விக்றோம்!!
அத்தியாயம் 1
அது ஒரு வெள்ளிக்கிழமை. இரவு மணி பத்து. ஆனால் வெளியே இருந்த சலசலப்பு இன்னும் இரவு வரவில்லை போலவே என்றது. கார், பஸ், இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் என்று பலதரப்பட்ட வாகனங்களின் சத்தம் நிற்காமல் தொடர்ந்தது. இவையெல்லாம் நிற்காமல் விடிய விடியத் தொடரும். அந்த சத்தங்களை தாலாட்டு போல் கொண்டு தூங்கப் பழகி விட்டோம் நாங்கள். இதெல்லாம் இல்லை என்றால் தான் தூக்கம் வரமாட்டேன் என்று அடம்பிடிக்கும்.
"உலகம் எல்லாம் கொரானாவோட சேர்த்து வொர்க் ஃப்ரம் ஹோம்னு ஒன்னு வந்தாலும் வந்தது. யார் எப்போ தூங்குறாங்க, எப்போ வேலை செய்யுறாங்கன்னே தெரிய மாட்டேங்குது." அடுத்த வீட்டு அம்புஜம் இன்று காலையில் கூட புலம்பினார்.
"என்ன செய்யறது அம்புஜம்? எங்களுக்குமே ஆரம்பத்தில் கஷ்டமாத் தான் இருந்துச்சு. ஆனா இப்போ இதுவே பழகிப்போயிடுச்சு. ஆஃபீஸ் வரச் சொன்னால் தான் கஷ்டமா இருக்கும் போல இருக்கு" என்று சமாளித்திருந்தேன்.
"இந்த தண்ணீர் பாட்டில் சீக்கிரம் நிறைஞ்சால் தேவலை" என்று அலுத்துக் கொண்டே படுக்கை அறையைத் திரும்பிப் பார்த்தேன்.
"ஆஹா.. பெட் ரூம்ல இன்னும் லைட் எரியுது. டிவி சத்தம் வேற கேட்கிற மாதிரி இருக்கே. இல்லேன்னா ஏதாவது ஆஃபீஸ் கால்ல இருக்காரோ?. எப்படியோ, அவர் இன்னும் முழிச்சிட்டு தான் இருக்கார். அவரோட வழக்கமான ராகத்தை ஆரம்பிக்கிறதுக்குள்ள நாம போய் தூங்கிடுவோம்."
அந்த நொடியில் எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்தில் வார்த்தைகள் சத்தமாகவே வெளியே வந்தது. தண்ணீர் பாட்டில்களுடன் அவசரம் அவசரமாகப் படுக்கை அறைக்குள் நுழைந்தேன். என்ன இது ஏதோ ராகம் என்று சொல்கிறாளேன்னு கேட்கிறீங்களா, பல வீடுகளில் கேட்கும் குடும்பத் தலைவரின் குறட்டையில் தோன்றும் இனிமையான ராகம் தான்.
ஆனால், அந்தோ பரிதாபம்! அவர், என்னவர் திருவாளர் தனசேகரன் ஏற்கனவே தனது ராகத்தைத் தொடங்கி இருந்தார், இன்று வழக்கமான குறட்டை வடிவில் அல்லாது வேறு வடிவில்.
திருமதி.அபிராமி தனசேகரன் என்னும் நான் இந்த இந்திய திருநாட்டில் பல லட்சக்கணக்கான பேர் செய்வது போல நேரம் காலம் தெரியாமல் மடிக்கணினியை முறைத்துப் பார்க்கும் பணியில் இருப்பவள்.
