• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

இப்படிக்கு, காதல் - 4

Adhithya

New member
Joined
May 23, 2025
Messages
5
"பொண்ணுக்கு எவ்ளோ போடுவேள்? மத்த விஷயம்லாம் பேசணுமோன்னோ???.." போனில் மூர்த்தி.


பெண் பார்த்து சென்று ஒரு வாரம் முடிந்தும் அர்ஜுன் வீட்டிலிருந்து எந்தத் தகவலும் இல்லை என்று அப்பா நொந்து போய் அர்ஜுனுக்கே போன் பண்ணி கேட்டு விட்டார். அர்ஜூன் சாதாரணமாக தன் பெற்றோரிடம் பேசி விட்டதாகவும், உங்ககிட்ட இன்னும் சொல்லலையா என்றும் கூறினார்.


அப்பாவிற்கு பெண்ணை போட்டோவில் பார்த்துவிட்டு பிடித்து தானே நேரில் வந்தனர். ஏன் இன்னும் பதில் சொல்ல தாமதம் என்று வருத்தம்.


என்னதான் காலங்கள் மாறினாலும் சில விஷயங்கள் மனதை பெரிய அளவில் பாதித்து விடும். பெண் பார்ப்பதோ மாப்பிள்ளை பார்ப்பதோ பலருக்கு இந்த காலத்தில் சாதரணமாக ' சும்மா பாப்போம், நேர்ல போய், பிடிச்சா ப்ரொஸீட் பண்லாம் இல்லன்னா வேணாம்னு சொல்லிக்கலாம்' என்று மாறிவிட்டது. ஆனால் இன்றும் நிறைய பேர் பெண்ணையோ பையனையோ பிடித்திருந்து இரு குடும்பத்தாரும் ஒத்துப் போனால் அடுத்து திருமணத்திற்கு முதல் படியாக நினைப்பது இந்த பெண் பார்த்தலை தான். அது ஒரு கெட்ட அனுபவமாக (bad experience) சூர்யாவிற்கு மாறுவதை ராகவன் ஜானகி இருவருமே விரும்பவில்லை.


எடுத்ததும் பணம் நகையை பற்றி பேசியது அப்பாவிற்கு பிடிக்கவில்லை என்றாலும் அம்மாவின் "இந்த மாதிரி நல்ல பையன் கெடைக்காது " என்றதாலும் , அப்பாவிற்கு சின்ன வயதிலேயே படித்து பொறுப்பாக வேலையில் சேர்ந்து விட்ட அர்ஜுனை மிகவும் பிடித்திருந்தது.


மேற்கொண்டு நகை நட்டு பேச்சு முடிந்ததும் இரண்டு மாதத்தில் நிச்சயதார்த்தமும், சூர்யாவின் கடைசி செமஸ்டர் பரிட்சை முடிந்ததும் கல்யாணம் என்றும் முடிவு செய்தனர்.


கொஞ்ச நாள் அனைத்தும் நன்றாக சென்றது. நிச்சயம் முடிந்த பின்னர் மாப்பிள்ளை வீட்டாரின் பேச்சில் அலட்சியமும், 'வெடுக்' என்று பேசும் மூர்த்தியின் குணமும் பெண் வீட்டாரை பயம் கொள்ள செய்தது.


வீட்டில் முதல் கல்யாணம் என்பதால் ராகவனும் ஜானகியும் எதை எப்படி செய்வது என்று தெரியாமல் சிரமப்பட்டனர். தலை கால் புரியவில்லை. அர்ஜுன் வீட்டார் நிறைய குறைகள் கூறி எதிலும் சமாதானம் ஆகாமல் இருந்தாலும் ஒருவழியாக திருமணம் முடிந்து இதோ சூர்யா அர்ஜுன் வீட்டில் மாட்டுப்பொண்ணாக வேலையில் சேர்ந்து இதோடு இரண்டு வாரங்கள் ஆகிறது.


