நான் போடுற கோட்டுக்குள்ளே - 17
"ஹூம்.. மனுஷாளைப் பார்த்தா ரொம்ப நல்ல மாதிரியா தெரியறது. எத்தனை ஒத்துமையான குடும்பம். இந்தக் காலத்தில் இப்படி ஒரு பையனும் குடும்பமும் கிடைக்கறது ரொம்ப கஷ்டம். தானா இஷ்டப்பட்டு இந்தப் பொண்ணு வேணும்னு வர்றவாளுக்கு, கண்டிஷன் மேல கண்டிஷனா போட்டு துரத்தி விட்டிருக்க வேண்டாம். என்ன பதிலைச் சொல்லப் போறாளோ.. தெரியலையே.
எங்க காலத்துல எல்லாம் கல்யாணம் பண்றச்சே நல்லது கெட்டது சொல்லித் தர்றதுக்குப் பெரியவா ஆத்துல இருந்தா பெரிய கொடுப்பினைன்னு நினைச்சிண்டு இருந்தோம். இப்போ.. எல்லாம் தலைகீழா மாறிப் போயாச்சு. பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டா அவனைப் பெத்தவா உயிரோட இருக்கக் கூடாதுன்னு சட்டம் கொண்டு வந்தா கூட ஆச்சர்யப்படறதுக்கில்லை… ஹூம்.. "
சம்பத் வீட்டினர் கிளம்பியதில் இருந்து ஆரம்பித்த பத்மாசனியின் புலம்பல் நேரம் செல்லச் செல்ல கூடியதே ஒழிய குறைந்தபாடில்லை.
பாட்டியின் புலம்பல்களைக் கேட்ட சுபிக்ஷா, ஒரு முகச் சுளிப்புடன் அவளது அறைக்குள் சென்றுவிட, மாமியாருக்குப் பதிலடி கொடுக்கும் விருப்பம் இல்லாமல் கணவனை நோக்கி நெற்றிக் கண்ணைத் திறந்தாள் அனுராதா. மனைவியின் முறைப்பை வாங்கிக்கொண்டு தாயின் வாயை மூடும் முயற்சியில் இறங்கினார் ரங்கராஜன்.
"அம்மா! கொஞ்சம் வாயை மூடிண்டு பேசாமல் இருக்கியா? காலம் ரொம்ப மாறிப் போச்சு மா. இன்னும் எங்க காலத்திலன்னு பேசலேன்னா என்ன? இப்போ எல்லாம் யாரையும் சட்டுன்னு நம்பிட முடியாது. நாலாயிரம் விதமா யோசிச்சு தான் எதையும் முடிவு பண்ண வேண்டியதா இருக்கு. நாங்க இரண்டு பொண்ணைப் பெத்தவா. எங்களோட வயசான காலத்துல அவா தான் எங்களுக்கு ஆதரவா இருக்கணும். இதெல்லாம் நோக்குப் புரியாதும்மா." வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசிய மகனுக்கு பத்மாசனி பதில் கொடுக்க மறக்கவில்லை.
"நீ சொல்றது தான் சரின்னே வச்சுப்போம். மாப்பிள்ளை பையனையும் அவாத்து மனுஷாளையும் பொறுத்து தானே உன் பொண்ணோட ஆதரவு இருக்கும். அவா தங்கமான மனுஷாளா இருக்கா. அந்தப் பையன் நிச்சயம் நம்ம கிட்ட அனுசரணையா நடந்துப்பான். அப்படி ஒரு குடும்பத்தைக் கல்யாணம் ஆன கையோட பிரிக்கணுமா? அந்த சம்பத் ஆத்துக்கு ஒரே பிள்ளை. ஒரே ஊர்ல இருந்துண்டு அவனைத் தனிக்குடித்தனம் போய்த்தான் ஆகணும்னு சொல்ல முடியுமா? அப்படி பண்ணினால் அந்தப் பையன் எந்த அளவுக்கு நம்ம கிட்ட ஒட்டுதலா இருப்பான். இதையெல்லாம் கொஞ்சம் கூட யோசிக்க மாட்டேளா?" பாயிண்ட் பாயிண்டாக எடுத்து விட்ட தாய்க்குப் பதிலளிக்க முடியாமல் பின்வாங்கி விட்டார் ரங்கராஜன்.
