Dhakai
New member
- Joined
- Mar 23, 2025
- Messages
- 25
"ஹ்ம்ம் அப்புறம்" என்றவன் கேட்க,
"அப்புறம்... நீங்க தான் சொல்லனும்" என்றாள் அவள்.
"ஹ்ம்ம் சரி! வச்சிடவா?" என்றவன் கேட்டதும் அவளின் உள்ளம் சட்டெனச் சுருங்கிப் போக,
"ஹ்ம்ம் வைக்கப் போறீங்களா?" ஏக்கமான குரலில் கேட்டிருந்தாள்.
"ம்ம்ம்" என்றவன் கைப்பேசி இணைப்பைத் துண்டிக்காமல் அப்படியே இருக்க,
"வைக்கலையா?" எனக் கேட்டாள்.
"ம்ப்ச் வைக்க மனசு வரலையே! பேசாம நீயே வச்சிடேன்" கொஞ்சல் குரலில் அவன் கூற,
"பேசாம கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாமா?" அதே கொஞ்சல் குரலில் இவளும் கேட்டாள்.
வாய்விட்டுச் சிரித்தவனாய், "எனக்கும் உன்கிட்ட பேசிட்டே இருக்கத் தான் ஆசையா இருக்கு! ஆனா என்ன பேச? இந்த லவ்வர்ஸ்லாம் மணிக்கணக்கா போன்ல பேசிட்டே இருப்பாங்களாமே? அவங்கலாம் அப்படி என்ன பேசிப்பாங்க?" எனக் கேட்டான்.
"முன்ன பின்ன லவ் செஞ்சி இருந்தா தானே தெரியும். ஆனா இந்த ஃபீல் பிடிச்சிருக்குப்பா. உங்ககிட்ட பேசிட்டே இருக்கனும் போல இருக்கு. ஆனா என்ன பேசனு தெரியலை. அதுக்காகப் போனை வைக்கவும் மனசு வரலை" தனது மன உணர்வுகளை அவள் கூறிக் கொண்டே போக,
"எனக்கும் அப்படித் தான்டா இருக்கு" என்றான்.
"இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம். ஒரு பக்கம் கல்யாணத்துக்கான எக்ஸ்ட்மைண்ட் இருந்தாலும், இன்னொரு பக்கம் ஒரு மாதிரி பயமாவும் இருக்குப்பா" கலவையான உணர்வில் அவள் கூற,
"யாமிருக்கப் பயமேன்?" சிரிப்புடன் உரைத்தான் அவன்.
"அது தானே பயமா இருக்கு?" என்றவள் கிண்டல் குரலில் கூற,
"அடிப்பாவி! யாரு? நீ என்னைப் பார்த்து பயப்படுற ஆளா?" எனச் சிரித்தான் அவன்.
"உண்மையைச் சொல்லவா?" என்றவள் மெல்லமாய்க் கேட்க,
"சொல்லு கேட்போம்" சுவாரஸ்ய பாவனை அவன் குரலில்.
"உங்களை விட உங்க வீட்டாளுங்களை நினைச்சு தான் பயமா இருக்கு" என்றாள்.
"யாரு? என் அம்மாவைப் பார்த்தா பயப்படுற?" ஆச்சரியக் குரலில் அவன் கேட்க,
"இல்லை! உங்க மாமா வீட்டாளுங்களைச் சொல்றேன்" என்றாள்.
"ஏன்? ஏன் அவங்களைப் பார்த்து பயம்?" அத்தனை விரைவாய் வந்தது அவன் கேள்வி.
"அவங்களுக்குலாம் உங்களுக்கு என்னைக் கட்டி வைக்கிறதுல விருப்பமில்லை தானே" எனக் கேட்டாள்.
இருவருமே இது நாள் வரை தத்தமது விருப்பு வெறுப்புகள், உணர்வுகள், எண்ணங்கள், பணிகள், வாழ்வில் கடந்து வந்த பாதைகள் என்றே பகிர்ந்து கொண்டு பேசியிருக்கின்றனர். முதல் முறையாக அவனது உறவினர்களைப் பற்றிக் கூறுகிறாள்.
"அப்படிலாம் இல்லையே! ஏன் அப்படி நினைக்கிற நீ?" எனக் கேட்டான்.
