இருபுனலும் வருபுனலும் 14
கோடி கோடியாக, பெட்டி பெட்டியாக லஞ்சம் வாங்கியவர்கள் நிம்மதியாக இருக்கையில் நூறு ரூபாய்க்கும் இருபது ரூபாய்க்கும் ஆசைப்பட்டவர்கள் ஆயுள் முழுமைக்கும் கோர்ட், கேஸ் என்று அலைந்த கதைகளை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். கனகராஜ் அண்ணன் கூட அப்படி யாரையோ பற்றி முன்பு கூறிய ஞாபகம். ராதிகா முன்பு குமார் மற்றும் ரங்கசாமி பற்றிக் கூறுகையில், 'அவங்களுக்கு ஏதாவது பிரச்சனை வரும்போது இன்னொரு சின்ன விஷயத்தை ஊதிப் பெருசாக்குவாங்க.. எல்லாரும் இந்தச் சின்ன விஷயத்தைப் பத்தியே பேசும்போது அவங்க தப்பிக்க நேரம் கிடைக்கும்ல' என்று கூறியது நினைவுக்கு வந்தது.
கன்னம் வைத்துத் திருடுவதையே வழக்கமாகக் கொண்டவன் இறுதி வரை கன்னம் வைத்துத் தான் திருடுவான். கத்தியைக் காட்டித் திருடுபவன், கத்தியைக் காட்டித் தான் திருடுவான் என்று எங்கள் பக்கத்து வீட்டுப் பாட்டி கூறிக் கேட்டிருக்கிறேன். அது போல இந்தக் கூட்டம் அவர்கள் பிரச்சினையைத் திசைதிருப்ப என்னை மாட்டி விட்டிருக்கிறது.
என்னைக் கையும் களவுமாகப் பிடித்ததாகப் பெயர் பண்ணிய அந்த இருவரைத் தவிர மூன்றாவதாக ஒருவர் ஒரு சாவியுடன் வந்து என் டிராயரைத் திறந்தார். ஆம்! நான் தொலைந்து போனதாக நினைத்துக் கொண்ட, என் கைப்படப் பூட்டி கண்ணாடி பீரோவில் வைத்துவிட்டுப் போன அதே சாவி தான். உண்மையாகவே இவர்கள் லஞ்ச ஒழிப்புப் போலீஸ் தானா இல்லை இது ஏதாவது நாடகமா? நான் மன்னிப்புக் கேட்டால் விட்டுவிடுவார்களா? குமாரிடம் வாழ்நாள் முழுவதும் நீங்கள் சொல்வதைச் செய்கிறேன் என்று கெஞ்சினால் ஒருவேளை விட்டுவிடச் சொல்வாரோ? என்றெல்லாம் தோன்றியது.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல என் ட்ராயரிலிருந்து பத்தாயிரம் ரூபாயைக் கைப்பற்றினார்கள். 'இது எப்படி வந்தது?' என்று கேட்டார் ஒருவர். அதையேதான் நானும் கேட்க வந்தேன், இது எப்படி வந்தது என்று.. அதற்குள் அவர் கேட்டு விட்டார். என்ன மாதிரி மனிதர்கள் இவர்கள்.. எப்படியாவது அந்த விசாரணையை நிறுத்திவிட வேண்டும். அதற்காக இப்போதுதான் வேலைக்குச் சேர்ந்த ஒரு அப்பாவியின் வாழ்வில் விளையாடுவது எந்த வகையில் நியாயம்?
கடைசியில் சீப்பை ஒளித்து வைத்ததால் கல்யாணம் நிற்கப் போகிறதா? ராதிகா, ஷாகுல், சரவணன் இத்தனை பேர் எச்சரித்தும் கோட்டை விட்டு விட்டேனே.. என் மூலமாகவே தங்க இடம் ஏற்பாடு செய்து எங்கள் ஊருக்கே போய்த் தங்கிக்கொண்டு இங்கு என்ன வேலை செய்து வைத்திருக்கிறார்கள்.. ரங்கசாமியிடம் சில்லறை இல்லை என்று நேற்று சொல்லியிருக்கக் கூடாதா.. காதல் கைகூடப் போகிறது என்ற மகிழ்ச்சியில் 'பிடி பொற்கிழியை!' என்பதுபோல இருந்த சில்லரையை எல்லாம் பொறுக்கிக் கொடுத்தேனே.. இப்போது இந்த நூறு ரூபாய் என் பணம் தான் என்பதற்கு யார் சாட்சி சொல்வார்கள்? வெளியில் சோவென்று அடித்துப் பெய்த மழையைப் போலவே என் மூளைக்குள்ளும் ஓயாமல் மழை பெய்தது.
