அத்தியாயம் 6
"பாலா!" என்று சித்தார்த் அழைக்கும் வரை தன் எண்ணங்களில் சுழன்று அமர்ந்திருந்தாள் கவிபாலா.
இருவரும் கஃபே வந்து பத்து நிமிடங்கள் தாண்டிவிட்டது. அவளுக்கு முன்னவே வந்து அமர்ந்து அவள் வரவை அத்தனை கூர்மையாய் கவனித்தவன் முன் இருக்கையில் கவிபாலா அமர, அப்போதும் அதே பார்வை தான் சித்தார்த்திடம்.
அதை கவனிக்கவே இல்லை அவள். நினைவு முழுதும் என்ன பேச? எப்படி அவனிடம் கூறி தன்னை புரிய வைக்க? இல்லை புரிந்து தான் கொள்வானா? இது சரி வருமா? தன் குடும்ப நிலை அவனின் நிலை. என்பதோடு அவன் அன்னை அமலியின் என்னமும் என தடுமாறி அமர்ந்திருந்தவள் எண்ணங்களுக்கு அவள் முகமும் அசைவுகளை கொடுக்க, பத்து நிமிடங்கள் பொறுத்துப் பார்த்தவன் அழைத்துவிட்டான்.
"ஹ்ம்!" என்ற கவிபாலா இப்பொழுது தான் அவனிடம் தன் பார்வையை கொண்டு வந்தாள்.
"என்ன முடிவு பண்ணி அதை சொல்ல இவ்வளவு தயக்கம்?" சித்தார்த் கேட்க,
"முடிவுக்கு வர முடியாம இருக்கேன்!" என கூறியவள்,
"நீங்க எதுக்காக இவ்வளவு தூரம் என்னை தேடி வரணும்? நான் தான் அன்னைக்கே உங்ககிட்ட சொல்லிட்டேனே?" மனதின் எண்ணத்தை எல்லாம் மறைத்து கவிபாலா சொல்ல,
"நானும் தான் சொன்னேன் கல்யாணம் பண்ணிக்கோன்னு பண்ணிக்கிட்டியா என்ன?" பதில் உடனே வந்தது அவனிடம் இருந்து.
"எப்படி? யாரை?" என கோபமாய் கேட்டவள்,
"வர்றவன் எல்லாம் முதல்ல துக்கம் விசாரிக்கிறானாம் அம்மாகிட்ட. முதல் கல்யாணம் நடந்தது ஏன் எப்படினு!" என கோபமாய் அவள் சொல்ல,
"என்னால தான் கல்யாணம் ஆகலனு சொல்ற ரைட்?" என்றான் சித்தார்த்.
"ப்ச்! அப்படி இல்ல! ஆனா..."
"அது தானே உண்மை பாலா! ஆனா அது கொஞ்சமும் எதிர்பாராம நடந்தது"
"இப்ப இதை சொல்ல தான் வந்திங்களா?" சட்டென கோபம் கொண்டு கவிபாலா கேட்க,
"நோ வே! கொஞ்ச நேரம் ஃபிரான்கா பேசலாம் பாலா. எனக்கு சில விஷயங்கள் உன்கிட்ட பேசணும் சொல்லணும். நான் ரெண்டு பேர் பக்கமும் யோசிச்சு தான் இந்த முடிவுக்கு வந்தேனே!"
"என் பக்கம் யோசிக்க உங்களுக்கு என்ன இருக்கு? உங்க அம்மா உங்களுக்கு பொண்ணு பாக்குறதா சொல்லிருக்காங்க. கல்யாணம் பண்ணிட்டு போக வேண்டியது தானே?" என்றவள்,
"அப்பவாச்சும் நானும் நிம்மதியா இருந்துப்பேன்!" என முணுமுணுக்க, அவள் முதல் செய்தியில்,
"என்ன சொன்ன?" என்றவன் புருவங்கள் சுருங்கியது.
"அம்மா பேசினாங்களா உன்கிட்ட?" சித்தார்த் கேட்க,
"அம்மாகிட்ட சொல்லிருக்காங்க!" என்றாள் மெதுவாய்.
"ஓஹ்!" என்றவனுக்கு அன்னையை புரியுமே முதலில் இருந்தே.