"பொய் சொல்லாதீங்க! எனக்குத் தெரியும்! ஒப்புத் தாம்பூலம் மாத்த உங்க மாமாவும் அத்தையும் வந்தப்ப, அவங்க அணுகுமுறைல ஒரு மாதிரி விலகல் இருந்துச்சு. ஏதோ கடனேனு செய்ற மாதிரி செஞ்சாங்க. கல்யாணப் புடவை எடுக்க வந்தப்பவும் உங்க மாமா பசங்க இரண்டு பேரும் ஏதோ பேருக்கு மனைவியைக் கூட்டிட்டு வந்து உடனே கூட்டிட்டு போய்ட்டாங்க. யாருமே எதையும் விருப்பத்தோட செய்ற மாதிரி இல்லை. ஏதோ கடமைக்குச் செய்ற மாதிரி இருக்கு. ஏன் உங்கம்மா கூடச் சந்தோஷமா இருக்க மாதிரி இல்லை. உங்க வீட்டுல யாருக்குமே என்னைப் பிடிக்கலைத் தானே" எனக் கேட்டாள்.
"ஹே சுந்தரி! அப்படிலாம் ஒன்னும் இல்ல. நீயா ஏன் அப்படி நினைச்சிக்கிற?" என்றவன் சமாளித்துப் பேசவும் இவளுக்குக் கோபம் வர,
"ஏன் என்கிட்ட பொய் சொல்றீங்க? மொத முறையா உங்க அத்தை என்னைப் பார்த்துட்டு உங்ககிட்ட வந்து நான் வளர்த்தியா ஆம்பிளை மாதிரி இருக்கேன்னு சொன்னதை என் காதால நான் கேட்டேன்" என்றாள்.
'என்னது கேட்டாளா!' என்று அதிர்ச்சியானவனாய் அவன் அமைதி காக்க,
"என்ன சைலண்ட் ஆகிட்டீங்க? பதில் சொல்லுங்க?" என்றாள்.
"இது எல்லார் வீட்டுலயும் நடக்குறது தானே சுந்தரி. உன்னோட வீட்டுப் பக்க ஆளுங்க கூட என்னை உனக்கேத்த பையன் இல்லனு சொல்லிருப்பாங்க தானே. அந்த மாதிரி தான் அத்தையும் உன்னைப் பார்த்ததும் மனசுல பட்டதைச் சொன்னாங்க. அதுக்காகலாம் அவங்களைத் தப்பா நினைச்சிக்காத. மாமா எனக்குச் செஞ்ச எதுக்கும் அவங்க தடை சொன்னதே இல்லை தெரியுமா? என்கிட்ட எப்பவும் உரிமையா தான் பேசுவாங்க" என்றான்.
"ஆமா அவங்க உங்ககிட்ட உரிமையா பேசுற லட்சணத்தைத் தான் பார்த்தேனே! அவங்க உங்களைச் சொந்தகாரன்ற உரிமைல நடத்துற மாதிரி இல்லங்க. வேலைக்காரன்ற உரிமைல நடத்துற மாதிரி இருந்துச்சு" உள்ளம் குமுற கோபமும் ஆதங்கமுமாய் அவள் கூற,
"ம்ப்ச் எதுவுமே நாம பார்க்கிற பார்வைல தான் இருக்குது சுந்தரி. யாரையும் எடுத்ததும் குத்தமா பார்க்காதடா. அப்புறம் அவங்க என்ன சொன்னாலும் செஞ்சாலும் உனக்குக் குத்தமாவே தான் தெரியும்" அறிவுரைக் கூறும் பாவனையில் அவன் பேச, தான் கூறுவதைப் புரிந்து கொள்ளாமல் தனக்கு அவன் அறிவுரைக் கூறுவது பிடிக்காமல் கடுப்பாகிப் போனாள்.
'என் அம்மா அப்பவே சொல்லுச்சு. இந்த ஆம்பிளைங்க அவங்க பொறந்த வீட்டை விட்டுக் கொடுத்து பேச மாட்டாங்க. ஆனா நாம மட்டும் நம்ம பொறந்த வீட்டை பெருமையா பேசிடக் கூடாதுனு நினைப்பாங்கனு என் அம்மா சொன்ன மாதிரி பேசுறாரே' என்று மனதோடு நினைத்தவளாய் இப்பொழுது இவள் அமைதிக் காக்க,
"என்ன பேச்சையே காணோம்?" எனக் கேட்டான் அவன்.
இப்பொழுது தனக்கிருக்கும் கோபத்தில் அவனிடம் பேசினால் சண்டைத் தான் வரும் என்று எண்ணியவளாய், "நான் தூங்கப் போறேன்! நாளைக்குப் பேசலாம்" என்றாள்.
"ஏன்? என்னாச்சு திடீர்னு? என் மேல எதுவும் கோபமா?" எனக் கேட்டான்.
"இல்ல ஒன்னுமில்ல! தூக்கம் வருது! குட் நைட்" என்று இணைப்பைத் துண்டித்தும் விட்டாள்.
