Subha Balaji
Member
- Joined
- Jun 30, 2024
- Messages
- 79
சுயம்பு-36
சத்யாவின் திடீர் வரவால் பயந்து, நடுங்கி கொண்டிருந்த திலகவதியை பார்த்தவன் "ஏன் உங்களுக்கு இவ்ளோ வேர்வை வருது..இங்க பேனுக்கு பக்கத்துல வந்து உக்காருங்க மா.." என எதுவுமே தெரியாதது போல அம்மாவை அழைத்து தன் பக்கத்தில் உட்கார வைத்து கொண்டான்.
வாசலில் இருந்த அப்பாவையும் அழைத்து அவரிடமிருந்த ஹர்ஷாவை தர்ஷினி வாங்கி கொண்டு மாடியில் இருந்த அவளுடைய அறைக்கு போக சொல்ல..அவளும் குழந்தையோடு போனாள்.
"அப்பறம்.. வந்தனா..நீங்க எதோ சொல்லிட்டு இருந்தீங்களே..இப்ப சொல்லுங்க..நானும் தெரிஞ்சுக்றேன்.." என சொல்லி சாய்ந்து உட்கார்ந்தவனை பார்த்து வந்தனா...
"அது ஒண்ணுமில்லைங்க..உத்ராவால உங்க குடும்பத்துக்கு ஏற்கனவே வந்த கெட்ட பேரே அதிகம்.."
"இப்ப மறுபடியும் அவ எதுக்கு திரும்பி வந்திருக்கானு தான் நான் கேட்டுட்டு இருக்கேன்...தனியா போனவ கையில குழந்தையோட வந்தா..அதுக்கும் ஊர்ல வித விதமா பேசுவாங்களே..."
"ம்ம்ம்..நீங்க எல்லாம் வெளியே போயிடுவீங்க..பாவம் அத்தை தான் அக்கம் பக்கம் இருக்கிறவங்க... சொந்தக்காரங்கனு..
"எல்லாருக்கும் பதில் சொல்லணும்..வேதனையை அனுபவிக்கணும்.."
"அதால அத்தைக்கு உடம்புக்கு ஏதாவது வந்தா..இவளா பாத்துப்பா..நாம தானே பாக்கணும்..இவ இருக்காளா..இல்ல எப்ப ஓடி போவானு பாத்துட்டு கண்காணிச்சுக்கிட்டேவா..அவங்க இருப்பாங்க....சொல்லுங்க..என நேரிடையாக உத்ராவை அவன் எதிரிலேயே குற்றம் சாட்ட.. இவ எல்லாம் உன்னை பேசற அளவுக்கு வெச்சிருக்கல்ல..என சத்யாவின் கோபம் சொட்டும் பார்வையை பார்த்த உத்ரா அதற்கு பின் குனிந்த தலையை நிமிர்த்த முயற்சி கூட செய்யவில்லை.
"ஆனாலும் இவ ரொம்ப அழுத்தக்காரிங்க..எத்தனை கேட்டாலும்..எப்டி கேட்டாலும்..வாயே திறக்க மாட்டேங்குறா.." என வார்த்தைக்கு வலிக்குமோ என்பது போல மென்மையாக அவளை பற்றி குறை சொல்லி கொண்டு இருக்கும் போதே...
"நீங்க யாரு என் பொண்டாட்டியை கேக்க..உங்களுக்கும் இந்த வீட்டுக்கும் என்ன சம்பந்தம்.." என சத்யா அழுத்தம் திருத்தமாக கேட்க..
"நல்லா இருக்குங்க..நீங்க சொல்றது..நொந்து போய் இருந்த எங்கத்தையை கவனிச்சுக்கிட்ட என்னை பாத்தா இப்டி கேக்கறீங்க..இது தான் யாருக்கும் பரிதாபமே பாக்க கூடாது.." என அவனையும் வந்தனா குற்றம் சாட்டினாள்
"என்ன சொன்னீங்க.. எங்கம்மா நொந்து போயிருந்தாங்களா..நீங்க பேசினதுலே சிரிப்பை வரவழிக்கறது இது தாங்க.." என்றவன் மெல்ல..
"இந்த வீடு எங்கப்பாவோடது..இவங்க என் அம்மா..அது என் பொண்டாட்டி.. அதுவும் மருதமலை முருகன் சாட்சியா.."
"போதாததுக்கு ஊர்ல இருக்கற அத்தனை சொந்தக்காரங்களையும்..கூப்பிட்டு அவங்க முன்னால என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டவ..இன்னும் எழுத்து பூர்வ ஆதாரம்..கேட்டா..எங்க கல்யாணத்தை நாங்க அன்னிக்கே ரிஜிஸ்டரும் செஞ்சிட்டோம்..சரியா.."
