அத்தியாயம் 16
சித்தார்த்த்தின் சித்தி முறை சகோதரி இரவு கவிபாலாவை சித்தார்த் அறைக்கு அழைத்து சென்றுவிட்டு புன்னகையுடன் திரும்பிவிட, கதவை மெதுவாய் தள்ளினாள் கவிபாலா.
அங்கும் இங்குமாய் நடந்து கொண்டிருந்த சித்தார்த் அவள் வரவில் புன்னகையுடன் நின்றுவிட, கதவடைத்து வந்தாள் அவனிடம்.
"ஹ்ம்!" என அவள் நீட்டியதை என்ன என அவன் புருவம் உயர்த்த,
"பால்! அத்தை குடுத்தாங்க!" என்றாள். அவள் முகத்தில் அப்பட்டமான பய உணர்வு தெரிய, அதை வாங்கி ஓரமாய் வைத்தவன் கைபிடித்து அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்தான்.
"பாலா என்கிட்ட நேர்வஸா இருக்காளா என்ன?" சித்தார்த் மென் புன்னகையுடன் கேட்கவும் சட்டென பதில் கூறிட முடியவில்லை.
"ஹே என்ன பாலா?" என மீண்டும் கேட்டவனுக்கு இன்னும் சிரிப்பு வந்தது அவள் அமைதியில்.
"சித்து ப்ளீஸ்!" என அவன் விளையாட்டில் இவள் கெஞ்சிவிட, அவள் தோளில் கைகளை மாலையாக்கியவன்,
"இது பாலா இல்லையே! அதனால தான்! நீ நான்! நமக்குள்ள என்ன உனக்கு நேர்வஸ்லாம்?" என சாதாரணம் போல சொல்லிவிட்டாலும் அவனுக்கும் புரியாமல் இல்லை அவள் உணர்வுகள்.
"அப்போ தூங்குவோமா?" சட்டென்று அவள் சொல்லிவிட,
"ஹோய்!" என்றவனுக்கு அவள் வேகத்தில் அப்படி ஒரு சிரிப்பு வர, விரல் நீட்டி எச்சரிப்பதாய் காட்டினான் அவளிடம்.
"எவ்வளவு ஹாப்பியா நான் இருக்கேன்னு உனக்கு தெரிய வேண்டாமா?" சித்தார்த் கேட்க,
"எனக்கு தெரியுமே!" என்றாள் உடனே!
"அப்போ நீ ஹப்பியா இருக்கியான்னு எனக்கும் தெரியணும்ல?" என சித்தார்த் கேட்க,
"நான் ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்கேன்!" என்றாள்.
"வாய் வார்த்தையால எனக்கு தெரிஞ்சிக்க வேண்டாம்!" என்றவன் சொல்லின் குரலுக்கு,
"சித்தார்த் ப்ளீஸ்!" என்றவள் குரல் நடுங்க,
"என்னவாம் பாலா! முகமெல்லாம் இப்படி சிவந்திருக்கு?" என்றவன் அவள் முகத்தில் விரல்களால் கோலமிட, கண்களை மூடிக் கொண்டாள் அவஸ்தையாய்.
அவன் விரல்படும் இடங்கள் எல்லாம் இன்னும் சிவந்துவிட, அதில் அவன் கண்களும் தவிப்புடன் விழுந்து எழுந்தது.
அழுத்தமான அவனின் கன்னத்து முத்தத்தில் இவள் இறுக்கமாய் விழி மூடிட,
"லவ் யூ பாலா!" என்றான் காதருகே.
"நீ சொல்லு! இவ்வளவு நாள் சொன்ன மாதிரி இல்லாம இப்போ நீ சொல்லணும். நான் கேட்கணும்!" சித்தார்த் சொல்ல,
"சித்து!" என்றவள் அவன் நெஞ்சத்தில் சாய்ந்து கொண்டாள்.
"ஹ்ம்!" என்றவன் புன்னகையுடன் அணைக்க,
"லவ் யூ! லவ் யூ சோ மச்!" என்றவள் நிமிர்ந்து அவன் முகம் காண, அதற்காக தானே அவன் காத்திருப்புகள் அனைத்தும்.
மாலையாய் கோர்த்திருந்த கைகளுடன் அவள் நெற்றி முட்டியவன் பார்வை அவள் முகத்தில் அத்தனை ஆழம் கொண்டு துளைக்க, அவளால் நிமிர்ந்திடவே முடியவில்லை.
