அத்தியாயம் 5
சித்தார்த் அலுவலகம் திறந்து ஆறு மாதங்கள் ஓடி இருந்தது. பெரிய மாற்றங்கள் உடனே வந்துவிடுவதில்லை என்பதை போல சிறிது சிறிதான பயணம் நகர்ந்து கொண்டிருந்தது சித்தார்த் வேலையில்.
அப்போது தான் திருமணம் பற்றி பேச்சை எடுத்தார் மகனிடம் அமலி. சட்டென்று அவனும் அறியாமல் அந்த நிகழ்வு தான் கண்முன் தோன்றியது சித்தார்த்திற்கு.
"ஆபீஸ் மெதுவாவே மூவ்ஆன் ஆகட்டும். இப்ப தான் கல்யாணம் பண்ற வயசும். இன்னும் நாளை கடத்தாத!" அமலி கூற,
"ம்மா! அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகி இருக்குமா?" என்றான் சித்தார்த்.
"எந்த பொண்ணுக்கு?" என்றவர் மறந்தே போயிருந்தார் அந்த நிகழ்வை.
"அதான் ம்மா! கோவில்ல ஷூட்டிங்ல பார்த்த பொண்ணு!" என்றவனை அதிர்ந்து பார்த்தவர்,
"சித்து! அதெல்லாம் நமக்கு எதுக்கு? ஏன் கேட்குற நீ?" என்றார்.
"தெரில! தோணுச்சு!" என்றவனை அமலி திட்டி இருந்தார். அடுத்த ஒரு வாரத்தில் அவனே சென்று அவள்முன் நின்றிருந்தான்.
கண்கள் அகல தன்னைப் பார்த்தவளை கண்டதும் கவிபாலா தன்னை நியாபகம் வைத்திருக்கிறாள் என புரிந்தது சித்தார்த்திற்கு.
அவள் வீட்டருகேயே நின்றிருந்தான். வீட்டிற்கு செல்லவா வேண்டாமா என குழப்பத்தில் நின்றவன் தான் கல்லூரி பேருந்தில் இருந்து இறங்கி வந்தவளைப் பார்த்திருந்தான்.
அன்று கல்லூரி இறுதி நாள். ஒரு மாதத்திற்கு முன்பே பெங்களூரில் இருக்கும் கம்பெனிக்கு அவள் கல்லூரி திறனாய்வு முகாமில் தேர்வாகி இருக்க, அனுப்பமாட்டேன் என கூறிக் கொண்டு இருந்தார் விஜயா.
"போவேன்!" என்று கவிபாலாவும் அடம்பிடித்து நின்றிருந்தாள்.
இப்போது சித்தார்த்தை தன் வீட்டின் முன் பார்த்ததும் இன்னும் பயம். போயே ஆக வேண்டும் என முடிவெடுத்தே விட்டாள்.
எத்தனைப் பெயர் இவனால் தனக்கு என்ற எண்ணம் தான் நெஞ்சில் ஓடிக் கொண்டிருந்தது.
சுற்றி உள்ளவர்கள் பேச்சுக்கு ஆளாவோம் என அப்போது அவள் நினைக்கவே இல்லை. தாய்மாமா மகள் திருமணத்தில் துக்கம் விசாரிப்பதை போல அத்தனை பேச்சுக்கள். எப்படி இதெல்லாம் பரவுகிறதோ என்பதோடு எப்படிப்பட்ட மனிதர்கள் என சிந்திக்கவும் வைத்திருந்தது.
இரண்டு முறை பெண்ணை பிடித்திருக்கிறது என வீடு வரை வந்தும் அது திருமணம் வரை செல்லவில்லை. காரணம் கோவிலில் நடந்ததை யாரோ சொல்லியதாய் சொல்லி 'நிஜமாவே அது தெரியாம நடந்த மேரேஜ் தானா?' என்று கேட்டிருக்க,
"இப்படி சந்தேகப்படுறவன் என் பொண்ணுக்கு வேண்டாம்" என்றுவிட்டார் விஜயா.
"ஒரு நிமிஷம்!" என அவளை சித்தார்த் நிறுத்தப் பார்க்க, நிற்காமல் வேகவேகமாய் நடந்தாள் கவிபாலா.
"ஏங்க!" என அவன் அழைக்கும் நேரம் விஜயாவும் வெளியே வந்திருக்க, பார்த்தவருக்கு அத்தனை கோபம்.
கோபத்தின் வார்த்தைகளோடு அவர் அவனை நெருங்கியே விட, "ஐம் சாரி! நீங்க தப்பா நினைச்சுட்டீங்க நினைக்குறேன்!" என்றவன்,
"அவங்களுக்கு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணி வையுங்க ப்ளீஸ்! என்னவோ ஒரு கில்ட்டாவே இருக்கு எனக்கு! அதான் பார்க்க வந்தேன்! அவங்க மேரேஜ் நல்லபடியா முடிஞ்சா ஐ பீல் குட்!" என அவருக்கு முன் பேசி சென்றுவிட்டான்.
அடுத்து விஜயாவை அவ்வபோது அவன் பார்த்து வந்தது எல்லாம் பெங்களூருக்கு தகவலாய் வந்து சேரும் தாய் மூலம்.
திருமணம் என கவிபாலாவிற்கு வரன் வருவதும் அது நடந்த நிகழ்வோடு சேர்த்து தடைபடுவதும் என கேட்டு அத்தனை வருந்தினான். கூடவே கவிபாலாவும் திருமணம் என்றாலே வேண்டாம் என்று சொல்ல ஆரம்பித்து இருந்தாள்.
"நல்ல பையன் தான்! என்ன பண்ண! நம்ம விதி!" என சொல்லும் அளவுக்கு இருந்தது விஜயா மாற்றம்.
"நீ கல்யாணம் பண்ணின பின்னாடி தான் அந்த பையன் கல்யாணம் பண்ணிக்குமாம்!" என்றார் விஜயா மகளிடம்.
அடுத்து ஒன்றரை வருடங்களும் இப்படி தான் ஓடி இருந்தது. அந்த பொண்ணு கல்யாணம் பண்ணாம நான் பண்ண மாட்டேன்! ஆபீஸ் ஒர்க் ரொம்ப டைட்டா போய்ட்டு இருக்கு. இப்ப எதுவும் பேச முடியாது!" இப்படி தான் அமலியிடம் பதில் கூறினான் சித்தார்த்.
அமலிக்குமே தெரிந்தது அவன் செய்வது. தடுத்தாலும் மகன் கேட்க போவதில்லையே! அவன் குற்றஉணர்ச்சி புரிந்தாலும் அமைதியாய் இல்லாமல் கவிபாலா பெங்களூரில் இருந்து வந்திருந்த நேரம் சென்று "உங்களுக்கும் எங்களுக்கும் செட் ஆகாது. அவன் ஏதோ கில்டியா பீல் பண்ணிட்டு சுத்துறான்!" என்று கூறி சென்றிருந்தார்.
கவிபாலா பெங்களூரில் வேலைக்கு சேர்ந்து ஒரு வருடம் ஆகி இருந்த நேரம். விஜயாவிடம் சொல்லிவிட்டு தான் சென்றிருந்தான் கவிபாலாவை காண பெங்களூருக்கு.
"எதுக்காக சார் இப்படி பண்றீங்க? உங்க வேலையை பார்த்துட்டு போங்க ப்ளீஸ்!" என விடுதி முன் வந்து நின்றவனை கவிபாலா பேச,
"உன்னை தொந்தரவு பண்ண எல்லாம் வர்ல பாலா! ஏன் கல்யாணம் வேண்டாம்னு சொல்ற? நீ கல்யாணம் பண்ணிக்கோ! உன் அம்மா அப்பா ரொம்ப வருத்தப்படுறாங்க! எனக்குமே கவலையா இருக்கு!" என்று கூற,
"அது என் விருப்பம். நீங்க யாரு?" என்று நேராய் கேட்கும் அளவுக்கு இருந்தது கவிபாலாவின் பேச்சு. அவனிடம் முதன்முதலில் பேசியதுமே அப்போது தான்.
"நான் யாரோ தான்! ஆனா எவ்வளவு நாள் இப்படி இருக்க போற? சீக்கிரம் மேரேஜ் பண்ணிக்கோ! நீ நல்லாருக்கணும். என்னால தானோ இதெல்லாம்னு எனக்கு தோணிட்டே தான் இருக்கும் அதுவரை!" என்று கூறிவிட்டு சென்றிருந்தான்.
இடையில் இத்தனை நாட்களும் நகர நகர கவிபாலா சிந்தனையில் பல மாற்றங்கள். அன்று வந்து பேசி சென்றவனை மனம் அவ்வப்போது நினைத்துக் கொண்டே இருந்தது.
இதற்கு இடையில் விஜயா அழைத்து சித்தார்த்திற்கு திருமணம். பெண் தேட இருக்கிறாராம் அவர் அன்னை என்றெல்லாம் பேச, மனம் முற்றிலும் ஏனென்றே தெரியாமல் குமுறல் ஆரம்பித்துவிட்டது கவிபாலாவிற்கு.
அதன்பின் இதோ இப்போது தான் வந்திருக்கிறான். அதுவும் இந்த முறை நேராய் தன்னிடம் வராமல் இது என்ன விளையாட்டு என்று தான் சிந்தித்தாள் கவிபாலாவும்.
அவன் பேச வந்து மூன்று நான்கு முறையில் ஒருமுறை மட்டுமே நின்று அவனிடம் பேசி இருக்கிறாள். மற்றபடி அவன் பேச்சுக்கள் எல்லாம் விஜயாவிடம் தான்.
அதில் தான் இவள் மனம் மாறியதோ என்னவோ! ஆனால் அவள் நேராய் அவனிடம் கோபமாய் மட்டும் பேசியதிலேயே கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்துவிட்டான் சித்தார்த்.
கடந்த ஆறு மாதங்களில் அதீத சிந்தனைகளுக்கு பின் தான் கூறினான் அன்னையிடம் சித்தார்த்.
"இனியும் நீ சொல்லுவன்னு நான் பார்த்துட்டு இருக்க முடியாது சித்து! நான் பொண்ணு பார்த்து சொல்றேன்! நீ கல்யாணம் பண்ணி தான் ஆகணும்!" என அமலி கூற,
"கவிபாலாவையே கல்யாணம் பண்ணிகிட்டா ஓகேனு தோணுது ம்மா! அது தான் சரியும்!" என்றான் உடனேயே சித்தார்த்தும்.
"இப்படி வந்து நிற்பன்னு நினைச்சேன்! ஏன் டா இப்படி பண்ற? இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரியா வராது சித்து!" என எவ்வளவோ சொல்லியும் சித்தார்த் கேட்கவில்லை.
"நான் அவகிட்ட பேசிட்டு சொல்றேன்!" என கிளம்பி வந்துவிட்டான்.
மகனிடம் கூறாமல் தான் விஜயாவிற்கு அழைத்து அமலி சித்தார்த்திற்கு பெண் பார்க்க இருப்பதாயும் கூறியது.
இருவருமே மனம்விட்டு பேசினால் போதும் என்ற நிலை தான். ஆனாலும் கவிபாலாவிற்கு அப்படி முடிவெடுத்து பேசிவிட முடியவில்லை.
அமலியின் பேச்சுக்களில் தெளிவாய் புரிந்தது அவருக்கு தன்னை பிடிக்கவில்லை என. ஆனாலும் மனம் முரண்பட்டு நிற்க, இப்போது இவன் வருகை எதற்கு என தெரியாமலும் என எண்ணி எண்ணி இரவெல்லாம் உறக்கம் பறிபோக அடுத்த நாள் அலுவலகம் வந்து சேர்ந்தாள்.
"என்ன கேர்ள் முகமெல்லாம் பஞ்சு பஞ்சுன்னு வீங்கினதாட்டம்? தூக்கமில்லயோ?" அபிநயா கேட்க,
"ப்ச் வேலையை பாரு அபி!" என்றவள் கண்கள் அலுவலகத்தை முழுதாய் சுற்றி வந்தது.
"இன்னும் வர்ல பாதி பேர்! நீ எதிர்பார்க்குறவரும் வந்த மாதிரி தெரில!" அபிநயா சொல்ல,
"ஹ்ம்!"
"இன்னைக்கு அந்த யூகேஜி பார்ட்டி வந்தா பேசி பைனல் பண்ணிடு! உனனை இப்படி வச்சுட்டு என் வேலையும் ஓடாது போல!" என்றாள் அபிநயா.
ஸ்ரீதர் அலுவலகத்தினுள் நுழைய, "பாஸ் வர்றாரு டி!" அபிநயா கூற,
"ம்ம்!" என்ற கவிபாலா திரும்பவில்லை.
"கூடவே யூகேஜி பார்ட்டி வருது பாரு!" என்றதும் சட்டென அவள் திரும்ப, அவளைப் பார்த்தபடி தான் வந்திருந்தான் சித்தார்த்.
ஸ்ரீதர் அறைக்குள் அவனும் செல்ல, நாகத்தை கடிததபடி டென்ஷனாய் அமர்ந்துவிட்டாள் கவிபாலா.
"என்ன பண்ணலாம்?" அபிநயா கேட்க, அங்கும் இங்கும் விழித்த கவிபாலா,
"பெர்மிஸ்ஸன் கேட்டு பேசிடவா?" என்று கேட்க,
"என்ன ஒரு அவசரம்!" என்று கிண்டல் செய்தாலும் கவிபாலா நிலை புரியாமல் இல்லை அபிநயாவிற்கு.
"ஓகே பேசிடு! அதான் பெட்டர்!" அவள் சொல்ல,
"கவி! சார் கூப்பிடறாங்க!" என்று சொல்லி சென்றாள் ஒரு பெண்.
"யூகேஜி உன்னை விட ஃபாஸ்ட் போல! ஓடு ஓடு!" என்று சொல்ல, கவிபாலாவும் எழுந்து சென்றாள்.
"இப்ப என்ன பண்ணனும் நான்?" இருவரையும் வைத்து ஸ்ரீதர் கேட்க,
"சார்?" என புரியாமல் விழித்தாள் கவிபாலா.
"நீ ஒரு ஹால்ப் டே லீவ் குடு போதும்!" சித்தார்த் சொல்ல, கவிபாலா அவனை முறைத்தாள்.
"ஆனா இங்க தான் கஃபேல இருப்போம். வெளில போகமாட்டோம்!" என அதையும் சேர்த்து சொல்ல,
"வேலைக்கு உலை வச்சுட்டு தான் போவேன்னு நிக்குற!" என்ற ஸ்ரீதர்,
"கவிபாலா! போய் பேசிட்டு வாங்க! அப்ப தான் நீங்களும் ஃபிரீயா இருக்க முடியும்!" என்றான் ஸ்ரீதர்.
"வேலை பார்க்க வந்த ஊர்ல வெளில பார்த்து பேசின்னு யார் யாரோ உன்னையும் என்னையும் தப்பா பார்த்து பேசி.. எதுக்கு? அதான் ஸ்ரீதர்கிட்ட சொல்லி கேட்டேன்!" என்று காரணமும் கூறினான் சித்தார்த்.
"நீ ரொம்ப நல்லவன் தான்! தயவு செஞ்சு இடத்தை காலி பண்ணுங்க!" என்று ஸ்ரீதர் சொல்லவும் கவிபாலா அபிநயாவிடம் சொல்லிக் கொண்டு கஃபே சென்றாள்.
இரண்டு காபியுடன் அவள் வருகைக்காக காத்திருந்தான் சித்தார்த்.
ஏற்றுக் கொள்வாளா தன்னோடு வருவாளா எதுவும் தெரியவில்லை. ஆனால் அழைத்து செல்லாமல் அவனும் செல்வதாய் இல்லை. இந்த மூன்று வருடங்களுக்கும் சேர்த்து அவன் பார்வை இன்று அழுத்தமும் அதீதமும் கலந்து அவளில் விழுந்தது.
இனி அவள் முடிவை கேட்பதை விட தன் முடிவை கூறிவிட தான் காத்து நின்றான் அவளிடம் பார்வையை வைத்து.
தொடரும்..

Last edited:
Author: Kota
Article Title: கூழாங்கல் கூவுகின்ற கானம்! 5
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.