"சரி விடு! அதை நான் பார்த்துக்குறேன்! நான் சொல்ல வர்றதை முதல்ல கேளு பாலா!" என்றவன்,
"என்னோட டெசிஷன் முழுக்க நான் முடிவு பண்ணினது. அதுல நான் உன்னை பாவப்படவோ இல்ல வேறு வழி இல்லாமலோ இல்ல பிடிக்காமலோன்னு எதுவும் நீ யோசிக்க கூடாது!"
"அப்படினா?"
"அப்படினா என்ன? அம்மா பொண்ணு பாக்குறதா சொன்னாங்க. கல்யாணம் பண்ணிக்கணும். கல்யாணம் பண்ணிட்டா அடுத்து லைஃப் பார்ட்னர். அவங்களோட தான் நம்ம லைஃப் முழுக்க. சேர்ந்து தான் லைஃப் லீட் பண்ணனும்!" என்றவன் அவளை கவனிக்கவும் மறக்கவில்லை.
"நீயும் கல்யாணம் பண்ணிக்கணும் தானே? அதான்! நாம கல்யாணம் பண்ணிக்கலாம்!" என்றவனை பார்த்தவள் பார்வை அவனுக்கு விளங்கவில்லை.
"இப்ப நான் சொன்ன டிஸ்க்ளைமர் எல்லாம் உனக்கு நியாபகம் இருக்குல்ல? அதுக்காக எனக்கு பொண்ணு கிடைக்கலைனும் நீ நினைச்சுக்காத!" என்றவன் சொல்லில் அவள் முறைக்க,
"தோணுச்சு! அதான் கிளம்பி வந்துட்டேன்! இவ்வளவு நாளும் அம்மாகிட்ட உனக்கு கல்யாணம் நடந்த பின்னாடி கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொல்லிட்டு இருந்தேன். இப்ப வரும் போது உன்னை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்! போன டைம் நான் வந்தப்ப நீ பேசினல்ல அப்பவே ஒரு சின்ன கிரேஸ் உன் மேலன்னு வச்சுக்கோயேன். என்னவோ உன் வாய்ஸ் எனக்கு கேட்டுட்டே இருந்துச்சு. ரொம்ப திங்க் பண்ணினேன் முடிவெடுக்க. ஆனா இது நான் மட்டும் முடிவெடுக்குற விஷயம் இல்லையே!" என்றெல்லாம் சித்தார்த் பேச, அத்தனை அதிர்ச்சி, ஆச்சர்யம், திடுக்கிடல் கவிபாலாவிடம்.
"கோபமா கத்துவனு எக்ஸ்பெக்ட் பண்ணினேன். இது என்ன இவ்வளவு அமைதி! இதை நான் எப்படி எடுத்துக்க?" சித்தார்த் கேட்டவன்,
"அன்னைக்கு அந்த கோவில் இன்சிடென்ட்க்கு அப்புறம் நான் எவ்ளோ டெப்ரெஸ் ஆனேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும் பாலா. அக்சுவல்லி நான் ஷூட்டிங் எல்லாம் போனதே இல்ல. அது தான் என்னோட ஃபர்ஸ்ட் ஷூட்டிங். ஆனா ஒரு கான்ஃபிடன்ட்! என்னால முடியாததுன்னு எதுவும் இருக்க கூடாதுன்னு. அதனால தான் அம்மா கேட்கவும் அந்த ஷூட்டிங்க்கு சம்மதிச்சேன்! அந்த சீன்! ஓம்ஞ்!" என்றவன் தலையை உலுக்கிக் கொண்டான்.
"உங்களுக்கு பொண்ணு பாக்குறதா நேத்து தான் அம்மாக்கு கால் வந்திருக்கு" அழுத்தமாய் நிறுத்தி கூறினாள் கவிபாலா.
"அது என்னோட ப்ரோப்லேம். நான் பாத்துக்குறேன்! நான் இப்ப கேட்டதுக்கு பதில் சொல்லு. உன்னோட பதில் எனக்கு ரொம்பவே இம்போர்ட்டண்ட்! அதுவும் மேரேஜ் ரொம்ப பெரிய விஷயம் எனக்கு! எனக்கு மேரேஜ் பண்ணி லவ் பண்ண ரொம்ப ரொம்ப ஆசை!" என்றெல்லாம் பேச, கொஞ்சம் கொஞ்சமாய் உள்ளத்தில் உணர்வதை முகத்தில் காண்பிக்க ஆரம்பித்தாள் கவிபாலா.
"சொல்லு பாலா! என்னால உனக்கு வர்ற மாப்பிள்ளைஸ் எல்லாம் உன்னை வேண்டாம்னு சொன்னதா உங்க அம்மா சொன்னாங்க! என்னாலன்றதை விட எனக்காகனு கூட இருக்கலாமே அது!"
"ரொம்ப பேசுறீங்க!" கவிபாலா சொல்ல,
"நீ பேசலையே! உன்னை பேச வைக்க தான்!" என்று சித்தார்த் புன்னகையோடு சொல்ல,
"நானும் கொஞ்சம் வெளிப்படையா சொல்லணும் நினைக்குறேன்! இது சரி வருமா இல்லையானு நீங்க தான் சொல்லணும்!" என்றவள் சொல்லுக்கு பேசு என அவன் தலையசைக்க,
"அன்னைக்கு தான் என்னோட பர்த்டே!" என்று கவிபாலா சொல்லவுமே அவன் முகம் மாற, கண்களை மூடிக் கொண்டான்.
கல்லூரி பயிலும் வயதில் பிறந்த நாளன்று எத்தனை மகிழ்ச்சியாய் இருந்திருப்பாள் என்ற எண்ணம் தான் அவனுள்.
"நிஜமா முதல்ல எனக்கு அங்க நடந்தது எல்லாம் புரியவே இல்லை. புரியவும் நான் நானா இல்ல. அது எவ்வளவு பெரிய விஷயம்னு புரிஞ்சிக்கவே எனக்கு கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆச்சு. முதல்ல கல்யாணம்னு வரன் வரவும் அது தடங்கலாகி நிக்கவும் அப்பா அம்மா ரொம்ப வருத்தப்பட்டாங்க. எனக்கு அது கூட புரியலை. ஏன்னா கல்யாணத்தை அந்த வயசுல நான் எதிர்பார்க்கவும் இல்ல" என்று கவிபாலா பேச, அவள் வார்த்தைகளோடு அவள் கண்களிலும் கவனம் நின்றது சித்தார்த்திற்கு.
"இங்க நான் ஜாயின் பண்ணப்ப கூட அம்மா நீங்க பார்க்க வந்தது பேசினதுன்னு என்கிட்ட சொல்லும் போது எனக்கு பயம் தான் வந்துச்சு.
எதுல இருந்தோ தப்பிக்குற மாதிரி பயந்து தான் இங்க வந்து சேர்ந்தேன். ஆனா இப்ப கொஞ்ச நாளா எனக்கு என்னென்னவோ தாட்ஸ்! அது சரியானு இப்பவும் எனக்கு புரியல!" என்றவளை கண்கள் சுருங்க, அவள் கூறுவதை புரிந்து கொள்ள முயன்றுப் பார்த்தான் சித்தார்த்.
"எனக்கு உங்களை.... பிடிச்சிருந்தது." என்றதும் அவன் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி ஆச்சர்யமாய் பார்க்க,
"ஆனா அது எனக்கு லேட்டா புரிஞ்சதா இல்ல நானா..." என்றவள் அவன் பார்வையில் தடுமாற,
"பரவால்ல சொல்லு!" என்றான் சின்ன புன்னகையோடு.
"எனக்கும் சொல்ல தெரியல! ஆனா ஆறு மாசம் முன்ன வரை கல்யாணமெல்லாம் நான் யோசிக்கவே இல்ல. இல்ல! கல்யாணம் பண்ணியே ஆகணும்னு அம்மா சொன்ன அப்புறம்.... எனக்கு வேற யாரையும்... பார்க்கவோ... நினைக்காவோ முடியல!" என கவிபாலா சொல்லிவிட, ஒரு முழுமையான புன்னகை சித்தார்த்திடம்.
"அதுக்காக காதல்னு எல்லாம் இல்ல!" அவன் முகம் பார்த்து சிறிதாய் முறைத்து அவள் சொல்ல, சன்னமான புன்னகை அதிகமானது அவனிடம்.
"கிட்டத்தட்ட என்னை மாதிரி தான் நீயும் நினைச்சிருக்க இல்ல?" என்றான் அதே புன்னகையோடு.
"ஆனா! இது எப்படி சரி வரும்? இதனால என்னென்ன பேச்சு வரும்? எல்லாரும் எப்படி நினைப்பாங்க?" சட்டென வாடிய முகத்துடன் அவள் கூற,
"ஹப்பா! என்னைவிட அதிகமா யோசிச்சி வச்சிருக்க இல்ல? குட் குட்!" என்றவன்,
"ஆனா ஏன் சரி வராது பாலா? யார் பேச்சுக்கு பயப்படுற? இவ்வளவு நாளும் தெரியாம நடந்த ஒரு விஷயத்துக்காக உன்னையும் என்னையும் சேர்த்து பேசினவங்களை நினச்சா? அவங்களோட நினைப்புக்கு உன்னோட முக்கியத்துவம் அவ்வளவா?" என சித்தார்த் கேட்க, பதிலில்லை அவளிடம்.
இல்லை என்று சொல்லிவிட முடியாதே! சுற்றி இருப்பவர்களுடன் சேர்ந்து தானே இந்த வாழ்க்கையை பயணிக்க வேண்டியுள்ளது?
"ஓகே! அதெல்லாம் ஒரு பிராப்லம்னு என்னால எடுத்துக்க முடியாது. நம்ம பிரச்சனைனு நினைக்குறவங்க அடுத்து ஒருத்தன் கீழ விழுந்தா அவனை பார்த்து பேச ஆரம்பிச்சுடுவாங்க! நான் ஆபீஸ் ஆரம்பிச்ச ஸ்டார்டிங்ல கடந்து வந்த பாதையை நீ இப்ப நினைச்சுட்டு இருக்க. ஆனா அதுக்கப்புறம் தான் நான் முன்னேற முடிஞ்சது. அப்ப தெளிவா எடுக்க முடியாத முடிவுகளை இப்படி எடுக்க முடியுது. நீயும் கடந்து வரணும். வந்துடலாம். நான் தான் கூட இருக்கேனே!" என்றவன் புன்னகை அவளையும் புன்னகைக்க வைத்தது.
"ஹ்ம்! நெக்ஸ்ட்?" சித்தார்த் கேட்க, சில நொடிகள் தயங்கியவள்,
"அவங்க... உங்க அம்மா... அவங்களுக்கு என்னையும் என் பேமிலியையும் பிடிக்கலை. அதை நீங்க இல்லைனும் சொல்ல முடியாது!" என்று கூற,
எல்லாரையும் எல்லாருக்கும் பிடிக்கணுமா என்ன?" என்றவனைப் பார்த்தவள்,
"ஆனா அது கல்யாணத்துல சரி வராது! குடும்பதுக்குள்ள ஒத்து வரலைனா... எப்படி?" என்றாள்.
"என்ன பண்ண சொல்ற?"
"நிஜமா தெரில! ஆனா அவங்களுக்கு பிடிக்காம..." என்றவள் தலையசைக்க,
"அதுக்காக அவங்க சம்மதிச்சா தான் என் கூட வருவேன்னு சொல்றியா?" என்றவனை புரியாமல் பார்த்தவள்,
"எங்க?" என்று கேட்க,
"வேறெங்க? நம்ம வீட்டுக்கு தான்!" என்றான்.
"ஸீ! கல்யாணம் முடிஞ்சிடுச்சு உன்னை அழைச்சிட்டு போக வந்ததா தான் ஸ்ரீதர்கிட்டயே சொல்லிருக்கேன். இப்ப நீ என்னோட வரலைனா அவன் என்னை என்ன நினைச்சுப்பான்?" என்றும் கேட்க,
"அதுக்காக? இப்பவே இப்படியேவா?"
"ஆமா! இப்பவே இப்படியே தான்!" என்றவனை கண் சிமிட்டாமல் அவள் பார்க்க, ஒற்றை கண்ணை சிமிட்டியவன் பார்வையில் இவள் விழிகள் படபடத்தது.
தொடரும்..

Author: Kota
Article Title: கூழாங்கல் கூவுகின்ற கானம்! 6
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.