Subha Balaji
Member
- Joined
- Jun 30, 2024
- Messages
- 84
நினைவெல்லாம் நீயே 18
ரசிகர்கள், பத்திரிக்கையாளர்கள் என மாற்றி மாற்றி ரூபாவின் வீட்டிலும் தன்ராஜ் வீட்டிலும் சூழ்ந்து கொள்ள அவர்களுக்கு வீட்டில் இருந்து வெளியே வருவதற்கே வழி இல்லாமல் போனது.
ரூபாவின் சகோதரர்களான சப்தகிரி வாசனும், சபரிகிரி வாசனும் தங்களது குடும்பத்தோடு யூ.எஸ்ஸில் இருந்து கிளம்பியவர்கள், மூன்று ஸ்டாப் ஓவரால் மிக தடுமாறி சென்னை வந்து இறங்கியதும் நேராக தங்களது வீட்டுக்கு வந்தனர்.
அவர்களை பற்றிய எந்த தகவலும் வெளி உலகத்துக்கு தெரியாததால் பத்திரிக்கையாளர்களுடைய தொந்தரவுகள் இல்லாமல் சாதாரணமாக தங்களது வீட்டுக்கு போய் சேர்ந்தனர்.
அங்கே இருந்த விலாசினி அவர்களை பார்த்ததும் கதறி அழ ஆரம்பித்தார்.
"எங்க போனானு தெரியலயே..வீட்டில எல்லாம் அப்டியே இருக்கு டா. எனக்கு என்ன பண்றதுனு தெரியலயே.."
"மா அழறத நிறுத்து..அழுது அழுது உடம்பை கெடுத்துக்காதே.. மொதல்ல நடந்ததை சொல்லு..அப்பறம்
போலீஸ்ல கம்ளையிண்ட் பண்ணலாமா..இல்ல
என்ன பண்றதுனு யோசிப்போம்"
விலாசினி நடந்ததை சொல்லி முடிக்க அவருடைய இளைய மகன் சபரிகிரி வாசன் "அண்ணா..
அம்மா கூட நீயும் சேர்ந்து பேசாத..தன்ராஜ் மாமா வந்தார்னு அம்மா சொல்றாங்கல்ல.."
"நான் அவர்க்கு ஃபோன் பண்றேன்..அப்பறம் என்ன பண்ணலாம்னு பாப்போம்"
தன்ராஜ் அவர்களை ஓய்வெடுத்து விட்டு மாலையில் தன் கெஸ்ட் ஹவுஸ்க்கு விலாசினி இல்லாமல் வர சொல்ல, அவர்களும் அவர் சொன்னபடி ஓய்வெடுத்து மாலையில் கிளம்பி அங்கு போய் சேர்ந்தனர்.
அந்த இடம் பத்திரிக்கை ஆட்களுக்கு யாருக்கும் தெரியாததால் அமைதியாக இருந்தது. சப்தகிரியும், சபரியும் மட்டும் வர, வந்தவர்களை வரவேற்று அமர வைத்தார்.
"உங்கம்மா பாவம்..தனியா என்ன பண்றதுனே தெரியாம வேதனை பட்டுட்டு இருந்தா..அவ கூட துணையா நல்லவேளை நீங்க வந்து சேர்ந்தீங்க.."
அதுவரை நடந்ததை தெளிவாக அவர்களிடம் சொல்லி முடித்தார்.
"இவ்ளோ நடந்திருக்கா மாமா..எங்களுக்கு எதுவும் தெரியல..ஏன் மாமா அம்மா இல்லாம வர சொன்னீங்க.."
"சில விஷயங்களை பேசும்போது உங்கம்மா இல்லாம இருக்கறது தான் நல்லது..பொண்ணை காணோம்னு அவ அதிகமா உணர்ச்சி வசப்பட்ட நிலையில இருக்கா.."
"ரொம்ப அழறா..ஏதேதோ பேசி புலம்புறா..இதெல்லாம் வெளியே தெரியாம இருந்தா தான் நல்லது.."
"ஏற்கனவே ரூபாக்கு உடம்பு சரியில்லனு தான் நியூஸ் பரவி இருக்கு..அவ காணாம போயிட்டானு தெரிஞ்சா அவனவன் பரபரப்புக்காக தனக்கு தோணினது, ஏதாவது சினிமா க்ளிப்பிங், இல்ல அவ பேசின ஏதாவது வீடியோ போட்டு நம்மள அமைதி இல்லாம செஞ்சு..எல்லாரையும் வேதனை படுத்தி விடுவானுங்க.."
"உங்கம்மா பேசினா இந்தா கன்டென்ட் புடிச்சிக்கோனு நாமளே அவங்களுக்கு பாயிண்ட் எடுத்து குடுத்த மாதிரி..அவங்கள சமாளிக்க வேற வழி தெரியாம ரூபாவை எங்களோட ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்குனு தற்சமயம் சொல்லி இருக்கோம்.."
"அங்க எப்பவும் எங்களோட சூட் ரூம் இருக்கறதால யாருக்கும் சந்தேகம் வராது..ஆனா இதை வெச்சு எத்தனை நாள் ஓட்ட முடியும்னு தெரியாது..உதவிக்கு வந்தவங்களையும் உங்கம்மா பேசின பேச்சுல இனி இது சம்பந்தமா என்னை கூப்பிடாதீங்கனு சொல்லிட்டு போயிட்டாரு.."
"நாமளே தான் டேமேஜ் கன்ட்ரோல் பண்ணி ஆகணும்...ரூபா இப்ப எப்படி இருக்கானு மாத்தி மாத்தி பிரஸ் ஆட்கள் கேக்கறாங்க..என்ன பதில் சொல்லலாம் சப்தகிரி.."
"எங்களுக்கு உங்க சர்க்கிள் பத்தி எதுவும் தெரியாது மாமா..நீங்க என்ன சொல்றீங்களோ அதை அப்படியே செய்யறோம்.."
"சரி..என் செகரட்ரி இப்ப வருவாரு..அவர் என்ன எழுதி குடுக்கறாரோ அதை படிச்சிடு..மேற்கொண்டு எதாவது கேட்டா நாங்களே வேதனைல இருக்கோம்..ப்ளீஸ்..எங்க தங்கை மொதல்ல சரியாகி வரட்டும்..பிறகு அவங்களே உங்களுக்கு பேட்டி குடுப்பாங்கனு சொல்லி முடிச்சிடு..
"இந்த மாறி வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா பேசறத்துக்கு சபரி தான் சரியா இருக்கும்..சபரி நீயே பேசிடு.."
"சரி மாமா..நீங்க சொல்ற மாதிரியே பண்ணிடறேன்.."
தன்ராஜின் பி.ஏ வந்ததும் அவர் எழுதிய பேப்பரை குடுக்க, அதை படித்து பார்த்த சபரி "எங்க பேசணும், எப்ப பேசணும்னு சொல்லுங்க மாமா.."
"கொஞ்சம் இரு சபரி..ம்ம்ம்..உங்க வீடு வேணாம்..என் வீடு வேணாம்..ஹாஸ்பிடல் வேணாம்..இங்கே எல்லாம் கூட்டம் சேர்ந்தா நமக்கு தான் பிரச்சினை.."
"இப்ப மணி ஆறு..எட்டு மணிக்கு சேப்பாக்கத்துல இருக்கற அவங்களோட ஆஃபீஸ்க்கு வந்துட சொல்லிடலாம்..அதான் சரியா இருக்கும்.."
அடுத்து வேகமாக வேலைகள் நடக்க தன்ராஜ் அவரின் பி.ஏ ரமணன், சபரியோடு சரியாக ஏழறை மணிக்கு பிரஸ் கிளப் ஆஃபீஸ்க்கு போய் சேர்ந்தனர்.
அங்கு போய் எல்லா ஏற்பாடுகள் பார்த்து சபரிக்கு எப்படி பேட்டி குடுக்க வேண்டும் என விரைவாக ட்ரெயினிங் குடுத்து முடித்ததும் சரியாக எட்டு மணிக்கு லைவ் ஆரம்பித்தது.
பத்திரிக்கையாளர்களின் இடை விடாத தொடர் கேள்விகளுக்கு பதிலே சொல்லாமல் சபரி உட்கார்ந்திருந்தான்.
"என்ன சார்..இத்தனை பேர் கேள்வி கேக்கறோம்..நீங்க பதில் சொல்லாம இருக்கீங்க.."
"சார்..வணக்கம்..கொஞ்சம் அமைதியா பொறுமையா ஒவ்வொருத்தரா கேள்வி கேளுங்க...எல்லா பக்கத்துலேந்து கேள்வி கேட்டா எனக்கு பதில் சொல்லறது கஷ்டமா போயிடும்..."
"ரூபா பத்தின பிரஸ் மீட்ல இது யாருனு நீங்க குழம்பலாம்..நான் ரூபாவோட ரெண்டாவது அண்ணன் சபரிகிரிவாசன்...
நானும் அண்ணாவும் யூ.எஸ்ல இருக்கோம்.
எங்க அம்மாவும், தங்கையும் தான் இங்க இருக்காங்க..தங்கைக்கு நடிக்கற ஆசை இருக்கறதால அம்மா அவளோட ஆசையை நிறைவேற்ற அவங்க கூட இருக்காங்க.."
"
இது எல்லாமே உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்..எதுவும் புதுசா நான் சொல்லல.."
"இதுவரைக்கு நான் எந்த பேட்டியும் குடுத்ததில்ல..எல்லாமே அம்மா, தங்கை தான் பாத்திட்டு இருந்தாங்க.."
"இப்ப தங்கச்சிக்கு உடம்பு சரியில்லை..ஹை பீவர்..
தன்ராஜ் சாரோட ஹாஸ்பிடல்ல தான் சேத்திருக்கோம்.."
"ஜுரம் அதிகமா இருக்கறதால தங்கச்சி ஐசியூல இருக்காங்க..
நாங்களே இன்னும் யாரும் பார்க்கல..ஏன் கூடவே இருக்கற எங்கம்மா கூட இன்னும் பாக்கல.."
"டாக்டர்ஸ் நார்மல் வார்ட் வர்றவரைக்கும் யாரையும் பாக்க அனுமதிக்க முடியாதுனு சொல்லி இருக்காங்க.."
"எங்க தங்கச்சியோட உடல்நிலை பத்தின தகவல்கள் உங்களுக்கு அப்பப்ப ஹாஸ்பிடல் சார்பில குடுத்திடுவாங்க.."
"நீங்க எல்லாம் எங்க குடும்ப உறுப்பினர்கள்..எங்க கூடவே எங்க நல்லது, கெட்டது எல்லாத்துயும் பங்கெடுத்துக்கறவங்க.."
"உங்களுக்கே தெரியும்..
ஹாஸ்பிடல்ல ஐசியூல எப்டி இருப்பாங்கனு..அதனால எல்லாரும் கொஞ்சம் பொறுமையா எங்க கூட இருந்து ஹாஸ்பிடல் சொல்ற சரியான தகவல்களை பொது மக்கள் கிட்ட கொண்டு போய் சேர்க்கணும்னு கேட்டுக்கறேன்.."
"விரிவான பேட்டி எங்க தங்கை ரூபாக்கு உடம்பு சரியான பிறகு அவங்களே உங்களுக்கு குடுப்பாங்க.."
"நாங்க கூப்பிட்ட ஒரே காரணத்துக்காக உங்க எல்லாரோட நேரத்தையும் ஒதுக்கி இங்க வந்ததுக்கு ரொம்ப நன்றி..பேட்டியை இதோட முடிச்சுக்கலாமா.." என சிரித்தபடி பேசி முடித்தவன் பத்திரிக்கையாளர்கள் தன்னை சூழ்வதற்குள்ளாகவே அடுத்த சில நொடிகளில் தன்ராஜின் காரில் ஏறி பறந்தான்.
அங்கிருந்து நேராக தங்களது வீட்டுக்கு போனவன் அம்மாவிடம் எல்லா தகவல்களையும் சொல்லி. விட்டு, அம்மாவை அழைத்து போய் ஒரு தூக்க மாத்திரை குடுத்து விழுங்க செய்து படுக்கையில் படுக்க வைத்து நேராக தன்னறைக்குள் போனான்.
அங்கு குழந்தைகளை அணைத்தபடி தூங்கி கொண்டு இருந்த காத்யாயனிக்கு முழிப்பு வராமல் துளி கூட சத்தமில்லாமல் தன்னை சுத்தம் செய்து உடை மாற்றி கொண்டு வந்து படுத்ததும் இரு நாட்களாக சரியாக தூங்காததால் சில நொடிகளில் தூக்கம் வந்துவிட்டது.
மறுநாள் சபரி குடுத்த பேட்டி பல ஊடகங்களில் பரபரப்பாக பகிர ஆரம்பித்தது. அதில் சபரி சொல்லி இருந்த தன்ராஜின் ஹாஸ்பிடல் வாசலில் ஊடகங்கள் வந்து குவிய ஆரம்பித்தது.
நிலைமையை சமாளிக்க தன்ராஜ் ஹாஸ்பிடல் டீன் தன்ராஜை அழைக்க அவர் உடனே ஊடகங்களுக்கு ரூபா தற்போது ஐசியூவில் டாக்டர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும் இன்னும் சில நாட்களில் நோய் தொற்று குறையும் என நம்புதாகவும், அதற்கு பிறகு ரூபா நார்மல் வார்ட்க்கு மாற்றப்படுவார் என ஒரு அறிக்கை வெளியிட சொன்னார்.
டீனும் அவர் சொல்லியபடி ஹாஸ்பிடல் வாசலுக்கு வெளியே வந்து ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டார்.
அதன் பின்னர் எல்லா ஓய்ந்தது என தன்ராஜீம், ரூபா குடும்பமும் நினைத்து பெருமூச்சு விட்டு அமைதி அடைந்தனர்.
அன்றிரவு யாருக்கும் தெரியாது ஒரு விவசாயி போன்ற உருவம் ஐசியூ அருகே சென்று அங்கிருந்த நர்ஸ்ஸிடம் பேச்சு குடுத்தது.
"மா..எங்க சொந்தக்கார பையன் எப்டி இருக்கான் மா.."
"யாருங்க உங்க சொந்தம்..அவருக்கு பேரில்லையா.."
"அதான் மா வேலு..ராஜவேலா இல்ல வஜ்ஜிரவேலானு தெரியல..ஊர்ல அவனை வேலு வேலுனு கூப்பிடுவோம் தாயி.."
"ஓஓ..ராஜவேலா..அந்த ஆக்ஸிடென்ட் தானே..ஆனா அவங்கள பாக்க கிராமத்து ஆள் மாறி இல்லயே.."
அந்த வார்த்தையில் திகைப்படைந்த அந்த உருவம் ஏதோ பதிலளிப்பதற்குள் அங்கு வந்தவரை பார்த்து நர்ஸ் திகைப்படைந்தாள்.(தொடரும்)

Author: Subha Balaji
Article Title: நினைவெல்லாம் நீயே 18
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.