Subha Balaji
Member
- Joined
- Jun 30, 2024
- Messages
- 84
நினைவெல்லாம் நீயே 20
தன்ராஜின் கெஸ்ட் ஹவுஸ்க்கு போய் சேர்ந்தவனை வாசல் வரை வந்து அழைத்து போன ரமணன் "சார்க்கு ஹார்ட் ப்ராப்ளம் இருக்கறதால அவர் தூங்கறத்துக்காக தினமும் தூக்க மாத்திரை யூஸ் பண்ணுவார்..மேசேஜ் மட்டும் பண்ணிட்டேன்.."
"அவரே காலைல எழுந்ததும் பார்த்திட்டு ஃபோன் பண்ணுவார்..
"இன் த மீன் வைல் நான் ஏற்கனவே மேடம்க்கு மேசேஜ் அனுப்பிட்டேன்..அவங்க நாலு மணிக்கே எழுந்துடுவாங்க..
மேசேஜ் பாத்திட்டு சார் எழுந்ததும் இங்க உடனே கிளம்பி வந்திடறதா சொல்லிட்டாங்க.."
உள்ளே போனதுமே அங்கிருந்த பெண்மணியிடம் காஃபி கேட்க..அவர் கொண்டு வந்து தந்ததும் இருவரும் அமைதியாக குடித்து முடித்தனர்.."
"என்ன பண்றதுனு எதுவுமே புரியாம ரொம்ப டென்ஷனா இருந்தேன் சார்...எதுவா இருந்தாலும் மாமா பாத்துப்பாருங்கறதால இப்ப கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கு.."
"சுவருக்கும் காதிருக்கு தம்பி..இப்ப எதுவும் பேச வேணாம்..சார் வந்த பின்ன அவரோட ரூம்ல போய் பேசிக்கலாம்.." என ரமணன் தாழ்ந்த குரலில் சபரியை எச்சரிக்கை செய்தார்.
இருவரும் பொதுவான விஷயங்களை பேசியபடி இருக்க அடுத்த இரண்டு மணி நேரத்தில் தன்ராஜ் தன் மனைவியோடு வந்து சேர்ந்தார்.
"வா சபரி..ஆஃபீஸ் ரூம் போகலாம்.."
அவரின் மனைவி சமையல் வேலை செய்பவரிடம் மூன்று பேர்க்கு மட்டும் காலை டிஃபன் செய்ய சொல்லி விட்டு, தன்ராஜ்க்கான காலை டிஃபனை தானே செய்து எடுத்து வந்ததை டைனிங் டேபிளில் வைத்து விட்டு அவரும் ஆஃபீஸ் ரூம்க்கு போய் கதவை மூடியதும் ஒரு ரிமோட் எடுத்து அழுத்த சுற்றிலும் மற்றொரு கதவு வந்து அறையை மூடியது.
ஆச்சரியத்தோடு பார்த்த சபரியை "எவ்ளோ பாதுகாப்பா இருந்தாலும் விஷயம் வேற மாறி வெளியே போகிடுது பாரு.."
"ஆள் யாரு ரமணன்..ட்ரேஸ் பண்ணியாச்சா.."
"ஆச்சு சார்..மதி தான் சார்.."
"அவனை கவனிக்கற விதத்துல கவனிச்சிட வேண்டியது தான்.."
"இப்ப என்ன மாமா..பண்றது..என் தங்கை மட்டும் இல்லாம உங்க ஹாஸ்பிடலுக்கும் கெட்ட பேரா போயிச்சே.."
"சரியான பதில் குடுப்போம் சபரி..நாம குடுக்கற பதில்ல அவன் இனி யார் கிட்டயும் வம்புக்கே போக கூடாது.."
"கூட்டம் கூடுமேனு யோசிச்சு அவாய்ட் பண்ணது தான் தப்பு..நாம அடுத்து குடுக்கற பேட்டி ஹாஸிபிடல் வாசல்ல வெச்சு தான்..."
