரியவர்களிடம் பிறர் அறியாமல் ஒரு ஒதுக்கத்தைக் காட்டினாள். அதைக் கவனித்த சம்பத் அவளிடம் இதைப் பற்றி இப்போது பேசுவது நல்லதல்ல என்று ஒதுக்கி விட்டான். ஆனால் ராஜஸ்ரீயின் வீட்டில் அவளது ஒதுக்கம் வெளிப்படையாகத் தெரிந்ததில் தம்பதிகளிடையே முதல் ஊடலுக்கு வழிவகுத்தது.

தம்பிக்குப் பிடித்ததை மட்டும் செய்ய வேண்டும் என்று எண்ணாமல் அவன் மனைவிக்கும் என்ன பிடிக்கும் என்று கேட்டு விருந்தை அமர்க்களப்படுத்தி இருந்தாள் ராஜஸ்ரீ. இளையவர் பட்டாளம் முழுவதும் அங்கே ஆஜராகி இருந்தது.

அரவிந்தின் பெற்றோரும் அவனது தங்கை குடும்பமும் கூட இருந்தது. இருவரையும் அமர வைத்து முறையாகப் பாலும் பழமும் கொடுத்து விருந்தை ஆரம்பித்து வைத்தார் அரவிந்த்தின் அன்னை. அதன் பிறகு அங்கே இளைஞர் ராஜ்யம் ஆரம்பம் ஆனது. சம்பத் அனைவரிடமும் சகஜமாகப் பேச சுபிக்ஷா ஒதுங்கி இருந்தாள்.

"ஹேய்.. சுபிக்ஷா! கம் அண்ட் ஜாயின் அஸ்" என்று அவளைப் பேச்சுக்குள் இழுத்த அரவிந்த் சம்பத்திடம் பேச ஆரம்பித்தான்.

"அப்புறம் சம்பத், ஹனிமூன் பிளான் எல்லாம் ரெடியா? எத்தனை நாள் ட்ரிப்? எங்கே போய் மாதிரி ஐடியா?"

"தெரியாத மாதிரி கேட்கறேளே அத்திம்பேர். டூ பேட்.. Europe டூர் பிளான் பண்ணி இருக்கேன்.. for fifteen days(பதினைந்து நாட்கள்)" என்று சிரித்தான் சம்பத்.

தங்கள் பெர்சனல் விஷயத்தை அவன் பேசியதும் அதற்கு சம்பத் சிரித்துக் கொண்டே பதில் சொன்ன விதமும் பிடிக்கவில்லை என்றாலும் பல்லைக் கடித்தபடி அமைதியாக இருந்த சுபிக்ஷா அவனது அடுத்த கேள்வியில் இவன் என்ன லூசா என்று பார்த்தாள்.

"ஓ.. வெரி குட்.. வெரி குட்.. தனியா ஹனிமூன் போகப் போறியா? இல்லை.. "

'இதென்ன இவர் பேசறதே சரியில்லை.. தனியா ஹனிமூனா..' சுபிக்ஷா இவ்வாறு யோசிக்க, ராஜஸ்ரீ கணவனது பேச்சில் குறுக்கே புகுந்தாள்.

"ஹலோ சார்.. என்னாச்சு உங்களுக்கு.. இதென்ன புதுசா தனியா ஹனிமூன்.. எதுக்கு அவனை வளைச்சு வளைச்சு கேள்வி கேட்கறேள்?"

"ம்ச்.. ஸ்ரீ! நான் கேள்வி கேட்ட ஆளுக்கு அதுக்கான அர்த்தம் தெரியும். பதில் சொல்ல முடியாமல் சமாளிக்கறான் பாரு. முடிஞ்சா உன் தம்பி கிட்ட பதிலை வாங்கு" என்று மனைவியைத் தூண்டி விட்டு அமைதியாக இருந்தான் அரவிந்த்.

"நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்.." என்று கணவனைப் பார்த்த ராஜஸ்ரீ தம்பியிடம் அதே கேள்வியை திரும்ப கேட்டாள். இப்போதும் சம்பத் பதில் சொல்லாமல் சிரிக்க, அவனது செயல் அங்கே இருந்த மற்றவர்களின் கவனத்தை ஈர்த்தது. அரவிந்தின் தாய் தான் புரிந்து கொண்ட விஷயத்தைப் பேச ஆரம்பித்தார். சம்பத்திடம் தனி அபிமானம் கொண்டவர் அவர்.

"நீ ஏண்டா இப்படி சொல்ற? நம்ம சம்பத் அப்படி எல்லாம் தனியா போக மாட்டான். ரொம்ப தங்கமான பிள்ளை. நீ ஒன்னும் வருத்தப் படாதேம்மா, இவா ஏதோ விளையாடறா?" என்று மகனிடம் ஆரம்பித்து சுபிக்ஷாவிடம் முடித்தார் அவர். சுபிக்ஷாவின் முகம் ஒரு அதிருப்தியை வெளிப்படுத்த, சம்பத் யாரும் அறியாமல் மனைவியின் கையை பிடித்து தட்டிக் கொடுத்தான்.

அவனது செய்கையில் சமாதானம் ஆகாதவள் தனது நிலையை வார்த்தைகளில் வெளிப்படுத்தினாள்.

"ம்ச். எதுக்கு இப்படி ஆளாளுக்கு பப்ளிக்கா நம்ம பர்சனல் விஷயத்தை டிஸ்கஸ் பண்ணனும்? இவாளுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? எதுக்கு இவ்வளவு ரைட்ஸ் எடுத்துக்கறா? ஐ ஜஸ்ட் ஹேட் தீஸ்…" இன்னும் என்ன பேசி இருப்பாளோ, சம்பத் சட்டென்று எழுந்து வெளியே சென்று விட்டான்.

அவள் மெதுவாகத் தான் பேசினாள் என்றாலும் அவள் பேச ஆரம்பித்ததும் அவளையே கவனித்துக் கொண்டிருந்த அனைவருக்கும் அவளது பேச்சு திகைப்பூட்டியது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அனைவரும் கலைந்து சென்றனர். கலகலப்பாக ஆரம்பித்த விருந்து அமைதியாக முடிந்தது. பரத் கூட சாப்பிடுவதற்கு மட்டுமே வாயைத் திறந்தான்.

சம்பத்தின் பார்வை பெரியவர்களிடம் மன்னிப்பை வேண்ட, அவனுக்காக சகஜமாகப் பேச ஆரம்பித்தாலும் ஒரு விலகல் தெரிந்தது. இந்தக் கல்யாணத்தின் பின்னணியை அறிந்த அனைவருக்கும் சுபிக்ஷாவின் நடவடிக்கைகள் ஆச்சர்யத்தை அளிக்கவில்லை. ஆனாலும் அவளது பேச்சு வருத்தம் அளித்தது நிஜம். தனது ஒரு செய்கையில் அனைவரையும் தள்ளி நிறுத்தி இருந்தாள் அவள்.

கிளம்பும் நேரத்தில் சூழ்நிலை புரிந்து, "ஐயாம் வெரி சாரி மாமி" என்று மன்னிப்பை வேண்டி நின்றவளை மனம் நிறைந்த வாழ்த்துகளுடனே மன்னித்து, கூடவே, தங்கள் நிலையையும் தெளிவாக சொல்லியே அனுப்பி வைத்தார் அரவிந்தின் அன்னை. அவருக்கு தெரியும், தேவிகா இது போன்ற பேச்சுக்களைத் தாங்க மாட்டார் என்று.

"அதெல்லாம் எதுக்கும்மா? சின்னப் பொண்ணு சொன்னதுக்காக கோவிச்சுக்க முடியுமா? சம்பத்தை எப்போதுமே எங்காத்துப் பிள்ளையா தான் நினைச்சிண்டு இருக்கேன். அந்த உரிமைல ஒன்னு ரெண்டு வார்த்தை வந்தால் இந்த ஓல்டீஸ்கு வேற வேலை இல்லைன்னு இந்த காதுல வாங்கி அந்தக் காதுல விட்டுப் போயிடு. இந்த வயசுக்கு மேலே நாங்க மாறணும்னு நினைச்சாலும் கஷ்டம்.. நோக்கு என் நிலைமை புரியறது தானே."
அவரது பேச்சின் சாராம்சம் புரிந்து தலையாட்டி வைத்தாள் சுபிக்ஷா.

சம்பத்தை நேசித்த சொந்தங்களை, அந்த நாளும் வந்திடாதோ? என்று ஏங்க வைத்து விட்டு இது தான் நான் என்று நடந்து கொண்டாள் அவள்.

அமைதியாக காரை ஓட்டிய சம்பத் மனைவியிடம் பேசுவதற்கு வார்த்தைகளைக் கோர்த்துக் கொண்டு இருந்தான்.

"ஹ்கும்.." என்று தொண்டையைக் கனைத்தவன், "சுபி! Just listen to what I am trying to say. i don't want any explanation.." (நான் சொல்ல வருவதை மட்டும் கேள், எந்த விளக்கமும் எனக்குத் தேவையில்லை)
என்று பீடிகையோடு ஆரம்பித்து,

"எதுவா இருந்தாலும் சட்டுன்னு ரியாக்ட் பண்ணாதே. அன்ட், நாம பேசற வார்த்தைகள் தான் நம்ம கேரக்டர டிசைட் பண்ணும். ஸோ.. வாட்ச் யுவர் வோர்ட்ஸ் ஆல்வேஸ் (watch your words always)" என்று இடைவெளி விட்டவன்,

"உனக்கு சொந்தக்காராளோட இருந்து பழக்கம் இல்லைன்னு எனக்குத் தெரியும். அதனால சட்டுன்னு பழகறதுக்கு கஷ்டமா இருக்குன்னு நினைச்சேன். ஆனால் சொந்தமே வேண்டாம்னு ஃபீல் பண்ணுவேன்னு நான் எதிர்பார்க்கலை. பட் நமக்கு எப்போதும் எல்லாரும் வேணும்னு தான் நான் நினைக்கிறேன், நினைப்பேன்."

நமக்கு என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து தனது நிலைப்பாட்டையும் அவளிடம் அவனது எதிர்பார்ப்பு என்ன என்பதையும் தெளிவாக இரண்டே வாக்கியங்களில் விளக்கியவன் கார் ஓட்டுவதில் கவனமானான்.

தனிக்குடித்தனம் சென்றாலும் அவனைச் சொந்தத்தில் இருந்து பிரித்துவிட முடியாது என்பதையும் மறைமுகமாக உணர்த்தி இருந்தான். புரிய வேண்டியவளுக்குப் புரிந்ததா??

ஒரு வழியாக கல்யாண கலாட்டாக்கள் எல்லாம் குறைந்த போது மணமக்களின் தேனிலவு பயணம் ஆரம்பம் ஆனது, அரவிந்த் சொன்னது போலக் கொஞ்சம் வித்தியாசமான தேனிலவு. இருவரும் திருமணத்திற்காக ஒரு மாதம் வரை விடுமுறை எடுத்திருந்தனர்.

அதற்கடுத்த இரண்டு மாதங்கள் வரை சம்பத்தின் வேலை லண்டனில் என்றிருக்க சுபிக்ஷாவின் விடுமுறை முடிந்தவுடன் வொர்க் ஃப்ரம் லண்டன் என்று பர்மிஷன் வாங்கி மனைவியுடன் பறந்து விட்டான் சம்பத். பதினைந்து நாட்கள் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் தேனிலவைக் கொண்டாடியவர்கள் லண்டன் திரும்பிய போது கம்பெனி சார்பில் அவர்களுக்கென ஒரு வீடு தயாராக இருந்தது.

வெற்றிகரமாகத் தங்கள் தனிக்குடித்தனத்தை லண்டனில் தொடங்கிய ஜோடிக்கு, வேலைக்கு மத்தியில் காதல் செய்வதில் இருந்த ஆர்வம் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதில் இல்லை.

