காதல் காலமிது
“நோ நோ நோ! உன்னை ரூம்க்குள்ள விட்டதே பெரிய விஷயம்.. பெட்ல எல்லாம் அலோ பண்ணவே முடியாது.
“சுஜ்ஜு என்னைத் தேடுறான்னு சொன்னேல்ல.. அப்ப அவன் என்கிட்ட தானே படுக்கணும்” கட்டிலின் நடுவில் கால்களைப் பப்பரக்கா என்று விரித்துத் தூங்கிக் கொண்டிருந்த சுஜித்தை ஒரு பார்வையும், இன்னும் அஃபிஷியலாகத் தன்னுடைய மனைவியாகவே நீடிக்கும் மேனகாவையும் பார்த்துச் சொன்னான் அர்ஜுன்.
“சேரலாமா வேண்டாமான்னு பேச்சு வார்த்தையில் தான் இருக்கோம் தெரியும்ல? டைவர்ஸ் கேஸ் ஃபைல் பண்ணது பண்ணினது தான். அதுக்கு முன்னாடியே கிட்ட வரப் பாக்குற? கொஞ்ச நேரம் சும்மா இருப்ப, அப்புறம் சுஜித்துக்குக் குளிருதுன்னு கட்டிப்பிடிச்சுப்ப, கையை இந்தப் பக்கம் கொண்டு வருவ.. எக்ஸ்ட்ரா பெட் வாங்கிப் போட்டிருக்கேன்.. போய் கட்டையை நீட்டு. அதான் நீ தூங்குற நேரம் வந்துடுச்சுல்ல..” என்றபடி மணியைப் பார்த்தாள் மேனகா.
வழக்கமாக பத்து மணிக்கெல்லாம் குறட்டை விட்டு சொர்க்க லோகத்தில் மிதந்து கொண்டிருப்பான் அர்ஜுன். இப்பொழுது மணி பதினொன்றைத் தாண்டி சில நிமிடங்கள் கடந்திருந்தது.
“அதெல்லாம் முன்னாடி மீனு.. இப்ப தூக்கமே வர மாட்டேங்குது”
காதிலேயே வாங்காமல் தன்னுடைய இடத்தில் போய் படுத்தாள் மேனகா.
வேண்டா வெறுப்பாகத் தனியாகக் கிடந்த ஒற்றைப் படுக்கையில் போய் அமர்ந்து கொண்டு தன் மொபைலை எடுத்தான் அர்ஜுன். “ஒரு காலத்தில் தாலி கட்டிட்டு ஒரு வருஷம் கன்னிப் பையனா காலத்தைக் கழிச்சேன். இப்ப ஒரு வருஷமா கட்ட பிரம்மச்சாரியா இருக்கேன். என் நிலைமை இந்த உலகத்தில் வேற எவனுக்காவது வருமா? வெளியே சொன்னா வெட்கக்கேடு”
“என்ன அங்க சத்தம்?”
“தானா என் வாய் புலம்புது.. நானாவா சொல்றேன்”
அவனது பதிலைக் கண்டுகொள்ளாத மேனகா, தன் மொபைலை எடுத்து யாருக்கோ வாய்ஸ் நோட் அனுப்பத் துவங்கினாள்.
“என்னடா பண்றது? இன்னும் இழுபறியாத்தான் போகுது.. நோ நோ என்னை வச்சு நீ எந்த டெசிஷனும் எடுக்காதே. யூ ப்ரொசீட் அஸ் பெர் யுவர் கன்வீனியன்ஸ்”
அர்ஜுனுக்கு இங்கே குறுகுறுவென்று இருந்தது. ‘யாருகிட்ட பேசுறா? எந்த டெசிஷன் எடுக்கணும்? ஒரு வேளை வேற எதுவும் பாய் ஃப்ரெண்ட் வச்சிருக்காளோ? இருக்காதே! அவ சோஷியல் மீடியா எல்லாத்தையும் நான் பாத்துட்டு தான் இருக்கேன். ரெண்டு மூணு பேரு வழியிறானுங்க தான்.. ஆனா மத்தபடி எதுவும் பிரச்சனை இல்லையே.. அதுல எவனும் க்ளோசா பேச ஆரம்பிச்சிட்டானோ?’ என்று யோசித்தான்.
தன்னைப் போல அவன் கைகள் மொபைலை நாடின. ‘நமக்குத் தான் நிஜத்தில் பாக்குற மனுஷங்க யாரும் ஆறுதல் கொடுக்க மாட்டேங்கிறாங்க.. பார்க்காத நண்பர்களையாவது காண்டாக்ட் பண்ணுவோம்’ என்று நினைத்தவன் புதிதாக முகநூலில் அறிமுகமாகி மெசஞ்சரில் பேசத் துவங்கியிருந்த வேல்முருகன் என்ற நண்பனிடம் சும்மா புலம்பத் தொடங்கினான்.
“ஹே வாட்ஸாப் டூட்? பிஸி? ஹவ் ஆர் யூ?’ என்றெல்லாம் முகமன் வைத்துவிட்டு, “மை லைஃப் இஸ் இன் கிராஸ் ரோட்ஸ்” என்று குறுந்தகவல் அனுப்பினான்.
சிறிது நேரம் பதிலே வரவில்லை. இவன் ஒரு கேள்விக்குறியை அனுப்பவும், அந்த வேல்முருகன் “ஆல் தி பெஸ்ட்!” என்று அனுப்பினான். டிபியில் வேலுடன் இருக்கும் முருகக் கடவுளின் முகம் சிரித்தது. அந்த முருகனே வாழ்த்தியது போல் தோன்றியது.
“பாஸ்! உங்க கிட்ட எனக்கு புடிச்ச விஷயமே பர்சனல் விஷயத்தை நீங்க தோண்டாமல் இருக்கிறது தான்” என்று அர்ஜுன் கூற,
“ஆமா நாம அப்படித்தானே மத்தவங்க கிட்ட எதிர்பார்க்கிறோம். அப்ப அதே மாதிரி நாமும் மத்தவங்க கிட்ட நடந்தா தானே கரெக்ட்”
“அதுவும் சரிதான். அப்புறம் நீங்க இன்னும் தூங்கலையா ப்ரோ?” என்று கேட்டான் அர்ஜுன்.
“சும்மா ஏதோ நினைவுல இருந்துட்டேன்” என்றான் வேல்முருகன்.
“எனக்கும் பழைய நினைவா தான் இருக்கு. என் ஒய்ஃப் முதன்முதல்ல ஒரு இன்டர் காலேஜியட்ல மீட் பண்ணது, அப்புறம் ஃப்ரெண்ட் ஆனது, உங்க ரெண்டு பேருக்கும் நல்ல மேட்ச் ஆகும் டா அப்படின்னு எங்க பிரண்ட்ஸ் எல்லாம் சொன்னது.. இதெல்லாம் ஞாபகத்துக்கு வருது ப்ரோ”
“interesting. அப்புறம் என்ன ஆச்சு?”
“அப்புறம் என்ன நாங்க ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் தான். லவ் இல்லாம ஃப்ரண்டாவே எங்களால இருக்க முடியும் அப்படின்னு சொல்லிட்டு திரிஞ்சேன். அப்புறம் என்னையும் அந்தப் பொண்ணையும் பத்தி ஒருத்தன் தப்புத் தப்பா எங்க வீட்ல போட்டுக் கொடுத்துட்டான். வீட்ல கூப்பிட்டு திட்டிட்டு, ‘அப்ப நீ லவ் பண்ணல இல்ல.. சத்தியம் பண்ணு’ அப்படின்னு அம்மா கேட்டாங்க. சத்தியம் பண்றதுக்கு கையெல்லாம் தூக்கிட்டேன் ப்ரோ.. அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது நான் உண்மையிலேயே அவளை அவ்வளவு லவ் பண்றது. அவளுக்கும் அதே ஃபீலிங் தான் போல. லேட்டா புரிஞ்சது. அப்புறம் எப்படி எப்படியோ ஆச்சு ப்ரோ.. நண்பர்கள் தான் தூது போய் மேரேஜ் முடிச்சு வைச்சாங்க.. அதுக்கப்புறம் ஒன் இயர் நாங்க வீட்ல சொல்லல. பாடுபட்டு ஒண்ணா சேர்ந்தோம். நான் தான் நல்ல வாழ்க்கையைப் பாழாக்கிட்டேன் ப்ரோ”
“உங்க பிரெண்ட்ஸ் எல்லாம் இப்ப எங்க இருக்காங்க”
“இப்ப.. என்ன சொல்ல.. தெரியல.. அப்படி உருகி உருகி காதலிச்சு மேரேஜ் பண்ணின அப்புறம் நான் நடந்துக்கிட்ட முறைக்கு எவன் கிட்டயும் போய் ஹெல்ப் பண்ணுடான்னு கேட்கவும் பிடிக்கலை ப்ரோ. என்னன்னு தெரியல.. இதெல்லாம் உங்க கிட்ட சொல்லணும்னு தோணுது. தப்பா நினைக்காதீங்க ப்ரோ!”
