அனைவருக்கும் வணக்கம்.
போட்டிக்கதையில் பங்கு பெறுதற்காக எழுதிய கதை. படித்து பார்த்து உங்களது கருத்துக்களை பகிரவும் நட்புக்களே..🙏
காண்பது எல்லாம் உனது உருவம் 1
காலை குளித்து விட்டு வந்தவுடன் வெளி கதவை திறக்கும் சத்தம் கேட்டு வேகமாக வந்து நின்ற ரத்னா பார்த்தது விக்ரமன் தன் வண்டியில் வேகமாக வெளியில் போனதை தான்.
பெருமூச்சோடு தன் அறைக்கு போனவள் தூங்கி கொண்டு இருந்த நித்யாவை எழுப்பி பாத்ரூம்க்கு அனுப்பி விட்டு, ரூமை சுத்தம் செய்தவள், சமையல் அறைக்குள் போனதும் அங்கிருந்த வேலைகள் அவளை இழுத்து கொண்டது.
"காலைல வெளில போற புருஷனுக்கு என்ன வேணும்னு கேட்டு கவனிக்க முடியாத பொண்டாட்டியா அமைஞ்சிருக்கு அவன்...என்ன பண்றது.. எல்லாம் அவன் வாங்கிட்டு வந்து வரம்" மாமியாரின் குத்தல் வார்த்தைகள் தன்னை பாதிக்காதது போல் முகத்தை வைத்து கொண்டவள் அமைதியாக சமையலறைக்குள் போய் வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள்.
"ஸாரி டி..ரொம்ப நேரமாகிடுச்சுல்ல..அஞ்சு மணிக்கு தான் அத்தான் வந்தாங்க.." என்று சமையறைக்குள் இந்திரா வந்தாள்.
"பரவால்ல கா..டிபன் வேலை முடிஞ்சிருச்சு..சாப்பாடு கட்டியாச்சு..சமையல் முடிஞ்சிருச்சு..மதியம் சாதம் மட்டும் சூடா வெச்சுக்கங்க.."
"மாமாக்கு டிபன், டீ குடுத்தாச்சு..அவர் கடைக்கு கிளம்ப போறாரு கா.."
"அந்த பெரிய ப்ளாஸ்க்ல டீ அத்தைக்கு சக்கரை இல்லாம போட்டு வெச்சிருக்கேன்...டிபன் அவங்களுக்கு இனிமே தான் குடுக்கணும்.."
"உங்களுக்கும் அத்தானுக்கும் டீ ப்ளாஸ்க்ல இருக்கு..நேரத்தோட
எடுத்துக்கங்க.."
"நித்யாக்கு கஞ்சில பால் சர்க்கரை சேர்த்து வெச்சிருக்கேன்..
வாழைப்பழமும் இருக்கு...
குடுத்திடுங்க கா.."
"அண்ணிக்கு தனியா கேரியரில் சாப்பாடு கட்டியாச்சு..அவங்க வந்தா எடுத்துக்க சொல்லுங்க.."
"சரி டி..எல்லாரையும் கவனிச்சது போதும்..நீ டீ குடிச்சியா..
கொழுந்தனார் என்ன சாப்ட்டாரு..எதாவது குடுத்தியா.."
"வழக்கம் போல தான் கா..நான் வர்றத்துக்குள்ள எதுவும் சாப்பிடாம கெளம்பியாச்சு.."
"ஏன்..அத்தை அவருக்கு எதுவும் சாப்பிட குடுக்கலயா..ஆனாலும் இந்த அத்தைக்கு நீ வந்ததுலேந்து சமையல் அறை எங்க இருக்குங்கறதே மறந்துடுச்சு டி.."
அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் "எட்டு மணிக்கு பஸ் பிடிக்கணும் கா..ஏற்கனவே மணி ஏழரை ஆகிடுச்சு..இனி நீங்க பாத்துக்கோங்க...நான் போய் கிளம்பறேன்.."
"அதென்ன..அவளுக்கு டீ கையில எடுத்து குடுக்க கூட முடியாத அளவுக்கு உனக்கு என்ன அவ்ளோ பெரிய வேலை..என்னவோ பெரிய கலெக்டர் வேலை பண்ற மாறி நெனப்பு..."
"ஆளுங்க மதிக்கறதே இல்ல..எது கேட்டாலும் பதில் கிடையாது...
நல்ல குடும்பத்துல பொறந்து..
பெரியவங்கள மதிக்கணும்னு வீட்டுல சொல்லி குடுத்திருந்தா தானே தெரியும்..."
அதற்கும் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்து தன்னறைக்குள் சென்ற ரத்னா நித்யாவை தயார் செய்து "நான் வர்றவரைக்கும் அம்மாவ எதுவும் கேக்க கூடாது..அவங்களுக்கு வேலை அதிகமா இருக்கும்..விஷமம் பண்ண கூடாது.."
"மகேஷ் உன் பொம்மை எடுத்து விளையாடினா சண்டை போட கூடாது.. பாட்டி எதாவது திட்டினா பதில் பேச கூடாது..சாப்பிட குடுத்தா வேணாம்னு சொல்லாம சாப்பிடணும்.." என தினமும் தான் சொல்வதை சொல்லி அவளை ஹாலுக்கு அனுப்பி விட்டு தான் தயாராக ஆரம்பித்தாள்.
வேகமாக தயார் ஆகி வந்தவளை கையை பிடித்து இழுத்தவளிடம் "நேரமாச்சு கா..நான் கெளம்பறேன்.." என்ற பேச்சே காதில் வாங்காமல் தட்டை கையில் வைத்த இந்திரா "சாப்பிட்டு கெளம்பு டி.."
எதுவும் சொல்லாமல் சாப்பிட்டு தட்டை அலம்பி வைத்து விட்டு வரேன் கா என்று சொல்லி வெளியே கிளம்பினாள்.
வாசலில் உட்கார்ந்து இருந்த மாமா தணிகாசலம் "என்ன மா..கெளம்பிட்டியா..நான் பஸ் ஸ்டாப்ல விடவா.."
"பரவால்ல மாமா..என்னை கொண்டு விட்டா நீங்க கடைக்கு போக நேரமாகிடும்..நான் கெளம்பறேன்.."
அவர்கள் வீட்டில் இருந்து பஸ் ஸ்டாண்ட் அரை கிலோ மீட்டர் இருக்கும்..எப்போதும் போல அவளையே பார்த்தபடி எதிரே வரும் விக்ரமனை கூட கவனிக்காமல் சென்று விட்டாள்.
தணிகாசலம் செண்பகம் தம்பதியின் மூத்த மகன் விக்னேஸ்வரன் ஒரு மருந்து கம்பெனியில் ரீஜனல் மேனேஜராக இருப்பதால் மாதத்தில் இருபது நாட்களுக்கு மேல் ஊர் ஊராக போகும்படி இருக்கும்.
அவன் மனைவி இந்திரா வீட்டிலேயே தையல் யூனிட் வைத்து நடத்துவதால் அவளுடைய நாலு வயது குழந்தை நித்யாவை ஸ்கூல் அனுப்ப, வீட்டுக்கு வந்தால் பார்த்து கொள்வதில் சிரமம் இல்லாமல் இருக்கிறது.
விக்ரமனுக்கும் ரத்னாவுக்கும் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது. குழந்தை எதுவும் இல்லை. விக்ரமன் ஒரு தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை செய்கிறான்.
வாழ்க்கையே வெறுத்தது போல விக்ரமன் சுற்றி வர ரத்னாவுக்கு தன் வாழ்க்கை எந்த வழியில் போகிறது என்ற போக்கே பிடிபடாமல் அது போகும் வழியில் போகிறாள்.