ஆனால் எதிர்பாராதவிதமாக சாட்சிக்கு நான் இருக்கிறேன் என்று வந்தாள் ராதிகா. லஞ்ச ஒழிப்புப் போலீசாரிடம் போய், "சார் இது, இந்த 100 ரூபாய் அவர் காசு தான். நேத்து எங்க ப்யூன் ரங்கசாமிட்ட குடுத்தார்.. இப்ப திரும்ப வாங்குறார்.. இந்த ட்ராயர் சாவிய ஒரு வாரமா காணோம்.. வேற யாரோ சாவியைத் திருடிட்டு இதுல பணத்தை வச்சுட்டு அப்புறமா இவரை மாட்டிவிட்டுருக்காங்க. முதல்ல இந்த சாவி உங்களுக்கு எப்படி கிடைச்சது சார்?" என்று அவரிடமே கேள்வி கேட்டாள்.
அதானே. நான் கேட்டிருக்க வேண்டிய கேள்வியாயிற்றே.. என் அப்பாவுக்கு, கண்ணனுக்கு, தங்கத்துக்கு, சத்யாவுக்கு, ராதிகாவுக்கு இருக்கும் தைரியத்தில் ஒரு பத்து சதவீதமாவது எனக்கு இருந்திருக்கக் கூடாதா.. இப்போதாவது தாயேன் கடவுளே என்று கண்மூடி வேண்டினேன். ராதிகா கேட்ட கேள்வி அவரைக் கோபப்படுத்தியிருக்கும் போல.. "ஏம்மா வேலிக்கு ஓணான் சாட்சியா? ரெண்டு பேரும் கூட்டுக் களவாணியா? உன் டேபிள்ல எவ்வளவு இருக்கு.. ஹேண்ட் பேக்குள்ள எவ்வளவு வச்சிருக்க.. பொம்பளைங்க ஜாக்கெட்டுக்குள்ள கூட ஒளிச்சு வச்சுருப்பீங்க.. பொம்பளப் போலீஸக் கூட்டிட்டு வந்து அவுத்துப் பாத்தாத் தெரியும்" என்றார். எனக்குக் காதை மூடிக் கொள்ளலாம் போல இருந்தது.
ராதிகாவின் பின்புலம் தெரிந்து தானே இவ்வளவு பேசுகிறார். இந்தக் காட்சிக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிய குமார் அதையும் சொல்லிக் கொடுக்காமலா இருந்திருப்பார்? எனக்காக இவள் இவ்வளவு அவமானப்பட வேண்டாமே என்று வருத்தமாக இருந்தது. ஆனால் நான் நினைத்ததைவிட ராதிகா சிறந்தவளாக இருந்தாள். சிறந்தவள் என்பதுதான் சரியான வார்த்தையாக இருக்க முடியும்.
"என்ன சார்? என்ன சார் ரொம்பப் பேசுறீங்க? என்கிட்டே என்ன இருக்கு? வாங்க வந்து பாருங்க?" என்று தன் கைப்பையைக் கவிழ்த்துப் போட்டாள். தன் புடவைத் தலைப்பை எடுத்து உதறிக் காட்டினாள். பின் புகைப்படம் எடுத்த இருவரிடமும் திரும்பி,
"நீங்க ரிப்போர்ட்டர் தானே? நிஜமான ரிப்போர்ட்டரா இல்ல.. அந்த டுபாக்கூருங்க அனுப்பி வச்ச இன்னொரு டுபாக்கூரா? எந்த பத்திரிக்கை? ஐடி கார்டை காட்டுங்க.. தைரியமிருந்தால் இதையும் புடிங்க.. இந்தாங்க போட்டோ பிடிங்க" என்று அவர்கள் எதிரில் போய் நின்று தன் தலை முடியை அவிழ்த்து உதறிக் காட்டினாள், புடவைத் தலைப்பை மீண்டும் உதறினாள்.
வந்தவர்களின் கவனம் சற்று சிதற, தலையைத் தூக்கிக் கொண்டை போட்டவள், "முதல்ல எங்க ஆபீசுக்கு வர்றதுக்கு எங்க ஆபீஸர் யாருக்காவது தகவல் கொடுத்தீங்களா? ம்.. சொல்லுங்க" என்று ஆவேசமாகக் கேட்டாள்.
