• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

சுயம்பு 30

Subha Balaji

Member
Joined
Jun 30, 2024
Messages
79
சுயம்பு-30

உத்ரா பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்தவன் "ஏன் டி..உனக்கு எதையும் தெளிவா பேசவே தெரியாதா..நான் உன் புருஷன் தானே..என் கிட்ட எல்லாம் சொல்லி இருந்தா..நமக்குள்ள இந்த பிரிவே வந்திருக்காதே.." என கத்த..

"எதையும் யோசிக்காம எல்லாத்துலயும் அவசரப்பட்டு முடிவு எடுப்பியா..உனக்கு ஹெல்ப் பண்ண நாங்க யாரும் அங்க இல்ல ஒத்துக்கறேன்...அது நாங்க செஞ்ச தப்பாவே இருக்கட்டும்.."

"வீட்டுக்கு பெரியவர் எங்கப்பா அங்க தானே இருந்தாரு..அவங்க கிட்ட சொல்லி இருக்கலாமே..அவர் உன்னை பாசமா கவனிச்சுக்கலையா..சொல்லு.."

"இப்ப வரைக்கும் அங்க என்ன நடந்ததுனு எனக்கு எதுவுமே தெரியாது..நீ சொல்லி தான் இவ்ளோ விஷயங்கள் நம்மளை பிரிக்க நடந்திருக்குனு தெரியும்..."

"திடீர்னு அன்னிக்கு வந்தனா போன் செஞ்சு..அவங்க ப்ரெண்ட் குடும்பத்துல ஏதோ பிரச்சினை.. நான் தான் பேசி சரி பண்ணணும்னு கேட்டு ரிக்வஸ்ட் பண்ணவே நான் ஈடுபாடே இல்லாமல் தான் அங்க பேசினேன்.."

"ஆனா அவங்க உன்னை வெச்சு பேசறாங்கனு...எனக்கு ஜோசியமா தெரியும்... சொல்லு..." எனும் போதே..

"உங்க போன் ஸ்விட்ச் ஆஃப் செஞ்சு வெச்சிருப்பேன்னு சொன்னீங்க தானே...அப்பறம் எப்டி நீங்க ஆன் பண்ணிங்க..." என தன் விசாரணையை ஆரம்பிக்க..

"இதெல்லாம் என்னை நல்லா கேட்டு போலீஸ்காரன் பொண்டாட்டினு நிரூபி..ஆனா..கேக்க வேண்டிய நேரத்துல எல்லாத்தையும் கோட்டை விட்டுடு..."

"நானே எங்க கேம்ப் ரெண்டு நாள் முன்னாலேயே முடிஞ்சிடுச்சு... மறுநாள் மதியம் ஊருக்கு வந்துடலாம்...வந்ததும் உன்னை அழைச்சிட்டு..ஏற்காடு போகலாம்னு லீவ் அப்ளை செஞ்சு.. ஊருக்கு சந்தோஷமா வந்தா..அங்க நீ ஆள் எஸ்கேப்.."

"உன்னை காணோம்னு நாங்க பதறி போய்...ஸ்டேட் முழுக்க தேடினோம்..யார் கடத்தினாங்க..எதுக்கு கடத்தினாங்கனு தெரியாம குழப்பமா இருக்கறப்ப..எங்க உன்னை தேடறது..சொல்லு.."

"நீ காணாம போயிட்டனு தெரிஞ்சதுமே அந்த வேதனையில உங்க தாத்தா கீழே விழுந்தவர் தான்.. இப்ப படுத்த படுக்கையா இருக்காரு..உங்கப்பா..உங்க பெரியப்பா வருண், வர்ஷானு குடும்பமே உன்னை காணாம வருத்தத்துல இருக்கு..தெரியுமா.."

"எங்கப்பா நான் ஊர்ல இல்லாதப்ப.. அவர் உன்னை சரியா பாத்துக்கலனு குற்றவுணர்ச்சில எல்லார் கிட்டயும் பேசறதயே நிறுத்திட்டாரு...நீ திரும்பி வந்தா தான் பேசுவாராம்..."

"இவங்கல்லாம் பரவாயில்லை... என் தங்கச்சி இருக்காளே...அவ அண்ணி கிடைச்சா தான் கல்யாணம் செஞ்சுப்பேனு சொல்லி நிச்சயம் பண்ண வந்தவங்களை நிறுத்தி வெச்சிருக்கா..இது உனக்கு எங்க புரிய போகுது.."

"எங்கம்மா மட்டும் எப்டி இவ்ளோ சாதாரணமா இருக்காங்கனு அப்பப்ப யோசிச்சிருக்கேன்..இப்ப தானே எனக்கு எல்லாம் தெரியுது..."

"உன்னை சுத்தி எல்லாரும் எமோஷனல் இடியட்ஸ்ஸா இருக்க...நீ மட்டும் க்ளவரா ப்ளே பண்ணி இருக்கல்ல... உனக்கு குடும்பமா இருந்திருந்தா தானே எல்லாம் தெரிஞ்சிருக்கும்..உன் மேல பாசம் வெச்ச எல்லாரையும் நீ அசிங்கப்படுத்திட்ட..."

