• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

கூழாங்கல் கூவுகின்ற கானம்! 8

Kota

Member
Joined
Mar 27, 2025
Messages
60
அத்தியாயம் 8

"என்னை என்ன பண்ண சொல்ற நீ?" கோபமான கோபம் கொஞ்சமும் குறையவில்லை அமலிக்கு.

இப்படி அவர்களையும் அழைத்து வந்து வைத்துக் கொண்டு தன்னையும் வர சொல்லி... என்ன செய்கிறான் என மகன் மேல் அவ்வளவு கோபம். ஆனால் மற்றவர்கள் முன் அதை காட்டவும் விருப்பம் இல்லை.

"ம்மா! நான் சொல்லிட்டு தானே போனேன் கவிபாலா தான் என்னோட லைஃப்பார்ட்னர்னு. இன்னும் என்ன பண்ணனு கேட்குறீங்க?" என்றான் சித்தார்த்தும்.

"சித்து நான் முடியாதுன்னு தெளிவா உன்கிட்ட சொல்லிட்டேன்!" என்ற அமலி குரல் அத்தனை மெதுவாய் வந்த போதிலும் அது அங்கிருந்த மற்ற மூவரின் காதுகளையுமே எட்டி இருந்தது.

அதில் "ம்மா!" என்றவன் குரலில் அப்பட்டமான கண்டிப்பும் தெரிந்தது.

"நான் இவங்ககிட்ட இதுக்காக மன்னிப்பு கூட கேட்டுக்குறேன்! ஆனா இது சரி வராது சித்து. அதை புரிஞ்சிக்கோ!" என்ற அமலி கவிபாலாவின் பக்கம் திரும்பினார்.

"உன்னை என்ன சொல்லி இவன் கூட்டிட்டு வந்தான்னு எனக்கு தெரியாது. ஆனா உங்க ரெண்டு பேரோட மேரேஜ்ன்றதுல எனக்கு சுத்தமா உடன்பாடு இல்ல! அன்னைக்கு கோவில்ல நடந்தது பெரிய தப்பு. எனக்குமே ஒரு பொண்ணா உன்னை நினச்சு கவலை இருக்கு. ஆனா தெரியாம நடந்த ஒரு தப்புக்காக அவனே உன்னை கல்யாணம் பண்ணனுமா என்ன?" என்று கேட்க, எழுந்து சென்றுவிடுவோமா என்றே தோன்றிவிட்டது கவிபாலாவிற்கு.

அது தெரிந்தது போல அவளை ஊடுருவும் பார்த்து பார்த்து சித்தார்த் நிற்க, அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.

"ம்மா! நான் அந்த தப்பை சரி பண்ண கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொல்லல. எனக்கு பிடிச்சிருக்கு. கவிபாலாவை பிடிச்சிருக்கு. அண்ட்" என்றவன் கவிபாலாவைப் பார்க்க,

"எனக்குமே அவங்களை பிடிச்சிருக்கு ஆண்ட்டி!" என்று விட்டாள் அவன் பார்வையை உணரும் முன்பே.

அப்பொழுது தான் சிறிதாய் கொஞ்சம் புன்னகை வந்தது சித்தார்த்திடமும்.

அமலி என்னவோ சொல்ல வர, "ஆண்ட்டி ப்ளீஸ்! நீங்க எதுவும் தப்பா சொல்லிடாதீங்க! பிடிச்சிருக்குன்னா அது மூணு வருஷமா அந்த கோவில்ல நடந்த கல்யாணத்தை வச்சுன்னு எதுவும் நினைச்சுக்காதீங்க! இதை அப்படி சொல்லவும் முடியாது. என்னால அதை சரியா உங்ககிட்ட கன்வே பண்ணவும் முடியல!" என்றவள் சொல்லில் அமலி அதிர்ந்து அமைதியாகிவிட,

"என்னை மாதிரி தான் பாலாவும் திங்க் பண்ணிருக்காமா. வேற யாருக்காகவும் நாங்க யோசிக்கல. எங்களுக்கு பிடிச்சிருக்கு பண்ணி வையுங்கன்னு சொல்றோம்." என்றான் சித்தார்த்தும்.

ஆனாலும் முழு மனதாய் உடனே சம்மதித்து விட முடியவில்லை அமலிக்கு. அவரின் இயல்பு அது. மகனுக்கென அவர் பார்த்து வைத்திருக்கும் பெண்கள் என ஒரு பக்கம், மகன் அவனுக்கு பிடித்தம் என ஒரு பக்கம்.

