காதல் காலமிது -6
விடிந்து வெகு நேரம் ஆகிவிட்டது.
அன்றுதான் அந்த ரிசார்ட்டுக்கு இவர்கள் அனைவரும் வந்திருந்ததன் முக்கிய நோக்கம் நிறைவேறப் போகிறது. அன்றுதான் அந்தக் கல்யாணம். முதல் இரண்டு நாட்களும் சங்கீத், மெஹந்தி, ரிசப்ஷன் என்னவெல்லாம் உண்டோ அதெல்லாம் முடிந்து, ஒரு வழியாகத் திருமணத் தேதி விடிந்தது.
இரவு வெகு நேரம் வரை தூக்கம் வராமல் தவித்த மித்ரன், சாட்சிக்காரன் காலில் விழுவதை விட, சண்டக்காரன் காலில் விழுவதே மேல் என்று யோசித்தவனாக, “அண்ணி! கால் மீ ஒன்ஸ் யு வேக் அப். நீட் டு டாக்” என்று மேனகாவிற்கு மெசேஜ் போட்டுவிட்டுப் படுத்து தூங்கினான்.
அவ்வளவு ஆத்திரம். ‘எங்கயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறாத்தாங்குற மாதிரி என்னை ஏன் இந்த அம்மா கோர்த்து விடுது.. நான் உங்களுக்கு என்ன பண்ணினேன்.. நல்லது தானே பண்ணி இருக்கேன்.. எல்லா குடும்பப் பிரச்சினைலயும் அவங்களுக்குத் தான் சப்போர்ட் பண்ணி இருக்கேன். ஒருவேளை அதனாலதான் என்ன இந்த லூசுப் பையன் நாம என்ன சொன்னாலும் ஒத்துக்குவான்னு நினைச்சுட்டாங்களோ? நேரிலேயே கேட்டுருவோம்’ என்று முடிவு செய்து, மெசேஜ் போட்டு விட்டுத் தூங்கினான்
நேரம் கழித்துத் தூங்கியதால் எட்டு மணி சுமாருக்குத் தான் விழிப்பு வந்தது. லேசாக முகத்தையும் தலையையும் திருத்திக் கொண்டு வெளியே வந்தான். மாப்பிள்ளையை அவன் அறையில் இருந்து ஊர்வலமாக அழைத்துச் சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் அன்றைய தினம் கான்செப்டாக வெள்ளை நிறம் கொடுக்கப்பட்டிருந்தது.
முந்தின நாளே இரண்டு பாட்டிகள், “ஏண்டி இவங்க எல்லாம் தெரிஞ்சு செய்றாங்களா, தெரியாம செய்றாங்களா? கல்யாணமும் அதுவுமா வெள்ளைக் கலர் புடவையிலேயா போய் நிற்கிறது? பொண்ணும் வெள்ளை கலர் புடவை தான் கட்டப் போகுதாமே? அப்படியா?” என்று குசுகுசுத்துக் கொண்டிருந்தனர்.
“தெரியல அக்கா.. உங்ககிட்ட வெள்ளை கலர் இருக்காதுல்ல.. நீங்க வேணா வேற கலர் கட்டுங்க. உங்களை யார் என்ன சொல்லப் போறாங்க? என்கிட்ட என் பொண்ணு பெங்கால்ல இருந்து வாங்கிட்டு வந்தேன் ஒரு சிகப்பு பார்டர் வச்ச வெள்ளைப் புடவை இருக்கு” என்று ஒரு பாட்டி சொல்ல,
“எனக்கும் ஏன் இல்லாம? என் மகன் கேரளாவில் இருந்து கசவுப் புடவை வாங்கிட்டு வந்தான். அதுவும் வெள்ளை மாதிரி தானே.. அதை கட்டிக்குவேன். பிளவுஸ் மட்டும் என் மருமக கலர் கலரா தைச்சு கொடுத்திருக்கா. தையல் கூலியே 10,000” என்று பெருமை பேசியது மித்ரன் காதில் விழுந்திருந்தது.
‘இருக்கும் களேபரத்தில் இதெல்லாம் எனக்கு எப்படி காதில் விழுகிறது?’ என்று மித்ரன் யோசித்துக் கொண்டே நடந்து வர, அந்த ரிசார்டுக்குள்ளேயே பெண்ணின் அறையில் இருந்து பெண் ஒரு பல்லக்கிலும், மாப்பிள்ளை அவன் அறையில் இருந்து சாரட் வண்டியிலும் வந்தனர்.
