அத்தியாயம் 14
மிக நெருங்கிய உறவுகள் என்ற வகையில் இருபது முதல் முப்பது பேர் வரை கூடி இருந்தனர் அந்த கோவிலில்.
இன்னும் சில நிமிடங்களில் சித்தார்த் கவிபாலாவின் திருமணம் அந்த கோவிலில் நடைபெற இருக்க, எளிமையான அலங்காரம் மட்டுமே பெண் மாப்பிள்ளைக்கும்.
"அம்மா அப்பாகிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு சன்னிதானம் முன்னாடி வா கவி!" என தாய்மாமா சொல்லவும் விஜயாவும் மதியும் உடன் வந்து நிற்க, கவிபாலா அவர்களில் காலில் விழுந்து வணங்கினாள்.
"கவிம்மா!" என எழுந்து நின்றவளை அத்தனை ஆசையாய் பார்த்து நின்றார் தந்தை மதி.
"ப்பா!" என்றவள் கண்களுமே கலங்கிவிட்டது தந்தை முகம் கண்டு.
"என்னங்க நீங்க!" என விஜயா கணவனை முறைக்க,
"அதெல்லாம் உன் அம்மா அப்பாவை கண் கலங்காம பார்த்துக்குவா. நீ கவலைப்படாத கவி!" என விஜயாவின் அண்ணன் கிண்டல் செய்து அவளை அழைக்க, சிரித்தவள் மாமாவிடமும் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு தந்தையிடம் தலையசைத்து சென்றாள்.
சரியாய் அப்போது தான் அபிநயா கோவில் உள்ளே நுழைந்திருந்தாள் ஸ்ரீதர் உடன் அவர் அன்னை என மூன்று பேரும்.
"நீ கவிபாலாவைப் பாரு! நான் சித்தார்த்கிட்ட போறேன்!" என்று சொல்லி ஸ்ரீதர் சித்தார்த்திடம் செல்ல, அவன் அன்னை மற்றவர்களோடு சென்று அமர்ந்தார்.
அங்கே சித்தார்த்தும் அமலியின் காலில் விழுந்து எழுந்து நின்றவன் கண்களை நிறைத்தாள் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த கவிபாலா.
"அழகி! இல்லம்மா?" என சித்தார்த் அன்னையிடமே கேட்டு வைக்க,
"இல்லைனு சொல்ல முடியுமா உன்கிட்ட?" என அவரும் விளையாட, சிரித்தபடி அவளிடம் பார்வையை கொண்டுவந்தான் மீண்டும்.
"என்ன டா இப்படி பார்த்து வைக்குற!" என்று ஸ்ரீதர் கேட்டபின் தான் அவன் வரவே தெரிந்தது சித்தார்த்திற்கு.
"இவ்ளோ நேரமா வர்றதுக்கு உனக்கு?" என சித்தார்த் முறைத்தவன்,
"என்னை டைவேர்ட் பண்ணாத!" என்று சொல்லி மீண்டும் அவளைப் பார்க்க,
"அவ்வா!" என வாயில் கைவைத்துவிட்டான் ஸ்ரீதர்.
"ரெண்டு பேருமா சேர்ந்து வாங்க" என்று சொல்லிய கவிபாலா மாமா அங்கே அவர்களை கடவுள் முன் நிற்க வைக்க, மாங்கல்யத்தோடு பூ, பழம் என தட்டுக்கள் நிறைய கடவுள்முன் இடம்பெற்றிருந்தது.
"லவ் யூ சித்து!" என சித்தார்த் காதுக்குள் ஒரு குரல் கேட்கவும் முகம் மலர்ந்தவன்,
"கொன்னுடுவேன் பாலா உன்னை!" என திரும்பிப் பார்த்து அவன் மெதுவாய் சொல்ல, கண் சிமிட்டிப் புன்னகைத்தாள் அவள்.
இதோ கடவுளின் பாதம் கண்டு வந்த மாங்கல்யம் சித்தார்த் கைகளை சேர, அதை வாங்கியவன் மனதின் வார்த்தைகள் எல்லாம் சொல்லில் அடங்கிடாது.
