• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

கூழாங்கல் கூவுகின்ற கானம்! 3

Kota

New member
Joined
Mar 27, 2025
Messages
7
அத்தியாயம் 3

அலைபேசியை பார்த்தபடி சித்தார்த் சாப்பிட்டுக் கொண்டிருக்க, ஸ்ரீதர் அன்னை வத்சலா அவனுக்கு பரிமாறிக் கொண்டிருந்தார்.

"போதும் ஆண்ட்டி!" சித்தார்த் சொல்லவும் ஸ்ரீதரும் சாப்பிட அமர்ந்தான்.

"இவன் எப்ப டா வந்தான்? கேட்ட எதுக்கும் பதில் சொல்லாம இருக்கான்?" வத்சலா மகனிடம் கேட்க,

"எனக்கே தெரியல ம்மா! ஆபீஸ் கஃபேல போய் இருந்தான் மதியமா! என்னனு சொல்லி ஆபீஸ்குள்ள வந்தான்னு கூட தெரியல!" ஸ்ரீதர் சொல்ல,

"இன்டெர்வியூ வந்தேன் மேன்!" என்றவனை நம்பவே இல்லை ஸ்ரீதர். நம்பவும் முடியாதே! அவனாவது இன்டெர்வியூவில் கலந்து கொள்வதாவது!

"ஏன்? உன் ஆபீஸ்ல வேலை பார்த்து போராகிடுச்சா? இல்ல சென்னை போராகிடுச்சா?" வத்சலா கேட்க,

"ஒரு சேன்ஞ் வேணுமே ஆண்ட்டி!"

"அது சரி!" என வத்சலாவிற்கு அவனை துருவி துருவி கேட்கவும் விருப்பம் இல்லை.

"என்னவோ ப்ளன் ம்மா! ஆனா புரியல!" என்ற ஸ்ரீதர்,

"ஆமா அபிகிட்ட என்ன பேசிட்டு இருந்த?" என்று கேட்க,

"ஹூ ஐஸ் அபி?" என்றவனை முறைத்தான் ஸ்ரீதர்.

"டேய்! அநியாயம் பண்ற! பொண்ணுங்ககிட்ட நீ பேசிட்டு நின்னதே எனக்கு அதிசயமா இருக்கு. அதுவும் அவ்ளோ கேஸுவலா!" ஸ்ரீதர் கேட்க,

"ப்ச்! பொண்ணுங்கன்னு பொதுவா சொல்லாத! நான் பேசினது என் வைஃப்கிட்ட!" என்றதுமே இருவரும் அதிர்ந்து பார்க்க,

"அபி?" என்று அதிர்ச்சி மாறாமல் கேட்டான் ஸ்ரீதர்.

"அபி?" என புருவம் சுருக்கிய சித்தார்த்தும்,

"நோ நோ! பாலா!" என்று சொல்ல,

"பாலாவா?" என புரியாமல் விழித்து,

"ப்ச்! கவிபாலாவா?" என்றான் ஸ்ரீதர்.

"அபி தெரியுது பாலா தெரியலயா?" நக்கல் பார்வையோடு சித்தார்த் கேட்க,

"என்ன டா பேசுறிங்க? கவிபாலா யாரு? வைஃப்னா? உனக்கு கல்யாணம் ஆச்சா? ஸ்ரீ! என்ன சொல்றான் இவன்?" என வத்சலா கேட்க,

"உளறுறான் ம்மா! கவிபாலா ரெண்டு வருஷமா இங்க என் கூட தான் ஆபீஸ்ல வொர்க் பன்றாங்க!" என்றான் ஸ்ரீதர்.

"எனக்கு கல்யாணமாகி மூணு வருஷமாச்சு!" கைகளை கழுவியபடி கூறினான் சித்தார்த்.

"டேய்! ஆர் யூ சீரியஸ்?"

"ஐம் வெரி சீரியஸ் மேன்! அவளை கூட்டிட்டு போக தான் வந்தேன்!"

"அப்போ செர்டிபிகேட்?"

"அவளுக்கு காட்ட தான்! என்னோட குவாலிஃபிகேஷன்ஸ் அவளுக்கு தெரிய வேண்டாமா?"

"என்ன டா உளற்ர?"