மாப்பிள்ளை ஊர்வலத்தில் வெள்ளை உடையணிந்த தேவதைகள் சாமரம் வீசி கொண்டே நடனம் ஆடிய படி வர, ஜிம் பாய்ஸ் போல் இருந்த, ஆனால் வெள்ளை நிற கோட் சூட் அணிந்திருந்த நான்கைந்து ஆண்கள் மணப்பெண்ணின் பல்லக்கு முன்னால் ஆடிக்கொண்டே வந்தார்கள்.
இவன் மட்டும்தான் காமாசோமா என்று ஒரு டி-ஷர்டையும், இத்துப்போன ஒரு பர்முடாஸையும் போட்டுக் கொண்டு வெளியே வந்தான். ஆனால் அமெரிக்கா ரிட்டன் அல்லவா, அதுவும் ஸ்டைலாக தான் இருக்கிறது என்று அவனைப் பார்த்து ஜொள்ளுவிட்டபடி கடந்தது ஒரு டீன் ஏஜ் பட்டாளம்.
கடமையே கண்ணாக நந்தகுமார் தாத்தா இரண்டு ஊர்வலத்தையும் மாறி மாறி வீடியோ கவரேஜ் செய்து லைவில் போய்க்கொண்டிருந்தார். “அடுத்து ஏதாவது கல்யாணம் நடந்தா மாப்பிள்ளையை பல்லக்கிலும், பொண்ணை குதிரை வண்டிலயும் கூட்டிட்டுப் போங்கன்னு சொல்லுவேன். அதுதான் சமத்துவம் இல்லையா?” என்று பேசிக் கொண்டிருந்தார்.
மேனகாவின் ரூமை மித்ரன் நெருங்க, ஏற்கனவே வெள்ளை உடை வேந்தர்களாக அர்ஜுனும், அவன் மகன் சுஜித்தும் அந்தக் கூட்டத்தில் போய்க் கொண்டிருந்தனர்.
“மித்ரா கிளம்பலையா டா?”
“இரு அண்ணிகிட்ட பேசிட்டு வரேன்”
“போ போ! நல்ல மூடுல தான் இருக்கா. போய் உன் கோரிக்கை மனுவைப் போடு! ஆனா, என்னையும் கன்சிடர் பண்ணுடா தம்பி!” என்று மித்ரனை அர்ஜுன் வழியனுப்பி வைக்க,
சரியாக அவன் மேனகாவின் அறை அழைப்பு மணியை அடித்த சமயம், ஆரஞ்சு நிற லேஸ் ஒர்க் வைக்கப்பட்ட வெள்ளை சுடிதார் அணிந்து கொண்டு, ரெண்டுல ஒன்னு பார்த்துடுவோம் என்ற முடிவுடன் ரித்திகாவும் அந்த அறையை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.
“வில்லங்கம் வருது?” என்று நினைத்தவன்,
‘வந்துட்டுப் போகுது.. அது ஆச்சு 15, 16 வருஷம் அந்த சம்பவம் நடந்து’ என்றபடி கெத்தாக நின்று அழைப்பு மணியை அழுத்தினான்.
“இதோ வரேன்” என்று மேனகா கதை திறக்கும் பொழுது இரண்டு பேரும் அவள் அறை வாசலில் முன்னும், பின்னுமாக ஆனால் ஓரளவு அருகருகில் நின்று கொண்டிருந்தனர்.
“வாவ்! வாங்க.. வாட் அ சர்ப்ரைஸ்!” என்று இருவரையும் மேனகா உள்ளே அழைக்க,
“இல்லை.. நீங்க வெளிய வாங்க.. ரெண்டு வார்த்தை பேசிட்டுப் போயிடுறேன்” என்றான் மித்ரன்.
“என்ன அக்கா வாட் அ சர்ப்ரைஸ்ங்கற? இப்பதானே கால் பண்ணி நான் வரேன்னு சொல்லிட்டு வந்தேன்?” என்று ரித்திகா கேட்க, “ஆமா அண்ணி, நானும் மெசேஜ் போட்டேனே.. வான்னு சொன்னீங்களே?” என்றான் மித்ரன்.
தன்னிச்சையாக மித்ரனும் மேனகாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். “ஏன் உங்களுக்கு இந்த வேண்டாத வேலை அணணி?”
