• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தனித்த வனத்தில் 16

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
29
தனித்த வனத்தில் 16

ந்தியாவில் வழக்கமாக ஃபிப்ரவரி- மார்ச் - ஏப்ரல் மாதங்களில்தான் கோல்ஃப் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும்.

இதில் டில்லியிலும் பெங்களூரிலும் நடக்கும் போட்டிகளில் கலந்துகொண்ட மன்மத ராவ், இப்போது இருப்பது பெங்களூரில். நாளை இறுதிப் போட்டி.

டெல்லி டோர்னமென்ட்டில் அரையிறுதி வரை வந்ததே பெரிதென்பது போல் இருந்த மனநிலை, இப்போது நிறைய தெளிந்திருந்தது.

அவன் மனதைக் குவிக்கும் மந்திரக்கோலாகச் செயல்பட்டது கோல்ஃப் க்ளப்.

இத்தனையிலும் மனதின் ஓரத்தில் சாம்பவியின் நினைவு இருந்து கொண்டேதான் இருக்கிறது. டிக்பாயிலிருந்து கிளம்பி ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டது. நாளை போட்டி முடிந்ததும், ஓங்கோலுக்குப் போகவேண்டும்.

அவன் தங்கை ஷைலஜாவிற்குத் திருமணமாகி, ஏழு நீண்ட வருடங்களுக்குப் பிறகு குழந்தை பிறந்திருக்கிறது. சிங்கப்பூர்வாசி. பிரசவத்திற்காகப் பிறந்தகம் வந்திருக்கிறாள்.

குழந்தை என்றதுமே, தானாகவே கை மொபைலில் இருந்த ஹைமாவின் குடும்பப் படத்தைத் தேடி எடுத்தது. கூடவே சாம்பவியின் நினைவும் வர, பட்டென்று மொபைலை அணைத்தான். ஏசி அறையிலும் உஷ்ணமாக உணர்ந்தவன், வாயைக் குவித்து ஊதினான்.

சாம்பவிக்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் இருந்த மன்மத ராவ், அங்கிருந்து டெல்லி செல்வதற்கு முன் தன் மூன்றே முக்கால் நாழி முத்து மழை (!) பெய்த வாழ்க்கையை அவளிடம் சொல்லிவிட்டுத்தான் புறப்பட்டான்.

மன்மத ராவ் ஹைமாவுடனான தன் நட்பு, ஈர்ப்பு, காதல், இணைந்து வாழ்ந்தது என எதைச் சொல்லும்போதும், அவன் தன் மகளாக இருக்கக்கூடும் என்றதும், அந்த புகைப்படத்தைக் காட்டியபோதும் கூட, சாம்பவி ஒரு வார்த்தை குறுக்கே பேசாது, அமைதியாகக் கேட்டாள்.

அவளுக்கு இது எவ்வளவு அதிர்ச்சி தரக்கூடும் என்று அவனுக்குப் புரிந்தது.

“சாம்பவி, என்னடா, இந்த மாதிரி ஒரு ஆளைக் கல்யாணம் செஞ்சுக்கலாம்னு நினைச்சுக் கேட்டுட்டோமேன்னு நீ சங்கடப்படத் தேவையில்லை. இதை இப்படியே மறந்துட்டு நீ நிம்மதியா இரு. நாம எப்பவும் போல ஃப்ரெண்ட்ஸா இருக்கலாம். இல்லையா, ஆஃபீஸ் கலீக்ஸாவே இருக்கலாம். இப்ப நான் சொன்னது கூட , நீ அத்தனை கேட்ட பிறகும், நான் எதுவுமே சொல்லாம போறது நியாயம் இல்லைன்னுதான்”

சாம்பவியிடம் கண்கள் லேசாக சிவந்ததையும் மௌனத்தையும் தவிர வேறு பதிலில்லை.

‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று சொல்லி விட்டு வந்துவிட்டானே தவிர, அவளை இழந்து விடுவோம் என்ற ஏக்கமும் பயமும் ஆட்டுவிக்க, டெல்லியில் முதல் இரண்டு மூன்று நாட்கள் ப்ராக்டீஸ் நேரத்தில் கவனம் கலைந்து பயங்கரமாகச் சொதப்பினான்.

பிறகு, மன்மத ராவ் சோர்ந்துபோகும் போதெல்லாம் அவனை மீட்டெடுக்கும் கோல்ஃப், இப்போதும் கைகொடுத்தது.

இன்னும் ஒருவாரம் இருக்கிறது டிக்பாய் செல்ல. இந்த அவஸ்தை, எதிர்பார்ப்பு, எப்போது முடியும் என்று நினைக்கும்போதே ‘இன்னுமா சாம்பவி உனக்கு சாதகமா பதில் சொல்வான்னு நம்பற?’ என்றது மனம்.

சாம்பவியின் நிராகரிப்பை ஏற்பதைத் தள்ளிப்போடச் சொல்லும் மனம், சம்மதித்து விட மாட்டாளா என்று ஏங்கவும் செய்தது.

‘எதைச் செய்து அவளை சலனப்படுத்தினேன்?’ என்ற கேள்வியுடன் தன்னையே நொந்து கொண்டவனுக்கு, அவன்தான் விடலைப் பையனைப்போல் பார்த்த கணத்திலிருந்தே, அவளிடம் சலனப்பட்டு, ஈர்க்கப்பட்டு இருப்பது புரிந்தது.

‘இனிமே என்னால நான் சொன்னா மாதிரி சும்மா ஃப்ரெண்ட்ஸா எல்லாம் இருக்க முடியும்னு தோணலை. பேசாம வேற ஊருக்கோ, வேலையை மாத்திக்கிட்டோ போயிடறேன். அவளை பாத்துக்கிட்டே இருந்தா, சரியா வராது’

குருட்டு யோசனையுடன் புரண்டு, புரண்டு ஒருவழியாக வராத தூக்கத்தை வம்படியாக இழுத்துவந்தான்.

இறுதிப் போட்டியில் ரன்னர் அப் ட்ராஃபியும், பெரும் பணமும், துபாய், ஆஸ்திரேலியா என சர்வதேச கோல்ஃப் டூர்களுக்கான அழைப்பும், ஷூ, டீ ஷர்ட் என ஓரிரு பெரிய கம்பெனிகளுக்கு பிராண்ட் அம்பாஸிடராகும் வாய்ப்பும் கிடைத்தது.

ஓங்கோலுக்குச் சென்றான். சாதாரணமாகப் படித்துவிட்டு, வேலைக்குப் போயிருந்தால் எப்படியோ தெரியாது, ஆனால், வாழ்வின் முக்கியமான கட்டத்தில், படிக்கும் வயதில், காதல் என்ற பெயரில் மன்மத ராவ் தடம் புரண்டது, அதில் கிடைத்த ஏமாற்றம், பின்னடைவு, அதிலிருந்து அவன் தன்னைப் புடம்போட்டவனாய் மீட்டுக்கொண்டதில், அவனது பெற்றோர், குறிப்பாக அவனது தந்தை அவனுக்கு மிக நெருக்கமானார்.

அவர்கள் இருந்த ஊரில், உறவில் யாருக்கும் தெரியாத அவனது விஷயம், இன்று வரை அப்படியே. மூத்த மகன், ஆண்பிள்ளை மனமுடைந்து தவறான முடிவெடுத்து விடக் கூடாதென்ற கவலையில், கூடுதலாகக் கவனம் செலுத்தித் தட்டிக்கொடுத்து வழிகாட்டினார்.

திருமணத்தை மறுத்தவனை, நெருக்கிப் பிடிக்கவில்லை. ஆனால், மன்மத ராவின் தம்பிக்குத் திருமண வயது வரவும், மீண்டும் கேட்க “அவனுக்கு கல்யாணம் செய்ங்கப்பா” என்றுவிட்டான். தம்பிக்குத் திருமணமாகி ஐந்து வருடங்களாகி, ஒரு குழந்தையும் இருக்கிறது.

