• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

சுயம்பு 25

Subha Balaji

Member
Joined
Jun 30, 2024
Messages
78
சுயம்பு 25

சொன்னது போல பதினொரு மணிக்கு உத்ராவுக்கு சத்யா போன் செய்தான். அவள் போன் எடுக்காது போகவே, அம்மாவை அழைக்க அவரும் எடுக்காமல் இருக்க...அப்பாவையும் அழைக்க...போன் எடுக்காமல் ரிங் அடித்து ஓய்ந்தது.

மறுபடியும் உத்ரா, அம்மா, அப்பா என போன் செய்து அலுத்தவன் ஒரு கட்டத்தில் வீட்டில் ஏதாவது ஆபத்தாக இருக்குமோ என பயந்து போனான்.

பக்கத்தில் சீனியர்கள் இருக்க..எதுவும் பேச முடியாது தர்மசங்கடத்தோடு போன் செய்து விட்டு.."ஸாரி..சார்..வீட்டுக்கு போன் பண்ணா யாரும் எடுக்கல..என்னாச்சுனு தெரியல...அங்க எதாவது ப்ராப்ளமா இருக்குமோனு எனக்கு சந்தேகமா இருக்கு.."

"ஏற்கனவே என் ஓய்ஃப்பை வீட்டுல இருக்க சொல்லிட்டு வந்திருக்கேன்... என சொல்லி முடிப்பதற்க்குள் அவனுடன் பணிபுரியும் ஒரு இன்ஸ்பெக்டர் "சத்யா சார்..நான் அவங்களை காலைல அவங்க ஒர்க் பண்ற ஹாஸ்பிடல்ல பாத்தேன்..அங்க தான் என் மாமா அட்மிட் ஆகி இருக்கார்.." என்க..

அதை கேட்ட ஐஜி "என்ன மிஸ்டர் சத்யா...இது எவ்ளோ இம்பார்டெண்ட்னு உங்களுக்கு தெரியாதா..."

"அந்த ஃபைல்ல இருக்கிறது பூரா எவ்ளோ கான்பிடென்ஷியல்னு உங்களுக்குதான் தெரியும்...இதுக்காக நீங்க எவ்ளோ போராடி விஷயங்களை கேதர் பண்ணிங்க..."

" ஃபைல் கொண்டு வர்றது சேஃப் இல்லனு சொல்லி...அதுக்கு பதிலா வேற ஏற்பாடு செய்திருக்கேன்னு சொன்னீங்க...இப்ப என்னாச்சு.." என அவனின் திறமையில் எப்போதும் கடுப்பாகும் அவர் கடுமையான குரலில் கேட்க..அதில் முகம் கருத்தவன்.."ப்ளீஸ்.. கொஞ்சம் டயம் குடுங்க சார்..நான் அந்த பைல் எடுத்துட்டு வரேன்.." என சொல்லி அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வர...

வீட்டின் கதவுகள் திறந்திருக்க..அவன் அம்மா பார்க்கும் சீரியலில் ஒலி தெரு வரை கேட்டது. ஏற்கனவே கோபத்தில் வந்தவன்..அம்மாவை திரும்பி கூட பார்க்காமல், உத்ரா தங்கள் அறையில் தான் இருப்பாள் என நம்பிக்கையோடு சென்று பார்க்க..அங்கு அவள் இல்லாததை கண்டு இன்னும் கோபமடைந்தான்.

பீரோ வேறு திறந்திருக்க...அதில் பதட்டமானவன்...வேகமாக திறந்து பார்க்க...அவனின் ப்ளூ ஃபைல் பத்திரமாக இருக்க..அதை நன்கு செக் செய்து எடுத்து கொண்டு கிளம்பினான். அவன் வெளியே போகும் போது கதவை அடித்து சாத்தி விட்டு போக...அது கூட திலகவதியின் கவனத்தை கவரவில்லை.

நேராக ஐஜி ஆஃபீஸ் சென்றவன்...உள்ளே போவதற்கு முன் யாருக்கு மெசேஜ் அனுப்ப வேண்டுமோ..அவர்கள் எல்லாருக்கும் வரிசையாக மேசேஜ் அனுப்பி விட்டு, அந்த ஃபைலில் இருந்தவற்றை எல்லாம் ஒரு நகல் எடுத்து...தன் கார் சீட்டுக்கு அடியில் வைத்து விட்டு உள்ளே போய் அதை ஐஜியிடம் ஒப்படைத்தான்.

வாங்கி பார்த்தவர்..படு திருப்தியாக..

"க்ரிஸ்ப் ஒர்க்...சத்யா.." என சொல்லி மற்றவர்கள் தங்களை கவனிக்கும் முன் கண்களை சிமிட்டி விட்டு பக்கத்தில் இருந்த தன்னுடைய கப்போர்ட்டில் வைத்தார்.

அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பியவனின் கோபம் எல்லை மீற...எதுவும் பேசாமல் காரில் ஏறி தன் கோபத்தை காட்ட.. அது பறந்தது.

நேராக வீட்டுக்கு போனவன் அப்போது தன் அப்பா வீட்டில் இருப்பதை பார்த்து "நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால வீட்டுக்கு வர்றப்ப நீங்க இல்லையே...எங்க போயிருந்தீங்க.."என கோபமாக கேட்க..

அவர் "அதை ஏன்டா கேக்கற.. எனக்கும் உங்கம்மாக்கும் டிவி சீரியல் பாக்கற விஷயமா பயங்கர சண்டை.. சீரியல் பாத்து உன் உடம்பை, மனசை கெடுத்துக்காதனு சொன்னத்துக்கு உங்கம்மா எதேதோ பேசினா...என்னால தாங்க முடியாம..நான் கோவத்துல சபேசன் வீட்டுக்கு போயிட்டேன்.."என பதில் சொன்னார்.

அதை கேட்டவன் "ஓஹோ...அதான் நான் வீட்டுக்கு வரும் போது தெரு கதவு திறந்திருந்ததா...நான் வந்து போனது கூட தெரியாம இவங்க டிவியோட மூழ்கி இருந்தாங்க..." என குற்றம் சாட்ட..

"என்னடா...சொல்ற..சத்யா..நீ எப்ப வந்தே..." என ஆச்சர்யமாக முரளி கேட்க...

"வந்தேனாவா..நம்ம குடும்பம் இருக்கற லட்சணம் நல்லா இருக்கு...நீங்க சண்டை போட்டு வெளிய போயாச்சு...என் பொண்டாட்டி எங்க போனானு தெரியல...இவங்க உலகத்தை மறந்து டிவி பாத்துட்டு இருக்காங்க.."

"எவனாவது வீட்டுக்கு திருட வந்திருந்தா...இவங்களையும் டிவியையும் மட்டும் விட்டுட்டு மீதியை எடுத்துட்டு போயிருந்தா கூட தெரியாது..." என கத்தி விட்டு..

"மொதல்ல..உங்க போன்னு ஒரு மண்ணாங்கட்டி இருக்கே...அது வேலை பண்ணுதா.."என மிரட்டலாக கேட்க..

அவர் ஆம் என தலையசைக்க.."அதை எடுத்து பாருங்க...நான் எத்தனை தடவை உங்களுக்கு போன் பண்ணி இருக்கேன்னு தெரியும்..." என்க



அர் எடுத்து பார்த்ததும் சத்யாவிடமிருந்து 25 மிஸ்ட் கால்கள் வந்திருந்ததை பார்த்து தயக்கமாக "இல்லடா...உங்கம்மாவோட சண்டை போட்டு நான் போகும் போது போனை வீட்டுலயே வெச்சிட்டு போயிட்டேன்.."என பதில் சொன்னார்.

அந்த பதிலில் இன்னும் கடுப்பானவன் "உங்களுக்கு லோ சுகர் இருக்குனு தெரியுமா தெரியாதா..நீங்க பாட்டுக்கு போனை வீட்டுல வெச்சுட்டு வெளியே போயிட்டு உங்களுக்கு எதாவது உடம்புக்கு வந்தா யாருக்கும் தெரியும்.."

"ச்சே...இந்த வீட்டுல யாருக்கும் பொறுப்பே வராதா..அங்க பாருங்க..இங்க இவ்ளோ கலவரம் நடக்குது ..அவங்க பாட்டுக்கு டிவியோட ஒன்றி போயிருக்காங்க..."

"அவங்க மாற மாட்டாங்கனு தெரிஞ்சும் நீங்க அமைதியாவே இருக்காம..அவங்களோட எப்ப பாரு சண்டை போட்டு உங்க நிம்மதியை கெடுத்துக்கோங்க.."

"நானும் பல வருஷமா பாத்துட்டு இருக்கேன்...எனக்கும் தர்ஷிணிக்கு வீட்டுல நிம்மதியே கிடையாது..ஏதோ இவங்க குணம் தெரிஞ்சு நீங்க அவளை ஹாஸ்டல்ல சேத்துடவே..

அவளாவது நிம்மதியா இருக்கா..." என தன் தங்கை சத்யதர்ஷிணிக்காக உருகியவன் உடனே

"எல்லாம் சரி..என் பொண்டாட்டிங்கற ஒரு கேரக்டர் இந்த வீட்டுல இருக்கணுமே...காணுமே எங்க அவ.." என மறுபடியும் கோபமானவனிடம் முரளி

"ஏதோ எமர்ஜென்சினு போன் வந்தது...காலைல போனா...இன்னும் வரலைடா..." என அவனை சமாதானம் செய்வது போல பதில் சொன்னதும்..

"எமர்ஜென்சி... யாருக்கு இல்ல..இந்தம்மாக்கு மட்டும் தான் எமர்ஜென்சி கேஸ் வருமா..."

"நான் காலைல கிளம்பும் போதே ஒரு முக்கியமான விஷயமா போன் பண்ணுவேன்...நீ எனக்கு அதை பாத்து சொல்லணும்...அதனால எங்கயும் போகாதேனு எத்தனை தடவை சொல்லிட்டு போனேன்.."

"ஒரு வேளை எதாவது அவசரமா ஹாஸ்பிடல் போற மாதிரி இருந்தா எனக்கு போன் பண்ணு..இல்ல மேசேஜ் பண்ணி நான் பதில் சொன்ன பிறகு போனு சொன்ன போது நல்லா தலையாட்டினாளே.."

"அதுக்கு பிறகு எங்கயும் போயிடாத...இது ரொம்ப இம்பார்டெண்ட்னு அவளுக்கு நாலு மெசேஜும் அனுப்பினேன்..."

"நான் என்ன கேனையனா...எத்தனை போன் பண்ணேன் தெரியுமா...இதுவரைக்கும் ஒரு பதில் போன்...அட ஒரு மேசேஜ் கூட இல்ல...போன் எடுத்து பேச முடியாம இருக்கலாம், மேசேஜ் கூட பண்ண முடியாத அளவுக்கு மஹாராணி அவ்ளோ பிசியா இருந்திருப்பாளா..எல்லாம் இவன் தானேனு அலட்சியம்.."

"ச்சே..உங்களை மாதிரி பொறுப்பில்லாத ஆட்களால இன்னிக்கு எனக்கு எவ்ளோ அசிங்கமா போச்சு தெரியுமா..

இதுவரைக்கும் நான் வேலைல சின்சியர், பர்பெக்ட்னு பேர் வாங்கிட்டு இன்னிக்கு மீட்டிங்க்கு வந்தவங்க எல்லாம் எவ்ளோ கேவலமா என்னை பாத்தாங்க தெரியுமா.."

"உங்களுக்கு எப்டி தெரியும்.. உங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் இவங்க கூட சண்டை போடணும்..சண்டை போட்டுட்டு நீங்க மட்டும் நிம்மதியா வெளில போயிடணும்..."

"இவங்களுக்கு எது எப்டி போனாலும் பரவாயில்ல..

புருசன், பிள்ளைங்களை பத்தி எந்த கவலையும் கிடையாது..நேரா நேரத்துக்கு அவங்க பாக்கற சீரியல் எதையும் மிஸ் பண்ணாம பாக்கணும்.."

"உங்களுக்கு தான் பொறுப்பில்ல...அட்லீஸ்ட் என்னை கல்யாணம் பண்ணிட்டு வந்தவளாவது பொறுப்பா இருப்பானு பாத்தா...அவ உங்களுக்கு மேல இருக்கா.."

"நான் ஒரே ஆளா எவ்ளோ தான் எல்லாத்தையும் பொறுத்துட்டு போறது...இன்னிக்கு வரட்டும் அவளுக்கு இருக்கு..."என கருவியபடி அங்கிருந்த சோஃபாவில் வாசலை பார்த்தபடி உட்கார்ந்து கொண்டு உத்ராவின் கார் வருகிறதா என பார்க்க ஆரம்பித்தான். (தொடரும்)
 

Author: Subha Balaji
Article Title: சுயம்பு 25
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
114
அவ சதி திட்டத்துல உத்ரா மாட்டிக்கிட்டா இப்போ வீட்டுல பிரச்னை 🙄🙄🙄🙄🙄
 

Subha Balaji

Member
Joined
Jun 30, 2024
Messages
78
Epi is too small
Can be little longer
❤️❤️❤️
இது சின்னதா இருந்தா தான் அந்த சம்பவத்தோட தாக்கம் தெரியும் மா
 
Top Bottom