"எம்மா அப்படி எல்லாம் ஒன்னும் உங்க மேலதிகாரி கிட்ட சொல்லிட்டு வரணும்னு அவசியம் இல்லம்மா.. கம்ப்ளைன்ட் ப்ராப்பரா இருந்தாப் போதும்.. அந்த புகார்ல உண்மை இருக்குன்னு தெரிஞ்சா நாங்க ரெய்டுக்கு வரலாம்" என்று வந்தவர்களில் ஒரு அதிகாரி விளக்க,
"யார் இவனா? இவனா கம்ப்ளைன்ட் குடுத்தவன்?" என்று அந்த நூறு ரூபாய் பார்ட்டியைக் காட்டியவள், "இவன் எங்க ப்யூன் கூடச் சேந்து தண்ணி அடிக்கிற தெருப்பொறுக்கி. அது ஒரு ஊதாரி, இது ஒரு நாதாரி. இந்த நாயா உங்களுக்கு ப்ராப்பர் கம்ப்ளைன்ட் குடுத்தது.. அப்ப இப்ப கூப்பிட்டுக் கேளுங்க... எதுக்கான கம்ப்ளைன்ட்னு சொல்லச் சொல்லுங்க.. இந்தத் தம்பி எந்த லெட்டரை எப்படி டைப்படிக்கணும்னே இன்னும் பழகல.. அதுக்குள்ள லஞ்சம் வாங்கப் போகுதாக்கும்? அளந்து விடாதீங்க சார். அருணகிரி சார் யார் தெரியுமா? கலெக்டருக்கு ஈக்வலான ராங்க்ல உள்ளவரு.. அப்பிராணியா ஒரு அதிகாரி இருந்தா அவங்களுக்குக் கீழ நடக்குற டிபார்ட்மெண்ட்ல நுழைஞ்சுடுவீங்களா? நாங்களும் போலீஸ் மாதிரி தான் சார்" என்றபடி அருணகிரி சாருக்கு ஃபோன் அடித்தாள்.
"சார்! இங்க லஞ்ச ஒழிப்புத்துறைன்னு சிலர் வந்து நின்னுகிட்டு பேச்சியப்பன் கைல விலங்கு மாட்டிருக்காங்க சார்.. என்கிட்டயும் ராங்காப் பேசுறாங்க சார்.. நாம காணாம போச்சுன்னு போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணி இருந்தமே ஒரு சாவி.. அதுவும் அவங்க கையில தான் சார் இருக்கு. எனக்கு என்னமோ என்னை ஹராஸ் பண்றதுக்காகவே வந்த குரூப்போன்னு சந்தேகமா இருக்கு.. நீங்க வாங்க சார்.. அப்படியே லோக்கல் போலீஸையும் வரச்சொல்லுங்க சார்" என்றாள். அவள் பேசிய விதத்தைப் பார்த்தால் என்னவோ இந்த ஆபரேஷனே அவளைக் குறி வைத்தது தான் என்பது போலவும் இதில் நான் ஒரு ஓரமாகப் பாதிக்கப்பட்டவன் என்பது போலவும் தோற்றம் வந்தது.
விஜிலன்ஸ் போலீசே குழம்பி விட்டார்கள் போல. "என்னய்யா இது.. உண்மையிலேயே நியாயமான கம்ப்ளைன்ட் தானா? இல்ல இந்த அம்மா ப்ளேட்டை மாத்துதா.. சாவியக் காணும்னு கம்ப்ளைன்ட் பண்ணி இருக்காரா.. இதெல்லாம் அந்த குமார் சொல்லலையே" என்று குழம்பியவர்கள் ராதிகாவை அப்படியே விட்டுவிட்டு என்னை நடத்திச் சென்று காம்பவுண்ட் ஒரமாக நின்றிருந்த அவர்களது ஜீப்பில் ஏற்றினார்கள். மழையில் நனைந்து கொண்டே போனோம். இந்தச் சமயம் என் கண்ணீரும் மழை நீருடன் சேர்ந்து கீழே வழிந்தது.
