பகலிரவு பல கனவு -7
‘நான் ப்ருத்விராஜன் ஆவேன்’ என்று வீர சபதம் செய்து விட்டாலும் ப்ளஸ் டூ முடித்த பெண்ணைத் தொந்தரவு செய்ய பிரபாகரனின் மனம் தடுமாறியது நிஜம். அவன் பிறந்த ஊரில் பெண்களுக்கு கல்யாண வயது என்பது பதினாறிலேயே ஆரம்பித்து விடும். பல பெண்களிடம் உருவத்திற்கும் வயதுக்கும் சம்பந்தமே இருக்காது. பதினாறு வயதிலேயே இருபது வயதுத் தோற்றத்தில் காட்சி அளிப்பார்கள்.
சம்யுக்தா அப்படியும் அல்ல, பார்த்தால் பதினாறு வயது கூட மதிப்பிட முடியாத அளவுக்கு சிறு பெண்ணாக இருந்தாள். இவள் நிஜமாகவே ப்ளஸ் டூ முடித்துவிட்டாளா என்று அவ்வப்போது பிரபாகரனுக்கு சந்தேகம் வருவதுண்டு.
ஆனால் எப்படியும் பதினெட்டில் அடியெடுத்து வைத்திருப்பாள். இருந்தாலும் டாக்டராக வேண்டும் என்று லட்சியம் வைத்திருப்பவள், படித்த குடும்பத்தில் பிறந்தவள், பிரபாகரனுடனான உறவை எப்படி நினைக்கிறாள் என்று கணிக்க முடியவில்லை. பார்த்த இரண்டாம் தடவையே அவனிடம் மிகவும் உரிமை எடுத்துக் கொண்டவள் வேறு. அவளது பின்புலம் வேறு அவனை யோசிக்க வைத்தது.
பணம், பொருளாதாரம் என்றெல்லாம் கவலைப்படுபவன் அல்ல நமது பிரபாகரன். அவன் பார்க்காத பணம் அல்ல. ஜமீன்தார் போல இருந்து பாசத்தால் வாழ்ந்து கெட்ட குடும்பம் அவர்களது. பிரபாகரனைப் பொறுத்தவரை பணம் எப்படியோ அதே போலத்தான் சமூகம், ஜாதி என்பதும்.
உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பதை பணத்தாலோ பிறந்த ஜாதியை வைத்தோ எடை போட்டுப் பழக்கம் இல்லாதவன். ஆனால், அவனைப் போலவே மற்றவர்களும் இருப்பார்கள் என்று அவன் நினைக்க முடியாதல்லவா. இதோ, மச்சான் என்று சங்கீதா அவனை அழைத்த போது சம்யுக்தாவின் முகம் காட்டிய உணர்வுகள் அவனுக்குள் தயக்கத்தை விதைத்தது.
அந்த ஒற்றை வார்த்தையில் இவர்களின் பின்னணி என்னவாக இருக்கும் என்று நிச்சயம் அவள் ஒரு நொடியேனும் ஆராய்ச்சி செய்தாள் என்று நினைக்கும் போது அவளை நினைக்கவே கூடாது என்று தோன்றியது. அந்தஸ்து, ஜாதி, மதம் பார்த்து வருவதற்குப் பெயர் காதல் அல்லவே.
“ஏன் சரண், இன்னுமா மச்சான்ற வார்த்தை எல்லாம் யூஸ் பண்றாங்க? எங்க ரிலேடிவ்ஸ் எல்லாம் ஹஸ்பன்டயே வாடா போடான்னு கூப்பிட்டுட்டு இருக்காங்க. இவங்க என்னடான்னா டாக்டருக்கு படிச்சிட்டு இப்படி பழைய ஸ்டைல்ல இருக்காங்க?” என்று சரண்யாவின் காதைக் கடித்ததையும் கேட்ட போது சற்றே ஆறுதல் கிடைத்தது நிஜம்.
அதனால், கிழக்கும் மேற்கும் சேர நினைக்கும் போது என்னென்ன பிரச்சினைகள் வரும் என்று இப்போதே யோசிக்க வேண்டாம் என்று விட்டு விட்டான். ஒரு விஷயத்தை மட்டும் தவறாமல் கடைப்பிடித்தான். சம்யுக்தா படித்து முடிக்கப்படும், அப்போதும் அவளது மனம் மாறாமல் இருந்தால் தங்கள் உறவைப் பற்றி மேலும் யோசிக்கலாம் என்று அவளைப் பார்ப்பதையே தவிர்த்தான்.
பிஸியான நேரங்களில் கடை ஊழியர்களோடு தானும் ஒரு ஊழியனாக இறங்கி வேலை செய்பவன் சம்யுக்தாவின் தலையைக் கண்டுவிட்டால் சத்தமில்லாமல் காணாமல் போனான்.
ஆனால், சம்யுக்தாவோ கோச்சிங் சென்டருக்கு வரும் போதெல்லாம் ஜுஸ் குடிக்க வந்தாள். கண்களில் தேடுதலோடு ஜுஸ் குடிப்பவளைப் பார்க்கப் பாவமாகத் தான் இருந்தது. ஆனாலும் அவனுக்கு வேறு வழி தெரியவில்லை.
ஒரு ஞாயிற்றுக்கிழமை கூட ஜுஸ் கடையில் பணியாளரோடு நின்று வேலை பார்த்துக் கொண்டிருந்தவன் சம்யுக்தா வருவதைப் பார்த்து விட்டு அவசரமாகச் சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே வந்தான். ஆனால் சரியாக சம்யுக்தாவின் முன்னே வந்து நின்று மாட்டிக் கொண்டான். இத்தனை நாள் அவள் தான் இவனைப் பார்க்கவில்லை, இவன் அவளைப் பார்த்து விட்டுத் தானே மறைந்து கொள்கிறான்?
இன்று அத்தனைக்கும் சேர்த்து வைத்த கண் வாங்காமல் சம்யுக்தா அவனைப் பார்த்து வைத்தாள். பிரபாகரனுக்குப் பயம் பிடித்துக் கொண்டது. பட்டப் பகலில், ஊருக்கு மத்தியில் வெகுவாக ஜன நடமாட்டம் இருக்கும் போது இவள் இப்படிப் பார்த்தால் அவனது நிலைமை என்ன ஆவது. என்ன தான் இருவருக்கும் காதல் இருக்கிறது என்று ஒத்துக் கொண்டாலும் அது இப்போதே ஊருக்குத் தெரிவதில் பிரபாகரனுக்குத் துளியும் விருப்பம் இல்லை.
‘இப்போதைக்கு இரு குடும்பத்துக்கும் லிஃப்ட் வைத்தால் கூட சமமாகிவிடாது. பாரதிராஜா படத்தில் வருவது போல வெட்டு குத்து ஆகப் போவதில்லை. ஆனாலும் சம்யுக்தாவின் படிப்புக்கு இடையூறு வரலாம், பிரபாகரனின் தங்கையின் வாழ்க்கை கேள்விக் குறியாகலாம். ஏற்கனவே போதும் போதும் என்ற அளவில் பாடுபட்டு இப்போது தான் சற்றே தலைநிமிர ஆரம்பித்து இருக்கிறது அவனது குடும்பம். மீண்டும் அவனால் ஒரு தலைகுனிவு வருவதற்கு வழிவகுக்க முடியாது’ என்றெல்லாம் யோசித்த பிரபாகரன் சம்யுக்தாவை முறைத்ததில் அவள் தானாகவே வழிவிட்டு நகர்ந்து நின்றாள். இவன் புல்லட்டை எடுத்துக் கொண்டு கிளம்பிச் சென்றுவிட்டான்.
“சொன்னேனே! கேட்டியாடி.. இப்போ பாரு. அவன் பெரிய அப்பா டக்கர் மாதிரி உன்னை முறைச்சிட்டுப் போறான். நீ வேற ஆளே கிடைக்காத மாதிரி அவன் பின்னாடியே சுத்திட்டு இருக்க. இப்படியே போனா நான் ஒரு நாள் உங்க வீட்டுக்கு சொல்லிடப் போறேன் பாரு” என்று புலம்பினாள் சரண்யா.
“கொஞ்சம் பேசாமல் வர்றியா சரண்” என்று அவளை கடைக்குள் அழைத்துச் சென்று வழக்கமான இடத்தில் அமர்ந்து கொண்டாள் சம்யுக்தா.
“தேவை தான் டி எனக்கு. நான் எப்படியோ தெரியாது. நீ நிச்சயமா நீட் க்ளியர் பண்ணிடுவ. பேசாமல் டெல்லி, சென்னை எங்கேயாவது போயிடு. நல்ல நல்ல டாக்டர் எல்லாம் மாட்டுவாங்க. அதை விட்டு இந்த ஊர்லயே கமிட் ஆகி…” என்று பேசிக்கொண்டே சென்ற சரண்யா டக்கென்று நிறுத்தி விட்டாள்.
“ஏன் நிறுத்திட்ட சரண்? நான் இந்த ஊர்லயே கமிட் ஆகி இந்த மாக்கான் பின்னாடி சுத்திட்டிருக்கேன்.. அதானே சொல்ல வந்த.. நீ எப்படி வேணும்னாலும் சொல்லிக்கோ.. நான் அதைத் தான் செய்யப் போறேன். நீட்டுல ஃபுல் மார்க்கே வாங்கினாலும் நம்ம ஊரு மெடிக்கல் காலேஜ்லயே தான் சேரப் போறேன். என் வாழ்க்கை பூராவும் இந்த தேனி மண்ணுக்கே அர்ப்பணம்” என்று டயலாக் பேசினாள்.
பேசி முடித்தவள் பேயறைந்தவள் போலிருந்த சரண்யாவின் பார்வை சென்ற திசையைப் பார்க்க அங்கே பிரபாகரன் அய்யனார் கோலத்தில் அவளை முறைத்துக் கொண்டே அறைக்குள் சென்று படாரென்று கதவைச் சாத்தினான்.
“ஹேய்! யாருடி இந்த ஹேன்சம்? இது வரைக்கும் இங்கே பார்த்ததே இல்லையே?” என்ற சத்தம் கேட்டு திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள் சம்யுக்தா. அவளுடன் நீட் கோச்சிங் படிக்கும் இரண்டு பெண்கள் பிரபாகரனை முதன் முதலில் பார்த்து விட்டு பேசிக் கொண்டிருந்தார்கள்.
இவள் அவர்களை முறைக்காமல் அறை வாசலை முறைத்தாள். அதானே, அவன் படாரென்று கதவைச் சாத்தியதால் தானே இந்த கமெண்ட் வந்தது. கோபத்தில் நகத்தைக் கடித்ததில் விரலில் ரத்தமே வந்து விட்டது.
“அடப்பாவமே! அடியே சம்யூ! உங்க ஆளுக்கு… சரி..சரி.. முறைக்காத.. உன் ஆளு சரியான டஃப் கொடுப்பான் போலவே. இப்பவே நல்ல காம்படிஷன் இருக்கு. போகப் போக என்னாகுமோ? எதுக்கும் சீக்கிரம் ஒரு வழி பண்ணு” என்று அவளை ஏத்தி விட்டு வேடிக்கை பார்த்தாள் சரண்யா.
உள்ளே சென்ற பிரபாகரனுக்கோ சிரிப்பு வந்தது. இந்த காலத்துப் பிள்ளைங்களுக்கு எல்லாமே ஈஸியா போயிடுச்சு. பொது இடத்தில என்ன பேசறோம்னு ஒரு பயமே இருக்கிறதில்லை என்று நினைத்துக் கொண்டான். அதே சமயம் சம்யுக்தா நகம் கடிப்பது கண்டு மனதுக்குள் ஒரு உற்சாகம் கிளம்பியது. பாருடா, நம்ம ஆளுக்குப் பொறாமை என்று சிரித்துக் கொண்டான்.
அவனது மனசாட்சி, ‘இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை. பொண்ணு வந்து தைரியமா பேசுது. ஏதேதோ காரணத்த சொல்லி தட்டிக் கழிச்சு இப்போ நம்ம ஆளாமில்ல’ என்று கேலி செய்தது.
“என்ன இருந்தாலும் சின்ன பொண்ண டிஸ்டர்ப் பண்றது தப்பு பாஸ்” என்று சத்தமாகச் சொல்லி மனசாட்சியை அமுக்கி வைத்தான். எத்தனை நாளுக்குன்னு நானும் பார்க்கிறேன் என்று சவால் விட்ட மனசாட்சி அமைதியானது.
