- Joined
- Jun 17, 2024
- Messages
- 32
அனந்தன் காடு 3
திருவனந்தபுரம் சேர்ந்தால் வினை தீரும்
ஊரும்புட் கொடியுமஃதே
யுலகெல்லா முண்டுமிழ்ந்தான்,
சேரும்தண் ணனந்தபுரம்
சிக்கெனப் புகுதிராகில்,
தீரும்நோய் வினைகளெல்லாம்
திண்ணநாம் அறியச்சொன்னோம்
பேரும்ஓ ராயிரத்துள்
ஒன்றுநீர் பேசுமினே.
திருவாய்மொழி
மருமக்கதயம்
திருவாங்கூர் அரச குடும்பம் தாய்வழிச் சமூகத்தைப் பின்பற்றியது. அரச குடும்பத்தில் அதிக அதிகாரமும், ராஜ்ஜியத்திற்கான வாரிசைப் பெற்றுத் தரும் கடமையும் பெண்களுக்கானது.
மன்னரின் மருமகன் அதாவது சகோதரியின் மகன்தான் அரியணைக்கான உரிமை பெற்றவன். இது மருமக்கதயம் எனப்படுகிறது
அதேபோல், மன்னரின் மனைவி ராணியாக முடியாது. அவரது சகோதரிதான் ராணி. ஒருவேளை மஹாராஜாவுக்கு ஆண் வாரிசு மட்டும் இருந்தால், பரம்பரையைத் தொடர, பெண்களை ஸ்வீகாரம் எடுத்துக் கொள்வது வழக்கம்.
சேர மன்னர்களின் வழித்தோன்றல்களாகக் கருதப்படும் திருவாங்கூர் அரச குடும்பமும் ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமி கோவிலும் ஆதி முதலே தொடர்புடையது.
கால மாற்றத்தின் பலனாக, வெவ்வேறு கால கட்டங்களில், வெவ்வேறு மனிதர்கள் மூலமாக வெளிப்பட்ட ஸ்ரீஅனந்த பத்மநாப ஸ்வாமி கோவிலின் சீரமைப்புப் பணியைச் செய்ததில், திருவாங்கூர் அரசர்களின் பங்கு அளப்பரியது.
ஸ்ரீ அனந்த பத்மநாப ஸ்வாமி ஆலயத்தின் பரிணாம வளர்ச்சியும் தென் கேரளம் மற்றும் திருவாங்கூர் சமஸ்தானத்தின் வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று பிணைந்தது.
இன்றைய திருவாங்கூர் அரசர்களின் ஆரம்பப் புள்ளி பொதிகை மலையை ஆண்ட ஆய் குல அரசர்களிடம் தொடங்குகிறது. ஆய் குல அரசர்களின் சின்னமான யானை, திருவாங்கூர் சமஸ்தானத்தின் சின்னத்தில் சங்குடன் இருப்பதுபோல் திருத்தி அமைக்கப்பட்டது.
ஆய் குல மன்னர்களும் வேணாட்டு அரசர்களும் ஸ்ரீ பத்மநாபஸ்வாமியை யாதவேந்திர குலதெய்வம் என்றே அழைத்தனர்.
வேணாட்டு மன்னர்களின் பலம் பொருந்திய இடமான திருவட்டாறிலும் அனந்த சயனப் பெருமாள், ஆதி கேசவப் பெருமாளாகக் கோவில் கொண்டுள்ளார்.
ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமியின் மூத்த சகோதரராக அறியப்படும் ஆதிகேசவப் பெருமாளின் கோவிலும் திருவனந்தபுரத்துக் கோவிலும், திராவிடக் கட்டடக் கலையும், கேரளபாணியும் கலந்து கட்டப்பட்டவை.
ஒவ்வொரு மன்னருமே, ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமியை தங்கள் குலதெய்வமாகவோ, இஷ்ட தெய்வமாகவோ பாவித்து, பயபக்தியுடன் கோவிலுக்கான நிவந்தங்கள் தருவதிலும், திருப்பணிகள் செய்வதிலும், உற்சவங்களைக் கொண்டாடுவதிலும் முன் நின்றனர்.
