பகலிரவு பல கனவு - 8
சம்யுக்தா அமைதியாக அமர்ந்திருந்தாள். தாய், தந்தை, அண்ணன் என்று வீட்டில் யாரும் அவளுடன் பேசுவதே இல்லை. நீட் தேர்வில் தேசிய அளவில் பத்து இடங்களுக்குள் வந்தவளுக்கு டெல்லி எய்ம்ஸ்ல் கூட சீட் கிடைக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் இவளோ அடுத்த தெருவில் இருந்த மெடிக்கல் காலேஜில் தான் படிப்பேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தாள்.
அப்படி அந்தக் கல்லூரியை யாரும் குறை சொல்லவில்லை. ஆனாலும் எய்ம்ஸில் படிக்கக் கிடைக்கும் வாய்ப்பை தட்டிக் கழிக்க அவள் சொல்லும் உப்புச் சப்பில்லாத காரணங்கள் தான் வீட்டினருக்குப் பிடிக்கவில்லை. சம்யுக்தா என்ற பெயருக்கு ஏற்றவாறு எப்போதுமே தைரியமாக நடந்து கொள்பவள், இன்று தெரியாத ஊரிலே தனியா இருக்க முடியாது, அம்மாவைப் பார்க்க முடியாது, அப்பா சும்மாவே எப்போவே வராங்க, டெல்லி போயிட்டா எப்படி பார்க்கிறது என்று உப்புச் சப்பில்லாத காரணங்களை அடுக்கிக் கொண்டிருந்தாள்.
இவள் இப்படி நடந்து கொள்வதற்கு பிரபாகரனும் ஒரு காரணம் என்று அறியாத வீட்டினர் மௌனத்தால் அவளை வழிக்குக் கொண்டு வந்து விடலாம் என்று முடிவு செய்தனர். எப்போது அவள் அடம் பிடித்தாலும் அவளது தந்தை கையாளும் ஆயுதம் அது. எதை வேண்டுமானாலும் தாங்கிக் கொள்ளும் சம்யுக்தா தந்தை பேசாமல் இருப்பதைத் தாங்க மாட்டாள். அவர் பின்னோடு சென்று எப்படியாவது அவரைப் பேசவைத்து விடுவாள்.
இன்றோ, குடும்பமே அவள் விஷயத்தில் மௌன விரதம் இருந்து பழி வாங்க இவளோ தனது பிடிவாதத்தைத் துளியும் விட்டுத் தருவதாக இல்லை. “ஏம்மா! ப்ரீகேஜில இருந்தே இது கூடவே ஒட்டிட்டு அலையுமே ஓரு சில்வண்டு அது பேரென்ன.. ஹா.. சரண்யா அதுக்கு கவர்மென்ட் கோட்டால மெடிக்கல் சீட் கிடைக்கிறது கஷ்டம்னு கேள்விப்பட்டேன். நம்ம ஊரு இன்ஜினியரிங் காலேஜ்ல தான் சேரப் போகுதாம். ஒரு வேளை இவளும் அவளுக்காக இங்கேயே சேர நினைக்கிறாளோ?” என்றார் நம்ம ஃபாரஸ்ட் ஆஃபீஸர்,சம்யுக்தாவின் அப்பா.
“ஏம்பா, நீங்க வேற கொஞ்சமாச்சும் நாட்டுல நடக்கிறதையும் தெரிஞ்சுக்கோங்கப்பா. சிங்கம், புலி கூடவே இருந்து அவங்களை பத்தி தான் தெரியது உங்களுக்கு. ஏதோ லவ்வர் பார்க்கிறதுக்காக சம்யூ பிடிவாதம் பிடிக்கிறான்னு சொன்னா அதுல ஒரு மீனிங் இருக்கு. ஃப்ரண்ட பார்க்கணும்னு..ஹா… ஹா..ஹாஹா” என்று சத்தமாய் சிரித்த சம்யுக்தாவின் அண்ணனின் முகம் மாறியது. அப்படியும் இருக்கலாமோ என்று தோன்றியது.
“என்ன ச்ரவண்? அப்படியும் இருக்கலாமோன்னு யோசிக்கிறியா? அதெல்லாம் எதுவும் கிடையாது. எனக்கு என் பொண்ணைப் பத்தி நல்லா தெரியும். சும்மாவே ஹிந்தி தெரியாது போடான்னு சொல்லிட்டு திரிவா. அவளைப் போய் டெல்லிக்கு போகச் சொன்னா அப்படித் தான் பிடிவாதம் பிடிப்பா. எப்படியும் நாம ரொம்ப தூரத்துல கட்டிக் கொடுக்க மாட்டோம். நீயும் உங்க அப்பாவும் தான் வீடு தங்கறதே இல்லை. என் பொண்ணாவது கல்யாணம் வரைக்கும் என் கூட இருந்துட்டு போகட்டும். டின்னர் ரெடி, வேணும்னா வந்து சாப்பிடலாம்” என்று டாக்டர் மேடம் எழுந்து சென்று விட்டார்.
“அப்புறம் என்ன ஷ்ரவண், ராஜ மாதா கட்டளை போட்டாச்சு. அவங்க கட்டளையே சாசனம். வேற வழி இல்ல நமக்கு, அடுத்த வேளை சோறு வேணுமே”
“அதானே ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு நாக்கு செத்துப் போச்சு. ஏதோ அதிசயமா இரண்டு நாள் கிடைக்கிற வீட்டு சாப்பாட வேண்டாம்னு விடறதுக்கு நான் என்ன லூசா” என்று சாப்பாட்டு மேசை கிட்டத்தட்ட நோக்கி ஓடினான்.
இவர்களது பேச்சை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்த சம்யுக்தா எங்கே அவளது காதல் வெளிச்சத்திற்கு வந்துவிடுமோ என்று உள்ளூர நடுங்கிக் கொண்டிருந்தாள்.
அவள் முகத்தைக் கண்டால் கண்டிப்பாக அவளது தந்தை மகளது திருட்டுத்தனத்தைக் கண்டுகொள்வார் என்பது இருநூறு சதவீதம் நிச்சயம். அதனாலேயே கோபம் கொண்டது போல அறைக்குள் அடைந்து கொண்டே வெளியே நடக்கும் பேச்சு வார்த்தைகளை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“ஆனாலும், டாடி எனக்கு நம்ம வீட்டு குட்டிப்பிசாசு மேல கொஞ்சம் கூட நம்பிக்கையே இல்லை. ஒன்னு இதே ஊருல அது ஏற்கெனவே யாருக்கோ ஸ்கெட்ச் போட்டு வச்சிருக்கு. நம்ம கிட்ட சொல்லத் தான் நாள் பாக்குது. இல்லேன்னா அவன் கிட்ட இருந்து ரிப்ளை வர வெயிட் பண்ணுது. இது இரண்டும் இல்லேன்னா படிப்பு விஷயத்தில மேடம் இவ்வளவு பிடிவாதம் பிடிக்க அவசியமே இல்லை. டென்த் படிக்கிற வரைக்கும் யுகே போவேன், ராயல் காலேஜ்ல மெடிக்கல் படிப்பேன்னு சவால் விட்ட பொண்ணு இப்போ இப்படிப் பேசினா அதுக்கு காரணம் ஒன்றே ஒன்று தான்” என்றான் சாப்பிட்டு முடித்த டிஸ்கஷனைத் தொடர்ந்த ஷ்ரவண்.
இப்போது தாய்க்கு வயிற்றில் புளியை கரைத்து ஊற்றியது போலிருந்தது. டாக்டராக இருந்தாலும் மகளின் தாய் என்று வந்து விட்டால் அது வேறு மாதிரி தான். “என்னடா இது? இப்படி பயமுறுத்துற மாதிரி ஏதேதோ உளர்ற? அவ சின்னப் பொண்ணுடா, ஸ்கூல் முடிக்கும் போதே லவ்வா… முருகா…”
“ம்மா! நாம எந்த ஊர்ல இருக்கோம். அதுவும் போக மொத்த உலகமும் எங்கேயோ போயிட்டு இருக்கு. நான் அவ இப்போவே எங்கேயும் போயிடுவான்னு சொல்லலை. அவ மேல ஒரு கண்ணு வை. சாதாரணமா பேசு. அவ மெச்சூர்டான பொண்ணு தான். கண்டிப்பா அவ சூஸ் பண்ற ஆளும் பெட்ரா(????!!!!) தான் இருப்பான். நேரம் வரும் போது நாமளே பேசி முடிவு எடுப்போம்.” என்றான் அண்ணன்.
