• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

காதல் காலமிது - ஏக் துஜே கேலியே

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
168
காதல் காலமிது 2

IMG-20250220-WA0000.jpg


அந்த ரிசார்ட்டின் அறையில் படுக்கைக்கு அருகே இருந்த மேஜை விளக்கின் சுவிட்ச்சை அழுத்துவதும் விடுவிப்பதுமாக இருந்தாள் ரித்திகா. வாசலில் அழைப்பு மணி ஒலித்தது.

ஹவுஸ் கீப்பிங்ஆள். “மேடம் எதுவும் பிரச்சனையா? செக்யூரிட்டி இஷ்யூஸ் எதுவும் இருக்கா?” என்றார்.

“இல்லையே! ஏன்?”

“இல்ல, லைட் அடிக்கடி அணைஞ்சு அணைச்சு எரிஞ்சிட்டு இருந்துச்சு. அதான் யாருக்கும் எதுவும் ஆபத்தா, எதுவும் சிக்னல் கொடுக்கறாங்களான்னு பார்க்க வந்தோம். கெஸ்ட் ரெண்டு பேர் கூட கம்ப்ளைன்ட் பண்ணினாங்க” கரிசனத்துடன் கேட்பது போல் வார்த்தைகள் இருந்தாலும், ‘விதிகளின் படி இது சரி வராது, இனிமேல் செய்யாதீர்கள்’ என்ற அறிவுரைத் தொனியே அதிகமாக அதிலிருந்தது.

“ஓகே சாரி! ஏதோ சிந்தனையில் பண்ணிட்டேன்” என்று சொல்லிவிட்டு கதவை அடைத்தாள் ரித்திகா. உஷ் என்று ஒரு பெருமூச்சு வெளியேறியது.

அடைப்பதற்குள் “ஹே ரித்தி! நில்லு!” என்று உள்ளே வந்து புகுந்திருந்தார் செவ்வந்தி சித்தி.

“ஹய்யோ சித்தி! அதான் கிளம்பி வரேன்னு சொன்னேன்ல.. ஏன் சும்மா சும்மா தொணதொணன்னு தொந்தரவு பண்றீங்க”

“கிளம்புறவ? நீ?” என்று அவளை மேலும் கீழுமாகப் பார்த்தார் செவ்வந்தி.

முக்கால் பேன்ட்டும் டி-ஷர்ட்டும் அணிந்திருந்தாள். கூந்தல் மெஸ்சி பன்னாக உருமாறி தலையில் வீற்றிருந்தது.

“எதுக்குடி ஹவுஸ் கீப்பிங் ஆள் வந்துட்டு போனாங்க? ரூம் சர்வீஸ்ல எதுவும் ஆர்டர் பண்ணி இருக்கியா? அங்க வகை வகையா அவ்வளவு சாப்பாடு இருக்கு”

“அது ஒன்னும் இல்ல சித்தி! விடுங்க” என்றவள், மீண்டும் போய் படுக்கையில் உட்கார்ந்து கொண்டாள்.

கை தன்னைப்போல அந்த டேபிள் லாம்ப்பிற்குப் போனது.‌ ஒரு முறை அதை அணைத்து மீண்டும் போட்டவள், ‘ப்ச்.. இது வேலைக்காகாது’ என்று டேபிள் லேம்ப்பின் ஒயரையே கழட்டி வைத்துவிட்டு குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள். அங்கே போய் சுவிட்சை போட்டதும் இன்னும் அதே ஞாபகம் தான் வந்தது.

மித்ரன் பாத்ரூமில் எட்டிப் பார்த்த, அதாவது, அவன் எட்டிப் ‘பார்த்துட்டான் பாத்துட்டான்’ என்று ரித்திகா சத்தமிட்டு காலனியை ஒரு கலக்கு கலக்கிய அந்த நாளுக்கு அடுத்த நாளில் இப்படித்தான் நடந்தது.