ஆலயத்திற்கும் அரியணைக்கும் உண்டான அனைத்து விவகாரங்களும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருந்தன.
ஆன்மீக மற்றும் ராஜரீக நடைமுறைகளில் பாரத தேசத்தில் மட்டுமின்றி, உலக சரித்தித்திலேயே அரசியலும் மதமும் இணைந்து ஆதிக்கம் செலுத்தியதில் அனைத்திலும் முதன்மை வகித்ததும்
ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமி கோவிலே.
சோழர்களும் பாண்டியர்களும் தென்னிந்தியா முழுவதையும் கைப்பற்றும் முயற்சியில் பெரிதும் சிறிதுமான போர்த் தாக்குதல்கள் தொடர்ந்து நடக்க, ஆய் குல அரசர்கள், அதிகாரம் குறைந்து, திருப்பாதவூரிலிருந்து ஸ்ரீ பத்மநாபஸ்வாமி கோவில் காரியங்களை நிர்வகித்தனர்.
பின்னர் வந்த சேர மன்னர்களும், பிற சிற்றரசர்களும் மாறி மாறி ஆட்சி செய்தபோதும், சங்க இலக்கியங்களிலும், சேர மன்னன் செங்குட்டுவனின் இளவலும் சமணத் துறவியுமான இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்திலும் ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமி ஆலயத்தைப் பற்றிய பாடல்கள் இருக்கின்றன.
‘ஆடக மாடத் தறிதுயில் அமர்ந்தோன்’ என்ற சிலப்பதிகார வரிகளில், திருவனந்தபுரத்தில் அனந்தனின் மேல் யோக நித்திரையில் இருக்கும்
ஸ்ரீபத்மநாப ஸ்வாமியைக் குறிப்பிடுகிறார் இளங்கோவடிகள்.
குலசேகர வர்மா (எ) குலசேகர ஆழ்வார்
சேர மன்னர்கள் வம்சாவழி வந்த திரடவிரத மஹாராஜா, ஸ்ரீ அனந்தபத்ம ஸ்வாமியிடம் தனக்கு வாரிசு வேண்டுமென வேண்ட, அவரது குலம் வளர, திருமாலின் கழுத்தில் அணியும் கௌஸ்த்துப மணியின் ஒளிர்வின் ஆன்மீக அம்சமாக அவதரித்தார் குலசேகர வர்மா.
நாட்டிற்கான சீரமைப்புத் திட்டங்கள், நிர்வாகம், படையெடுப்புகளின் மூலம் க்ஷீண திசையில் இருந்த சேர ராஜ்ஜியத்தைத் தனிஒருவராக உயர்த்திய குலசேகர வர்மா, மிகச் சிறந்த விஷ்ணு பக்தர். ராமபிரான் மீது அளப்பரிய காதலும் பக்தியும் கொண்டிருந்தார்.
அவரது பக்தியின் ஆழம் புரியாத அவரது மந்திரிகள் செய்த சூழ்ச்சியில் வெறுத்து, ராஜ்ஜியத்தைத் தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டு, திருவரங்கனைத் தேடிச் சென்றார்.
சமஸ்கிருதத்தில் முகுந்த மாலாவையும், தமிழில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பெருமாள் திருமொழி எனப்படும் 108 பாசுரங்களையும் இயற்றினார்.
‘வேங்கடவா நின்கோவிலின் வாசல் அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்து நின் பவளவாய் காண்பேனே’
என்று பாடி, திருவேங்கடவனின் கருவறை முன்பு இருக்கும் படிக்கு குலசேகரன் படி என்ற பெயரால் வழங்கப்படும் பேறு பெற்றார்.
வைஷ்ணவ சம்பிரதாயத்தின் பன்னிரெண்டு ஆழ்வார்களுள் ஒருவராகப் புகழ் பெற்றார், சேர வம்சத்தைச் சேர்ந்த குலசேகர வர்மா என்ற பூர்வாசிரமப் பெயர்கொண்ட குலசேகர ஆழ்வார்.
