வான பிரஸ்தம் -11
அறையில் இருந்து வந்த வினோதமான சத்தங்களால் கவலையுடன் கதவையே பார்த்துக் கொண்டிருந்தனர் அஷ்வினும் தன்யாவும். அத்வைதிற்கும் மனதில் ஒரே பயம். நிஜமாகவே பேய் ஓட்டுவதில் திறமைசாலிகளாக இருந்து ஒருவேளை சீதாப் பாட்டி அவர்களிடம் வசமாக மாட்டிக் கொண்டு விட்டாரோ என்ற பயம் வாட்டியது அவனை.
தன்யா வேகமாகச் சென்று பூஜையறையில் கந்தர் சஷ்டி கவசம் படிக்க ஆரம்பித்து விட்டாள்.
"காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்கத் தடையறத் தாக்க
பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும் பகை அகல
வல்ல பூதம் வாலாஷ்டிகப் பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரஹ்ம
ராட்சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோடு அனைவரும்"
என்று கணீரென்று தொடர்ச்சியாகப் படித்ததில் வீடு முழுவதும் கந்த சஷ்டி கவசம் ஒலித்தது.
ஒரு வழியாகக் கதவுகள் திறக்க வெளியே வெட்கம் கலந்த பெருமிதத்துடன் வந்தார்கள் ஜில்ஜில் ரமா மணியும் அவளுடைய அசிஸ்டன்ட் ஆன ஜித்தனும்.
அவர்களை பார்த்தால் பேயோடு போராடி ஜெயித்தவர்களைப்போல்
தெரியவில்லை. யாருடனோ விளையாட்டு மைதானத்தில் ஓடியாடி விளையாடிக் களைத்துப் போய் வந்தவர்கள் போல இருந்தது அவர்களுடைய முக பாவம். ஏதோ ஒரு பயமும் தயக்கமும் கூடத் தெரிந்தது
அவர்களுடைய பாவனையில். ஒன்றுமே சொல்லாமல் அடுத்த வீட்டிற்குச் சென்றார்கள்.
அடுத்து நேத்ராவின் வீட்டிலும் இதே காட்சிகள் தொடர்ந்தன. ஆனால் இங்கே கொஞ்சம் சிரித்து சிரித்துப் பேசும் சத்தமும் கூடக் கேட்டது. நேத்ரா பயங்கர டென்ஷனுடன் காத்துக் கொண்டிருந்தாள். ஆனால் மதன் தாத்தா எப்படியும் சமாளித்து விடுவார் என்று அவளுக்கு மனதில் தைரியம் இருந்தது. இது எல்லாம் தெரியாத ஆகாஷும் மேகாவும் கவலையுடன் மூடிய கதவுகளுக்கு எதிரே காத்துக் கொண்டிருந்தார்கள்.
இங்கேயும் அதே மாதிரி வெளியே வந்த ஜில்ஜில் ரமாமணியும் ஜித்தனும்
ஒன்றுமே அவர்களுக்கு பதில் சொல்லாமல் அடுத்த வீட்டிற்குச் சென்று விட்டார்கள்.
இதே காட்சி மற்ற வீடுகளிலும் தொடர்ந்தது. காவியாவின் ஆவி இருந்த தீப்தியின் வீட்டில் மட்டும் கொஞ்சம் சீக்கிரமாகவே வெளியில் வந்துவிட்டார்கள். காவியாவின் கவிதைகளின் எதிர்வினையாக
இருக்கலாம். அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் ஓடி வந்திருக்கலாம்.
தமிழாசிரியர் நல்லசிவம் இருந்த துருவின் அறையில் இருந்தும் ரொம்ப சீக்கிரமாகவே தலையைப் பிய்த்துக் கொண்டு வெளியே ஓடி வந்துவிட்டார்கள். மலையாளமோ இல்லை சமஸ்கிருதமோ கலக்காமல் சுத்தத் தமிழில் மந்திரங்களை உச்சரிக்க வேண்டும் என்று ஒருவேளை நிபந்தனை போட்டிருக்கலாம் நல்லசிவம்.
முத்தரசு தாத்தாவின் ஆவி இருந்த வருணின் அறையிலிருந்து அவர்கள் வெளியே வரத்தான் அதிக நேரம் எடுத்துக் கொண்டார்கள். கலகலப்பான பேச்சுச் சத்தமும் சிரிப்புச் சத்தமும் கூரையைப் பிளந்தன.