எங்கள் அலுவலக காம்பவுண்டுக்குள்ளும் மழைத் தண்ணீர் வந்திருந்தது. ரகசிய ஆபரேஷன் என்பதால் ஜீப்பை சற்றுத்தள்ளி தெருவோரமாக நிறுத்தியிருந்தார்கள் போல. அதில் என்னை ஏற்றி வண்டியை ஸ்டார்ட் செய்ய முயல, ஜீப் டயர் சேற்றில் சிக்கிக் கொண்டது.
"ரிப்பேருக்கு விட்டு எடுத்துட்டு வாடான்னா எங்க விட்டுத் தொலைஞ்சியோ.. நேரம் கெட்ட நேரத்துல மக்கர் பண்ணுது" என்று டிரைவரைத் திட்டினார் இந்த டீமின் தலைவர் போல இருந்தவர். உங்க ஆபீஸ்லயே ரெய்டு நடத்தணும் போல என்று நினைத்து சிரித்துக் கொண்டேன். இந்த நேரத்திலும் சிரிப்பு வருவதை நினைத்தால் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எதிரில் தெருவில் நிரம்பி வழிந்து ஓடி வர, வெள்ள நீரில் அருணகிரி சார் ரெயின்கோட்டுடன் தன் மகனின் பைக்கில் விரைந்து வந்து கொண்டிருந்தார்.
வனத்துறை தட்டச்சர் கைது என்ற ஒற்றை வரி ஸ்க்ரோலை நீங்களெல்லாம் பார்த்தீர்களோ இல்லையோ என் ஆருயிர்த் தோழர், சக அறைவாசி, சதாசர்வகாலமும் டிவியும் நியூஸ் பேப்பரும் பார்க்கும் சரவணன் பார்த்திருந்தார். மழை காரணமாக விரைந்து திரும்பியிருந்த ஷாகுலை அழைத்து, "ஜி! இங்க போட்டிருக்கிற நியூஸப் பாருங்க.. இது நம்ம பேச்சியப்பன்னு நினைக்கிறேன்" என்று சொல்லியிருக்கிறார்.
"சேச்சே! இருக்காது" என்று ஷாகுல் சொல்ல, இவர், "ஜி! நூறு ரூபாயைப் ப்யூன் வாங்கினார் இன்னும் குடுக்கலை அது இதுன்னு சொன்னாரு ஜி.." என்று விளக்க, இருவருமாகச் சேர்ந்து என் நம்பருக்கு அழைத்திருக்கிறார்கள். இந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் முதலில் என் ஃபோனை கைப்பற்றி இருந்தது. ஆனால் ராதிகா ஏற்படுத்திய கலவரத்தில் அதை மறந்து வைத்துவிட்டு போய் விட்டது போலும். நான் ஜீப்பில் இருந்த நேரம் என் போன் சத்தமிட, அதை ராதிகா எடுத்து விஷயத்தை அவர்களிடம் சொல்லியிருக்கிறாள்.
ஏற்கனவே குமார் மீதும் எங்கள் அலுவலகத்தின் மீதும் கடுப்பில் இருந்த ஷாகுலும், "இப்போ விட்டா பேச்சியப்பனும் சஸ்பெண்ட் ஆகி எனக்குத் துணையா ரூம்ல வந்து உட்கார்ந்துருவாரு ஜி! வாங்க போவோம், விடக்கூடாது" என்று சரவணனும் கிளம்பி வந்து விட்டனர்.
வழியில் வக்கிலையும், மீன் வளர்ப்பு நண்பர்கள் சிலரையும் ஷாகுல் அழைத்துக்கொள்ள, அரசு ஊழியர் சங்க ஆட்களை சரவணன் அழைத்துக் கொண்டு வந்துவிட ஜீப் ஸ்டார்ட் ஆவதற்குள் எங்கள் அலுவலகம் நிரம்பிவிட்டது. அதன்பின் யார் என்ன பேசினார்கள், என்ன நடந்தது எதுவும் எனக்குத் தெரியாது. என்னை ரேஞ்சர் அறையில் கூட்டிப் போய் அமர வைத்து விட்டார்கள். அலைபேசிகள் ஓயாமல் ஒலித்த சத்தம் மட்டும்தான் எனக்குக் கேட்டது. நடுநடுவே அருணகிரி சார், ராதிகா, ஷாகுல், சரவணன் இவர்களின் குரல்கள் கேட்டன.
இதுவரை நான் கேட்டிராத ஒரு பெரிய மனிதரின் குரலும் கேட்டது. அந்த மனிதர் பேசும் போது வேறு யாரும் குறுக்கே பேசாதது போலத் தோன்றியது. நான்கு மணிக்கு என்னைக் கைது செய்ததில் துவங்கிய படலம் கிட்டத்தட்ட ஒன்பது மணிக்கு முடிந்தது. ஷாகுலும் சரவணனும் என்னிடம் வந்து, "வாங்க ஜி! பிரச்சனை முடிஞ்சுச்சு. போகலாம் ரூமுக்கு" என்க, ஒரு காவலர் வந்து என் ஒற்றை கையில் தொங்கிக்கொண்டிருந்த கைவிலங்கை கழட்டி விட்டார். அந்தக் கையால் ஷாகுலின் கையைப் பிடித்துக்கொண்டு குமுறிக் குமுறி அழுதேன். சரவணன் என் தலையைத் தட்டிக் கொடுத்தார்.
அருணகிரி சார் உள்ளே வந்து, "பேச்சியப்பன்! வாங்க, எந்திரிங்க.. ஆல் இஸ் வெல். எல்லாருக்கும் இட்லி சொல்லியிருக்கேன், சாப்பிட்டுட்டுப் போகலாம்" என்றார். அருகில் ஏதோ வீட்டு மெஸ்ஸிலிருந்து எங்கள் எல்லாருக்கும் உணவு கொண்டு வரச் சொல்லியிருந்தார் போல. என் வாழ்நாளில் அப்படி ஒரு சுவையான உணவை நான் சாப்பிட்டதே இல்லை. எத்தனை இட்லிகளை சாப்பிட்டேன் என்றே தெரியவில்லை. உண்டு முடித்து ஏப்பம் விட்ட போது மழையும் லேசாக வெறித்திருந்தது போல இருந்தது.
"உங்க அருணகிரி சார் அவனை அரெஸ்ட் பண்ணனும்னா முதல்ல என்னை அரெஸ்ட் பண்ணுங்கன்னு சொல்லி ஜீப்லயே ஏறப் போயிட்டாரு பாஸ்! எவ்வளவு பெரிய அதிகாரி! சான்ஸே இல்லை" என்றார் ஷாகுல். அருணகிரி சாரிடம் விடைபெறப் போன நான், அவரது காலில் விழப் போக, "மனுஷங்க யாரும் இன்னொரு மனுஷன் கால்ல விழக்கூடாது. உங்க தேங்க்ஸை ராதிகாவுக்குச் சொல்லுங்க. அன்னையிலருந்து உங்களுக்காக யோசிச்சு யோசிச்சு நிறைய வேலை செஞ்சுருக்காங்க.. அவங்க சொன்னதாலதான் நான் டிராயர் சாவியக் காணோம்னு ஒரு கம்ப்ளைன்ட் பண்ணி வச்சிருந்தேன். இன்னைக்கு எனக்கும், லோக்கல் போலீஸ்க்கும் சொன்னது மட்டுமில்லாமல் சண்முகநாதனுக்கும் போன் அடிச்சிட்டாங்க. அவர் வந்து அவர் பார்த்த விஷயத்தை எல்லாம் விளக்கினார். அப்புறம் இந்தத் தம்பி கூட்டிட்டு வந்த வக்கீலும் நம்ம வண்டவாளம், விஜிலன்ஸ்காரன் வண்டவாளம் எல்லாம் தெரிஞ்சவரா இருந்தார். சங்க ஆட்களும் நல்லா பேசினாங்க. மொத்தத்துல உனக்காக இந்த ஊரே போராடுச்சுப்பா" என்றார்.
நான் நன்றி சொல்ல ராதிகாவைத் தேட, ராதிகாவும் அங்கேயேதான் இருந்தாள். "தேங்க்ஸ் கா" என்றேன் மனதார.
"நாம காப்பாத்தல சார்.. மழை தான் காப்பாத்திருக்கு.. ஜீப் மட்டும் தண்ணிக்குள்ள சிக்கலைன்னா இந்நேரம் தம்பிய ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போயிருப்பாங்க. எஃப்ஐஆர் போட்டுருந்தா கஷ்டம் தானே.. இவ்வளவு மழையிலேயும் இத்தனை பேரு திரண்டு வந்ததிலேயே அசந்துருச்சு அந்த குரூப்" என்றாள்.
