- Joined
- Jun 17, 2024
- Messages
- 32
அனந்தன் காடு 9
வாமனன் திருவடி ஏத்துக வினைகள் அறும்
நாமுமக் கறியச்சொன்ன
நாள்களும் நணியவான,
சேமநன் குடைத்துக்கண்டீர்
செறிபொழி லனந்தபுரம்,
தூமநல் விரைமலர்கள்
துவளற ஆய்ந்துகொண்டு,
வாமனன் அடிக்கென்றேத்த
மாய்ந்துளும் வினைகள்தாமே
காலை ஒன்பதரை மணிக்கு விமானம். இரவு இரண்டரை மணிக்கு விழிப்பு வந்துவிட, மளமளவெனத் தயாராகி, நிர்மால்ய தரிஸனத்திற்குப் புறப்பட்டேன்.
மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்க, அதிசயமாகக் கோவிலில் சொற்ப மக்களே இருந்தனர்.
யாரும் நகரச்சொல்லி விரட்டாது, கிட்டத்தட்ட ஏகாந்த தரிஸனம். நின்று நிதானமாகப் பார்த்த பரவசத்தில் அவ்வளவு சீக்கிரம் உணர்ச்சிவசப்படாத எனக்கு கண்களில் நீர் துளிர்த்துவிட்டது.
முதல்நாள் பார்த்த அதே பெருமாள்தான். அவரைச் சுற்றிவரும் மர்மங்கள், புனைவுகள், நம்பிக்கைகள், சர்ச்சைகள், அவர் பெயரால் நடக்கும் அரசியல்தான் எத்தனை?
‘ஸ்ரீபத்மநாப ஸ்வாமி ஒருநாள் தன் யோக நித்திரையிலிருந்து கண்மலர்ந்து எழுந்து உட்கார்ந்து விட்டால்?’
பதினெட்டு அடி நீளமுள்ள அனந்தசயனன் அந்தக் கருவறையில் எழுந்து அமர்வதான கற்பனையில் புன்னகைத்துப் புல்லரித்தேன்.
அனந்தனின் இந்த யோக நித்திரையில் அவர் காணும் கனவுதான் இந்தப் பிரபஞ்சம் என்று தோன்றியது. ஏன் இருக்கக் கூடாது?
இந்தப் பிரம்மா, மஹாலக்ஷ்மி, அவரது அம்சமான ஆதிசேஷன் என எதுவுமே இல்லாது இருந்த விராட புருஷனுக்குத் தனிமை வெறுமையாக இருந்ததில்தான் இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கினாரோ? எத்தனை மேடை, எத்தனை கதாபாத்திரங்கள், சூழல்கள்?
ஒரு ஓரமாக நின்று ஸ்ரீ, அனந்த, பத்மநாப, ஸ்வாமியை ஒவ்வொரு கதவு வழியேவும் நிதானமாகத் தரிசித்தேன்.
எது நடந்தாலும் தன் கடமை தவறாது யோகநித்ரையில் இருந்தபடியே தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு நம்பிக்கை தந்தபடி இருக்கும் பெருமாள் நமக்குத் தெரிவிப்பது என்ன?
அவர் தன் கடமையைச் செய்வதைப் போல் நம்மையும் செய்யப் பணிக்கிறார் என்றே தோன்றியது.
கீதையை நின்ற கோலத்தில்தான் சொல்ல வேண்டுமா என்ன, சயன கோலத்திலும் சொல்லலாம்தானே?
திடீரெனப் பரபரப்பு தொற்றிக்கொள்ள, காவலர் ஒருவர் “நடை சாத்தணும் சாரே” என, மீண்டும் ஒருமுறை அனந்தனை கண்ணாரக் கண்டு நான் நகரும் வரை கதவை சார்த்தவில்லை.
இருளில் அந்தர தாரையாகப் பொழிந்த மழையைப் பார்த்துக் கொண்டே நிதானமாக நகர, பிரளயத்தில் தொடங்கி, புராண, இதிகாசங்களின் வழியே சரித்திரத்தின் பக்கங்களில் பயணித்த உணர்வில் ஒரு சிலிர்ப்பும் மனவெழுச்சியும்.
மழை நிற்கக் காத்திருந்த நேரத்தில், எனது அனந்தபுர அனுபவத்தைத் தொடர் கட்டுரையாக எழுத நினைத்த எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்.
சரியான தகவல்களுடன், தேவையான ஆதாரங்களுடன் புத்தகமாக எழுதி ஸ்ரீ பத்மநாப ஸ்வாமிக்கு அர்ப்பணம் செய்ய முடிவு செய்தேன்.
தானியங்கியில் ஏறி, குனிந்து, மழையினூடே ஹேமகூட கோபுரத்தைப் பார்த்தேன். அரண்மனையின் கம்பீரமும் அனந்தனின் ஆளுமையும் மிளிர்ந்தது.
‘புத்தகம் எழுதி முடிந்ததும் மீண்டும் வர வேண்டும்’
சங்குமுகம் கடற்கரை வழியே விமான நிலையத்தை நோக்கிச் செல்கையில், புத்தகத்தின் தலைப்பை தீர்மானித்தேன்.
‘அனந்தன் காடு’

Author: VedhaVishal
Article Title: அனந்தன் காடு 9
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.