• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

காண்பது எல்லாம் உனது உருவம் 6

Uppada

New member
Joined
Mar 27, 2025
Messages
10
காண்பது எல்லாம் உனது உருவம் 6

ஈஸ்வரனிடம் பேசி விட்டு உடனே தன் அப்பாவுக்கு ஃபோன் செய்தவன் "அப்பா நான் இப்ப உங்க தங்கச்சி வீட்டில் இருக்கேன்.. ஈஸ்வரன் அண்ணாவும் வந்திருக்காரு.."

"அவரு ரெண்டு நாள் அவங்க கூட இருக்க சொல்றாரு..நானும் இருந்துட்டு வரலாம்னு இருக்கேன்.."

"பக்கத்துல மாமா இருக்காங்க..உன் கிட்ட பேசணும்னு சொல்றாங்க..ஃபோனை தரேன்..நீங்க பேசுங்க.."

அவனிடம் ஃபோனை வாங்கிய பரமசிவம் "அத்தான் எப்படி இருக்கீங்க..அக்கா எப்படி இருக்காங்க..துர்கா, பெரிய மாப்பிள்ளை, நித்யா எல்லாம் எப்படி இருக்காங்க.."

"எல்லாரும் நல்லா இருக்காங்க..மாப்பிள்ளை..நீங்க.."

"இங்கயும் எல்லாரும் சௌக்யம் அத்தான்..ஒரே காம்பவுண்ட்ல ரெண்டு வீடு விலைக்கு வருதுனு சொன்னேனே..நீங்க பாக்கலாம்னு சொன்னீங்களே..அது விஷயம் என்னாச்சுங்க..அத்தான்.."

"எனக்கு எல்லாம் சரி தான் பா..என் பசங்க நாம என்ன சொன்னாலும் கேப்பாங்க.. எதுக்கும் பெரியவன் வரட்டும்..அடுத்த வாரம் வந்திடறான்..அவனோட வந்து பாத்து இடம் பிடிச்சா கையோட முடிச்சிடலாம்.."

"அதுவரைக்கும் அந்த இடம் இருக்குமா..எதுக்காக விக்கறாங்க பா.."

"அத்தான்..அவங்க நமக்கு ரொம்ப வேண்டிய ஆளுங்க..இடம் விக்க போற விஷயத்தை இதுவரைக்கு யாருக்கும் சொல்லலை அத்தான்.."

"அவருக்கு ரெண்டு பையன்..பசங்க வெளிநாட்டுல இருக்காங்க..இங்க வர போறதில்லைனு தீர்மானமா சொல்லிட்டாங்களாம்.."

"சொத்து அவரோட சுய சம்பாத்தியம் அத்தான்..இவருக்கு சொந்த ஊர்ல பெரிய வீடிருக்கு..இதை வித்திட்டு அங்க போயிடறதா எண்ணம்.."

"சரி பா..எப்படி நடக்குதுனு பார்ப்போம்.."

"சரிங்க அத்தான்..தோ ஃபோனை மாப்பிள்ளை கையில குடுக்கறேன்" என விக்ரமனிடம் குடுத்தார்.

"பா.. நித்யாவை அண்ணாவும் இல்லாம நானும் இல்லாம சமாளிக்கறது கஷ்டம்..நானும் ராஜா அங்கே வரோம்....அவளை
தயாரா இருக்க சொல்லு..."

"நீ வர வேணாம் டா..இங்க நிலைமை சரியில்லை.."

"ஏன் என்னாச்சு பா..அம்மா என்ன பண்ணாங்க..'

"உங்கம்மா இல்ல எல்லாம் நான் பெத்த ஏழறை இழுத்து விட்ட அலப்பறை டா.."

"அந்த பிசாசு என்ன பண்ணிச்சு பா.."

"உங்கண்ணனோட ப்ரெண்ட் தாமுவோட தங்கச்சிக்கு கல்யாணம் இருக்குல்ல...அவங்க வந்து அத்தனை தடவை கூப்பிட்டு போயிருக்காங்க..."

"தாமுவும் கல்யாணத்துக்கு ரெண்டுநாள் முன்னால தான் வர்றான்..பாவம்..அவனுக்கு லீவ் கிடைக்கலையாம்.."

"அதால நாம தான் வீட்டு ஆளா அங்க போய் அவங்களுக்கு கூட இருந்து எல்லாம் பாத்துக்கணும்..

"கல்யாணம் நம்ம சொந்த ஊருக்கு பக்கத்துல ஒரு கிராமத்துல தானே நடக்க போகுது...நீயும் ரத்னாவை அழைச்சிட்டு நாலு நாள் முன்னாலயே வந்திடு டா.."