கைப்பேசியைக் கையில் எடுத்துப் பார்த்தவனாய், "இந்தப் பொண்ணுங்களைப் புரிஞ்சிக்கவே முடியலையே! அப்ப போன் வைக்கவே மனசில்லனு அப்படிச் சொன்னா! இப்ப பட்டுனு வச்சிட்டு போய்ட்டா" என்று புலம்பியவனாய்ப் படுத்திருந்தான் செந்தில்.
மொட்டை மாடியின் கயிற்றுக் கட்டிலில் உறக்கம் வராமல் உருண்டு புரண்டு படுத்தவனுக்கு, அவளிடம் இணக்கமாகப் பேசிவிட்டுப் படுத்தால் தான் நிம்மதியாக உறக்கம் வரும் என்று தோன்ற, அவளின் கைப்பேசிக்கு அழைத்தான்.
கைப்பேசி இணைப்பைத் துண்டித்த சுந்தரலட்சுமிக்கு, அவன் மீது கோபம் மலையளவு இருக்க மீண்டுமாய் வந்த அவனது அழைப்பைத் துண்டித்து விட்டு கைப்பேசியை ஓரமாய் வைத்தவளாய் கண்களை மூடிக் கொண்டாள்.
அவளின் கண் முன்னே அன்று கல்யாணப் புடவை எடுக்கக் கடைக்குச் சென்ற போது நடந்த நிகழ்வுகள் படமாய் விரிந்தன.
பெண் பார்க்கும் நிகழ்விற்குப் பிறகு ஒரு வாரத்தில் ஒப்புத்தாம்பூலம் மாற்றப்பட்டு, அடுத்த இருபது நாளில் திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்று நிச்சயமும் நடந்திருக்க, அந்நிகழ்விற்குச் செந்திலின் தாய் மாமா செல்லத்துரையும் அவரது மனைவி காஞ்சனாவும் சபையில் பெயருக்கு வந்து நிற்பது போல் வந்து சென்றிருந்தனர். அவர்களது மகன்களும் மருமகள்களும் தங்களுக்கு அலுவலகத்தில் விடுப்பு வழங்கவில்லை எனக் கூறி வராது இருந்து விட்டனர்.
சுந்தரலட்சுமியின் பெற்றோருக்கு அவர்களது இந்த ஒதுக்கம் வருத்தத்தை அளித்தாலும், தனது மகள் கூட்டு குடும்பமாய் அல்லாது செந்தில் மற்றும் அவனது தாயுடன் அவனது வீட்டில் தனிக்குடித்தனம் போல் தான் வாழ போகிறாள் என்பதால் இவர்களினால் அவளுக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படாது என்று எண்ணிக் கொண்டவர்களாய் ஏதும் சொல்லாது திருமண வேலையில் ஈடுபட்டனர்.
அவனது அத்தை காஞ்சனாவைத் தவிர அக்குடும்பத்தில் மற்றவர்கள் அனைவரும் ஓரளவிற்கு நல்லவர்களாகத் தான் இருப்பார்கள் என்று எண்ணியிருந்தாள் சுந்தரலட்சுமி.
அனைவருக்குமாய் ஒரே இடத்தில் உடை எடுத்து விடலாம் என்று திட்டமிட்டவனாய், செந்தில் தனது மாமாவின் இரு மகன்களான முரளி மற்றும் கார்த்திக்கை அழைத்து அவர்களது மனைவி பிள்ளைகளுடன் கண்டிப்பாகத் திருமண ஜவுளி எடுக்கும் நாள் அன்று ஜவுளிக் கடைக்கு வர வேண்டுமென அழைப்பு விடுத்தான்.
அன்றாடம் இரவு கைப்பேசியில் பேசிக் கொண்டாலும், திருமண நிச்சயத்திற்குப் பிறகு அன்று தான் அவளை நேரில் காணும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது என்பதால் பதின் பருவ வயதினனைப் போன்ற பட்டாம்பூச்சி குறுகுறுப்பும், துள்ளலுமாய் மகிழ்வுடன் அவளைப் பார்க்க தனது பைக்கில் கிளம்பிச் சென்றிருந்தான் செந்தில். தனது அன்னையை அத்தையுடன் ஸ்கார்பியோ காரில் வரும்படி உரைத்து விட்டு முன்பாகவே தனது பைக்கில் டி நகரில் உள்ள ஜவுளிக் கடைக்கு வந்து விட்டான் செந்தில்.
அவளுமே அவனைக் காணும் ஆவலும் பூரிப்புமாய்க் கிளம்பி வந்திருந்தாள்.
பெற்றோருடன் அவர்களது மாருதி மகிழுந்தை ஓட்டியவாறு வந்தவள் தரிப்பிடத்தில் தனது பைக்கில் செந்தில் சிரித்த முகத்துடன் அமர்ந்திருப்பதைப் பார்த்து மகிழுந்தை அவன் பைக் அருகே நிறுத்தி விட்டு இறங்கினாள்.
