அத்தியாயம் 2
"இட்ஸ் வெரி வ்ரோங் ப்ரோ!" அபிநயா சித்தார்த்திடம் சொல்ல, அவளை தள்ளிக் கொண்டு அவனருகே வந்து நின்ற கவிபாலா சித்தார்த்தின் கோப்பை கைகளில் எடுத்து விரித்தாள்.
"ஆபீஸ்க்கு ஓனர்னு நினைப்பா டி உனக்கு?" ரகசியம் போல அபிநயா அவள் காதில் கேட்க, அமர்ந்திருந்தவன் அலட்டிக் கொள்ளாமல் தான் இருந்தான் இன்னமும்.
"என்ன டி தேடுற? உனக்கு என்ன பைத்தியமா?" என மீண்டும் மீண்டும் அபிநயா கேட்டிருக்க, ஃபைலை அவனருகே கோபமாய் வைத்தாள் கவிபாலா.
"நான் இங்க ஜாயின் பண்றதுல உங்க பிரண்ட்க்கு எதாவது வருத்தமா?" சித்தார்த் அபிநயாவிடம் கேட்டான்.
"ஆமானு தான் தோணுது ப்ரோ!" கவிபாலாவை பார்த்தபடி கூறினாள் அபிநயா.
"கபே கொஞ்சம் டிலே பன்றாங்க. காபி சொல்லி ரொம்ப நேரமாச்சு!" அவள் தன்னை அப்பட்டமாய் முறைப்பது தெரிந்தும் சித்தார்த் அதை கண்டுகொள்ளவில்லை என்பதாய் சொல்ல,
"எம்புட்டு சீன்? இவ தான் கோவக்காரினு நினச்சேன்! ப்ரோவும் வம்புக்காரர் தான் போல! ஏக பொருத்தம் தான்!" என வெளிப்படையாய் அபிநயா தலையில் அடித்துக் கொள்ளும் நேரம்,
"இங்க என்ன டா பண்ற?" என சித்தார்த்திடம் கேட்டபடி வந்திருந்தான் ஸ்ரீதர் அந்த அலுவலகத்தின் மேல்பதவியில் இருப்பவன்.
அபிநயா புரியாமல் விழிக்க, அப்போது தான் எதுவோ புரிவது போல கவிபாலா விழிக்க, "நீங்க என்ன பண்றீங்க இங்க?" என்றான் ஸ்ரீதர் இவர்களிடம்.
"சாப்பிட வந்தோம் சார்! நியூ அப்பொய்ன்ட்னு சொன்னாங்க! அதான் கேட்டுட்டு இருந்தோம்!" என்ற அபிநயா,
"நாங்க கிளம்பிட்டோம் சார்!" என பவ்யமாய் சொல்ல,
"நியூ அப்பொய்ன்ட்டா? இவனா?" என சித்தார்த் முதுகில் ஸ்ரீதர் ஒரு அடியை வைக்க,
"அடி கொஞ்சம் பலம் தான்!" என்ற அபிநயாவின் வாயும் நிற்கவில்லை.
"என்னோட பிரண்ட்! சென்னைல இருந்து வந்திருக்கான்!" என்றான் ஸ்ரீதர்.
"பிரண்ட்டா?" திடுக்கிட்டது என்னவோ அபிநயா தான்.
"ஆனா நீங்க கேட்ச் பண்ணின பாயிண்ட் ரொம்ப சரி!" என்றான் சித்தார்த் அபிநயாவிடம்.
"என்ன டா?" என சித்தார்த்தை பார்த்த ஸ்ரீதர் அவனருகில் இருந்த ஃபைலை கைகளில் எடுத்துப் பார்த்தவன்,
"ஓஹ்! இன்டெர்வியூக்கு இப்பலாம் யூகேஜி டு ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் ப்ரோமோட் பண்ணின செர்டிபிகேட் எல்லாம் கேட்குறாங்களா?" என கிண்டலாய் கேட்க, அபிநயாவுமே அதை எட்டிப் பார்த்தாள்.
நிஜமாய் அதை தான் முதல் தாளாய் வைத்திருந்தான் சித்தார்த்.
"அடப்பாவி!" அபிநயா விழிக்க,
"இன்னும் எதாவது தெரியனுமா?" செல்லாமல் நின்ற இருவரையும் பார்த்து ஸ்ரீதர் கேட்க,
"இல்ல சார்!" என்ற கவிபாலா அபிநயாவையும் இழுத்துக் கொண்டு சென்றாள்.
"நீ என்னை பார்க்க தான் வந்திருக்கனு நினைச்சேன்! இல்ல போலயே!" கவிபாலா பின்னோடு சென்ற சித்தார்த் விழிகளை கவனித்து ஸ்ரீதர் கேட்க,
"ஹன்ட்ரெட் மார்க்ஸ்!" என்றான் சித்தார்த்.
"சரி தான்! என்ன டா புதுசா இருக்கு? நீ தானா?" என்ற ஸ்ரீதர்,
"வர்றேன்னு போன் கூட பண்ணாம, வீட்டுக்கும் வராம ஸ்ட்ரைட்டா ஆபீஸ்க்கு விசிட் பண்ணிருக்க! இதுல நீ எல்கேஜி யூகேஜி படிச்ச செர்டிபிகேட் வேற!" என்றும் கேட்டான்.
"செர்டிபிகேட் உனக்கு இல்ல. முக்கியமானவங்களுக்கு காட்றதுக்கு.." என்ற சித்தார்த் எழுந்தவன்,
"சரி நான் வீட்டுக்கு போறேன்! அம்மா வீட்டுல இருக்காங்க இல்ல?" என்று கேட்க,
"இதுக்கு உன்னை அங்கேயே போயிருக்கலாம்னு தான் சொன்னேன். ஈவ்னிங் வர்றேன். நீ கிளம்பு! என்னவோ ப்ளன்ல தான் வந்திருக்க! வந்து பேசுறேன்!" என்ற ஸ்ரீதர் சித்தார்த்தின் கல்லூரி தோழன்.
"இந்த செர்டிபிகேட் எல்லாம் காட்ற அளவுக்கு முக்கியமான ஆள் யாரோ?" ஸ்ரீதர் கேலியாய் கேட்க, சிறு புன்னகை கொடுத்தவன்,
"சொல்றேன்! வீட்டுக்கு வா!" என்று சொல்லி கிளம்பிவிட்டான்.
கவிபாலா கூறிய செய்தியின் அதிர்ச்சியில் திறந்த வாயை மூட மறந்து அமர்ந்திருந்தாள் அபிநயா!
"என்ன டி சொல்ற? நிஜமாவா?" அபிநயா இன்னும் அதிர்ச்சி விலகாமல் கேட்க,
"ப்ச்! கடுப்பாக்காத அபி! நிஜமா தான்! இதே மாதிரி ஆபீஸ் அதுவும் ரெண்டு ப்ராஞ்ச் ஓனா இருக்கு சென்னைல அவங்களுக்கு. அதோட பேமிலி ப்ரொபேர்ட்டின்னு எக்கச்சக்கம் இருக்கு. எல்லாத்துக்கும் ஒரே வாரிசு தான் இந்த சித்தார்த். அதை விட்டுட்டு செர்டிபிகேட் தூக்கிட்டு இங்க வேணும்னு தான் வந்திருக்காங்க!" என்றாள் கவிபாலா.
"நிஜமாவே அந்த சித்தார்த்க்கு கொஞ்சம் மனநிலை சரி இல்லை தான் போல!" என சில நொடிகள் கழித்து அபிநயாவும் சொல்ல, கவிபாலா கேள்வியாய் அவளைப் பார்த்தாள்.
"பின்ன! அவ்வளவு வசதியை விட்டுட்டு அதுவும் உன்னை தேடி வந்திருக்கார் இல்ல? எவன் வருவான்? அப்ப மனநிலை சரி இல்லாதவர் தானே?" என்றும் கேட்க,
"இது மட்டும் போதுமா அபி?" என்ற கவிபாலா திரும்பிப் பார்க்கும் பொழுது ஸ்ரீதர் மட்டும் வந்து தன் அறைக்குள் நுழைந்து கொண்டிருந்தான்.
நிஜமாய் சித்தார்த்தை அபிநயா இதுவரை பார்த்ததில்லை தான். அவனைப் பார்த்ததும் அதிர்ந்து நின்ற தோழியின் அதிர்ச்சியில் தான் புரிவது போல இருந்தது அபிநயாவிற்கு அவன் யார் என்று. அனைத்தும் கவிபாலா சொல்லி இவள் கேட்டிருக்க, இன்று தான் நேரில் காண்கிறாள் அவனை.
