Subha Balaji
Member
- Joined
- Jun 30, 2024
- Messages
- 79
சுயம்பு-37
திலகவதியும் வந்தனாவின் சுயரூபத்தை பார்த்து அதிர்ந்து போய் அவளை பார்த்து "அடிப்பாவி..அவன் தான் தன் போலீஸ் மூளையை உபயோகப்படுத்தி கேக்கறதே தெரியாத மாதிரி உன்னை கேள்வி கேட்டு எல்லா விஷயத்தையும் கேட்டா..நீயும் இளிச்சுக்கிட்டு அவனுக்கு மொத்தத்தையுமா ஒப்பிப்ப.."
"நல்ல வேளை..இதுல ஒரு ஆதாயம்..உன் சுயரூபம் தெரிஞ்சிக்கிட்டேன்..உன் மனசுல இவ்ளோ விஷம் இருக்கும்னு தெரியாம உன்னை எங்க வீட்டுல விட்டேனே..உன்னை போய் என் மருமகளாக்கி அழகு பாக்கணும்னு நெனச்சேனே.."
"ச்சே..நீயும் ஒரு பொண்ணா..இவ்ளோ கெட்ட எண்ணத்தோட தான் நீ என் கிட்ட பழகினியானு நெனச்சாலே அருவருப்பா இருக்கு.."என தன்னை காப்பாற்றி கொள்ள வார்த்தைகளை அம்பாக எய்தார்..
அதில் கொஞ்சமும் சளைக்காமல் வந்தனா "நான் விஷம்னா..நீங்க யாரு..நீங்க சொல்லி தானே நான் இங்க வந்தேன்..நீங்க சொல்லி தானே உங்களுக்கு மருமகளை பிடிக்காது..உங்க விருப்பமே இல்லாம உங்க பையன் கல்யாணம் செஞ்சுக்கிட்டாருனு தெரியும்"
"நீங்க சொல்லி தானே..நீங்களே பல தடவைகள் எங்க கிட்ட கெஞ்சி ப்ளான் போட்டு தர சொன்ன பிறகு தானே ப்ளான் செஞ்சு உங்க மருமகளை வீட்டை விட்டு அனுப்பினோம்..அப்பல்லாம் உங்களுக்கு நாங்க நல்லங்களா தெரிஞ்சோமா.."
"நடந்த எல்லாத்துலயும் உங்களோட பங்கு மட்டும் நிறைய இருக்க..இப்ப உங்க வீட்டு ஆளுங்களுக்கு உண்மை தெரிஞ்சு போச்சுங்கற காரணத்துக்காக நீங்க எங்களை மாட்டி விட்டுட்டு உங்களை நல்லவங்களா காட்டிப்பிங்களா.." என அவர் அனுப்பிய அம்புகளை அவருக்கே திருப்பினாள்.
அவர்கள் பேசுவதை கேட்ட சத்யா வாய் விட்டு சிரித்து "சபாஷ்..வந்தனா..நான் இதுவரைக்கும் பெரிய அக்யூஸ்ட் கிட்ட டீல் பண்ணி இருக்கேன்.. அவங்க யாரும் உங்களை மாதிரி வெறும் கேள்விகளுக்கே எல்லா பதிலும் சொன்னதே இல்ல.."
"நான் சோர்ந்து போற அளவுக்கு அடி பின்னி எடுத்திருக்கேன்..அப்பயும் பதில் சொல்லாம சாவடிப்பாங்க..ஆனா நீங்க ரொம்ப ஸ்மூத்தா எல்லாத்தையும் சொல்லிட்டீங்க..."
"எனக்கு ஒரு சந்தேகம்.. நாம இதுவரைக்கும் எத்தனை தடவை பாத்திருப்போம்..யோசிச்சு பாத்தா..ஆறு ஏழு தடவை கூட இருக்காதுனு தோணுது..அப்பறம் எதை வெச்சு நானும் நீங்களும் பல வருஷமா காதலிக்கறதா கல்யாணத்துக்கு முன்னால என் பொண்டாட்டி கிட்ட சொன்னீங்க.." என கேட்க..
"அதை நம்பி அவ கல்யாணத்தை நிறுத்திட்டா..அனுதாபம், இரக்கம் காட்டற மாதிரி உங்களை கல்யாணம் செஞ்சுக்கலாமேனு தான்.." என வந்தனா அலட்சியமாக பதில் சொன்னாள்.
"ஓஹோ..அவ்ளோவா..ப்ளானு..சரி..அதை மீறி என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டா..எங்க வீட்டுல என் கூட சந்தோஷமா வாழவும் ஆரம்பிச்சா..அப்பறம் ஏன் எங்களை பிரிக்க பாத்தீங்க.."
"அதுக்கு காரணம் இதோ..உக்காந்து இருக்காங்களே..உங்கம்மா அவங்க தான்.. நீங்களும் உங்க பொண்டாட்டியும் அதிகமா பேசிக்கறது கூட இல்ல.."
"புதுசா கல்யாணம் பண்ண மாதிரி.. நெருக்கமா...அன்யோன்யமா இல்ல..அதனால உங்களை பிரிக்கறது தான் சரினு சொன்னாங்க.."
அவள் சொன்னதை கேட்டு சத்யா சில நிமிடங்கள் கண்களை மூடி கொண்டவன்..கண்களை திறந்து "நாங்க நிஜமாகவே புருஷன் பொண்டாட்டிங்க..சினிமா..சீரியல்ல நடிக்கறவங்க இல்ல.."
"நெருக்கம்னா என்னங்க.. கட்டி பிடிக்கறதும், முத்தம் குடுக்கறதுமா..அதை எல்லார் எதிர்க்கயும் பண்ணா தான் நாங்க நல்ல புருஷன், பொண்டாட்டினு சொன்னா, எங்களுக்கு அந்த சர்டிபிகேட்டே தேவை இல்ல.."
"இது எங்களோட பர்சனல்..நாங்க நெருக்கமா இருக்கோமா இல்லையாங்கறது எங்களுக்கு தெரியும்..எங்களுக்கு மட்டும் தெரிஞ்சா போதும்... அது நாலு சுவற்றுக்குள்ள நடக்கறது..இதை எதுக்கு ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டணும்.. எனக்கு புரியல.."
"நாங்க ஒதுங்கி இருக்க பல காரணங்கள் இருந்தது. மொதல் காரணம் எங்க வீட்டுல வளர்ந்த தங்கச்சி இருக்கா..அவ ஹாஸ்டல்ல இருந்தாலும் வீட்டுக்கு வரும் போது எங்களால அவளுக்கு எந்த சலனமும் வரக்கூடாது"
"ரெண்டாவது நானும், என் பொண்டாட்டியும் சமூகத்துல பொறுப்பான பதவில இருக்கோம்..அப்டி இருக்கறப்ப நாங்க எங்க நிலைமையை மறந்து, இருக்கிற பதவிக்கு அவமானம் வர்ற மாதிரி கூத்தடிச்சா..மறுநாளே சோஷியல் மீடியால அதை வைரல் ஆக்கி எங்களை இன்னும் கேவலப்படுத்திடுவாங்க.."
"மூணாவது எங்க வீட்டுல இருக்கிற பெரியவங்களுக்கு மரியாதை தந்து நாங்க ஒதுங்கி இருந்தோம்..இதை நான் முதல்ல எங்களுக்குள்ள கல்யாணம் பேசும் போதே உத்ரா கிட்ட சொல்லிட்டேன்..நான் சொன்னது அவளுக்கு ஓகேனா கல்யாணம் செஞ்சுக்கலாம்னும் சொன்னேன்..அவ சரினு சொல்லவே தா எங்க கல்யாணம் நடந்தது.."
"ஆனா..அதெல்லாம் தப்புனு எங்கம்மா எனக்கு ரொம்ப தெளிவா புரிய வெச்சுட்டாங்க.."என சொல்லியவன்..
"நீங்க எல்லாம் கரெக்டா ப்ளான் பண்ணி என் பொண்டாட்டியை அனுப்பிட்டீங்க..யார் அவளை தேட போறாங்கனு அலட்சியமா இருந்துட்டீங்க..ஆனா காணாம போனது போலீஸ்காரன் பொண்டாட்டி..."
"அபிஷியலா நான் கம்ப்ளையின்ட் குடுக்கலேனாலும் அன்அபிஷியலா டிபார்ட்மெண்ட்ல எங்க வீட்டை கண்காணிச்சுக்கிட்டே தான் இருப்பாங்க. அவளை யாராவது கடத்தி இருப்பாங்களோங்கற யோசனையால எங்க வீட்டுக்கு வர்ற ஃபோன் கால்ஸ் எல்லாமே ரெக்கார்ட் பண்ணுவாங்க..தெரியுமா.."
"அதை அப்டியே ரெக்கார்ட் பண்ணி, ஒரு பென்டிரைவ்ல ஏத்தி, என்னோட டிவிஷன்ல இருக்கிற எஸ்ஐ என் டேபிள்ல வெச்சிட்டாரு..நானும் அதை கவனிக்கல.."
"அவர் ரெக்கார்ட் செஞ்சு வெச்சதையே நான் மறந்து கூட போயிட்டேன்..சில மாசங்களுக்கு பின்னால ஏதோ ஒரு கேஸ் விஷயமா..என் டேபிள்ல தேடும் இந்த பென்டிரைவ் கிடைச்சது..அதுல என் பேரு எழுதி அர்ஜென்ட்னு வேற எழுதி இருந்தது..."
"இது எதாவது கேஸ்க்கு எவிடென்ஸா இருக்குமோனு லேப்டாப்ல கனெக்ட் பண்ணி பாத்தா..உங்க சதி எல்லாம் எனக்கு ஒன்னொன்னா தெரிஞ்சது..ரத்தம் கொதிச்சு போச்சு.."
"ஆனா உத்ரா கிடைக்கற வரைக்கும் இது எனக்கு தெரிஞ்சா மாதிரி காமிச்சுக்காம கூடாதுனு பொறுமையா இருக்க எவ்ளோ கஷ்டப்பட்டேன்ங்கறது எனக்கு தான் தெரியும்..."
"என் பொண்டாட்டியை அனுப்பிட்டு நான் உங்களை கல்யாணம் பண்ணிப்பேன்னு என்னை பத்தி எவ்ளோ கேவலமா எண்ணம் வெச்சிருக்கீங்க..என்னை பாத்தா பொம்பளைங்களுக்கு அலையற மாதிரியா தெரியுது.."
"எனக்கு கல்யாணம் ஒரே முறை தான்.. உத்ரா மட்டும் தான் என் பொண்டாட்டினு நான் தீர்மானமா இருந்தேன்..இனி என் வாழ்க்கை பூராவே அப்டி தான் இருப்பேன்.."
"அது எப்டிங்க.. இவங்க சொன்னாங்கனு நம்பி என்னை சுத்தி வந்தீங்க..பழைய சத்யாவா இருந்திருந்தா உங்களை டீல் பண்ற விதமே வேறயா இருக்கும்.. இப்ப நான் ரொம்ப அமைதியா ஆகிட்டேன்.."
"எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டவனை போனா போகட்டும் மன்னிச்சுடலாம்னு நினைச்சவனை கடைசில என் பையன் எனக்கு பிறந்திருக்க மாட்டான்னு சொன்னீங்க பாருங்க..அதுக்கு உங்களுக்கு மன்னிப்பே கிடையாது.."
"நீங்க பண்ண விஷயத்துக்கு நான் போர்ஜரி கிட்நாப்னு கேஸ் பைல் பண்ணி எப்ஐஆர் போட்டா..அதுக்கு பிறகு உங்களை நல்லவனு காண்பிக்க..நீங்க கோர்ட்ல எத்தனை வருஷம் போராட வேண்டி இருக்குமோ..தெரியாது..என்ன தயாரா.." என நக்கலாக கேட்டான்.
"உங்கம்மாவை தான் மொதல்ல சேக்கணும்..அவங்க தான் ப்ரைம் அக்யூஸ்ட்.."
"ஆஹா..ஆஹா...இதை கேக்க எவ்ளோ சந்தோஷமா இருக்கு..நல்லா கேட்டுக்கங்க..மா..உங்களை தான் ப்ரைம் அக்யூஸ்டா சேக்கணுமாம்..எப்படிபட்ட ப்ரெண்ட்ஷிப் இது.."
"அவங்களுக்கு தனியா தண்டனை வரும்..வந்தனா மேடம்..உங்களை பத்தி மட்டும் பேசலாமா.." எனும் போதே..வந்தனா "எதுவா இருந்தாலும் அவங்களை டீல் பண்ணிட்டு என் கிட்ட வாங்க..நான் எங்கயும் போக மாட்டேன்" என சொல்லி கிளம்பும் போது "சார் வரலாமா" என குரல் கேட்டு திரும்பியவன்
அங்கு நின்று கொண்டு இருந்த பெண் இன்ஸ்பெக்டரை பார்த்து "வாங்க..ரம்யா..இவங்க தான் அந்த லேடி..நீங்க இவங்களை நம்ம இடத்துக்கு கூப்பிட்டு போங்க..நான் ஈவ்னிங் வந்து பாக்கறேன்.." என சொல்லி அனுப்ப வந்தனா வர மாட்டேன் என பல முறைகள் சொல்லியும் அதை அலட்சியப்படுத்திவிட்டு அவளை தெருவில் பலர் வேடிக்கை பார்க்க ரம்யா ஜீப்பில் ஏற்றி அழைத்து சென்றாள். (தொடரும்)

Author: Subha Balaji
Article Title: சுயம்பு 37
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.