"எனக்கும் பழசெல்லாம் நன்னாவே ஞாபகம் இருக்கு, என் காலத்திலேன்னு ஆரம்பிச்சு பாயிண்ட் பாயிண்ட்டா பேசவும் தெரியும். உங்க பிள்ளை கூட வெளியூர்ல தான் வேலை பார்த்தார். ஆனால் நீங்க என்ன பண்ணினேள்?
அவன் வாரா வாரம் வந்துடுவான், மாட்டுப் பொண்ணு எங்களோட இருக்கட்டும்னு யாரையும் கேட்காமலே தீர்ப்பு சொல்லிட்டேள். எங்க அம்மா அப்பாவும் உள் விவகாரம் புரியாமல் தத்தியாட்டம் தலையாட்டினா. பெரிய ராவ் பகதூர் பரம்பரை மாதிரி, ஆத்து வழக்கம் எல்லாம் பழகணும்னு கொஞ்சப் பாடா படுத்தினேள். எல்லாரும் அதே மாதிரி இருப்பான்னு நான் சொல்லலை. அவா நல்லவாளாவே இருக்கட்டும். அதுக்காக நாங்க போய் பொண்ணோட மாமியார் ஆத்துல போய் உட்கார்ந்துக்க முடியுமா?." பட்டுத் தெறித்தாற் போல மாமியாருக்குப் பதில் கொடுத்தாள் அனுராதா.
"ஏன்? அப்படி இருந்தால் என்ன தப்பு? எல்லாரும் ஒரே குடும்பம்னு மனசார நினைச்சால் எல்லாம் சாத்தியம் தான். இரண்டு பிள்ளைகள் இருந்தாலும்
உங்க அம்மா கடைசி காலத்தில் உன் கூட தானே இருந்தா. என் பிள்ளை அவாளுக்கு மாப்பிள்ளையாவா நடந்துண்டான். பெத்த தாய்க்குச் செய்யற மாதிரி மாமியாருக்கு சிசுரூஷை பண்ணைலையா? உங்க அம்மா ஒரு குறையும் இல்லாமல் திவ்யமா இந்தாத்துல இருந்தாளே.. இதெல்லாம் ஒரு விஷயம்னு பெரிசா பேச வந்துட்டா.."
மூச்சு வாங்கியதால் சற்று இடைவெளி விட்ட பத்மாசனி, "ஓ.. இப்போ தான் நேக்கு நன்னா புரியறது. மாமியாரைக் கவனிக்கற ஜோர்ல என் பிள்ளை என்னை ஒரு நாள் ஒரு போழுதாவது எப்படி இருக்கேன்னாவது கேட்டிருப்பானா? எனக்கெங்கே அந்தக் கொடுப்பினை எல்லாம்? என் பிள்ளையை மாதிரி அந்தப் பிள்ளையாண்டானும் பெத்தவாள மறந்துட்டு மாமியார் மாமனாருக்கு சேவகம் பண்ணனும்னு எதிர்பார்க்கறேளா? கலிகாலம்கறது சரியாத் தான் இருக்கு" என்று தோளில் முகவாயை இடித்துக் கொண்டார்.
"ஹான்… நீங்க சொன்னா அப்படியே ஒத்துக்க வேண்டியது தான். ஆனால், நாங்க ஒன்னும் அம்மா அப்பாவை மொத்தமா மறந்துடணும்னு சொல்லலை. தனியா இருந்தால் தான் எங்களுக்கு சங்கோஜம் இல்லாமல் இருக்கும்னு தான் சொல்றோம். அப்புறம் என்ன சொன்னேள்? எங்க அம்மா திவ்யமா இருந்தாரா? நன்னா இருந்தாளே.. எங்க அம்மா.. நினைச்ச நேரத்தில ஒரு வாய் காப்பி போட்டுக் குடிக்க முடியாம. சம்பந்தின்னு என்னைக்காவது துளி மரியாதை கொடுத்திருக்கேளா? ஏதோ அகதி மாதிரி போக்கிடம் இல்லாமல் பொண்ணாத்துக்கு வந்த மாதிரி ட்ரீட் பண்ணிட்டு இன்னைக்கு வாய்க்கு வந்ததை பேசப்படாது." பல வருடங்களாக அடைத்து வைத்திருந்த ஆற்றாமை எல்லாம் வெளிவந்துவிட்டது.
மாமியாரும் மருமகளும் நீயா நானா என்று நேரடியாக மோதிக் கொண்டதோடு அல்லாமல் அவரது தலையையும் சேர்த்தே உருட்டியதில் அரண்டு போனார் ரங்கராஜன். மனைவியின் ஞாபக சக்தியை எண்ணி
"கல்யாணம் ஆன நாள் தொடங்கி, எங்க அம்மா அப்பா கிட்ட உங்க பிள்ளை எப்படி நடந்துண்டார்னு உங்களுக்கு வேணா மறந்து போயிருக்கலாம்.. நேக்கு மறக்கலை.. மறக்கவும் மாட்டேன். ஏன்னா எனக்கும் என்னைப் பெத்தவாளுக்கும் ஏற்பட்ட அனுபவம், என் பொண்களுக்கும் அவாளைப் பெத்தவாளா எங்களுக்கும் வரவிடமாட்டேன். அதுக்கு தான் இத்தனை முன்னேற்பாடும் பண்ணின்டு இருக்கேன். என் பொண்கள் கல்யாணத்தை நான் பார்த்துக்கறேன். நீங்க பெரியவாளா லட்சணமா ஆசிர்வாதம் பண்றதுக்கு மட்டும் வாயைத் திறந்தால் போதும்."
புயலடித்து ஓய்ந்தது போல இருந்தது பத்மாசனிக்கு. மருமகளுக்குப் பதில் கொடுக்க வேண்டும் என்று துடித்தாலும் ஒரு பக்கம் அவள் சுட்டிக் காட்டிய சில பழைய விஷயங்கள் அவரது வாயைக் கட்டிப் போட்டன.
"பெத்தவாளுக்கே இல்லாத அக்கறை நேக்கெதுக்கு? எப்படியோ எல்லாம் நல்ல படியா நடந்து குழந்தைகள் நன்னா இருந்தா சரி தான்" என்று நாசூக்காக முடித்துக் கொண்டு அவரது அறைக்குள் நுழைந்து கொண்டார். அவருக்குத் தான் அடுத்து ஒரு முக்கியமான வேலை இருக்கிறதே! இங்கே நடந்த விஷயங்களை பெண்களுக்கு ஒலிபரப்ப வேண்டாமா?
"ஷப்பா!!" என்று தலையை உலுக்கிக் கொண்டபடி மகளது அறைக்குள் நுழைந்தாள் அனுராதா. மகள் இருந்த கோலத்தைக் கண்டு சிரிப்பில் மலர்ந்தது தாயின் முகம். வீட்டில் இருக்கும் போது சுபிக்ஷாவை ஒரு கேப்ரி, லாங் ஸ்கர்ட் மற்றும் டிஷர்ட்ட் அல்லது ஒரு கவுனில் தான் பார்க்க முடியும். கல்லூரி, அலுவலகம் என்று போகும் போது கூட வெஸ்டர்ன் உடைகளுக்கு தான் முன்னுரிமை.
அவளைப் பொறுத்தவரை சுடிதார் வகையறா எல்லாம் பாரம்பரிய உடையில் சேர்ந்தது. திருவிழா நாட்களில் அணிய வேண்டியது. அவளைப் பொறுத்தவரை புடவை எல்லாம் ஆன்ட்டிக்கள் மட்டும் பாட்டிகளின் உடை. இத்தனைக்கும் அனுராதா இந்திய தேசத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று விதம் விதமான புடவைகளை வாங்கி மகளுக்காக அடுக்கி வைத்திருந்தாள்.
மகளோ அதையெல்லாம் கண்ணால் பார்த்ததோடு சரி, கையால் கூட தொட்டதில்லை. இதற்கு முன் நடந்த பெண் பார்க்கும் வைபவத்தில் கூட சுடிதார் தான் அணிந்து கொண்டாள்.
பார்க்க வந்தவர்கள் திகைத்து நின்றதெல்லாம் சில நொடிகள் தான்.
"கல்யாணத்துல புடவை கட்டிப்பா இல்லையா? இல்லை.. சுடிதார் போட்டுண்டு தான் மணைல உட்காருவாளா?" என்று நக்கலாகக் கேட்டாலும், காலத்தின் கட்டாயம் என்று அன்றைய உடையை ஏற்றுக் கொண்டார்கள்.