நடுவே ஒரு வார இறுதியில் கனகவல்லியின் வீட்டு விருந்துக்குச் சென்று வந்தனர். அங்கே, சம்பத் சொன்னதைக் கடைப்பிடிக்க சுபிக்ஷா மிகுந்த பிரயத்தனங்களை செய்ய வேண்டியிருந்தது. இருந்தாலும், விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்று முயன்று வாயை மூடிப் பேசக் கற்றுக்கொண்டாள்.

லண்டனில் படிக்கும் சுபிக்ஷாவின் தங்கை மானஸா இவர்களைப் பார்க்க வந்தாள். (முதல் எபிசோடுக்கு அப்புறம் இப்போ தான் இவளை வரவழைக்க வேண்டிய அவசியம் வந்திருக்கு)

ப்ளஸ் டூ முடித்து விட்டு ராயல் காலேஜில் தான் மருத்துவம் படிப்பேன் என்று வந்துவிட்டவள், இளநிலை பட்டம் பெற்று இப்போது FRCS நோக்கி அடியெடுத்து வைத்திருக்கிறாள். இவர்களின் திருமணத்திற்காகச் சென்னை வந்தவள் இப்போது தான் லண்டன் திரும்பி இருக்கிறாள்.

"ஹாய் அத்திம்பேர்! ஹலோ சுப்பி!" என்று ஆர்ப்பாட்டமாக வந்தவளை சம்பத் புன்னகையுடனும் சுபிக்ஷா முறைப்புடனும் வரவேற்றனர். தமக்கையின் முறைப்பைக் கண்டு கொள்ளாமல், "எப்படி அத்திம்பேர்? எனக்குப் புரியவே இல்லை" என்று சம்பத்திடம் கேள்வி கேட்டாள். அவனைப் பார்த்த நாள் முதல் கேட்டுக் கொண்டே இருக்கிறாள், பதில் தான் கிடைத்த பாடில்லை.

"எனக்கும் தான் புரியலை" என்று எப்போதும் போல சிரித்தவனுக்கு, "ஆல் ஃபேட்னு சொல்லுவேள்னு பார்த்தேன். பரவாயில்லை, உங்களுக்கு சுப்பியை சமாளிக்க தெரிஞ்சிருக்கு" என்று பதில் கொடுத்தாள் மானஸா.

இருவரையும் நோக்கி நெற்றிக் கண்ணைத் திறந்தாள் சுபிக்ஷா.

"யூ.. யூ.. என்னை சுப்பின்னு கூப்பிடாதேன்னு சொல்லி இருக்கேன்" என்று பல்லைக் கடித்தவள், "என்ன தான் புரியலை இரண்டு பேருக்கும், சொல்லித் தொலைங்கோ" என்றாள்.

"அதுவா சுப்பி… " என்று அவளிடம் இருந்து தள்ளி நின்று கொண்டவள், "உன்னைப் போய் எப்படி அத்திம்பேருக்குப் பிடிச்சதுன்னு தான் நேக்குப் புரியலை. சரி.. அவர் கிட்டயே கேட்டு க்ளியர் பண்ணிக்கலாமேன்னு பார்த்தேன். ம்ச்.. மை பேட் லக்.. அவருக்கும் புரியலையாம்" முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு மானஸா சொல்ல, இருவரையும் முறைத்தவள் காலை உதைத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்.

இருவரும் சேர்ந்து அவளைச் சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. சுபிக்ஷா இருவரையும் தனித்தனியே வைத்து செய்தாள் என்பது தனிக் கதை.

லண்டனில் இருந்த போது வீட்டைப் பராமரிப்பது, சமையல் போன்ற வேலைகளுக்கு எல்லாம் ஆள் இருந்ததால் சுபிக்ஷா தண்டனையும் தேனிலவையும் நன்றாகவே அனுபவித்தாள். ஊருக்குத் திரும்ப வேண்டும் என்ற நிலையில் தான் அடுத்தது என்ன என்ற நினைப்பே வந்தது.