அதே மகிழ்வோடு கவிபாலாவைக் காண, அவள் முகம் முழுதும் வண்ண ஜாலங்கள் தன் கனவு கைசேரும் மகிழ்வில்.
தங்கச் சங்கிலியை அவள் கழுத்தில் நிறைத்து கவிபாலாவை மனதில் நிறைத்தவன் தன் வாழ்விலும் அவளை துணையாய் இணைத்திருந்தான்.
வண்ண மலர்கள் இருவரின் மேலும் மழையாய் தூவ, அவள் கண்களோடு கலந்தவன் மனம் நிறைய, வார்த்தைகள் மட்டும் வெளிவரவில்லை சந்தோஷத்தில்.
கோவில் மண்டபத்தில் அனைவரும் சாப்பிட செல்ல, அன்னை, தந்தை, அமலி இன்னும் சிலர் என பேசியபடி அங்கே நிற்க, கவிபாலா கைப்பற்றி இருந்த சித்தார்த் அதில் அழுத்தம் கொடுக்கவும் திரும்பி அவன் முகம் பார்த்தாள் கவிபாலா.
"என்ன?" கவிபாலா கேட்க,
"ஒண்ணுமில்லயே!" என்றவன் கைகளின் அழுத்தம் இன்னும் அப்படியே தான் இருந்தது.
அவள் இன்னும் பார்த்துக் கொண்டே இருக்க, "ப்ச்! இதே கோவில்ல தானேனு மூணு வருஷம் முன்னாடி நடந்ததை நினச்சேன். வேற ஒண்ணுமில்ல!" என்றான் அவள் பார்வை புரிந்து.
"ஏன்? இதெல்லாம் நடக்காம இருந்திருக்கலாம்னு தோணுதோ?" அவனை சீண்டிவிட அவள் கேட்க,
"இன்னும் கொஞ்சம் சீக்கிரமே எல்லாம் நடந்திருக்கலாம் தோணுது!" கைகளை உரசிக் கொண்டு நின்று கூறினான் நொடியும் யோசிக்காமல்.
அந்த கைகளை பலமாய் பற்றிக் கொண்டாள் தன் வாழ்நாள் முழுவதுக்குமாய் சேர்த்து.
கொஞ்சம் தூரமாய் ஸ்ரீதர், அபிநயா, ஸ்ரீதர் அன்னை என அமர்ந்திருக்க, அவர்களை சாப்பிட அழைத்துக் கொண்டு சித்தார்த்திடம் வந்தார் அமலி.
"சாப்பிட்டு வீட்டுக்கு போலாமா சித்து?" அன்னை கேட்க,
"ம்ம் ம்மா!" என்றவன் அவர்களோடு சென்று சாப்பிட அமர, "கால் வலி இருக்குதா பாலா?" என்று கேட்கவும் அவள் தலையசைக்க,
"கடவுளே!" என கண் மூடி கைகூப்பி ஒரு வேண்டுதலை அவன் வைக்க,
"அங்கல்ல வேண்டிக்கணும்! மண்டபத்துல வந்து என்ன?" என்றாள் பாலா புரியாமல்.
"இது வேற வேண்டுதல் உனக்கு புரியாது!" அவன் சொல்ல,
"ஏன் புரியாது?" என்றவளுக்கு குழப்பமானது அவன் சொல்வது புரியாமல்.
"அப்புறமா சொல்றேன்! சாப்பிடு!" அவன் சொல்ல,
"இல்ல சொல்லுங்க. அப்ப தான் சாப்பிடுவேன்!" என கவிபாலா சொல்ல,
"ரொம்ப நேரம் நிக்க வைக்காம பாத்துக்குறேன் கடவுளே! இன்னைக்கு நைட்டும் கால் வலி வர கூடாதுன்னு வேண்டிக்கிட்டேன்!" என்றவன் சொல் புரியவும் அமைதியாகிவிட்டவள் நெஞ்சம் படபடக்க, அவன் பக்கம் திரும்பாமல் சாப்பாட்டை அவள் கவனிக்கவும் அப்படி சிரித்தான் சித்தார்த்.
"சும்மா இருங்க!" என்ற கவிபாலா முகம் சிவந்தவள் சுற்றிலும் வேறு பார்க்க,
"சரியா தானே பாலா வேண்டினேன்?" என்று வேறு கேட்டு வைத்தான் அவளிடம்.
திருமணம் முடிந்து முதல் முதலாய் கணவன் வீடு நோக்கிய பயணம் கவிபாலாவிற்கு.
விஜயா, மதி, விஜயாவின் அண்ணன் அண்ணி என கவிபாலாவுடன் வர, "வெல்கம் மை கேர்ள்!" என்றான் காரில் இருந்து இறங்கிய சித்தார்த் மனைவியை வரவேற்று.
ஆரத்தி சுற்றி இருவரையும் உள்ளே அழைத்து வர, ஸ்ரீதர் தனது காரில் வந்து சேர்ந்தான்.
விளக்கேற்றி சமையலறை சென்று வந்து ஹாலில் அமர சொல்லவும் சித்தார்த் கவிபாலா இருவரும் அமர,
"இப்ப தான் ஒரு ஒளிவட்டம் தெரியுது உன் முகத்துல!" என்றாள் அபிநயா கவிபாலாவின் அருகில் அமர்ந்து.
"எனக்கு தெரியுறது இருக்கட்டும். நீ என்ன சார் கூட? அதுவும் செகண்ட் டைம். அதுவும் அவங்க அம்மா வரும் போதும்?" என ஆச்சர்யம் கிண்டல் என கலந்து கவிபாலா கேட்க,
"நீ வேற டி! மனுஷன் வாயை திறப்பேனான்னு இருக்கார். ஆனா அவர் லுக் எனக்கே புரியுற அளவுக்கு இப்பலாம் பாக்குறார்!" என்றதும் கவிபாலா பக்கென்று சிரித்துவிட, சித்தார்த் மற்றும் சித்தார்த்துடன் பேசிக் கொண்டிருந்த ஸ்ரீதர் என அனைவருமே இவர்களிடம் பார்வையைக் கொண்டு வந்தனர்.
"இப்ப எதுக்கு களுக்குன்னு ஒரு சிரிப்பு உனக்கு?" என அபிநயா கவிபாலாவை பேச,
"இன்னும் சார் உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணவே இல்லையா? நம்ப முடியலையே? ரெண்டாவது டைம் அவரோட இவ்வளவு தூரம் வந்திருக்க!" மறுபடி மறுபடி கவிபாலா கேட்க,
"பஸ் டிக்கெட்க்கு காசு இல்லையே என்ன பண்ணனு நினச்சேன். ரெண்டு டைமும் ஆடு வாண்ட்டடா தலையை குடுத்து, உன் பிரண்ட் மேரேஜ்க்கு தான் போறேன் வர்ரியானுச்சு! ஏறிட்டேன்!" என்று கதையாய் சொல்ல, இன்னும் சிரித்தாள் கவிபாலா.
"இதுல அவங்க அம்மா வேற! ஸ்ரீதர்க்கு பொண்ணு பார்க்க போறோம். உன்னை மாதிரியே அழகா வேணும்னு பொடி வச்சு பேசுறாங்க! மொத்த குடும்பமும் இப்படி இருந்தா நான் யாரை சமாளிக்க!" என்று சொல்ல, வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்த கவிபாலா முகம் கண்டு அத்தனை கனிவாய் புன்னகை சித்தார்த்திடம்.
"என்னவோ என்னை தான் சொல்றான்னு நினைக்குறேன்!" என ஸ்ரீதரும் சிறு புன்னகையோடு சித்தார்த்திடம் சொல்ல,
"பின்ன! இன்னுமா அபிக்கு உன்னை தெரியாதுன்னு நினைக்குற? அவ உன்னை வச்சு விளையாடுறா! நீயா சொல்ல தான் வெயிட் பண்றானு எனக்கு தோணுது!" என்றான் சித்தார்த்தும்.