இப்பொழுது அவன் முகம் யோசனையில் சற்று சுருங்கியிருப்பதைப் பார்த்தவளாய் அவனருகில் வந்தவள், "என்னப்பா? என்ன பலத்த யோசனை? நான் ஜீன்ஸ் குர்தி போட்டிருக்கிறது உங்களுக்கும் பிடிக்கலையா?" கண்களைச் சுருக்கிக் கேட்டவாறு அவனுடன் இணைந்து கடையை நோக்கி நடக்க, அவர்களின் பின்னே சற்றுத் தள்ளி நடந்து வந்தனர் அவளின் பெற்றோர்.
அவள் அவ்வாறு கூறியதும் தான் அவளின் உடுப்பையே கவனித்தான் செந்தில்.
அவள் அணிந்திருந்த வெளீர் நில நிற ஜீன்ஸ்ஸையும் மஞ்சள் குர்தியையும்ரசித்துப் பார்த்தவனாய், "என் சுந்தரி எப்பவும் பேருக்கேத்த மாதிரி சுந்தரி தான்" என்றவன் கூறியதும் அவளின் முகம் பளிச்சிட,
"அப்பாடா இப்ப தான் நிம்மதியா இருக்கு. எங்கே, எங்கம்மா மாதிரி நீங்களும் கல்யாணப் புடவை எடுக்க இப்படியா டிரஸ் செஞ்சிட்டு வருவனு திட்டிருவீங்களோனு நினைச்சிட்டே வந்தேன்" என்றாள்.
"நீ சொன்ன பிறகு தான் உன் டிரஸ்ஸையே பார்க்கிறேன்! உனக்கென்ன விருப்பமோ அதைப் போடுடா! இதுல என் விருப்பத்தைக் கேட்க என்ன இருக்கு? மார்டன் டிரஸ்ஸா இருந்தாலும் உன் உடம்புக்கு ஏத்த மாதிரி டீசண்ட்டா யார் கண்ணையும் உறுத்தாத டிரஸ்ஸா இருக்கனும்னு மட்டும் தான் நான் நினைப்பேன். மத்தபடி எல்லாம் உன் விருப்பம் தான்" என்று விட்டான்.
மனம் குளிர்ந்து போனவளாய், "உங்களைக் கொஞ்சமே கொஞ்சமா பிடிக்குது செந்தில்" என்று விளையாட்டாய் கண் சிமிட்டியவாறு கூற,
"ஆஹான்! கொஞ்சமா தானா?" எனக் கேட்டான்.
"இப்படி என் விருப்பப்படி எல்லாத்தையும் செய்ய விட்டுட்டா கொஞ்சமான பிடித்தம் நிறைய ஆகிடும்" என்றவள் குறும்பு பார்வையுடன் சிரிக்க,
"எவ்ளோ நேக்கா, என்னை என் விருப்பப்படி இருக்க விடுடானு சொல்லிட்ட! புத்திசாலி தான்" என்று இவனும் சிரித்தான்.
"புரிஞ்சிக்கிட்டீங்களே! அப்ப நீங்களும் புத்திசாலி தான்" என்று பல் தெரிய சிரித்தவள்,
"சரி நான் வரப்ப வேறென்ன யோசனையில இருந்தீங்க?" எனக் கேட்டாள்.
"உனக்குக் கார் ஓட்டப் பிடிக்குமா சுந்தரி?" எனக் கேட்டான்.
"கார் கம்பெனில சேல்ஸ் டிபார்ட்மெண்ட்ல வேலைச் செஞ்சிட்டு இருக்கேனேப்பா. கார் ஓட்டப் பிடிக்காம இருக்குமா? ரொம்ப ரொம்பப் பிடிக்கும்" என்றாள்.
அந்நேரம் அவர்கள் கடைக்குள் நுழைந்து புடவைப் பிரிவை அடைந்திருக்க, அவர்களைச் சூழ்ந்து கொண்டனர் விற்பனைப் பிரதிநிதிகள்.
செந்திலும் சுந்தரியும் சேர்ந்து பேசியவாறு புடவையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்க, செல்வராணியும் முகுந்தனும் ஓய்வாக நாற்காலியில் அமர்ந்து விட்டனர்.
அந்நேரம் ஸ்கார்பியோ வண்டியில் இந்தக் கடையை நோக்கி பயணித்து வந்திருந்த காஞ்சனா மீனாவிடம், "மீனா உன் மருமக பெரிய படிப்பு படிச்ச பொண்ணு! வசதியான குடும்பத்துப் பொண்ணு. மொதல்லயே உன் கட்டுப்பாட்டுக்குள்ள பிடிச்சி வச்சிக்கோ! அவ இஷ்டத்துக்கு விடாத! அப்புறம் நான் போடுறதை சாப்பிட்டுட்டு கிடனு உன்னை இருக்க விட்டுருவா பார்த்துக்க" என்று மூளைச் சலவைச் செய்ய, மீனாவின் மனதிற்குள் கிலிப் பிடிக்க, "அந்தப் பொண்ணு அப்படிலாம் செய்யுமா என்ன அண்ணி?" எனக் கேட்டார்.
"பின்னே நீ எந்தக் காலத்துல இருக்க? என் மருமவளுலாம் என் பேச்சை மீறி பேச மாட்டாளுங்க. அப்படித் தான் அவளுங்களை வச்சிருக்கேன்" என்று காஞ்சனா கூறவும்,
'அதான் தெரியுமே! ஒரே வீட்டுல மூனு மாடில ஆளுக்கொரு மாடில தங்கிட்டுத் தனித்தனியா சமைச்சிக்கிறது தான் ஊருக்கே தெரியுமே' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட மீனா, 'என் மருமகளும் என்னை அப்படித் தனியா சமைச்சி சாப்பிட வச்சிடுவாளோ! இவன் இப்பவே அவ பேச்சைத் தானே கேட்குறான்' என்று எண்ணி கவலைக்குள்ளானார்.
கடையில் ஏற்கனவே சுந்தரலட்சுமி முகூர்த்தப் புடவையாக ரத்தச்சிவப்பு நிறத்தில் தங்க சரிகை விரவியிருக்கும் பட்டுப் புடவையைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்க, கடைக்கு வந்த காஞ்சனா, "கல்யாணத்துக்கு யாராவது ரத்தச்சிவப்புல புடவை எடுப்பாங்களா? அதுவும் நம்ம வழக்கப்படி முகூர்த்தத்துக்குக் கூரைப் புடவைத் தான் உடுத்தனும்னு உனக்குத் தெரியும் தானே செந்திலு! நீ சொல்லலயா அவளுக்கு" என்றார்.
"எங்க வழக்கப்படி கல்யாணத்துக்கு நாங்க பட்டுப்புடவை தான் உடுத்துவோம்" என்று சற்று உரத்தக் குரலில் சுந்தரலட்சுமி உரைக்க,
அந்நேரம் முரளியும் கார்த்திக்கும் அவர்களது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் அங்கு வந்து சேர்ந்தனர். செல்லத்துரை வேறு வேலை இருக்கிறது என்று வராது இருந்து விட்டார்.
"இதோ என் ரெண்டு மருமவளுக்கும் கூரைப் புடவைக் கட்டித் தான் கல்யாணம் நடந்துச்சு" என்று அவர் கூறவும், அங்கு வந்து நின்ற செல்வராணியும் முகுந்தனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
"சரி உங்க வழக்கப்படியே புடவை எடுத்துக்கலாம்" என்று முகுந்தன் உரைத்ததைக் கேட்டு கோபமும் வருத்தமுமாய்ச் செந்திலைப் பார்த்தாள் சுந்தரலட்சுமி.
அவளுக்காக அவன் முதல் முறையாகத் தேர்ந்தெடுத்து வைத்த புடவையை விட்டுச் செல்ல அவளுக்கு மனமே இல்லை.
"சரி அப்ப முகூர்த்தத்துக்கு வேண்டாம். மத்த ஃபங்ஷனுக்குக் கட்டிக்கிறேன். அந்தப் புடவை இருக்கட்டும்" என்றாள் சுந்தரலட்சுமி.
"இல்லமா நல்ல காரியத்துக்காகப் புடவை எடுக்க வந்துட்டு இப்படி ரத்தச்சிவப்பு மாதிரி அபசகுணமான கலருல புடவை எடுக்கிறது நல்லதில்லை. அதனால் இந்தப் புடவை வேண்டாம். வேற புடவையைப் பாருமா" என்று விட்டார் காஞ்சனா.
அவள் எந்த நிறத்தில் புடவை எடுத்திருந்தாலும் அதனை வாங்க விட்டிருக்க மாட்டார் காஞ்சனா.
தான் ஆசை ஆசையாக உண்பதற்காகக் கையில் வைத்திருந்த சாக்லெட்டை வேறொருவர் பறித்து விட்டால் வரும் வருத்தமும் கோபமும் அழுகையும் கொண்ட முகப்பாவனை அவளிடத்தில்.
மகள் ஏதும் கோபமாய்ப் பேசிடுவாளோ என்று பயந்தவராய், "சரிங்க அப்படியே செஞ்சிடலாம்" என்று இந்த வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் செல்வராணி.
