திருமணமா? உடல்நலமா?
இந்தியாவின் பெருமைக்குரிய கலாச்சார அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படுவனவற்றுள் திருமணங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. இந்தியத் திருமணங்களை உலகம் முழுவதும் சிலாகித்துப் பேசுகிறார்கள். இருந்தாலும் இந்தியர்களைப் பொறுத்தவரை திருமணம் என்பது பலருக்கு மகிழ்ச்சியைத் தரும் அதே சமயம் சிலருக்குச் சுமையாகவும் மாறிவிடுகிறது. சென்ற வாரம் கண் பரிசோதனைக்காக ஒரு 24 வயது பெண் வந்தாள். பிளஸ் டூ முடித்து கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்து ஒரு கணினி நிலையத்தில் வேலை பார்ப்பவள். அவள் கூறிய உடல் உபாதை சற்று வித்தியாசமாக இருந்தது.
"என்னோட கண்ணு யாரையும் நேராவே பாக்க மாட்டேங்குது.. சும்மா இருக்கும் போது நேரா பார்க்கிறேன்.. ஆனா யாராவது எதிர்ல வந்தா என் கண்ணு கீழே போகுது. அதனால கண்ணை செக் பண்ணுங்க" என்றாள்.
"எத்தனை நாளா இப்படி இருக்கு?" என்று கேட்க, "எனக்குக் கல்யாணம் ஆகி மூணு மாசமாச்சு.. அதுல இருந்து தான்" என்றாள். கண் பரிசோதனை செய்ததில் அவளுக்குக் கண்களில் ஒரு பிரச்சனையும் இல்லை. சரி மனம் சார்ந்த பிரச்சனைதான் என்று அவளிடம் இயல்பாக பேசிக்கொண்டே நாடித்துடிப்பை பரிசோதிக்க அவள் கையைத் தொட்டேன். சிலசமயம் மனப் பதற்றத்தில் இருப்பவர்களிடம் இப்படி கையைப் பிடித்தோ தோளில் தட்டிக்கொடுத்தோ பேசினால் நிம்மதியாக உணர்வார்கள், மனம் திறந்து பேசுவார்கள். தொட்டதில் அவள் உடல் சூடாக இருந்தது தெரிந்தது.. காய்ச்சல் இருக்கே? என்றேன், உடனிருந்த அவள் அம்மா அப்போது தான் தொட்டுப் பார்த்துவிட்டு, "ஆமா! காய்ச்சல் அடிக்குது.. சொல்லவே இல்லை?" என்றார் அவளிடம்.
புதிதாகத் திருமணமான பெண்ளுக்கு வரும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று, சிறுநீர்ப்பையில் கிருமித்தொற்று ஏற்படுவது. "நீர்க்கடுப்பு இருக்காம்மா?" என்றேன். "ஆமா. இதை எப்படி சொல்றதுன்னு தான் யார்ட்டயும் சொல்லல.. இதுவும் கல்யாணம் ஆனதுல இருந்து இருக்கு" என்றாள். நானாகக் கண்டுபிடித்ததில் அவளுக்கு அவ்வளவு சந்தோஷம்.
கல்யாணம் ஆன புதிதில் எல்லாப் பெண்களுக்கும் இது சகஜம் என்று கூறி, அதை எப்படி தவிர்ப்பது என்று விளக்கினேன். பின் அவள் அம்மாவிடம் தனியாக, புகுந்த வீட்டில் ஏதும் பிரச்சினை உள்ளதா என்று கேட்டேன். "இல்லம்மா அவங்க ரொம்ப நல்லவங்க.. இவளை அவ்வளவா விவரம் தெரியாம வளர்த்துட்டோம்.. அதான் எதுக்கெடுத்தாலும் பயப்படுறா.. இது மட்டுமில்ல, இன்னும் கல்யாணம் ஆனதுல இருந்து புதுசு புதுசா ஏதோ உடல் பிரச்சனைகளை சொல்றா.. பயத்தில் தான் இப்படி சொல்ற மாதிரி எங்களுக்குத் தெரியுது" என்றார்.
நானும் சில ஆறுதல் வார்த்தைகளை கூறி விட்டு மனநல மருத்துவரிடமும் ஒரு சிறு ஆலோசனைக்காக அனுப்பினேன்.
பல வருடங்கள் முன்பு ஒரு கர்ப்பிணிப் பெண்களை பரிசோதிக்கையில் ஏழுமாத கர்ப்பமாக இருந்த ஒரு பெண்ணுக்கு இதய நோய் இருப்பது தெரிந்து. இரண்டு வால்வுகள் சுருங்கிய நிலை அது. பிரசவத்தின் போது இந்த நோயால் அவளுக்கு உயிரிழப்பு ஏற்படலாம். இவ்வளவு பாதிப்பு நிச்சயம் இத்தனை நாளில் அவளுக்கு ஏதேனும் அறிகுறியை ஏற்படுத்தியிருக்கும். "ஏன்மா.. இதுக்கு முன்னாடி உனக்கு மூச்சுத்திணறல், இளைப்பு இதெல்லாம் வந்துருக்கா?" என்றேன். முதலில் எதுவுமே இல்லை என்று மழுப்பினாள்.
"என்ன கிளாஸ் வரை படிச்சிருக்க.. எந்த ஸ்கூல்ல படிச்ச? அங்க வருஷாவருஷம் செக் பண்ணுவாங்களே, அப்ப நிச்சயம் கண்டுபிடிச்சிருப்பாங்களே.." என்றேன். ஏனெனில் அவளுக்குப் பதினெட்டு வயது தான். சமீபத்தில் தான் பள்ளிப் படிப்பை முடித்திருக்க வேண்டும். வருடாந்திர பரிசோதனைகள் அரசுப்பள்ளிகளில் சிறப்பாகவே நடைபெறுகின்றன.
அப்போதும் சரியாக பதில் வராமல் போகவே அவளது ஊருக்கான கிராம செவிலியரைக் கூப்பிட்டுக் கேட்டேன். "மேடம்! இவளுக்கு நைன்த் படிக்கும்போதே நாம ஸ்கூல் ஹெல்த் ப்ரோக்ராம்ல கண்டுபிடிச்சுட்டோம்.. இதுக்கு முன்னாடி இருந்த டாக்டர் எவ்வளவோ சொன்னாரு. அதுக்கு அப்புறம் வருஷாவருஷம் சொல்லியிருக்கோம். ஆபரேஷன் பண்ணா சரியாயிடும்.. எல்லா உதவியும் பண்றோம் அப்படின்னு சொன்னோம். இதய நோய்னு தெரிஞ்சா கல்யாணம் ஆகாதுன்னு பாதியில் படிப்பை நிப்பாட்டி கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க" என்றார்.
ருமாட்டிக் ஃபீவர் என்ற காய்ச்சல் நம் நாட்டில் பரவலாகக் காணப்படும் ஒன்று. என்றாவது ஒருநாள் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் கிருமியால் லேசான தொண்டை வலி, தோலில் புண்கள் ஏற்பட்டிருக்கலாம். அதன் எதிரொலியால் பின்னாளில் சிலர் உடலில் மட்டும் ஒருவிதமான எதிர்வினை (அழற்சி- inflammation) ஏற்பட்டு கால், கை மூட்டுகள், இதய வால்வு, மூளையின் சில பகுதிகள் இவை பாதிக்கப்படும். இதய வால்வுகள் சுருங்குவதோ அல்லது செயலிழப்பதோ நடந்தால் அதை இப்போதுள்ள மருத்துவ முறைகள் மூலம் எளிதாக மாற்றிவிடலாம். அதற்கான அறுவை சிகிச்சைகள் இப்போது பல இடங்களில் செய்யப்படுகின்றன. அரசு மருத்துவமனைகளிலும், சில தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாகவே செய்கிறார்கள். புகழ்பெற்ற மருத்துவமனைகள் கூட தொலைதூர ஊர்களில் முகாம்கள் நடத்தி தங்கள் செலவிலேயே அழைத்துச் சென்று அறுவை சிகிச்சை செய்து அனுப்புகிறார்கள். இப்படி அறுவை சிகிச்சை செய்து கொண்ட பலர் வாழ்நாள் முழுமைக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருப்பதைப் பார்க்கிறோம்.
இதுதவிர லேசான இதய வால்வு பிரச்சனைகளுக்குத் தொடர் கண்காணிப்பும் மீண்டும் ஸ்ட்ரெப்டோ காக்கஸ் கிருமி தாக்காமல் இருக்க பென்சிலின் மாத்திரை அல்லது ஊசி மட்டுமே போதும். இத்தனை வசதிகளையும் எத்தனையோ முறை எடுத்துக் கூறியும் பல பெற்றோர் சிகிச்சைக்கு ஒத்துக்கொள்வதில்லை. 'வேற யார்கிட்டயும் சொல்லிடாதிங்க' என்பது மட்டுமே அவர்களது முதல் எதிர்வினையாக இருக்கிறது. இத்தகைய இதய நோயினை சிலர் மறைத்து விட்டு இறுதியாக பிரசவ வலி எடுத்த பின் புதிதாக ஒரு மருத்துவமனைக்கு வருவார்கள். அப்போது திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு நோயாளி உயிரிழப்பதும் உண்டு.
இதய நோய் மட்டுமல்ல, வலிப்பு நோய் வந்தாலும் அதே சூழ்நிலைதான். வலிப்பு நோயினை உடைய மனிதர் ஒருவரால் மாத்திரை மருந்துகள் மட்டும் உட்கொண்டு மற்ற யாரையும் போல சாதாரண வாழ்வு வாழ முடியும். கீழே விழுந்து அடிபட்டாலும் பரவாயில்லை, மருத்துவரிடம் காட்டப் போனால் நான்கு பேருக்குத் தெரிந்துவிடும் என்று மூடியே வைத்திருந்து பின் திருமணத்திற்குப் பின்னால் வலிப்பு வர நேர்ந்தால், 'உடம்பு சரியில்லாத பொண்ணை எங்க தலையில கட்டிட்டாங்க' என்று பையன் வீட்டாரும், 'எங்க வீட்டில இருக்கிற வரை ஒண்ணும் இல்லை.. நீங்க தான் ஏதோ பண்ணிட்டீங்க' என்று பெண் வீட்டினரும் சண்டை போடுவது வாடிக்கை.
இப்படி ஒதுக்கப்படும் வியாதிகள் பட்டியலில் காச நோய்க்கும் ஒரு இடம் உண்டு.. காசநோய் என்று கண்டுபிடித்து சொல்லி விட்டோம் என்றால் பெண்ணை பாட்டி வீடு, சித்தி வீடு என்று கண்காணாத ஊருக்கு அனுப்பி விட்டு அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்து 'தள்ளிவிடும்' பழக்கம் இருக்கிறது. அதன்பின் உடல்நிலை மிக மோசமான நிலையில் கொண்டு வரப்படும் பெண்களைப் பார்த்திருக்கிறோம். ஓரிரு மாதங்களிலேயே உருக்குலைந்து போய் இருப்பாள் அந்த பெண். நடுவில் கர்ப்பமாகி விட்டால் நிலை இன்னும் மோசம். உயிரிழப்பு கூட நிகழலாம். காசநோய் மருத்துவத்துறையினரிடையே சாதாரணமான ஒன்று. எங்கள் மத்தியில், நான் ஒரு பத்து வருஷம் முன்னாடி ஆறு மாசத்துக்கு ஏடிடி (ATT- anti tuberculosis therapy) மாத்திரை சாப்பிட்டேன், நான் ஒரு நாலு வருஷம் முன்னாடி சாப்பிட்டேன் என்று சகஜமாகக் கூறிக் கொள்வோம்.
நோய் குறித்த புரிதல்கள் இல்லாத சமூகத்தில் மருத்துவ வசதிகள் இல்லாத பகுதிகளில் இப்படி நடந்தால் கூட ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளலாம். நம் நாட்டில் ஊருக்கு ஊர் மருத்துவ நிலையங்களும், சுகாதாரப் பணியாளர்களும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதைப் பணியாகவும் சேவையாகவும் செய்யும் எத்தனையோ நல்ல உள்ளங்களும் இருக்கையில் பெண் என்பதற்காக, திருமணம் என்ற ஒரு இலக்கை நோக்கியே அவள் வளர்க்கப்படுவதால் இப்படி பல உயிர்கள் போவது வேதனையைத் தருகிறது.
ஒரு முறை டெங்கு காய்ச்சலால் மூளைக்கு ரத்த ஓட்டம் பாதித்து குழப்ப நிலையில் இருந்த ஒரு பெண் மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்தாள். அவளுக்குப் பேய் பிடித்துவிட்டது என்று கூறி வம்படியாக ஒரு காட்டுக் கோயிலுக்குக் கூட்டிப் போய் பேயோட்டியிருக்கின்றனர். அந்தப் பெண் அங்கேயே மரணமடைந்து விட்டதாக அறிந்தோம். பேய் படித்திருந்தால் கூட 'ஓட்டிவிட்டு' கல்யாணம் செய்து கொடுத்து விடுவோம், உடல்நலம் குன்றியவளுக்கு சிகிச்சை அளிக்க மட்டும்தான் மாட்டோம் என்பது அவர்கள் நிலைப்பாடு.
இதே நோய்கள் ஆண்களுக்கு ஏற்பட்டால் அவர்களுக்குக் கிடைக்கும் சிகிச்சை முறை வேறாக இருக்கிறது., அதற்குப் பின்னான அவர்களது வாழ்வும் இயல்பாகவே இருக்கிறது. திருமணத்தை ஒரு பெண் வாழ்வில் கட்டாயம் நடந்தே ஆக வேண்டிய விஷயமாக ஆரம்பத்திலிருந்தே மனதில் புகுத்தி அந்தப் பெண்ணையும் பதட்ட நிலையிலேயே வைத்திருக்கின்றனர். அதனால் அவள் சிறிய உடல் உபாதைகளைக் கூட மறைத்து வைக்கப் முயல்கிறாள்.
முதலில் சொன்ன பெண்ணுக்கு உறவுக்குள்ளாகவே திருமணம் ஆகியிருந்த போதிலும், அம்மா வீடும் அருகிலேயே இருந்த போதிலும் சில அவசியமான புரிதல்கள் கூட இல்லை. கணவரிடமாவது தன் உடல் நிலையைச் சொன்னாளா என்றால் இல்லை.. இந்த மாதிரித் தருணங்களில் திருமணம் என்பது பெண்ணுக்கு ஒரு விலங்கு என்ற கூற்று உண்மைதானோ என்று எண்ணத் தோன்றுகிறது. உடலில் நோய்கள் ஏற்படுவது இயல்புதான் அவற்றை முறையாக குணப்படுத்திவிட்டு அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உள்ள வரன்களைத் தேடிப்பிடித்து திருமணம் செய்யலாமே.. நோய்களை இயல்பாக ஏற்றுக் கொள்ளும் படி மக்கள் மனங்களையும் மாற்றலாமே..

Author: siteadmin
Article Title: திருமணமா? உடல்நலமா?
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.