• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நினைவெல்லாம் நீயே 14

Subha Balaji

Member
Joined
Jun 30, 2024
Messages
78
நினைவெல்லாம் நீயே 14

சென்னையில் இருந்து இட்டா நகர் சென்ற விமானம் அங்கு போய் சேர்ந்ததும் கடைசியாக விமானத்தில் இருந்து இறங்கி பெண் தன் முகத்தை துணியில் கட்டி கண்களில் கூலர் அணிந்திருந்தாள்.

பளிச்சென்று மஸ்டர்ட் கலர் ஷார்ட் குர்த்தி, பாட்டில் க்ரீன் பட்டியாலா பேண்ட், அதே க்ரீன் கலர் துப்பட்டாவை முகத்தை மூடி கட்டியிருந்தாள்.

ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வந்தவள் முதலில் தன் கூலரை கழற்றி வைத்தாள். அந்த ஏர்போர்ட் அமைந்த இடத்தின் அழகை கண்டு மயங்கி நின்றாள். பசுமையான மலைகளால் சூழப்பட்டு மிக அழகாகவும், கம்பீரமாக காட்சி அளித்த அந்த இடம் அவளுக்கு அதிக சந்தோஷத்தை தந்து ஏதோ ஒரு பாட்டை வேறு மெல்ல முணுமுணுக்க வைத்தது.

அங்கு அதிகமான ஆட்கள் இல்லாததால் பார்த்ததும் தெரியும் அளவுக்கு மிலிட்டரி க்ராப்போடு உயரமாக நின்று கையில் அட்டையை தாங்கி நின்றவனிடம் சென்று அந்த அட்டையை காண்பித்து தன்னை காண்பித்தாள்.

அந்த அட்டையை தாங்கியவனும் "ஆப் அனாமிகா ஹை...
நமஸ்தே..ஆயீயே மேம் சாப்..மேரா நாம் சரன்ஜித் ஹை..இட்டா நகர் வெல்கம்ஸ் யூ" என சொல்ல அவளும் மெல்ல சிரித்து கை கூப்ப அதை பார்த்து மெல்ல புன்சிரித்து தன் ஜீப் இருந்த இடத்துக்கு அழைத்து சென்றான்.

இனி அவர்கள் ஹிந்தியில் பேச நமக்காக தமிழில் வரும்.

ஜீப் அருகில் செல்லும் போது அதில் இருந்த சின்னங்கள் எல்லாம் இராணுவ சின்னங்களாக இருக்கவே அனாமிகா கேள்வியாக வந்தவனை பார்க்க "நாங்க இருக்கறது ஆர்மில..என்னோட சீனியர் உங்களை கூப்பிட்டு வர சொன்னார்..."

அதை கேட்டு தலை அசைத்து விட்டு வெளியே பார்த்து தன் கடிகாரத்தை சில தடவைகள் பார்க்க..அதை புரிந்த அவனும் "எங்க ஆர்மி பேஸ் இங்கே இருந்து போக குறைந்தபட்சம் மூணு மணி நேரம் ஆகும் மேம்.."

"நீங்க லஞ்ச் சாப்பிட்டீங்களா.."
இல்லை என அவள் தலையசைக்க "நீங்க லஞ்ச் சாப்பிடலேனா இங்கேந்து அரை மணி நேர டிஸ்டன்ஸ்ல எக்ஸ் சர்வீஸ்மேனாட வீடு இருக்கு.. உங்களை சாப்பிட வெச்சு கூப்பிட்டு வரணும்னு ஆர்டர்..." என சொல்லி எதுவும் பேசாமல் வழியை பார்த்து ஓட்ட ஆரம்பித்தான்.

அவன் சொன்னபடி அரை மணி நேரத்தில் அந்த மனிதரின் வீட்டை அடைந்து உள்ளே போய் அவர்களை அழைத்து வந்த சரன்ஜித் "மேம்..சார் தான் மனன்...சரவணன் சாருக்கு தெரிஞ்சவர்..இவங்க சாரோட மனைவி ஶ்ரீஜா மேம்.."

அவளை காட்டி "இவங்க தான் அனாமிகா மேம்..சரவணன் சார் சொன்னவங்க.."என சொல்லி "போய் சாப்பிட்டு வாங்க மேம்.." என்று விட்டு தன் ஜீப்பை நோக்கி போனான்.

கைதட்டி கூப்பிட்டவள் அவன் திரும்பியதும் சாப்பிட வாங்க என சைகையால் அழைத்தாள். "இல்ல மேம் என்னோட லஞ்ச் கேம்ப்ல முடிஞ்சாச்சு...நீங்க சாப்பிட்டு வாங்க.."

