வான பிரஸ்தம் - 2
"என்னம்மா, என்ன ஆச்சு?"
கேட்டுக் கொண்டே கதவைத் திறந்தான் அத்வைத்.
" என்னடா இது புதுப் பழக்கம்? நீ கேட்ட மாதிரி தானே டிஃபன் செஞ்சேன்? எங்களோட ஒன்னா உக்காந்து சாப்பிடாம இங்கே கொண்டு வந்தா என்ன அர்த்தம்? வா அங்கே.தனியா எதுக்கு நீ சாப்பிடணும்?."
" தனியா எங்கேம்மா இருக்கேன். அது தான் எங் கூட......."
என்று ஆரம்பித்தவன் தன்னுடைய தவறைப் புரிந்து கொண்டு நாக்கைக் கடித்துக் கொண்டான்.
பீரோ மேல் இருந்த பாட்டியின் ஆவி தலையில் அடித்துக் கொண்டது.
" என்னடா உளறரே நீ? தனியா இல்லையா? வேற யாரு இங்கே இருக்காங்க."
தலையை நீட்டி ரூமைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தாள் தன்யா.
" அட பரவாயில்லையே! ரூமை படு நீட்டாக வச்சுருக்கயே! "
" நான் எங்கே நீட்டா வைக்கறேன்? எல்லாமே......."
திரும்ப உளறினான். பாட்டிக்கு வேர்த்து விறுவிறுத்தது.
" என்னடா, என்ன? சொல்லி முடி."
" அது வந்தும்மா, எல்லாம் நீ குடுத்த டிரெயினிங்னு சொல்ல வந்தேன். அப்புறம் நான் எங்கே தனியா இருக்கேன்? நீங்க தான் என் கூடவே இருக்கீங்களே எப்போதும்."
என்று சுவற்றில் மாட்டியிருந்த அவர்களுடைய ஃபோட்டோவைச் சுட்டிக் காண்பிக்கப் பாட்டி நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கையை உயர்த்தி அவனுக்குப்
பாராட்டுத் தர அத்வைதும் பாட்டியைப் பார்த்துக் கண்ணடித்தான்.
" என்னமோ வரவர உன்னோட போக்கே சரியில்லை. தானாப் பேசிக்கறே! பெரிய மனுஷனாட்டம் நடந்துக்கற! இன்னும் கொஞ்சம் பூரி மசால் வேணும்னா நீயே வந்து எடுத்துக்கோ சரியா? "
தன்யா ஒரு வழியாக அங்கிருந்து நகரப்
பாட்டி மேலேயிருந்து ஜிங்கென்று குதித்துத் திரும்பவும் மனித உருவை எடுத்துக் கொண்டு அத்வைத் அருகில் வந்து உட்கார்ந்தாள்.
இரண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் ஊட்டி விட்டுக் கொண்டு பாசத்துடன் சாப்பிடப் பாட்டியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.
" நல்ல சாப்பாடு சாப்பிட்டு எவ்வளவு நாளாச்சு! நல்லாப் பண்ணியிருக்காடா உங்க அம்மா. நீ சாப்பிடுடா தங்கம். வளர்கின்ற வயசு உனக்கு. பாட்டிக்கு
வயிறும் மனசும் நெறஞ்சிருக்கு."
" இல்லை பாட்டி. நீங்க நல்லாச் சாப்பிடுங்க. நான் வேணும்னா போய் இன்னும் கொஞ்சம் கொண்டு வரேன்."
" இல்லைடா தங்கம். எங்களுக்கெல்லாம் அப்படி மனுஷங்களை மாதிரிப் பசி, தூக்கம் எல்லாம் கிடையாதுடா கண்ணா."
" ஏன் பாட்டி நீ செத்துப் போனே! பேயாக மாறாமல் மனுஷியா இருந்தா அம்மா, அப்பா என்னோட ஃப்ரண்ட்ஸ் கூட எல்லாம் நல்லாப் பேசலாம் இல்லையா? இப்படி ஒளிஞ்சுருக்க வேண்டாம் இல்லையா?"
" நான் சாகணும்னு ஆசைப் படலைடா கண்ணா. என்னை சாகடிச்சிட்டாங்க. நீ குழந்தைடா. உனக்குப் புரியாது அதெல்லாம். என் பேரு சீதம்மா. நீ சீதாப் பாட்டின்னே கூப்பிடலாம் என்னை."
" பரவாயில்லை பாட்டி. உன்னோட கதையைச் சொல்லு எனக்கு. எல்லாம் எனக்குப் புரியும். இரு தட்டை வச்சுட்டு வரேன் இந்தோ."
தட்டை கிச்சனில் போட்டு விட்டுக் கைகளை
நன்றாகக் கழுவி விட்டுக் குடிக்கத் தண்ணீர் எடுத்துக் கொண்டு ரூமுக்குத் திரும்பினான் அத்வைத்.
" ஏய் அத்வைத், என்னடா திடீர்னு ரெண்டு பாட்டில் தண்ணீர்? உன் ஒருத்தனுக்கு ஒரு பாட்டில் பத்தாதா?"
" இல்லைம்மா. இன்னைக்கு ஹோம்வொர்க் நெறய இருக்கு. ப்ராஜெக்டுக்கு இண்டர்நெட்டில் இருந்து நிறையத் தகவல் எடுக்கணும். தூங்க டயம் ஆகும்."
" என்னப்பா என்ன இது அநியாயமா இருக்கு! இரண்டாம் கிளாஸ் பையனுக்கு இவ்வளவு ஹோம் வொர்க்கா? நம்ப காலத்தில இல்லையே!"
"நீயும் நானும் சரியான மொக்கை. என் பையன் பயங்கர ஸ்மார்ட். என்னமாப் பேசறான் பாரு."
" அட, இப்ப ஸ்மார்ட் னு சொல்லும் போது மட்டும் என் பையன்னு பெருமை அடிச்சுக்கோ. கொஞ்ச நேரம் முன்னாடி குட்டிச் சாத்தான்னு வாய் கூசாமச் சொன்னயே!"
" அடப்பாவி, சரியான சமயத்தில கோர்த்து விடறயே பையன் கிட்டே. அது ஏதோ ஃப்ளோவில வந்ததுடா ராசா. நீ போய் உன்னோட ஹோம் வொர்க்கைப் பாருடா தங்கம்."
மகனிடம் அசடு வழிந்து கொண்டு ஜகா வாங்கிய அவினாஷ், மனைவியை ஒரு முறை முறைத்தான்.
'அப்பா நீங்க சொன்னாலும் சொல்லா விட்டாலும் நான் குட்டிச் சாத்தான் தான்.
ரூமுக்குள்ள போய்ப் பேயோடு பேசற குட்டிச் சாத்தான்'
என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே ரூமுக்குள்ள போய்க் கதவைச் சாத்திக்
கொண்டான் அத்வைத்.
"திடீர்னு இவன் கொஞ்சம் வளந்துட்ட மாதிரி இருக்கான் இல்லையா?"
"ஆமாம். அப்படின்னா அடுத்தது ரெடி பண்ணிடலாமா சீக்கிரமா. வா வா இன்னைக்கே ஆரம்பிச்சிருவோம் நம்ம முயற்சியை."
அவினாஷ் மனைவியைக் காதலுடன் பார்க்க தன்யாவிற்குக் கோபம் ஏறியது.
" ஏகப்பட்ட லோனை வாங்கி வீடு வாங்கிட்டு இன்னொன்று எல்லாம் நம்பளால சமாளிக்க முடியாது. ஒழுங்காப் போய்த் தூங்கு. எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு .முடிக்கணும்."
"என்ன பெரிய வேலையோ எப்பப் பாத்தாலும். புருஷன் கிட்டே ஆசையாப் பேசறதுக்குக் கூட டயமில்லாமல்."
முணுமுணுத்துக் கொண்டே சென்றான் அவினாஷ் டி.வி.அருகே.
சிரித்துக் கொண்டே கிச்சனுக்குள் சென்றாள் தன்யா. எல்லாம் நன்றாக க்ளீன் செய்து துடைத்து வைத்தால் தான் தன்யாவிற்குத் தூக்கம் வரும்.
ரூமுக்குள்ள நுழைஞ்சதும் சோகமா உக்காந்திருந்த சீதாப் பாட்டி துள்ளிக் குதித்து ஓடி வந்தாள்.
" ஏன் பாட்டி? வயசானவங்கள்ளாம் கஷ்டப் பட்டு நடப்பாங்களே! நீங்கள் எப்படி இவ்வளவு நல்லா நடக்கறீங்க!"
"அதெல்லாம் உயிரோடு இருக்கும் வரை தான். முழங்கால் வலி. உடம்பு வலி. அதெல்லாம் இப்பக் கிடையாது. இப்ப நான் ரொம்ப ஃப்ரீ."
"பாட்டி.இப்பக் கதையைச் சொல்லறீங்களா."
"கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லறேன். நிறைய நேரம் ஆகி விடும்.நீ ஹோம் வொர்க் முடிச்சு டயத்துக்குத் தூங்கணும் இல்லையா?"
"கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லுங்க பாட்டி. பரவாயில்லை."
"நானும் என்னை மாதிரி இன்னும் நிறைய
வயதான முதியவர்கள் கூட இங்கே ஒரு முதியோர் இல்லத்தில் சந்தோஷமாக இருந்தோம்."
" முதியோர் இல்லம்னா என்ன பாட்டி."
" அது வந்து அது வந்து, நீங்கள்ளாம் ஸ்கூல் போற மாதிரி வயசானவங்க போற இடம்.
என்ன சில ஸ்டூடன்ட்ஸ் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கற மாதிரி நாங்கள் அங்கேயே தங்கி இருப்போம்."
