பகலிரவு பல கனவு -18
சம்யுக்தாவை அவளது வீட்டுக்கு அருகே இறக்கி விட்ட பிரபாகரன் அவள் வீட்டினுள் சென்ற பின்பும் அங்கேயே நின்றிருந்தான். இன்றைய நிகழ்வுகள் அவனுக்குள் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது. இப்போதெல்லாம் அவனது தந்தை அடிக்கடி அவனது திருமணம் பற்றிப் பேசுகிறார். அவர்களின் சமூகத்தில் ஆண்களுக்கு இருபத்தாறு வயதுக்குள் திருமணம் செய்து வைப்பது என்பது நடைமுறையாக இருந்தது. பிரபாகரனோ அந்த வயதைக் கடந்து விட்டான். சம்யுக்தா படித்து முடிக்கும் வரை காத்திருப்பது என்றால் இன்னும் இரண்டு வருடங்கள் கடந்துவிடும்.
மலர்விழி இந்த வருடம் படிப்பை முடித்து விடுவாள். ஆணுக்கே இருபத்தாறு எனும் போது மலர்விழி திருமண வயதை இப்போதே தாண்டி விட்டாள். முன்பெல்லாம் பதினாறு வயதில் நடந்த திருமணம், இப்போது எப்போது பதினெட்டாகும் என்று காத்திருந்து நடத்தி வைக்கப்படுகிறது. சில குடும்பங்களில் மட்டுமே பெண்கள் கல்லூரியில் அடியெடுத்து வைக்கிறார்கள். படிப்பே அதிகம் எனும் போது வேலைக்குச் செல்வதெல்லாம் பெண்களின் புகுந்த வீட்டினைப் பொறுத்தே அமையும்.
ஆகையால் சீக்கிரம் தன் கல்யாணம் பற்றிய ஒரு முடிவுக்கு வந்தால் நல்லது என்று காலையில் கிளம்பும் போதே நினைத்துக் கொண்டான் பிரபாகரன். சம்யுக்தாவின் தந்தையைச் சந்திக்க நேர்ந்தால் அவரை எப்படி எதிர்கொள்வது, என்ன பேசுவது என்று மனதுக்குள் ஒரு ஒத்திகை பார்த்து விட்டே கிளம்பினான்.
எப்படியும் ஒரு நாள் தங்களது உறவை பெற்றோருக்கு அறிவிக்கத் தானே வேண்டும். அது சம்யுக்தாவின் பிறந்த நாளாக இருந்தால் ஆரம்ப கட்ட சேதாரம் குறைவாக இருக்கும் என்று கணக்கு போட்டான். ஆனால் நடந்ததோ வேறு. கண்ணனுடன் பேசும் வாய்ப்பு கிடைக்காமல் போனதோடு அவர் என்ன நினைத்தார் என்று அவரது முகபாவனையில் இருந்து அறிவதற்கான வாய்ப்பு கூட கிடைக்கவில்லை.
ஆனாலும் அவரது கூரிய பார்வையில் இருந்து இது நட்பைத் தாண்டிய உறவு என்பது அவர் நிச்சயம் கணித்திருப்பார் என்று பிரபாகரன் உறுதியாக நம்பினான். அவரது அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று அவன் யோசிக்க வேண்டியிருந்தது. கடைக்குச் சென்றால் அங்கே உள்ளவர்களுக்கு சம்யுக்தாவுக்கும் இவனுக்கும் இடையே நிலவும் காதல் தெரியும். கூடவே இன்று சம்யுக்தாவின் பிறந்த நாள் பற்றியும் இருவரும் ஊர் சுற்ற முடிவு செய்ததும் தெரியும். இப்போது அங்கே சென்றால் இவனைக் கேலி செய்தே ஒரு வழி செய்துவிடுவார்கள் என்று நினைத்தவன் நேராக வீட்டுக்குச் செல்ல முடிவெடுத்தான்.
“என்றென்றும் புன்னகை“ என்று வாய்விட்டுப் பாடிக்கொண்டே புல்லட்டை ஓட்டியவனை, ‘பெரிய மேடின்னு மனசுக்குள்ள நினைப்பு. இதெல்லாம் உனக்கே ஓவரா இல்லையாடா’ என்று மனசாட்சி காரி துப்பியது. ‘என் ஆளுக்கு நான் தான் மேடி.. நீ கொஞ்சம் அடங்கியே இரு’ என்று மனசாட்சியை அடக்கியவன் தொடர்ந்து பாடிக்கொண்டே சென்றான்.