“சொல்றேன். வயிறு பசிக்குது பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டு கிட்டே பேசலாமா?” என்று மேனகா கேட்க
“நான் கிளம்பி வர இன்னும் அரை மணி நேரம் ஆகும்.. இப்ப இவங்கள வச்சுக்கிட்டே கேக்குறது தப்பு இல்ல.. சொல்லுங்க ஏன் சம்பந்தமில்லாமல் எங்க ரெண்டு பேருக்கும் முடிச்சுப் போட பாக்குறீங்க”
“ஆமாக்கா எல்லாருக்கும் அதுதான் மில்லியன் டாலர் கொஸ்டின். சும்மா என்னையும் அந்த வீட்ல கல்யாணம் பண்ணி கொடுத்தா உங்களுக்கு ஹோல்ட் இருக்கும் அப்படி இப்படின்னு பேசாதீங்க. பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்தா வேணா அந்த லாஜிக் வொர்க் அவுட் ஆகும்”
“அப்படின்னா?” என்று மித்ரன் கேட்க
“ஓ நீ காலேஜ் முடிச்சவுடனே அமெரிக்காவாசி ஆயிட்ட இல்ல. உனக்கு இங்க உள்ள நடைமுறை தெரியாது.. அதாவது உங்க அண்ணன் என்னை நல்லா வச்சுக்கணும்னா, அவர் தங்கச்சியை எங்க அண்ணனுக்கு கட்டிக் கொடுப்பாங்க.. அந்த மாதிரி.. ‘உங்க வீட்டுப பொருள் எங்க வீட்ல இருக்கு.. அப்ப எங்க வீட்டு பிள்ளையை நீங்க நல்லா பாத்துக்கணும்.. அப்படி லாஜிக்..” என்றாள் மேனகா.
“அக்கா! இது என்ன உயிருள்ள பொண்ணைப் போய் பொருள் அது, இதுங்குகிறீங்க.. ஒரு பொண்ணு அவளே தான் அவளை காப்பாத்திக்கணும்.. அதுக்காக இன்னொரு பொண்ணோட வாழ்க்கையை அடகு வைப்பீங்களா? ஏன் இதே மாதிரி பையனைக் குடுத்து பையனைக் கட்ட வேண்டியது தானே..” ரித்திகா பல்லைக் கடித்தாள்.
“அட நீங்க வேற! இப்ப போய் எதைப் பேசிகிட்டு.. சொல்லுங்க அண்ணி.. அப்படி எதுவும் லாஜிக் யோசிச்சீங்களா?”
“சேச்சே! அப்படி எல்லாம் இல்லை.. எங்க குடும்பத்தில் இருந்தே ரெண்டு பேர் உங்க வீட்டுக்கு மருமகளா வந்துட்டா நான் இன்னும் கொஞ்சம் டாமினேட் பண்ணலாம்ல.. நான் லவ் மேரேஜ் அப்படின்னு எவ்வளவு கேவலப்படுத்தினாங்க உங்க அம்மா? அப்ப உங்க அப்பா எதுவும் பேசாமல் சும்மா தானே இருந்தார்? இப்ப அரேஞ்ச்ட் மேரேஜ் ஆகி என் தங்கச்சியும் வந்துட்டா எனக்கு மரியாதை கொடுத்து தான் ஆகணும்”
“மொக்கை லாஜிக் அண்ணி! அப்ப திருப்பியும் எங்க வீட்டுக்கு வந்து வாழ நீங்க வில்லிங் தான் இல்லையா? சும்மாதான் பிரிய போறோம்னு ஸ்டன்ட் அடிக்கிறீங்க. கரெக்ட்டா?”
“அக்கா உன் மேல கொஞ்சம் பாசம் இருக்கு.. அதனால நேரா பேசிகிட்டு இருக்கேன்.. எனக்கு இப்போதைக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லை. எங்க அசோசியேஷன், அதோட மீட்டிங்ஸ், டிராவல் அப்படி இப்படின்னு பிஸியா இருக்கேன் நான். ஏற்கனவே கொஞ்சம் பழமைவாதிகளா இருக்குற உங்க குடும்பத்துக்குள்ள நான் வர விரும்பல” என்றாள் ரித்திகா.
“ஹலோ.. இங்கே யாரும் உங்களைக் கட்டிக்க தயாரா இல்லை.. நானும் வேணாம்னு சொல்லத்தான் வந்தேன்” என்றான் மித்ரன் அவளிடம்.
“அப்ப ரெண்டு பேரும் சேர்ந்து பேசுங்க.. பேசிட்டு வேணாம்னு நீங்களே சொல்லிருங்க.. இது ஜஸ்ட் என்னோட ப்ரொபோசல் அவ்வளவுதான்” என்று சொல்லிவிட்டு மேனகா ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பூவைத் தலையில் சூடி, கண்ணாடியில் தன் உடையை சரி பார்த்தாள்.