தனிக்குடித்தனம் என்ற நினைப்பு ஒரு பக்கம் இனித்தாலும் தனியாக குடும்பம் நடத்த என்னென்ன செய்ய வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் என்ன செய்வது? கடுகுக்கும் மிளகுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க, முதலில் கடுகு, மிளகு என்ற மளிகைப் பொருட்கள் இருக்கின்றன என்று தெரிந்திருக்க வேண்டுமே.. படிப்பே கதி என்று வருடக்கணக்கில் இருந்தவள்.. திருமணம் முடிவானது போது கூட அவளுக்கு சமையல் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நினைப்பே வரவில்லை, அனுராதாவும் மகளை எதுவும் சொல்லவில்லை.

சம்பத்திற்கு சமையல் வரும் என்று அவளுக்குத் தெரியும். இவளுக்கு உதவி செய்வான் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்காக முழுநேர சமையல்காரனாக மாற்றிவிட முடியாதே! இப்படியான யோசனைகளில் அவள் ஊர் வந்து சேர்ந்தாள்.

அவர்கள் திரும்பிய இரண்டாம் நாளே நல்ல நாள் தான் என்று தனிக்குடித்தனம் செய்ய அனுப்பி விட்டனர். அதிகாலை ஐந்து மணிக்கு தாத்தா பாட்டி மற்றும் இருவரது பெற்றோருடன் சம்பத்தும் சுபிக்ஷாவும் தங்கள் வீட்டில் அடியெடுத்து வைத்தனர். வீட்டரசியாக சுபிக்ஷா பூஜையறையில் தயாராக இருந்த விளக்கை ஏற்றி பாலைக் காய்ச்சினாள்.

அனுராதா மகளை விட்டு அகலாது நிற்க, பாலை அனைவருக்கும் கொடுத்த தேவிகா, கையோடு கொண்டு வந்திருந்த மாவையும் சட்னியையும் சமையலறை மேடையில் வைத்தார். பின்னர் என்ன தோன்றியதோ,

"சுபிக்ஷா! இந்த மாவை இன்னைக்கு யூஸ் பண்ணிக்கலாம். இன்னும் இரண்டு நாளைக்கு வர்ற மாதிரி மாவு ஃப்ரிட்ஜில வச்சுருக்கேன். வேர்க்கடலை சட்னி கொஞ்சம் இருக்கு. ஆஃபீஸ் போறதுக்கு முன்னாடி ஏதாவது வேணும்னா கால் பண்ணு சரியா.. நாங்க கிளம்பறோம். வரோம் மாமி." அனுராதாவும் அவளது மகளும் தலையசைத்து விடை கொடுத்தார்களே தவிர வாய் திறந்து எதையும் பேசவே இல்லை.

நடப்பதைக் கவனித்துக் கொண்டிருந்த ரங்கராஜனுக்கு தர்மசங்கடமாக இருந்தது. மகளுடன் தங்க வேண்டும் என்று பெட்டியுடன் வந்திருந்த அனுராதா கையை வீசிக் கொண்டு வந்திருந்தாள். வழக்கமாக தனிக்குடித்தனம் செல்லும் மகளுக்குச் செய்ய வேண்டிய எதையும் அவர்கள் செய்யவில்லை. இன்றைய காலகட்டத்தில் அதெல்லாம் பழம் பஞ்சாங்கம் என்று ஒதுக்கினாலும், இன்று சம்பந்தியைத் தள்ளி வைப்பது போல இருந்தது மனைவியின் செயல்.

ஒரு பேச்சுக்குக் கூட அவர்களைத் தடுக்காத மகளை நினைத்து மிகவும் வருந்தினார். அதைத் தவிர அவரால் வேறென்ன செய்து விட முடியும். மாமனாரால் முடியாதது தன்னால் முடியும் என்று நிரூபித்தான் சம்பத்.