இடைக்காலத்தில், சரித்திரப் பதிவுகள் முன் பின்னாக இருப்பினும், ஸ்ரீ அனந்தபத்மநாப கோவில் மற்றும் திருவாங்கூர் அரச குடும்பம் குறித்த விவரங்கள், கோவிலின் வழிபாட்டு நிவந்தங்கள், திருவிழாக்கள் என அனைத்தும் முப்பது லட்சம் சுவடிகளில் ஆவணப்படுத்தப்பட்டு, கோவிலின் உள்ளேயே மதிலகம் எனப்படும் தனியறைகளில் பாதுகாப்பாக வைங்க உத்தரவிட்டு, அமல் படுத்தினார், ராஜா இரவி இரவி வர்மா.
எட்டர யோகம் என்ற நிர்வாகக் குழுவை அமைத்துக் கோவிலின் நடைமுறைகளை சீர் செய்தனர்.
திருவாங்கூர் அரச குடும்பத்தின் பிற்கால சந்ததியினருக்கு வழிகாட்ட, அவர்களது
ஸ்வீகாரங்களும், அதன் வழி முறைகளும் கூட ஆவணப்படுத்தப்பட்டது.
ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமி ஆலயத்துக்கு வந்து தரிஸனம் செய்த மதப் பெரியார்களின் வருகையும் இச்சுவடிகளில் பதியப்பட்டுள்ளது.
ராமானுஜர், சைதன்ய மஹாபிரபு, குருநானக் போன்ற மதப் பெரியார்களோடு காசி, நேபாளம், விஜயநகரம், காஷ்மீர், மைசூர், புதுக்கோட்டை போன்ற சமஸ்தானங்களில் இருந்து இக்கோவிலுக்கு விஜயம் செய்ததும் ஓலைகளில் உள்ளது.
இடைக்கால அரசர்கள் அனைவருமே தங்கள் பிரதான தெய்வமான ஸ்ரீபத்மநாப ஸ்வாமி கோவில் நிர்வாகம் மற்றும் பராமரிப்பில் குறையாத பக்தியுடன், முழுமையாக ஈடுபட்டனர்.
பூதல ராம வர்மா என்பவருக்கு கோவில் வளாகத்துக்குள் விலையுயர்ந்த மாணிக்கம் ஒன்று கிடைத்த அதிசயமும் நடந்தது.
அனுஷம் திருநாள் மஹாராஜா ஸ்ரீமார்த்தாண்ட வர்மா
ஆதி சேர அரசர்கள் முதல், அவர்கள் வழி வந்த திருவாங்கூர் மன்னர்கள், ஆய் குல மன்னர்கள், வேணாட்டு அரசர்கள் என அனைவருமே, அவர்களது குலதெய்வமான ஸ்ரீஅனந்தபத்மநாபனுக்கு தாஸர்களாக, ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி கோவிலும் அரசாங்கமும் ஒன்றே என்று திறம்பட பக்தியுடன் கோவிலை நிர்வகித்து, பல மாறுதல்களைச் செய்து, கொடைகளை வழங்கி, இடையறாது திருப்பணிகளைச் செய்து வந்தபோதும், அனுஷம் திருநாள் மஹாராஜா ஸ்ரீமார்த்தாண்ட வர்மாவின் பக்தியும் ஈடுபாடும் அர்ப்பணிப்பும் அவரை அரசரில் புனிதராகத் தனித்துக் காட்டுகிறது.
பதின் பருவத்திலேயே சிறந்த மேலாண் திறமையுடன் மனிதர்களைப் புரிந்து, சூழ்ச்சிக்காரர்களை அடையாளம் காண்பதில் வல்லவராக இருந்ததாலோ என்னவோ, மஹாராஜா மார்த்தாண்ட வர்மா ஆட்சிக்கு வரும் முன்பே பலவிதமான எதிர்ப்புகளை, சூழ்ச்சிகளைச் சந்தித்தார்.
தன்னைச் சுற்றி பின்னப்பட்டிருந்த சூழ்ச்சி வலைகளும், அரசியல் காழ்ப்புகளும், திருவாங்கூரின் தாய்வழிச் சமூகத்தையே மாற்றியமைக்கும் முயற்சிகளும், மன்னரே தேவையில்லை என்ற பிரச்சாரங்களுக்கும் நடுவே, பின்னாளில் நவீன திருவாங்கூரை உருவாக்கி சரித்திரம் படைக்கப்போகும், அனுஷம் திருநாள் மஹாராஜா பால மார்த்தாண்ட வர்ம குலசேகரப் பெருமாள் திருவாங்கூரின் அரசராகப் பதவியேற்றார்.
ஸ்ரீ பத்மநாபஸ்வாமியின் ஆலய நிர்வாகக் குழுக்களியே இருந்த ஊழலை, அதிகாரப்போக்கை இனங்கண்டு, மிகுந்த பிரயத்தனத்துடன் களைந்து, தானே பொறுப்பேற்றார்.
ஆட்சிக்கு வரும் முன்பே ஸ்ரீபத்மநாப ஸ்வாமி ஆலயத்தைப் புதுப்பித்துக் கட்ட விரும்பியவர், பழைய தீ விபத்தில் சிதிலமடைந்த கோவிலை அவரது கடைசி நாட்கள் வரை பார்த்துப் பார்த்துப் புனரமைத்தார்.
நெருப்பினால் சேதமடையாத திரு அம்பாட்டி சந்நதியைத் தவிர, ஆலயத்தின் மற்ற பகுதிகள் அனைத்தையும் அதன் பழம்பெருமை வாய்ந்த கட்டுமானத்தை மாற்றாது, வரும் நாட்களில் தீ விபத்து அண்டாதவாறு, மரத்தை விடுத்துக் கற்றளியாகக் கட்டினார்.
உள்நாட்டுக் கலவரங்கள், அண்டை அரசுகளுடனான போர்கள் என்பதைத் தாண்டி மஹாராஜா முதன்மையாகக் கருதியது ஸ்ரீபத்மநாப ஸ்வாயின் கோவில் பணிகளைத்தான்.
ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி விக்ரஹம்
முதன் முதலில் தூவாபர யுகத்தில் இலுப்பை மரத்திலிருந்து வெளிப்பட்ட ஸ்ரீபத்மநாபஸ்வாமியின் மூர்த்தி அம்மரத்தினாலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.
தீ விபத்தினால் சற்றே பாதிக்கப்பட்ட, இலுப்பை மரத்தாலான பெருமாளை, நேபாளத்தின் கண்டகி நதியிலிருந்து யானைகளின் மீதேற்றித் தருவிக்கப்பட்ட 24,000 சாளக்கிராம கற்களில் 12,008 கற்களை உபயோகித்து வடிவமைத்தனர்.
சாளக்கிராமக் கற்களை அறுபதுக்கும் மேற்பட்ட மூலிகைகள் மற்றும் இயற்கைப் பொருட்களால், கஷாயமாகத் தயாரிக்கப்பட்ட கடுசர்க்கரைக் கலவையால் ஒன்றிணைத்தனர்.
கடுசர்க்கரையால் செய்யப்பட்ட மூர்த்தங்களுக்கு அபிஷேகம் கிடையாது.
திருமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட கல்லில் ஒத்தக்கல் மண்டபத்தை நிறுவினர்.
கேரளத்தில் விளையும் மிளகு, கிராம்பு, ஏலம் போன்றவற்றின் வாணிபத்தைத் தன் வசமாக்கத் துடித்துக் குடைச்சல் கொடுத்த டச்சு கிழக்கிந்திய கும்பினிக் காரர்களை கொளச்சல் என்னுமிடத்தல் நடந்த போரில் அனுஷம் திருநாள் மஹாராஜாவின் படை முறியடித்தது.
டச்சுப் படைகளை வழிநடத்திய கேப்டன் டே லானாய் (Captain De Lannoy) என்பவர், மஹாராஜாவிடம் சரணடைந்தார். அவரை மன்னித்ததோடு, டச்சு ராணுவத்தைத் துறந்து வந்தவரை திருவாங்கூரின் படைத் தலைமைகளில் ஒருவராகப் பதவியும் கொடுத்தார்.