"சார் அந்த வீடியோவ உன்னிப்பா பாருங்க..அவன் அதுல ரூபாவ பாக்கறத்துக்கு அனுமதி மறுப்பு..வேற எங்காவது அவங்கள வெச்சிருக்காங்களோ..இல்ல இங்க இருக்காங்களா..ரூபா எங்கேனு சந்தேகமாவே இருக்குனு முடிச்சிருக்கான்.."
"அவனுக்காக இல்லேனாலும் அவன் பேசின பேச்சுக்காவது நாம சரியான விளக்கம் குடுக்கணும் சார்.."
"தன் மனைவியை பார்த்த தன்ராஜ் நம்ம வக்கீலம்மா இருக்க கவலை எதுக்கு.. என்னம்மா பண்ணலாம்.."
"மொதல்ல ரூபா நம்ம ஹாஸ்பிடல் ரூம்ல இருக்க மாதிரி சில போட்டோஸ் வெளியிடணும்.."
"அடுத்ததா அந்தாள் கிட்ட பேசின அந்த ஆட்கள் யாருனு சிசிடிவில பார்த்து கண்டுபிடிக்கணும்"
"அவங்கள நம்ம இடத்துக்கு வரவழிச்சு எச்சரிக்கை எல்லாம் பண்ணாம சைலண்டா வேலையை விட்டு அனுப்பிடணும்.."
"நமக்கு பின்னால பிரச்சினை வராம இருக்க நானே தான் விருப்பத்தோடு வேலையை விடறேன்னு எழுதி வாங்கணும்..அதை ரெக்கார்டிங் பண்ணி வெச்சுக்கணும்..
"முக்கியமா அவங்க வேலையில் இருந்து அனுப்பும் போது டீன், ஸ்டாப் நர்ஸ் இன்னும் சில எம்ப்ளாயிஸும் கூட இருக்க மாதிரி பாத்துக்கணும்..இது நம்ம சேப்ட்டிக்காக பண்றது..இது தான் முதல் ஸ்டெப்.."
"அடுத்ததா எங்களுக்கு தேவை இல்லாத மன உளைச்சல் ஏற்படுத்திட்டாங்கனு ரூபா குடும்பம் சார்புல ஒரு டீஃபேமேஷன் கேஸ், நம்ம ஹாஸ்பிடல் சார்புல நாமளும் ஒரு டீபேமேஷன் கேஸும் போடணும்.."
"சரி நீங்க சொல்றபடி அப்படியே பண்ணிடலாம் அத்தை..ஆனா ரூபா ஃபோட்டோக்கு எங்க போறது.."
"அதுக்கு ஒரு வழி இருக்கு தம்பி..யாராவது ஆர்ட்டிஸ்ட்ட ரூபா மாதிரி மேக்கப் பண்ணி வெச்சு போட்டோ எடுத்துடலாம்.."
"ரமணன்..நீங்க ஒரு முக்கியமான விஷயத்தை மறந்துட்டீங்க..அவ இருக்கறது ஐசியூல..மேக்கப் போட்டு ஃபோட்டோ எடுத்தா அது போலினு தெரிஞ்சிடாதா.."
"ஸாரி மேடம்..இதை நான் யோசிக்கல.. நீங்க சரியா சொல்றீங்க..ஆனா ரூபா மாதிரி இருக்கற ஆர்ட்டிஸ்ட்டை எங்க தேடறது..நமக்கு நேரம் ரொம்ப கம்மியா இருக்கே.."
"ஆள் இருக்கு ரமணா..நமக்கு வேண்டப்பட்டவங்க தான்..வர சொல்றேன்..பேசி பார்ப்போம்..
நிச்சயம் நமக்காக அவங்க உதவி செய்வாங்க.."
தன்ராஜ் தன் ஃபோனை எடுத்து யாருக்கோ அழைத்து சில நிமிடங்கள் பேசி அவர்களை தான் இருக்கும் இடத்துக்கு உடனே வர சொன்னார்.
அவர்களும் அடுத்த ஒரு மணி நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தனர். வந்த பெண்ணை பார்த்த சபரிக்கு
தன் தங்கையே நேரில் வந்தது போலவே இருந்தது.
"வா பராங்குசம்..வாம்மா ஆராதனா..நல்லா இருக்கியா.."
