Subha Balaji
Member
- Joined
- Jun 30, 2024
- Messages
- 79
சுயம்பு-23
ஹாஸ்பிடல் உள்ளே உட்கார்ந்த சத்யா உத்ராவுக்காக காத்திருக்க ஆரம்பித்தான். அவன் அங்கு சென்ற அடுத்த அரைமணி நேரத்தில் அங்க வந்த வந்தனா தற்செயலாக அவனை பார்ப்பது போல "ஹலோ சத்யா...நேத்து தான் கல்யாணம் முடிஞ்சது..இன்னிக்கு ஹாஸ்பிடல்ல இருக்கீங்க..என்னாச்சு...யார்க்காவது உடம்பு சரியில்லையா.."என அக்கறையோடு கேட்பது போல கேட்க..
அவள் கேள்வியில் இருந்த சூட்சமத்தை புரிந்து கொள்ளாமல் சத்யா.."வாங்க வந்தனா..இந்த ஹாஸ்பிடல்ல தான் உத்ரா ஒர்க் பண்றா...
காலைல ஏதோ எமர்ஜென்சினு போன் வரவே அவ தனியா வர வேணாமேனு நான் அழைச்சிட்டு வந்தேன்..."என அவளுக்கு தேவையான தகவல்களை தந்து விட்டு அவள் எதற்காக வந்திருக்கிறாள் என கேட்டான்.
அவன் வார்த்தைகளை கேட்டு அவள் முகம் மாற அதை அவனுக்கு தெரியாமல் மறைத்து கொண்டு "என்னோட ப்ரெண்ட்டோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லை.. நான் அவங்களை பாக்க தான் வந்தேன்..இன்னிக்கு..நீங்க மறுவீட்டுக்கு போகணும்னு ஆன்டி சொன்னாங்களே...எப்ப போகணும்..." என விடாமல் அவனை கேள்வி கேட்க..
"உத்ராவோட நேரா அங்க போயிடுவேன்.." என அவளுடன் பேச்சை வளர்க்க விரும்பாமல் சுருக்கமாக பதில் சொல்லி கொண்டு இருக்கும் போதே..அவனுக்கு போன் வர.."எக்ஸ்க்யூஸ்மீ" என சொல்லி போன் பேச வெளியே போனான்.
ஏதோ அவசர கேஸ் விஷயமாக அவனுடைய கன்ட்ரோலில் இருக்கும் ஸ்டேஷனில் இருந்து போன் வர...அவர்களுக்கு தேவையான விளக்கம் சொல்லி முடிக்கவே ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆனது.
அவன் வந்து உட்கார்ந்ததும் மெல்ல திரும்பி பார்த்த வந்தனா அங்கு உத்ரா வருவதை பார்த்ததும், தான் படித்த ஜோக் ஒன்றை அவனிடம் சொல்லி வாய் விட்டு சிரித்தாள்.
அதற்குள் உத்ராவை தங்களை நோக்கி வருவதை பார்த்தவன் "சரி வந்தனா...அப்பறம் பாக்கலாம்.."என சொல்லி வந்தனா பார்த்த வெற்றி பார்வையை கவனிக்காமல் வந்த உத்ராவை அழைத்து கொண்டு நகர்ந்தான்.
அவள் வீட்டுக்கு போய் விருந்து, இன்னும் சொந்தக்காரர்கள் வீடுகளில் விருந்து என அவர்களின் ஒரு மாதம் ஓடி போனது.
அன்று அதிகாலையே ஏதோ அவசரமாக வெளியே போக ஆரம்பித்த சத்யா, அவனுக்கு காபி எடுத்து வந்து தந்த உத்ராவிடம் "இன்னிக்கு சாயந்திரம் ஆறு மணிக்கு என்னோட கூட வேலை செய்யறவங்க குடுக்கற பார்ட்டி இருக்கு டி. இன்னிக்கு உனக்கு ஆஃப் தானே...நீ வருவேனு நான் ஏற்கனவே சொல்லிட்டேன்..உனக்கு ஓகே தானே.." என கேட்க..
அவள் சம்மதமாக தலையசைத்ததும் "நம்ம பீரோ லாக்கர்ல ஒரு ப்ளூ கலர் ஃபைல் வெச்சிருக்கேன்...இப்ப நான் போற எடத்துக்கு அதை எடுத்துட்டு போக முடியாது.."
"பதினொரு மணி மாதிரி உனக்கு போன் பண்ணுவேன்.. எனக்கு சில முக்கியமான விஷயங்கள் அதுலேந்து தேவைப்படுது. அதுலயே 1, 2,3 னு நம்பர் எழுதி அதுக்கு நேரா சில கோட் வோர்ட் எழுதி அதை எந்த மொபைல்க்கு அனுப்பணும்னு எழுதி இருப்பேன்..நான் உனக்கு ஒவ்வொரு வாட்டி போன் பண்ணி 1,2,3 னு நம்பர் சொல்லும் போது, நீ அந்தந்த நம்பர்க்கு அந்த கோட் வோர்ட்டை அனுப்பணும்.."
" நீ பாட்டுக்கு மறந்துட்டு எங்கயாவது கிளம்பிடாத...வீட்டுலேயே இரு..ப்ளீஸ் டி.."
"இது ஒரு பெரிய ஆளை சட்டத்தோட பிடில மாட்ட வெக்கறத்துக்கான சீக்ரட் ப்ராஜெக்ட்...அதனால எனக்கு ஹெல்ப் பண்ணு ப்ளீஸ்..."என்க..
அவளும் "சரி..சத்யா..நான் செய்யறேன்..நீங்க ஜாக்கிரதையா போயிட்டு வாங்க.."
"எத்தனை மணிக்கு நாம கிளம்பணும்னு நீங்க ப்ரீயா இருக்கும் போது எனக்கு சொன்னா நான் ரெடியாக சரியா இருக்கும்.." என சொல்லி அவனை அனுப்பி விட்டு உள்ளே வந்தாள்.
அங்கிருந்த சத்யாவின் அம்மா திலகவதி "புருஷனை பேர் சொல்லி கூப்பிடறது தான் நீ கத்துக்கிட்டதா...நல்லா வளர்ப்பு.. அம்மா வளர்த்திருந்தா..மரியாதை தெரியும்...இது காட்டு செடி தானே..."
"ம்ம்ம்.. எல்லாத்துக்கும் ஒரு குடுப்பினை வேணும்..தேவதை மாதிரி ஒரு பொண்ணு இருக்க.. தேடி தேடி உன்னை கல்யாணம் பண்ணானே...அவனை சொல்லணும்..."
"எல்லாம் நான் பண்ண வினை..என சத்யா எப்போதும் வீட்டில் இல்லாத போது உத்ராவை குத்தி காட்டி பேசுவதை போல ஆரம்பிக்க..அவள் எதுவும் பேசாமல் அமைதியாக அங்கிருந்து தங்களது ரூம்க்கு சென்றாள்.
ஓய்வு நேரத்தில் எப்போதும் படிக்கும் மெடிக்கல் ஜர்னல்களை படிக்க ஆரம்பித்தவள்..திலகவதி கூப்பிடுவது கூட கேட்காமல் அதனுள் மூழ்கி போனாள்.
அவள் எதிரே வந்து நின்று "இங்க பாரு...உன்னை எத்தனை தடவை கூப்பிடறதாம்..மஹாராணி எப்ப பாரு அந்தப்புரத்துக்கு வந்துட வேண்டியது...உன் புருஷன் நீ சாப்பிட்டியா..அக்கறையா போன் பண்ணி கேக்கறான்..."
"உனக்கு போன் பண்ணானாம்...நீ எடுக்கலையாம்...ம்ம்ம் இதுவரைக்கும் என்னை இருக்கியா...செத்து போயிட்டியானு கூட கேட்டதில்ல..எல்லாம் வாங்கிட்டு வந்த வரம்.."
"என்னால மாடி ஏற முடியாம ஏறி வந்திருக்கேன்..நீ சாப்பிட வரப்போறியா..இல்ல உங்களுக்கு இங்க எடுத்துட்டு வந்து படைக்கணுமா.." என பெருங்கோபத்தோடு...மூச்சு வாங்கி கொண்டே கத்த
அதில் கலைந்தவள்...அவரை பார்த்து "என்னாச்சு அத்தை.."என பரிவாக கேட்க
"அப்ப இதுவரைக்கும் நா பேசினது உன் காதுல விழலையா...சாப்பிட வருவியானு கேட்டேன்.." என வேண்டா வெறுப்பாக பேச..
"நீங்க சாப்பிட்டீங்களா அத்தை"என்ற அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல்.."சாப்பிட வா" என அழைத்து விட்டு போனார்.
கீழே போனதும் ஹாலில் உட்கார்ந்து இருந்த சத்யாவின் அப்பா முரளி "வா..மா...நேரமாச்சு பாரு..போய் சாப்பிடு.." என சொல்லி மனைவியின் முறைப்பை பார்த்ததும் பேப்பர் படிப்பது போல தன் முகத்தை திருப்பி கொண்டார்.
உத்ரா சாப்பிட்டு விட்டு இருந்த பாத்திரங்களை தேய்த்து முடிக்கவும் அவளுடைய மொபைல் போன் அடித்தது.
எடுத்து பார்க்க வந்தனா என வரவும்..கண்களில் யோசனையோடு போனை எடுக்க..அந்த புறம் இருந்த வந்தனா.."உத்ரா...உத்ரா...ரொம்ப எமர்ஜென்சி...என் ப்ரெண்ட்க்கு ஆக்ஸிடெண்ட் ஆகி உங்க ஹாஸ்பிடல்க்கு போயிருக்காங்க...அங்க சேத்துக்க மாட்டேன்ங்கறாங்க...ப்ளீஸ் நீ உடனே வரியா.."என கெஞ்ச..
உத்ரா.."நான் அங்க இருக்கிற டாக்டர் கிட்ட இப்பவே பேசறேன்..நீங்க பதட்டப்படாதீங்க..."என பதில் சொல்லவும்..
"உத்ரா ப்ளீஸ்... அவங்க உயிருக்கே ஆபத்து...தயவு செய்து நீங்களே வாங்க.." என அலற..
"இல்ல..நான் இன்னிக்கு ஆஃப்..எனக்கு கொஞ்சம் முக்கியமான பர்சனல் ஓர்க் இருக்கு..."என தயக்கமாக சொல்ல..
"நீ எல்லாம் ஒரு டாக்டரா..பேஷண்ட்ஸ் ஆபத்துனா கூட நீ வர மாட்டியா...நீ டாக்டரா கோட் போட்டு பண்ண சத்தியம் எல்லாம் பொய்யா..."என சம்பந்தமில்லாம பேசி கத்த ஆரம்பித்தாள்.
"புரிஞ்சுக்கோங்க...நானும் மனுஷி தான்... டாக்டர்னா எனக்கும் பர்சனல்னு எதுவும் இருக்க கூடாதா.." என பொறுமையாக அவளை சமாதானம் செய்ய முயல...அது வீணானது.
வந்தனா..."நீ வர வேணாம்.. உன் பர்சனல் ஒர்க்கையே பாத்து நல்லா இரு.. ஒரு வேளை அவங்க செத்து போனா...காலம் பூரா நீ தான் அவங்களோட உயிரை எடுத்த எமன்னு நான் சொல்லுவேன்..."என அதிராமல் ஒரு வெடிகுண்டு வீச..
அதில் அதிர்ந்தவள்..கடிகாரத்தை பார்க்க..மணி பத்து என தெரிய..போய் அவர்களுக்கு ஹெல்ப் செய்து விட்டு ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்து விடலாமே என தீர்மானம் செய்து "ப்ளீஸ் பதட்டப்படாதீங்க...நான்... நான் இப்பவே வரேன்.." என சொல்லி போனை வைத்து "ஒரு எமர்ஜென்சி நான் உடனே கிளம்பணும் அத்தை.." என மாமியாரிடம் சொல்ல...
அவர் "சத்யா வெளிய எங்கயும் போகாதேனு சொன்னானே...இப்ப நீ பாட்டுக்கு வெளிய கிளம்பறியே...அப்பறம் அவன் போன் பண்ணி நீ இல்லேனு தெரிஞ்சா...அம்மானு கூட பாக்காம காட்டுக்கத்தல் கத்துவானே..யார் அவன் கிட்ட திட்டு வாங்கறது..." என அவளை கண்டிக்க..
"இல்லத்த...இது ஒரு உயிர் போற சமாச்சாரம்... அவர்க்கு சொன்னா புரிஞ்சிப்பார்" என சொல்லி..சில நிமிடங்களுக்கு தயார் ஆகி வந்தவள்..ஒரு வேளை எதாவது அவசரம் என்று வெளியே கிளம்பினால் சத்யா தனக்கு போன் பண்ண சொன்னதையும், போன் எடுக்கவில்லை என்ற மெசேஜ் பண்ண சொன்னதையும் மறந்து ஹாஸ்பிடல்க்கு வேகமாக கிளம்பி சென்றாள். (தொடரும்

Author: Subha Balaji
Article Title: சுயம்பு 23
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.