“ஹா.. அது தான் கரெக்ட்.. இப்போவே பேசினா அவ வேற ஏதாவது செய்ய நாமளே சான்ஸ் கொடுத்த மாதிரி ஆகிடும்” என்றார் அப்பா.
“அது சரி, இரண்டு பேரும் கிளம்பி நாளைக்கு காலைல அவங்கவங்க வேலையை பார்க்க போயிடுவீங்க. அடுத்து இந்த மாதிரி அவசர கால அழைப்புன்னு தந்தி அனுப்பி வச்சா வந்து சேருவீங்க. சொல்ற அட்வைஸ் எல்லாம் எனக்குத் தானே. நான் டாக்டர் வேலையைப் பார்க்கிறதா, இவளைப் பற்றி யோசிக்கிறதா. பிரசவம் பார்க்கும் நேரத்தில பொண்ணு என்ன பண்ணிட்டு இருப்பாளோன்னு யோசிச்சு ஏடாகூடமா எதையாவது செஞ்சு வச்சா போதும்மா நீ மருத்துவம் பார்த்ததுன்னு அனுப்பி வச்சிடுவாங்க” என்று சம்யுக்தாவின் தாய் புலம்பினார்.
ஏதாவது செய்து இவர்களை சமாதானம் செய்ய வேண்டும் என்று முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு வெளியே வந்தாள் சம்யுக்தா. “ம்மா! பசிக்குது மா!” அவ்வளவுதான். அந்த ஒற்றை சொல்லில் மற்ற எல்லாம் மறந்து போய் அவளது பசியே பிரதானமாகப் போனது.
சாப்பிட்டு முடித்ததும் அண்ணனும் தந்தையும் படிப்பு பற்றிய சில தகவல்களைப் பரிமாறிக் கொண்டனர். அவளுக்குத் தேவையான லேப் டாப், புத்தகங்கள் என்று பேச்சு சென்றது. சரண்யா என்ன செய்யப் போகிறாள் என்றும் ஒரு கேள்வி வந்தது.
“அவளுக்கு நார்த்ஈஸ்ட்ல ஏதோ ஒரு ஸ்டேட்ல கவர்மென்ட் கோட்டால சீட் கிடைக்குது. மத்தபடி நம்ம ஊர்ல எல்லாம் மேனேஜ்மென்ட் கோட்டால தான் கிடைக்குது. அதனால அவ நம்ம ஊர்லயே பயோ டெக்னாலஜி படிக்கிறேன்னு சொல்லிட்டா.”
அவளது பராக்கிரமங்களைப் பேசிக் கொண்டிருந்த போது சரியாக சரண்யா அங்கே என்ட்ரி கொடுத்தாள். இப்போது சம்யுக்தாவின் நிலை திரிசங்கு சொர்க்கத்தில் மிதப்பது போல ஆகிவிட்டது. எங்கே ஷ்ரவண் மறுபடியும் சம்யுக்தாவின் காதல் என்ற பேச்சை எடுத்து இந்த ஓட்டை வாய் சரண்யா பிரபாகரனைப் பற்றி ஆதியோடு அந்தமாய் உளறி வைத்தால் என்ன செய்வது என்ற பயம் பிடித்துக் கொண்டது.
ஆனால் அங்கே சரண்யாவோ நான் நல்லவள் வல்லவள் நாலும் தெரிந்தவள் எனக்கே நீட் மார்க் சரியில்லை என்றால் சாதாரண மக்கள் என்ன செய்வார்கள் என்று நீட் வேண்டாம் என்று போராட்டத்தில் குதிக்க தயாராகிக் கொண்டிருந்தாள்.
ஷ்ரவணுக்கு பயம் பிடித்துக் கொண்டது. எங்கே அவள் தனது அருமைத் தங்கையை லோக்கல் மருத்துவம் படிக்கக் கூட தடைசெய்து விடுவாளோ என்று பயந்து போனான்.