மகனுக்காகவே என்றாலும் அதனை அவ்வளவு எளிதாய் எல்லாம் விட்டுக் கொடுக்க முடியவில்லை.

"எங்க வீட்டு நிலைமை ஒரு பிரச்சனையா இருக்கலாம் உங்களுக்கு. ஆனா எங்க பொண்ணை எங்களால முடிஞ்ச அளவுக்கு படிக்க வச்சிருக்கோம். அந்த படிப்பு அவளுக்கு கை கொடுத்துச்சு. அவ எங்களை இப்ப தூக்கிவிட்டிருக்கா. உங்க மனசும் புரியாம இல்லை எங்களுக்கு. ஆனா சின்னதுங்க ஆசையையும் கொஞ்சம் நினச்சு பார்க்கலாமே!" என்றார் மதி அமலியிடம்.

இவர்களிடம் கோபமாய் பேசி அவமதித்து தன் மகனை தன்னோடு கூட்டி செல்ல வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லவே இல்லை. அந்த அளவிற்கு தான் மோசமும் இல்லை. ஆனால் நடக்க கூடாது என்று தான் நினைக்கும் ஒன்றை மகன் ஏற்க நினைப்பதை தான் அமலியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இப்படி ஒரு நிலை வர கூடாது என்று தானே அன்றே கவிபாலா வீட்டின் முன் சென்று பணம் வேண்டுமா என்றெல்லாம் பேசி வைத்தது.

"ம்மா! ப்ளீஸ்! என்னோட வாழ்க்கை கவிபாலா கூட நல்லா இருக்கும்னு நான் சொல்றேன். அது வேண்டாம்னு நீங்க நினைக்குறிங்களா? அப்படி நினைக்க என்ன ரீசன் ம்மா?" என்றான் சித்தார்த்.

இவ்வளவு பேர் சொல்லியும் அன்னையின் முகத்தில் தெரிந்த பிடிவாதத்தில் முகம் வாடி கேட்ட மகனையும் அப்படி பார்க்க பிடிக்கவில்லை.

"சித்து! உனக்கு ஏன் புரியல? கவிபாலா நல்ல பொண்ணாவே இருக்கட்டும். ஆனா நம்ம குடும்பத்துக்கு எப்படி?" என்றார் தவிப்புடன்.

"ம்மா!" என்றவனுக்கு அன்னை நினைப்பது புரியும் பொழுது இன்னும் ஆயாசமாய் உணர்ந்தான்.

"எனக்கு கவிபாலாவை பிடிச்சிருக்கு. இந்த பொண்ணை கல்யாணம் பண்ண பிடிச்சிருக்கு. அவ பாக்ரௌண்ட் தெரிஞ்சு அதுக்காக நான் பேக்கடிச்சா அப்போ நான் நல்லவனா? என்னை அப்படியா வளத்தீங்க?" சுத்தமாய் இந்த வார்த்தைகள் வேறு யாருக்கும் கேட்காதபடிக்கு அன்னையிடம் மட்டும் அழுத்தமாய் கேட்டு வைத்தான்.

அவனின் உறுதி என்ன என்ற அளவு புரிந்தபின் தான் மறுக்க முடியாது. மறுத்தாலும் அது பிரயோஜனம் இல்லை என்பதை போல நீண்ட வாக்குவாதம் தான் அங்கே நிகழ்ந்தது.

"இது தான் உன் முடிவு இல்ல சித்து?" என்று அவ்வளவு பேச்சிற்கும் பின் அமலி கேட்க,

"ம்மா!" என்றான் பதில் கூறாமல்.

"ஓகே! இனி உன் இஷ்டம்!" என்றுவிட்டார்.

"அதை சந்தோசமா சொன்னா நாங்களும் செலிப்ரீட் பண்ணுவோம்ல?" சித்தார்த் சொல்ல,

"உனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்லிட்ட.. எனக்கு வேற வழி தெரியல" என்றவர் கவிபாலாவைப் பார்க்க,

"ப்ளீஸ் ஆண்ட்டி!" என்றாள் அவள்.

"அவங்களை கட்டாயபடுத்தறோம் கவிமா!" அன்னை கவிபாலாவிடம் கூற, சித்தார்த்தைக் கவலையாய் கண்டாள் கவிபாலா.

"அமைதியாய் இரு!" என்று தான் தலையசைத்தான் அவன். சில நொடிகளுக்கு பின் மறுப்பாய் ஒரு தலையசைப்பு கவிபாலாவிடம்.