"வணக்கம் சார்..வணக்கம் மேடம்..நல்லா இருக்கேன்..நீங்க எப்படி இருக்கீங்க.."
"நல்லா இருக்கோம் மா..உன்னை எதுக்கு உடனே வர சொன்னோம்னு யோசிச்சியா.."
"எதுக்குனு தெரியல சார்.."
"மா..ரூபா வர்மாக்கு உடம்பு சரியில்லனு உனக்கு தெரியும்ல்ல.."
தெரியும் என ஆராதனா தலையாட்டினாள்.
"அவளோட உடம்பு கொஞ்சம் சீரியஸா இருக்கு மா..சாதாரண ஜுரமா வந்தது இப்ப ஹை டெம்ப்ரேச்சரா ஆகி ஐசியூல இருக்கா.."
"ஆனா சம்பந்தம் இல்லாத ஆட்களை அவளை பத்தி ஏதேதோ தப்பா தப்பா வீடியோ போட்டு இருக்காங்க..பாத்தியா.."
"ஆமா சார்..காலைல பாத்தேன்.."
"இப்ப ரூபா இருக்கற சிச்சுவேஷன்ல அவளை ஃபோட்டோ எடுக்கறதோ..வீடியோ எடுக்கறதோ செய்ய முடியாது..அவ உயிருக்கே அது ஆபத்தா கூட ஆகிடலாம்.."
"ஐயோ..என்ன சார் சொல்றீங்க.."
"ஆமா மா..அவங்க வாயை அடைக்க என்ன பண்றதுனு யோசிச்சோம்..உடனே நீ நியாபகத்துல வந்தே..அதான் உன்னை கூப்பிட்டோம்.."
"எனக்கு எதுவும் புரியல..ஆனா அவங்களுக்கு ஆபத்தில்லாம இருக்க நீங்க என்ன பண்ணணும்னு சொல்றீங்களோ அதை செய்ய தயாரா இருக்கேன்.."
"சரி..மா..வா நாம உடனே ஹாஸ்பிடல் போகலாம்.."
எல்லாரும் கிளம்பி நேராக ஹாஸ்பிடல் விஐபி என்ட்ரன்ஸ் வழியாக தன்ராஜ் குடும்பத்தின் சூட் ரூம்க்கு போய் சேர்ந்தனர்.
அங்கு ஏற்கனவே காத்து கொண்டு இருந்த டீனும், ஸ்டாப் நர்ஸும் அவர்களுக்கு குட்மார்னிங் சொல்ல தலை ஆட்டி விட்டு அங்கிருந்த சோஃபாவில் உட்கார்ந்து கொண்டனர்.
அவளையே ஆச்சரியம் மாறாமல் பார்த்து கொண்டு இருந்த டீனை பார்த்த தன்ராஜ் "டாக்டர்..இவங்க பேர் ஆராதனா..நம்ம குடும்ப நண்பரோட பொண்ணு..இப்ப நமக்கு நடந்த டேமேஜை கண்ட்ரோல் பண்ண வந்திருக்கறவங்க.."
"புரியல சார்..இவங்களா என்ன பண்ண முடியும்.."
"என்ன பண்ணணும்ங்கறத மேடம் சொல்வாங்க...."
"மொதல்ல கேண்டீன்ல பேசின அந்த ஆட்கள் யாருனு சிசிடிவில ஐடன்டிஃபை பண்ணிங்களா.."
"யெஸ் மேடம்..பண்ணியாச்சு..
ஒருத்தர் நர்ஸ் இன்னொருத்தர் அட்மின்ல இருக்கற ஆளு..பேசினது அட்மின் ஆளு மேடம்.."
"சரி டாக்டர்..அவங்க ரெண்டு பேரையும் இம்மீடியட்டா உங்க ரூம்க்கு வர சொல்லுங்க.."
"அட்மின்ல இருக்கற ஆளை கிராமத்துல இருக்கற நம்மளோட இன்னொரு ஹாஸ்பிடல்க்கு ட்ரான்ஸ்பர் பண்ணிடுங்க.."