“பிரேக்ஃபாஸ்ட் முடிச்சிட்டு வாங்க ரெண்டு பேரும் சேர்ந்து போய் சொல்லலாம்” என்றாள் ரித்திகா மித்ரனிடம்.
“யாருகிட்ட போய் சொல்லணும்”
“உங்க அம்மா அப்பாட்ட நான் சொல்றேன். என்னோட தற்போதைய ஆக்டிவிட்டீஸ் தெரியும்ல? பெண்ணியம் சார்ந்த என்னுடைய ஆக்டிவிட்டீஸ் எல்லாம் தெரிஞ்சா, உங்க அம்மா அவங்களே வேணாம்னு சொல்லிடுவாங்க.. அக்கா முதல்ல உன் மாமியாருக்கு என்னோட ஸ்பீச் வீடியோ லிங்க்ஸ் எல்லாம் அனுப்பிவிடு”
ரித்திகா நாடறிந்த பெண்ணிய செயற்பாட்டாளர். அவள் கூட்டங்களில் பேசும் காணொளிகள் பிரபலம். கூடவே சமூக ஊடகங்களில் தனித்தனியாகக் காணொளிகளையும் வெளியிடுகிறான். பேசுவதுடன் நின்று விடாமல் களத்தில் இறங்கித் தேவைப்பட்டவர்களுக்காகப் போராடுகிறாள். சமீபமாகப் பெண்களின் கையில் பணம் இருக்க வேண்டும், சொத்துரிமையை அவர்கள் கேட்டுப் பெற வேண்டும் என்பதை முக்கியமாகக் பேசி வருகிறாள்.
“உன்னோட வீடியோஸ் எல்லாம் ஏற்கனவே அனுப்பிட்டேன்.. அந்த அம்மாவுக்கு உன்னை புடிச்சிருக்கு.. எவ்வளவு திருத்தமா விவரமா பேசுது.. இவ தான் எங்க மித்ரனுக்கு ஏத்த ஆள்னு சொல்லிட்டாங்க.. அது மட்டுமா, இதோ
மித்ரனும் பல தடவை கேட்டிருக்கான். ரெண்டு மூணு தடவை உன்னோட வீடியோஸ் அவன் மொபைல்ல ஓடிக்கிட்டு இருந்தத நானே பார்த்திருக்கிறேன்”
“அண்ணி.. நான் எங்கே கேட்டேன்.. என்ன வீடியோ?”
“மித்ரன் பொய் சொல்லாதே.. நானே நிறைய ஃபார்வர்ட் பண்ணிருக்கேன் நம்ம ஃபேமிலி க்ரூப்ல டிஸ்கஷன் போயிருக்கு.. நீயும் அது பத்தி பேசியிருக்க”
“எனக்கு நினைவில்லை”
“போதும் பா உன் உருட்டு.. குளிச்சு கிளம்பிவா.. பிரேக்ஃபாஸ்ட் முடி.. முகூர்த்த நேரம் மட்டும் அங்கே இருங்க.. அதுக்கப்புறம் ரெண்டு பேரும் ஒரு அரை மணி நேரம் மனசு விட்டு பேசுங்க”
“இவர் யார்னே எனக்குத் தெரியாது.. இவர்ட்ட நான் என்ன மனசு விட்டு பேசணும்?” என்று ரித்திகாவும்,
“அண்ணி, நீங்க ரொம்ப இன்டெலிஜெண்ட்னு நினைச்சேன்.. ஏன் இப்படி மொக்கை போடுறீங்க?” என்று மித்ரனும் ஒரே நேரத்தில் கேட்க,
“உனக்கு அவளைப் பிடிக்கும்னு எனக்கு தெரியும்டா.. பிடிக்காமலா சின்ன வயசுலேயே அவ குளிக்கும் போது பாத்ரூம்ல எட்டிப் பார்த்த? நீ யாரையும் அப்படி பாக்குற டைப் இல்லடா”
“ஐயோ அண்ணி அது எப்படி தெரியும் உங்களுக்கு. சேச்சே அப்படி எதுவும் நான் பாக்கல அது தெரியாம நடந்தது.. பால் எடுக்கத் தான் போனேன். நீங்களுமா என்னை இவ்வளவு நாளா தப்பா நினைச்சுட்டு இருக்கீங்க..” என்றவன் ரித்திகாவிடம் திரும்பி,
“ஏங்க நிஜமாகவே நீங்க குளிக்கிறது எனக்கு தெரியாது. குளிக்கிற பொண்ணுங்களை எட்டிப் பார்க்கலாம் அப்படிங்கிறது கூட எனக்கு தெரியாத வயசுங்க அது” கெத்து மோடிலிருந்து கெஞ்சல் மோடுக்கு மாறிவிட்டான் மித்ரன்.