"ப்ச்! அது ஒரு பெரிய.. இல்ல சின்ன ஸ்டோரி தான். அன்எக்ஸ்பெக்டட். அண்ட் நான் தான் கொஞ்சம் அதிகமா பண்ணிட்டேன்!"

"சோ?"

"சோ தான்! கூட்டிட்டு போனும்!"

"எங்க?"

"வீட்டுக்கு!"

"அப்போ நிஜமா மேரேஜ் ஆகிடுச்சா?"

"அம்மா மேல சத்தியம் டா!" என்ற சித்தார்த்தை பாவமாய் பார்த்தார் வத்சலா.

"நம்புங்க ஆண்ட்டி! மத்ததெல்லாம் அப்புறம் சொல்றேன். நாளைக்கு நான் பாலாகிட்ட பேசணும். பேசிட்டு.. கூட்டிட்டு கிளம்புறேன்!"

"அப்போ கவிபாலா வேலை?"

"என் வாழ்க்கை பிரச்சனையை விட அந்த வேலை முக்கியமா உனக்கு? அதை எல்லாம் நீ சமாளிச்சுக்கோ! அவ இன்னும் ரெண்டு நாள் தான் ஆபீஸ் வருவா! முடிஞ்சா நாளைக்கே கூட கூட்டிட்டு போய்டுவேன்!"

"இதெல்லாம் அநியாயம் டா!"

"நியாயமா மாத்திக்கோ மேன்!" என்ற சித்தார்த்,

"ஆண்ட்டி! அபி யார் என்னனு கொஞ்சம் விசாரிச்சு வச்சுக்கோங்க! சின்ன தகவல். அவ்வளவு தான் எனக்கு தெரியும்!" என போகிற போக்கில் கோர்த்து விட்டு சென்றான் ஸ்ரீதரையும்.

"இவனை!" என பல்லைக் கடித்தவனை அன்னை கேள்வியாய் பார்க்க,

"ம்மா! அவன் சொல்றான்னு நீங்க வேற!" என்று சொல்லி எழுந்து சென்றான்.

சித்தார்த் கீழே பேசிவிட்டு மொட்டை மாடியில் வந்து நின்றான். அவள் கோபம் புரியாமல் இல்லை. ஆனால் சமாதானப்படுத்தினால் மட்டும் எல்லாம் சரியாகிவிடுமா என்ன?

அழைத்து சென்றே தீர வேண்டும் என்ற முடிவிற்கு வந்து தான் அன்னையிடம் பேசவே செய்தான்.

கிட்டத்தட்ட அவன் மாறி ஒரு வருடங்கள் இருக்கும். ஆனால் உணர்ந்து அவள் தான் என முடிவு செய்ய தான் இந்த ஆறு மாதங்கள் அவனுக்கு உதவியது.

அவளின் விருப்பம் எண்ணம் என தெரியாமல் தான் மட்டும் சுயநலமாய் முடிவெடுக்க கூடாது என்று தான் இந்த ஆறு மாதங்கள் அவன் எடுத்துக் கொண்டதும்.

"வேற பொண்ணு பாக்குறேன் சித்து! இதெல்லாம் சரி வராது!" அன்னை அமலி ராஜன் இரண்டு நாட்களுக்கு முன் கூறியது தான் அவனை உடனே அவளை தேடி கிளம்பி வர வைத்தது.

"இல்ல ம்மா! இப்ப கொஞ்ச நாளா இது மட்டும் தான் சரி வரும்னு எனக்கு தோணுது! அப்பவே சொன்னேன்ல? அந்த பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிச்சுன்னா ஓகே! அப்படி இல்லாம நான் எப்படி? தப்பு நம்ம மேல! என் மேல!" என்ற சித்தார்த்தை பயந்து தான் பார்த்தார் அமலி.

ஒரே மகன் என கொஞ்சம் செல்லமாய் வளர்த்தாலும் முற்றும் முதலும் தேர்ந்த ஒருவனாய் தனி பெண்ணாய் போராடி தான் வளர்த்திருந்தார். கணவன் ராஜன் இறந்து பல வருடங்கள் கடந்துவிட மகன் தான் மொத்த உலகமும் அவருக்கு.