'சித்தார்த்!' என்ற கவிபாலா உச்சரிப்பு மீதி உண்மையை சொல்லிவிட, வேண்டுமென்றே தான் சென்று பேசி வாயை கொடுத்ததும்.
"இப்ப என்ன பண்ணலாம்னு இருக்க?" அபிநயா கேட்க, கணினி பக்கம் திரும்பி வேலையை கவனித்தாள் கவிபாலா.
"அப்போ இனிமேல் வானத்தை பார்த்து சோக கீதமெல்லாம் வாசிக்க கூடாது. நீ உண்டு உன் வேலை உண்டுன்னு இருக்கனும்! புரியுதா?" என கோபமாய் மட்டும் அபிநயா சொல்ல கவிபாலா திரும்பவில்லை இவள் பக்கம்.
"அவ்வளவு பெரிய ஆள் உனக்காக இங்க வேலை பார்க்க வந்திருக்கார். அப்பவும் மனசு இறங்கலையா டி உனக்கு?"
"ப்ச்! உளறாத அபி! நீ பார்த்தியா இல்லையா? வேணும்னே யூகேஜி செர்டிபிகேட் எல்லாம் கொண்டு வந்திருக்காங்க!"
"அது அவங்களோட நேர்மையை குறிக்குது! அவர் படிச்சு பட்டம் வாங்கினதை தான கொண்டு வந்திருக்கார்?" நியாயமான கேள்வி அபிநயாவிடம்.
"அவனவன் கட்டின பொண்டாட்டியை விட்டுட்டு இன்னொரு பொண்ணை தேடி போறான்! மூணு வருஷம் முன்ன தெரியாம நடந்த கல்யாணத்துக்கு இன்னமும் உன்னை தேடி வர்றாரு இல்ல! நீ பேச தான் செய்வ!" என்ற அபிநயா சொல்லில் பெரும் அமைதி கவிபாலாவிற்கு.
"ஏன்? இதுக்கு முன்னாடி என்ன குடும்பம் நடத்தவா கூட்டிட்டு போக வந்தார்?" முணுமுணுத்து கூறியது அபிநயா காதுகளை எட்டவில்லை.
"பிராக்டிகலா யோசி! நான் எல்லாமே சொல்லி தர முடியாது!" என்ற அபிநயா தன் வேலையை தொடர, கவிபாலாவிற்கு வேலை செய்யும் மனமே இல்லை இந்த சூழலில்.
காலையில் அன்னை பேசியது தான் மீண்டும் மீண்டும் இப்போது நியாபகத்தில் ஓடியது.
சென்னையில் தான் கவிபாலாவின் அன்னை விஜயாவும் தந்தை மதியும் இருக்கின்றனர். கவிபாலா வேலைக்காக பெங்களூர் வந்து இரண்டு வருடங்கள் முடிய இருக்கிறது.
முதலில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என ஊருக்கு சென்று வந்தவள் பின் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என்றாகி இப்போது எட்டு மாதங்களாகியும் இன்னும் ஊருக்கு செல்லவில்லை.
"அந்த பையனுக்கு வேற பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க போறாங்களாம் அவங்க அம்மா! பண்ணினா பண்ணிட்டு போகட்டும். அவங்களாவது நிம்மதியா இருக்கட்டும்!" என்று காலையில் விஜயா கூறியதில் இருந்து அத்தனை அழுத்தம் சேர்ந்து மனதை பாடாய் படுத்திக் கொண்டிருக்க, அதற்கு மருந்திடும் விதமாய் சித்தார்த்தின் வருகை.
ஆனால் வந்த காரணம் தெரியாமல் அது ஒருபுறம் வேறொரு உதறலையும் கொடுக்காமல் இல்லை.
இறுதியாய் அவன் தன்னை தேடி வந்த நாளை யோசித்துப் பார்த்தாள். ஆறு மாதங்கள் முன்பு தானே?
"சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ பாலா! நீ நல்லாருக்கணும்! என்னால உன் லைஃப் ஸ்பாயில் ஆனதா இருக்க கூடாது!" என்றவனுக்கு பதில் கூறாது இருந்துவிட்டாள்.