இவள் சின்னப் பிள்ளைகளைச் சேர்த்துக்கொண்டு கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தாள்.
யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்ற அளவில் எங்கோ ஒரு மூலையில் இவள் ஒளிந்திருக்க, மெல்ல பூனை போல் யாரோ வந்தாற்போல் இருந்தது. வந்தது தருண் என்று இவள் நினைத்திருக்க, அது அந்த மித்ரன் தான். அப்படியே அந்த ஸ்விட்ச் போர்டில் இவளது தலை படுமாறு இவளை நெருக்கியடித்து வந்து நின்றான். ‘அய்யய்யோ பேட் டச் பண்ணிடுவானோ? நேத்தே பாத்ரூமில் எட்டி பார்க்க பார்த்தான்’ என்று ரித்திகா படபடப்புடன் நிற்க, “ரேப்னா என்னனு தெரியுமா உனக்கு? எனக்கே தெரியாது” என்று ஏதோ சொன்னான். இவள் தலை ஸ்விட்ச் போர்டில் பட்டு அந்தச் சுவற்றுக்கு வெளியே இருந்த விளக்கு எரிந்தது. அது என்னமோ இந்த ஆம்பளைங்க பொம்பளைங்களை மிரட்டும் போது ஒரு சுவர் கரெக்டா அந்த லொகேஷன்ல சிக்கி ருது.

“டேய் யாரோ அங்க ஒளிஞ்சி இருக்காங்க. லைட் எரியுது” என்று தருண் கத்தும் சத்தம் கேட்க, டபக்கென்று தலையை ஸ்விட்சிலிருந்து எடுத்தாள். வெட்டிடுவேன் கீசிடுவேன் சாவடிச்சிடுவேன் என்பது போல் ஏதோ மித்ரன் சொல்ல மீண்டும் இவள் தலை சுவிட்ச் போர்டில் அழுத்தியது.

“டே லைட்டை யாரோ அமத்தி அமுத்தி போடுறாங்க டா”

“அது அப்ப நம்ம பிளேயர் இல்லடா..” என்றான் முதலில் அவுட் ஆகி அவனுடன் நின்று கொண்டிருந்த முகுந்த்.

“போய் தான் பார்ப்போமே” என்று தருண் உள்ளே வந்த நேரம் இன்னொரு வழியாக மித்ரன் நழுவிச் சென்றான்.

“ரித்திகா அக்கா அவுட்டு!” என்று குதூகலித்தான் தருண். ரித்திகா படபடப்பு கொஞ்சம் கொஞ்சமாக அடங்க, மீண்டும் ஆட்டத்தில் இணைந்தாள்.

அதற்குப் பின் இன்று தான் கண்ணில் படுகிறான் அந்த மித்ரன். ஏன் இங்கே வந்திருக்கிறான்? ‘எங்கேயோ அமெரிக்காலியோ ஆப்ரிக்காலயோ இருக்கிறதால்ல சொன்னாங்க. அதுவும் அவனைக் காட்டி இந்த அம்மா குறுகுறுன்னு என்னமோ சித்தி கிட்ட பேசுறாங்க. சித்தியும் அம்மா கைய புடிச்சு சமாதானப்படுத்துற மாதிரி ஏதோ சொல்றாங்க. சம்திங் ஃபிஷ்ஷி’ என்று நினைத்துக் கொண்டாள் ரித்திகா.

“ரித்தி, ரித்தி சீக்கிரம் வா!” என்று சித்தி கூப்பிட முகத்தைக் கழுவி வெளியே வந்தவளிடம்,

“நல்ல டிரஸ்ஸா போடு.. ஆமா
மேனகாவோட கொழுந்தன் மித்ரனை ஞாபகம் உனக்கு?” என்றார்

‘திங்க் ஆஃப் த டேவில்!’ என்று நினைத்துக் கொண்டு திரும்பி, “யாரு? அதெல்லாம் எவனையும் எனக்கு ஞாபகம் இல்லை” என்றாள் ரித்திகா.

நினைவிருப்பதாக வேறு சொன்னால் சித்தி அவனை எப்படி உனக்கு நினைவிருக்கும் என்று கேட்பார்கள். மறக்கக் கூடிய மூஞ்சியா அந்த பரதேசியுடையது? அன்று நடந்தது பெரியம்மாவின் வீட்டில். நிறைய பேருக்குத் தெரியாது. இப்போது அவனைத் தெரியும் என்று சொல்லி அந்தப் பேச்சை ஏன் இழுப்பானேன்?.

“அதாண்டி அமெரிக்காவுல இருக்கானே.. மாசம் 20 லட்சம் சம்பளமாம். பார்க்க ஹீரோ மாதிரி இருக்காண்டி”

“எவனும் எப்படியும் இருந்துட்டுப் போறான். எனக்கு என்ன? வாங்க போகலாம்” என்றபடி சாதாரணமாக ஒரு சுடிதாரை எடுக்க,

“இந்த லெஹெங்காவைப் போட்டுக்கோ ரித்தி” என்றாள் சித்தி பாசமாக.

