விழிகள் தீட்டும் வானவில் -23
“சுகந்தி... எங்க இருக்க...? இந்தா புடி.... யப்பா... வெளில என்னமா வெயில் கொளுத்துது.... மண்டைல ஸ்ட்ரா போட்டு உறுஞ்சுற மாதிரி இருக்கு...” ஆர்பாட்டமாக உள்ளே வந்த விஸ்வம் படபடவெனப் பொரிந்து தள்ள,
“எதுக்கு இப்படி மொட்டை வெயில்ல அலையுறீங்க...? சொன்ன பேச்சு கேட்க மாட்டேங்குறீங்கன்னு அவன் கத்துறான்... உங்க இரண்டு பேருக்கு நடுவுல மாட்டிக்கிட்டு நான் தான் முழிக்கிறேன்...” தயாராக வைத்திருந்த மோர் டம்ளரை கொண்டு வந்து நீட்டியபடியே அங்கலாய்த்தார் சுகந்தி.
இப்போதும் மகனை குறை சொல்லுகிற மாதிரி அவர் பேச்சு இருந்தாலும், அதில் ஒரு சதவிகிதம் கூடக் கவலையோ ஆற்றாமையோ இல்லை. மாறாகப் பெருமிதமே நிரம்பி வழிந்தது.
வெடவெடவென ஒடிந்து விழுபவர் போல இருந்தவர், கொஞ்சம் சதை போட்டதில் முதுமைக்கே உரிய அழகில் முகம் மலர்ச்சியாகச் சிரித்தது. விஸ்வம் மட்டும் என்ன? கண்களில் கருவளையம் விழுந்து தன்னம்பிக்கை இல்லாமல் தளர்ந்து போய் இருந்தவர், இப்போது பத்து வயது குறைந்தது போன்ற துள்ளல் அவர் நடையில்.
அன்று நேத்ரா தனியாக வாங்கி விட்ட பிறகு, ஆகாஷ் என்ன நினைத்தானோ தெரியாது, மந்திரித்து விட்ட கோழி மாதிரியே இரண்டு நாட்கள் சுற்றிக் கொண்டு இருந்தான்.
இருந்திருந்தார்போலத் திடீரென்று “ஏம்பா... நீங்களும் ஹோட்டலுக்கு வந்து அப்பப்ப உட்காருங்களேன். என்னாலயும் ரொம்ப நேரம் அங்க இருக்க முடியல. நரேனுக்கு வெளில அலையுறதுக்கே சரியா இருக்கு....” காலை உணவு உண்ணும் அவசரத்தில் அவன் கேட்டு வைக்க,
ஹாலிலேயே மெல்ல நடைப் போட்டுக் கொண்டிருந்த விஸ்வத்திற்குத் தண்ணீர் குடிக்காமலேயே புரை ஏறியது.
‘என்கிட்டயா பேசினான்...?’ என்று அவர் ஒரு நொடி விதிர்க்க, சுகந்திக்கும் அதே சந்தேகம் தான். பேப்பர் படித்தபடி அங்கு அமர்ந்திருந்த ராமநாதன் தான், “கேக்குறான்ல... பதில் சொல்லேன்...” என்று ஒரு அதட்டல் போட்டார்.
அவன் அப்பா என்று கூப்பிட்டு பேசியதே ஆச்சரியம் என்றால், தன்னை நம்பி ஒரு பொறுப்பைக் கொடுக்கிறானா...?
வெளியே நாலு பேர் இருக்கும்போது எதையாவது சொல்ல, ‘அப்பா’ என்று அழைப்பானே தவிர, யாரும் இல்லாத பொழுதில் மூச்... மிஞ்சி போனால் ‘அவருகிட்ட சொல்லிடுங்க’ என்று அம்மாவிடம் கண்ணைக் காட்டுவான். என்னவோ இப்போது..!?
வெளியே நிகழும் பேச்சு வார்த்தைகளைக் காதில் வாங்கியபடியே நமட்டு சிரிப்புடன் அறையிலிருந்து வந்த நேத்ரா, “சூப்பர் மாமா.. சரின்னு சொல்லுங்க...” அவரிடம் கட்டை விரல் உயர்த்திக் காண்பித்தவள், ஆகாஷைப் பார்த்து அர்த்த பாவத்துடன் சிரிக்க, அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் விஸ்வம் இல்லை.
“என்ன விஸ்வா யோசிக்கிற...?” தந்தையின் குரல் மீண்டும் அவரை உசுப்ப, “ம்ம்.. வரேன்பா... ஆனா.. எனக்கு அதைப் பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாதே...” விஸ்வம் தயங்கி தயங்கி சொன்னார்.
“சதாசிவம் மாமா மட்டும் என்ன செய்யுறாரு..? நம்ம ஆளுங்கன்னு கூட நின்னாலே போதும். வேலை செய்யுறவங்களுக்கு ஒரு பயம் வரும். மேனேஜரை மாத்தி விடுற சமயம் கல்லால உக்காருங்க... அப்புறம் சரக்கு வந்து இறங்குறதை, ஸ்டாக் வைக்குறதை எல்லாம் ஒரு பார்வை பார்த்துக்கணும்...”
“இதெல்லாம் என்ன பெரிய ஆரிய வித்தையா...? பேக்டரில நீங்க பார்க்காத வேலையா இது..?” அவன் அசால்ட்டாகச் சொல்வது போலிருந்தாலும் அந்த வார்த்தைகள் வறண்டு போயிருந்த அவரது நம்பிக்கையின் மேல் நீர் தெளித்தது.
“எப்ப இருந்து வரட்டும்..? இன்னிக்கே உன் கூடயே வந்துடுவா....? ஏன் சுகந்தி இப்பயே போகட்டுமா...?” முதன் முதலாக ப்ளேஸ்கூல் போகும் மழலையின் ஆர்வத்துடன் அவர் கேட்க, அந்தப் பரிதவிப்பில் ஆகாஷின் கண்களே கலங்கி விட்டன என்றால் மற்றவர்களைப் பற்றிக் கேட்கவே வேணாம்.
“வாங்கப்பா... இன்னிக்கு வந்து கொஞ்ச நேரம் இருங்க... மதியானம் ஸ்டுடியோ போறதுக்கு முன்னாடி உங்களை வீட்டுல விட்டுட்டு போறேன்....” பழைய வாஞ்சையுடன் பேசியவனைப் புரியாத ஆச்சரியத்துடன் பெற்றவர்கள் பார்த்தார்கள் என்றால், அவனுக்கோ தன்னை நினைத்தே ஒருவித கனத்த உணர்வு.
‘இதை நான் எப்பயோ பண்ணியிருக்கலாம்... எவ்வளவு டெஸ்பெரேடட்டா கேக்குறாரு.... ப்ச்....’ உள்ளுக்குள் கலவையான உணர்வுகள் பிசைய,
“என் செல்ல குட்டிடா நீ... இப்ப தான் நீ என்னோட ஆகாஷ்... லவ் யூ சோ மச்...” குறுகுறுக்கும் எண்ணங்களுடன் சட்டையை டக்-இன் செய்து கொண்டிருந்தவனின் முதுகில் அழுந்த பதிந்தது அம்முவின் இதழ் முத்தம்.
‘உனக்குத் தான்டி தேங்க்ஸ் சொல்லணும்...’ மனதுக்குள் நினைத்துக் கொண்டவன் வெளியே சொல்லவில்லை. நன்றி, மரியாதை என்ற பார்மாலிட்டிகள் எதுவும் இல்லை, அவர்களின் அன்பு பந்தத்தில்.
முதுகில் சாய்ந்திருந்தவளை முன்னே இழுத்து மனைவியை இறுக அணைத்துக் கொண்டவன், அவள் இதழ்களில் ஆழ்ந்த முத்தமிட்டான்.