இப்போதும் அப்படி தான் கூறுவானோ? அத்தனை சகஜமா இவர்களுக்கு?
"உனக்கும் என் பையனுக்கும் செட்டாகாது. புரியும்னு நினைக்குறேன்!" கூறி இருந்தாரே அவன் அன்னை அமலி ராஜன்.
இந்த மூன்று வருடத்தில் முதல் இரண்டு வருடம் பெரிதாய் எதுவும் தெரியவில்லை. தெரியவில்லை என்பதை விட கவிபாலா கண்டுகொள்ளவில்லை என்பது தான் நிஜம்.
ஆனால் கடந்த ஒரு வருடத்தில் அவளிடம் அத்தனை மாற்றங்கள். வேண்டும் வேண்டாம் என்ற நிலை என தள்ளாடி போயிருக்கும் நேரம்.
கல்லூரி இறுதி ஆண்டில் இருந்த போது விவரம் அறியாமல் இருந்துவிட, அடுத்த வருடமே கல்லூரி மூலம் கிடைத்த வேலையை பற்றிக் கொண்டு பெங்களூர் வந்தவளுக்கு பெரிதாய் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.
இப்போது தான் அனுபவிக்கிறாள் சில கடந்த கால நிகழ்வுகளின் சுவடுகள் தரும் வலியை.
"இன்னுமா நீ கனவுலயே இருக்க? மணி ஆறு தாண்டி அரை மணி நேரமாச்சு. வர்றியா இல்லையா?" அபிநயா கேட்டபின் தான் நேரமே தெரிந்தது.
தனது வண்டியை அபிநயா ஸ்டார்ட் செய்யவும் கவிபாலா ஏறி அமர்ந்து கொண்டவள் கண்கள் சுற்றிலும் பார்த்தது.
"அங்க யாரும் இல்ல. நேரா உக்காரு டி!" என அபிநயா சொல்லி,
"இங்க பாரு! உனக்கு வேணும் வேண்டாம்னு நேரா சொல்லிடு. இந்த கண்ணாம்பூச்சி எல்லாம் வாழ்க்கை விளையாட்டுல சரி வராது! இதுவரைக்கும் நீ சின்ன பொண்ணா இருந்திருக்கலாம். ஆனா இப்போ அப்படி இல்ல. உனக்கு ஒரு இக்கட்டான சிடுவேஷன்னா அதை நீ தான் ஹண்டில் பண்ணனும். யாரும் துணைக்கு வர மாட்டாங்க!" என அவளுக்கு புரியும்படி கூறிக்கொண்டே வந்தாள் வழியில்.
"புரியுது அபி! ஆனா பயமா இருக்கு! இந்த வாழ்க்கை எனக்கு என்ன சொல்லி தருது? நான் என்ன தான் வாழ்ந்துட்டேன்! ஏன் இப்ப வாழ்க்கையே வெறுக்க தோணுது? எதுவும் புரியல!" என்றாள் கவிபாலா.
"இதை தான் சொல்றேன் கவிமா! இன்னும் குழந்தையாவே இருக்க நீ! சித்தார்த் இப்பவும் உனக்காக வந்திருக்கார்! முன்னாடி வந்த காரணம் என்னவுமா இருக்கலாம்! இப்ப வந்திருக்கார் தானே? பேசு! ஒரு முடிவுக்கு வா! அதுல தெளிவா இரு! நிச்சயம் உனக்கு நல்லது தான் நடக்கும்!" என்று சொல்லும் போது கவிபாலாவின் விடுதி அருகே வந்திருந்தனர்.
"ஹ்ம்!" என்ற கவிபாலா முகமே சரி இல்லை.
"போய் சாப்பிட்டு தூங்கி நல்லா ரெஸ்ட் எடு! எதுவும் குழம்பி லூசு மாதிரி அதான் மதியமா உளறி வச்சியே! அப்படி பைத்தியமா பிகேவ் பண்ணாம சமத்தா தூங்கி எழுந்து நாளைக்கு ஆபீஸ் வா! அந்த யூகேஜி சித்தார்த் நாளைக்கு வர்றாரானு பார்ப்போம்!" என்று சொல்லி அனுப்பி வைத்தாள் அபிநயா.
தொடரும்..

Author: Kota
Article Title: கூழாங்கல் கூவுகின்ற கானம்! 2
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.