அதன் பிறகு இருந்த கோபத்தில், "நீங்களே செலக்ட் பண்ணுங்கமா. எனக்குத் தலை வலிக்குது" என்று தாயிடம் உரைத்தவளாய் வேறெந்த புடவையும் தேர்ந்தெடுக்காது அவள் அமர்ந்து விட, வரும் போது இருந்த முகப்பொலிவு முற்றிலும் மறைந்து கோபமும் வருத்தமுமாய் அமர்ந்திருந்த சுந்தரியைப் பார்த்து இவனுக்கும் கஷ்டமாகிப் போக, அவளாடம் பேச அவளருகே செந்தில் சென்ற போது, "செந்தில்" என்று அழைத்தாள் முரளியின் மனைவி பிரியா. செல்லத்துரை காஞ்சனாவின் மூத்த மருமகள் இவள்.
அவளுக்கான புடவையைப் பார்த்து கொண்டிருந்தவள், "செந்திலு பையனுக்குப் பாத்ரூம் போகனுமாம். நீ கூட்டுட்டுப் போய்ட்டு வந்தடுறியா?" என்று தனது இரண்டு வயது மகனை அவனிடம் கொடுத்தாள்.
முரளியும் கார்த்திக்கும் லாப்டாப்புடன் ஒரு சோஃபாவில் அமர்ந்திருப்பதைப் பார்த்தவனாய் சிறுவனைத் தூக்கிக் கொண்டு கழிவறை நோக்கிச் சென்றான் செந்தில்.
சிறிது நேரம் கழித்து வந்தவன், புடவை எதுவும் தேர்ந்தெடுக்காது அதே சோஃபாவில் அப்படியே அமர்ந்திருந்த சுந்தரலட்சுமியைப் பார்த்து மீண்டுமாய் அவளருகில் பேசச் செல்ல, "செந்திலு! இங்கே வாயேன்" என்றழைத்த மீனா, "உன் மாமன் மவன்களுக்கு ஆபிஸ் வேலை இருக்குனு லாப்டாப் ஓட வந்துட்டாங்களாம். அவங்கலாம் குடிக்க ஏதாவது வாங்கிக் கொடு" என்றார்.
இப்படியே ஒவ்வொருவரும் அவனுக்கு ஒவ்வொரு வேலையாய் கொடுத்து அவளின் பக்கமே போக விடாமல் செய்திருந்தனர். செந்திலின் திருமண ஜவுளிக்கென வந்திருந்த செந்தில் வீட்டினர் அனைவரும் அவரவர்களுக்கு உடையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தனர்.
இதனை எல்லாம் அமர்ந்து பார்த்திருந்த சுந்தரிக்குக் காஞ்சனா குடும்பத்தினர் அனைவரும் சுயநலவாதிகள் என்று தோன்றியது. அவர்கள் செந்திலை நடத்தும் விதமும் அவளுக்குச் சுத்தமாய்ப் பிடிக்கவில்லை.
'படிச்சிட்டா! பெரிய ஆளாமா அவங்க? செந்தில் சொந்தமா உழைச்சி தானே சாப்பிடுறாரு! இவங்க காசுலயா சாப்பிடுறாரு. என்னமோ இவங்க சம்பாத்தியத்துல அவர் சாப்பிடுற மாதிரி அவரை வேலைக்காரன் மாதிரி வேலை வாங்கிட்டு இருக்காங்க' என்று மனதோடு பொருமியவாறே அமர்ந்திருந்தாள் சுந்தரலட்சுமி.
இதற்கு மேல் தான் இங்கிருந்தால் சண்டையில் தான் முடியும் என்று எண்ணியவளாய், "எனக்கு அர்ஜன்ட் ஆபிஸ் வேலை வந்துடுச்சு. நான் போயாகனும்" என்று செந்திலிடமும் அங்கிருந்தவர்களிடமும் பொதுவாய் உரைத்து விட்டு கிளம்பியிருந்தாள் சுந்தரலட்சுமி.
"என்னடி பேசுற? எல்லாரும் என்ன நினைப்பாங்க" செல்வராணி அவளிடம் வந்து கோபக் குரலில் மெல்லமாகக் கேட்க,
"என்ன வேணாலும் நினைச்சிக்கட்டும். ஐ டோண்ட் கேர்" என்று கோபமாய்த் தாயிடம் உரைத்தவளாய் அங்கிருந்து கிளம்பியிருந்தாள் சுந்தரலட்சுமி.