சண்டைகள் என்று பெரிதாக எதுவும் வரவில்லை தான் ஆனாலும் யாரும் சூர்யாவிடம் ஒட்டவில்லை. நாமளே ஒரு இன்ட்ரோவர்ட்( introvert) அதுனால நமக்கு தா அப்படி தோணுது போல என்று சூர்யா தன் இயல்பிற்கு மீறி கலகலப்பாக இருக்க முயர்ச்சித்தாள். ஆனால் எதுவும் மாறவில்லை. மாமனாரும் மாமியாரும் தன்னை ஒதுக்குவது போல தோன்றியது. யாரிடமும் சொல்லவில்லை.


மூர்த்திக்கும் ராஜிக்கும் நிறைய குறைகள் தோன்றியது. சூர்யா காலையில் சீக்கிரம் எழுந்து வராதது, சமையல் சரியாக தெரியாமல் இருந்தது, 'மடி ஆச்சாரம் ' இல்லாமல் இருக்கிறாள் என்றும் பல புலம்பல்கள்.


உண்மையில் சூர்யா வேலை செய்ய தயங்காத பெண். கற்றுக்கொண்டால் எதையும் நன்றாக செய்வாள். ஆனால் மாமியார் எதிர்ப்பார்த்த வேகத்தில் செய்ய முடியாமல் தடுமாறினாள். கல்யாணம் ஆகி வந்த புதுப்பெண்ணுக்கே உரிய இயல்போடு இருந்தாள் . எதாவது வேலை சொன்னால் சொன்னபடியே செய்தாலும் எதாவது குறை சொன்னாள் ராஜி மாமி. ஆறு பேர் இருந்த வீட்டில் தனித் தீவாக இருப்பது போல் இருந்தது சூர்யாஸ்ரீக்கு.


இது தான் ஆணைப் பெற்ற பெரும்பாலான பெற்றோரின் போக்காக இருப்பது. நீயும் இந்த வீட்டில் ஒருத்தி என்று வாயால் சொன்னா போதுமா.?! அந்தப் பெண்ணை வீட்டில் ஒருத்தியாக உணர வைக்க வேண்டாமா? இருபத்தியிரண்டு வயது வரை‌ ஒரு வீட்டில் சில பழக்கங்களுடன் வாழ்ந்த பெண்ணை வந்த சில நாட்களில் மாறச் சொன்னால் எப்படி. கொஞ்சம் டைமுயும், கொஞ்சம் ஊக்கமும் அளித்தால் கண்டிப்பாக கணவன் வீட்டினருடன் ஈஸியாக ஒட்டிக்கொள்வர்.


"எங்க ஆத்துல நாங்க வெண்டக்காய இப்படி நறுக்க மாட்டோம்"


"எங்க ஆத்துல நாங்க யாரும் காபி குடிக்க மாட்டோம்"


"எங்க ஆத்துல நாங்க அத இப்படி பண்ண மாட்டோம்"


"எங்க ஆத்துல நாங்க இத அப்படி பண்ண மாட்டோம் "


இது போல் சூர்யா வந்ததிலிருந்து கேட்டது இன்னும் நிறைய. "நாங்க கூட தான் எங்க ஆத்துல இப்டீலாம் பேச மாட்டோம். விட்டா நாங்க தரைல நடக்க மாட்டோம், வாயால சாப்ட மாட்டோம்னு சொல்லுவா போலயே" என்று மனதில் எரிச்சலுடன் தோன்றினாலும் வெளியே காட்டியதில்லை.


அவர்களால் சூர்யாவை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை, விடவும் முடியவில்லை. ஆனால் இது அனைத்தையும் அர்ஜுன் கண்டு கொள்ளாமல் இருந்தது தான் சூர்யாவிற்கு கஷ்டமாக இருந்தது . தன்னால் எதுவும் பிரச்சினை வர வேண்டாம் என அமைதியாக இருந்தாள். எல்லாம் மறு வீடு சென்று வரும் வரை தான்.
 

Author: Adhithya
Article Title: இப்படிக்கு, காதல் - 4
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom