தொட்டுத் தொடரும் -30
இந்திரன் உள்ளிட்ட தேவர்-குழாம் எல்லாம்
வந்திருந் தென்னை மகட் பேசி மந்திரித்து
மந்திரக்கோடி உடுத்தி மணமாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
ஸ்ரீதரன் மற்றும் கௌசல்யாவைப் பற்றிப் பேசிக் கொண்டே வீடுவந்து சேர்ந்தனர் சரணும் ராகவியும். அவர்களை நினைத்தபடி, “ஐம்பதிலும் ஆசை வரும்” என்று பாடிக் கொண்டே காரை விட்டுக் கீழே இறங்கினான் சரண். கூடவே இறங்கிய ராகவியின் காதுகளில் வீட்டின் உள்ளே இருந்த வந்த சத்தங்கள் பயத்தைக் கொடுக்க, அவசரமாக உள்ளே ஓடினார்கள்.
அங்கே அவர்கள் கண்ட காட்சியில், ராகவி மாமியார், மாமனார், பிள்ளைகள் என்று பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் இடுப்பில் கை வைத்து முறைக்க, சரணோ சோஃபாவில் உருண்டு பிரண்டு சிரிக்க ஆரம்பித்தான்.
வீட்டில் இருந்த அனைத்து பொம்மைகளும் ஹாலில் அணிவகுத்து நிற்க, அவெஞ்சர்ஸ் போல நின்றனர் அங்கிருந்த நால்வரும். ஆள் பற்றாக்குறையால் அவர்கள் நால்வருமே மாறி மாறி இருக்கும் உடைகளை எல்லாம் அணிந்ததில், இப்போது யாரைப் போல தோற்றம் அளிக்கிறார்கள் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது.
“மானவ்! கேசவ்!” என்று ராகவி கத்த, தங்கள் விளையாட்டுக்கு வந்த தடையைச் சிறியவர்கள் முறைக்க, ராகவனோ, ‘எவ அவ’ என்பது போல பார்த்தார்.
“இதெல்லாம் டூ மச் அத்தை! எல்லோரும் ரொம்பத்தான் கொஞ்சறீங்க இவங்களை. இப்போ யாரு இதெல்லாம் க்ளீன் பண்றது? மூஞ்சியெல்லாம் வேற ஏதோ செஞ்சு வச்சிருக்கீங்க? எல்லோரும் சாப்பிட்டீங்களா? இல்லையா?” என்று படபடத்தாள்.
“கூல் பேபி! கூல்” என்ற ராகவன், “என்னைக்கோ ஒரு நாள் எங்களுக்கு இப்படி டைம் கிடைக்கிறது. என்ஜாய் பண்றதுல என்னம்மா தப்பு. நீங்களும், இதெல்லாம் அப்பப்போ அனுபவிச்சிடுங்க. பின்னாடி ஃபீல் பண்ணக் கூடாது” என்று பெரியவராக வாழ்க்கைக்கு தேவையான அறிவுரை வழங்கினார்.
அதை அப்படியே ஆமோதித்த அவரது தர்மபத்தினி, “அதானே, நாங்க இப்படி இருந்தால் தான் உங்களுக்கும் நல்லது. பேஷன்ட்ஸூக்கும் நல்லது” என்று கணவரைப் பார்த்துக் கண் சிமிட்டினார்.
“அது சரி” என்ற சரண், “சாப்டீங்களா இல்லையா? நாங்க சாப்டாச்சு. நீங்களும் ஆச்சுன்னு சொன்னா, அவளும் இந்த ஜோதில ஐக்கியம் ஆகிடுவா. பசங்களா அம்மாக்கு கேப்டன் அமெரிக்கா டிரஸ் கொடுத்திடணும் சரியா, இல்லேன்னா அழுதுடுவா” என்று கொளுத்திப் போட்டான்.
துரத்திய மனைவியிடம் இருந்து தப்பிக்க, “சாரிடா, தப்பா சொல்லிட்டேன். நாங்களும் ஜோதில ஐக்கியம் ஆகறோம் பா” என்று ஹல்க்காக மாறத் தயாரானான்.
மியூசிக் அகாடமியில் இருந்து வந்த அபிமன்யுவும் ஸ்ரீநிதியும் தாத்தா பாட்டியிடம் வத்ஸனின் திருமண விஷயத்தை பகிர்ந்தனர். தாத்தா பாட்டி மட்டும் அல்லாமல் ராதாவும் கிருஷ்ணனும் கூட இந்த விஷயம் கேட்டு மகிழ்ந்தார்கள்.