"அம்மா! என்ன அவசரம்? டயர்டா இருந்தா கொஞ்சம் அந்த ரூம்ல படுத்துக்கோ. இதோ வரேன்" என்றவன் யாரையும் எதிர்பார்க்காமல் சமையல் அறைக்குள் நுழைந்து இட்லி பாத்திரத்தில் மாவை ஊற்றி அடுப்பில் வைத்தான். இட்லி வேகும் இடைவெளியில், ஒரு பக்கம் தோசை வார்க்க ஆரம்பித்தான். அனைத்தையும் ஹாட் பாக்கில் எடுத்துக் கொண்டு போய் டைனிங் டேபிள் மீது வைத்தவன், பெரியவர்களைச் சாப்பிட அழைத்தான்.

அனுராதா முதல் ஆளாக வந்து உட்கார சுபிக்ஷா கணவனின் வேகத்தில் அரண்டு போய் நின்று விட்டாள். திருமணம் ஆன நாள் முதல் இப்படித்தான். அவளை எதுவும் சொல்வதில்லை, ஆனால் இது தான் நான் என்று தனது ஒவ்வொரு செயலிலும் காட்டிக் கொண்டே இருந்தான்.

லண்டனில் இருந்த போது தினமும் வீட்டுக்கு அழைத்துப் பேசிவிடுவான். லிவிங் ரூமில் அமர்ந்து தான் பேசுவான். சுபிக்ஷாவைப் பேசுகிறாயா என்றும் கேட்டதில்லை பேசு என்றும் சொன்னதில்லை. வீட்டினர் அவளைப் பற்றிக் கேட்கும் போது அவனே பதில் சொல்லிவிடுவான். வேடிக்கை பார்ப்பாளே தவிர நான் பேசுகிறேன் என்று அவள் கேட்டதே இல்லை. இங்கு வந்த நான்கு நாட்களில் இது தொடர்கிறது. அனுராதா இருந்த போதும் அப்படித்தான்.

சுபிக்ஷாவும் பெற்றோருடன் பேசினாள் தான். ஆனால் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டு பேசுபவளிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

இரண்டு நாட்கள் மகளுடன் தங்கி இருந்த அனுராதாவிற்கு சமையல் தவிர வேறு வேலை எதுவும் இல்லை. சமையலறை சாமான்கள் யாவும் கண்ணாடி பாட்டிலில் பெயர் ஒட்டப்பட்ட
ஸ்டிக்கருடன் அழகாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. ஒரு பக்கம் சாதத்துடன் பிசைந்து கொள்வதற்கேற்ற சில பொடி வகைகள். ஃப்ரிட்ஜில் காய்கறிகளுடன் தக்காளித்தொக்கு, புளிக்காய்ச்சல் போன்ற மிக்ஸ்.

வீட்டு வேலைகளுக்கு காலையும் மாலையும் ஒரு வேலையாள் வந்து போனாள். தான் செய்வதற்கு எதுவும் இல்லை என்று இரண்டு நாட்களில் கிளம்பிய அனுராதா, "அதென்ன, உங்க மாமியார் இப்படி எல்லாத்தையும் கொண்டு வந்து அடுக்கி வச்சிருக்கா. உன் டேஸ்ட் என்னன்னு அவாளுக்கு எப்படித் தெரியும்? மாமியார் ஆத்து டேஸ்ட் தான் பழகணும்னு காலம் காலமா இருக்கறதைத் தான் இவாளும் சிம்பாலிக்கா சொல்லி இருக்கா. இதுல தனிக்குடித்தனம் போகச் சொன்னோம்னு வருத்தம் வேற" என்று கொளுத்தி விட்டுத் தான் போனாள்.

ஏற்கனவே சமையலுக்கு என்ன செய்யப் போகிறோம் என்று விழித்த சுபிக்ஷா மாமியாரது உதவியில் மகிழ்ந்து தான் போயிருந்தாள். அதனால் தாயின் பேச்சுக்குப் பெரிய அளவில் எந்த எதிர்வினையும் காட்டவில்லை. ஆனால் மாமியாரின் பேச்சை முழுமையாக காதில் வாங்கியிருந்த சம்பத், அதற்கான எதிர்வினையாற்றும் சந்தர்ப்பத்தை நோக்கிக் காத்திருந்தான்.