"சொல்லணும்! அம்மாகிட்ட கூட சொல்லிட்டேன்! இவகிட்ட எப்படி தான் பேச போறேனோ!" என எதிர்பக்க சோஃபாவில் கவிபாலாவோடு பேசி சிரித்துக் கொண்டிருந்த அபிநயாவைக் கண்டான் ஸ்ரீதர்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் ஸ்ரீதர் அபிநயா, ஸ்ரீதர் அன்னை என சொல்லிக் கொண்டு கிளம்பிவிட, கவிபாலாவின் அன்னை வீட்டிற்கு மறுவீடு கிளம்பிவிட்டனர் மணமக்கள்.
இத்தனை நாட்களில் ஒருமுறை கூட நினைக்கவில்லை. காரணம் சித்தார்த் மட்டும் தான். அப்படி கண்ணுக்குள் வைத்து அவளை அவன் கவனித்திருக்க, இப்பொழுது தான் தன் வீட்டை பிரியும் உணர்வில் அமைதியாய் இருந்தாள் கவிபாலா.
அதுவும் தந்தையை தான் அதிகமாய் தேடினாள். தான் இல்லாமல் அவரை நினைக்கவே அத்தனை கவலை அவளுக்கு.
தேவை அறிந்து பார்த்து பார்த்து செய்து என அத்தனை செல்லமாய் அவர் மகளை பார்த்திருக்க, மனதெல்லாம் பாரம் பெற்றோரை நினைத்து கவிபாலாவிற்கு.
"விடும்மா! இங்க தானே? நினச்சா வந்து நிக்க போறோம்!" என மகளுக்கு ஆறுதல் கூறினார் மதி.
"ஆனா உங்க கூட இருக்க முடியாதுல்ல இனி நான்!" என அவள் ஏங்கி அழ ஆரம்பிக்க, குழந்தையாய் அழும் அவளைப் பார்த்து சிறுபுன்னகை தான் சித்தார்த்திற்கு.
அவளைக் கொஞ்சிக் கொள்ள தான் தோன்றியது அப்போதுமே!
"போதும் போதும்! கிளம்புற நேரம் அழுதுகிட்டு!" என விஜயா கண்டித்தாலும் அவர் கண்களும் கலங்கி தான் இருந்தது.
"நீ தினமும் கூட இங்க வந்து போய் இரு! யாரும் உன்னை எதுவும் சொல்ல போறதில்ல!" என அமலி கூறி மருமகளை அணைத்துக் கொள்ள, பெற்றவர்களுக்கு தான் அத்தனை நிம்மதி அமலியின் பேச்சில்.
"இப்ப அவங்களுமே உன் கூட உனக்காக வருவாங்க!" என அமலி சொல்ல,
"ஆமா த்தை! நீங்களும் வாங்க மாமா! இல்லைனா என் கூட வர மாட்டேன்னு கூட சொல்லிடுவா போல உங்க பாப்பா!" என சித்தார்த் கிண்டலாய் சொல்ல, மதியும் சித்தார்த்தின் பேச்சில் தான் இப்படி அவர்கள் முன் கலங்கி நின்றுவிட்டோமே என கண்களை துடைத்துக் கொண்டார்.
அனைவரும் சித்தார்த் வீடு வந்து சேரும் போது ஆறு மணி. சித்தார்த் உறவுகளுக்கும் என அங்கேயே சாப்பாடு அனைவர்க்கும் தயார் செய்திருக்க, சாப்பிட்டு கொஞ்சம் கொஞ்சமாய் அனைவரும் கலைய ஆரம்பிக்க, அமலியின் சகோதரி முறை ஒருவர் மட்டும் குடும்பத்துடன் அங்கே தங்கும்படி இருந்தனர்.
எட்டு மணிக்கெல்லாம் மதி, விஜயாவோடு கவிபாலா வீட்டு சொந்தங்கள் கிளம்ப, மீண்டும் அவ்வளவு அழுகை அவளிடம்.
"பாலா!" என்றவன் அழைப்பில் அனைவரையும் பார்த்து அழுது கொண்டிருந்தவள் அவன் அருகில் செல்ல,
"என்ன டா நீ?" என்றவன் கைகளை தன் கைகளோடு அவள் கோர்த்துக் கொண்டு தான் அவர்களுக்கு வழி அனுப்பி வைத்தாள்.
தொடரும்..

Author: Kota
Article Title: கூழாங்கல் கூவுகின்ற கானம்! 14
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.