Subha Balaji
Member
- Joined
- Jun 30, 2024
- Messages
- 79
சுயம்பு-38
போலீஸ் ஜீப்பில் ஏறியதில் இருந்தே வண்டி போகும் வழியை கூட பார்க்காமல் வந்தனா, இன்ஸ்பெக்டர் ரம்யாவிடம் "அரெஸ்ட் வாரண்ட் எங்க..வாரண்ட் இல்லாம எப்டி நீங்க என்னை அழைச்சிட்டு போகலாம்.."
"அதுக்கு உங்களுக்கு எந்த ரைட்டும் இல்ல.." என நியாயம் பேசியபடி வர..ரம்யாவோ அவளுக்கு பதிலே சொல்லாமல் அலட்சியமாக வெளியே வேடிக்கை பார்த்தபடி வந்தாள்.
"மேடம்..நான் உங்க கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்.. பதில் சொல்லுங்க.."
திரும்பி உட்கார்ந்து அவள் வலது கை மணிகட்டில் பிடித்து இறுக்கிய ரம்யா "ஏய்..சும்மா வர மாட்டே..ஏதோ எங்க சார்க்கு தெரிஞ்ச ஆளாச்சேனு பாத்தா..உன் பாட்டுல பேசிட்டே வருவியா..வேற யாரா இருந்தாலும் நான் டீல் பண்ற விதமே வேற. .மொதல்ல என் கை தான் பேசும்..தெரிஞ்சுக்க.."
"நான் என்ன நீ வெச்ச ஆளா..இல்ல நீ என்ன பெரிய மைசூர் மஹாராணியா..உனக்கு பதில் சொல்ல..இனி ஒரு வார்த்தை உன் வாய்லேந்து வந்தது..அவ்ளோ தான்.." என மிரட்ட அதன் பின் வந்தனா இருக்கும் இடமே தெரியாது இருந்தது.
ஜீப் நின்றதும் பார்க்க அது அவளின் அம்மாவின் பிறந்த வீடு என தெரிந்து அதிர.."ஏய்..இறங்கு..இடம் வந்தாச்சு.."என சொல்லி அவளை இறங்க சொல்ல.."என்ன..உங்க இடம்னு சொல்லி இங்க அழைச்சிட்டு வந்திருக்கீங்க" என திமிராக வந்தனா வார்த்தைகளை விட..
அதில் கோபமடைந்த ரம்யா வந்தனாவின் கன்னத்தில் ஒரு அறை விட்டாள்.
அதில் அதிர்ந்து வார்த்தைகளை மறந்து கண்கள் கலங்கி போய் நின்றாள் வந்தனா..பேச்சு சத்தம் கேட்டு உள்ளே இருந்து வந்த வந்தனாவின் அத்தை
"வாங்க மா..உள்ளே வாங்க..நீங்க தான் ரம்யாவா..சத்யா தம்பி இப்ப தான் போன் பண்ணாரு.." என சொல்லி வரவேற்றார்
உள்ளே போனதும் ரம்யா "சார் உங்க கிட்ட எல்லாம் சொல்லி இருப்பாங்கனு நெனக்கறேன்.. இனி இவங்களோ..இல்ல..இவங்களோட அம்மாவோ எந்த விதத்துலயும் சார் பேமிலியோட தொடர்பு வெச்சுக்க கூடாது.."
"ஒரு வேளை அப்டி எதாவது இவங்க தொடர்பு வெச்சிக்கிட்டா..அப்பறம் என்ன நடந்தாலும் அதுக்கு பிறகு சாரை எந்த கேள்வியும் கேக்கற தகுதி கிடையாதுனு தீர்மானமா சொல்லி அனுப்பியிருக்காருங்க மேடம்..ஏற்கனவே அதை உங்க கிட்ட போன்லயும் சொல்லி இருப்பாருனு நெனக்கறேன்.. "என ரம்யா சொன்னாள்.
"ஆமா மேடம்..சத்யா தம்பி எல்லாம் சொன்னாங்க..ஏற்கனவே ஒரு குடும்பத்தை கெடுத்த இவங்க...அடுத்து அமைதியா இருக்கிற என் குடும்பத்தையும் கெடுத்துட்டா என்ன பண்றது..வீட்டுக்குள்ள விடவே பயமா இருக்குங்க.."
"இவங்க செஞ்ச எல்லாத்தையும் என் மாமியார் கிட்ட சொல்லி அவங்களையே முடிவு எடுக்க சொன்னேன்..அவங்களுக்கு அதிர்ச்சியில கொஞ்சம் நேரம் பேச்சே வரல.."
"எப்டி நல்லா இருந்த ஒரு குடும்பத்தை கெடுக்க மனசு வந்தது...பாவம் அவங்க எவ்ளோ கஷ்டத்தை அனுபவிச்சிருப்பாங்கனு சொல்லி வேதனையா உக்காந்து இருக்காங்க..எனக்கே அவங்களை பாக்க கஷ்டமா இருக்கு மேடம்.."
"இவ வந்ததும் வீட்டுக்குள்ளயே விடாமல் எங்க பண்ணை வீட்டுக்கு அனுப்பி வைக்க சொல்லிட்டாங்க...இவங்களை பாக்க கூட விரும்பல.."
"பாவம் ஏற்கனவே அதிர்ந்து போனவங்க, நாளைக்கு இதுவே தன் வீட்டுல நடந்துட்டா என்ன பண்றதுனு பயந்து போய் அவங்க பொண்ணை கூப்பிட்டு, எல்லாத்தையும் அவங்க கிட்ட சொல்லி, கேட்டு, சண்டை போட்டு, அவங்க கொண்டு வந்த சாமான்கள் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு இங்கிருந்து கிளம்பி போக சொல்லி ஏற்கனவே கார்ல தயாரா உட்கார வெச்சிருக்காங்க...பாருங்க..." என சொல்லி காரை காட்ட....
"ஏய்..என்ன வேடிக்கை.. அதான் சொல்றாங்கல்ல..போய் கார்ல ஏறு..என ரம்யா மிரட்ட..எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் வந்தனா போய் காரில் ஏற கார் அங்கிருந்து கிளம்பியது.
வந்தனா கிளம்பியதும் ரம்யாவும் கிளம்பி நேராக சத்யா வீட்டுக்கு போனவள் அவனிடம் நடந்ததை மொத்தமாக விளக்க அவனும் அவளுக்கு நன்றியை சொல்ல அவள் அங்கிருந்து கிளம்பி சென்றாள்.
அவள் கிளம்பியதும் அதுவரை நடந்ததை பார்த்து அமைதியாக இருந்த முரளி திலகவதியை பார்த்து "உனக்கு எதுக்கு உத்ரா மேல இந்த வன்மம்..அவ உன்னை என்ன பண்ணா.. இதுவரைக்கும் நீ பேசினாலும் பதிலை பேசாம அமைதியா தானே போயிடுவா.."
"என்ன காரணமா இருந்தாலும் இந்த மாதிரி மூணாவது ஆளுங்களை கூட்டு சேத்துக்கிட்டு நீ பண்ணது பெரிய துரோகம்..அவளும் நம்ம வீட்டு பொண்ணு தான்னு யோசனை உனக்கு எப்பவாது வந்திருந்தா..நீ இப்டி செஞ்சிருக்க மாட்டே"
"இனி உன் கிட்ட பேசி எந்த பிரயோஜனமும் இல்லனு ஆக்கிட்டே...பாவம் அவ..தாயில்லாத பொண்ணு..அவ பிறந்த வீட்டுல தான் தாயோட அன்பு கிடைக்கல..இங்கயாவது அது கிடைக்கும்னு நான் சந்தோஷப்பட்டேனே..ஆனா அதுவும் நிராசையா போச்சே.." என வேதனையோடு பேசினார்
"இல்லங்க..நான் துரோகம் எல்லாம் செய்யலீங்க..எனக்கு பிடிக்காம கல்யாணம் செஞ்சுக்கிட்டானு ஏதோ ஒரு வேகத்துல தான் அப்டி நடந்துக்கிட்டேன்ங்க.."
"இப்ப அவங்களோட சேந்து செஞ்சது தப்புனு உணர்ந்துட்டேங்க..என்னை மன்னிச்சிடுங்க.." திலகவதி கண்ணீரோடு பேச..
"ஏற்கனவே எல்லாம் செஞ்சுட்ட..இனி பேசி என்ன ஆக போகுது..உன்னை மன்னிக்கணும் நினைச்சா கூட நீ செஞ்சது நியாபகம் வந்து அதை கெடுக்குது.."
"அதனால தயவு செய்து மன்னிப்பு கேட்டு உன்னை நல்லவளா காட்டிக்க முயற்சி செய்யாதே.."
"உன்னை மன்னிக்க வேண்டியது நான் இல்ல..உன் பிள்ளையும், மருமகளும் தான்.." என முரளி வெறுப்பாக சொல்லி முடித்தார்.
"டேய்..சத்யா..என்னை மன்னிச்சிடுடா..நான் பண்ணது பெரிய தப்புனு உணர்ந்துக்கிட்டேன் டா..அம்மா உத்ரா நீயும் என்னை மன்னிச்சிடு மா.."
"எப்டி மா..இப்டி நிமிஷத்துக்கு நிமிஷம் பச்சோந்தி மாதிரி மாற உங்களால முடியுது..கொஞ்ச நேரம் முன்னால என் பொண்டாட்டியை வாய்க்கு வந்தபடி பேசினீங்க..உங்க ப்ரெண்டோட பொண்ணு பேசும் போது அமைதியா வேடிக்கை பாத்தீங்க.."
"இப்ப இத்தனை நாளா நீங்க பண்ணது எல்லாத்துக்கும் அமைதியா இருந்த அப்பாவே உங்களை பேச...நீங்க மன்னிப்பு கேட்கறீங்க..இல்லேனா நீங்களா மன்னிப்பு கேட்பீங்க.."
"அப்பா..இவ்ளோ பிரச்சனைகள் ஆன பிறகு உங்களுக்கு ஆட்சேபனை இல்லேனா..நான் அம்மா கிட்ட சில விஷயங்கள் தெளிவா பேசிடணும்னு நினைக்கிறேன்.." என சத்யா கேட்க
அவர் தலையசைத்து சம்மதம் தெரிவித்ததும் "யோசிச்சு பாருங்க..உங்களை பத்தி எல்லாம் தெரிஞ்சு நான் எவ்ளோ பொறுமையா இருந்தேன்..இனி என் கிட்ட அந்த பொறுமையை எதிர்பார்க்காதீங்க.."
"உங்களுக்கு என்னடா இங்க இவ்ளோ விஷயம் நடக்கறப்ப..என்னை தவிர யாருமே பேசலையே யோசிச்சிருக்கலாம்"
"உங்களை பத்தின விஷயங்கள் எல்லாத்தையும் உத்ரா சொன்னதுமே..நான் அப்பா கிட்டயும், தர்ஷீ கிட்டயும் உடனே போன் செஞ்சு சொல்லிட்டேன்.."
"அவங்க ரெண்டு பேரும் உங்க கிட்ட அப்பவே சண்டை போடுவேன்னு சொன்னாங்க நான் அவங்களை ரொம்ப கஷ்டப்பட்டு அடக்கி வெச்சேன்.."
"எல்லா விஷயங்களையும் அவங்க வாயாலயே ஒத்துக்க வெச்சிட்ட பிறகு தான் நீங்க பேசணும்னு நான் அப்பா கிட்ட கெஞ்சவே..அவர் கஷ்டப்பட்டு பொறுமையா இருந்தாரு.."
"அதே போல நான் மட்டும் தான் பேசுவேன்.நீங்க யாரும் பேசாம..அமைதியா நடக்கறதை வேடிக்கை மட்டும் பாருங்கனு சொல்லவே அவங்க எல்லாம் என் பேச்சுக்கு கட்டுப்பட்டு எதுவும் பேசாம அமைதியா இருந்தாங்க..."
"என் பொண்டாட்டியே உங்களை மன்னிச்சாலும் இல்ல நீங்க செஞ்சதை மறந்தே போனாலும் நான் உங்களை எந்த காலத்திலும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டேன்.."
"நீங்களே அவளை வெளியே அனுப்பிட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி என் கிட்ட நடிச்சிங்கல்ல...வித விதமா கேட்டப்பவும் தெரியாதுனு சொன்னீங்களே...அதை எல்லாம் கூட விட்டுடலாம்.."
"ஆனா எவளோ ஒருத்தி பேச்சை கேட்டு என் பொண்டாட்டிக்கு குழந்தை பிறக்க கூடாதுனு மருந்து குடுத்தேன்னு சொன்னீங்க பாருங்க..அதை மன்னிக்கவே மாட்டேன்..எல்லாத்தையும் செஞ்சுட்டு ஒரே வார்த்தையால மன்னிப்பு கேட்டா நாங்க மன்னிச்சிடணுமா.." என கேட்டவனிடம்
"நான் என்ன பண்றதுனு தெரியலயே..நான் தப்பு பண்ணிட்டேன்னு சொல்றேனே..உத்ரா நீயாவது மன்னிக்க கூடாதா.." என அவளிடம் திரும்பிய திலகவதியை..
"அம்மா..எனக்கு தான் நீங்க பெத்தவங்க..உங்களை சகிச்சுக்கறதை தவிர வேற வழியில்ல..ஆனா அவளுக்கு அப்டி இல்ல..அவளுக்கு என் மேல உண்மையான அன்பு, பாசம் எல்லாம் இருந்தா இனி அவ உங்களோட பேச கூடாது.. அதை தான் நானும் எதிர்பார்க்கறேன்.."
"நான் இன்னும் சில தீர்மானங்கள் செஞ்சிருக்கேன்.. நீங்க ஒத்துக்கிட்டாலும் ஒத்துக்கலேனாலும்..அதை தான் செய்ய போறேன்.." என சத்யா சொல்ல ஆரம்பித்தான் (தொடரும்).

Author: Subha Balaji
Article Title: சுயம்பு 38
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.