"அந்த நர்ஸ்க்கு வார்னிங் குடுத்து மெமோ குடுக்க சொல்லுங்க.. அவளுக்கு ரெண்டு மாசம் ஓ பி ட்யூட்டி போடுங்க.."
"சரி மேடம்..அட்மின் பொண்ணை வந்ததுமே என்னை பார்க்க சொல்லிட்டேன் மேடம்.. நர்ஸ்க்கு ராத்திரி எட்டு மணிக்கு தான் டயூட்டி..ஆனா காலைல பத்து மணிக்கு என்னை பாக்க சொல்லி ஏற்கனவே சொல்லிட்டேன் மேடம்.."
"நல்லது டாக்டர்..சிச்சுவேஷன் புரிஞ்சு நீங்களே ப்ரோஆக்டீவா திங்க் பண்ணி ஆக்ட் பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ்.."
"தேங்க்ஸ் மேடம்.."
"ஆராதனாக்கு ஹாஸ்பிடல் ட்ரஸ் குடுக்க சொல்லுங்க டாக்டர்...சிஸ்டர் நீங்க அவளை கூப்பிட்டு போய் ட்ரஸ் மாத்தி கூப்பிட்டு வாங்க.."
"அவளுக்கு சாப்பிட டிபன் எடுத்துட்டு வர சொல்லுங்க..அவ சாப்பிட பிறகு ப்ளட் டெஸ்ட் இம்மீடியட்டா பண்ணணும்.."
"அதுல ஏதாவது சீரியஸ் இன்பெக்ஷ்ன் இருக்க மாதிரி போலி ரிப்போர்ட் வேணும்..ரிப்போர்ட்ல பேரு ரூபா வர்மானு இருக்கணும்.."
"ஆனா நம்ம சரியா எடுக்கற ரிப்போர்ட்ல இவளுக்கு என்ன டிபிஷின்ஸி இருக்கு பாருங்க..அதுல வர்ற ரிப்போர்ட் பாத்து இவளுக்கு ட்ரிப்ஸ் ஏத்துங்க..."
"அதுக்கு பிறகு அவ தூங்க ஆரம்பிப்பால்ல..அப்பறம் அவளை வெச்சு ப்ளர்ரா ரெண்டு மூணு ஃபோட்டோ எடுக்கணும்.."
"அதே மாறி லாங்கா ஒரு வீடியோ ஒண்ணு எடுக்கணும்.."
"அடுத்தது நம்ம ஹாஸ்பிடல் மீட்டிங் ரூம்ல மதியம் ரெண்டு மணிக்கு ப்ரஸ் மீட் சார் ஏற்பாடு பண்ணி இருக்காரு.."
"மொதல்ல சபரி தன் குடும்பம் அனுபவிச்ச வேதனைகளை சொல்லி அந்த யூட்யூபர் மேல டீஃபேமேஜன் கேஸ் போட போறதை பத்தி பேசிடுவார்.."
"அடுத்து நீங்க பேசணும் டாக்டர்..நீங்க தான் முக்கியமான ஆள்.."
"நீங்க ரிப்போர்ட்ஸ், ஃபோட்டோஸ், வீடியோவை அவங்களுக்கு ரிலீஸ் பண்ணுங்க..நம்ம சைட்ல எல்லாத்துலையும் கரெக்டா இருக்கோம், எல்லாமே சரியா தான் இருக்குனு அவங்களுக்கு புரிய வெய்ங்க டாக்டர்.."
"அதுக்கு அடுத்து சாரும் யார் வீடியோ ரிலீஸ் பண்ணாங்களோ அவங்க பேர்ல டீஃபேமேஜன் கேஸ் போட போறதை சொல்லி பேட்டியை முடிச்சிடுவார்.. இது தான் நம்ம ப்ளான்.."
"இதுல எதுவும் மாறாம அவங்க அவங்க கரெக்டா எக்ஸிக்யூட் பண்ணிட்டா இந்த பிரச்சினை சுலபமா சால்வ் ஆகிடும்.."(தொடரும்)

Author: Subha Balaji
Article Title: நினைவெல்லாம் நீயே 20
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.