“எப்படியோ உன் காரியத்தைச் சாதிச்சுக்கிட்ட இல்ல... இப்ப உனக்குச் சந்தோசமா....?” அவள் மூக்கோடு மூக்கு வைத்து அவன் சண்டை போட,
“ஆமா... இவரு இப்பதான் இந்தியா பாகிஸ்தான் அமைதி ஒப்பந்தத்துல கையெழுத்து போட்டுட்டு வந்துருக்குறாரு.... நான் அப்படியே சந்தோசத்துல பூரிச்சு போய் ஓடி வந்து உன்னைக் கட்டிகிட்டேன்...” நக்கல் பேசவில்லை என்றால் அவள் கௌரவம் என்ன ஆவது !?
“வேதாளம் திரும்ப முருங்க மரம் ஏறிடாம சாமி... மாமா அங்க முன்ன பின்ன இருந்தாலும் கண்டுக்காம விடுங்க... அடுத்தவங்க முன்னாடி பட்டுன்னு பேசி அவரை மூட் ஆப் பண்ணிடாதீங்க...” அவள் அடுத்த ராமாயணத்தைப் படிக்க, அவன் கடுப்பாகிப் போனான்.
“ஏய்.. நீ என்னைப் பத்தி என்ன தான் நினைச்சுக்கிட்டு இருக்க...?” அவன் முறைக்க, “ம்ம்.. கொம்பேறி மூக்கன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன் ...” சளைக்காமல் வந்தது அவள் பதில்.
“பேசாம போடி... எங்கப்பாக்கும் எனக்கும் ஆயிரம் இருக்கும்.... சும்மா நடுவுல வந்து நாட்டாமை பண்ணாதே...” உரிமைப் போர் தொடுத்தவன், “விட்டா என்னை வில்லனாவே ஆக்கிடுவா போல இருக்கு....” பெருமூச்சுடன் முணுமுணுத்தான்.
“என்ன பண்ணுறது வில்லன் சார்... நீங்க வில்லனாவே இருந்தாலும் எனக்கு ஜீரோவாச்சே...சை... சாரி... சாரி... லிப்பு ஸ்லிப்பு ஆகிடுச்சு... நீங்க எனக்கு ஹீரோவாச்சே, உங்களைப் போய் நான் விட்டு கொடுப்பேனான்னு சொல்ல வந்தேன்...” அவள் கேலி சிரிப்புடன் வெறுப்பேற்ற,
“யப்பா.. இந்த வாய் மட்டும் இல்லேன்னா உன்னையெல்லாம் ஒரு நாய் கூட மதிக்காது.... இப்படித்தான் உங்ககிட்ட வர்ற பேஷண்டை எல்லாம் பேசி பேசியே சாவடிக்குறியா...? ” வாய் தான் திட்டியதே தவிர, அவன் கண்களும் உதடுகளும் சிரித்துக் கொண்டிருந்தன.
“பின்ன... அதான் ஈஸி அண்ட் காஸ்ட் சேவிங் டூ... யூ க்நோ கஸ்டமர் சேடிஸ்பேக்ஷன் இஸ் மை அல்டிமேட் மோட்டோ...” அவள் அதற்கும் உதார் விட்டதில் ,அவன் தலையில் அடித்துக் கொண்டான்.
ஒருவழியாக அவன் கிளம்ப, “பார்த்துக்கோ ஆகாஷ்...” லேசான கவலைத் தொனிக்கும் குரலில் சொன்னபடி நேத்ரா அவன் பின்னாலேயே வந்தாள்.
“எங்கம்மா கூட என்னை நம்பி எங்கப்பாவை அனுப்பிடுவாங்க போல... நீ இருக்கியே?” அவள் பண்ணுகிற அலம்பலில் அவனுக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.
“என்னமோ கொடுமைக்கார மாமியாரு வீட்டுக்குப் பொண்ணை அனுப்பி வைக்கிற மாதிரி சீன் போடுற...” கிண்டல் பேசினாலும், அவளைத் தன் பக்கம் திருப்பி அவள் கண்களைப் பார்த்தவன் ஒரே ஒரு வார்த்தை சொன்னான்.
அதற்குப் பிறகு நேத்ரா வாயையே திறக்கவில்லை.
“அவரு ‘என் அப்பா’டி...” அழுத்தமான அந்தச் சொற்களுக்கு மேல் அவள் வேறு என்ன பேச?
அன்று விஸ்வத்தைத் தன்னுடன் அழைத்துச் சென்றவன், மெல்ல மெல்ல வேலைகளை அவருக்குக் காட்டி விட, ஆரம்பத்தில் தடுமாறினாலும் விரைவிலேயே சூட்சமத்தை பிடித்துக் கொண்டார் விஸ்வம்.
வியாபாரத்தின் நெளிவு சுளிவுகள் மகனின் வாயிலாகவே புலப்பட, கூடவே நரேனின் ஆதரவும் இருந்ததால் கற்றுக் கொள்வதில் ரொம்பச் சிரமப்படவில்லை.
‘சும்மா இருக்கும் மனம் சாத்தானின் உலைக்களம்’ என்று சொல்வதில் நூறுக்கு இருநூறு சதம் உண்மை உண்டு. அதை முழுமையாக உணர்ந்தவர் விஸ்வம்.
இவ்வளவு நாட்களாகச் சும்மாவே பொழுதை வெறுமையாகக் கழித்துக் கொண்டிருந்தவருக்கு நேரத்தை விறுவிறுப்பாக வைத்துக் கொள்ளும் வேலையும், உடன் பேசிக் களிக்கும் மனிதர்களும் அமைந்து போக, போன காலங்கள் எல்லாம் என்னவோ கொடுங்கனவு கழிந்தது போலத் தோன்றியது.
சதாசிவமும் உடன் இருந்து உதவ, அவரது நட்பு வயதுக்கு ஏற்ற துணையாகவும் இருந்தது. முன்னாளில் ட்ரைவர், பின்னாளில் சம்மந்தி, இப்போது தோழமை என்று வாழ்க்கை காட்டிச் செல்லும் விதவிதமான பரிமாணங்களில் இருவரும் நட்பில் நெருங்கி இருந்தார்கள்.
எல்லாவற்றுக்கும் மேல் தன் மேல் பழையபடி அக்கறை காட்டும் மகனின் பாசம் உடலுக்கு ஒன்பது லிட்டர் பெட்ரோல் போட்டது போன்ற உத்வேகத்தைக் கொடுக்க, மனைவியின் நிம்மதியும், வயதில் நலிந்த பெற்றோரின் சந்தோசமும் அவரைச் சீக்கிரமே பழைய விஸ்வமாகக் கொண்டு வந்து நிறுத்தி இருந்தது.
குடும்பத்திற்குள் நிலவும் இணக்கமும் நிம்மதியும் தானே வாழ்க்கையின் ஆதார ஸ்ருதி. அந்த நிறைவில் அகமும் முகமும் மலர விச்ராந்தியாக அமர்ந்திருந்த கணவரை நிம்மதியுடன் பார்த்தார் சுகந்தி.
“ஆகாஷ் எங்க.. கிளம்பிட்டானா...? அவன் கிளம்பறதுக்குள்ள வந்துடலாம்னு தான் அவசர அவசரமா வந்தேன்...” அவர் உள்ளே பார்த்தபடியே வினவ,
“இல்ல... இப்ப தான் கிளம்பிக்கிட்டு இருக்கான். வந்து கொஞ்ச நேரம் தூங்கிட்டான்.... நான் தான் நேரமாச்சேன்னு எழுப்புனேன்...”
“எதுக்கு எழுப்புன...? அவன் படுக்கிறதே பெருசு... நைட்டெல்லாம் ஏதோ ரிலீஸ் வேலையில இருந்தான்னு அம்மு சொல்லுச்சுல்ல...” அவரின் கண்டன குரலுக்குப் பதிலாக ஆகாஷே தயாராகி வந்து நின்றான்.