"எனக்கு ஒரு சந்தேகம்...நீ எல்லாம் நிஜமாவே டாக்டர்க்கு படிச்சு தான் பட்டம் வாங்கினியா...இல்ல எங்காவது கூறு கட்டி வெச்சிருந்ததை வாங்கிட்டு வந்துட்டியா...இதுல இந்த அம்மணி பெரிய ஆர்த்தோ டாக்டராம்..." என அவளை நிறுத்தாமல் திட்டியவன்..கவுதம் பக்கம் திரும்பி..

"பாத்தியா டா..உந்தொங்கச்சியோட அறிவை...எவளோ சொன்னா..இந்தம்மணி யோசிக்க மாட்டாங்களா.."

"எதையும் தெளிவா கேக்காம..யாரோ நம்ம வாழ்க்கைக்கு சம்பந்தமே இல்லாத ஒரு ஆள் சொன்னதை நம்பியா இவ வீட்டை விட்டு போகற பெரிய முடிவு எடுப்பா.."

"இப்டி அவசரப்பட்டு வாழ்க்கையை தொலைச்சு...எல்லாரோட நிம்மதியையும் அழிச்சவளுக்காகவா நீ என் மேல கம்ப்ளையின்ட் குடுக்க போனே.. " என்று வேதனையோடு அவனிடம் பேசியவனை பார்த்து கவுதம்...

"டேய் அப்டி இல்லடா..அவ உலகம் தெரியாம வளர்ந்த பொண்ணு..வெகுளி டா..ஏதோ சூழ்நிலை...யாரோ சொல்றதை நம்பும்படியா இருக்கவே நம்பிட்டா...இதுல அவ தப்பு எதுவும் இல்ல டா...ஸாரி டா..நானும் உன்னை சரியா புரிஞ்சுக்காம இருந்திட்டேன் டா..." என உத்ராவை விட்டு குடுக்காமல் பேசியவனை முறைத்து

"இதான்...இதே தான் டா..அவ திமிரா நடந்துக்க காரணம்... அவ தப்பே பண்ணாலும் அதை கஷ்டப்பட்டு வாதாடி சரினு நிரூபிக்க நீங்க எல்லாம் இருக்கவே தான் இவ இப்டி இருக்கா..."

"இதுவரைக்கும் அவ பண்ணது தப்புனு அவ உணரல டா...தான் பண்ணது சரினு தான் அவளோட தீர்மானமான முடிவு. .ஒரு வேளை தப்புனு அவளுக்கு புரிஞ்சிருந்தா..இந்த நேரம் ஸாரி கேட்டிருப்பாளே டா.."

"போதாததுக்கு நீங்க எல்லாம் அவளோட தப்பை எடுத்து சொல்லாம.. செல்லம் கொஞ்சுங்க...நல்லா என் குடும்பம் விளங்கிடும்..."என விரக்தியாக பேசினான்.

அவன் சொன்னதும் உடனே உத்ரா "இல்ல...சத்யா... நீங்க தான் தப்பான பொம்பளைங்களை வீட்டுல வெச்சுக்க கூடாது...நானா இருந்தா அடிச்சு விரட்டுவேன்...தானா டைவர்ஸ் வாங்க வெப்பேன்னு அன்னிக்கு காலைல எல்லாரும் இருக்கும் போது தீர்மானமா சொன்னீங்களே.." என தன் நிலையை விடாமல் பேசி அவன் சொன்னதை நிரூபிக்க முயல ...

"தப்பான பொம்பளைனு தான் சொன்னேன்..என் பொண்டாட்டி தப்பான பொம்பளைனு சொன்னேனா...யோசி.. வந்தனா எனக்கு போன் பண்ணி யாரோ ஒரு ப்ரெண்ட் வீட்டுல பிரச்சினை... நீங்க தான் கொஞ்சம் பேசி சரி பண்ணணும்னு சொன்னாங்க..ரொம்ப ரிக்வஸ்ட் பண்ணாங்க..அதை தட்ட முடியாம நான் சரினு சொன்னேன்..நீ நம்புனாலும் நம்பலேனாலும் இதான் உண்மை டாக்டரம்மா " என நடந்ததை சொல்ல...

"சரி...நான் தனியா வந்து உங்களுக்கு போன் பண்ணி கேக்கும் போதும் அதையே ஏன் சொன்னீங்க..அந்த மார்ச் 7 ஆம் தேதி மதியம் 12 மணி என்னை மறக்கவிடாம பண்ணிட்டீங்களே..." உத்ரா மறுபடியும் விடாமல் அழுதபடி கேட்க..

"ஏன் டி..எப்டி டி...மார்ச் மாசம் 7 தேதி மதியம் 12...எதிர் வீட்டுல குழந்தை அழுதது...வாசல்ல..யாரோ அப்ப பூண்டு வித்துட்டு போயிட்டிருந்தாங்க..மாடில காக்கா கத்திட்டு இருந்த போதுனு... நீங்க இதை எல்லாம் எப்டி நியாபகம் வெச்சுக்கறீங்க.."

"நாங்க அப்ப பேசறதை அப்பவே மறந்துடுவோம்...உங்களுக்கு மட்டும் ஆண்டவன்..எதுக்கு இந்த மாதிரி கொக்கி போட்டு கேக்கற புத்தியை வெச்சானோ...தெரியல.."

"தேவையில்லாதது எல்லாம் நியாபகம் வெச்சுக்கோங்க...எது தேவையோ அதை மறந்துடுங்க.." என அவளை திட்டி கொண்டு இருக்கும் போது ரூம்க்குள்ளே வந்த டாக்டர் மல்ஹோத்ரா உத்ராவை பார்த்து ஆச்சர்யமடைந்து அங்கு புதிதாக இருந்த சத்யாவை குழப்பமாக பார்க்க உத்ரா.."டாக்டர்.. இவர் என்னோட ஹஸ்பெண்ட் மிஸ்டர் சத்யப்ரியன் ஐ.பி.எஸ் என அவருக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

அவனிடம் மகிழ்ச்சியாக கை குலுக்கி.."உத்ரா ரொம்ப சின்சியர், டெடிகேடட் ஒர்க்கர்...இந்த மூணு வருஷமா தான் எனக்கு உத்ராவை தெரியும்...ஆனா நிறைய வருஷம் பழகின மாதிரி ஒரு கம்பர்ட் பீல் க்ரியேட் ஆகி இருக்கு.."

"அவங்களை நான் என்னோட பொண்ணு மாதிரி தான் இதுவரைக்கும் பாதுகாப்பா பாத்துட்டு இருந்தேன்...இப்ப நீங்க வந்தாச்சு...இனி அந்த பொறுப்பை உங்களுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணிடறேன்.." என சிரித்தபடி சொல்லி விட்டு

"என்ன உத்ரா..உங்க ட்யூட்டி நாலு மணிக்கே முடிஞ்சிருக்கணுமே...வீட்டுக்கு போகாம ஏன் இன்னும் இங்க இருக்கீங்க.."

"விசிட்டிங் ஹவர்ஸ் முடிஞ்ச பிறகு எதுக்கு இங்க அதிகமா ஆட்கள் இருக்கீங்க..நீங்க எல்லாரும் டாக்டர்கள் தானே.."

"மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ண வேண்டிய நீங்களே இப்டி தப்பா நடந்துக்கலாமா.."

"இந்த மாதிரி ஒரு ஆக்ஷ்னை நான் உங்க கிட்டே இருந்து கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.." என கோபமாகவே கடிந்து கொண்டார்.

"இல்ல டாக்டர்.. நாங்க பேசிட்டே இருந்ததுல டைம் போனதே தெரியல..ஸாரி.." என உத்ரா சாரி கேட்டதும்..

"இல்ல உத்ரா..இது முதல் தடவை உங்களுக்கு வார்னிங் லெட்டர் வரும்..நெக்ஸ்ட் டைம்னா உங்களுக்கு மெமோ குடுப்பாங்க..பாத்துக்கங்க..ரூல்ஸ் எல்லாருக்கும் தான்.. யாரும் ஸ்பெஷலா எந்த ரிலாக்சேஷனும் கிடையாது.." என அவளை எச்சரிக்கை செய்து விட்டு..

"இந்த ரூம்ல இருக்கிற பேஷண்ட்க்கு சாப்பாடு மருந்து எல்லாம் டைம்க்கு குடுக்க வேணாமா..ரெண்டு வாட்டி சிஸ்டர் வந்து பாத்துட்டு என் கிட்ட வந்து சொல்லவே தான் நானே வந்தேன்.."

"நீங்க எல்லாருமே..கிளம்புங்க..அபிமன்யு நீட்ஸ் ரெஸ்ட்..அவரை பேஷண்டா கூட கன்சிடர் பண்ணாம..நீங்க இப்டி தான் சத்தமா பேசுவீங்களா..இங்கே இருந்து கிளம்புங்க..க்வீக்..வித் இன் ப்யூ மினிட்ஸ்ல நீங்க கிளம்பிணும்..நாளைக்கு மார்னிங் விசிட்டிங் ஹவர்ஸ்ல வந்தா போதும்.." என சொல்லி மல்ஹோத்ரா அவர்களை அங்கிருந்து அனுப்பினார். (தொடரும்)
 

Author: Subha Balaji
Article Title: சுயம்பு 30
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
199
என்ன பண்றது சில விஷ கிருமிகளாள நிறைய பேர் வாழ்க்கை பிரச்சனைல போய்ட்டு இருக்கு 🤔🤔🤔
 
Top Bottom