இன்றைய இளைஞர்களுக்குப் புரியும் தெளிவான தமிழில் சொன்னால் நான் ஒரு ஐடி எம்ப்ளாயி. சுமார் முப்பது வருடங்களுக்கு முன் ட்ரைனி என்று ஆரம்பித்த பதவி டெவலப்பர், சீனியர் ப்ரோகிராமர், டீம் லீடர், ப்ராஜக்ட் மேனேஜர் என்று காலத்திற்கு ஏற்ப பல்வேறு வடிவங்களையும் முன்னேற்றங்களையும் பெற்று இன்று வேறு வழியின்றி டைரக்டர் என்ற பெயரில் வந்து நிற்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அப்ரைசல் என்று வரும் போது நானாகவே கிளம்பி விடுவேன் என்று எதிர்பார்த்து ஏமாந்து போய் வேறு வழியின்றி என் உழைப்புக்குக் கிடைத்த பரிசு அது.
கொரோனா உபயத்தில் அந்த வேலையும் வீட்டிலேயே நடந்ததில் வாரத்தில் ஐந்து நாட்கள் வீட்டு வேலையா, அலுவலக வேலையா எதைச் செய்கிறோம் என்றே தெரியாமல் ஏதோ ஒன்றை விடிந்தது முதல் அடைவது வரை நிற்காமல் செய்து ஓய்ந்து போகும் மத்தியதரப் பெண் வர்க்கத்தின் பிரதிநிதி நான்.
'அப்பாடா! வெள்ளிக்கிழமை இரவு வந்து விட்டது. இன்னும் இரண்டு நாட்களுக்கு அலுவலக வேலை கிடையாது' என்று நிம்மதியாக உறங்க வந்தவளை அறைக்குள் இருந்து வந்த வித்தியாசமான சத்தம் பயமுறுத்தியது.
"வீடு வாங்கலையோ வீடு! தாயே வீடு வாங்கலையோ வீடு! ஒன்றரை மனை இடம் தாயே! நல்ல தண்ணீ வசதி இருக்கு! சென்னைல கோடை காலத்தில் கூட வத்தாத கிணறு, வீட்டு வாசல்லயே பஸ் ஸ்டாப், நடக்கிற தூரத்தில் ரயில்வே ஸ்டேஷன், இன்னும் இரண்டு வருஷத்தில் மெட்ரோ ரயில் வருது. கடை கண்ணி எல்லாம் கூப்பிடற தூரத்தில் இருக்கு! விலையும் இந்த ஏரியா பட்ஜெட்டை விட கம்மி தான்! இதே அளவுக்கு இன்னொரு வீடு கட்டற அளவுக்கு இடம் வேற இருக்குது! …."
தொலைக்காட்சியை உற்றுப் பார்த்து அதிலிருந்து எந்த சத்தமும் வரவில்லை என்று உறுதி செய்து கொண்டேன்.
எங்கிருந்து வருகிறது இந்த சத்தம் என்று கவனித்துக் பார்த்தால், இது நாள் வரை குறட்டை சத்தத்தால் என் தூக்கத்தைக் கெடுத்த என் கணவர் தனசேகரன் தான் தூக்கத்தில் உளறிக் கொண்டிருந்தார்.
விட்டால் விடிய விடியத் திருவிளையாடல் சிவாஜி போலப் பாடிப் பாடி ஊரைக் கூட்டி வீட்டை விற்று விட்டுத் தான் மறு வேலை பார்த்திருப்பார் போலும்.
"ஆண்டவா! இந்தக் கொடுமைய நான் எங்கே போய் சொல்ல? கொஞ்சம் உளறாம தூங்குறீங்களா? ஒரு நாளாவது என்னை நிம்மதியா தூங்க விடுறீங்களா? ஒன்னு, ஊருக்கே கேட்கிற மாதிரி குறட்டை விட வேண்டியது இல்லேன்னா எதையாவது புலம்ப வேண்டியது" என்ற எனது எரிச்சலான குரலிலும் முதுகில் விழுந்த அடியிலும் நல்ல தூக்கத்தில் இருந்து சட்டென்று எழுந்து அமர்ந்து பேந்தப் பேந்த விழித்தார்.
கூடவே, 'யாரடி நீ மோகினி?' என்று ஒரு பார்வையும் பார்த்து வைத்தார். திருவிளையாடல் காலத்தில் இருந்து வெளியே வந்த தாக்கம்.
"இந்த பார்வைக்கு ஒன்னும் கொறச்சல் இல்லை. ஏங்க! இப்படித் தூக்கத்தில கூவிக்கிட்டு இருந்தா வீடு வித்துடுமா. அததுக்கு ஒரு நேரம் காலம் வந்தால் எதுவும் தானா நடக்கும். ஏதோ நம்மோட போதாத நேரம், இப்படி கொரோனா வந்து உலகமே முடங்கிப் போகும்னு கனவா கண்டோம்? யாருக்கும் எந்தக் காரியமும் நினைச்ச படி நடக்க மாட்டேங்குது. நம்மாலான எல்லா முயற்சியும் செஞ்சுட்டு தான் இருக்கோம். இந்த தண்ணியக் குடிச்சிட்டு அமைதியா படுங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும்."
தண்ணீர் பாட்டிலை அமைதியாக வாங்கிக் குடித்தவரைப் பார்க்கப் பாவமாகத் தான் இருந்தது. அதற்காக வார இறுதியில் கிடைக்கும் நிம்மதியான தூக்கத்தைத் தியாகம் செய்து பேச்சு வார்த்தை நடத்த நான் தயாராக இல்லை.
அந்த ராத்திரி நேரத்தில் என்னால் இயன்ற அளவு அறிவுரைகளை வாரி வழங்கி அவரைச் சமாதானம் செய்ய முயன்றேன். எப்போதும் என் பேச்சைக் கேட்டாலே குழம்பிப் போகிறேன் என்பவர் இப்போது ஒரு லிட்டர் தண்ணீரையும் ஒரே மூச்சில் குடித்து விட்டுத் தெளிவாக எழுந்து உட்கார்ந்தார்.
"என்னவோ போ அபி. எனக்கு மனசே ஆறமாட்டேங்குது. இதே தெருவுல புதுசா கட்டுற இத்துனூண்டு ஃப்ளாட்ட கூட கோடி ரூபாய் சொல்றாங்க. அதையும் வாங்க ஆள் க்யூல நிக்குறாங்க. பெரிய வசதிகள் இருக்குன்னு வாய்ப் பந்தல் போடறாங்க, உள்ள போய் பார்த்தா வெறும் சுவரும் கதவும் மட்டும் தான் வீடுங்கிற பேருல தராங்க. நம்ம வீட்டுக்கு என்ன கொறச்சல். அந்தக் காலத்திலேயே எல்லா வசதியும் செஞ்சு வச்சிருக்கோம். நமக்குன்னு வர்றவங்க மட்டும் ஏன் ஆயிரத்தெட்டு கோளாறு சொல்றாங்க?"
"ஹாவ்வ்வ்வ்……" நான் ஆற்றிய உரையின் போது வராத கொட்டாவி எல்லாம் எனக்கு இப்போது படையெடுத்து வந்தது.
"ராத்திரி பதினோரு மணிக்கு இந்த ஆராய்ச்சி தேவையாங்க? எதுவானாலும் காலைல பேசிக்கலாம். இப்போ கம்முன்னு தூங்குங்க." படபடவென்று பேசிவிட்டு அவசரமாகத் திரும்பிப் படுத்துக் கொண்டேன்.
அடுத்த இரண்டாவது நிமிடம் அவரது வழக்கமான ராகம் தொடங்கியது. அவர் எப்போதும் அப்படித்தான், சட்டென்று அடுத்தவர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு விடுவார். அதன் சாதக பாதகங்களை ஆராய்வதெல்லாம் அவர் வேலை இல்லை.
வழக்கம் போல அது என் வேலை ஆகிப் போனதில், தூக்கத்திற்கு ஏங்கிய எனது தூக்கம் தூரமாகிப் போனது. நினைவுகள் அந்த வீட்டையும் எங்கள் வாழ்க்
கையையும் சுற்றிச் சுற்றி வந்தத