ஒருவழியாக கமலாகர் தாத்தாவின்
ஆவி இருந்த அதிதியின் அறையோடு ஆறு அறைகளும் முடிந்துவிட அடுத்தகட்டமாக ஆறு குழந்தைகளையும் அத்வைதின் வீட்டில்
அத்வைதின் வீட்டு ஹாலில் ஒன்றாக உட்கார வைத்துவிட்டு அஷ்வினையும்
தன்யாவையும் வெளியே அனுப்பி விட்டாள் ஜில்ஜில் ரமாமணி.
பெற்றோர் எல்லோரும் நேத்ராவின் வீட்டில் பல்லைக் கடித்துக் கொண்டு
குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு என்ன ஆகப் போகிறதோ என்று பயங்கர டென்ஷனில் காத்துக் கொண்டிருந்தார்கள்.
'ஜில்ஜில் ரமாமணி எவ்வளவு திறமைசாலி, நிஜமாகவே பேய்கள் குழந்தைகளின் அறைகளில் இருக்கின்றனவா, அப்படிப் பேய்கள் இருப்பது உண்மை என்றால் அவற்றை விரட்டுவதில் எவ்வளவு தூரம் ரமாமணி வெற்றி
காண்பாள் ' என்று எத்தனையோ கேள்விகள் அவர்கள் அனைவரின் மனங்களிலும் ஓடிக் கொண்டிருக்கின்றன.
ஆனால் அங்கே அத்வைதின் வீட்டிலோ அவர்கள் யாரும் எதிர்பார்த்திருக்கவே முடியாத ஒரு நிகழ்ச்சி தான் அரங்கேறிக் கொண்டிருந்தது.
ஆறு குழந்தைகளுடன் சேர்ந்து ஆறு தாத்தா பாட்டி பேய்களும் சேர்ந்து உட்கார்ந்து
கும்மாளமடித்துக் கொண்டிருந்தன.
ஜித்தனும் முத்தரசு தாத்தா பேயுமாகச் சேர்ந்து,
"பொதுவாக என் மனசு தங்கம்!
ஒரு போட்டியினு வந்து விட்டா சிங்கம்!
உண்மையே சொல்வேன்!
நல்லதே செய்வேன்!
வெற்றி மேல் வெற்றி வரும்!
தனனா தானா தனனா தானா
தனனா தானா தனனா தானா
வெற்றி மேல் வெற்றி வரும்!
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்!
ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே!"
என்று பாடிக் கொண்டு செம ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
அது எப்படி இதெல்லாம் நடக்கிறது? இவர்கள் கண்களுக்கு எப்படி அந்தப் பேய்கள் தெரிகின்றன என்று குழந்தைகளுக்கே ஆச்சர்யம். காரணம் தெரிந்ததும் குஷியாகி விட்டார்கள்.
ஜில்ஜில் ரமாமணி வேறு யாருமல்ல. இந்தத் தாத்தா பாட்டி பேய்கள் இறப்பதற்கு முன்னால் ஒன்றாக இருந்த முதியோர் இல்லத்தில் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து கொண்டிருந்த ஆயாவான முனியம்மா தான் நம்ப ஜில்ஜில் ரமாமணி.
முதியோர் இல்லம் இருந்த காலத்தில் தாத்தா பாட்டிகளுக்கு பயங்கரத் தோழியாக இருந்தவள் தான் முனியம்மா. திருட்டுத் தனமாக அவர்களுக்கு கமர்கட், லாலிபாப்,
இலந்தவடை எல்லாம் முனியம்மா தயவில் தான் அவர்களுக்கு ஸப்ளை. ஜித்தன் என்ற
ஏழுமலை முதியோர் இல்லத்தில் செக்யூரிட்டி கம் கேட் கீப்பர் கம் ப்யூன். முனியம்மாவின் அருமைத் தம்பி.
முதியோர் இல்லம் எதிர்பாராத விதமாக மூடப்பட்டு விடத் தவித்துப் போன முனியம்மா பிழைப்பிற்காகப் போட்ட பல்வேறு அவதாரங்களில் தன்னுடைய பெயரை சிம்ரன், குஷ்பூ, த்ரிஷா என்று ஆசைப்படி விதவிதமாக மாற்றிக் கொண்டு
பல ஃப்ராடுத் தனமான வேலைகளைச் செய்து விட்டு, சரியாக மாட்டிக் கொள்ளும்
படியான சூழ்நிலையில் தனது தோற்றத்தையும் பெயரையும் திரும்ப மாற்றிக் கொண்டு அடுத்த சாகசத்தை ஆரம்பித்து விடுவாள்.
ஏழுமலையும் சளைத்தவனல்ல. தனது பெயர்களை சந்தானம், விவேக், யோகி பாபு என்று விதவிதமாக மாற்றிக் கொண்டு அக்காவிற்கு பக்கபலமாகக் கூடவே நின்றான்.
இவர்களுடைய புதிய அவதாரம் தான் பேய் ஓட்டுகின்ற ஜில் ஜில் ரமாமணியும் அவளுடைய அஸிஸ்டன்டான ஜித்தனும்.
இருவரும் முதன்முதலில் பேய் ஓட்ட அத்வைதின் அறையில் நுழைந்த போது
சீதாப் பாட்டியின் பேய் பீரோவிற்கு மேலே ஒடுங்கிக் கொண்டு பயந்து போய் உட்கார்ந்திருந்தாள். ரமாமணியும்
ஜித்தனும் உள்ளே நுழைந்து கதவைச்
சாத்தினார்கள். அவர்களைப் பார்த்ததும் சீதாப் பாட்டிக்கு பயங்கர குஷியாகி விட்டது.
அவர்கள் முன்னால் வந்து குதித்துத்
தன்னை வெளிப்படுத்திக் கொள்ளத் தீர்மானித்து விட்டாள் சீதாப் பாட்டி உடனே. மனதில் இருந்த பயமெல்லாம் போய் விட்டது.
" சரி, கொஞ்ச நேரம் இவர்கள் என்ன தான் பண்ணுகிறார்கள்?"
என்று பார்க்கலாம் என்று முடிவு செய்து அவர்களை வேடிக்கை பார்த்தாள்.
கையில் கொண்டு வந்த எலுமிச்சம் பழத்தை அறையின் ஒரு மூலையில் போட்டு விட்டு அங்கிருந்த நாற்காலிகளில் ஹாயாக உட்கார்ந்து கொண்டார்கள் இரண்டு பேரும். அறையைக் கண்களைச் சுழற்றிப் பார்த்த ஜித்தன் சந்தோஷமடைந்தான்.
" யக்காவ், என்ன ஸுப்பரா இருக்கு இல்லை இங்க வீடெல்லாம். நாம எப்பக்கா இந்த மாதிரி வீடெல்லாம் வாங்குவோம்."
" உம் அதெல்லாம் இந்த ஜன்மத்தில நடக்காது. நானே கஷ்டப்பட்டு ஆயிரம் வேசம் கட்டி அரை வயிறுக்குச் சம்பாரிச்சா ஒன்னோட பிரியாணிக்கும் பீடிக்குமே பத்தலை. இதில தொரைக்கு வீடு கேக்குதோ அதுவும் இந்த மாதிரி வீடு. முண்டம், முண்டம். கம்னு கெட. ஏதாவது துன்னுறதுக்கு இங்க இருக்குதான்னு செத்தப் பாக்கறியா?"
" யக்காவ், இந்தோ பிஸ்கட் டப்பா. அட, சிப்ஸ் பாக்கட் கூட இருக்கு. நல்லாப் பசிக்குது .வா வா. சீக்கிரம் காலி செய்யலாம்.'
பிஸ்கட் டப்பாவை ஜித்தன் கையில் எடுத்தான். சிப்ஸ் பாக்கெட்டைப் பாசத்துடன் அக்காவிடம் நீட்டினான்.
சீதாப் பாட்டி மேலேயிருந்து பறந்து வந்து
இரண்டையும் பிடுங்கிக் கொள்ளத் திகைத்துப் போய் நின்றார்கள் இரண்டு பேரும். அவர்கள் கண்ணுக்குப் பாட்டி தெரியாததால் அந்தரத்தில் நின்ற பிஸ்கட் டப்பாவையும் சிப்ஸ் பாக்கெட்டையும் பார்த்து பயந்து ஒரே அலறல், கூச்சல் தான் இரண்டு பேரும். அரண்டு போய் விட்டார்கள்.
சீதாப் பாட்டி அவர்களுடன் இன்னும் கொஞ்சம் விளையாட முடிவு செய்தாள்.

Author: SudhaSri
Article Title: வான பிரஸ்தம் -11
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.