அடுத்த அரை மணி நேரத்தில் கார்த்திக் மற்றும் முரளியின் மனைவிகள் தங்களது கணவருக்கும் பிள்ளைக்கும் தங்களுக்குமெனத் தேவையான உடுப்புகளைச் செந்திலின் பணத்தில் வாங்கிக் கொண்டு சுந்தரியின் பெற்றோரிடம் பெயருக்குக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பியிருந்தனர்.
அன்று சுந்தரலட்சுமியின் திருமணப் புடவைகள் அனைத்தையும் காஞ்சனாவும் மீனாவுமே தேர்ந்தெடுத்திருக்க, அன்றிரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்த சுந்தரலட்சுமி, இந்தப் புடவைகள் எதுவுமே தனக்குப் பிடிக்கவில்லை எனக் கோபத்துடன் உரைத்து விட்டு உண்ணாது படுத்து விட்டாள்.
இன்று செந்திலிடம் பேசினால் கண்டிப்பாகச் சண்டை வரும் என்று எண்ணியவளாய், "இன்னிக்கு டயர்ட்டா இருக்கேன். சீக்கிரமா தூங்கிடுவேன். நாளைக்குப் பேசுறேன்" என்று செந்திலுக்குக் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு அன்று இரவு அவனிடம் பேசாது தவிர்த்து விட்டாள்.
ஆனால் அவனிடம் பேசாது தன்னால் ஒரு நாளை கூடக் கடத்த முடியாது என்று இந்நிகழ்வில் தான் புரிந்தது அவளுக்கு. மறுநாள் அலுவலகத்திற்குச் சென்றவளின் மனமோ வேலையில் உழலாது செந்திலையே நினைத்த வண்ணமிருக்க, மனம் சோர்ந்து போனது. பாடல்கள் கேட்டோ வீடியோ பார்த்தோ மனதை மடை மாற்ற முயன்றாலும் இறுதியில் அவனிடமே வந்து நிற்கும் இந்த மனதை என்ன செய்ய என்று தான் தோன்றியது அவளுக்கு. அவனிடம் பேசிவிடு என்று துள்ளும் உள்ளத்தை அடக்கியவளாய் அந்நாளை நகர்த்தியவளுக்கு மனச்சோர்வு உண்டானது.
கைப்பேசியை எடுத்து அவனுக்குக் குறுஞ்செய்தி டைப் செய்து விட்டு அனுப்பாது அழித்து எனப் பலமுறை அன்றைய நாள் முழுவதும் அவள் செய்து கொண்டிருக்க, அன்று மாலை நான்கு மணியளவில் அவளுக்கு அழைத்தான் செந்தில்.
"உன்னோட ஆபிஸ்க்கு வெளில தான் இருக்கேன் சுந்தரி. கொஞ்சம் வர முடியுமா?" என்று கேட்டான்.
அவளின் கண்கள் ஒளிர்ந்து முகத்தில் சட்டெனச் சந்தோஷப் பூரிப்பு பொங்க, அருகிலிருந்த தோழியோ, "என்னடி திடீர்னு மூஞ்சில பல்ப் எரியுது? உன் ஆளு போனா?" எனக் கேட்டு கேலிச் செய்து கொண்டிருந்தாள்.
தோழியை நோக்கி பூரிப்புடன் ஆமெனத் தலையசைத்தவளாய், "இதோ வரேன்" என்று கைப்பேசியில் செந்திலிடம் உரைத்து விட்டு விறுவிறுவென வெளியே சென்று பார்த்தாள்.
ஒரு பெரிய ஆலமரத்தடியில், முதல் முறையாகக் காபி ஷாப்பில் பார்த்தது போலவே வந்து நின்றவனைக் கண்டு புன்னகையுடன் வந்து நின்றாள் சுந்தரலட்சுமி.
"ரொம்பத் தான் அழுத்தம் உனக்குச் சுந்தரி" சற்று அழுத்தமான குரலில் உரைத்தான்.
அவனின் பேச்சில் அவள் முகத்தில் இருந்த சந்தோஷம் களைந்து போக, "இப்படித் திட்டத் தான் வந்தீங்களா?" எனக் கேட்டாள்.
"ஓஹோ இதுவே திட்டுறதா உனக்கு" என்றான்.
அவள் சோர்ந்து போன முகத்துடன் அமைதியாக நிற்க, அவளின் கையைப் பற்றித் தன்னருகே இழுத்தவனாய் அவளின் கையில் ஒரு கவரை வைத்தான்.
கவரில் இருந்த கடையின் பெயரைப் பார்த்து இன்ப அதிர்ச்சி பொங்க நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
சிரித்த முகமாய், "பிரிச்சி பாரு சுந்தரி" என்றான்.
நேற்று அவன் அவளுக்காகத் தேர்ந்தெடுத்து வைத்திருந்த புடவையை அந்த நெகிழி பையினுள் கண்டு ஆனந்தத்தில் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது அவளுக்கு.
இதழ் சிரிக்கக் கண்களில் கண்ணீர் தேங்க அவன் முகத்தைப் பார்த்தவள் அவன் முழுங்கையைப் பற்றியவளாய் அவன் கையில் தன் முகத்தைப் புதைத்து விம்மினாள்.
"ஹே அழறியா?" அவளின் தாடையைப் பற்றி நிமிர்த்தியவாறு அவன் கேட்க,
"பின்னே அழாம! நேத்து எவ்ளோ ஆசையா இந்தப் புடவையை எனக்கு எடுத்துக் கொடுத்தீங்க. நானே செலக்ட் செஞ்சிருந்த புடவைனாலும் போனா போகுதுனு விட்டிருப்பேன். நீங்க மொத முறையா எனக்காக செலக்ட் செஞ்ச புடவையை அவங்க வேண்டாம்னு சொன்னா நீங்க விட்டுருவீங்களானு அவ்ளோ கோபம் எனக்கு. கோபத்துல எதுவும் பேசி சண்டை வந்துடக் கூடாதேனு தான் நேத்து நைட் உங்ககிட்ட பேசலை" என்றாள்.
எந்த ஒளிவு மறைவுமின்றி மனதில் பட்டதைப் படபடவெனப் பேசும் குணம் அவளுக்கு என்று அவளிடம் பேசிய இத்தனை நாளில் அறிந்திருந்தான் அவன். நேற்று பேசியிருந்தால் நிச்சயமாக அவளின் உணர்வுகள் அனைத்தையும் கோபமாய்த் தன்னிடம் கொட்டி, தானும் அவளைக் கடிந்து பேசும் சூழ்நிலை உண்டாகிச் சண்டையில் தான் முடிந்திருக்கும் என்று சிந்தித்தவனாய்க் களைந்திருந்த அவளின் தலைமுடியைக் கோதி விட்டவன், "என் சுந்தரி ஆசைப்பட்டதை எப்படி நான் வாங்கிக் கொடுக்காம இருப்பேன். அதுவும் நேத்து என் சாக்லெட்டை அவன் பிடுங்கிட்டான்ற மாதிரி என்னை மொறைச்சிக்கிட்டே வேற உட்கார்ந்துட்டு இருந்தியே!" என்று இவன் கிண்டல் செய்ய,
"சும்மா கேலி செய்யாதீங்க. நேத்து எவ்ளோ கடுப்பாகிப் போச்சு தெரியுமா! எனக்குனு எடுத்த எந்தப் புடவையும் எனக்குப் பிடிக்கலை" என்றாள்.
"சரி விடு! அவங்க எடுத்துக் கொடுத்ததுக்காக ஒரு நேரம் போட்டுக்கோயேன்" என்றான்.
"சரி உங்களுக்காகப் போட்டுக்கிறேன்" என்றாள்.
இந்நினைவுகள் எல்லாம் மூடியிருந்த அவளின் கண்களில் ஊர்வலம் போக, மீண்டுமாய் ஒலித்தது அவளின் கைப்பேசி.
கைப்பேசி அழைப்பை அவள் ஏற்றதும், "கோபம் போய்டுச்சா என் பொண்டாட்டிக்கு" எனக் கேட்டான்.
இல்லை என்று அவள் முனகவும்,
நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்று சத்தமாய் அவன் பாட, வாய்விட்டுச் சிரித்தவளாய்,
"உங்களைக் கொஞ்சம் நிறையவே பிடிக்குது செந்தில்" என்றாள்.
"ஆஹான் இன்னும் அந்தக் கொஞ்சம் போகலையா?" என்று சிரித்தான் அவன்.
"நீங்க அதைக் கூட என்கிட்ட சொன்னதில்லை" என்று அவள் குறைப்பட,
"ச்சே நான் உன்னை மாதிரி கஞ்சம் இல்லடா! எனக்கு என் சுந்தரியை எப்பவும் நிறைய நிறையவே பிடிக்கும்" என்று அவன் கூறவும் கண்களும் முகமும் பூரிக்கச் சிரித்திருந்தாள்.
மேலும் சில நிமிடங்கள் ஸ்வீட் நர்த்திங்க்ஸ் பேசியவர்களாய் உறங்கிப் போனார்கள் இருவரும்.
அடுத்து வந்த நாள்களில் கல்யாணத்திற்குரிய சண்டைச் சச்சரவுகளுக்கு மத்தியில் விமர்சையாக நடந்தேறியிருந்தது அவர்களின் திருமணம்.

Last edited:
Author: Dhakai
Article Title: உனதன்பின் கதகதப்பில் 5 & 6
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.