" அடப் பாவமே! அப்ப வயசானாலும் படிச்சுக்கிட்டே இருக்கணுமா? இல்லை நீங்கள்ளாம் குழந்தையில் சரியாப் படிக்கலைன்னு வயசானதுக்கு அப்புறமும் ஸ்கூல் அனுப்பிச்சுட்டாங்களா?"
" ஆமாண்டா செல்லம். நீ அப்படியே வச்சுக்கோ. உங்களை மாதிரி எல்லாம் நாங்க புத்திசாலியா இல்லையேடா கண்ணா. சின்னப்பசங்களா இருந்த போது அப்பா அம்மா சொன்னதைக் கேட்டோம். பெரியவங்களானதும் பசங்க சொன்னதைக் கேட்டோம். சொந்தமா ஒரு முடிவும் எடுக்கத் தெரியலையே? வாழ்க்கையில் எதையுமே சரியாக் கத்துக்கலைடா."
" என்ன பாட்டி என்னல்லாமோ பேசறீங்க! ஒன்னுமே புரியலை போங்க."
" அந்த முதியோர் இல்லத்தைக் காலி பண்ணி அந்த இடத்தை வீடு கட்டறதுக்காக வேணும்னு வந்து சொன்னாங்க. எங்களுக்கு வேற எங்கே போறதுன்னு தெரியலை. மீதியை நாளைக்குச் சொல்லறேன் போ. நீ போய் ஹோம் வொர்க் பண்ணு."
அத்வைதும் சிரித்தபடியே தலையாட்டி விட்டு ஹோம் வொர்க்கை முடித்து விட்டுப் படுத்துக் கொண்டான். சீதாப் பாட்டி அவனுடைய தலைமாட்டில் உட்கார்ந்து கொண்டு மெல்லிய குரலில் பாடிக் கொண்டே அவனைத் தட்டினாள்.
பாடல் வரிகளில் சோகம் இழையோடியது.
பாட்டியின் கண்களில் லேசாகக் கண்ணீர் துளிர்த்தது.
அதே குடியிருப்பின் இன்னொரு ப்ளாக்கில் எட்டாவது மாடியில் இன்னொரு ஃப்ளாட்.
அங்கேயும் அவினாஷ் குடும்பம் போலவே இளம் தம்பதி.
ஆகாஷ், மேகா மற்றொரு இளம் தம்பதி. அவர்களுக்கு ஒரு குட்டி இளவரசி நேத்ரா. ஆகாஷ், மேகா இரண்டு பேருமே ஐ.டி.ஸெக்டரில் தான் வேலை பார்க்கிறார்கள். ஒரே சமயத்தில் வேலையில் சேர்ந்து ஒரே டீமில் இருந்து எக்கச்சக்க காதல். வெற்றிகரமாகத் திருமணம். ஒரே குழந்தை நேத்ரா. ஏழு வயதிருக்கும்.
இந்த வீட்டில் சமையல் வேலை எல்லாம் ஆகாஷ் தான். மேகாவிற்கு சமைக்கவும் வராது. இன்ட்ரஸ்டும் கிடையாது.
மேகா கம்ப்யூட்டரில் ஏதோ துருவித் தோண்டிக் கொண்டிருக்க, ஆகாஷ் கிச்சனில் சமைத்துக் கொண்டிருந்தான்.
" என்ன ஆகாஷ், டின்னர் ரெடியா? பசி உயிரே போகுது."
" இதோ முடிச்சுட்டேன் டியர். காஷ்மீரி புலாவ், ராய்தா , சிப்ஸ் எல்லாம் குட்டிம்மா கொடுத்த மெனு தான். நீ கொஞ்சம் நேத்ராவுக்குக் குரல் கொடுத்து விட்டு டேபிள் ஸெட் பண்ணு பாக்கலாம்."
" நேத்ரா சீக்கிரம் டைனிங் டேபிளுக்கு வரயா? டின்னர் ரெடி."
" இதோ வந்துட்டேன் மம்மி."
நேதாராவிற்கும் தனி ரூம். தன்னுடைய ரூமில் கேரம் விளையாடிக் கொண்டிருந்தாள். எதிரில் யாரும் இல்லை. ஆனாலும் எதிர்த்த பக்கத்தில் இருந்து காய்களும் ஸ்டிரைக்கரும் நகர்ந்தன. நேத்ரா யாருடனோ பேசிக் கொண்டும் இருந்தாள்.
" என்ன தாத்தா, இந்த கேம் படு போர். நாளைக்கு வீடியோ கேம் தான்."
அங்கே பாட்டி. இங்கே பேயாக ஒரு தாத்தா நேத்ராவிடம் பேசிக் கொண்டே கேரம் விளையாடிக் கொண்டிருந்தார்.

Author: siteadmin
Article Title: வான பிரஸ்தம் - 2
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.