‘ஏன் வில்லங்கம் வாண்டடா வந்து வண்டியில் ஏறுது?’ என்று ரித்தி சந்தேகமாகப் பார்க்க,

“சும்மாதான் எல்லாரும் கிராண்டா வந்து இருக்காங்கல்ல?”

அந்த ரிசார்ட்டுக்கு இவர்கள் அனைவரும் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக வந்திருந்தனர். ஏதோ டெஸ்டினேஷன் வெட்டிங்காம். தூரத்து உறவினர் வீட்டுத் திருமணம், ஆனால் கட்டாயம் போக வேண்டும் என்று அப்பா சொல்லிவிட்டார்.

ஆனால் கல்யாணத்திற்கு வந்திருந்த அம்மாவின் அக்கா தங்கை தம்பி குடும்பங்கள் மொத்தத்திற்குமான முக்கிய அஜெண்டா இவளது பெரியம்மா மகளான மேனகாவை அவள் கணவன் அர்ஜுனுடன் சேர்த்து வைப்பது. கல்யாணமாகி ஐந்து வருடமாகி விட்டது, மூன்று வயதில் ஒரு மகன். இப்பொழுது இரண்டு பேரும் விவாகரத்து செய்து கொள்ளப் போகிறோம் என்று நிற்கிறார்கள். பொதுவாக விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் தம்பதியர், ஒரு பிள்ளை இருந்தால் அந்த பிள்ளை எனக்குத் தான் வேண்டும், உனக்குத்தான் வேண்டும் என்று மல்லுக்கட்டுவார்கள்.

இவர்களானால், ‘பிள்ளையை நீ கொண்டு போ, ஏன் நீ கொண்டு போறது? நான்தான் கொண்டு போகணுமா?’ என்று சண்டை போடுகிறார்கள். ‘பைத்தியங்கள்! இதுக எல்லாம் ஏன் கல்யாணம் பண்ணுதுங்க? பிள்ளை பெத்துக்குதுங்க? ரெண்டு பேருக்கும் வேண்டான்னா பேசாம நான் தூக்கிட்டு போய் வளர்க்க போறேன் அந்த செல்ல குட்டி சுபிக்ஷனை வச்சுக்கிறதுக்கு கசக்குமா என்ன?’ முணுமுணுப்புடன் கிளம்பினாள் ரித்திகா.

இவர்களுடையது இரண்டு படுக்கைகளை மட்டுமே கொண்ட சாதாரண அறை. பஞ்சாயத்து செய்பவர்கள் மற்றும் பஞ்சாயத்தில் பிராது கொடுத்த வாதி, பிரதிவாதிகளின் அறைகள் எல்லாம் சூட் ரூம்கள். அதில் சொம்பு, ஜமுக்காளம் எல்லாம் வைக்க வசதியாக ஒரு ஹால் இருந்தது. அங்கிருந்துதான் சித்தி ஏதோ செய்தியைக் கொண்டு வந்திருக்கிறாள். அதற்கும் அந்த அமெரிக்கா காரனுக்கும் என்ன சம்பந்தமோ, அவன் ஏதோ பூனைக்குட்டியுடனோ நாய் குட்டியுடனோ திரிந்து கொண்டிருந்தானே என்று நினைத்தபடி எந்த வித ஒப்பனையும் இன்றி, ஃப்ரீஹேரில், “போகலாம் சித்தி” என்று வந்தவளை அதிர்ச்சிப் படுகுழிக்குள் தள்ளினார் செவ்வந்தி சித்தி.

“உங்க அக்கா, அந்த அரை லூசு மேனகா என்ன தெரியுமா சொல்லுது?” என்று கேள்வி கேட்டு சற்றே இடைவெளி விட்டார்.

மேனகா ரித்தியின் பெரியம்மா மகள். அதிரடிக்குப் பெயர் போனவள். ஆனால் அவள் சொல்லுக்கு குடும்பத்தில் ஏகப்பட்ட மரியாதை.

“மேனகா அர்ஜுன் கூட சேர்ந்து வாழ ரெடியாம். ஆனா அவ கொழுந்தன் மித்ரனை நீ கட்டிக்கணுமாம்”

“வ்வ்வ்வாட்ட்ட்!”

அதிர்ச்சி
அடைந்தாள் ரித்திகா. அவளது எச்சிலே அவள் தொண்டைக்குள் சிக்கிப் புறையறிக் கொண்டது.
 
Top Bottom