"அவங்களுக்கும் நம்ம குல தெய்வம் தான்..அந்த சாக்கை வெச்சு நாமளும் பாவாடை அம்மாவை பாத்துட்டு வந்திடலாம்.."

"நம்ம இசக்கி கிட்ட சொல்லி தனி தறில ரெண்டு சிகப்பு புடவை நெய்ய சொல்லி இருக்கேன்..அம்மாக்குனு சொல்லி இருக்கேன்.."

"சுத்த பத்தமா நெய்து தருவான்..நீ வாங்க போகும் போது தலைக்கு குளிச்சிட்டு பட்டு துணி போட்டுட்டு போய் வாங்கி, புடவையை பட்டு துணியால சுத்தி எடுத்துக்கிட்டு நேரா கிளம்பி வந்திடு.."

"சரி பா..எதுக்கு இவ்ளோ நீளமா பேசற..கொஞ்சம் நிதானமா பேசு பா..

"நம்ம குலசாமி அம்மா விஷயம் டா...கவனமா இருக்கணும்னு..தான் சொன்னேன்..

"அம்மாவும் வராங்கல்ல.."

"உன்னை பெத்தவ தானே..அவங்க அந்தஸ்துக்கு குறைவான இடத்துக்கு எல்லாம் வர மாட்டாளாம்.. நானும் அவளை கூப்பிடறதாவே இல்லை..

"சரி..சரி..விடு பா..அம்மாவை மாத்த முடியாது....அங்க போய் தெரியாத இடத்துல நீங்க தனியா கஷ்டப்படாதீங்க..நாங்க வந்திடறோம்..அவளும் லீவ் போட வேண்டியது இல்லை..வரிசையா
கவர்மெண்ட் ஹாலிடே தான்.."

"நல்லது டா..உங்கண்ணியை தனியா அனுப்பாம என்னையும் கூட போக சொல்லி உங்கண்ணன் சொன்னான்..அதை சொல்லி உன் கூட நானும் வரேன்..நித்யாவையும் நம்ம கூட அழைச்சிட்டு போகலாம்னு சொல்லிட்டு இருந்தேன்.."

"அது வரைக்கும் கேட்டுட்டு சும்மா தான் இருந்தாங்க..நாங்க திரும்ப வர ஒரு வாரம் ஆகும்..வேலைக்கு வர்றவங்களை கடையை பாத்துக்க சொல்லிடுனு சொன்னது தான் தாமதம்..நான் வரும் போது தான் நீங்க கிளம்புவீங்களானு உன் தங்கை..உங்கம்மாவை பத்தி சொல்லவே வேணாம்.."

"உங்க குடும்பத்துல யாருக்கும் மரியாதை தெரியல..எனக்கு மதிப்பு இல்லைனுனு ஏத்தி விட மாப்பிள்ளை இருக்க ஆத்தாளும் பொண்ணும் சலங்கை கட்டி ஆட ஆரம்பிச்சிருக்காங்க.."

இப்ப தான் என் தங்கச்சியையும் அவ பெத்த பொண்ணையும் வாயிலே போட்டு அரைச்சி முடிச்சாங்க...உன்னை பாத்தா மறுபடியும் ஆரம்பிப்பாங்க..."

"நித்யாவை பத்தி கவலைப்படாதே..நான் அவளை பாத்துக்கறேன்..நீ அங்கேயே இரு..நீயாவது நிம்மதியா இரு டா..." என ஃபோனை வைத்தார்.

பக்கத்தில் அவனையே பார்த்து கொண்டு இருந்தவர்களிடம் தன் வீட்டு விவகாரங்களை பகிர்ந்து கொள்ள மனமில்லாமல் அண்ணியையும் நித்யாவையும் அழைத்து கொண்டு அப்பா கல்யாணத்துக்கு போக போவதாகவும் நித்யாவை அவர் பார்த்து கொள்வதாகவும் சொல்லியதை சுருக்கமாக சொல்லி முடித்தான்.

அப்போது தான் கடையில் இருந்து திரும்பிய பிருந்தா விக்ரமனை பார்த்து "வாங்க தம்பி"என அழைத்து அவனிடம் கொஞ்ச நேரம் பேசி விட்டு உள்ளே சென்றாள்.

அதுவரைக்கும் சமையறைக்குள் அம்மாவோடு இருந்த ரத்னா வேகமாக இரவு உணவு விக்ரமனுக்கு பிடித்தது போல வத்தக்குழம்பு, கத்தரிக்காய் பொடி தூவி பொரியல், வாழைத்தண்டு தேங்காய், சீரகம் அரைத்து சேர்த்து மோர்க்கூட்டு, வெள்ளரிக்காய் தயிர் பச்சடி என செய்து விட்டு எல்லாவற்றையும் மேடையில் வைத்து விட்டு வெளியே வந்தாள்.

"மாமா..சமையல் முடிஞ்சிது..சாப்பிட வாங்க.."

"என்னையா மா ரத்னா கூப்பிட்ட..என் தம்பியை கூப்பிட்டனு நெனச்சேனே.."

"ம்ம்ம்..உங்களை மட்டும் இல்லை மாமா..எல்லாரையும் தான் கூப்பிட்டேன்..சாப்பிட வாங்க.."

"அண்ணா..உங்க மச்சினிச்சிக்கு பேச தெரியுமா..எங்க வீட்டுல பேசி பாத்ததே இல்லையா..ஆச்சர்யமா இருக்கே.."

"பேசறது மட்டும் இல்லை டா நல்லா சண்டையும் போடுவா..எல்லாம் நம்ம ட்ரெயினிங் தான்...கூப்பிடவா.."

"ஐயோ..வேணாம் அண்ணா..உங்க தயாரிப்புனாலே சுதாரிச்சுக்கணும்..என்னை மன்னிச்சிடுவீங்களாம்..சாப்பிடலாம் வாங்க.."

ரத்னாவின் பிறந்த வீட்டில் எல்லாரும் கீழே உட்கார்ந்து தான் சாப்பிடுவார்கள். இலை அலம்பி போட எல்லாரும் வந்ததும் ரத்னா அவள் அம்மா, அக்கா பிருந்தா பரிமாற அனைவரும் சாப்பிட்டு முடித்தனர்.

"ஆயிரம் சொல்லு கட்டினவனுக்கு இருக்கற மதிப்பு மாமனுக்கு இல்லை. மாமனாருக்கே எப்பவுமே வர்ற பெரிய மாப்ளையை விட எப்பவாவது வர்ற சின்ன மாப்ளை மேல தான் பாசம் அதிகம்.." என்ற ஈஸ்வரனின் கேலி பேச்சில் அனைவருமே சிரித்து விட்டனர்.

"சிரிக்கறது இருக்கட்டும்..நீங்க சாப்பிட உக்காருங்க..மாமா..எங்க போறீங்க..நம்ம சாப்பிட அவங்க பரிமாறினாங்கல்ல..வாங்க இப்ப அவங்க சாப்பிட பரிமாறுவீங்களாம்.."

"அடேய் நல்லவனுங்களா..அப்படியே பாக்காத மாறி நகராம வந்து நீங்களும் வேலை செய்ங்க..கூட பரிமாற உதவி பண்ணுங்க.." என அவர்களையும் விடாமல் வேலை வாங்கிய ஈஸ்வரன் சமையலறையை ஒழித்து சுத்தம் செய்து முடிக்கும் வரை அவர்களை விடவில்லை.

இது எப்போதும் நடக்கும் விஷயம் என்பதால் பெண்கள் சாப்பிட்டு இலையை எடுத்து இடத்தை சுத்தம் செய்து விட்டு முன்வாசலில் இருந்த ஜாதி மல்லி கொடியின் கீழே இருந்த திண்ணையில் உட்கார்ந்து கொண்டனர்.

"என்ன அண்ணா..சாப்பிட பரிமாறது கூட சரி..பாத்திரம் அலம்பி..சமையலறையை
சுத்தம் செய்யறது எல்லாம் நமக்கு சரியா வராதே.."

"அப்படி நினைக்க கூடாது டா..எல்லா வேலையும் எல்லாருக்கும் செய்ய தெரியணும்.."

நம்ம வீட்டுல பாரு நான், பிருந்தா ரெண்டு பேரும் வேலைக்கு போறோம்.."

"பிருந்தா இன்கம்டேக்ஸ் ஆஃபீஸ்ல தானே வேலை செய்யறா..வேலை முடிஞ்சு வர சில நாள் ரொம்ப நேரமாகிடும்.. "

"அம்மா காலைல உங்கண்ணி கூட எழுந்தா ராத்திரி நாங்க தூங்கறவரைக்கும் முழிச்சிட்டு கூடவே இருப்பாங்க..மதியம் கூட தூங்க மாட்டாங்க.."

"ஸ்கூல் போற ரெண்டு பசங்க வேற..அவங்களை சமாளிக்கறதே அம்மாவுக்கு கஷ்டம்..இதுல வீட்டு வேலையும் சேர்ந்தா அவங்க ஓய்ந்து போயிடுவாங்க டா..