கிரிக்கெட்டைத் தவிர, மற்ற விளையாட்டுகள் குறித்த விவரங்களை செய்தியாகக் கூடப் படித்திராத பெரும்பாலான இந்தியக் குடும்பங்களில் மன்மத ராவுடையதும் ஒன்று.

அவனது தம்பி, தங்கை, பெற்றோர்களுக்குக் கூட மன்மத ராவ் கோல்ஃப் ஆடுகிறான், அது ஒரு பணக்கார சோம்பேறிகளின் விளையாட்டு என்பதோடு, வீண் செலவு என்ற எண்ணம்தான்.

இதனால், அவனுமே, விளையாட்டில் தன் முயற்சி, வளர்ச்சி, அதனால் வரும் வருமானம், கம்பெனியில் கிடைக்கும் சலுகைகள் என அதிகம் எதையும் பகிர்வதில்லை. ‘இந்தந்த ஊருக்குச் செல்கிறேன்’ என்று சொல்வதோடு சரி. அதுவுமே, நீண்ட நாட்களுக்குச் சென்றால்தான்.

இதோ, இப்போது கூட “கைக்காச செலவழிச்சு எதுக்குடா ஊர் சுத்தற?’ என்ற அம்மாவிடம் அவன் புன்னகைத்ததோடு சரி.

எம்எஸ்ஸி அக்ரி படித்துவிட்டுத் தந்தையோடு நிலம், நீச்சு, மாடு, கன்னு, அரிசி மண்டியைப் பார்த்துக்கொள்ளும் தம்பி தனியே செல்ல மறுக்க, அவனது மனைவியின் எதிர்பார்ப்புகளும், மன்மத ராவும் ஷைலஜாவும் வரும்போதெல்லாம் அவள் நடந்து கொள்ளும் விதமும் அவனது பெற்றோருக்குப் பிடிக்கவில்லை.

அவர்களது அளவான, அழகான பூர்வீக வீடு, கீழே மெட்ராஸ் ஒட்டு, மேலே ஓடுவேய்ந்து, வீட்டைச் சுற்றி சிறிதான தோட்டம், கிணற்றடி என்று பழைய பாணியில் இருக்க, அதே தெருவிலேயே இருந்த இன்னொரு இடத்தில் நவீனமாய் வீட்டைக்கட்டி, அவனது தம்பியின் குடும்பத்தை அங்கு குடி வைத்துவிட்டார் தந்தை.

மாலைத் தேநீருடன், முற்றத்து வெயிலில் கிடத்தி இருந்த ஷைலஜாவின் எழுபது நாள் குழந்தையை ரசித்துக் கொண்டிருந்த மன்மத ராவ், முழுதாக விழித்துக்கொண்டு, கை, கால்களை உதைத்தபடி, மெலிதான சத்தமும் மோகனச் சிரிப்புமாய், கையை ஒடித்து இல்லாத காரை ஓட்டிய மருமகனிடம் மயங்கினான்.

“மாமாக்கு ரொம்ப போர் அடிக்குது. மாமய்யா கூட வஸ்தாடா?”

மண்டியிலிருந்து வந்து காலைக் கழுவிக்கொண்ட தந்தை, அவன் சொன்னதைக் கேட்டபடி அருகில் வந்து அமர்ந்தார்.

“தொட்டா (மன்மத ராவின் செல்லப் பெயர்), உன் போருக்கு (boredom) ஊர்க் குழந்தையெல்லாம் ஒத்து வராது. பேசாம பொண்ணைப் பாக்கறேன், கல்யாணம் செஞ்சுக்கிட்டு குழந்தை பெத்துக்கோ” - அம்மா.

ஷைலஜா “நா கொடுக்கு மீரு ஊரி பில்லவா மா?”
(என் மகன் உங்களுக்கு ஊர்க் குழந்தையாம்மா)

சிரித்தவர் “அப்ப அவனை உங்கண்ணனோட அனுப்பி வை”

“அதெப்டி, உங்க அல்லுடு (மருமகன்) ஒத்துக்க வேணாமா?”

“அப்ப உனக்கு சம்மதம், அப்படித்தானே?”

தாயும் தங்கையும் சண்டையிடுவதை சிரிப்புடன் வேடிக்கை பார்த்த மகனை யோசனையுடன் பார்த்தார் தந்தை.

திருமணப் பேச்சை எடுத்த புதிதில் முகம் இறுக மறுத்தவன், பிறகு மெதுவாக அந்தப் பேச்சை மாற்றவோ அல்லது தவிர்க்கவோ செய்பவன், கடந்த மூன்று மாதங்களில் ஓரிரு முறை ஃபோனில் கேட்டதற்கு நேரில் வந்து சொல்வதாகச் சொன்னவன், இப்போது போரடிக்கிறது என குழந்தையை அழைப்பதும், அம்மாவின் திருமணம் குறித்த சாடலைப் புறந்தள்ளாது அமைதி காத்ததும் தங்கை போடும் அர்த்தமற்ற சண்டையை ரசிப்பதும்…

பதினான்கு வருடமாக இழந்திருந்த உற்சாகமும் இயல்பும் மகனிடம் மீண்டு விட்டதாக அவருக்குத் தோன்றியது. அவனை மாற்றியது எதுவாக இருப்பினும், அவன் மகிழ்ச்சியாக இருந்தால் சரி என்று எண்ணியவருக்குள் வேறொரு யோசனை.

‘இதற்குக் காரணம் அல்லது காரணி? ஒருவேளை….’

“தொட்டா, கொஞ்சம் நடத்துட்டு வரலாம், வா”

********************

அவர்களது வயலினூடே நடந்தனர். மிளகாய் செடிகளும், எள்ளும் பயிரிடப்பட்டிருந்தது. முதலில் பொதுவாகப் பேசியபடி நடந்த தந்தை, மோட்டார் பம்ப் ஷெட் வந்ததும், அங்கிருந்த சிமென்ட் மேடையில் அமர்ந்தார்.

“கூர்ச்சோ தொட்டா”

“பரவாலேது நானா”

சில நொடிகள் இறங்கும் சூரியனை வேடிக்கை பார்த்தவர் “யாரையாவது விரும்பறியா தொட்டா?”

“நானா”

“உனக்குப் பிடிச்சிருந்தா, ரெண்டு பேரும் உறுதியா இருந்தா மட்டும் சொல்லு, நானே போய் பேசறேன்”

“...”

“இப்ப வயசும் அனுபவமும் உனக்கே இருந்தாலும், உனக்கு எல்லாம் சரியா நடக்கணும்னு நானா ஆசைப்படறேன்”

“...”

இருள் கவியத் தொடங்க, இருவரும் மௌனமாகத் திரும்பி நடக்கத் தொடங்கினர்.

“நானா”

“செப்பு”

“அவ பேரு சாம்பவி”

மன்மத ராவ் அவனுக்கும் சாம்பவிக்குமான ஈர்ப்பை, உரையாடலை, அவளது பின்னணியை, வயதை, அவளது நிச்சயித்த திருமணம் நின்று போனதை, அவருக்குத் தெரிய வேண்டிய அளவுக்குத் தெரிவித்தான்.

ஆங்காங்கே நின்றும் நடந்தும் நிதானித்தும் மகன் சொன்னதைக் கேட்டவருக்கு ஒரே நேரத்தில் மகனை நினைத்துப் பெருமிதமும் கவலையும் எழுந்தது.

“தமிழா?”

“ஹான் நானா”

“அந்தப் பொண்ணு வீட்டுல… சரி, அதை விடு. தொட்டா, இப்ப அந்தப் பொண்ணுக்கு சம்மதம்னா நீ அவளைக் கல்யாணம் செஞ்சுக்கத் தயாரா இருக்கியா?”

ஆசைக்கும், தன்னிரக்கத்திற்கும் நடுவே தத்தளித்த மன்மத ராவ், நம்பிக்கை சிறிதுமின்றி, ஆனால் ஆம் என மௌனமாகத் தலையசைத்தான்.

மகனின் மனப்போராட்டத்தை அறிந்தவராதலால், அவனது தேவை அவனுக்குப் பிடித்த பெண் என்பதை விட, அவனைப் பிடித்த, அவனை நம்பும் பெண்தான் என்று உணர்ந்திருந்தவருக்கு அதுவே போதுமாக இருந்தது.

அதற்கு முன் அவளது ஜாதி, மொழி எதையும் அவர் யோசிக்கவில்லை. மனைவி, மக்களை, ஊரை, உறவுகளை சமாளிக்க உறுதி பூண்டார்.

திருப்பதி பெருமாளுக்குக் கல்யாண உற்சவம் செய்து வைப்பதாக, திருமணம் முடிந்து அன்னவரத்துக்கே வந்து சத்தியநாராயண பூஜை செய்வதாக, குலதேவி கோவிலுக்கு வெள்ளாடும் நாட்டுக்கோழியும் கொடுப்பதாக நேர்ந்து கொண்டார், பாசமும் எளிமையும் கொண்ட அந்தத் தந்தை.

********************

முதல் நாள் வெள்ளிக்கிழமையே கொல்கத்தா வந்துவிட்ட மன்மத ராவ், இந்தியன் ஆயிலின் கெஸ்ட்ஹவுஸ் அறையில் என்ன செய்வதென்று தெரியாமல், கொல்கத்தாவின் போக்குவரத்தைக் கணக்கில் கொண்டு, மதியம் இரண்டு மணி ஃப்ளைட்டுக்கு, காலை ஒன்பதரைக்கே விமான நிலையத்திற்கு வந்துவிட்டான்.

தனி அனுமதி வாங்கப்பட்ட கோல்ஃப் கிட்டையும் மற்ற பெட்டிகளையும் செக் இன் செய்து, கையில் பர்ஸ், ஃபோன், போர்டிங் பாஸ் தவிர ஏதுமின்றி பாதுகாப்பு சோதனை முடிந்து வெயிட்டில் ஹாலுக்குச் சென்றான்.

ஸ்டார்பக்ஸிலிருந்து ஒரு கிராண்டே (Grande) காப்பிசீனோவை வாங்கிக்கொண்டு, நிறைய நேரமிருப்பதால், பின்வரிசைக்குச் சென்று ஒரு ஒரமான இருக்கையில் அமர்ந்துகொண்டான்.

சிறிது சிறிதாக காஃபியை உறிஞ்சியபடி, மொபைலில் ஆழ்ந்தவன், இருக்கையின் அழுத்தத்தில் அருகில் யாரோ அமர்ந்ததை உணர்ந்து நிமிர்வதற்குள், அவன் கையில் இருந்த காஃபி கப்பை கைப் பற்றி “உங்க ஒருத்தருக்கு எதுக்கு இத்தனை பெரிய காஃபி?” என்றாள் சாம்பவி.

ஒரே ஸ்ட்ரோக்கில் ஒற்றைப் பந்தை Ace shot அடித்து
நேரே 18 ஆவது ஹோலில் விழ வைத்தது போல் பிரகாசித்தான் மன்மத ராவ்.

Author: VedhaVishal
Article Title: தனித்த வனத்தில் 16
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Krishnanthamira

New member
Joined
Nov 7, 2024
Messages
5

Eleiii Mannu look at our sambu
 
Joined
Jun 19, 2024
Messages
18
😍😍😍

நான்தானே நான்தானே
வந்தேன் உனக்காக…
சிாிக்கின்றேன் ரசிக்கின்றேன்
உனக்கே உனக்காக…

என்னை பிடிச்சிருக்கா பிடிக்கல்லையா…
ஒரு முறை சொல்லிவிடு…
ஒரே ஒரு முறை சொல்லி விடு…
ஒரு ஒரு முறை சொல்லி விடு…

Last edited:
Top Bottom