தாத்தா வழி சொத்துக்கள் என காசு பணத்திற்கு பஞ்சமே இல்லை. ஆனாலும் தான் கற்ற துறையில் சாதித்துக் காட்டியவன் இந்த மூன்று வருடங்களில் அடைந்த உயரமும் தாராளம் தான்.

"நான் பண்ணின தப்புல ஒரு பொண்ணு பாதிக்கப்பட்டிருக்கா! அதை சரி செய்ய தான் இவ்வளவு நாளும் நினச்சேன். ஆனா அது அவ்வளவு ஈஸி இல்லைனு லேட்டா தான் புரிஞ்சது. இப்ப அந்த பொண்ணுக்கு ஓரளவு எல்லாம் தெரியும். நிறைய ஃபேஸ் பண்ணி இருக்க வாய்ப்பிருக்கு" என்ற சித்தார்த்திடம்,

"இப்ப என்ன தான் டா சொல்ல வர்ற?" என்றார் அன்னை.

"நான் பேசுறேன் ம்மா! பேசிட்டு சொல்றேன். இது நீங்க சொல்ற மாதிரி நான் தான்னு நான் மட்டும் முடிவெடுக்க முடியாது!" என்று சொல்லி இருந்தான்.

அடுத்த நாளே அமலி கவிபாலாவின் அன்னை விஜயாவிற்கு அழைத்து அவனுக்கு வேறு திருமணம் என்பது வரை பேசி வைத்ததெல்லாம் மகன் அறியாதது.

"பாலா!" என சொல்லிக் கொண்டவனுக்கு என்னவோ மனமெல்லாம் குறுகுறுத்தது.

ஆறு மாதங்களுக்கு முன் வரும் பொழுதோ அவளைப் பார்த்தபோதோ இல்லாத மாற்றமும் ஏக்கமும் கவலையும் என கலந்து நின்ற உணர்வுகளில் கலங்கி நின்றான்.

காலையில் மரத்தடியில் அமர்ந்திருந்தவள் முகத்தில் இழையோடிய அந்த சோகம், தவிப்பு கூடவே தன்னைத் தானே அவள் சமன்செய்ய எடுத்துக் கொண்ட நேரம் என காரணம் புரியாமலே மனம் கனமானது இவனுக்கு.

கூடவே சாப்பிட்டப்படி உளறலாய் அவளின் பேச்சு! தன்னையும் அறியாமல் அவள் பேசுகிறாள் என புரிய, இத்தனை மெல்லிய மனமா என்று வியந்தவனுக்கு அவள் கூறிய செய்திகள் என்னவோ தன் அன்னையை கொண்டு வந்ததாய் இருக்குமோ என்று சிறு பயமும் இல்லாமல் இல்லை.

கூடவே இத்தனை உன்னிப்பாய் அவளை கவனிக்கவும் இல்லை இத்தனை நாட்களும். நெற்றியின் ஓரம் புருவங்களுக்கு மேல் ஒரு சிறு மச்சம் வரை இன்று தெளிவாய் கண்டிருந்தான் கவிபாலாவிடம்.

உரிமையானவளிடம் வரும் உணர்வுகள் அவனறியாமல் அவளை கவனிக்க தூண்டி இருக்க, அதுவும் இப்பொழுது தான் புரிந்தது இவனுக்கு.

இறுதியாய் அவளை பார்க்க வரும் பொழுது சிறு குழப்பத்தில் இருந்தவன் அவளிடம் பேசிய வார்த்தைகள் இப்பொழுது அவனைப் பார்த்து சிரிப்பதாய் இருந்தது.

"நீ மேரேஜ் பண்ணிக்கோ பாலா! நீ நல்லாருக்கணும். என்னால உன் லைஃப் ஸ்பாயில் ஆனதா இருந்தா ஐ பீல் வெரி கில்ட்டி!" என்ற வார்த்தைகள் அவனுடையது.

பதில் சொல்லாதவள் மௌனம் இன்று வரை அவனுக்கு புரியவில்லை தான். ஆனால் இன்றைய அவள் குழப்பம் பேச்சு என நினைக்கும் போது தன்னால் தானோ என நினைக்காமல் இருக்க முடியவில்லை.