அந்நாளில் உலகில் மிகப் பலம் பொருந்தியதாக இருந்த டச்சுக் கடற்படையை முறியடிப்பதில் கேரள மீனவர்கள் பெரும் பங்காற்றினர்.
துலாபுருஷதானம்
ஸ்ரீ பத்மநாப ஸ்வாமிக்கு வாரி வாரிக் கொடுத்தாலும் மனம் நிறையாத அனுஷம் திருநாள் மஹாராஜா, துலாபாரத்தில் தன்னை நிறுத்தி எடைக்கு எடை பொன் கொடுத்தார்.
லட்ச தீபம்
க்ஷத்திரிய அசர்களுக்குக் கட்டாயமாக இருந்த லட்ச தீபங்கள் ஏற்றும் திருவிழாவை கார்த்தவீர்யார்ஜுனன் செய்ததாக பிரமாண்ட புராணம் சொல்கிறது. அதன்பிறகு, இந்தப் பிரம்மாண்ட தீபத் திருவிழாவை நடத்தியவர் அனுஷம் திருநாள் மஹாராஜா மார்த்தாண்ட வர்மா மட்டுமே.
மறஜபம், மந்திரஜபம், ஸஹஸ்ரநாமஜபம், ஜலஜபம் என சுழற்சி முறையில் பிரார்த்தனைகள் நடந்தபின் பத்ரதீபம் ஏற்றிய பிறகு லட்சதீபத் திருவிழா தொடங்கும். தன் வாழ்நாளில் இதை முழுதாகச் செய்யும் பேறு பெற்றார், மஹாராஜா மார்த்தாண்ட வர்மா.
தொடர்ந்து அரசு மற்றும் ஆலயப் பணிகளை மேற்கொண்டாலும், பல்வேறு போர்களில் உடன்நின்று அங்கங்களை இழந்த, உயிர் தியாகம் செய்த வீரர்களை எண்ணி மனமுடைந்தார் மஹாராஜா மார்த்தாண்ட வர்மா.
அந்த மன அழுத்தமே அவரை இறைவனிடம் சரணடையத் தூண்டி, கன்யாகுமரியில் இருந்து பரவூர் வரை விரிந்து பரந்திருந்த திருவாங்கூர் ராஜ்ஜியத்தை ஸ்ரீபத்மநாப ஸ்வாமிக்கு காணிக்கையாக்கச் செய்தது.
திருப்படி தானம்
1750 ம் வருடம், தை மாதம் ஐந்தாம் நாள் காலை, குறிப்பிட்ட நேரத்தில் தன் ஆண், பெண் உள்ளிட்ட அனைத்து குடும்ப உறுப்பினர்களுடன், அவருக்கு மிக நம்பகமான திவான் ராமய்யன் மற்றும் இதர அதிகாரிகளுடன் ஸ்ரீபத்மநாபஸ்வாமி ஆலயத்துக்கு வந்தார் ஸ்ரீ அனுஷம் திருநாள் மஹாராஜா.
கோவிலின் தலமு சாமியார், யோகம் குழுவினர், மறையோதும் அந்தணர்கள் அனைவரின் முன்னிலையில், தன் செங்கோல், மணிமுடி, குடை, வெண் சாமரங்கள், ராஜ முத்திரையிட்ட மணிகண்டம் உள்ளிட்ட திருவாங்கூர் அரசர்களுக்கான சின்னங்கள் மற்றும் பொருட்களோடு, பல போர்களில் வெற்றி ஈட்டுத் தந்த அவரது புகழ்பெற்ற வாளையும், தனது இறையாண்மையையும், அதிகாரத்தையும் ஸ்ரீஅனந்த பத்மநாபனின் சந்நதிக்கு எதிரே இருக்கும் ஒத்தக்கல் மண்டபத்தின் படிகளில் துளசி இலைகளுடன் வைத்து வணங்கி, தன்னையும் அரச குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும், திருவாங்கூர் ராஜ்ஜியத்தையும் ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமிக்கே தந்து, தங்கள் பரம்பயையையே பத்ம நாப தாஸர்களாக பிரகடனம் செய்து, பெருமாளுக்கு ஒப்புக்கொடுத்தார்.