சரண்யா முத்தாய்ப்பாக ஒரு வார்த்தை சொல்லி ஷ்ரவண் வயிற்றில் பாலை வார்த்தாள். “நம்ம சம்யூ டாக்டர் ஆகியே தீருவேன்னு லட்சியம் வச்சிருக்கிற ஆளுண்ணா. நானெல்லாம் அப்படிக் கிடையாதே. அந்த மேடம் பாருங்க, அம்மா மாதிரி பிஜி கைனிக் முடிச்சிட்டு தான் ஓயும். எங்கே படிச்சா என்ன, படிக்கிற பிள்ளை படிக்கப் போகுது சரிதானப்பா?” என்று ஒரே வரியில் அனைவரையும் சமாளித்து விட்டாள்.
அவளைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து சம்யுக்தா, இப்படி ஒரு தோழமையைக் கொடுத்ததற்கு இறைவனுக்கு நன்றி சொன்னாள்.
இங்கு நிலவரம் இப்படி இருக்க, சம்யுக்தா என்ன செய்ய காத்திருக்கிறாள், அவளது முடிவு தான் என்ன என்று தெரியாத பிரபாகரன் மண்டையைப் பிய்த்துக்கொண்டு இருந்தான்.
விவரம் தெரிந்து வரத் தான் இன்று சரண்யாவை அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தான். சரண்யா அங்கே இருந்த முழு நேரமும் அவளது மொபைல் ஃபோன் ஆனில் இருந்தது. சம்யுக்தா இங்கு தான் யுஜி படிக்கப் போகிறாள் என்ற ஒரு வார்த்தை அவனுக்குப் போதுமானதாக இருந்தது. அதற்கு என்ன காரணமோ தெரியவில்லை. ஆனால் மனம் நிம்மதி அடைந்தது நிஜம். அவளை உடனே பார்க்க வேண்டும் என்று பரபரத்தது.
‘அது அவ்வளவு ஈஸி இல்லை சார். அவங்க அப்பா டிஸ்டிரிக்ட் ஃபாரஸ்ட் ஆஃபீஸர், அண்ணன் கொஞ்சம் நாளில் ஐபிஎஸ் ஆஃபீஸர்.. இந்த மாதிரி ஆட்களை சுத்தி வச்சுக்கிட்டு உனக்கு அவளை உடனே பார்க்கணுமா?? பார்த்து நீ யாருன்னு சொல்லிட்டேன்னா உடனே உள்ளே தூக்கி போட்டு பிரமாதமான விழா எடுத்துட்டு தான் விடுவாங்க. உனக்கு ஓகேவா?’ என்றது மனது.
“ஹும்….” என்று பெரிதாக மூச்சு விடும் வேளையில் உள்ளே நுழைந்தாள் சரண்யா.
“அட பிருத்விராஜ் சாருக்கு இதெல்லாம் கூட தெரியுமா?”
“நீ வேற ஏம்மா.. அங்கே என்ன நிலவரம்? அதைச் சொல்லு முதல்ல”
“புரியுது.. புரியுது… கொடுத்த வேலையை முதல்ல சொல்லித் தொலைன்றீங்க அதானே… அங்கே நீங்க பயப்படற மாதிரி எதுவும் இல்லை… எது நடக்குதோ அது உங்களுக்கு சாதகமாகவே நடக்குது.. உங்க ஆளு இங்கே தான் அடுத்த அஞ்சு வருஷம் படிக்க போறா.. போதுமா… இப்போ ஒரு ஜோடாவாவது கொடுக்கக் கூடாதா.. இங்கேயும் அங்கேயும் தொண்டை வறண்டு போச்சு தெரியுமா?”
“ஜோடா என்ன உன் ஃபேவரைட் ஃபலூடாவே குடி” என்று சிரித்துக் கொண்டே அவள் தலையில் தட்டி விட்டுச் சென்ற பிரபாகரனிடம் ஒரு அண்ணனின் பாசத்தை உணர்ந்தாள் சரண்யா.

Author: SudhaSri
Article Title: பகலிரவு பல கனவு - 8
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.