Subha Balaji
Member
- Joined
- Jun 30, 2024
- Messages
- 78
சுயம்பு-18
ஸ்வேதாவின் குரலில் தன் நினைவில் இருந்து வந்தவன் சுற்றி பார்க்க, பசுமையாய் அழகிய மலைகள் ஊரை சுற்றி அரணாக இருந்தது பார்க்க மனதுக்கு இதமாக இருந்தது.
மழை பெய்து ஊரே பளிச்சென்று இருக்க...சில நிமிடங்களில் ஹாஸ்பிடல் வாசலை அடைந்தனர்.
போனை எடுத்து மல்ஹோத்ராவை தொடர்பு கொண்ட கவுதம் தாங்கள் ஹாஸ்பிடல் வாசலுக்கு வந்து விட்டதாக தெரிவிக்க..அவர் தற்போது ட்யூட்டியில் இருப்பதால் அவர்களை நேராக ஐசியுக்கு வந்து விட சொன்னார்.
காரிலிருந்து இறங்கியவர்கள் முதலில் ஹாஸ்பிடல் இருந்த அழகை பார்த்து மலைத்து போயினர். சுத்தமாக பளிச்சென்று இருந்த கார் பார்க்கிங் அவர்களின் கண்களுக்கு முதலில் தென்பட..அங்கிருந்து போகும் வழி எல்லாம் துளி குப்பை கூட இல்லாமல் எங்கும் சுத்தம் மட்டுமே இருந்தது.
உள்ளே நுழைந்து ரிசப்ஷனை பார்க்க, அது ஐந்து நட்சத்திர ஹோட்டல் ரிசப்ஷனை போல இருந்ததில் இன்னும் ஆச்சரியம் அடைந்தனர்.
நேராக போய் தன்னை அறிமுகம் செய்து கொண்டு கவுதம் அபிமன்யு பற்றி கேட்க.. சில நொடிகளில் "ஐசியூ இஸ் இன் ஃபோர்த் ஃப்ளோர் ஸார்..யூ கேன் கோ தேர்" என்ற பதில் வர..அதில் இன்னும் ஆச்சர்யம் அடைந்தவன் தாளமுடியாமல் அந்த ரிசப்ஷனிஸ்டிடம் ஹிந்தியில் கேட்க..கதை படிப்பவருக்காக இனி தமிழில் "எனக்கு ஒரு சந்தேகம்.. கவர்மெண்ட் ஹாஸ்பிடல் எப்டி இவ்ளோ க்ளீனா சுத்தமா இருக்குனு சொல்ல முடியுமா" என கேட்க..
அந்த ரிசப்ஷனிஸ்ட் புன்னகையோடு எல்லாத்துக்கும் காரணம் எங்களோட சீஃப் டாக்டர் மிஸ்டர் மல்ஹோத்ரா தான்."
"அவர் இங்க வந்து சேந்த போது இதுவும் சுத்தமில்லாம அழுக்கா தான் இருந்தது. அவர் வாரா வாரம் மீட்டிங் போட்டு எங்க எல்லார்க்கிட்டயும் ஹாஸ்பிடல் சுத்தமா வெச்சுக்கறதை பத்தி எடுத்து சொல்லி...க்ளீன் பண்ண வெச்சு...க்ளீன் பண்ணவங்களை பாராட்டி வாரா வாரம் அவார்ட் குடுக்கறது...மாசத்துக்கு ஒரு தடவை அவங்களுக்கு இன்சென்டீவ் தன் சம்பளப்பணத்துலேந்து குடுக்கறதுனு...எங்களுக்கும் காலைலயோ..நைட்டோ... எப்டி பேஷண்ட், அவங்களோட வர்ற அட்டென்டர்களை கனிவா முகம் சுளிக்கமா நல்லவிதமா ட்ரீட் பண்ணறது, பேஷண்ட்ஸ், டாக்டர்களை பத்தி தகவல் கேட்டு வரவங்களுக்கு தெளிவா பதில் சொல்றதுனு இந்த அஞ்சு வருஷத்துல எங்களை நல்லா ட்ரெயின் பண்ணியிருக்காரு.."என பெருமையாக சொல்லி முடித்தார்.
அவரின் விடை பெற்றவர்கள் நாலாவது ஃப்ளோர்க்கு போக அங்கு ஐசியூ வாசலில் நின்று கொண்டு இருந்தவர் வேகமாக வந்து "டாக்டர் கவுதம்" என சந்தேகமாக கேட்க ..
"ஆம்"என தலையசைத்தவனின் கைகளை பிடித்து "டாக்டர் மல்ஹோத்ரா" என தன்னை அறிமுகம் செய்து கொள்ள..தன் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த ஸ்வேதாவை "டாக்டர் ஸ்வேதா..கைனிக்..என் ஒய்ப்...அபிமன்யுவோட சிஸ்டர்" என அறிமுகம் செய்து வைத்தான்.
அங்கே இருந்த சேரில் உட்கார்ந்து கொண்டு அபிமன்யுவின் உடல்நலத்தை விசாரித்து தெரிந்து கொண்டவர்களை பார்த்து "வாங்க போய் அபிமன்யுவை பாக்கலாம்.."என மல்ஹோத்ரா அழைக்க..
தங்களது காலணிகளை ஐசியு வாசலில் விட்டு..அவர் காண்பித்த காலணிகளை அணிந்து கொண்டு தங்களது உடை மேல் பச்சை நிற முழு அங்கியையும் அணிந்து கொண்டு உள்ளே சென்றனர்.
ஐசியூவில் ஏற்கனவே சிலர் இருக்க...கடைசி பெட்டுக்கு அருகில் அவர்களை அழைத்து போய் ஸ்கிரீனை விலக்க அங்கு அபிமன்யு அவர்களின் கண்களுக்கு தெரிந்தான்.
ஏற்கனவே கை,கால்களில் கட்டு போடப்பட்டிருக்க...முகத்தில் இருந்த சின்ன சிராய்ப்புகளுக்கு மருந்து தடவப்பட்டிருந்தது. கண்களை மூடி தூங்குவதை போலவே இருந்தவனை பார்த்த ஸ்வேதா.."இன்னும் கண் முழிக்கலையா டாக்டர்" என கேட்டாள்
"அவரை இங்க அட்மிட் பண்ணதுலேந்தே மயக்கமா தான் இருக்காரு..இன்னும் த்ரீ ஹவர்ஸ் போனா ஃபார்ட்டி எய்ட் ஹவர்ஸ் ஆகிடும்..."
"அதுக்கு பிறகும் கண் முழிக்கலேனா மறுபடியும் ஒரு ஃபுல் ஸ்கேன் பண்ண வேண்டி இருக்கும்.."என அவனின் நிலையை தெளிவாக சொன்னவர்....ஸ்வேதாவிடம்
"நாங்க கூப்பிட்டு அவர் இதுவரைக்கும் ரெஸ்பான்ட் பண்ணல..நீங்க வந்திருக்கீங்களே...அவர் கிட்ட பேசி பாருங்க..டாக்டர் ஸ்வேதா..மே பீ அவர் உங்க வாய்ஸ் கேட்டு கண் திறக்க ஹண்ட்ரட் பர்சன்ட் ச்சான்சஸ் இருக்கு..லெட்ஸ் ஹோப் ஃபார் தி பெஸ்ட்.."என சொல்லி ஓரமாக கவுதம்க்கு அருகில் நின்று கொண்டார்.
அபிமன்யுவை பார்த்த ஸ்வேதா கண்களில் நீர் திரள..அவனருகில் போனவள்..மெல்ல அவன் கைகளை வருட ஆரம்பித்தாள்..
"டேய் மனு..கண்ணா..ஸ்வேதா வந்திருக்கேன் டா...கண் திறந்து பாருடா..உன்னோட செல்ல அத்தானும் வந்திருக்கார் டா..."
"எங்களுக்கு உன் மேல இருந்த கோவம் எல்லாம் போயிடுச்சு டா...ப்ளீஸ் டா...கண் திற டா.."
"உனக்கு நியாபகம் இருக்கா...நாம ரெண்டு பேரும் சின்ன வயசுல முதல் தடவையா பஸ்ல போனது...அம்மா என்னை மட்டும் பஸ்ல விட்டுட்டு போயிட்டாங்களே..."
"அப்பறம்..அப்பா தேடிட்டு வர..நான் எந்த கவலையும் இல்லாம கண்டக்டர் அங்கிள் வாங்கி குடுத்த பிஸ்கெட் சாப்பிட்டு இருந்தேனே...அதுக்கு பிறகு நம்மளை அப்பா பஸ்லயே அனுப்ப மாட்டாரே.."
வாராவாரம் வருண் அத்தானும், வர்ஷாவும் நம்ம வீட்டுக்கு வருவாங்களே...நாம எல்லாம் ஜாலியா விளையாடுவோமே...உனக்கு நியாபகம் இருக்கா..."
"கோயில் திருவிழால நீயும் நானும் சின்ன மாமா கூடவே இருப்போமே..மாமா நாம கேக்கறதை எல்லாம் வாங்கி தருவாரே..."
"பெரியத்தை நம்மள பாத்தாலே பெரிய மாமா கிட்ட பேச கூடாது...அவங்க வீட்டுக்கு வர கூடாதுனு திட்டுவாங்களே..அது நியாபகம் இருக்கா டா..." என்றவள்..இன்னும் அவனிடம் பல விஷயங்களை பேச பலன் எதுவும் ஏற்படவில்லை.
"உங்க அத்தான் டாக்டர்க்கு படிக்கறார்னு நீயும் நானும் அவரை போலவே டாக்டர்க்கு தான் படிப்போம்னு சேலன்ஜ் பண்ணி படிச்சு மார்க் வாங்கி, என்ட்ரன்ஸ்ல நல்ல க்ரேடோட அவர் படிச்ச காலேஜ்லயே சேந்தோமே...நியாபகம் இருக்கா..."
திடீரென நினைவுக்கு வந்தது போல..."டேய்... உனக்கு நியாபகம் இருக்கா...மீராக்கா வருண் அத்தானை கல்யாணம் பண்ணிக்கறேன்னு திடீர்னு சொல்லி எவ்ளோ நம்மள சுத்தல்ல விட்டாங்க..
"அவங்க கல்யாணம் நல்லபடியா முடியறவரைக்கும் நாம எல்லாரும் எவ்ளோ டென்ஷன்ல இருந்தோம்...."
"கல்யாணம் முடிச்ச பிறகு தானே எல்லாருமே ரிலீப் ஆகி சந்தோஷமா சிரிச்சோம்.."
"வருண் அத்தான் கல்யாணத்துக்கு வந்த அந்த வந்தனா நம்மளை எல்லாம் எப்டி முறைச்சு பாத்தா...இப்ப அதை நினைச்சா கூட மறக்க முடியல டா..." என சொல்லியும் அவன் அசையவில்லை.
"அபிமன்யு... தம்பி...நீ முதல்ல பிறந்ததால நீ தம்பி..நான் உன்னை அப்பறம் பிறந்ததால தான் அக்கானு என்னை அக்கானு கூப்பிட்டு வெறுப்பேத்துவியே..அட்லீஸ்ட் அதை சொல்றத்துக்காவது கண் திறடா..ப்ளீஸ் டா.."
இது எதிலும் கண் திறக்காததால் வேறு வழி தெரியாமல்..."அபிமன்யு...உனக்கு யாரு..மனு னு பேர் வெச்சா...நியாபகம் இருக்கா.."என்றவள்..
"அவளால தானே நாங்களும் உன்னை மனுனு கூப்பிட ஆரம்பிச்சோம்..வெளில யாரும் உன்னை மனுனு கூப்பிட கூடாதுனு அவ போட்ட கண்டிஷனை நாம எந்த மறுப்பும் சொல்லாம கேட்டோமே..."
"நேத்திக்கு வரைக்கும் அவ எங்க இருக்கானு தெரியாம...என்ன காரணத்துனால இந்த மூணு வருஷமா தன்னை மறைச்சுட்டு இருந்தாளேடா.."
"அவ இந்த ஊர்ல தான் இருக்கானு கண்டு பிடிச்சாச்சு..டா..அவ கிட்ட ஏன் நம்மளை எல்லாம் விட்டுட்டு வந்தானு கேட்டு சண்டை போடணும் டா.."
"நாம பரவால்லடா...எதுக்காக அவ சத்யா அண்ணாவை விட்டுட்டு வந்தானு எனக்கு தெரிஞ்சுட்டே ஆகணும் டா..அதனால தானே உன் கிட்ட பேசறதை நாங்க நிறுத்த வேண்டியதா போச்சு.." என சொல்லி கொண்டு இருக்கும் போதே..
"அப்ப உனக்கு நான் யாருமே இல்லையா...கா.."என வேதனையான குரல் கேட்டு தன்னை மறந்து கவுதமை திரும்பி பார்க்க..அவனும் மெல்ல அபிமன்யுவின் படுக்கைக்கு அருகில் வந்தான். (தொடரும்)

Author: Subha Balaji
Article Title: சுயம்பு 18
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.