அனுஷம் திருநாள் மஹாராஜாவிற்கு முன் பரம்பரையாக திருவாங்கூரின் மன்னராக இருந்தவர்களும் ஏனைய அரச குடும்பத்தின் ஆண்களும், தங்களை மட்டுமே ஸ்ரீபத்மநாப தாஸர்களாகத் அர்ப்பணித்திருக்க, தன் அரச குடும்பம், நாடு, அதிகாரம், அரச சின்னங்கள் என அனைத்தையும் அனந்தனிடம் சமர்ப்பித்து, ஸ்ரீ பத்மநாப ஸ்வாமியையே இறையாண்மையுடன் ஆட்சி செய்யும் சக்ரவர்த்தியாகவும், தன்னையும், தனது குடும்பத்தினரையும், தன் பிற்கால சந்ததிகளையும் ஸ்ரீபத்மநாப ஸ்வாமியின் தாஸர்களாகவும் அர்ப்பணித்துப் பிரகடனம் செய்துகொண்டார்.
அது மட்டுமின்றி, இந்த நிகழ்வை ஆவணப்படுத்தி, பத்திரமாகப் பதிந்து, அரச முத்திரையுடன் கையொப்பமிட்டு, உலகில் சூர்ய, சந்திரர்கள் இருக்கும்வரை, திருவாங்கூர் ராஜ்ஜியத்தின் உடமை, மரியாதை, பீடம் மற்றும் அனைத்து உரிமைகளையும் ஸ்ரீ பத்மநாப ஸ்வாமிக்கு சாஸனம் செய்து கொடுத்தார்.
தலைமைப் பூஜாரி பிரார்த்தனைக்குப் பின் மன்னரின் வாளை மன்னரிடமே திருப்பிக் கொடுத்தார். மஹாராஜா மாரத்தாண்ட வர்மா, இதன் பின்னர் வரும் திருவாங்கூர் மன்னர்கள் போர்கள் மூலம் நிலத்தைக் கைப்பற்றினால், அதுவும் ஸ்ரீபத்மநாப ஸ்வாமியையே சேரவேண்டும், இதைத் தன் சந்ததியர் ஏற்பர் என்றும் அறிவித்தார்.
இதன்பின் வந்த அரசர்கள் அனைவரும் வேணாட்டு மணிமுடியை வாழ்வில் ஒருமுறை மட்டுமே அணிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வு திருப்படி தானம்
என்று அழைக்கப்படுகிறது.
மற்ற அரசர்களைப் போல மஹாராஜா ஸ்ரீ மார்த்தாண்ட வர்மாவும் ஹிரண்யகர்பம் மற்றும் துலாபுருஷதானம் இரண்டையும் செய்து, குலசேகர பெருமாள் எனும் பட்டத்தை ஏற்றார்.
தன் கடைசி மூச்சு வரை அனந்தனும் அவனது அம்பலமுமே சிந்தையில் இருக்க, தனது மருமகனும் அரியணைக்கு வாரிசுமான ஸ்ரீ கார்த்திகை திருநாளிடம் சில ஆலோசனைகளை வழங்கி வாக்குறுதிகளை பெற்றுக்கொண்டார்.
மஹாராஜா அனுஷம் திருநாள், தன் வாழ்வின் கடைசி நிமிடங்களில்
“எக்காரணம் கொண்டும் ஸ்ரீபத்மநாபஸ்வாமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ராஜ்ஜியத்தில் மாற்றங்கள் கூடாது.
வரும் காலங்களில் வெற்றி கொள்ளும் இடங்களும் ஸ்ரீ பத்மநாபஸ்வாமியையே சாரும்.