"அதனால ஆரம்பத்துலேந்தே நானும் அப்பாவும் அவங்களோட சுமையை குறைக்க முயற்சி செய்யறோம்..வாரத்துக்கு என்ன மெனுனு மொதல்லயே அம்மாவும் பிருந்தாவும் முடிவு பண்ணிடுவாங்க.."

"சாயந்திரம் வாக்கிங் போகும் போது அப்பா மறுநாளுக்கு தேவையான காய், கீரை எல்லாம் வாங்கிட்டு வந்திடுவாரு..

அம்மா அதை எடுத்து நல்லா அலம்பி ஃபேன் காத்துல ஆர விட்டுவாங்க.."

"நான் வீட்டுக்கு போனதும் முதல்ல எனக்கு ஒரு கப் காஃபி போட்டு குடிச்சிட்டு குளிச்சிட்டு வந்து சாப்பிட்டு காய், கீரை எல்லாம் நறுக்கி அந்தந்த டப்பால போட்டு வெச்சிடுவேன்...சாம்பார் ரசத்துக்கு தேவைப்படற தக்காளி கூட நறுக்கி வெச்சிடுவேன்.."

"எது எப்படி இருந்தாலும் நைட் ஏழறைக்குள்ள பெரியவங்க பசங்க எல்லாம் சாப்பிட்டு முடிச்சிருக்கணும்..ஒரு நாள் கூட தவற கூடாது..இதுல நான் பயங்கர ஸ்ட்ரிக்ட்டா இருப்பேன்.."

"நைட்டே பாத்திரம் சுத்தம் பண்றது, சமையலறை சுத்தம் பண்றது மறுநாளுக்கு தேவையான பொருட்களை மேடையில் எடுத்து வெக்கறதுனு வேலை எல்லாம் நானும் அப்பாவும் முடிச்சிடுவோம்.."

"காலைல எழுந்தா வீடு பெருக்கி துடைக்கறது என் வேலை. பசங்களை குளிப்பாட்டி ரெடி பண்றது அப்பா வேலை..."

"காலைல டீ மட்டும் அம்மா போடுவாங்க..பிருந்தா டிஃபன், மதிய சமையல் வேலையை பாத்துப்பா.."

"எல்லாருக்கும் லஞ்ச் போடறது, வாட்டர் பாட்டில் நிரப்பி வெக்கறது அம்மா வேலை.."

"நாங்க கிளம்பின பின்னால அம்மா துணியை மிஷினில் போட்டு காய வெச்சு உலர்ந்த பின்னால அழகா மடிச்சு வெச்சிடுவாங்க..."

"அம்மாவோட வீட்டு வேலையை குறைச்சா மாதிரியும் ஆச்சு..ரிட்டயர்ட் ஆன பின்னே அப்பாவும் தன்னை எங்கேஜ் பண்ணிக்கற மாதிரி ஆச்சு.."

"வீட்டு வேலை எல்லாம் எல்லாரும் பகிர்ந்து செய்யறதால அம்மாவுக்கும், பிருந்தாவுக்கும் பெரிய விடுதலை.."

"வீட்டு பொண்ணுங்க நம்ம கஷ்டம் தெரிஞ்சு நம்ம சுமையை குறைக்க வேலைக்கு போகும் போது அவங்களோட சிரமங்களை நாமளும் புரிஞ்சு தோள் குடுத்தா அவங்களுக்கு சந்தோஷம்..
நமக்கும் வீடு நிம்மதியா இருக்கும்.." (தொடரும்)
 
Last edited:

Author: Uppada
Article Title: காண்பது எல்லாம் உனது உருவம் 6
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Joined
Mar 21, 2025
Messages
43
ஈஸ்வரா....அருமை
ஈருடல் ஓருயிர் என்று
ஈன்ற பெற்றவர்களுக்கும்
ஈன்ற பிள்ளைகளுக்கும்
ஈடு இணையற்ற துணைக்கும் என்றும்
ஈடு கொடுத்து செய்யும் வேலை..... 🤩🤩🤩🤩🤩💐👏🏻👏🏻💐💐👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻
 

saradhavasan

Member
Joined
Oct 3, 2024
Messages
48
அருமையான பதிவு. பெண்களின் கஷ்டம் புரிஞ்சு அதறகான தீர்வை நடைமுறை படுத்திய ஈஸ்வர வாழ்க.இதை மற்றவர்களுக்கும் புரிய வச்சிகக பாருங்க...சபாஷ்
 
Top Bottom