அவனை திரும்பி பார்த்தபடி அவர்களோட வீட்டின் உள்ளே சென்றவளை வரவேற்று உட்கார வைத்தனர்.

அவர்களை பார்த்து சிரித்தவளுக்கு ஶ்ரீஜாவை பார்க்க தென்னிந்திய ஜாடை தெரிய அவளை உற்று பார்த்தாள்.
"மேம்..சாப்பிட வாங்க.." என ஹிந்தியில் அழைக்க எழுந்து டைனிங் டேபிளில் அமர அங்கிருந்த உணவுகளை பார்த்தவளுக்கு மலைத்து போனது.

அதில் பல வகைகள் அவள் பார்த்ததே இல்லாததால் ஶ்ரீஜாவின் கையை பிடித்து ஆங்கிலத்தில் மெல்ல "தப்பா நெனக்கலேனா
இதெல்லாம் என்ன டிஷ்..நான் பாத்ததே இல்ல..."

"எஸ் மேம்..இது எல்லாம் அருணாச்சல பிரதேசத்தோட யூனிக் அன்ட் ஸ்டேபிள் டிஷ் ..
இது 'கோட் பிதா' வெல்லம், மைதா மாவு, வாழைப்பழம் வெச்சு செய்யற ஸ்வீட்
இது 'குரா' கருப்பு சென்னால செஞ்ச சப்பாத்தி..
இது 'ச்சூரா சப்ஜி' சீஸ்ஸும், சில்லி ப்ளேக்ஸும் வெச்சு செய்யற சைட்டிஷ்..
இதுக்கு பேரு 'பெஹக்' ஊற வெச்ச சோயா பீன்ஸும், காஞ்ச மிளகாயும் வெச்சு செய்யற சட்னி
இது ஆலு பராட்டா, சாதம், சாம்பார், வெண்டைக்காய், ரசம், தயிர், ஊறுகாய்...

"யார்னே தெரியாத எனக்காக எப்படி இவ்ளோ ஐட்டம் செஞ்சீங்க...
அவ்வளவும் வெஜ்ஜா பாத்து பாத்து செஞ்சிருக்கீங்க.."

"சரவணன் எனக்கு தம்பி..இந்த வீட்டுல அவன் சொன்னா அதுக்கு அப்பீலே கிடையாது..அவனுக்காக இது கூட செய்யலேனா எப்டி.."

"நீங்க லாங் டிஸ்டன்ஸ் ட்ராவல் பண்ணி வர்றதால நான்வெஜ் வேணாம்னு சொல்லவே செய்யல..இல்லே அதுவும் செஞ்சிருப்பேன்.."

"ஓஓஓ..ரொம்ப தேங்க்ஸ்..உங்க கிட்ட ஒண்ணு கேக்கலாமா..உங்களை பார்த்தா தென்னிந்திய ஜாடை தெரியுது.."

அதை கேட்டதும் பெரிதாக சிரித்த ஶ்ரீஜா "வந்ததுமே கேப்பீங்கனு நேனச்சேனே..இப்ப தான் தெரிஞ்சிதா.."

"இல்ல அப்பவே கேக்கணும்னு நெனச்சேன்..ஆனா தப்பா நெனச்சுப்பீங்களோனு தான்.." என உடனே தமிழில் மாறினாள்.

"நமக்கு சென்னை தான் பூர்வீகம்..பல தலைமுறைகளாக எங்க வீட்டுல அங்க தான் இருக்காங்க.."

"பொறந்தது..வளர்ந்தது..படிச்சது..
எல்லாம் சென்னை தான்..நான் ஒரே பொண்ணு..ஒரு அண்ணா இருக்கான்.வீட்டுக்கு ஒரு இன்ஜீனியர் திட்டத்துல நானும் இன்ஜினியரிங் படிச்சேன்..."

"நீங்க சரவணனுக்கு உறவா இல்ல தெரிஞ்சவங்களா..அவன் இதுவரைக்கும் உறவுனு யாரையும் கூப்பிட்டதே இல்ல..உங்களுக்கு லஞ்ச் ரெடி பண்ண சொல்லி சொன்னதும் எங்களுக்கே ஆச்சர்யமா போச்சு.. "

"அவர் எனக்கு அண்ணா மேம்.."

"இப்டி ஒரு தங்கச்சி இருக்கறதா அவன் இதுவரைக்கும் சொன்னதே இல்லயே...

"எனக்கு கூட தான் இப்டி ஒரு அக்கா இருக்கறதா இதுவரை தெரியலயே..."

"யப்பா...சாமி..சரண்டர்...எனக்கு இப்டி ஒரு போட்டியா..நேரமாச்சு வாங்க.. சாப்பிடலாம்...வெளில ஒரு ராட்சசன் நிக்கறானே..அவனும் என் தம்பி தான்.. உங்களுக்கு சாப்பிட அரைமணி நேரம் தான் டயம் குடுத்திருக்கான்..."

"எல்லாம் ரெடியா வந்து பாத்துட்டு வேற போயிருக்கான்..லேட் ஆனா நமக்கு புரிய கூடாதுனு முறைச்சுக்கிட்டே பஞ்சாபில திட்டி தீர்த்திடுவான்..." என சொல்லி ஶ்ரீஜா வாய் விட்டு சிரித்தாள்

அனாமிகாக்கு தட்டு போட்டு பரிமாற, அவர்களையும் தன்னோட சாப்பிட அழைக்க எல்லாருமாக உட்கார்ந்து சாப்பிட்டனர்.
ஒவ்வொன்றும் சுவையில் அற்புதமாக இருக்க ஸ்வீட் மட்டும் நாலு தட்டில் வைக்க சொல்லி இது நம்மூர் அதிரசம் மாதிரி இருக்கு என ஆனந்தமாக ரசித்து சாப்பிட்டு தயிரோடு முடித்தாள்.

"ப்பா..ச்சான்ஸே இல்ல..செம்ம சமையல்ங்க..ரொம்ப நாளைக்கு அப்பறம் நல்லா என்ஜாய் பண்ணி சாப்பிட்டேன்.."

"என்ஜாய் பண்ணி சாப்பிடறவங்க தான் இப்டி வேக வேகமா சாப்பிடுவாங்களா.."

"இல்ல டைம் அரைமணி நேரம் தான் இருக்கு..ஏற்கனவே பேசி பத்து நிமிஷமாகிடுச்சே..மீதி கதை கேக்க முடியாம கிளம்பி போனா எனக்கு தலையே வெடிச்சிடுமே..எப்டிங்க இந்த ஊருக்கு வந்தீங்க...சாரை பாக்க நம்மூர் ஆள் மாறி இல்லயே.."

"பார்ரா..எங்க கதை கேக்கவும் ஆளிருக்கு..எப்ப பாரு சரவணன் என்னை கலாய்ப்பான்..அவன் கிட்ட இத சொல்லி அவன் மூஞ்சி போற போக்க பாக்கணும்.."

"எனக்கு ஐடி கம்பெனில வேலை பண்ண பிடிக்கல..எங்க சித்தப்பா ஆர்மில இருந்தார்..சின்ன வயசுலேந்தே அவரை பார்த்து ஆர்மில சேரணும்ங்கறது என் கனவு..."

"ஆர்மில சேர பையனையே விடாதவங்க..பொண்ணையா விடுவாங்க..படிச்சு முடிச்சதும் எனக்கு கல்யாணம் பேசிட்டாங்க.."

"ஐயோ..அப்பறம் என்னாச்சு.."

"எல்லாம் என் நேரம்...வீட்டுக்கு தெரியாம ஆர்மி எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணிட்டு ஜாயின் பண்ண லெட்டர் வந்தப்ப தொக்கா மாட்டினேன்..."

"அம்மா, அப்பா, அண்ணானு வீட்டு ஆளுங்க தவிர ஊர்ல இருந்த அம்மா சைட், அப்பா சைட்னு ஏழு தலைமுறை சொந்தத்தையும் என்னை பெத்த நல்லவங்க ஃபோன் போட்டு வரவழிச்சி, அவங்க எல்லாம் வீட்டுக்கு வந்து ஆளாளுக்கு திட்டு...
அட்வைஸ்..ப்ரஷரே தாங்க முடியல.."

"இந்த ப்ராசஸ் ஒரு வாரம், பத்து நாள் போச்சுனா பாத்துக்கோங்களேன்..இதுல வந்தவங்களுக்கு காலை டிபன், மதியம் சாப்பாடு, சாயந்திரம் காஃபி போண்டா, ராத்திரி டின்னர் னு கவனிக்க முடியல..நேரமில்லனு சமையலுக்கு ஆள் வெச்சு பாத்தோம்.."

"இதை பாத்து அக்கம்பக்க ஆளுங்க எங்க வீட்டு ஏதோ விசேஷம் அவங்களை கூப்பிடலனு சண்டைக்கு வேற வந்துட்டாங்க..அவங்களை சமாளிக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு..மேம்"

அதை கேட்டு கண்களில் நீர் வழிய சிரித்த அனாமிகா "எப்டி..எப்டி உங்களை திட்ட நீங்களே ஆளுங்கள வரவழிப்பீங்க.. அவங்களுக்கு சமைக்க நேரமில்லாம ஆள் வெச்சு சமையலா..வேற லெவல் கா.."

தன்னையும் அறியாமல் அவள் சொன்ன அக்காவை கேட்ட ஶ்ரீஜா அதை கவனிக்காதது போல "என் கதைய விடுங்க...உன்னை பத்தி சொல்லுங்க மேம்.."

"சொல்ல எதுவும் இல்ல..
அனாமிகாங்கற பேருக்கு ஏத்த மாறி இருக்கேன்..அவ்ளோ தான்.." தன்னை பற்றி சுருக்கமாக சொன்னவள் "அப்பறம் என்னாச்சுக்கா..."என ஆவலாக கேட்டாள்.

"என் கதைக்கு இப்டி ஒரு விசிறியா...ஆஹா..உஹா..ரொம்ப போராடி ட்ரையினிங் கேம்ப்ல சேர்ந்தேன்.. ட்ரையினிங் முடிஞ்சதும் கல்யாணம்னு சொன்னாங்க..
சொன்னது எல்லாத்துக்கும் தலையாட்டிட்டு ட்ரெயினிங் முடிஞ்சதும் அஸ்ஸாம் ரெஜிமெண்ட்ல இன்ஜினியரிங் டிவிஷன்ல போஸ்ட்டிங் வந்ததும் மறுபடியும் போராடி இங்க சேர்ந்தேன்.."

"இங்க வந்து தான் மனனை பாத்தேன்..மனனோட அப்பா அஸ்ஸாமி..அம்மா தமிழ்..அவங்க ஒரு வகைல எனக்கு அத்தை முறையா வரும் "

"அத்தை கிட்ட எங்க வீட்டுல என்னை பத்திரமா பாத்துக்க சொன்னாங்க.. நானும் பதிலுக்கு அவங்க பையனை பத்திரமா பாத்துக்கவே மறுபடியும் பிரச்சினை ஆரம்பம் ஆச்சு.."

"மனன் ரொம்ப அமைதியான ஆள். என் அதிரடி தாங்க முடியாம என்னை லவ் பண்ண ஆரம்பிச்சார்.

"வேலைக்கு போராடின மாறி அடுத்து இவரை கல்யாணம் பண்ண எட்டு வருஷம் போராடி அப்பறம் தான் கல்யாணம் செய்ய ஒத்துக்கிட்டு கல்யாணம் முடிஞ்சு தோ..பத்து வருஷம் ஆகிடுச்சு.."

"பையனுக்கு எட்டு வயசு..
பொண்ணுங்களுக்கு நாலு வயசு..ரெண்டு பேரும் பக்கத்துல இருக்கற ஸ்கூல்ல படிக்கறாங்க..மேம்.."

"சூப்பர் கா..சூப்பர்..உங்க கதையை ஏதோ சினிமா மாறி இருக்கு.." என சொல்லி சிரித்து கொண்டே வாசல் பக்கம் பார்க்க அங்கு தன் கைகடிகாரத்தையும் அவளையும் மாறி மாறி பார்த்து முறைத்து கொண்டு நின்றிருந்த சரன்ஜித்தை பார்த்தாள்.

"சொன்னேன்ல்ல..வந்துட்டான்..
பாருங்க மேம்..கேம்ப்ல இருக்கறவங்க வெளில எங்க போனாலும் திரும்பி ஆறு மணிக்கு ரிப்போர்டிங் டைம்..பேஸ்ல இருக்கணும்..அதான் முறைக்கறான்... "

"வாடா..நல்லவனே..உக்காரு..இந்த டீய குடி..டைம் ஆகாது..உன் சீனியர் கிட்ட நான் சொல்றேன்..." சரன்ஜித்தை உபசரித்தாள்.

அவன் சில நொடிகளில் டீ குடித்து முடித்ததும் இருவருமாக மனனிடமும், அவளிடமும் கிளம்புவதாக சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.(தொடரும்)
 

Author: Subha Balaji
Article Title: நினைவெல்லாம் நீயே 14
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom