என்றென்றும் வேண்டும்- 22
அமரகோசம் என்ற வடமொழி அகராதி உலகில் தோன்றிய முதல் அகராதி—நிகண்டு ஆகும். ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இந்த அகராதியில் பிரம்மாவுக்கு 29 பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அமரகோஷம் போன்ற நிகண்டுகள் பெரிய விஷயங்களையும் அழகாக மனப்பாடம் செய்யும் வகையில் பாடலாக எல்லாவற்றையும் கொடுத்து விடும். இதோ பிரம்மாவின் 29 பெயர்களும் அடங்கிய அமரகோச ஸ்லோகம்:
பிரம்மாத்மபூ: ஸூரஜ்யேஷ்ட: ப்ரமேஷ்டி பிதாமஹ:
ஹிரண்யகர்ப்போ லோகேஸ: ஸ்வயம்பூஸ் சதுரானன
தாதா அப்ஜயோனி த்ருஹிர்ணோ விரிஞ்சி கமலாசன:
ஸ்ரஷ்டோ ப்ரஜாபதிர் வேதா விதாதா விஸ்வஸ்ருத் விதி:
நாபிஜன்மாண்டஜ: பூர்வோநிதன: கமலோத்பவ:
ஸதானந்தோ ரஜோமூர்த்தி சத்யகோ ஹம்சவாஹன
இந்தப் பெயர்களைத் தவிர அவருக்கு வேறு சில பெயர்களும் உண்டு. உலகம் முழுதும் பிரம்மா வழிபாடு இருக்கிறது. இந்தியாவில் ராஜஸ்தானில் உள்ள புஷ்கர் என்னும் இடத்தில் பூஜிக்கப்படுகிறார். மற்ற எல்லாக் கோவில்களிலும் சிலை உண்டு. தென் கிழக்காசிய நாடுகள் முழுதும்— குறிப்பாக கம்போடியா, இந்தோ நேசியாவில் நிறைய சிலைகள் உள்ளன. பால்டிக் நாடுகளில் இவர் ‘’ஸ்வேதோவித்’’ என்ற பெயரில் வழிபடப்படுகிறார். இவருடைய நாலு முகங்கள் நால்திசைகளையும் பார்ப்பதால் இப்பெயர். வெள்ளை நிறத்தவர் என்ற பொருளும் உண்டு. இந்தியாவில் எல்லாப் பெரிய கோவில்களிலும் பிரம்மா இருக்கிறார். எகிப்தில் ‘’பிதா’’ என்ற பெயரில் பிரம்மா இருக்கிறார்
பிரம்மாவின் ஐந்தாவது தலை சிவனால் கிள்ளி எறியப்பட்டது. நான்கு கைகளில் ஜபமாலை, வேதப் புத்தகம், கமண்டலம், யாகக் கரண்டி வைத்திருப்பார். மனைவி சரஸ்வதி — இவருக்கு அன்ன வாகனம். அவர் உடல் செந்நிறம். ஆயினும் வெள்ளை வஸ்திரம் தரித்து இருப்பார். வரம் கொடுப்பதில் தயாள குணம். ராமனுக்கு மட்டுமின்றி, பலி, ராவணன் ஆகிய ராக்ஷசர்களுக்கும் வரம் கொடுத்தவர்.
சதபத பிராமணம் என்னும் நூலில் பல அடையாளபூர்வ கதைகள் உள்ளன. பிரம்மா — ‘’பூர்’’ என்று சொன்னவுடன் பூமியும் ‘’புவர்’’ – என்று சொன்னவுடன், காற்றும், ‘’ஸ்வர்’’ என்று சொன்னவுடன் வானமும் உருவானதாக சதபதப் பிராமணம் கூறும்.
படைப்புத் தொழில் செய்தபின் அவர் அலுப்பால் படுக்கவே எலும்புகள் விலகி மூட்டு வலி ஏற்பட்டது ஆயினும் பின்னர் சரியானது. அக்னிஹோத்ரம் என்னும் யாகத்தால் அவர் மூட்டுகள் ஒன்று சேர்ந்து அவர் பலம் பெற்றார் என்றும் சதபதம் கூறும். இந்த விலகிப்போன மூட்டுகள் எலும்புகள் ஆகியன ‘’காலம்—பருவங்கள்’’ எனப் பொருள்படும். சங்கேத மொழியில் பேசுவது ரிஷிகளுக்கு மிகவும் பிடிக்கும் என்று வேதமே சொல்லுகிறது
பிரம்மன், பிராமணன், பிரம்மா
பிரம்மன், பிராமணன், பிரம்மா ஆகிய மூன்றும் வெவ்வேறு பொருள் உடையவை. பிரம்மம் என்பது கடவுள்; பிராமணன் என்பது ஜாதிப் பெயர்-பிரம்மத்தை நாடுவதே அவன் வாழ்க்கையின் லட்சியம்., பிரம்மா என்பவர் மும்மூர்த்திகளில் ஒருவர். இது தவிர ‘’பிராமணம்’’ என்ற நூல் வேத இலக்கியத்தில் சம்ஹிதைகளைத் தொடர்ந்து வந்த இலக்கியங்கள்.
பிரம்மாவுக்கு தனி வழிபாடு, பூஜை- புனஸ்காரங்கள் இல்லாவிடினும் துதிப்பாடல்களிலும், பஜனைப்பாடல்களிலும் திரி மூர்த்திகளின் பெயர்களில் அவர் பெயரும் சேர்ந்தே வரும். சுசீந்திரம் போன்ற இடங்களில் தான்+மால்+ அயன் என்ற பெயரில் கடவுள் வணங்கப் படுகிறார். பிரம்மாவின் வாய் — இடைவேளை இன்றி வேதத்தை ஒலிபரப்பும் வேத ஒலிபரப்பு ரேடியோ ஸ்டேஷன் — ஆகும். அவர் எப்போதும் வேதமுழக்கம் செய்தவண்ணம் இருப்பார்.
வேதத்தில் இவர் பெயர் பிரஜாபதி, வால்மீகி ராமாயணத்தில் பிரம்மா என்ற பெயருடன் வலம் வருகிறார். சிவனுடைய அடி முடி தேடிய படலத்தில் பொய் சொன்னதால் வழிபாடு இல்லாமற் போனது என்பர்.
யசோதர்மன் என்பவன் கி.பி. 533ல் வெளியிட்ட மாண்டசோர் கல்வெட்டில் படைப்போன், காப்போன், அழிப்போன் ஆகிய மூவரும் பிரம்மாவே என்று சொல்லி இருக்கிறார்.
காயத்ரி இப்போது பத்மா, அத்தையின் கவனிப்பில் லேசாக சதை போட்டு கன்னங்கள் செழுமையாய் இன்னும் மெருகேறியிருந்தாள்.
அன்பு சூழ் உலகத்தில் இருப்பவளுக்கு சந்தோஷத்துக்கு என்ன குறை? அந்த சந்தோஷமே அவள் அழகை இன்னும் கூடி இருந்தது.
அதுவும் விஸ்வநாதனிடம் தன் அன்பை சொன்னதன் பிறகு அந்த மனநிறைவே அவளை ஜொலிக்க வைத்தது.
மூன்று மாதங்களாய் வீட்டுக்கு விலக்காகும் நாட்களில் தான் கஷ்டப்படுவதோடு தங்கள் கண்ணீலும் விரலை விட்டு ஆட்டும் காயத்ரி இப்போது நாற்பது நாட்கள் ஆகியும் எதுவும் சொல்லவில்லையே என்று பத்மா தான் முதலில் யோசித்தார்.
காயத்ரிக்கு அதெல்லாம் நினைவிலேயே இல்லை. அவளைப் பொறுத்தவரை அது வந்தால் தான் தொல்லை. அதனால் வரவில்லை என்றதும் நிம்மதியாக இருந்து விட்டாள்.
அதோடு வேறு எந்த அறிகுறியும் தெரியாமல் போக அவளுடைய இயல்பு வாழ்க்கையிலும் எந்த மாற்றமும் இல்லை.
இப்போதெல்லாம் மாலையில் அவள் வேலை முடிந்து வந்ததும் சாப்பிட விஸ்வநாதன் அவளுக்கு பிடித்த மாதிரியான உணவு வகைகளை வாங்கி வைத்துக் கொண்டிருந்தான்.
வீட்டில் வெங்காயம் பூண்டு மசாலா ஐட்டங்கள் அறவே செய்வதில்லை என்பதால் அவளுக்கு மட்டும் தான் வாங்கி வருவான்.
சில சமயம் பத்மா சத்தம் போடுவார்.
"டேய்! டெயிலி இதெல்லாம் வாங்கிக் குடுத்தேன்னா அவ வயிறு என்னத்துக்கு ஆறது? தெனம் வாய்ண்டு (வாங்கிக் கொண்டு) வந்து குடுக்காதேடா.
ஆத்துல முறுக்கு, தட்டை அதெல்லாம் சம்படம் நிறைய பண்ணி வெச்சிருக்கேன்.
அரவிந்துக்கு குடுத்தனுப்பிட்டு மீதி ஆத்துல நிறைய இருக்கு. ஆசையா சாப்பிட இவ மட்டும் தானே இருக்கா? இத ரெண்டு நாளைக்கு சாப்பிட்டா ஆகாதா?"
அவனுக்கும் தெரிகிறது தான்.
ஆனால் வீட்டுக்கு வந்ததும் அவன் சமையல் அறை மேஜையில் என்ன வைத்திருக்கிறான் என்று ஆசையாய் பார்க்க ஓடி வருபவளை எப்படி ஏமாற்றுவான்?
அவன் எதுவும் வாங்கவில்லையென்று தெரிந்தால் அவள் முகம் அப்படியே வாடி விடும்.
அம்மாவுக்கு பயந்து எதுவும் கேட்க மாட்டாள் தான். ஆனால் முகத்தில் சுரத்து இருக்காதே.
அதிலும் அவளுக்கு பிடித்த சமோசா, பாப்டி சாட் இருந்தால் அன்று இரவு அவள் கொஞ்சும் விதமே தனி தான்.
இதையெல்லாம் அம்மாவிடம் சொல்ல முடியுமா?
ஆனாலும் அம்மா சொல்வதை மீற முடியாமல் இரண்டு நாள் வாங்காமல் இருப்பான். மாலையில் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு இருந்து விட்டு இரவில் அவர்களின் அறைக்கு வந்த பிறகு காயத்ரி கேட்பாள்.
இதில் எல்லாம் அம்மாவிடம் சிபாரிசுக்கு போக முடியாது என்று அவளுக்கும் தெரியும். சொல்வதே அவர் தானே?
பத்மா சில சமயம் அவளிடம் நேரடியாகவே சொல்லுவார். அவள் அவர் எதிரில் நல்ல பெண்ணாய் தலையாட்டி விட்டு இவனிடம் வந்து கெஞ்சுவாள்.
விஸ்வநாதன் அவன் வாழ்க்கையில் இப்படி ஒரு விஷயத்துக்கு அல்லாடுவான் என்று அவனே நினைத்துக் கூட பார்த்ததில்லை.
அன்று மாலை மூணு மணி அளவில் அவன் காயத்ரியின் அலுவலகத்துக்கு மீட்டிங்கில் பங்கேற்பதற்காக போன போது தான் அவனுக்கு தெரிந்தது.
பொதுவாக அவன் பங்கேற்கும் மீட்டிங்கிற்கு காயத்ரியும் வருவாள். அன்றும் தான் வந்துவிட்டதை அவளுக்கு சொல்வதற்காக அவளுக்கு அழைக்க அவள் எடுக்கவே இல்லை. பல முறை அழைத்தும் எடுக்காமல் இருக்கவே சரி எதோ முக்கியமான வேலையில் இருக்கிறாள் என்று நினைத்திருந்தான்.
அங்கு போய் அழைத்த போதும் எடுக்காமலே இருக்க அங்கு வந்திருந்த மற்றொரு பெண்ணை கேட்க அவள் இவனை விநோதமாய் பார்த்தாள்.
"ஜி..! உங்களுக்கு தெரியாதா? காலைல வந்த போதே காயத்ரிக்கு உடம்பு சரியில்ல. பஸ்ல இருந்து இறங்கினதும் வொமிட் பண்ணிட்டா. லேசா டிஸ்ஸியா (dizzy) இருக்குன்னு சொன்னா.
நாங்க கூட ரொம்ப முடியலைன்னா வீட்டுக்கு போறியான்னு கேட்டோம். அவ அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்னு சொல்லிட்டு இங்கயே சிக் ரூம்ல ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கா..."
என்று சாவகாசமாய் சொல்ல விஸ்வநாதனுக்கு ஒரு பக்கம் காயத்ரிக்கு என்ன ஆனதோ என்று ஒரே கவலை. மறுபக்கம் ஏன் தங்களுக்கு சொல்லவில்லை என்று கோபம்.
அந்த பெண்ணிடமே வழி கேட்டுக் கொண்டு அவன் சிக் ரூம் போனான். அங்கே காயத்ரி உறங்கிக் கொண்டிருந்தாள்.