சரியாக சம்யுக்தா கிளம்பும் நேரத்தில் கல்லாவில் வந்து நின்று கொண்டான். எல்லாரும் paytm, gpay என்று போக இவள் ரூபாய் நோட்டுகளை எண்ணி நீட்டினாள். பிரபாகரன் நெற்றிக் கண்ணைத் திறந்ததில் சம்யுக்தா சாம்பலாகாமல் போனது ஆச்சரியம்.
அந்த முறைபுக்கெல்லாம் சம்யுக்தா அசரவில்லை. அமைதியாக பணத்தை மேசை மேல் வைத்து விட்டு வேகமாக வெளியே சென்று விட்டாள். ஒரு பெருமூச்சுடன் அவசரமாக அந்தப் பணத்தை எடுத்துக் கொண்ட பிரபாகரன் தனது பர்ஸில் ஒரு ஓரத்தில் வைத்துக் கொண்டான்.
நாட்கள் மெல்ல நகர நீட் தேர்வும் வந்து சேர்ந்தது. அதுவும் முடிந்த பிறகு எதற்காக கோச்சிங் வரவேண்டும். ஆதலால், சம்யுக்தா எங்கேயும் தென்படவில்லை. எங்கே போய் விடப் போகிறாள் என்று அவளது மொபைல் எண்ணைக் கூட வாங்கியிருக்காத பிரபாகரன் முதல் முறையாக பிரிவு என்பதற்கான முழு அர்த்தத்தை விளங்கிக் கொள்ள ஆரம்பித்தான்.
அவன் அவளுக்குச் செய்ததை இப்போது சம்யுக்தா அவனுக்குச் செய்து கொண்டிருந்தாள். எங்கிருந்தோ அவனைப் பார்த்து விட்டு சென்று விடுவாள். இவன் தான், “தேடும் கண் பார்வை தவிக்க” என்று பாடாத குறையாக பைக்கில் சுற்றிக் கொண்டிருந்தான்.
நீட் ரிசல்ட் வந்த அன்று கோச்சிங் சென்டர் வந்த சம்யுக்தா வேறு வழியின்றி போனால் போகிறது என்று அவனுக்கு காட்சி கொடுத்தாள். கடையில் ஆள் நடமாட்டம் இல்லாத நிலை. இதற்கு மேல் தாங்க முடியாது என்று முடிவு செய்த பிரபாகரன் அவளது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்த அறைக்குள் நுழைந்தான்.
“ஏய் என்னடி நினைச்சிட்டு இருக்க மனசுல? இப்படி பாதியில சொல்லாம கொள்ளாம காணாமல் போறதுக்கு தான் பின்னாடியே வந்தியா? ஏதாவது பேசுடி.. வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருக்க?” என்று ஆரம்பித்து இடைவெளி இல்லாமல் ஐந்து நிமிடங்களுக்கு மேல் கத்தினான்.
இத்தனை நாள் கழித்து பார்த்தால் பிரபாகரன் தனது ஏக்கத்தை கட்டிப்பிடித்து வெளிப்படுத்துவான் என்றெல்லாம் சம்யுக்தா நினைக்கவில்லை. அதே சமயம் இது போன்ற ஒரு இடைவிடாத சரவெடியையும் எதிர்பார்க்கவில்லை.
கைகளைக் கட்டிக் கொண்டு அவனையே இமைக்காமல் பார்த்து வைத்தாள் சம்யுக்தா. சற்று நேரம் கழித்தே அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை என்று அறிந்து தனது வாயை மூடி மௌனமானான். அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு அவன் பார்த்த பார்வையில் சம்யுக்தா வாய் விட்டுச் சிரித்தாள்.
“அட! மிஸ்டர்.ப்ருத்விராஜனுக்கு இப்படி எல்லாம் கூட பார்க்கத் தெரியுமா?” என்று அவள் புருவங்களை உயர்த்தியதில் அவள் படித்து முடிக்கட்டும் என்று பிரபாகரன் எடுத்திருந்த முடிவுகள் எல்லாம் காற்றில் பறந்து போனது. சம்யுக்தாவை இழுத்து அணைத்தவன் அவளது இதழோடு இதழ் சேர்த்தான்.

Author: SudhaSri
Article Title: பகலிரவு பல கனவு -7
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.