"எந்த தைரியத்துல நீங்க எங்க வீட்டுக்கு வந்து என் பொண்டாட்டியை மிரட்டுவீங்கஅதுவும் நாங்க யாரும் இல்லாம அவ மட்டும் தனியா இருக்கும் போது."
"டேய்..சத்யா..என்ன இருந்தாலும் அவ உனக்கு சம்பந்தமே இல்லாத வேற யாரோட பொண்ணு டா..அவளை நீ போலீஸ்காரனா மிரட்டறது நல்லா இல்ல.." என திலகவதி வந்தனாவுக்கு பரிந்து வர..
"இருங்க...இருங்க..மொதல்ல அங்க முடிச்சிட்டு அடுத்தது உங்க கிட்ட வரேன்.." என திலகவதியிடம் சொன்னான்
"நடத்தை சரியில்லாத ஆளா இருந்தா..நான் மட்டும் இல்ல..ஊர்ல யார் வேணுமானாலும் கேட்க தான் செய்வாங்க.."
"அவ்ளோ அருமையான பொண்டாட்டியா இருந்தா நீங்க அவளை பெட்டில பூட்டி வெச்சு பாதுகாத்து வெச்சுக்கோங்க.."
'ஆனா என்னை கேள்வி கேக்கற உரிமை உங்களுக்கு கிடையாது.." என சத்யாவை மறுபடியும் வந்தனா எடுத்தெறிந்து பேச..
அதை கேட்டு கை தட்டியவன் "வாவ்..செம..இப்ப சொன்னீங்க யாருங்க..இது வார்த்தை..அது எப்டிங்க..உங்களை கேட்க எனக்கு உரிமை இல்ல..ஆனா என் பொண்டாட்டியை கேட்டு சித்தரவதை செய்யற உரிமையை உங்களுக்கு யாரு குடுத்தது.." என தன் உணர்ச்சிகளை காட்டாமல் பேசியவனை பார்த்து..
"இதோ..இங்க உக்காந்து இருக்காங்களே..உங்கம்மா ...அவங்க சொல்லி தான் நான் கேட்டேன்.." என சரியான சமயத்தில் திலகவதியை மாட்டிவிட்டாள்.
அதை கேட்டு அதிர்ந்து போய் பார்த்த திலகவதியை கண்டவன் "பாத்துக்கங்க..இவ்ளோ தான் உங்க ப்ரெண்ட்ஷிப்போட லட்சணம்.."என்றவன்...வந்தனாவை நன்றாக பார்த்த மாதிரி உட்கார்ந்து...
"ஆமா..வந்தனா..நீங்க எனக்கு இதுவரை எத்தனை தடவை போன் செஞ்சிருப்பீங்க.." என திடீரென சம்பந்தமே இல்லாமல் கேட்க அதில் குழம்பி போய் பார்த்தவளிடம் "சும்மா சொல்லுங்க.."என உற்சாகமூட்ட..
அவளும் "ஒரு நாலு அஞ்சு தடவை உங்களுக்கு போன் செஞ்சிருப்பேன்.." என்க
"சமீபத்தில் எப்ப போன் பண்ணீங்கனு நெனப்பிருக்கா.." என விடாமல் கேட்க..
"சமீபத்துல உங்களுக்கு போன் செய்யல..மூணு வருஷத்துக்கு முன்னால என் ப்ரெண்ட் பேமிலில ஒரு ப்ராப்ளம்னு உங்களுக்கு போன் செஞ்சிருக்கேன்..அவ்ளோ தான்.." என பதில் சொல்ல..
"சரிங்க..யாருங்க..அந்த ப்ரெண்ட்.. அவங்க ப்ராப்ளம் சரியாகிடுச்சுங்களா.." என கேட்க
அவளோ அவன் தன்னை மதித்து பேசியதில் மகிழ்ந்து தன்னை மறந்து "அது யாரும் இல்லங்க..உங்க வீட்டு பிரச்சினை தான்.. அத்தைக்கு உங்க பொண்டாட்டியை பிடிக்கல.."
"அவளை எப்டியாவது இங்கே இருந்து துரத்தி விடணும்னு சொல்லவே..நான், எங்கம்மா, மாலினி அத்தை எல்லாருமா சேத்து தான் ஐடியா குடுத்து அவளை வெளியே அனுப்பினோம்.." என பெருமையாக சொன்னாள்..
"ஓஹோ..அப்டிங்களா..சரிங்க..அவங்களுக்கு ஒரு காரணம் இருக்கு...மாலினி அத்தைக்கு ஒரு காரணம் இருக்கு..
நீங்க என்ன காரணத்தால உத்ரா இங்கே இருந்து போகணும்னு நெனச்சீங்க.."என தான் அவளை விசாரிப்பது தெரியாத மாதிரி இயல்பாக பேச..
திலகவதி ஜாடை காட்டியதை, தலையில் அடித்து கொண்டதையும் துளியும் கவனிக்காமல் "நான் வருணை கல்யாணம் செஞ்சுக்கணும்னு அவ்ளோ ஆசையா இருந்தேன்... மாலினி அத்தையும் எப்ப பாரு என்னை மருமகளேனு சொல்லி சொல்லி அந்த ஆசையை இன்னும் அதிகமாக்கிட்டாங்க..."
"ஆனா கடைசில உத்ரா பண்ண வேலையால தான் நான் வருணை கல்யாணம் செஞ்சுக்க முடியாம போச்சு..அதுக்கு பிறகு வந்த வரன் எல்லாருக்கும் எங்கப்பாவுக்கு ரெண்டு குடும்பம் இருந்தது..எங்கம்மா அவரோட ரெண்டாவது பொண்டாட்டி..அவர் மொதல் கல்யாணத்தை தான் ரிஜிஸ்டர் செஞ்சிருக்காருனு தெரிய வரவே..
"எங்கம்மா குடும்பத்தை பிரிக்கறவ..என்னை கல்யாணம் செஞ்சா...நானும் நல்லா இருக்கிற குடும்பத்தை பிரிச்சிடுவேன்னு எங்களை பத்தி கேவலமா பேச ஆரம்பிச்சாங்க.."
"சரி..அதனால் சொத்து இருக்கே..எங்கம்மா அதை சொல்லி கல்யாணம் பண்ண பாத்தப்ப தான் தெரியும்.. அது எல்லாமே..மீரா குடும்ப சொத்து..."
"எங்கப்பாவுக்கு அதை அனுபவிக்கற உரிமை மட்டும் தான்.. சோத்தோட முழு அதிகாரமும் மீராவுக்கு மட்டும் தான்னு அவங்க தாத்தா உயில் எழுதி வெச்சிருக்காருனு சொல்லி அவங்க குடும்ப வக்கீல் வந்து எங்களை அந்த வீட்டுலேந்து வெளியே அனுப்பிட்டாங்க.."
"எங்களோட பெருமை எல்லாம் போச்சு..எங்களை பாத்தவங்க..எல்லாம் ஏமாத்துகாரங்கனு கேலி பண்ணவே நானும் என்னோட அம்மாவும் எங்க அம்மாவோட வீட்டுக்கு போக வேண்டியதா போச்சு.."
"அப்பெல்லாம் நாங்க எவ்ளோ கஷ்டத்தை அனுபவிச்சோம்.. தெரியுமா..தினமும் எங்கம்மா அவங்க பிறந்த வீட்டுல அசிங்கப்பட்டுட்டு இருப்பாங்க..எனக்கு அதை பாக்க..பாக்க..ஆத்திரமா வரும்..என்ன செய்யறதுனு யோசனை செஞ்சேன்.."
"அப்ப தான் முடிவு பண்ணி நான் உத்ராவை பழி வாங்கி ஆரம்பிச்சேன்..என்னோட கொடுமைகள் தாங்க முடியாம அவளும் வீட்டை விட்டு போயிட்டா..அவ போன பிறகு.. எத்தனை வருஷம் நீங்களும் தனியா இருப்பீங்க.."
"எதையாவது செஞ்சு..இல்ல..அத்தையை லேசா தூண்டி விட்டாலே..போதும்.."
"அவங்க அழுது..சண்டை போட்டு ஏதாவது செஞ்சு உங்களோட எனக்கு கல்யாணம் செஞ்சு வெச்சிடுவாங்க.."
"உங்களை கல்யாணம் செஞ்சுக்கிட்டா அதோட என் லைப் நல்லபடியா செட்டில் ஆகிடும்..எங்கம்மாவும் யார் வீட்டுலயும் இருந்து அசிங்கப்படாம..அவங்க இந்த வீட்டுக்கு என்னோடயே கூப்பிட்டு வந்து நிம்மதியா அவங்களை வெச்சுக்கலாம்னு ப்ளான் பண்ணி தான் நான் இந்த வேலையை செய்ததே.."என தன்னுடைய மொத்த விஷயத்தையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள்.
தன்னை சத்யா இதுவரை விசாரணை செய்ததையே உணர்ந்து கொள்ளாமல் அவன் கேட்ட இயல்பான கேள்விகளால் வந்தனாவுக்கு எதுவும் தப்பாக தோன்றவில்லை.
இவ்வளவு தானா நீ என படு கேவலமாக தன் தாயை பார்த்தவன் "பாத்தீங்களா..உங்க செலக்ஷ்னை..இதுக்காக தான் நீங்க ஒரு வருஷமா..இந்தம்மணி பத்தி நல்ல விதமா என் கிட்ட சொல்லிட்டு இருந்தீங்களா.. நல்ல வேளை...எனக்கும் உங்களை மாதிரி புத்தி கெடாம இருந்தது.." என நக்கலாக சொன்னான். (தொடரும்)

Author: Subha Balaji
Article Title: சுயம்பு 36
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.