இன்று கூட அப்படித்தான் ஒரு சந்தர்ப்பம் அமைந்தது. வேலையில் பிரேக் வேண்டும் என்று கையில் மொபைலுடன் படுக்கை அறைக்குள் சுபிக்ஷா நுழைய இவன், "அம்மாவாத்துக்குப் போயிட்டு வரேன்" என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டான்.
—-
கவனம் எங்கோ இருக்க, ஆறிப் போன காஃபியுடன் அமர்ந்திருந்த சுபிக்ஷா, காரின் ஹாரன் சத்தத்தில் வாசலைப் பார்த்தாள். சம்பத்தின் கார் உள்ளே நுழைவதைக் கண்டு திடுக்கிட்டு எழுந்த போது தான் சுற்றுப்புறம் உரைத்தது. நன்றாக இருட்டி இருக்க அவசரமாக உள்ளே வந்து சுவிட்சுகளைத் தட்டினாள். மணி ஏழரை என்றது கடிகாரம்.(!)

தன்னிடம் இருந்த சாவியால் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த சம்பத் கையில் இருந்த பையை மனைவியிடம் கொடுத்தான். தோசை மாவு, கூடவே சீராக நறுக்கிய வெண்டைக்காய். பதில் பேசாமல் இரண்டையும் ஃப்ரிட்ஜில் வைத்தாள்.
இரவு உணவு வேளை அமைதியாக கழிந்தது.

"கார்த்தால எத்தனை மணிக்கு ஆஃபீஸ் போறதுன்னு முடிவு பண்ணிட்டியா?"
பாதி தூக்கத்தில் இருந்த சுபிக்ஷா கணவனின் கேள்வியில் டக்கென்று எழுந்து அமர்ந்தாள்.

"ஏன்? உங்க டைமிங் எதுவும் மாத்தி இருக்காளா?"

"நோ.. நோ.. அதுக்காக கேட்கலை.. சமையல் பண்ணி, பேக் பண்ணி ன்னு புது வேலைகள் நிறைய இருக்கே. அதான் கேட்டேன் "

"அது ஒன்னும் பிரச்சினை இல்லை. எனக்கு சீக்கிரம் எழுந்து பழக்கம் தான். சமையல்… அது கொஞ்சம் ஸ்லோவா தான் வரும்.. ஏன்.. நீங்க ஹெல்ப் பண்ண மாட்டேளா?"

இரு புருவத்தையும் உயர்த்தி அவள் பார்த்த பார்வையில் மாட்டேன் என்ற வார்த்தை கூட அவனுக்கு ஞாபகம்நான் போடுற கோட்டுக்குள்ளே -18

இரு புருவத்தையும் உயர்த்தி அவள் பார்த்த பார்வையில் மாட்டேன் என்ற வார்த்தை கூட அவனுக்கு ஞாபகம் வருமா என்ன?

இப்படியாக சம்பத் சுபிக்ஷாவின் தனிக்குடித்தனம் வெகு சிறப்பாக ஆரம்பித்தது. நாட்கள் அதன் போக்கில் செல்ல, இடையே அனுராதா தன்னாலான கலகங்களைச் செய்ய, தம்பதியர் இருவரும் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ ஆரம்பித்தார்கள். ஒருவரையொருவர் புரிந்து கொண்டார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி..

ஒருவர் பாதையில் மற்றவர் தலையிடுவதில்லை. குறிப்பாகப் பெற்றோர் விஷயத்தில் என் வழி தனி வழி என்று தான் இருவரும் இருந்தார்கள்.

பங்குனி மாதத்தில் திருமணம் நடந்திருக்க அவர்களுக்கு முதலில் வந்த பண்டிகை தலை ஆடி. நேரடியாக மாப்பிள்ளைக்கு அழைப்பு விடுத்த அனுராதா அவனைப் பெற்றவர்களை ஓரங்கட்ட நினைக்க, மனைவிக்குத் தெரியாமல் சம்பந்தியை அழைத்து முறையைத் தெளிவாகச் செய்தார் ரங்கராஜன்.

தலை தீபாவளி, கார்த்திகை, பொங்கல் என்று புதுமணமக்களுக்கான ஸ்பெஷல் பண்டிகைகள் எல்லாம் வந்து போனது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரச்சனையையும் அதற்கான பதிலையும் தந்து போனது.
எல்லாவற்றிலும் அனுராதாவின் தலையீடும் இருந்தது. அவர்களின் முதல் திருமண நாளும் வந்து போனது.

ஒரு வாரமாக அலுவலக வேலை ஒன்று மிகுந்த பிரச்சனை செய்தது. தங்களின் வழக்கமான பணி நேரம் முடிந்து வீடு வந்து சேர்ந்தவர்களை மறுபடியும் வேலைக்குள் தள்ளியது லண்டனில் இருந்து வந்த ஒரு மெயில்.

கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் வேலை செய்து பிரச்சினையைச் சரிசெய்து, ஆன்சைட்டில் இருந்தவர்களுக்கு சொல்ல அவர்கள் சரிபார்த்து ஓகே சொல்ல, "ஹூஃப்" என்று பெருமூச்சுடன் சாய்ந்து அமர்ந்தான் சம்பத்.

காதில் இருந்து ஏர்பாட்ஸைக்(airpod) கழட்டி அதற்குரிய இடத்தில் வைத்தவன், தனது பெர்சனல் மொபைலைக் கையில் எடுத்தான்.

அத்துணை நேரமும் அவனது அலுவலக வேலையில் கைகொடுத்த சுபிக்ஷா அவன் மறுபடியும் மொபைலைக் கையில் எடுக்கவும் முறைத்தாள். இவன் பார்வை கெஞ்சிய போதும் அவள் இரங்கவில்லை.

"கொஞ்சம் டைம் பார்த்தா நன்னா இருக்கும்.‌ அர்த்த ராத்திரிக்கு அங்கே கூப்பிட்டு யார் கிட்ட பேசப் போறேள்? எல்லாரும் தூங்கி இருப்பா. எனக்கு பசில மயக்கம் வரும் போல இருக்கு. ப்ளீஸ் கார்த்தால பேசிக்கோங்கோ. இல்லேன்னா, வொர்க் ஃப்ரம் ஹோம் போட்டு நாள் பூராவும் அங்கே போவேளே.. அது மாதிரி போங்கோ. ஒரு வாரமா எனக்கு டைமே கொடுக்கலை நீங்க.. ஸோ.. இப்போ ஒன்லி யூ அன்ட் மீ" என்று கொஞ்சலில் முடித்தாள்.

ஆசையுடன் காத்திருந்த மனைவியின் முகம் பார்த்தவன், எந்தக் காரணம் கொண்டும் இதுவரை அவன் செய்திராத ஒரு வேலையைச் செய்தான். தான் செய்யும் செயல் தனக்குப் மாபெரும் இழப்பு ஒன்றைப் பரிசளிக்கக் காத்திருப்பதை அறியாமல் மொபைலை சைலன்டில் போட்டான்.
 
Author: SudhaSri
Article Title: நான் போடுற கோட்டுக்குள்ளே -18
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Goms

Member
Joined
Apr 28, 2025
Messages
71
கல்யாணம் ஆகி ஒரு வருடம் ஆகிடுத்தா?🤔 கின்னஸ்தான் 🥰🥰🥰

சம்பத் என்னடா இது வாழ்க்கை? நீ இவ்வளோ பொறுமைசாலியா?

கடுகுக்கும், மிளகுக்கும் வித்தியாசம் தெரியாத அம்மணி எப்படி சமைக்கிறா?🤔

யாரு குடும்பத்துல மிஸ் ஆக போறான்னு தெரியலையே 🙄🥺
 
Top Bottom