விஸ்வநாதன் அவனுக்கிருந்த கவலையில் களைத்துப் போய் தூங்கிக் கொண்டிருந்தவளின் நெற்றியில் கை வைத்து ஜுரம் இருக்கிறதா என்று பார்த்தான்.
அந்த தொடுகையிலேயே விழித்தவள் பலகீனமாய் "வந்துட்டேளான்னா..?" என்று கேட்க அவனால் கோபத்தை இழுத்து பிடித்து வைத்துக் கொள்ள முடியவில்லை.
அவள் முகத்திலிருந்த சோர்விலும் குரலில் தெரிந்த பலகீனத்திலும் இளகி தான் இருக்கும் இடத்தையே மறந்து "பட்டூ..! என்னடா பண்றது நோக்கு?" என்று அவள் கன்னத்தில் வருடி கேட்டான்.
அவன் ஆதரவிலேயே மெல்ல எழுந்து அமர்ந்தவளுக்கு இப்போதும் லேசாய் தலை சுற்றியது போலிருக்கவே உரிமையோடு அவன் சட்டையை முன்னால் பிடித்து இழுத்து அவன் மேல் சாய்ந்து கொண்டாள். அவன் கேட்ட கேள்விக்கு கூட பதில் சொல்ல முடியாமல் கண்களை மூடிக் கொண்டாள்.
அவள் செய்வதையெல்லாம் பார்த்து விஸ்வநாதன் மிகவும் பயந்து போனான். அவளை எதுவும் பேச விடாமல் "வாடா பட்டூ ..! நாம ஆத்துக்கு போலாம்..." என்று அவளை தூக்கிக் கொள்ள அவளிடம் எந்த மறுப்பும் இல்லை.
அவன் கையில் நன்றாய் சாய்ந்து கொண்டு கண்களை மூடியபடியே வந்தாள். அவள் முகத்தை நொடிக்கொரு முறை கவலையுடன் பார்த்தபடி வெளியே காரை நோக்கி நடந்தான்.
வழியில் அவனை மற்றவர்கள் விநோதமாய் பார்ப்பதை கூட பார்க்கவில்லை.
நல்லவேளையாக சிக் ரூம் கார் பார்க்கிங் அருகிலேயே இருக்க அங்கு வந்து கொண்டிருந்த ஒருவரின் உதவியோடு காரைத் திறந்து அவளை முன் சீட்டை பின்னால் நகர்த்தி அதிலேயே அவளை சாய்ந்து கொள்ளும்படி வசதியாக அமர வைத்தான்.
சீட் பெல்ட்டும் போட்டு விட்டவன் காரை எடுக்க அப்போது தான் அவனுக்கு நினைவு வந்தது.
அவளுக்கு எப்போதும் மாத விலக்காகும் போது இப்படி தானே உடம்பு படுத்தும். அது தானோ என்று நினைத்தவன் அவளை கேட்பதற்காக முகம் பார்க்க அவளோ கண்களை மூடிக் கொண்டிருந்தாள்.
இது வழக்கமான ஒன்று தான் என்பதால் டாக்டரிடம் செல்ல வேண்டாம். வீட்டுக்கு போய் அம்மா அத்தையிடம் கேட்டு விட்டு முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று வீட்டுக்கே காரை செலுத்தினான்.
வீட்டு வாசலில் காரை நிறுத்தி விட்டு மீண்டும் அவளை தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழைய அம்மாவும் அத்தையும் பதறிப் போனார்கள். அவளை கூடத்தில் இருந்த சோபாவில் சாய்த்து படுக்க வைத்தான் விஸ்வநாதன்.
"என்னடா ஆச்சு கோந்தைக்கு..? ஏன் அவளை தூக்கிண்டு வந்திருக்கே...?"
இருவரும் கவலையோடு அருகே வந்து கேட்க விஸ்வநாதன் நடந்ததை சுருக்கமாக சொன்னான்.
இது பெண்கள் விஷயம் என்பதால் அவர்கள் பேசிக் கொள்ளட்டும் என்று அவளுக்கு க்ளுகோஸ் வாங்கும் சாக்கில் விஸ்வநாதன் கடைக்கு கிளம்பி விட இருவரும் காயத்ரியை சூழ்ந்து கொண்டனர்
பத்மா கண் மூடி படுத்திருந்த காயத்ரியை கன்னத்தில் தட்டி "காயத்ரி..! கண்ணை திறந்து என்னைப் பாரு. என்ன பண்றது நோக்கு..?" என்று கேட்க அவள் மெல்ல கண்ணை திறந்தாள்.
ஆனாலும் பார்வையை தழைத்துக் கொண்டு "மயக்கமா இருக்கு மா. காத்தால வாந்தி எடுத்தேனா? அதுல இருந்து எதுவும் சாப்பிடல..."என்று பரிதாபத்தை தேடிக் கொள்வதற்காக சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள்.
"அப்புறம் சாப்பிடாதது இருக்கட்டும். மொதல்ல காத்தால ஏன் வாந்தி வந்துது? அத சொல்லு. நீ ஆத்துல இல்லியா என்ன? அதான் இப்படி படுத்தறதா..?" என்று கேட்க காயத்ரி மறுப்பாய் தலையசைத்தாள்.
"அதெல்லாம் இல்ல மா...நீங்க கடைல வாங்கினத சாப்பிடாதேன்னு சொன்னேளோல்லியோ..?
அத கேக்காம நேத்திக்கு நூடுல்ஸ் நன்னா இருக்குன்னு கூட சாப்பிட்டுட்டேன்..அதான் ஒத்துக்கலை போலருக்கு. காத்தால வயித்த சங்கடம் பண்ணிடுத்து ..."
சொல்லும்போதே குழந்தையாய் குற்றவுணர்வுடன் தலையை தாழ்த்திக் கொள்ள அத்தை நிம்மதி பெருமூச்சு விட்டார்.
"அவ்வளவு தானா..? போறது விடு..நான் போய் கொஞ்சம் இஞ்சி சொரசம் பண்ணிண்டு வரேன். அதை குடிச்சேன்னா எல்லாம் சரியாயிடும்..." என்று அத்தை சமையலறைக்கு போக பத்மா யோசனையோடு அவரை பின்தொடர்ந்தார்.
"இந்த சிறுசுகளுக்கு அப்படி என்ன தான் அந்த கடை பண்டத்துல மோகமோ? கண்ட எண்ணைல பண்றான்.
அதான் கோந்தைக்கு பித்தத்தை கிளப்பி விட்டிருக்கு. அம்பிண்ட சொல்லி நல்ல க்ளப் கடைல வாங்கிக் குடுக்க சொல்லு.." என்றபடி இஞ்சியை எடுத்து தோலை சீவப் போனார்.
பத்மா "இருங்கோ அக்கா. எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு. அவளுக்கு நாள் தள்ளி போயிருக்கு. இது வேறன்னு நினைக்கிறேன். அவளுக்கு சொல்லத் தெரியல. அவ உண்டாயிருக்காளோ அக்கா..?"
என்று தன் சந்தேகத்தை அத்தையிடம் பகிர்ந்து கொள்ள அத்தை முகமெல்லாம் மலர "அப்படியாடி சொல்றே? நீ சொன்னது மாத்திரம் நெஜமா இருந்தா உன் வாய்க்கு சக்கரை போடறேன்..." என்றவர் கடகடவென சாமியறைக்கு போனார்.
அங்கு போய் வேண்டிக்கொண்டு தன் நெற்றியில் அங்கிருந்த திருநீறை வைத்துக் கொண்டவர் "பத்மா..! இங்க வா..! நீ சொன்ன முஹூர்த்தம் பலிக்கட்டும்..." என்று அவருக்கும் பூசி விட்டார்.
"காயத்ரிக்கும் உங்க கையால இட்டு விடுங்கோ அக்கா.. நான் அவளுக்கு கஞ்சி போட்டுண்டு வந்துடறேன். பாவம் கோந்தை ஒட்ட ஒட்ட (பட்டினியாக) கிடக்கா .." என்றவர் பரபரப்பாய் அடுப்பை பற்ற வைத்தார்.
பிறகு உடனே அடுப்பை அணைத்து விட்டு "நான் விச்சுவை இது டெஸ்டு பண்ண என்னவோ இருக்காமே..?
அத வாங்கிண்டு வர சொல்லிடறேன்..." என்றவர் போனை எடுத்து விச்சுவை அழைத்து விவரத்தை சொன்னார்.
மனைவிக்கு முடியவில்லையே என்று கவலையோடு வெளியே வந்த விஸ்வநாதனுக்கு அம்மா சொன்னதை கேட்டதும் இன்ப அதிர்ச்சி.
அவன் பார்வையில் அவன் மனைவியே குழந்தை. அவளுக்கு குழந்தையா? ஆனாலும் தான் அப்பா ஆகப் போகிறோம் என்ற உணர்வே பூரிப்பை தர க்ளுகோஸ் வாங்குவதற்காக பார்மஸியில் நின்று கொண்டிருந்தவன் அந்த கடையிலேயே விவரம் கேட்டான்.
அவர் பரிசோதனை செய்யும் கிட்டை கொடுத்து வழிமுறையும் சொல்லி அனுப்பி விட விஸ்வநாதன் வீட்டுக்கு நடந்து வரவில்லை. பறந்து வந்தான். உடனே அவன் பட்டூவை பார்க்க வேண்டும் என்று ஆசை அவனை தள்ளியது.
வீட்டுக்கு வந்து அம்மாவிடம் கொடுத்து விவரம் சொன்னவன் தன் அறைக்கு சென்று விட்டான்.அவன் பட்டூவை பார்க்க வேண்டும் என்று ஆவலாய் வந்தவனை அம்மா வழியிலேயே மடக்கி விட்டார்.
"சரிடா அம்பி! நீ போய் சித்த நாழி உன் ரூம்ல இரு. நான் சொல்றேன்.. என்னன்னு தெரியல. எதுவா வேணா இருக்கலாம்..." என்று எச்சரிக்கையும் விடுத்தார்.
பத்மா காயத்ரிக்கு பசியாற முதலில் கஞ்சி கொடுத்து பிறகு அவளை கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டு பாத்ரூமுக்கு அழைத்துக் கொண்டு போனார்.
முதலில் குளிர்ந்த நீரை எடுத்து அவள் முகத்தை நனைத்து விடவும் காயத்ரியின் முகத்தில் தெளிவு வந்தது.
அத்தை விவரம் சொல்லி காயத்ரியிடம் அதை கொடுத்தனுப்பி விட்டார். நின்ற அந்த மூன்று நிமிடங்கள் அத்தைக்கும் அவருக்கும் அவ்வளவு பரபரப்பு.
விஸ்வநாதன் படுக்கையில் சாய்வதும் எழுந்து நடப்பதுமாக தன் அறையில் இருப்பு கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தான்.
காயத்ரி சொன்னபடியே செய்து அந்த பட்டையை வெளியே கொண்டு வந்து காட்ட அதில் தெளிவாய் இரண்டு கோடுகள்.
பத்மா அதை பார்த்ததும் பூரித்துப் போய் "என் ராசாத்தி..!" என்று கட்டிக் கொள்ள அத்தைக்கும் அப்போது தான் புரிந்தது.
"நன்னா இருடி கோந்தே..." என்று அவளுக்கு திருஷ்டி கழித்தார். இருவருக்கும் சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் கண்களில் வழிந்தது.
காயத்ரி ஒன்றும் புரியாமல் விழிக்க இருவரின் கண்ணீரையும் பார்த்து பயந்து போனாள்.
"அம்மா! அத்தை நேக்கு என்ன ஆச்சு? ஏன் அழறேள்? இனிமே நான் கடைல வாங்கித் தர சொல்லி கேக்கவே மாட்டேன்..." என்று பயத்தோடு சொல்ல இருவர் முகத்திலும் புன்னகை.
"நீ அம்மாவாகப் போறேடி கோந்தே..." என்று அத்தை சொல்லி விட்டு "விச்சுவண்ட போய் சொல்றேன். பாவம் அவனும் என்னவோ ஏதோன்னு யோஜனை பண்ணிண்டு இருப்பான்..." என்று விச்சுவை தேடிப் போனார்.
பத்மா தன் இரு கைகளாலும் காயத்ரியை அணைத்துக் கொண்டவர் "இந்தாத்துக்கு நீ வந்ததுலேருந்து ஆனந்தம் தாண்டி கோந்தே. என்னிக்கும் நீயும் விச்சுவும் இப்படியே ஆனந்தமாய் நூறு ஆயுசு இருக்கணும்..." என்று வாழ்த்தினார்.
அத்தை சொன்னதை கேட்டதும் விஸ்வநாதனுக்கு தலை கால் புரியவில்லை. கல்யாணத்திற்கு அடுத்த கட்டம் இது தான் என்றாலும் இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கவில்லை.
Author: SudhaSri
Article Title: என்றென்றும் வேண்டும்-22
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: என்றென்றும் வேண்டும்-22
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.