சரவணன், "மேடம்! விஜிலன்ஸ்ல இருந்து பொதுவா இப்படி ரெய்டு வர முன்னாடி மேலதிகாரிக்கு இண்டிமேட் பண்ணுவாங்க.. ஒரு தடவை வார்னிங் குடுக்கணும், அப்புறம் கம்ப்ளைன்ட் ஸ்ட்ராங்கா வந்திருக்கணும். இது யாரோ ஒரு ஃபேக் அட்ரஸ் வெச்சு கம்ப்ளைன்ட் வந்த மாதிரி செட் பண்ணி இருக்காங்க. விஜிலன்ஸ் டிபார்ட்மெண்ட் கமிஷனர் வரை பேசிட்டோம். அவர் இப்ப கால் பண்ணி கம்ப்ளைன்ட் பண்ணவர்ட்ட ஃபோனைக் குடுங்கன்னு கேக்க, இங்கே வந்து 100 ரூபாய் குடுத்தாரே அந்த ஆளு எங்கேயோ எஸ்கேப் ஆயிட்டாரு. அப்புறம் லோக்கல் போலீஸ், அந்த ஆள் ஒரு ஏமாத்துக்காரனாச்சேன்னு சொல்ல கடைசில அவங்க கேஸையே ட்ராப் பண்ணிட்டாங்க. எனக்குத் தெரிஞ்சு விஜிலன்ஸ் டிபார்ட்மென்ட்டோட வரலாற்றுல கைல சிவப்பு மையோட பிடிபட்ட ஆளு அப்படியே வீட்டுக்குப் போறதுன்னு பார்த்தா அது எங்க நண்பர் தான்!" என்றார் பெருமையாக. நான் ரகசியமாக என் கையைப் பார்த்துக் கொண்டேன். அதில் இன்னும் இளஞ்சிவப்பு நிறம் ஒட்டியிருந்தது.
"வந்த கம்ப்ளைன்ட்டை மறைக்குறதுலேயும், கம்ப்ளைன்ட் வராதப்பவே வந்த மாதிரி செட் பண்றதுலேயும் கில்லாடியாச்சே இந்த ஆஃபிஸ்காரங்க.. எனக்கு அப்படித்தானே பண்ணினாங்க" என்றார் ஷாகுல். அது குறித்த விவரங்களை அறிந்து கொண்ட அருணகிரி சார், "இப்படிக் கூட நடக்குதா.. இனிமேலாவது நான் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் பண்ணனும். நான் சில விஷயங்களைக் கண்டுக்காம இருக்கறதுனாலேயே அது வேற நிறைய பிரச்சனைகளை உண்டு பண்ணுது போல" என்றார் வருத்தத்துடன். ஒரு பெரிய துறையில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் வருவது வரட்டும் என்று துணிவுடன் தானே இருக்க வேண்டும்.. அப்போது தான் புல்லுருவிகளை அடக்க முடியும். அதனால் அவரை நாங்கள் யாரும் மறுத்துப் பேசவில்லை.
எல்லாம் முடிந்தது. விரைவில் டிரான்ஸ்பர் வாங்கி இந்த ஊரை விட்டுப் போய்விட வேண்டும், இன்றைய விஷயம் என் வீட்டினர் யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறைநண்பர்கள் மூவரும் பேசிக்கொண்டோம்.
"பாத்து பாஸ்! உங்க வீட்ல நம்ம எதிரிகளை ரொம்ப விழுந்து விழுந்து கவனிச்சுரப் போறாங்க" என்றார் ஷாகுல். அவர் கூறிய பின் தான் இந்த குரூப் அங்கே போயிருக்கிறது என்பதே எனக்கு நினைவுக்கு வந்தது. ஏன் இன்னும் அங்கிருந்து போன் வரவில்லை என்று யோசித்தபடியே அன்று உறங்கிப் போனேன். சற்று வெறித்திருந்த மழை மீண்டும் நடு இரவில் பிடித்துக் கொண்டிருக்கும் போல. காலையில் ஒரே வெள்ளக் காடாக இருந்தது.
"சென்னை மாதிரி இப்ப ரெண்டு வருஷமா தூத்துக்குடிலயும் மழைநேரம் வீட்டுக்குள்ள எல்லாம் தண்ணி வந்துடுது. எல்லாம் கட்டுமானங்கள் சரியில்லாததாலயும் ஆக்கிரமிப்புகளாலயும் தான். நெனச்ச இடத்துல கட்டுறாங்க.. இதுல டவுன் பிளானிங் எதுக்கு இருக்கு? பில்டிங் இன்ஸ்பெக்டர் எதுக்கு இருக்காங்க?" என்று ஷாகுலும் சரவணனும் நான் விழிக்கும் போது பேசிக் கொண்டிருந்தனர்.
'இங்கேயே இவ்வளவு மழை பெய்யுதே.. நம்ம ஊர்ல எப்படி இருக்கும்' என்று எனக்கு யோசனை வர, டிவியைப் போட்டேன். 'மேற்குத் தொடர்ச்சி மலையில் வரலாறு காணாத மழை. பாபநாசம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம்' என்று செய்தி ஓடியது. எல்லா அணைகளும் நிரம்பி விட்டதாம், அகஸ்தியர் அருவி மணிமுத்தாறு, குற்றாலம் எல்லா அருவிகளிலும் பயங்கர வெள்ளப்பெருக்கு என்று சொன்னார்கள். என் வீட்டினரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஐபியில் தானே குமார் கோஷ்டி தங்கியிருக்கும், ஒருவேளை அங்கு டவர் கிடைக்குமோ என்று வேறு வழியின்றி அவர்களுக்கும் அழைத்துப் பார்த்தேன். அவருக்கும் இணைப்பு கிடைக்கவில்லை. எப்படியும் பத்திரமாகத் தான் இருப்பார்கள் எல்லாரும் ஒன்றாகத் தானே இருக்கிறார்கள் என்று நான் கொஞ்சம் தைரியமாக இருந்தாலும் மனதில் ஒரு ஓரத்தில் உறுத்திக்கொண்டே இருந்தது.
எங்கே சத்யாவிடம் பேசினால் நேற்று நடந்த விஷயங்களை உளறி விடுவேனோ என்ற பயத்தில் அவளிடமும் அழைத்துப் பேசவில்லை. அன்று முழுவதும் நாங்கள் மூவரும் அறையிலேயே பேசிப் பேசிப் பொழுதைக் கழித்தோம். என்னை இயல்பாக ஆக்க, இதெல்லாம் வாழ்க்கையில் சகஜம் என்று உணர்த்தும் விதமாக இருவரும் பல விஷயங்களைப் பேசியவாறே இருந்தார்கள். சண்முகநாதனைப் பற்றி நான் வியந்து ஏதோ சொல்லப்போக, சரவணன் அவரது அருமை பெருமைகள் பலவற்றைச் சொன்னார். "ஃபாரஸ்ட் மட்டுமில்ல, ட்வாட் போர்டு, கார்ப்பரேஷன், முனிசிபாலிட்டி எந்தத் துறையால குளத்துக்கு, ஆத்துக்கு நஷ்டம்னாலும், தண்ணீர், மணல் திருட்டுன்னாலும் சண்முகநாதன் அங்க நிப்பார். பெரிய பெரிய மாஃபியாக்களால அவர் உயிருக்கு ஆபத்து கூட வந்துச்சு. வெளிநாட்டுல இருக்கிற அவரோட ஒரு பேரனைக் கூட ஒரு தடவை கடத்திட்டாங்க. ஆனா மனுஷன் எதுக்கும் அசரலையே.. " என்று சரவணன் சொல்ல,
"இங்க மீனவர்கள் சப்போர்ட்டும் அவருக்கு நிறைய.. அன்னைக்குப் போனோமே புன்னைக்காயல்.. கழிமுகப் பகுதி. தாமிரபரணி ஆறு கடலில் கலக்குற இடம். அங்க ஒரு ரிசார்ட் கட்ட பிளான் இருந்துருக்கு. அதைக் கூட இவரு முயற்சியில தான் நிப்பாட்டிருக்காங்க" என்றார் ஷாகுல்.
"இத்தனை வயசுல இவர் இவ்வளவு செய்யிறார்னா நான்லாம் இந்த ஆத்தங்கரையிலேயே பிறந்து வளர்ந்தவன். நான் எவ்வளவு செய்யணும், என்ன சார்?" என்றேன் நான்.
"என்ன ஜி! ஓவர் எமோஷன் ஆகுறீங்க?" என்று சரவணன் கேட்க,
"ஆமா சார்! எனக்கு எல்லாமே இந்த ஆறு தான் சார். அது எனக்கு இன்னொரு அம்மா" என்றேன் கண்களில் நீர் மின்ன.

Author: SudhaSri
Article Title: இருபுனலும் வருபுனலும் 14
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.