அவளுடைய அரசாங்க வேலை தான் அவள் திருமணம் நடக்கவே காரணம் என்ற கசப்பான உண்மையை கஷ்டப்பட்டு ஜீரணிக்க முயன்று வருகிறாள்.
தணிகாசலம் தம்பதியரின் ஒரே மகள் வத்சலாவை பக்கத்து ஊரிலேயே திருமணம் செய்து குடுத்திருக்க அவளுக்கு ஐந்து வயதில் மகன் மகேஷ்.
அவள் தினமும் காலையில் வந்தால் மூன்று வேளையும் இங்கேயே சாப்பிட்டுவிட்டு இரவு தான் கிளம்புவாள்.
தணிகாசலம் சாப்பிட்டவர்
"செண்பகம் இங்க வா.." என தங்களது அறைக்கு அழைத்தார்.
"என்ன சொல்லுங்க..எனக்கு ஆயிரம் வேலை இருக்கு.."
"ஆயிரம் வேலையோட இன்னொரு வேலையா நான் பேசறதயும் கேளு..ரத்னா யாரோ இல்ல..உன் அண்ணன் பொண்ணு.."
"எனக்கு தெரியாத புது தகவல் இது பாருங்க..நீங்க கடைக்கு கிளம்பற வழியை பாருங்க..நான் போய் வேலைய பாக்கறேன்.."
"இரு..இரு..நான் பேசறத கேக்கவே கூடாதுனு இருக்கியா.."
"சரி..என்ன சொல்லணுமோ..அத சீக்கிரம் சொல்லுங்க.."
"எதுவும் பதில் பேசாததால அந்த பொண்ணை ஏன் இவ்ளோ கொடுமை பண்ற..இதை உன் பெரிய மருமக கிட்ட செய்ய முடியுமா.."
"ரத்னா எவ்ளோ பெரிய வேலைல இருக்கானு உனக்கு தெரியுமா.. அவ டிபார்ட்மெண்ட்ல சீனியர் ஆபீஸர் அவ..எல்லாரும் அவ்ளோ மரியாதை குடுக்கறாங்க..ஆனா வீட்டுல.. "
"சரி..அதுக்கு நான் என்ன பண்ணணும்னு நீங்க எதிர்பார்க்கறீங்க..வீட்டுக்கு வரும் போது தினமும் ஆரத்தி சுத்தணுமா.."
"ஏன் இப்டி பேசற..அவ வீட்டுலேந்து அவளுக்கு ஆஃபீஸ் பக்கம்..உன் பையனை கல்யாணம் பண்ணிட்டு வந்து அவளுக்கு இங்கே இருந்து ரெண்டு பஸ் மாறி போகணும்..யாரும் அவளோட கஷ்டத்தை புரிஞ்ச மாறி தெரியல..
"உன் பெரிய மருமகளுக்கு துணி தெச்சு முடிச்சு நேரம் கழிச்சு தூங்கறதால ஏழு மணிக்கு கொறஞ்சு சமையறைக்குள்ள வர்ற முடியறதில்ல..அதை குறையா சொல்லல.. ஆனா அவ வர்றத்துக்குள்ள ரத்னா எல்லா வேலையும் முடிக்கவே முடிச்சிடறா..
"சாயந்திரம் வர்றத்துக்கு ஏழு மணிக்கு மேல ஆகுது..வந்ததும் சமையறைக்குள்ள தான் போறா.."
"முன்னாடி இந்திரா மட்டும் இருந்தப்ப சமையல் மொத்தமும் நீ தான் பாத்துக்கிட்ட..இப்ப சமையலறை எங்க இருக்குனு தெரியாத மாறி நடந்துக்கற..இதெல்லாம் சரி இல்ல.."
"அவள கட்டிட்டு வந்தவனும் மருந்துக்கும் சரியில்ல..வீட்டுல தவறி போய் கூட சாப்பிடறதே இல்ல..அந்த பொண்ணு கிட்ட முகம் குடுத்து கூட பேசறதில்ல..."
"காலைல வெளில போனா நடுராத்திரிக்கு வீட்டுக்கு வர்றது..சம்பாதிக்கறத என்ன செய்யறானோ தெரியல...கொஞ்சம் கூட அனுசரணையா நடந்துக்க மாட்டேங்குறான்.."
"அவன் என் கிட்ட தான் பேசறதே இல்ல..நீயாவது அவனுக்கு ஏதாவது நல்ல புத்தி சொல்வேனு பாத்தா..நீ உன் வேலை நடந்தா போதும்னு எதையும் கண்டுக்கறதே இல்ல.. அந்த பொண்ணுக்கு யாருமே பாவமே பாக்க மாட்டீங்களா.."
"இத பாருங்க..சும்மா அவளை சப்போர்ட் பண்ணி பேசாதீங்க..இந்திராவும் தான் வேலை செய்யறா..வீட்டுலயே டைலரிங் யூனிட் வெச்சு நடத்தறா..நானும் தான் அவ கூட துணி தெச்சு குடுக்கறேன்.."
"எல்லாரோட சம்பாத்தியமும் உங்க கிட்ட தான் தர்றாங்க..சும்மா பேசாதீங்க.."
"என்னால சமையல் செய்ய முடியலனு தான் அவளை என் பையனுக்கு கட்டி வெச்சேன்..நல்லா தின்ன தெரியுதுல்ல..வேலை செய்யட்டுமே.."
"வயசுல பெரியவ மாதிரியா பேசற..கொஞ்சம் கூட பொறுப்பாவே பேச மாட்டியா நீ..அவ வீட்டுல சாப்பிட சாப்பாடு இல்லனா நீ அவளை பரிதாப்பட்டு உன் பிள்ளைக்கு கல்யாணம் பண்ண.."
"அவ வேலை தானே உனக்கு கண் தெரிஞ்சிது...பதில் பேச முடியாத படி செஞ்சு தானே நீ கல்யாணம் பண்ண வெச்ச.."
"இப்ப என்ன சொல்ல வரீங்க..அத தெளிவா சொல்லுங்க.."
"நீ செய்யறது எதுவுமே சரியில்ல...நான் சொல்ல வேண்டிய கடமை சொல்லிட்டேன்..அதுக்கு பிறகு உன் இஷ்டம்.."
"அதான் என் இஷ்டம்னு சொல்லிட்டீங்கல்ல..வீட்டு விஷயம் எல்லாம் நான் பாத்துக்கறேன்..என்ன பண்ணணும் எனக்கு தெரியும்..வேற வேலை ஏதாவது இருந்தா பாருங்க.."
"சரி..உன் இஷ்டப்படி எதையோ செய்..அப்பறம் நாள பின்னால எதாவது பிரச்சினை வந்தா நீ தான் பாக்கணும்..நான் தலையிடவே மாட்டேன்.."
"என்ன பிரச்சனை..வரும்..இல்ல வரணும்னு நீங்க எதிர்பார்க்கறீங்க.."
"ச்சே..உன் கூட மனுஷன் பேசுவானா..நான் கடைக்கு கிளம்பறேன்.."
தணிகாசலம் தான் நடத்தும் சிறிய துணிக்கடைக்கு கிளம்பி போக..தனக்குள் ஏதோ முணுமுணுத்து கொண்டே வெளியே வந்தார் செண்பகம்.
அப்பாவிடம் எதையோ பேச வந்த விக்ரமன் அவர்களுக்கு இடையே நடந்த பேச்சுக்களை கேட்டு எதையோ யோசித்தபடி தன்னறைக்குள் சென்றான். (தொடரும்).

Last edited by a moderator:
Author: Uppada
Article Title: காண்பது எல்லாம் உனது உருவம் 1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.