"இருக்கட்டும் ஆண்ட்டி! அம்மா உங்களை கட்டாயப்படுத்துறோம்னு சொல்றாங்க! உண்மை தானே! இப்ப எதுவும் முடிவு பண்ண வேண்டாம். கொஞ்ச நாள் போகட்டும்!" என்றாள் கவிபாலா.

"ப்ச்! என்ன பண்ற பாலா!" என்ற சித்தார்த்தை,

"ப்ளீஸ்! இவ்வளவு நேரமும் வேண்டாம்னு சொன்னவங்க இப்ப உங்களுக்காக உங்க இஷ்டம்னு சொல்லிருக்காங்க. அவங்க மனசையும் பார்க்கணுமே!" என்றாள்.

"அதுக்காக?" சித்தார்த் கேட்க,

"கொஞ்சம் டைம் எடுத்துப்போம்! எல்லாருக்குமே வேணும் அந்த நேரம்!" என்றாள்.

"இவ்வளவு வருஷமெல்லாம் போதாது இல்ல?" சித்தார்த் கோபமாய் கூறியவன்,

"ஓகே! எல்லாரோட முடிவும் அது தான்னா?" என்றவன் தோள்களை குலுக்கிக் கொண்டான்.

"என்ன ஓகே? இவ்வளவு நேரமும் நான் சொன்னதை எல்லாம் கேட்கவே இல்ல. இப்ப அவ சொல்றதுக்கு மட்டும் தலையாட்டுற?" என்ற அன்னை சொல்லில் சித்தார்த்,

"ம்மா! இப்ப அவ மட்டும் என்ன உங்களுக்கு தெரியாம ஓடி போய் கல்யாணம் பண்ணிக்குவோம்னு சொன்னதுக்கா நான் தலையாட்டினேன்? ஏன் ம்மா?" என்றான் கடுப்போடும் ஆயாசத்தோடும்.

"பார்த்தியா பார்த்தியா! இப்பவும் என்கிட்ட தான் கோவப்படுற?" என்ற அண்ணா மனநிலையில் பெரிதாய் அதிர்ந்து சித்தார்த் விழிக்க,

"சரி நான் கேட்குறதுக்கு ரெண்டு பேரும் பதில் சொல்லுங்க. நீங்க எடுத்துக்க போற இந்த டைம்ல நீங்க ரெண்டு பேரும் மாறி வேற வேற வாழ்க்கைக்கு தயாராக வாய்ப்பு இருக்கா?" என்று அமலி கேட்கவும்,

"நோ சான்ஸ் ம்மா!" என சித்தார்த் சொல்லும் முன்னேயே வேகமாய் மறுப்பாய் தலையாட்டி வைத்திருந்தாள் கவிபாலாவும்.

"அப்புறம் என்ன? என் முடிவு என்னவாவும் இருக்கட்டும்" என்ற அமலி,

"கல்யாணத்தை எப்ப வச்சுக்கலாம்?" என்றார் விஜயா மதியிடம்.

"நிஜமாவா?" என்பதை போல இருவரும் சித்தார்த் கவிபாலாவைப் பார்க்க,

"அதான் கேட்குறாங்க இல்ல! சொல்லுங்க!" என்றான் சித்தார்த் வேகமாய்.

"நிஜமாவா ஆண்ட்டி?" கவிபாலா அமலியிடம் கேட்க,

"அத்தை!" என திருத்தினார் அமலி.

"ஹுர்ரே!" என உடனே கூச்சலிட்ட மகனை அமலி முறைக்க,

"உங்களுக்கும் கண்டிப்பா பிடிக்கும். பாலாவை பாலாவா மட்டும் பாருங்க!" என்றான் அன்னை கழுத்தில் கைகளை மாலையாய் கோர்த்து.

விஜயா மதி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, கவிபாலாவிடம் கண் சிமிட்டினான் சித்தார்த்.

"எனக்கு சித்தார்த்க்கு அப்புறம் தான் எல்லாம். ஆனாலும் என்னவோ மூணு வருஷமா இது வேண்டாம் நடக்க கூடாதுன்னு ஒரு என்னத்துலயே இருந்ததால இப்பவும் சட்டுனு மனசு ஒதுக்கல தான். ஆனா சித்தார்த்க்காக நான் என்ன வேணா செய்வேன். பாலா தான் எனக்கு மருமகளா வரணும்னு இருக்கு. அவன் ஆசைபடியே நடக்கட்டும்!" என்றார் விஜயாவின் பார்வைக்கு அமலி.

"தேங்க்ஸ் அத்தை!" என்ற கவிபாலாவிடம் தலையசைத்தவர்,

"மேரேஜ் எங்க எப்படினு உங்க விருப்பத்தை சொல்லுங்க. சரியா வந்தா அப்படியே செஞ்சிடலாம்!" அமலி சொல்ல,

"இதான் அம்மா! சரினதும் அடுத்து அதை எப்படி ப்ரோசீட் பண்றதுன்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க!" சித்தார்த் சொல்ல,

"அதெல்லாம் நாங்க பேசிக்குறோம். நீ பாலாவை வீட்டுல ட்ராப் பண்ணிட்டு..." என்று அமலி சொல்ல வர,

"யார் வீட்டுல ட்ராப் பண்ணனும்!" என்றவன் கேள்வியில் அமலி முறைக்க,

"அவங்க வீட்டுல.. ஓகேஓகே!" என்றவனைப் பார்த்து பெரியவர்களுமே புன்னகைத்தனர்.

"ஆபீஸ் மூணு நாளா நீ இல்லாம என்ன நிலைமைல இருக்கோ! முதல்ல அதை போய் பாரு!" என்றார் அமலி.

"போலாமே!" என்றவன் கவிபாலாவைப் பார்க்க, அவள் தாய் தந்தையைக் கண்டாள்.

"நீ வீட்டுக்கு போ டா! நாங்க பேசிட்டு வர்றோம்!" என்றார் அவள் தந்தையும்.

சரி என தலையசைத்து அவனுடன் அவளும் செல்ல, அமலி விஜயா மதியின் முன் அமர்ந்தார்.

"நீங்க வருத்தப்படுற மாதிரி இவ்வளவு நாளும் நான் நடந்திருந்தா அதுக்கு நிஜமாவே சாரி! என் பையன் மேல இருக்குற பாசத்துல வேணா எதாவது பேசி இருப்பேன். மத்தபடி உங்களை கஷ்டப்படுத்தனும்னு நான் நினைச்சது இல்ல!" என்ற அமலி சொல்லில் தான் மதிக்கு இன்னும் கொஞ்சம் தைரியம் வந்தது சித்தார்த்திற்கு மகளை திருமணம் செய்வதை நினைத்து.

"சரி போனதெல்லாம் போகட்டும். நீங்களே சொல்லுங்க. நல்ல நாளா பார்த்து கல்யாணத்தை பண்ணிடலாம்!" விஜயா சொல்ல,

"இனிமேலும் எங்க நாள் கடத்திட்டு இருக்க? அதான் மனசுக்கு சரினு பட்டிருச்சே! அடுத்த முஹூர்த்தத்துல பண்ணிடலாம்! நாள் நேரம்னு ஜோசியரை பார்த்து குறிச்சு எல்லாம் ஏற்பாடு பண்ணிடலாம். யார் யாருக்கு சொல்லணும் எங்க கல்யாணம்? இதெல்லாம் சொல்லுங்க. அதுக்கேத்த மாதிரி பத்திரிக்கை அடிச்சிடலாம். சித்தார்த் அப்பா சொந்தமே நிறைய வருவாங்க. கூடவே ஆபீஸ், அவன் வேலை பார்த்த இடம்னு கொஞ்சம் அதிகம் தான்!" என அமலி அத்தனை வேகமாய் கணக்கிட ஆரம்பிக்க, அதற்கேற்றார் போல மண்டபமும் பார்ப்பது என முடிவானது.


தொடரும்..
 

Author: Kota
Article Title: கூழாங்கல் கூவுகின்ற கானம்! 8
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Joined
Mar 21, 2025
Messages
43
முடியாது என்று அமலி
முரண்டு பிடித்தார்
மகன் என்று வந்ததும்
மாறிவிட்டது மனம்....
மறுபடியும் கல்யாணமா???
🤩🤩🤩🤩🤩
 

Kota

Member
Joined
Mar 27, 2025
Messages
60
முடியாது என்று அமலி
முரண்டு பிடித்தார்
மகன் என்று வந்ததும்
மாறிவிட்டது மனம்....
மறுபடியும் கல்யாணமா???
🤩🤩🤩🤩🤩
மறுபடியும் முதல்ல இருந்து 🤣
 

dharani

Member
Joined
Jul 6, 2024
Messages
25
அட அமலி நீங்களா இது... உங்க கிட்ட இப்படி ஒரு மாற்றம் எதிர் பாக்கவே இல்ல இத்தனை சீக்கிரம்
 

Lakshmi

Member
Joined
Jun 19, 2024
Messages
60
அமலி பேசியதை வைத்து கல்யாணத்துக்கு இவ்வளவு சீக்கிரம் சம்மதிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை.
 
Top Bottom