“ஓ….. என்னுயிரே
ஓ….. என்னுயிரே
ஓ….. என்னுயிரே
ஓ ஓ ஓ….. என்னுயிரே”
உற்சாகத்துடன் பாடிக்கொண்டே வீட்டினுள் அடியெடுத்து வைத்தவனின் கன்னத்தில் பளாரென்று விழுந்த அறை சட்டென்று வாய் மூட வைத்தது. சற்றும் எதிர்பாராமல் விழுந்த அறையில் கன்னத்தைப் பிடித்துக்கொண்டு கோபத்துடன் நிமிர்ந்தான் பிரபாகரன். எதிரில் நின்ற தந்தையின் கோப முகம் பார்த்து யோசனையில் ஆழ்ந்தான். இப்போதெல்லாம் தந்தையுடன் அவன் பேசுவதே இல்லை என்பதால் எதற்கு அடித்தார் என்று கேட்கவும் இல்லை. தந்தையை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்தான்.
அதைக் கண்ட காமாட்சியின் மனம் இருதலைக் கொள்ளியாகத் தவித்தது. கோபத்தில் குதிக்கும் கணவரைச் சமாதானம் செய்வதா இல்லை மகனுக்காகப் பேசுவதா என்று புரியாமல் தவித்தார். ஆனால் அவரது மாமியார் அப்படி இல்லை. கோபத்தில் கண்மூடித்தனமாகக் கத்திய மகனுக்குச் சரியாக பதில் சொல்லிக்கொண்டே இருந்தவர் மூர்க்கத்தனமான மகனின் செயலில் பொங்கி விட்டார்.
“அய்யோ! அய்யோ! அய்யோ! இந்த அநியாயத்தைக் கேட்க ஆளே இல்லையா? தோளுக்கு மேல வளர்ந்த புள்ளையக் கை நீட்டி அடிக்கிறானே! எலே உனக்கு புத்தி பிரண்டு போச்சா? அவன் என்ன தப்பு செஞ்சுட்டான்னு இப்படி அடிக்கிற? அவன் திருப்பி அடிக்க மாட்டான்ற தைரியம் தானே உன்னைக் கை நீட்ட வச்சிருக்கு. பெத்தவன்னு மரியாதை வச்சுருக்கிறதால எம்பேரன் அடி வாங்கிட்டு அமைதியா நிக்கிறான். இதுவே வேறொரு பையனா இருந்தா இங்கே நடக்கிறதே வேற. வெட்டிப் பயலுகளோட சேர்ந்து வெட்டியா பொழுது போக்கினா இப்படி ஆகாத யோசனையெல்லாம் தான் வரும். எம்பேரன் என்ன உன்னை மாதிரியா? வீட்டுக்காக மாடா உழைக்கிற பிள்ளைய இத்தனை நாளும் வாயால வதைச்ச, இப்போ கை நீட்ட ஆரம்பிச்சாச்சா? அய்யோ! நான் என்ன செய்வேன்? ஏ காமாட்சி! நீ என்ன திருதிருன்னு முழிச்சிட்டு நிக்கிற? உம்புருஷனை எப்படி சமாதானம் பண்றதுன்னு யோசிக்கிறியோ? இங்க அடிவாங்கி நிகழ்கிறது உம்மவன். மசமசன்னு நிக்காம போ.. அவனுக்குக் கொஞ்சம் காப்பித் தண்ணியக் கண்ணுல காட்டு.”
மகனை வெளுத்து வாங்கியவர் கணவரின் செயலைக் கண்டிக்காத மருமகளையும் விட்டு வைக்கவில்லை.
கூடவே, பேரனைக் கவனிக்கவும் மறக்கவில்லை. அவன் கன்னத்தைத் தடவிக் கொடுத்தவர், “அய்யா! ராசா! உங்கப்பன் ஒரு புத்தி கெட்டவன். அவன் அடிச்சிட்டானேன்னு விசனப்படாத. இங்க வா, இப்படி உட்காரு. ஏ புள்ள மலரு கொஞ்சம் ஐஸ் கட்டியை எடுத்துட்டு வா” பேரனை அழைத்துச் சென்று அங்கே இருந்த சோஃபாவில் அமர வைத்துத் தானும் அருகில் அமர்ந்து கொண்டார்.
உள்ளுக்குள் எரிமலையாகக் குமுறினாலும் வெளியே எதையும் காட்டாமல் அமைதியாக அமர்ந்து கொண்டான் பிரபாகரன். முருகானந்தம் மகனையும் தாயையும் முறைத்துக் கொண்டே நிற்க காமாட்சியின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. கணவரையும் மகனையும் மாறி மாறிப் பார்த்தார். அதைக் கண்ட அப்பத்தா தலையில் அடித்துக் கொண்டு எழுந்து வந்தார்.
“ஏ காமாட்சி! நான் என்ன சொன்னேன் நீ என்ன செஞ்சிட்டு இருக்க” என்று மருமகளை உலுக்கி நிகழ்வுக்குக் கொண்டு வந்தார். மாமியாரைப் பரிதாபமாகப் பார்த்த காமாட்சி கணவரைக் கண்டு தயங்கித் தயங்கி சமையலறை நோக்கித் திரும்பினார்.
கொஞ்சம் கொஞ்சமாக முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டு இருந்த முருகானந்தத்தின் கோபம் மொத்தமும் காமாட்சியிடம் திரும்பியது.
“நில்லு காமாட்சி. இப்போ அவசியம் உம்மகனுக்கு காப்பி வேணுமோ? நான் இவ்வளவு நேரம் தொண்டை கிழிய கத்திட்டு இருக்கேன். என்னை ஒரு ஆளாக் கூட இங்கே யாரும் நினைக்கலை. சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டா அவன் தான் வீட்டுக்கு பெரிய மனுஷன்னு ஆகிடுமா? பெத்தவனுக்கு மரியாதை தராத மனுஷனெல்லாம் எதுல சேர்க்கிறது? நாலு காசு பார்க்கிறதுக்கு நாய் படாத பாடு படும்போதே துரைக்கு இத்தனை ஏத்தம். இதுல நிறைய படிச்சிட்டு பெரிய வேலைக்குப் போயிருந்தா நீ யாருன்னு கேட்டிருப்பான். ஆனாலும்…”
இன்னும் என்னென்ன பேசியிருப்பாரோ தெரியாது. “இன்னும் ஒரு வார்த்தை வாயைத் திறந்து பேசினா நடக்குறதே வேற. எம்புள்ள என்ன படிக்க மாட்டேன்னு சொன்னானா? வக்கனையா மூணு வேளை வகை வகையா திங்குறீங்களே அது என்ன நீங்க சம்பாதிச்சதா? விடியல்ல எழுந்து உருப்படாத நாலு பேரோட நேரம் போறதே தெரியாம ஊர் வம்பு பேச வேண்டியது . சாப்பாடு நேரத்துக்கு தவறாம வீட்டுல வந்து கொட்டிக்க வேண்டியது. இதைத் தானே நான் கல்யாணம் கட்டிட்டு வந்த நாளா செய்றீங்க? ஏதோ பெரியவங்க சேர்த்து வச்ச சொத்து இருந்ததால பொழச்சோம். அதையும் உங்க பாசமலருக்கு வாரி வழங்கி.. போதும் சாமி. போதும். நீங்க செஞ்சதெல்லாம் போதும். ஏதோ எம்மகன் தலையெடுத்து நாலு காசு பார்க்கிறான். உழைக்கிற பிள்ளைய கரிச்சுக் கொட்டாம போங்க.”
இத்தனை நாள் ஆதங்கத்தை வார்த்தைகளாகக் கொட்டி விட்டார் காமாட்சி.
முருகானந்தம் திகைத்து நிற்க, அப்பத்தா மருமகளின் புதிய அவதாரத்தில் வாய்பிளந்து நின்றார். பிரபாகரனிடம் எந்த எதிரொலியும் இல்லை. இனியும் கோபப்பட்டால் வேலைக்கு உதவாது என்று முடிவு செய்த முருகானந்தம் மனைவியிடம் தழைந்து போக முடிவு செய்தார்.
“காமாட்சி! காமாட்சி! நீயா இப்படி எல்லாம் பேசுற? கொஞ்சம் கோபப்படாமல் நான் சொல்றதைக் கேளு. நம்ம பையன் நல்லா இருக்கணும்னு தான் நானும் நினைக்கிறேன். நல்லா யோசிச்சுப் பாரு, தறுதலையா திரிஞ்சவன் ஏதோ உருப்படியா ஒரு வழி தேடி சம்பாதிக்கிறான். அவனுக்கு ஒரு நல்லது நடக்கணும்னு நான் பாடுபடறேன். ஆனால் கடை வேலையை விட்டு ஏதோ ஒரு பொண்ணு கூட ஊர் சுத்திட்டு வரான். கல்யாண வயசுல வீட்டில ஒரு தங்கச்சியை வச்சிகிட்டு செய்யற காரியமா இது? ஒரு பெத்த தகப்பனா இதைக் கேட்க எனக்கு உரிமை இல்லையா? நீயே சொல்லு காமாட்சி”
பிரபாகரன் யாரோ ஒரு பெண்ணை நேசிக்கிறான் என்று வீட்டுப் பெண்கள் அரசல் புரசலாக அறிவார்கள். ஆனால் இது வரை அந்தப் பெண்ணின் விவரங்கள் தெரியாது. இவர்களும் கேட்டதில்லை அவனும் சொன்னதில்லை. நேரம் வரும் போது அவனே சொல்லுவான் என்று காத்திருந்தார்கள். ஆனால் அவன் அவளுடன் ஊர் சுற்றினான் என்பது புதிது. யார் யார் கண்ணில் பட்டார்களோ தெரியவில்லையே என்று தோன்றியது. இதையெல்லாம் யோசித்து காமாட்சி மௌனமாக நின்றார்.
“பாத்தியா, உனக்கே சங்கடமா இருக்குல்ல. நம்ம முனியப்பன் சொல்லும் போது எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? புல்லட்ல இரண்டு பேரும்… சே.. சே.. எத்தனை பேர் பார்த்தாங்களோ? அவன் சொல்லும் போது எனக்கு உடம்பெல்லாம் கூசிடுச்சு. என்னடா இப்படி..?”
“ஓ.. உன் உத்தம சிநேகிதன் அந்த முனியப்பன் சொன்னா சரியாத்தான் இருக்கும். அவன் சொன்னான்னு நீ வந்து இங்க பஞ்சாயத்து வைக்கிற. காலம் போன காலத்தில மக வயசுல இருக்கிற புள்ளைய கல்யாணம் கட்டிகிட்டு வந்த பரதேசி, அவன் சொன்னானாம், இவன் பெத்த மகன அடிக்க கிளம்பிட்டான். இங்க பாரு முருகா! அறுவது வயசுல ஆத்தா கையால அடி வாங்குன ஆம்பளைன்னு பேர் வாங்கிடாத. எனக்கு எம்பேரன் மேல நம்பிக்கை இருக்கு. அவனுக்கு ஒரு புள்ளையப் பிடிச்சிருந்தா அது தங்கமான பொண்ணா தான் இருக்கும். தகப்பனா லட்சணமா கல்யாணத்தை எப்படி நடத்தி வைக்கிறதுன்னு யோசி. உன்னை பிடிக்கலேன்னா ஒரு ஓரமா நில்லு, நான் நடத்திக்கிறேன்.”
தாயும் மகனும் மாறி மாறிப் பேச காமாட்சியின் மனம் கணவர் சொன்ன ஒரு புள்ளியில் உழன்றது. பிரபாகரனின் திருமணம் மலர்விழியின் வாழ்க்கைக்கு தடையாக இருக்குமோ என்று குழம்பிப் போனார். அதன் விளைவு யாரும் எதிர்பாராத விதமாக அமைந்து விட்டது.
இங்கே நிலவரம் கலவரமாக இருக்க, சம்யுக்தாவின் வீட்டில் பூரண அமைதி நிலவியது. சரண்யாவின் நிலை நெருப்பில் அமர்ந்திருப்பது போலிருந்தது. பாரதியும் கண்ணனும் பார்வையில் பேசிக் கொண்டார்களே தவிர வெளியே ஒரு வார்த்தையும் வரவில்லை. இதற்கு மேலும் தான் அங்கே இருப்பது சம்யுக்தாவிற்கே நல்லதல்ல என்று உணர்ந்தவள் மெல்ல எழுந்தாள்.
“நான் கிளம்பறேன் ஆன்ட்டி. அம்மா தேடுவாங்க” என்று பாரதியிடம் சொன்னவள் தோழியைப் பார்த்து ஒரு தலையசைப்புடன் கிளம்பி விட்டாள். அதுவரை இருந்த ஒரு பாதுகாப்பு கவசம் நீங்கியது போல உணர்ந்தாள் சம்யுக்தா. ‘ஸ்டார்ட் மியூசிக்!’ என்பது போலப் பெற்றோரைப் பார்த்தாள்.

Author: SudhaSri
Article Title: பகலிரவு பல கனவு -18
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.