"பாலா!" என்றவன் குரலின் மாற்றத்தில் இதயத் துடிப்பின் வேகம் அத்தனை அதிகரித்தது கவிபாலாவிடம்.
இன்னும் கோர்த்திருந்த கைகளை அவன் முன்னிழுக்க, கவிபாலாவின் முகம் அவனுக்கு வெகு அருகில் வந்து நின்றது.
"ஓகே தானே பாலா?" என்றவனிடமும் எதுவும் சொல்ல முடியா அமைதியில் அவள் தலை தாழ்ந்து அமர்ந்திருக்க, தானே துவங்கி வைத்தான் அவள் இதழ்களில் தன் கவிதையை.
நீண்ட நேர ஸ்வீகரிப்பில் தானே சித்தார்த்திடம் அவள் கைகள் தொய்ந்து விட, அவன் இதழ்களின் புன்னகையும் அவளிடமே சேர்ந்தது.
சின்ன சின்னதாய் அவளை சிறையெடுக்க அவன் செய்த சேட்டைகளில் பெண் அவள் உணர்வுகள் மொத்தமும் தட்டி எழுப்பப்பட்டிருக்க, அத்தனையாய் ஒரு உணர்வுப் போராட்டம் கவிபாலாவிற்கு.
"பாலா!" என அழைத்து அவள் அவனின் கண் பார்க்கும் நேரம் அவன் அவளை எடுத்துக் கொண்ட நேரம் என முழுதாய் அவன் வசம் கொண்டு வந்திருந்தான் அவளை.
விரல்களின் தழுவலில் அவள் தாள முடியாமல் அவனை அணைத்துக் கொள்ள, உள்ளம் கசிந்து உயிரால் உருகி அவளிடம் தன்னைக் கொடுத்திருந்தான் சித்தார்த்.
அவனின் அத்தனை அத்துமீறல்களையும் அனுமதித்து தன் விரல் நகக்கண்ணில் காயம் கொடுத்தவளை முழுதாய் ஆதிக்கம் செலுத்திக் கொண்டவனில் தள்ளாடிக் கரை சேர்ந்திருந்தாள் கவிபாலா.
"பாலா!" என்று தலைகோதி அழைத்தவன் அழைப்புக்கு அவன் நெஞ்சத்தில் தலை சாய்த்திருந்தவள் நிமிர்ந்து அவனைக் காண, அவனின் புருவங்களின் ஏற்ற இறக்கத்தில் தானாய் தலை கவிழ்ந்தாள் நாணம் கொண்டு.
தானாய் தன் கைகளை அவளோடு இறுக்கிக் கொண்டவன் எண்ணமெல்லாம் தன்னவள் இவள் என்பதில் மகிழ்ந்து மிதந்து இதம் தந்து கொண்டிருந்தது.
"வாழ்க்கை எவ்வளவு சுவாரசியமானது இல்ல? கவிபாலா சித்தார்த்! எங்கே எப்படி யாரோட யாரை சேர்க்கணும்னு கடவுள் அழகா முடிச்சு போட்டு வச்சிருக்கார் பாரேன்!" என்றவனுக்கு நிஜமாய் தன் வாழ்க்கை நிகழ்வுகள் அனைத்தும் அதிசயம் தான்.
"என்ன திடிர்னு?" அசைவின்றி அவன் மேல் தலைசாய்ந்திருந்தவள் கேட்க,
"நிஜம் பாலா! நாம நினைச்சிருப்போமா இதை?" என்றதும் அவள் அவன் பக்கம் நிமிர்ந்து முறைக்க,
"இதைனா இதை இல்ல டி அழகி!" என்று அவள் கன்னம் கிள்ளியவன் சிரிப்பில் இவள் தான் திரும்பிக் கொண்டாள்.
"நீயும் நானும் சேர்ந்ததை சொல்றேன். நம்ம காதலை சொல்றேன்! மூணு வருஷம் முன்னாடி உனக்கு தாலி கட்டின அப்புறம் கூட உன்னை நினச்சு கவலைப் பட்டிருக்கேனே தவிர நாம ஹஸ்பண்ட் வைஃப் ஆகுறதை எல்லாம் அப்ப நினைச்சதே இல்லை இல்ல? அதை சொல்றேன். இப்ப பாரு அழகா என் கைக்குள்ள நீ!" என்றவன் அவள் உச்சந்தலையில் முத்தம் வைக்க, இதழ் விரிந்தது கவிபாலாவிற்கு.
"இன்னொன்னு உன்கிட்ட சொல்லணும் பாலா!" என்றதும்,
"ம்ம்!" என்று மட்டும் அவள் சொல்ல,
"அன்னைக்கு நம்ம கல்யாணம் நடந்துச்சுல்ல?" என்றதும் அவள் அமைதியாய் இருக்க,
"கேளு பாலா!" என்றவன் அழைப்பில்,
"ஹ்ம்!" என்றாள் மீண்டுமாய்.
"அப்ப நான் ரெண்டு முடிச்சு தான் தாலில போட்டேன் தெரியுமா?" என்றதும் அவள் நிமிர்ந்து பார்க்க,
"சத்தியமா! அம்மாகிட்ட அந்த சீன் வேண்டாம்னு சொல்லி கேட்கலைனதும் இந்த கண்டிஷ்னோட தான் ரெண்டு முடிச்சு போட்டேனே!" என்றான்.
"ஹ்ம்!" என்றவளுக்கு என்ன சொல்வதென தெரியவில்லை.
"என்ன ஒன்னும் சொல்ல மாட்ற?" சித்தார்த் கேட்க,
"என்ன சொல்ல? இப்பவும் எல்லாம் கனவு மாதிரி தான் இருக்கு. அதுக்காக அன்னைக்கு உங்களையும் என்னையும் வச்சு பேசின ஒவ்வொருத்தர் முன்னயும்போய் இதை சொல்ல முடியுமா?" என்று கேட்க, மௌனமாய் தலையசைத்தான் சித்தார்த்.
"மக்களுக்கு எல்லாம் ஒரு விஷயத்தோட உண்மை தன்மையை தெரிஞ்சிக்க பொறுமை இல்லைங்க அவங்களை தப்பு சொல்ல முடியாது. என்ன காட்டப்படுதோ அதை தானே உண்மைனு நம்புறாங்க. அதுக்கு குவாலிட்டியான உண்மையை கொடுக்க தான் இங்க யாரும் தயாரா இல்லை" என்றவள்,
"பொய்யை நம்புற எல்லாரும் நிஜத்தை விரும்புறதில்ல. ஏன்னா பொய் சொல்லப்படுற விதமும் காட்டப்படுற விதமும் அவ்வளவு அழகா இருக்கும். அதுல மயங்கிடுறாங்க!" என்று சொல்ல,
"நிஜம் தான்! அவங்கவங்க வாழ்க்கையை தவிர மத்தவங்க வாழ்க்கையை எல்லாம் இங்க யாரும் பெருசா நினைக்குறது இல்ல! அவங்களுக்கு வந்தா மட்டும் தான் ரத்தம்னு சொல்லுவாங்க!" என்றான் சித்தார்த்தும்.
"கரெக்ட்!" என்று எழுந்தவள்,
"அந்த பொய் கல்யாணத்தை மட்டும் காரணமா வச்சு நாம நம்மோட நிஜக் கல்யாணத்தை முடிவு பண்ணி இருந்தா நிஜமா நம்ம வாழ்க்கை எந்த பக்கம் போயிருக்கும்னு நினைச்சுப் பார்க்கவே முடியாது. நமக்கான வாழ்க்கையை நாம தீர்மானிச்சா மட்டும் தான் அதுல உயிர்ப்பு இருக்கும்!" என்று சொல்லி சித்தார்த்தைப் பார்த்து சொல்ல,
"சரியா சொன்னிங்க கண்ணம்மா!" என்றான் அவள் கன்னம் கிள்ளி.
"ஹே இங்க என்னவோ இருக்கு பாரு!" என எழுந்து முகமருகே வந்தவன் சட்டென்று அவள்மேல் விழ, எதிர்பாராமல் சாய்ந்தவளை மீண்டுமாய் தன் கையோடு அள்ளிக் கொண்டான்.
"யார் என்னவும் எப்படியும் சொல்லிட்டு போகட்டும். இந்த மலர் சித்தார்த்க்குன்னு எழுதி தான் கடவுள் என் கையில கொண்டு வந்து கொடுத்திருக்கார். பத்திரமா பார்த்துக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்குல்ல?" என்றவன் மீண்டும் அவளை நெருங்க, அவனை விலகவே விரும்பாமல் அவனோடு நிறைந்தாள் அவனவள்.
அடுத்தநாள் பகல் முழுதும் புதுமணத் தம்பதிகள் அத்தனைக்கு உற்சாகமாய் சுற்றி வந்தனர்.
கோவில், விருந்து என முழுதும் உறவுகளுக்கான நாளாக தான் சென்றது அன்று.
அமலியோடு இரவு சமையலறையில் கவிபாலா என இருவருமாய் பேசியபடி நிற்க, வாசலில் நின்று கண்டவன் முகத்தில் அகத்தின் புன்னகை.
அடுத்தநாள் காலையே அம்மா வீட்டிற்கு செல்லும் உற்சாகம் கவிபாலாவிடம். சித்தார்த் உறக்கத்தில் இருக்கும் பொழுதே எழுந்து குளித்து புடவையைக் கட்டிக் கொண்டு இருக்க, அப்பொழுது தான் சோம்பலாய் கண் விழித்த சித்தார்த் மனைவியின் தோற்றம் கண்டு விசிலடித்தான்.
"சித்து! எழுந்தாச்சா? குட் மார்னிங்!" புன்னகை முகத்துடன் அவள் சொல்ல,
"ஹாப்பி மார்னிங் பட்டு! என்ன மார்னிங்கே சாரீ எல்லாம்!" என்றவன் கட்டிலில் ஒரு பக்கமாய் புரண்டு வந்து அவளை பிடிக்க வர, துள்ளி குதித்து தள்ளி சென்று நின்றாள் கவிபாலா.
"ப்ச்! இங்க வா பாலா!" என்று சிணுங்கலாய் கூறியவன் படுத்திருந்தபடிக்கு இரு கைகளையும் விரிக்க,
"அம்மா வீட்டுக்கு போகணும்! இன்னைக்கு அங்க தான் ஸ்டே! சோ ரெண்டு நாள் டிஸ்டன்ஸ் மெயிண்ட்டைன் பண்றீங்க! புரியுதா?" கவிபாலா விளையாட,
"இதென்னை கன்டிஷன்? இதெல்லாம் கல்யாணத்தப்ப நீ சொல்லல! டிஸ்டன்ஸ் எல்லாம் எனக்கு கிடையாது. அப்படின்னா நான் வர்ல!" என்றான் உடனேயே!
"சரி கிளம்புங்க சித்து!" என அவள் விளையாட்டை விட்டு சொல்ல,
"இப்ப நீ வா என் கைக்குள்ள! நான் சொல்லும் போதெல்லாம் வரணும் தெரியாதா உனக்கு? இல்லைனா அம்மா வீடு கான்செல்!" சித்தார்த் சொல்ல,
"அப்படியா?" என்ற கவிபாலா,
"அத்தை!" என்று அழைக்க,
"இவளை!" என்றவன் எழுந்து குளிக்க செல்லுவான் என அவள் நினைக்க, அவளையும் தூக்கிக் கொள்வான் என நினைக்கவே இல்லை அவள்.
மீண்டுமாய் மற்றொரு புடவையுடன் நேரம் கடந்து தான் கீழிறங்கி வந்தாள் கவிபாலா.
"கிளம்பிட்டீங்களா கவி? அம்மாக்கு ஸ்வீட்ஸ் வச்சிருக்கேன். கொண்டு போங்க!" என்ற அமலி சாப்பிட எடுத்து வைக்க, தானுமே அவருக்கு உதவினாள் அவள்.
அன்னையாய் அமலி மனம் அத்தனை மகிழ்ந்திருந்தது சித்தார்த் கவிபாலாவை காண்கையில்.
சித்தார்த்திற்கு கவிபாலா உணவு பரிமாற, இவன் அவளை இடையோடு இழுக்க என இவர் இல்லாத நேரமாய் அவன் சேட்டையை ஆரம்பிக்க, தண்ணீரோடு வந்த அமலி மீண்டும் உள்ளே சென்றுவிட்டார்.
இதோ மூன்றே நாட்கள் என்றாலும் அவர்கள் வாழ்க்கையை ஆரம்பித்த கதையை அவர்களின் முகத்தின் மலர்ச்சியே எடுத்து கொடுக்க, மனம் நிறைந்தது அன்னையாய் அமலிக்கு.
தொடரும்..
இன்னும் இரண்டு எபியில் கதை நிறைவுறும் டியர்ஸ்😍🥰

Author: Kota
Article Title: கூழாங்கல் கூவுகின்ற கானம்! 15
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.