உடையைப் போன்று தான் அவளது நகை அலங்காரமும். கண்ணுக்குத் தெரியாத தோடும் மூக்குத்தியும், இதை விட மெல்லியது இருக்கவே முடியாது என்பது போன்ற ஒரு செயின், வலது கையில் மட்டும் ஒரு பிரேஸ்லெட் இவை தான் அவளது பெர்மனன்ட் நகைகள். மேக்கப் செய்திருக்கிறாள் என்பதே தெரியாத அளவுக்கு குறைவான மேக்கப், முதுகு வரை நீண்டிருந்த அடர்த்தியான கூந்தலை எப்போதும் ஒரு கிளிப் குடியிருக்கும்.
நினைவு தெரிந்த நாள் முதலாய் பின்னல் என்ற ஒன்றையும் பூ என்ற ஒன்றையும் அவளது கூந்தல் கண்டதே இல்லை. மொத்தத்தில் இன்றைய நவநாகரீக யுவதிகளின் பிரதிநிதியாகத் தான் இருந்தாள்.
அப்படிப்பட்ட சுபிக்ஷா சம்பத் வீட்டில் இருந்து பெண் பார்க்க வருகிறார்கள் என்று தெரிந்தவுடன் இரவு பகல் பாராது அவளது வார்ட்ரோபைத் தலைகீழாகப் புரட்டிவிட்டாள். மணிக்கணக்கில் ஆராய்ச்சி செய்து இரண்டு புடவைகளைத் தேர்ந்தெடுத்து ப்ளவுஸை ஆரிய வொர்க் எல்லாம் செய்து, டிநகரை வலம் வந்து புடவைக்கு மேட்சாக நகைகளை வாங்கி, ப்யூட்டீசியன் உதவியுடன் புடவையை ப்ரீ- ப்ளீட் செய்து, யூட்யூப் உதவியுடன் அதைக் கட்டிக் கொண்டு நின்று, நடந்து, புக் பாவனைகளை மாற்றி எனப் பல ஒத்திகைகள் பார்த்து வீட்டில் இருந்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்தாள்.
மாப்பிள்ளை வீட்டார் முன் தனது பெண் இப்படிப் புடவையுடன், தலைவாரிப் பின்னலிட்டுப் பூச்சூடி, பவ்யமாக வந்து நிற்பாள் என்று அனுராதாவே கனவில் கூட நினைத்ததில்லை. இந்த ஒரு செய்கையிலேயே சம்பத்தின் மீதான அவளது பிடித்தத்தைப் பெற்றவளுக்கு உணர்த்தி இருந்தாள்.
இரண்டு மணி நேரம் கழித்தும் கட்டியிருந்த புடவையைக் கூட மாற்றாமல் சோஃபாவில் அமர்ந்திருந்த சுபிக்ஷாவின் இதழ்கள் புன்னகை சுமந்திருந்தன. கண்களில் கனவுகள் மிதந்தன. அனுராதா உள்ளே வந்தது கூடத் தெரியாமல் தனக்குள் பேசிக்கொண்டு எதையோ நினைத்துச் சிரித்தாள் மகள். அதைக் கண்ட அனுராதாவும் தனது கண்டிஷன்களைக் கொஞ்சம் (!?) தளர்த்திக் கொள்ளலாமோ என்று ஒரேயொரு நொடி நினைத்து விட்டாள்.
அடுத்த நொடியே தலையை நன்றாக உலுக்கிக் கொண்டபடி மகளைத் தொட்டு எழுப்பினாள். அவளது வாழ்க்கை காலத்திற்கும் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் தனது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்க வேண்டியதன் அவசியத்தை மகளுக்கு உணர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இன்றைய மயக்கத்தில் இருந்து மகள் வெளியே வரும் போது அவளது வாழ்க்கை அவளுக்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டுமே! (அதானே! எதையும் ப்ளான் பண்ணி பண்ணனும்!!)
—---
"காலங்காலமா பொண்ணு தானே கல்யாணம் ஆகி புகுந்தாத்துக்குப் போறா. இவா ஏதோ புதுசா கதை சொல்றா. கொஞ்சம் விட்டால் வீட்டோட மாப்பிள்ளையா இருன்னு சொல்லுவா போலிருக்கு."
"சம்பூ வெளியூர்ல வேலை பார்த்தா மாட்டுப் பொண்ணை இங்கேயா இருக்கச் சொல்லுவோம். நாமளே தனியா வச்சுட மாட்டோமா. அதென்ன உள்ளூர்ல இருந்துண்டே தனிக்குடித்தனம் வைக்கணும்னு சொல்றது."
"இப்பவே இவ்வளவு கண்டிஷனைப் போட்டா, போகப் போக என்னவெல்லாம் பேசுவாளோ? அந்த அனுராதா வாயைத் திறந்தாலே பொல்லாப்பு தான் வர்றது."
"கடல் மாதிரி இத்தனை பெரிய வீட்டை எங்க அண்ணா எதுக்கு கட்டி வச்சிருக்கான்? காலம் போன காலத்தில கிழவனும் கிழவியுமா நடமாடறதுக்கா?"
"பொண்ணுக்கு சமையல்கட்டு எந்தத் திசைல இருக்குன்னு கூட தெரியாதாம். பொண்ணு பெரிய படிப்பு படிச்சிருக்காளாம். அந்த மாமி பெருமையா சொல்லிக்கறா. நம்மாத்துலயும் தான் குழந்தைகள் எல்லாரும் பிரமாதமா படிச்சிட்டு அமோகமா வேலை பார்க்கறா. பாகுபாடு பார்க்காமல்
பிள்ளைகளுக்கும் தான் எல்லா வேலையும் கத்துக் கொடுத்திருக்கோம்.
என்ன தான் தளிகைக்கு ஆள் வச்சிண்டாலும் ஒரு அவசரத்துக்கு கூட நம்ம சம்பூ தான் சமையல்காரனா மாறணும். அவ உடம்பு நோகாம திவ்யமா சாப்பிட்டுப் போவா."
சம்பத்தின் வீட்டில் பெரியவர்களின் மாநாடு நடந்து கொண்டிருந்தது. மாலை காஃபி டிபனுக்குப் பிறகு முதற்கட்ட அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்து, பெண்கள் எல்லாரும் ஆளாளுக்கு அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.
அதில் ஹைலைட்டாக அமைந்தது முரளீதரனின் தங்கையின் குரல்.
"நாம எல்லாரும் நம்ம ஐஷூவைக் குறை சொன்னோமே! லண்டன்ல பிறந்த பொண்ணு கேட்டதுல எதுவும் தப்பே இல்லேங்கற மாதிரின்னா இவா பேசறா. பொண்ணும் பையனும் இன்னும் இரண்டு மூன்று தடவை பேசிப் பார்த்துட்டே பதில் சொல்லட்டும்னா என்ன அர்த்தம்?"
அங்கே இருந்த அனைவரது மனதிலும் அந்தக் கேள்வி இருந்தாலும், இந்தக் காலத்தில் இதெல்லாம் சகஜம் என்று ஒதுக்கி விட்டார்கள். அதுவும் இல்லாமல், சுபிக்ஷாவும் சம்பத்தும் ஏற்கனவே அறிமுகம் ஆனவர்கள் என்பதால் அவர்கள் பேசிக் கொள்வதைப் பற்றிப் பெரிதாக எண்ணவில்லை. தனிக்குடித்தனம் என்பது தான் அங்கே விவாதப் பொருளாக இருந்தது.
ராஜலக்ஷ்மியின் பார்வை தேவிகாவில் நிலைத்திருந்தது. மனம் குழம்பிய குட்டையாகத் தவிக்க எதையும் பேசும் நிலையில் தேவிகா இல்லை.
வரப் போகும் மருமகள் யாராக இருந்தாலும் மகனை விட்டுக் கொடுக்கத் தான் வேண்டும் என்று அவளுக்குத் தெரியும்.
என்னதான் பிரியமாக இருந்தாலும் மாமியார் மருமகளுக்கிடையே கண்ணுக்குத் தெரியாத ஒரு உரிமைப் போராட்டம் நடந்து கொண்டு தான் இருக்கும். இரு பெண்களும் தங்கள் உறவை உணர்ந்து விட்டுக் கொடுத்தாலன்றி அங்கே ஒரு பனிப்போர் வெடிக்கும் வாய்ப்புகள் அதிகம்.
ஆசைக்கும் பாசத்திற்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருந்தான் சம்பத். அத்தையும் சித்திகளும் பேசிய பேச்சுக்கள் எதுவும் அவனைப் பாதிக்கவே இல்லை. மாறாக, 'இவா எல்லாரும் ஏன் ஒரு பொண்ணு மாதிரி யோசிக்க மாட்டேங்கறா? அவளோட இடத்தில் இருந்து பார்த்தால் தானே அவாளோட சைட்ல இருக்கற நியாயங்கள் புரியும்!' என்று நினைத்துக் கொண்டான்.
தங்கள் வீட்டுப் பிள்ளை இப்போதே ஜால்ரா(!?) அடிக்கத் தயாராகிட்டான்னு புரியாமல் குடும்பம் மொத்தமும் அவனுக்காகப் பரிதாபப் பட்டுக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் இந்த விஷயத்தில் இருந்து டேக் டைவர்ஷன் என்று மனம் சொன்னதால், சம்பத் அலுவலக வேலையைப் பார்க்க வேண்டும் என்று அறைக்குள் புகுந்து கொண்டான். அவன் பின்னோடு வந்த அரவிந்த் நிஜமாகவே அவன் லேப்டாப்பை எடுத்தது கண்டு திரும்பி வந்துவிட்டான்.
பேரன் நகர்ந்ததும், தேவிகாவின் அருகில் வந்து அமர்ந்து கொண்ட ராஜலக்ஷ்மி மருமகளின் கையைப் பிடித்துக் கொண்டார்.
"தேவி! நம்ம காலம் மாதிரி இப்போ கிடையாது. கூடவே இருந்து புரிய வைப்போம்னு நினைக்க முடியாத அளவுக்கு சின்னவாளுக்கு டைம் கிடைக்கறதில்லை. அந்தப் பொண்ணை நம்ம ராஜாவுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. பொண்ணுக்கும் பிடிச்ச மாதிரி தெரியறது. இத்தனை நாளும் இவன் பிடி கொடுக்காமல் இருந்தான். இப்போ அவனே ஆர்வமா இருக்கான். நிதானமாக யோசிச்சு உன் பதிலைச் சொல்லு. கூப்பிடற தூரத்தில் தான் இருக்கப் போறா. ஆத்திர அவசரத்துக்கு கண்டிப்பா வருவா, நாமளும் போவோம்.
பொண்ணைப் பெத்தவாளுக்கு ஏதோ ஒரு சலனம். அவாளும் சம்பந்தி ஆத்துக்கு வந்திருக்கோமேன்னு சங்கோஜம் இல்லாமல் தன் பொண்ணு வீடுன்னு ஃப்ரீயா இருக்க முடியும். இரண்டு பொண்ணைப் பெத்தவா, அப்படி நினைக்கறதுல தப்பே இல்லை. காலம் தான் ஆகச் சிறந்த டீச்சர். சீக்கிரமே உன் மாட்டுப் பொண்ணு நம்மளைப் புரிஞ்சிண்டு வருவா. நாம பொறுமையா இருக்க வேண்டிய நேரம் இது. பகவான் மேல பாரத்தைப் போட்டு கல்யாண காரியங்களைக் கவனி."
மருமகளுக்கு மட்டுமே கேட்கும் தொனியில் பேசியதால் அதன் சாராம்சம் யாருக்கும் தெரியவில்லை.
"நேக்கு எல்லாமே புரிறதும்மா. ஆனாலும் மனசுக்குள்ளே ஏதோ ஒரு உணர்வு. என்னன்னு சொல்லத் தெரியலை. பெருமாள் என்ன பண்ணக் காத்திண்டு இருக்கார்னு தெரியலை. நீங்க சொன்ன நேரம் வரும் போது ஒருத்தருக்கு ஒருத்தர் முகம் பார்க்க முடியாதபடி போயிடக் கூடாதேன்னு மனசு அடிச்சுக்கறது."
தேவிகாவின் குரலில் என்றும் இல்லாத அளவுக்கு இருந்த தடுமாற்றம் ராஜலக்ஷ்மயைத் திடுக்கிடச் செய்தது. ஆனாலும் பெரியவர் அவரது நிலைப்பாட்டில் தெளிவாகவே இருந்தார்.
ஆண்கள் அனைவரும் என்ன பேசுவது என்று தெரியாமல் உலகப் பொருளாதாரத்தை விவாதித்துக் கொண்டு இருக்க, ஹெட்போன் சகிதம் மொபைலில் கவனமாக இருந்த
அரவிந்த் திடீரென சத்தமாகச் சிரித்தான்.
"என்ன அத்திம்பேர்? தனியா உட்கார்ந்து சிரிச்சிண்டு இருக்கேள். வாட்ஸ்அப் ஃபார்வார்டா? அப்படி என்ன ஜோக் அது? சொன்னா நாங்களும் சிரிப்போமே!" என்று அவனருகில் அமர்ந்த சம்பத்திடம் தனது மொபைலையும் ஹெட்போனையும் கொடுத்தான் அரவிந்த்.
அடுத்த இரண்டு நிமிடங்களுக்கு சம்பத்தின் முகம் நவரசங்களையும் காட்டியது. எதுவும் பேசாமல் மொபைலை அரவிந்திடம் கொடுத்தவன் அமைதியாக அமர்ந்து கொண்டான். அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்கள் எதுவும் புரியாமல் விழித்தனர்.
வழக்கம் போல விஷயத்தை விளக்கும் வேலையை அரவிந்த் கையில் எடுத்துக் கொண்டான். தனது மொபைலை ஒரு ஸ்பீக்கருடன் இணைத்து ஒரு ஆடியோவை ஓடவிட்டான். ஜாதகப் பரிவர்த்தனையின் போது ஒரு பெண் வீட்டார் எதிர்பார்ப்புகள் என்ற பெயரில் கொடுத்த கண்டிஷன்கள் அவை.
ஆடியோவில் பேசிய ஆண்குரல் பெண்ணின் சித்தப்பாவாம். அண்ணன் மகளைப் பற்றி அநேக அரிய(!?) விஷயங்கள் பேசினார். அதன் முக்கியமான சாராம்சம் இது தான்.. பாயிண்ட் பாயிண்டா பார்ப்போம்.. கேட்டவர்கள் அனைவரும் மைன்ட் வாய்ஸில் பதில் கொடுக்க ஆரம்பித்தனர்.
1. எங்க ஆத்துல நாங்க ரொம்ப ஆசாரம். எங்க அண்ணா பொண்ணு பேர் ஹம்சத்வனி, ஒரு ராகத்தோட பேர். அவளுக்கும் சரி, எங்க அண்ணா மன்னிக்கும் சரி நல்ல சங்கீத ஞானம் உண்டு, டெய்லி சாதகம் பண்ணுவா. அதனால வரப் போற பையனுக்கு சங்கீத ஞானம் இருக்கணும். (சாஃப்ட்வேர் வேலையில்லாமல் போனால் சங்கீதம் கை கொடுக்குமோ??)
2. ஆத்துல எப்போதும் பசும் பால் தான். எருமை எமனோட வாகனம்.. அதிலே இருந்து வர எதையும் பயன்படுத்தினா தோஷம்னு சாஸ்திரம் சொல்றது. அதனால நாங்க யூஸ் பண்றதே இல்லை.. (இதனால எருமைக்கு எந்த நஷ்டமும் ஆகிடப் போறதில்லை)
3. அண்ணாவும் மன்னியும் பெரிய வேலைல இருக்கா. பொண்ணு கம்ப்யூட்டர் என்ஜினீயரிங்ல கோல்ட் மெடலிஸ்ட். பெரிய கம்பெனில சாப்ட்வேர் இன்ஜினியரா இருக்கா. ஆனாலும் சாப்பாடு விஷயத்தில ரொம்ப ஸ்ட்ரிக்டா இருப்பா. வெங்காயம் பூண்டு கிடையவே கிடையாது. ஸ்விகி, ஜோமாட்டோ உட்பட வெளில சாப்பிடறது அறவே கிடையாது. மாமியார் ஆத்துல சாப்பிட்டா அவளுக்கு பிரச்சினை இல்லை.. ஹோட்டலுக்கெல்லாம் வருவா.. ஆனால் அவ சாப்பிட மாட்டா. (!? இதுக்கு பருத்தி மூட்டை கொடவுன்லயே இருக்கலாமே என்று மனதுக்குள் நினைத்ததை யாரும் வெளியே சொல்லவில்லை)
3. சாப்பிடறதுக்கு வெள்ளித் தட்டு தான் யூஸ் பண்ணுவா. ஆஃபீஸ் போகும் போதும் தட்டைக் கையோட எடுத்துண்டு போயிடுவா.. (வெள்ளில டிபன் பாக்ஸ் கிடைக்கும்னு இவாளுக்குத் தெரியாதோ? நமக்கெதுக்கு வம்பு.. முடியுள்ள சீமாட்டி.. எப்படி வேணாலும் கொண்டை போட்டுக்கலாம்)
3. ஆத்துல எட்டு பாத்ரூம் இருக்கு.. எல்லா ரூம்லயும் அட்டாச்ட் பாத்ரும் இருக்கு. ஆனாலும் அண்ணா ஆத்துல எல்லாரும் கிணத்துத் தண்ணீல தான் குளிப்பா.. தளிகைக்கு வர்ற மாமி கூட கிணத்துல குளிச்சிட்டு தான் உள்ள வரணும். (மூணு பேருக்கு எட்டு பாத்ரூம்.. அதுவும் குளிக்க பயன்படாது.. விளங்கிடும்)
அடுத்து வந்த கண்டிஷன்களைக் கேட்டு, "ஹா".. என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு ஷாக்கான ஆடியன்ஸ், அது சரி.. அது அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறவனோட பிரச்சினை நமக்கெதுக்கு அதெல்லாம் என்று டீலில் விட்டனர். சம்பத்தோ நல்ல வேளை சுபிக்ஷா இத்தனை ஆர்த்தோடக்ஸ் இல்லை என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.