“நாளைக்கு கௌசி கிட்ட பேசறேன்” என்றார் ராதா.
குழந்தைகள் இன்னும் ராதாவின் அறையில் உறங்கிக் கொண்டு இருக்க இரவு உணவை முடித்துக் கொண்டு, அனைவரும் ஹாலில் கூடினார்கள். பல வருடங்களாக அவர்கள் வீட்டில் தினசரி நடக்கும் ஒரு நிகழ்வு இது.
நிதியின் தாத்தாவும் பாட்டியும் கூட இங்கு வந்த ஒரு வாரத்தில் இதைப் பழகி விட்டனர். பெரியவர்கள் அருகில் இல்லாமல், தங்கள் வாழ்க்கையைத் தாங்களே செதுக்கிக் கொண்டு வாழும் இவர்களைப் பார்க்கும் போது, ஸ்ரீதரனின் பெற்றோர் ஒரு வித குற்றவுணர்ச்சி அடைந்தனர்.
அவர்களது முகத்தில் வந்து போன உணர்வுகளைக் கண்டு அதை மாற்ற நினைத்த நிதி, “அப்புறம் பாட்டி, எப்படி இருக்கு எங்க வீடு? செட் ஆயிடுச்சா இல்லையா?” என்று கேள்வி கேட்டாள்.
அனைவரும் சிரிக்க, “அடிக்கழுத!” என்று செல்லமாகத் திட்டினாலும், “என் பேத்தி சரியாத் தானே சொல்றா. அவ வீடு இது தானே. எனக்கு என்ன குறைச்சல் டா? என் பேரன் நல்லாவே பாத்துக்கிறானே?” என்று பேத்தியை சமாதானம் செய்வது போல் வம்புக்கு இழுத்தார்.
“அப்படி சொல்லுங்க பாட்டி. இங்க இந்த மேடத்துக்கு தான் ஹெவி சப்போர்ட் இது வரைக்கும். இனிமேல் நாமளா அவங்களான்னு பாத்திடலாம்” என்று கிருஷ்ணனின் அருகில் சலுகையாக அமர்ந்து இருந்த நிதியைக் கை காட்டியபடி பாட்டியின் மடியில் படுத்துக் கொண்டான்.
இப்போது அவன் செல்லம் கொஞ்சுவது அவனது மக்களுக்கே பிடிக்கவில்லை போலும். சீனியர் அபி கொஞ்சுவது பிடிக்காமல், இரண்டு ஜூனியர் அபியும் அழ ஆரம்பிக்க அவர்களுக்கு அது இன்னோரு விடியா இரவாகிப் போனது.
புது இடத்தில் பொருந்திப் போக குழந்தைகள் இருவருமே சற்றுத் திணறினார்கள். பாட்டி இல்லை என்றால், ராதாவும் நிதியும் திணறி இருப்பார்கள்.
ஸ்ரீதரனின் பெற்றோர் குறித்த நல்ல நாளில், அடுத்த வாரத்திலேயே, ஸ்ரீவத்ஸன்- பார்கவியின் நிச்சயதார்த்த விழா எளிமையாக இருவீட்டாரின் நெருங்கிய உறவினர் சூழ நடந்து முடிந்தது.
இரட்டைக் குழந்தைகளைப் பெற்று மூன்றே மாதங்களான ஸ்ரீநிதியின் உடல் நலனையும், நீண்ட காலங்களுக்கு பிறகு ஒன்று சேர்ந்த சொந்தங்களையும் கருத்தில் கொண்டு, மணமக்கள், எளிய முறையில் நிச்சயம் போதும் என்று சொல்ல, வீட்டார் அனைவரும் அதனை ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர்.
எளிய முறையில் நடந்தாலும் குதூகலத்திற்குக் குறைவில்லாமல் பார்த்துக் கொண்டனர், அபிமன்யு, சரண், ராகவி மற்றும் ஆகாஷ். மணமக்கள் அமைதியாக விழாவை அனுபவிக்க, அவர்களுக்கும் சேர்த்துப் பேசி கலகலத்துக் கொண்டிருந்தது இந்த நால்வர் அணி.
இப்படியாக, வத்ஸனும் பார்கவியும் மொபைலில் கூட பேசிக் கொள்ளாமல் நாட்களைக் எண்ணிக் கொண்டு இருக்க, அவர்களது திருமண நாளும் வந்தது.மூன்று மாதங்களுக்கு பிறகு நடந்த திருமணத்தில், நால்வர் கூட்டணி ஐவராகி ஸ்ரீநிதியும் இணைந்து கொண்டதில் கல்யாணம் களைகட்டியது.
ஸ்ரீவத்ஸன் வெட்ஸ் பார்கவி என்ற எழுத்துக்கள் பின்னணியில் மின்னிக் கொண்டு இருக்க, ரிசப்ஷன் மேடை மணமக்களை எதிர்நோக்கிக் காத்திருந்தது. நேரெதிராக இன்னோரு மேடை வேறு நிகழ்ச்சிக்குத் தயாராகக் காத்திருந்தது.
எல்லோரையும் போல் அல்லாது இவர்களது ரிசப்ஷன் திருமணத்திற்குப் பிறகான மாலையில் நடைபெற இருந்தது. முதல் நாள் காலையில் பார்கவி, ஓர் முக்கிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டி ஒரு மாதத்திற்கு முன்பே முடிவு செய்யப்பட்டு இருந்தது.
“கல்யாணத்தை வச்சிக்கிட்டு கத்திய எடுப்பாங்களா?” என்று கௌசல்யாவின் தாயார் முணுமுணுத்தாலும், நிறைய மருத்துவர்களைக் கொண்ட குடும்பத்திற்கு அது வித்தியாசமாகத் தெரியவில்லை.
திருமணத்திற்கு முந்தைய நாள் காலைப் பொழுது. தன்வந்திரி ஹாஸ்பிடல்ஸ், டாக்டர். பார்கவி ரவீந்திரன் என்று பெயர் பொறிக்கப்பட்ட அறைக்குள், கையில் சாப்பாட்டுக் கூடையுடன் நுழைந்தான் ஸ்ரீவத்ஸன். காலை ஏழு மணிக்குத் தொடங்கிய சிகிச்சை, முடிய மூன்று மணி நேரம் ஆகலாம்.
அதனால், அவளுடன் சேர்ந்தே உண்ணலாம் என்று இருவருக்குமான காலை உணவோடு திருமண மண்டபத்தில் இருந்து வந்திருந்தான். ஆபரேஷன் தியேட்டரில் இருந்து அறைக்குள் நுழைந்த பார்கவி, ஸ்ரீவத்ஸனை அங்கே எதிர்பார்க்கவில்லை என்பது ஆச்சர்யத்தில் விரிந்த அவளது கண்களில் தெரிந்தது.
இருவரும் சேர்ந்தே உணவை முடித்துக் கொண்டு மண்டபத்துக்குச் சென்றார்கள். ஏதாவது அவசரம் என்றால் என்னைக் கூப்பிடத் தயங்க வேண்டாம், என்று மறக்காமல் சொல்லி விட்டு வந்தவளைப் புன்னகையோடு பார்த்திருந்தான் வத்ஸன்.
பெரிய சிகிச்சைக்கு முன்னான மருத்துவர்களின் உழைப்பை உணர்ந்தவன் அவன். மதிய உணவுக்குப் பின் அவளைக் கட்டாயப் படுத்தி உறங்க வைத்தவன், அன்று மாலை வரையில் அவளை யாரும் தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொண்டான். நண்பர்களின் கேலிக்கு ஆளானாலும், ஆரம்ப நாளின் இந்தப் புரிதல் மனதுக்குள் மயிலிறகால் தடவியது போல உணர்ந்தாள் பார்கவி.
மாலையில் நண்பர்களுடன் சிறிய அளவில் கொண்டாட்டங்களும் அதைத் தொடர்ந்து காலையில் சொந்த பந்தங்களுடன் கூடிய திருமணமும் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியை வரவழைத்தது.
ஆனாலும் வத்ஸன் ஏதோ யோசனையிலேயே இருந்தான். தன் தாயில் இருந்து சுற்றி இருந்த அனைவரும் அவ்வப்போது கூடிப் பேசுவதும், தான் சென்றால் நிறுத்தி விடுவதையும் முதல் நாளில் இருந்தே கவனித்துக் கொண்டு இருந்தான்.