“ஐயோ அது தெரியும். மறுநாளே உங்க பிரெண்ட்ஸ் எல்லாம் என்கிட்ட வந்து சொல்லிட்டாங்க”
“அப்புறம் ஏன் என்னை பார்க்கிறப்ப எல்லாம் முறைச்சுக்கிட்டே இருந்தீங்க”
“நான் ஒன்னும் உங்களைப் பார்த்த முறைக்கலயே.. என் முழியே அப்படித்தான்” என்றபடி ரித்திகா பக்கவாட்டில் திரும்பிக் கொண்டாள்.
“பொய் சொல்லாதீங்க.. அதுக்கடுத்து ஒரு கல்யாணம், உங்க ஊர் திருவிழான்னு அ நான் வந்த ரெண்டு மூணு தடவையும் நீங்க என்னைப் பார்த்து முறைக்கத் தான் செஞ்சீங்க”
இவர்களின் உரையாடலில் குஷியான மேனகா, “ஆமா.. அவ முறைச்சதை நீ எப்படா பார்த்த? அப்புறம் ரெண்டு பேருக்கு நடுவுலயும் ரொம்ப வருஷமா சம்திங் சம்திங் ஓடுதா? நாங்க தான் லேட்டா எனட்ரி குடுத்துட்டோமா? கிராமம், லீவு வயக்காடு, கோயில் திருவிழா இப்படி எதுவும் கதைகள் இருக்கா? லவ் பண்ணிணா உண்மையை ஒத்துக்கோங்களேன் டா.. அதுல என்ன பயம்?”
“அண்ணி.. இல்லவே இல்லாத ஒண்ண பெருசாக்காதீங்க அண்ணி.. சின்ன வயசுல நடந்ததுன்னு சொல்றேன்ல.. சத்தியமா புரியல.. நீங்க ஏன் இந்த விஷயத்துல இவ்வளவு சீரியஸா இருக்கீங்கன்னு”
“அக்கா ஒரு இன்டர்நேஷனல் விமன்ஸ் கான்ஃபரன்ஸ் இருக்கு.. அதுக்கு நான் விசா டிக்கெட் எல்லாம் ப்ராசஸ் பண்ணியாச்சு. அடுத்த பத்து நாளில் கிளம்பனும். அப்புறம் அப்படியே ஒவ்வொரு நாடா சுத்த ஆரம்பிச்சிடுவேன். கல்யாணம் கில்யாணம் அதுக்கு எல்லாம் எனக்கு டைம் இருக்காது”
“இவனை கட்டிக்கிட்டு யூஎஸ் போ.. அங்கிருந்து நாடு நாடா சுத்து.. நம்ம நாட்டுல உன்னுடைய ஃபெமினிசம் கான்செப்ட்க்கு இருக்கிற வரவேற்பை விட அங்க நிறைய இருக்கும்.. நீ எங்கேயோ போயிடலாம்”
ரித்திகாவுக்கு கடுப்பு எகிறியது என்றால் மித்ரனுக்கு தலை சுற்றியது.
மேனகாவின் அலைபேசி இப்போது அழைத்தது. “சுஜித்துக்கு சாப்பாடு ஊட்டணும். அர்ஜுன் கால் பண்றார். நான் போறேன்” என்று கிளம்பினாள் மேனகா.
(ஹிஹி.. என்னடா கியா முயான்னு டைட்டில் வைக்கிறாங்கன்னு திட்டாதீங்க நண்பர்களே.. இப்படித் தான் அந்த கிரிஞ்ச் காலகட்டத்தில் காதலை வச்சு இந்தியா முழுக்க எல்லா மொழிகளிலும் படம் ஓட்டினாங்க.. இதுல ஒரே கதையை வச்சு பல மொழிகளிலும் படங்கள் வந்துச்சு.. அது ஒரு மாதிரி ஜாலியா தான் போச்சு அப்ப.. இந்த தலைப்புக்கு என்ன அர்த்தம் தெரியுமா.. ‘லவ் பண்ணினா ஏன் பயப்படணும்’ அப்படிங்குறது
தான்.. படத்தோட கதை கிட்டத்தட்ட நம்ம ஜெயம் ரவி த்ரிஷா நடித்த உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் படத்தோட சாயல்ல இருக்கும்…)

Author: SudhaSri
Article Title: காதல் காலமிது -6 பியார் கியா தோ டர்னா க்யா
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.