“நான் தான்பா அம்மாவை எழுப்பி விடச் சொன்னேன். ஈவினிங் பர்ஸ்ட் காபி ரிலீஸ் பண்ணுறாங்க... அதுக்குள்ள எல்லாத்தையும் முடிச்சாகணும். இன்னும் சின்னச் சின்ன வேலை பாக்கி இருக்கு...”
அவன் செய்கிற சினிமா வேலைகளைப் பற்றி ‘ஆனா ஆவன்னா’ கூடப் புரியாவிட்டாலும் அவன் விளக்கம் கொடுப்பதிலேயே மனசு குளிர்ந்து போய் விட்டது அவருக்கு.
“சரிப்பா.. பார்த்துக்கோ... வேலை, வேலைன்னு உடம்பை கவனிக்காம விட்டுடாதே... எனக்கும் உங்கம்மாக்கும் அதுதான் பெரிய கவலை...” அக்கறையாகச் சொன்னார்.
அந்த வாஞ்சை நெஞ்சை தொட்டு நெகிழ்த்தினாலும் ஆகாஷ் வெளியே எதையும் காண்பித்துக் கொள்ளவில்லை. “ம்ம்..” என்று மட்டும் மெல்ல முனகி வைத்தான்.
“அப்புறம்... இந்தா... இது நேத்தைக்கும் இன்னிக்கும் வந்த கலெக்ஷன் பணம். இன்னிக்கு வந்து இறங்குன ஸ்டாக்குக்குச் செட்டில் பண்ணிட்டேன்...” தன் கையில் வைத்திருந்த சின்ன லெதர் பையிலிருந்து அவர் எடுத்துக் கொடுக்க,
“ஓகே...” என்றபடி எடுத்துப் பார்த்தவன், பணத்தை எண்ணி எவ்வளவு வந்தது, யாரிடம் எவ்வளவு கொடுத்தார் என்று கேட்டு தெரிந்து கொண்டான். அவர் தன் குறிப்பு நோட்டை வைத்துத் தகவல்கள் சொல்ல, மனதிற்குள்ளேயே கணக்கு போட்டவன்,
“சரி.. இதை உள்ள வைங்க... மீல் பாஸ் அக்கவுண்ட் மட்டும் டேலி ஆகல... இவனுங்களோட பெரிய தொல்லையா இருக்கு. அமௌன்ட் கிரெடிட் பண்ண அறுபது நாளுக்கு மேல எடுத்துக்குறானுங்க... பேசாம நெக்ஸ்ட் ஏப்ரல்ல இருந்து இந்த ஸ்கீமையே கட் பண்ணி விட்டுட போறேன்...”
மகன் கட் அண்ட் ரைட்டாக முடிவுகள் எடுப்பதை எப்போதும் போல இப்போதும் கண்ணகலாமல் பார்த்துக் கொண்டிருந்தார் விஸ்வம்.
“இந்தா... அம்முவுக்குச் சாப்பாடு..” அம்மா கொடுத்த லஞ்ச் பேகை வாங்கிக் கொண்டவன், “சரி... நான் கிளம்புறேன்...” என்றபடி எழ, “சரி கண்ணா... பணத்தை எடுத்து உள்ள வச்சிட்டு போ...” கூடவே குளித்துத் தயாராகத் தானும் எழுந்தார் விஸ்வம்.
“உங்ககிட்டயே வைங்க... நாளைக்கு நான் பேங்க் போகும்போது வாங்கிக்குறேன்...” அவன் இலகுவாகச் சொல்லிவிட்டு புறப்பட, “இரு.. இரு... அந்த வேலையே வேணாம். முதல்ல இதை உன் பீரோல வச்சிட்டுக் கிளம்பு... பண விஷயத்துல அஜாக்கிரதையா இருக்கக் கூடாது...” வேகமான மறுப்பு விஸ்வத்திடம்.
இப்போது மட்டுமில்லை, அவர் எப்போதுமே அப்படித் தான். கடையின் வரவு செலவுகளைக் கவனிப்பாரே தவிர, அன்றாட வருமானத்தைக் கொண்டு வந்து ஆகாஷ் கையில் ஒப்படைத்து விடுவார். அப்போது தான் அவருக்கு நிம்மதி.
பணத்தைக் கையாள பயம் என்பதை விடக் கடந்த கால அனுபவங்கள் பெரிய படிப்பினையைக் கொடுத்திருக்க, “நான் பணத்தை வச்சு பாதுகாக்க லாயக்கு இல்லாத ஆளு.... யாரு யாருக்கு எந்த வேலை சரியா செய்யத் தெரியுமோ அதை மட்டும் தான் செய்யணும்...” உறுதியாகச் சொல்லிவிடுவார்
“கேக்க மாட்டீங்களே...” அலுத்துக் கொண்டே ஆகாஷ் உள்ளே சென்று பணத்தை லாக்கரில் வைத்து விட்டு கிளம்பினாலும், இந்நேரம் நேத்ரா அருகில் இருந்திருந்தால் தன்னை எப்படி எப்படியெல்லாம் திட்டியிருப்பாள் என்ற நினைவிலேயே அவன் முகத்தில் புன்னகை அரும்பியது.
“நீங்க அந்த அளவுக்கு அவங்களை எல்லாம் மிரட்டி வச்சிருக்கீங்க... பாவம் அவரு.. இந்தக் குரங்குகிட்ட வச்சுக்க வேணாம்னு உடனே உடனே கொண்டு வந்து கொடுத்துடுறாரு...” கண்ணைச் சுருக்கியபடி முறைப்பவள்,
“என்கிட்ட எல்லாம் உங்க அதிகாரத்தைக் காட்டணும்னு நினைக்காதீங்க... பிச்சுடுவேன் பிச்சு..” அவனை வம்பு சண்டைக்கு இழுத்திருப்பாள்.
“எதையாவது உளறிக்கிட்டே உக்காந்திரு.... உனக்கெல்லாம் வாய் வலிக்கவே வலிக்காதா?” அவன் சலித்துக் கொண்டால், “அது எப்படி வலிக்கும்? சும்மா இருந்தா போர் தான் அடிக்கும். நீ வேலையையே கட்டிக்கிட்டு அழுகிற... எனக்கும் கொஞ்சம் என்டர்டெயின்மெண்ட் வேணும்ல...”
அவள் தொடர்ந்து நீட்டி முழக்குவதில், “வர வர உன் அலம்பலுக்கு அளவே இல்லாம போயிடுச்சு... ஆளை விடு” கடைசியில் இவன் தான் அடங்கிப் போகவேண்டும்.
மனைவியை மனதில் நினைத்த நொடி மனசெங்கும் உற்சாக இழைகள் பரவ, ஆகாஷ் தன் போனில் இருந்த நேத்ராவின் சிரிப்பை ஒருமுறை எடுத்துப் பார்த்துக் கொண்டான்.
புன்னகையோடு அவன் இடது கை விரல்கள் இமேஜை விரித்துப் பார்க்க, வலது கை ஆக்ஸிலேட்டரை முறுக்கி பைக்கை பறக்க விட்டது.
“அவன் பாட்டுக்கும் செல்லை நோண்டிகிட்டே ஒரு கைல வண்டியை ஒட்டிக்கிட்டுப் போறான். அப்புறம் பார்த்தா தான் என்ன? இந்தக் காலத்து பசங்க பொண்டாட்டி இல்லாம கூட இருந்துடுவானுங்க போல இருக்கு.. அந்த போனு இல்லாமல் இருக்க மாட்டேங்குறானுங்க...”
அவனை அனுப்ப வெளியே வந்த சுகந்தி, அவன் தன் பொண்டாட்டியை தான் பார்க்கிறான் என்று தெரியாமல் வழக்கமான அம்மாவாக அலுத்துக் கொண்டே வீட்டிற்குள் சென்றார்.
ஆனால், யாரிடம் புலம்பினாரோ அவர் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். வீட்டில் வேறு யாருமில்லை. பார்வதியும் ராமநாதனும் வைஷ்ணவி குடும்பத்தோடு டெல்லி போயிருந்தார்கள்.
வருண் வீட்டில் தங்கியிருந்து அங்கே எல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு வருவதாக ஒரு லாங் டூர். இங்கே எல்லாம் சீரடைந்ததை எண்ணி நிம்மதி கொண்ட பெரியவர்கள் அங்கே உள்ள கோவில்களை ரவுண்டு கட்டிக் கொண்டிருக்க, இப்போது வீட்டில் இவர்கள் இருவர் மட்டுமே.
“என்ன யோசனை..? எந்திருச்சுப் போய்க் குளிங்க... டேங்க் தண்ணி சுட்டு கெடக்கு... பக்கெட்டுல பிடிச்சு வச்சு குளிங்க...” ரிமோட்டை அழுத்தியபடியே கணவரை உசுப்பிய சுகந்தி, அவரின் நீடித்த அமைதியில் ‘என்ன’வென்று பார்க்க,
“ம்ம்.. ஒண்ணுமில்ல...” விஸ்வம் இப்போது தான் பார்ப்பது போலத் தாங்கள் இருந்த வீட்டை ஒரு முறை சுற்றி பார்த்துக் கொண்டார். போரூர் வீட்டு பத்திர வேலைகள் முடிந்து, கொஞ்சம் புதுப்பிக்கும் வேலைகள் செய்து இவர்கள் இங்குக் குடியேறி எட்டு மாதங்கள் ஓடி இருந்தன.
அவர்கள் விற்று விட்ட வந்த திருப்பூர் வீட்டின் மூன்றில் ஒரு பாகம் தான் இந்த வீடு. ஆனால் சதுர அடிகளின் அளவா முக்கியம்!?
‘இந்த வீட்டில் அதிர்வுறும் மகிழ்ச்சி அலைகள் ஒவ்வொன்றும் என் மகனின் உழைப்பிலும், வியர்வையிலும் வந்தது’ இந்த நினைப்பே சொல்ல முடியாத இறுமாப்பையும் சந்தோசத்தையும் கொடுத்தது விஸ்வத்திற்கு.
“என் பையன் என்னை மாதிரி இல்ல.. திறமைசாலி... கெட்டிக்காரன்.. இல்ல?” அவர் பெருமிதமாகச் சொல்ல, சுகந்தி புரியாத புன்னகையோடு கணவரை திரும்பிப் பார்த்தார்.
“அம்முவும் சரியா கைட் பண்ணுது... என்ன செய்யலாம், எப்ப எப்படிச் செய்யலாம்னு.., இப்ப இருக்கிற புள்ளைங்க எல்லாத்தையும் யோசிச்சு பண்ணுதுங்க... நம்மளை மாதிரி வாழ தெரியாம வாழல...”
கொஞ்சமும் ஆதங்கம் தொனிக்காத குரலில் பெருமையாகவே அவர் சொன்னாலும், சுகந்திக்கு வருத்தமாக இருந்தது. “ஏங்க.. உங்க திறமைக்கு மட்டும் என்ன குறை..? ஏதோ நம்ம நேரம்..?” அவர் ஆறுதலாகக் குறுக்கிட,
“சே.. சே.. நான் எதுவும் குறைபட்டுக்கிட்டு எல்லாம் சொல்லல. உண்மையிலேயே இதுங்க பிளான் பண்ணி ஒவ்வொண்ணையும் பண்றதைப் பார்த்தா ஆச்சரியமா இருக்கு. ஒரு பக்கம் பெருமையாவும் இருக்கு. நான் எல்லாம் ‘கண்டதே காட்சி, கொண்டதே கோலம்’ னு வாழ்க்கையை ஓட்டுனவன். நான் போற போக்குக்கு நீயும் கூட வந்த... அப்புறம் எப்படி எப்படியோ நம்ம காலம் போயிடுச்சு..”
எப்போதோ அபூர்வமாக வாய்க்கும் தனிமையில் விஸ்வம் மனதில் இருப்பதை எல்லாம் பகிர்ந்து கொள்ள, அவர்கள் இருவரும் கடந்து சென்ற காலத்தின் மலரும் நினைவுகளைப் புரட்டியபடி இருந்தார்கள்.
“இவங்கல்லாம் இந்த வயசுலயே எவ்வளவு ஸெல்ப் கண்ட்ரோலோட இருக்காங்கன்னு பாரு... ஆசை, பெருமைன்னு நினைச்சு மத்தவங்க பார்வைக்காக எதையும் செய்யுறதில்ல.. அதுக்காகத் தேவையான அவசியங்களை விட்டுக் கொடுத்துக்கிறதும் இல்ல...” விஸ்வம் மகனை, மருமகளை, இளைய தலைமுறையை எனச் சிலாகித்துக் கொண்டே செல்ல,
“ம்ம்.. அது என்னவோ சரி தான்.. நாம இப்படில்லாம் யோசிச்சு வாழ்ந்திருந்தோம்னா நல்லா தான் இருந்திருக்கும்...” பெருமூச்சுடன் ஆமோதித்தார் சுகந்தியும்.
“ஆகாஷும் சரி, அம்மு, சௌமியும் சரி, நம்ம வாழ்க்கையைக் கூடவே இருந்து பார்த்ததுனாலயோ என்னவோ, ஒவ்வொண்ணையும் பார்த்து பார்த்துக் கவனமா தான் செய்யுதுங்க... அதுங்களுக்கு எதைக் கொடுத்தமோ இல்லையோ, பெரிய படிப்பினையைக் கொடுத்திருக்கோம்..” மனைவி சொல்வதை முழுமையாக ஒத்துக் கொண்ட மாதிரி தலையசைத்தார் விஸ்வம்.
தளிர்நடையாக நடக்க முயலும்போதே, வலுவென முதுகில் அடி வாங்கி, கீழே விழுந்து எழுந்து, தன்னைக் கண்டு எள்ளி நகையாடும் சிறுமைகளைப் புறக்கணித்து, மனதில் உறுதியை எஃகென இறுக செய்து, வலிக்க வலிக்க வாழ்க்கைப்பாடம் கற்றுக் கொள்கிறார்கள் சிலர், ஆகாஷைப் போல.
அவர்கள் பின்னாளில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கண்ணி வெடியை கடப்பது போன்ற கவனத்துடன் எடுத்து வைப்பார்கள். வெற்றித் தோல்விகளைக் கடந்து வாழ்க்கையைத் தம்வசப்படுத்தி வென்றெடுப்பவர்கள் அவர்கள்;
சிலருக்கோ பரீட்சை வைத்து பெயிலாக்கி விட்ட பிறகு தான் பாடங்களையே நடத்த ஆரம்பிக்கிறது இயற்கை - விஸ்வம், சுகந்தியைப் போல. வயதில் முக்கால்வாசியைக் கடந்தபிறகுதான் வாழ்வின் சூட்சமம் என்ன என்று அறிந்து கொள்பவர்கள் இவர்கள்;
இருக்கட்டுமே, காலம் முதிர்ந்து போனாலும் தான் என்ன?
நல்ல விஷயங்களைப் பார்க்கவும், கேட்கவும், கற்றுக் கொள்ளவும், அனுபவிக்கவும், ஆராயவும் இவர்களுக்கும் இன்னும் ஆயிரமாயிரம் சந்தர்ப்பங்கள் உள்ளதே; அந்த வகையில், வாய்ப்புகளை வஞ்சமில்லாமல் வழங்கிக் கொண்டே இருப்பதில் வாழ்க்கை எனும் ஆசான் மகா வள்ளலும் கூட.

Author: SudhaSri
Article Title: விழிகள் தீட்டும் வானவில் -23
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.