நீண்ட நேரம் வேல்முருகனிடமிருந்து பதிலே வரவில்லை. ‘டைப்பிங்’ என்றே வந்தது. “என்னென்னாலும் நீங்க என்கிட்ட சொல்லலாம்” என்று தகவல் வந்தது இறுதியாக.
வாய்ஸ் நோட் அனுப்பலாமா என்று நினைத்த அர்ஜுன் மேனகாவை திரும்பிப் பார்த்தான். அவள் இன்னும் சீரியஸாக மொபைலை நோண்டிக்கொண்டு இருந்தாள். டிங் என்று நோட்டிபிகேஷன் வருவதும், அவள் பதில் போடுவதுமாக இருந்தாள்.
“எந்த கட்டையில் போறவன் (அல்லது போறவள்) இந்த நேரம் அவளோட பேசிகிட்டு இருக்காளோ.. 12 மணி கிட்ட சேட் பண்ணா அது பொண்ணாவா இருக்கும்?” என்று அர்ஜுனின் பொறாமை பிடித்த மனது பேச,
“அவ உன்னையே சுத்தி சுத்தி வந்தப்ப நீ இப்படித்தானே போனை வச்சுக்கிட்டு கிரிக்கெட் ஸ்கோர் பாக்குறேன், ஆன்லைன் ரம்மி விளையாடுறேன்னு நேரத்தை கடத்தின.. பீரியட்ஸ்ங்க, ஸ்ட்டொமக் அப்செட்டும் இருக்கு.. ஒரு ஒரு மணி நேரம் தூங்கிருக்கிறேனே.. தம்பியை எங்கேயாவது வெளியே தூக்கிட்டு போங்கன்னு ஒரு நாள் கண்ணீர் விட்டுக் கேட்டாளே, அப்பவாது மனசு இளகுனியாடா நீ? இப்ப வந்து குத்துதே குடையுதேன்னா என்ன செய்றது” என்று அவனுடைய இன்னொரு மனது கேள்வி கேட்டது.
“குட் நைட் ப்ரோ. தேங்க்ஸ் ஃபார் பீயிங் வித் மீ” என்று வேல்முருகனிடம் மெசேஜ் போட்டுவிட்டுத் தூங்க முயன்றான் அர்ஜுன்.
இங்கே பிரச்சனை தங்கள் இருவருக்குள்ளும் தான் என்று நினைத்து இவர்கள் இரண்டு பேரும் இருக்க, சத்தமே இல்லாமல் வேறு ஒரு பிரச்சனை உருவாகி இருந்தது. அர்ஜுனனின் உறவுக் கூட்டத்தில் ஒருவரான தயாளன், மேனகாவின் குடும்பத்தில் முக்கிய பிஆர்ஓ ஆன செவ்வந்தியின் செல்ஃபோன் எண்ணைத் தேடிப் பிடித்து இரவு நேரம் என்றும் பாராமல் அழைத்தார்.
“ஹலோ செவ்வந்தி மேடம்ங்களா? உங்கள லேட் நைட் டிஸ்டர்ப் பண்றதுக்கு மன்னிக்கணும். நான் தயாளன். அர்ஜுனோட ஒண்ணு விட்ட பெரியப்பா”
ஏற்கனவே, இந்த விவகாரத்தைத் தீர்த்து வைக்கும் வரை தூக்கம் வராதே, என்ன செய்வது என்று தவித்துப் போய் அமர்ந்திருந்தார் செவ்வந்தி. “சொல்லுங்க சார்! என்ன விஷயம்”
“மேடம் நம்ம நந்தகுமார் தாத்தாவுடன் நாட்டி நந்து யூடியூப் சேனல் இருக்குல்ல.. அவர் இன்னைக்கு எடுத்துப் போட்ட எத்தனையோ வீடியோல ஒரு வீடியோல மேனகாவோட முகம் நல்லா தெரியுது போல.. அதை பார்த்துட்டு ஒரு பய புள்ள கமெண்ட் பண்ணி இருக்கான்.. அதுக்கு கீழேயே வரிசையா கமெண்ட்ஸ். லிங்க் அனுப்பி இருக்கேன் உங்களுக்கு. பாருங்களேன்!” என்றார் பதட்டமாக.
‘இது என்ன புது பஞ்சாயத்து?’ என்று அதை எடுத்து செவ்வந்தி பார்க்க
“இது மேனகா தானே? ஸ்கூல் காலத்திலிருந்தே நான் அவளை ஒன்சைடா லவ் பண்றேன். இப்ப இவ சிங்கிளா இருக்கிறதா கேள்விப்பட்டேன். உண்மையா? தகவல் தெரிந்தவர்கள் சொல்லவும்” என்று ஒரு மெயில் ஐடி கொடுக்கப்பட்டிருந்தது.
“மேனகாவே தான். என்கூட கம்ப்யூட்டர் கிளாஸ்ல ஒன்னா படிச்சா.. இந்த விசுவாமித்திரனுடைய தவத்தைக் கலைச்ச மேனகை அவதான். அப்ப சிங்கிள் தான்னு சொல்றீங்களா ப்ரோ? நானும் ட்ரை பண்ணலாமா?” என்று கேட்டிருந்தான் இன்னொருவன்.
“யாரு பாஸ் இவங்க? அழகா இருக்காங்களே!” என்று இன்னொருவன் கேட்க, அப்படியே விவாதம் நீண்டது.
“வேலை வெட்டி இல்லாம எத்தனை பேர் இருக்காங்க பாருங்க?” என்று பொருமிய படி தயாளன் அனுப்பியிருக்க,
அவரை ஃபோனில் அழைத்த செவ்வந்தி, “இருக்கிற பிரச்சனை காணாதுன்னு இது வேற.. பாருங்க, அந்த கமெண்ட்டை ரிப்போர்ட் அடிச்சு விடுங்க.. நானும் பண்ணிட்டேன். இன்னும் உங்க அக்கம்பக்கத்துல யாராவது மொபைல் வச்சிருந்தா, அவங்க கண்ணில் இந்த கமெண்ட்ஸ் படாம நீங்களே வாங்கி ரிப்போர்ட் பண்ணி விடுங்க, அப்படியே கொஞ்சம் வெளியே அந்த ஸ்விம்மிங் பூல் பக்கம் வாங்க.. நேர்ல பேசுவோம்” என்றார்.
நேரில் சந்தித்த போது,
“என்னங்க இது.. கல்யாணம் பண்ணி வைக்கிறதை விட, கல்யாணம் பண்ணி பிரிஞ்சிருக்கிறவங்களை சேர்த்து வைக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு?” என்று தயாளன் கூற,
“ஆமா! அதனால தான் இந்த ரித்திகாவையும் மித்ரனையும் சேர்த்து வைக்கிற ப்ராஜெக்ட்டை கூட விட்ருவோமானு பார்க்கிறேன். மண்ட காயுதுங்க! நானும் ரொம்ப காலமா சிங்கிளாவே வாழ்ந்துட்டனா, கொஞ்சம் ஓவரா போனோம்னா, இந்த புள்ளைங்க குடும்ப வாழ்க்கையைப் பத்தி உனக்கென்ன தெரியும் சித்தி? வாய மூடுன்னு சொல்லிடுவாங்களோன்னு ஒரு பதட்டம்” என்றார் செவ்வந்தி.
“அட ஆமாங்க! எனக்கும் அதே நிலைமைதான். என் மனைவி கல்யாணமாகி நாலஞ்சு வருஷத்துல இறந்துட்டாங்க.. அதுல இருந்து சிங்கிள் தான். சும்மா தானே இருக்க, இதப் பாரு, அதப் பாரு அப்படின்னு நம்மளை நிறைய வேலை வாங்கிடறாங்க.. ஆனால் நம்ம கருத்தை ஒருத்தரும் மதிக்க மாட்டேங்குறாங்க.. பொல்லாத உலகம் இது” என்றார் தயாளன்.
ஏதோ ஒரு அறைக்கு சரக்கு சப்ளை செய்துவிட்டு அந்தப் பக்கமாக வந்த ரூம் சர்வீஸ் ஆள் ஒருவன், இருவரையும் பார்த்து விஷமமாக சிரித்தபடி, “சார், உங்களுக்கும் எதுவும் வேணுமா?” என்று கேட்டான்.
“கல்லெடுத்து அடிப்பேன். ஓடிப் போயிடுடா” என்று செவ்வந்தி சொல்லவும், “சாரி மேடம்!” என்றபடி நழுவிச் சென்றான்.
“அட! நீங்க ரெண்டு பேரும் சிங்கிளா இருக்கீங்களா?” என்று காலம் வேறு ஒரு கணக்கைப் போட்டது.

Last edited:
Author: SudhaSri
Article Title: காதல் காலமிது - -5 - மைனே பியார் கியா
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.