கோவில் தொடர்பான கொடைகள், அதற்கென நியமிக்கப்பட்ட குழுக்கள் மற்றும் தர்ம காரியங்களை எள்ளளவும் மாற்றவோ, குறைக்கவோ கூடாது” என்றதை, சிரமேற்கொண்டு ஏற்ற ஸ்ரீ கார்த்திகை திருநாள் ராம வர்மாவை ஆசீர்வதித்த மன்னர், சுற்றமும், அரண்மணை அதிகாரிகளும் பணியாட்களும் தாளாத சோகத்துடன் குழுமி நிற்க, ஸ்ரீ பத்மநாப ஸ்வாமியின் திருநாமத்தை சத்தமின்றி உச்சரித்தபடி பெருமாளின் திருவடிகளை அடைந்தார்.
ஸ்ரீ பத்மநாப தாஸ மஹாராஜா அனுஷம் திருநாள் வீர பால வர்ம குலக்ஷேத்ர பெருமாளின் பூத உடலின் மேல் ஸ்ரீபத்மநாப பெருமாளின் திருமேனியை அலங்கரித்த பட்டு வஸ்திரம் போர்த்தப்பட்டதாக, பதிவு செய்யப் பட்டுள்ளது.
மஹாராஜா பத்மநாபதாஸ மார்த்தாண்ட வர்மாவின் ஒப்பிடவோ, ஈடுசெய்யவோ இயலாத சேவையும் பக்தியும் பங்களிப்பும் அனந்தனின் ஆலய வரலாற்றில் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டியவை.
இறைவனின் சித்தமல்லாது, மனித யத்தனித்தில் இத்தனையும் சாதிப்பது சாத்தியமன்று.
முகிலன்
ஆட்சிப் பொறுப்பையும் ஆலயப் பணியையும் சிறப்பாக நடத்தியதோடன்றி, பாரத தேசத்தில் ஊடுருவி இருந்த அந்நிய சக்திகளை திருவாங்கூர் ராஜ்ஜியத்தின் செழுமையும் வளமையும், திருவனந்தபுரம் ஸ்ரீ அனந்த பத்மநாப ஸ்வாமி கோவிலின் பிரமாண்டமும் செல்வ வளமும் ஈர்த்ததில், ஏராளமான படையெடுப்புகள் நிகழ்ந்தன.
வேணாட்டு அரசி உமையம்மா ராணிக்கும் எட்டுவீட்டில் பிள்ளை குடும்பத்துக்குமிடையே நிலவிய பகையை பயன்படுத்தி முகிலன் எனும் முகலாயப் படைத் தலைவன் வேணாட்டின் மீது படையெடுத்தான்.
கொல்லம் பகுதி முகிலனின் ஆதிக்கத்தின் கீழ் இருக்க, மத மாற்றத்தை அஞ்சியும் ஆலயத்தின் புனிதம் கருதியும் ஸ்ரீ பத்மநாப ஸ்வாமி கோவிலை சில நாட்கள் பூட்டி வைத்திருந்தனர்.
முகிலனும் அவனது படைகளும் ஸ்ரீ அனந்தபத்மநாப ஸவாமியின் நிலவறை பொக்கிஷங்களை கொள்ளையிட செய்த முயற்சி, நாற்றுக்கணக்கான தெய்வாம்சம் பொருந்திய பாம்புகளின் தலையீட்டால் முறியடிக்கப்பட்டது.
நெடுமங்காட்டில் தஞ்சம் அடைந்திருந்த ராணி உமையம்மா தேவி, கோட்டயம் கேரள வர்மாவின் உதவியை நாடினார்.
நடந்த போரில் யாரால், எங்கிருந்து வீசப்பட்டதென தெரியாத கல் ஒன்று அங்கிருந்த குளவிக் கூட்டை கலைத்துவிட, அதனால் தாக்கப்பட்ட மொகலாய வீரர்களையும் முகிலனையும் எளிதாக வெற்றி கொண்டது கோட்டயம் கேரள வர்மாவின் படை.
திப்பு சுல்தான்
திருவாங்கூரின் செல்வமும் வளமையும் மைசூர் ராஜ்ஜியத்தை ஆண்ட திப்பு சுல்தானைக் கவர, இரண்டு முறை படையெடுத்தார்.
தர்மராஜா எனப்பட்ட ஸ்ரீ கார்த்திகை திருநாள் மஹாராஜாவின் படைகளால் நெடுங்கோட்டா எனும் இடத்தில் முறியடிக்கப்பட்டார்.
திப்புவிடமிருந்து பறிக்கப்பட்ட அவரது அரசின் கொடி, திருவாங்கூர் படைகளால் கைப்பற்றப்பட்டு, ஸ்ரீபத்மநாப ஸ்வாமியின் ஆராட்டு விழாவில் ஏந்திச் செல்லப்பட்டது. பிறகு திப்புவின் கொடியை நகலெடுத்து , வருடந்தோறும் ஆராட்டு உற்சவத்தில் வெற்றிச் சின்னமாக ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்படுகிறது.
திப்புவின் படைகள் முறியடிக்கப்பட்டாலும், கிழக்கிந்திய கம்பெனியின் துணைப்படைக் கொள்கையில் சேர்ந்து, ஒரு பகுதி பிரிட்டிஷ் படைகளை வைத்துப் பராமரிக்கவும் திருவாங்கூர் அரசை நிர்ப்பந்தித்தது.
தர்மராஜாவிற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஸ்ரீ பலராமவர்மா சற்று பலவீனமானவராக இருந்ததில், வேறு வழியின்றி, கிழக்கிந்திய கம்பெனியுடன் திருவாங்கூர் சமஸ்தானம் துணைப்படைக் கொள்கையில் இணைவதாக ஒப்புக்கொண்டார்.
துணைப்படை திட்டம் மட்டுமன்றி ராஜ்ஜியத்தின் செயல்பாடுகளை கண்காணிக்க, ஆலோசனைகள் வழங்க, கம்பெனியார்க்கும் சமஸ்தானத்ததிற்கும் செய்தித் தொடர்பாளர் போல் செயல்பட பிரிட்டிஷ் பிரதிநிதி (Resident) ஒருவரும் நியமிக்கப்பட்டார்.
துணைப்படைக் கொள்கையை எதிர்த்து, தனித்து நின்ற ராஜ்ஜியங்கள் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாயினர். தங்களது சமஸ்தானத்தை முழுதாக விட்டுக் கொடுக்க மனமின்றியும், சில சலுகைகளுக்காகவும், நெருக்கடியைத் தவிர்க்கவும், இந்திய சுதேச சமஸ்தானங்கள், வேறு வழியின்றி இதற்கு ஒப்புக்கொண்டன.
மைசூர் பிரிட்டிஷ் படைகளுக்கிடையே நடந்த மூன்றாம் போரில் திருவாங்கூரின் சார்பில் பிரிட்டிஷ் படைகள் இடையிட்டு மைசூர் மாகாணத்தைக் கைப்பற்றியபின் துணைப்படைத் திட்டத்திற்கு திருவாங்கூர் சமஸ்தானம் ஒப்புதல் அளித்தது.
இதன் பலனாக பிரிட்டிஷ் பிரதிநிதிகள் (British resident), சமஸ்தானத்தின் உள் விவகாரங்களில் தலையிட்டனர்.
பிரிட்டஷார் கேட்ட தொகையை கொடுக்க இயலாது, பொருளாதர நெருக்கடியை சந்தித்தது திருவாங்கூர் அரசு. தொடர்ந்து நடந்த மோதல்களில் ஏற்பட்ட காயங்களினால் பிரிட்டஷரை எதிர்த்த தளவாய் வேலுதம்பி என்பவர் இறந்துபோனார். பிரிட்டிஷார் திருவனந்தபுரத்தைக் கைப்பற்றினர்.
தனது முன்னோர்களும் ஸ்ரீ பத்மநாப ஸ்வாமியின் நித்திய தாஸர்களுமான திருவாங்கூர் மன்னர்கள் வீரம், பக்தி, வரலாறு, எல்லா இடுக்கண்களிலும் துணை நின்ற ஸ்ரீ பத்மநாப ஸ்வாமியின் அருட் கருணையை எண்ணி மேலும் பெருமாளை விஸ்வாசித்தனர்.

Author: VedhaVishal
Article Title: அனந்தன் காடு 3
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.