ஏதோ செய்யப் போகிறார்கள் என்று புரிந்தது, கலாட்டா இல்லாமல் கல்யாணமா என்று நினைத்து ஃப்ரீயாக விட்டான். மாலை மாற்றும் போதும், மற்ற விளையாட்டுகளின் போதும், எல்லாத் திருமணத்திலும் நடக்கின்ற கலாட்டாக்கள் மட்டுமே இருக்க மிகவும் குழம்பிப் போனான்.
சிலரிடம் கேட்டவன், பலனில்லாமல் போனதில், கத்திரிக்காய் முத்தினா கடைக்கு வந்து தானே ஆகணும், என்று அமைதியாகி விட்டான். இதோ ரிசப்ஷனுக்கு அவன் ரெடியாகி நிற்க, அவன் மனைவி இன்னும் வந்த பாடில்லை. இவனை மேடையில் ஏறுமாறு வற்புறுத்தியும், அவளில்லாமல் எப்படி என்று முழித்தவனுக்குப் பதிலாக, எதிரே இருந்த மேடையில் வெளிச்சம் வர, மேடையில் இருவர் பரதம் ஆட ரெடியாகி நின்றிருந்தனர்.
முதலாம் நபர் ஸ்ரீவத்ஸனின் மனைவி, கிருஷ்ணன் போல வேடமிட்டு, இரண்டாவது நபரைப் பார்த்தவன் நெஞ்சம் படபடத்தது வெளியே கேட்டது. அந்த நபர் யசோதையைப் போல வேடமிட்டு இருந்த அவனது தாய் கௌசல்யா. அவனருகில் நின்ற சரண், “கூல் மேன். என்ஜாய் தி ஷோ” என்றான்.
ஸ்ரீவத்ஸன் சரண் மற்றும் ராகவியுடன் வழக்கம் போல முதல் வரிசையில் சென்று அமர்ந்து கொண்டு, நிகழ்ச்சியின் ஆச்சர்யங்களைப் பார்க்கத் தயாரானான். விஷயம் தெரிந்த சிலரைத் தவிர அனைவருமே ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டு இருக்க, பாடல் ஆரம்பமானது.
“மாடு மேய்க்கும் கண்ணே நீ போக வேண்டாம் சொன்னேன்” கௌசல்யாவிற்கு ஏற்றது போல மெதுவாக ஆடும் படியான பாடலைத் தேர்வு செய்து பயிற்சி கொடுத்து, எல்லாம் செய்தவள் பார்கவி.
அந்தப் பாடல் முடிந்து அடுத்த பாடல் ஆரம்பிக்க,
இப்போது பார்கவி தனியே ஆடினாள். “கண்ணுக்குள் பொத்திவைப்பேன் என் செல்ல கண்ணனே வா”
ஸ்ரீநிதியும் அவளோடு சேர்ந்து கொள்ள அடுத்த பாடல் வந்தது.
“கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை”
இப்போது பார்கவி விலகி நிற்க மேடையில் மனைவியுடன் சேர்ந்து ஆடத் தொடங்கியவன் அபிமன்யு.
“அன்றில் பறவை இரட்டைப் பிறவி ஒன்றில்
ஒன்றாய் வாழும் பிறவி”
இப்படியாக அனைவரும் சேர்ந்து ஆடிய மெட்லி ரவுண்ட்,
“மல்லிகையில் ஒரு மாலை தங்கச்சரிகையில் ஒரு சேலை பூவொன்றை பூட்டி வைக்கத்தான் ஓ கல்யாணம் கண்டுபிடித்தான் தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா பின்பு ஜீவிதம்
துந்தனானேனா”
என்ற பாடலுக்கு நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஆட, கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்கு பிறகு முடிவுக்கு வந்தது.
அனைவருமே மேடையில் நடந்த நாட்டிய நிகழ்ச்சியைத் திறந்த வாய் மூடாமல் பார்த்திருந்னர். கௌசல்யா எதையோ சாதித்தது போல உணர்ந்தார்.
அதன் பின்னர் பாட்டுக் கச்சேரியுடன், ரிசப்ஷன் ஆரம்பித்தது. அது ஒரு ஞாயிறு மாலை என்பதால் மண்டபம் நிறைந்து வழிந்தது.

Author: SudhaSri
Article Title: தொட்டுத் தொடரும் -30
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.