(அப்படி என்ன தான் கண்டிஷன்கள் என்று கேட்கும் மக்களே… படிச்சிட்டு ஹார்ட் அட்டாக் வந்தால் சங்கம் பொறுப்பேற்காது.. )
4. கல்யாணத்துக்கு அப்புறம் பொண்ணு மடிசார் தான் உடுத்திப்பா. அவ என்னைக்குமே சுடிதார் நைட்டி எல்லாம் போட்டுக்க மாட்டா. பாவாடை தாவணி, புடவைன்னு தான் இருப்பா. கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போகும் போதும் சரி ஆத்துலயும் மடிசார் தான்.. தூங்கும் போதும் மடிசார் தான் உடுத்திப்பா(?????)
5. ஷேவிங் பண்ணின்டா, மொட்டை போட்டுண்டா மூணு நாள் தீட்டு உண்டுன்னு சாஸ்திரம் சொல்றது. வரப் போற பையனுக்கு இந்த விஷயம் நன்னா தெரிஞ்சிருக்கணும். அந்த மூணு நாளும் தனியா தான் படுத்துக்கணும்.. பெட்ரூம்ல அலோவ் பண்ண மாட்டா. எங்க அண்ணாவே இன்னமும் அப்படித்தான் இருக்கான்.. இதுக்கு ஓகேன்னா தான் அடுத்த ஸ்டெப் போகலாம்..
சட்டென்று ஒரு நிசப்தம் நிலவியது அங்கே. சம்பத், அரவிந்த் போன்ற ஆட்கள் எல்லாம் பார்க்கும் வேலை காரணமாக கிட்டத்தட்ட தினமும் ஷேவ் செய்பவர்கள். அப்போ… மாசம் முப்பது நாளும் ஹால் தானா.. இதுக்கு கல்யாணம் என்ற ஒன்று தேவையா.. அவர்கள் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை.
இதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் அனுராதா போட்ட தனிக்குடித்தனம் கண்டிஷனை எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு ஓகே பண்ண வேண்டாமா? அப்படித்தான் சம்பத் ஓகே சொல்லி விட்டான். அஃப்கோர்ஸ் குடும்பத்தோட சம்மதத்தோடு தான்.
அலுவலகத்திலும் இது வரை பார்த்த பார்வையை மாற்றிப் பேசிப் பழகி சுபிக்ஷாவையும் மனப்பூர்வமாக ஓகே சொல்ல வைத்தான்.
ஒரு வழியாக ஆயிரம் தடைகளைத் தாண்டி சம்பத் சுபிக்ஷாவின் கைப் பிடித்தான். திருமணம் நல்லபடியாக முடிந்தது என்று சந்தோஷப்பட முடியாமல் அனுராதாவின் அடுத்த ஆட்டம் தொடங்கியது. கட்டுசாதத்துடன் பெண் மாப்பிள்ளை வீட்டுக்குக் கிளம்பி நின்ற வேளை..
"எப்படி இருந்தாலும் அவா இரண்டு பேரும் தனியாத் தானே இருக்கப் போறா. அந்த ஆத்துல எல்லாமும் ரெடியா இருக்கே. நேரா அங்கேயே போக வேண்டியது தானே." வெகு இயல்பாகச் சொல்லிவிட்டு, அனுராதா தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்து வைத்தாள்.

Author: SudhaSri
Article Title: நான் போடுற கோட்டுக்குள்ளே -17
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.