மூன்று வருடங்களுக்கு முன் யாரும் எதிர்பாராமல் நடந்தது தான் அந்த திருமணம். சித்தார்த் அன்னை அயலி கூடவே இருந்தும் நடந்து முடிந்திருக்க, அதனால் இன்று வரை பெரிதாய் பாதிக்கப்பட்டது என்னவோ கவிபாலா மட்டும் தான்.

சித்தார்த் அந்த கணம் அதிர்ந்தவனை அமலி தேற்றி இருக்க, அவன் தன் வேலை என அடுத்தடுத்து தன் துறையில் வளர ஆரம்பித்திருந்த நேரம்.

விடுதியில் தன் அறையில் அமர்ந்திருந்த கவிபாலாவின் மனமும் சித்தார்த்தை தான் எண்ணிக் கொண்டிருந்தது.

பார்த்ததும் அவன் தன்னை தேடி தான் வந்திருக்கிறான் மீண்டும் பழையபடிக்கு வேறு யாரையேனும் திருமணம் செய்து கொள் என்று தான் சொல்ல போகிறான் என அவள் நினைத்திருக்க, அவனோ ஸ்ரீதர் தோழன் என்றதில் அப்போது தன்னைப் பார்க்க வரவில்லையோ என நினைக்கையில் சிறு ஏமாற்றம் தான் மனதிற்கு.

ஏற்கனவே அன்னை கூறியதில் இருந்து மனதில் உறுத்தல் அரித்துக் கொண்டிருக்க, இவனும் கண்முன் வந்து நின்று காற்றாய் சென்றுவிட்டதில் மனம் துவண்டு தான் போனது.

கடந்த ஒரு வருடத்துக்கு முன் வரை அன்னையும் இவளுக்கான வரன் பார்த்துக் கொண்டு தானே இருந்தார்? அப்போது அன்னையை எதிர்த்து பேச இருந்த பயத்தில் அமைதியாய் இருந்தாலும் அப்படி பெண் பார்க்கவென யாரும் இவள் முன் வந்து நின்றுவிடவில்லை.

அப்படி நின்றிருந்தாலும் இவளால் அன்றைய நிலையில் யாரையுமே ஏற்றிருக்க முடியாது அது சித்தார்த்தே என்றாலும் கூட.

'அத்தனை பேர் மத்தியில யாரோ தாலி காட்டினானாமே! அது யார் என்னனு விசாரிக்கவே இல்லையா நீங்க?' என்ற கேள்வி தான் முதலில் வந்து நின்றது.

அதற்கும் தங்களுக்கும் சம்மந்தம் இல்லை என்று கூறியதெல்லாம் கேட்கவோ நம்பவோ தான் அப்போது யாருமில்லை கவிபாலா குடும்பத்திற்கு.

காதல் என்றெல்லாம் இல்லை. ஆனால் இப்பொழுதெல்லாம் அன்று அந்த திருமணம் நடந்த நாளோடு சேர்த்து மொத்தமே ஐந்து முறை கண்ட ஒருவனை மனம் தேட துவங்கி இருந்ததில் ஏகத்திற்கும் அதிர்ந்து தான் போனாள் கடந்த ஒரு வருட காலமாய்.

அதுவும் தன் மேல் எந்த எண்ணமும் இல்லாமல் தன்னிடம் வந்து குற்ற உணர்வாய் இருப்பதாய் சொல்லி வேறு யாரையேனும் திருமணம் செய்து கொள் என்றவன் மேல் எப்படி எந்த கணம் விருப்பம் வந்ததென்று அவளே அறியவில்லையே!.

இப்பொழுதும் ஒரு மனம் அவனை பார்த்ததில் இருந்து ஒருவித நிம்மதியில் திளைத்து இருக்க, மறுபுறம் அவன் வருகைக்கான காரணம் புரியாமல் ஒரு பயம், அவன் அன்னையின் சொற்கள், கூடவே இது எந்த விதத்தில் சாத்தியம் என தெரியாமல் தன்னுள் எழுந்திருக்கும் இந்த பிடித்தம் என தாள முடியா உணர்வுகளில் நிலைகுலைந்து போயிருந்தாள்.

தொடரும்..
 

Author: Kota
Article Title: கூழாங்கல் கூவுகின்ற கானம்! 3
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom