வான பிரஸ்தம் -22
முட்டுக்காடு போகும் வழியில் ஒதுக்குப் புறமாக இருந்த அந்த பங்களாவில் அன்று காலையில் இருந்தே அதிகமாக ஆள் நடமாட்டம் இருந்தது.
அன்பழகனின் மகன் தயா தன்னுடைய
அடியாட்களுடன் நிழல் மறைவான வேலைகளைச் செய்ய உபயோகித்து வந்த இடம் அது. ஆள் கடத்தல், பெண்களைக் கடத்தி அடைத்து வைத்து வெளிநாடுகளுக்கு அனுப்புவது,போதைப் பொருட்களைப் பதுக்கி வைத்து விநியோகம் செய்வது என்று எல்லா சட்டத்திற்குப் புறம்பான வேலைகளும் நடத்தும் இடம்.காண்ட்ராக்ட் கொலை மற்றும் டிரக் மாஃபியா நடத்தும் ஒரு மோசமான ஆள் தான் தயா. பல அரசியல் வாதிகளுக்கு நண்பன். நிழல் வேலைகள் செய்பவன்.
அந்த இடத்தில் ஒரு ரகசிய அறையில் பல மாதங்களாக விஷாகாவும் அவளுடைய அம்மா கலாவும் கட்டிப் போடப் பட்டிருந்தார்கள். உணவும் தண்ணீரும் மட்டும் வேளா வேளைக்கு அளிக்கப் பட்டன.
ஆமாம், விஷாகாவைக் கடத்தியது தயாவே தான். தனது தந்தை அன்பழகனின் கட்டளையின் பேரில். முதியோர் இல்லத்தில் இருந்த பெரியவர்களுக்குத் தொல்லைகள் அடுத்தடுத்துத் தந்து கொண்டிருந்த போது அன்பழகன் ஒரு நாள் விஷாகாவைத் தற்செயலாகப் பார்த்து விட அவளைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். தனது நண்பன் சத்யனின் மகள் தானென்று தெரிந்து கொண்டார்.
விஷாகா தனது தந்தையையும் தங்கையையும் எப்படியாவது சந்தித்துப் பேச வேண்டும் என்ற ஆசையில் தான் சென்னை வந்ததே. வழக்கறிஞர் சிவலிங்கம் கலாவின் பிறந்த வீட்டுப் பக்கம் ஒரு நல்ல குடும்ப நண்பர்.அவருடைய சிபாரிசில் தான் முதியோர் இல்லத்தில் விஷாகா வேலைக்குச் சேர்ந்தாள். குழந்தையில் இருந்தே சேவை மனப்பான்மை கொண்ட விஷாகாவிற்கு முதியோர் இல்ல வேலை மனதிற்கு மிகவும் பிடித்து விட்டது. தாத்தா பாட்டிகளின் அன்பும் அவளை வெகுவாகக் கட்டிப்போட்டு விட்டது.
தன்னுடைய அம்மா கலாவிடமும் தினசரி அவர்களைப் பற்றிப் பேசிக் கொண்டு தான் இருந்தாள். தன்னுடைய ஸெல்ஃபோன் மூலமாகத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டாள். .
அன்பழகன் விஷாகா எப்படியும் சத்யனை சந்திப்பதைத் தடுக்க வேண்டும் என்று திட்டம் போட்டு விஷாகாவைக் கமலாகருடன் வெளியே செல்லும் போது கடத்தினார்கள்.
விஷாகாவின் பேரைச் சொல்லி மிரட்டிப் பெரியவர்களைக் கடத்திக் கொன்று போட்டதும் அன்பழகனும் தயாவும் தான்.
தாத்தா, பாட்டிகள் இறந்ததும் அவர்களுடைய சடலங்களைப் புதைக்க இடம் தேடினார்கள். அவர்களுடைய புது ப்ராஜெக்டான ஓ.எம்.ஆர்.பகுதியில் முடியப் போகும் நிலையில் இருந்த அந்த வளாகத்தில் குழி தோண்டிப் புதைத்து விட்டார்கள்.
விஷாகாவின் பெயரைச் சொல்லிக் கலாவையும் சென்னைக்கு வரவழைத்து
அவளையும் விஷாகாவுடனே அடைத்து வைத்தார்கள்.
இவ்வளவு நாட்கள் விஷாகாவையும் கலாவையும் உயிரோடு விட்டு வைத்த காரணம் நிஷாந்தியுடன் தயாவின் திருமணம் நடக்காவிட்டால் விஷாகாவைக் கட்டாயப் படுத்தி தயாவிற்குத் திருமணம் செய்து வைக்கத் தான். கலாவின் உயிருக்கு ஆபத்து என்று பயமுறுத்தி விஷாகாவை தயாவிற்குத் திருமணம் செய்து வைத்து விட்டால் சத்யனின் சொத்துக்களில் பாதியை எப்படியாவது கைப்பற்றலாம் என்ற பேராசை தான்.
அன்று அந்த இடத்தில் பரபரப்பாகத்
திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. இரகசியமாகத் தான்.எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தது தயாவின் அடியாட்கள் தான்.கிங்கரர்களைப் போல அந்தத் தடிமாடுகள் அங்குமிங்குமாக ஓடிக் கொண்டிருந்தார்கள்.
அந்த அட்ரஸுக்குப் போய்ச் சேர்ந்த ஜில்ஜில் ரமாமணியும் ஜித்தனும் வெளியே ஒளிந்து நின்று அங்கே நடக்கும் பரபரப்பான வேலைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது சமையலுக்காக ஒரு குரூப் வந்து இறங்கியது. பாத்திர பண்டங்கள், சமையல் சாமான்களுடன் வந்து இறங்கிய அந்த குழுவில் சென்று ரமாமணியும் ஜித்தனும் கலந்து கொண்டார்கள். அந்த ஆட்களிடம் ஏதாவது வேலை கொடுத்து உதவி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்ள அவர்களும் தங்களுடன் சேர்த்துக் கொண்டு உள்ளே கூட்டிப் போனார்கள்.
அங்கே உள்ளே நுழைந்த தாத்தா, பாட்டி பேய்கள் ஒவ்வொரு அறையாகத் தேடி விஷாகாவையும் விஷாகாவின் அம்மாவையும் கண்டு பிடித்ததும் மகிழ்ச்சி அடைந்தார்கள். விஷாகா உயிருடன் இருப்பதும் அவர்களுக்கு சந்தோஷம். அவள் எந்தத் தவறும் செய்யவில்லை என்பது தெரிந்ததும் அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் சந்தோஷம்.
அதற்குள் அங்கு விஷாகாவிற்கு உணவு கொண்டு வந்த ரமாமணி, விஷாகாவைப் பார்த்து விட்டு ஆனந்தக் கண்ணீர் வடிக்க
விஷாகாவிற்கும் தனக்கு உதவி செய்ய ஒரு ஜீவன் வந்து விட்டது என்று மனதில் தெம்பு வந்தது.
தன்னுடைய அம்மாவிடம் முனியம்மாவைப் பற்றியும் ஏழுமலை பற்றியும் விவரமாக எடுத்துச் சொன்னாள் விஷாகா.
முனியம்மாவும் விஷாகாவிடம் தாத்தா பாட்டிகள் இறந்து இப்போது பேய்களாக உலவிக் கொண்டிருப்பதைப் பற்றிச் சொல்ல விஷாகா மனம் வருந்தினாள்.
" கவலைப் படாதே விஷாகா. நாங்கள் இங்கே உனக்கு மிக அருகில் தான் இருக்கிறோம். உன்னை இந்த இடத்தில் இருந்து விடுவிக்க வேண்டியது எங்கள்
பொறுப்பு."
என்று சொல்லித் தாத்தா, பாட்டி பேய்கள்
அவள் முன்னால் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள விஷாகாவின் முகம் கொஞ்சம் மலர்ந்தது.
" ஆனால் ஒரு சின்ன விஷயம்.நம்முடைய முதியோர் இல்லத்தை அபகரித்தது என்னுடைய அப்பாவின் கம்பெனி. அது தான் எனக்கு மன வருத்தமாக இருக்கிறது. உண்மையான பத்திரத்தைப் பற்றிக் கண்டுபிடிக்க முடியாததால்
போலிப் பத்திரம் தயாரித்துத் தான் பதிவு செய்திருக்கிறார்கள். அதனால் அந்தப் பத்திரப் பதிவே இப்போது செல்லாது என்று நிரூபித்து விடலாம்."
" எல்லாமே செய்து விடலாம். கவலையே படாதே. அதற்கும் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன"
என்று சொல்லி விட்டுத் தாத்தா ,பாட்டி பேய்கள் வெளியே சென்றன.
வெளியே அந்தப் பேய்கள் போனதும் முனியம்மாவும் ஏழுமலையும் விஷாகாவிடம் அந்த ஆறு குழந்தைகள் பற்றியும் அவர்களுடைய பெற்றோர் பற்றியும் எல்லாக் கதைகளையும் சொல்லி முடித்தார்கள்.
வெளியே தாத்தா பாட்டிகளின் கலாட்டா ஆரம்பித்தது. அடியாட்கள் எல்லோரையும் கிச்சுகிச்சு மூட்டி சிரிக்க வைத்தார் முத்தரசு. பூக்களை எல்லாம் கீழே கொட்டி
மாலைகளைப் பிய்த்துப் போட்டு அடுத்த ரகளை. கோலம் அழிக்கப் பட்டது. திருமணம் செய்து வைக்க வந்த ஐயர் அங்கு அக்னி வளர்க்க ஆரம்பித்தார். அக்னி வளர்த்த ஹோம குண்டம் அந்தரத்தில் நின்றது.
அடியாட்களை முதுகில் தட்டித் தலையில் கொட்டி அடித்து சீண்ட அவர்கள் எதிரில் நிற்பவன் தான் தன்னை அடிக்கிறான் என்று அவனைத் தாக்க ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு ஒரே ரகளை. கலாட்டா களை கட்டியது.
அடுத்து அங்கே தயா மணமகன் கோலத்தில் பட்டு வேட்டி, பட்டுச் சட்டையுடன் நுழையக் கூடவே அன்பழகனும் கோகிலாவும் கெத்தாக மணமகனின் பெற்றோராக உள்ளே நுழைந்தனர்.
அந்த இடம் இருந்த கோலத்தைக் கண்டு திகைத்துப் போனார்கள். அப்படியும் கொஞ்சம் கூட மனம் தளராமல் விஷாகாவை இழுத்து வந்து அவளுக்கு வலுக்கட்டாயமாகத் தாலி கட்ட முயற்சி
செய்தான் தயா.
அவனுடைய பட்டு வேட்டி உருவப் பட்டது. அவனுடைய சட்டை கிழிக்கப் பட்டது. அவனுடைய தலைமுடியைக் கொத்தாகப் பிடித்துத் தூக்கிய முத்தரசு தாத்தா அவனைத் தட்டாமாலை சுற்றுவது போலச் சுற்றி அவரும் மதன் தாத்தாவும் தயாவைத் தூக்கிக் தூக்கிப் போட்டுப் பந்தாடினார்கள்.
சீதாப் பாட்டியும் காவ்யாப் பாட்டியுமாகக் கோகிலாவைத் தூக்கிப் போட்டு விளையாடினார்கள்.
சுவற்றில் மோதி மோதி அவளைக் கீழே விழ வைத்து அவள் மேல் ஏறி மிதித்துத் தள்ளி விட்டார்கள்.
கமவாகரும் நல்லசிவமும் அன்பழகனின் இரண்டு கைகளையும் பிடித்து இழுத்து அழ வைத்தார்கள். நல்லசிவம் அன்பழகனின் தோள்களில் ஏறி உட்கார்ந்து கொண்டு
அவரை நடக்க விடாமல் தடுத்தார்.
அங்கு நடந்த கலாட்டாவை வாய் திறந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் அந்த முட்டாள் அடியாட்கள்.
சரியாக அந்த நேரத்தில் உள்ளே நுழைந்தாள் நிஷாந்தி. அங்கு இருந்த குழப்பமான சூழ்நிலையில் தன்னுடைய
அம்மாவையும் அக்காவையும் அடையாளம் கண்டு கொண்டு சந்தோஷமடைந்தாள்.
பின்னாலேயே அஷ்வினும்,ஆகாஷும் போலீஸுடன் வரத் திரைப்படங்களில் வரும் க்ளைமாக்ஸ் போல அன்பழகன், கோகிலா,தயா மற்றும் அடியாட்கள் அனைவரும் கைது செய்யப் பட்டனர்.
ஆகாஷும் அஷ்வினும் வக்கீல் சிவலிங்கத்திடம் பேசி உண்மையான பத்திரம் அவரிடம் இருப்பதை உறுதி செய்து கொண்டு அவரிடம் தாத்தா, பாட்டிகளுக்கு நேர்ந்த கதியைப் பற்றிச் சொன்னார்கள். அவர்களுடைய ஆவிகள் நிம்மதியில்லாமல் அலைந்து கொண்டிருப்பதைப் பற்றியும் சொல்ல அவர் வருத்தப் பட்டார்.
சிவலிங்கம் உடனே தனது நண்பரான ஒரு போலீஸ் கமிஷனரிடம் பேசி அவரின் உதவியையும் பெற்றுத் தான் அங்கு வந்தார்கள்.அவர்கள் கிளம்பிய சமயம் அத்வைதின் அம்மா தன்யா ஃபோன் செய்து முதலில் ஜில் ரமாமணி, ஜித்தனும் அவர்களைத் தொடர்ந்து நிஷாந்தியும் முட்டுக்காடு பக்கம் சென்ற விஷயத்தைச் சொல்ல, போலீஸ் துணையோடு அந்த முகவரிக்கே நேரே வந்து விட்டார்கள்.
நிஷாந்தி தன்னுடைய அம்மா, அக்காவிடம் ,
"சத்யன் பேரில் எந்தத் தவறுமில்லை; எல்லாமே அன்பழகனின் வேலை தான் ."
என்று எடுத்துச் சொன்னதும் அவர்களுக்கு நடந்த குற்றங்களின் பின்னணியில் இருந்த அன்பழகனின் சதித் திட்டங்கள் எல்லாமே புரிந்தன.
அப்புறமென்ன? எல்லாமே சுபமாக முடிந்தன. பல வருடங்களுக்கு முன்னர் பிரிந்த குடும்பம் இப்போது ஒன்று சேர்ந்தது.
முதியோர் இல்லம் இருந்த இடத்தை விற்பதாகப் பதிவு செய்த டிரான்ஸாக்ஷன் செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்து விட அந்த இடத்தில் திரும்பவும் முதியோர் இல்லம் தொடங்கப் பட்டது. கலா அதைப் பொறுப்பேற்று நடத்த ஆரம்பித்தார்.
சத்யனும் முதியோர் இல்லத்தின் நிர்வாகத்தில் உதவி செய்தார். வானப்ரஸ்தம் என்ற அதே பெயர் மீண்டும் சூட்டப்பட்டது.
விஷாகா, நிஷாந்தி இருவருமே தந்தையின் பிஸினஸைச் சிறப்பாகத் தொடர்ந்தார்கள்.
குழந்தைகள் மனசேயில்லாமல் தாத்தா பாட்டி பேய்களுக்கு விடை கொடுக்க, அந்தப் பேய்களும் கனத்த மனதுடன் மேலுலகம் சென்றனர்.
அவர்களுடைய உடல்களைப் பெற்று சம்பிரதாயப்படி இறுதிக் காரியங்கள் நடத்தினார்கள்.
அந்த ஆறு குழந்தைகளின் குடும்பங்களும் நிஷாந்தி, விஷாகா குடும்பத்திற்கு மிகவும் நெருங்கிய நண்பர்களாகி விட்டனர்.
முட்டுக்காடு சாலையில் இருந்த அந்த பங்களாவை முறைப்படி வாங்கி ஓரு கல்யாண மண்டபமாக மாற்றி முதல் கல்யாணமாகத் தன்னுடைய பெற்றோருக்கு விஷாகாவும், நிஷாந்தியும் மீண்டும் திருமணம் செய்து வைத்தார்கள்.
" இந்த முறை மட்டும் நீங்கள் விவாகரத்து செய்ய முடியாது. செய்ய நினைத்தால் தாத்தா, பாட்டி பேய்களைக் கூப்பிட்டு உங்களை ஒருவழி செய்து விடுவோம்."
என்று மிரட்டி வைத்தார்கள் விஷாகாவும்
நிஷாந்தியும்.
குழந்தைகள் ஆறுபேருக்கும் இப்போது திரும்பவும் போரடிக்க ஆரம்பித்தது. ஆறு நாய்க் குட்டிகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள் அவர்களுடைய பெற்றோர்கள்.
இப்போது கூட இரவில் சில சமயம் பேச்சு சத்தம், பாட்டு எல்லாம் கேட்பதாகத் தான் தோன்றுகிறது பெற்றோர்களுக்கு.
ஆனாலும் அவர்கள் கவலைப் படுவதில்லை. குழந்தைகளின் தலை மேல் ஆதிசேஷனாகத் தாத்தா பாட்டிகளின் அன்பும் ஆசீர்வாதங்களும்
என்றும் உண்டு என்ற நம்பிக்கை தான் அவர்களுக்கு.
நிறைவு பெற்றது.
நன்றி.
புவனா சந்திரசேகரன்.

Author: SudhaSri
Article Title: வான பிரஸ்தம் -22
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.