• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

கூழாங்கல் கூவுகின்ற கானம்! 11

Kota

Member
Joined
Mar 27, 2025
Messages
60
அத்தியாயம் 11

அறையின் ஓரம் இருந்த பெஞ்சில் அமர்ந்து தலையை பின்னால் சாய்த்திருந்தவன் மனம் இன்னும் பதைபதைபுடன் இருக்க, நிகழ்வின் தாக்கத்தில் கண்களில் இருந்து கண்ணீர் அவனையும் அறியாமல் வெளிவர, அதை துடைத்தபடி கண்களை திறக்க முயன்றான் சித்தார்த்.

விஜயாவின் ஏங்கிய குரல் இன்னும் கேட்டுக் கொண்டு தான் இருந்தது.

"சித்து!" என அவனருகில் அமலியின் குரல் கேட்க, மொத்தமாய் முகத்தைத் துடைத்து விழிகளை திறந்திருந்தான் சித்தார்த்.

"என்ன டா நீ?" என்ற அமலிக்கு மகனை அந்நிலையில் காணவே உயிர் வதைத்தது.

"அவளுக்கு ஒன்னும் இல்லை. அதான் டாக்டர் சொல்லிட்டாங்க இல்ல! நீ இப்படி இருக்காத! பயமா இருக்கு சித்து!" என்று அன்னை சொல்ல,

"சித்து!" என்ற கவிபாலாவின் சத்தம் தான் அவன் காதுகளில் கேட்டது.

ஒரு மணி நேரத்திற்கு முன்பு தான் தனியறை கொடுக்கப்பட்டிருக்க, விஜயா, மதி, அமலி மருத்துவமனைக்கு வந்து அரை மணி நேரம் தான் ஆகி இருந்தது.

கவிபாலாவை தேடி அலைந்து அவளை கண்டு கொண்ட நொடி தான் இன்னும் பரிதவித்து அவள் அருகில் சித்தார்த் சென்றிருக்க, அவளுமே அவனை கண்ட நொடி தான் மயக்கத்தை அடைந்திருந்தாள்.

"உங்க ரிலேடிவா?" என மருத்துவர் கேட்க,

"பாலாக்கு என்ன டாக்டர்?" என்றான் அவரிடம்.

"பெரிய ப்ரோப்லேம் ஒன்னும் இல்ல. கால்ல தான் பலமா அடிபட்டிருக்கு. முகத்துல கூட லைட்டா தான்!" என்று மருத்துவர் சொல்ல, அப்போது தான் அவள் கால்களை கவனித்தான் சித்தார்த்.

வலது காலில் அத்தனை பெரிய கட்டு. முகத்தில் நெற்றியின் ஓரம் ஒரு பிளாஸ்திரி என கண்டவனுக்கு உயிர் வலித்தது நிஜம்.

அவன் நிகழ்வுக்கு வரவும் அங்கிருக்கும் சூழ்நிலை புரியவுமே சில நிமிடங்கள் தேவைப்பட்டது.

தனியறை கேட்டு ஒரு மணி நேரத்தின் பிறகே கவிபாலாவிற்கு தயாராகியிருக்க, சித்தார்த் மனதளவில் உடைந்தவன் அவளருகிலேயே தான் இருந்தான்.

"அந்த பஸ்ல வந்த பொண்ணு தானே?" என பெரியவர் ஒருவர் கேட்கவும் நிமிர்ந்து அவன் தலையாட்ட, அவன் கண்கள் எல்லாம் கலங்கி இருந்ததை கவனித்த பெரியவர்,

"அதுல நாலு உயிரே போயிடுச்சு பா. இந்தம்மா உனக்கு கிடைச்சிருக்குல்ல! சந்தோசப்படணும் நீ!" என்ற சொல்லில் திடுக்கிட்டான் சித்தார்த்.

அவனும் வந்தது முதல் பார்த்தானே அந்த காட்சியை. எத்தனை விதமான மக்கள் எத்தனை ரத்தம் எத்தனை அழுகை குரல் என! நினைக்கும் போதே மனம் கனத்தது. ஆனாலும் அந்த பெரியவர் கூறியது போல சிறு நிம்மதி நெஞ்சில் எழுந்தது தன்னவள் தன்னிடம் வந்துவிட்டாள் என்பதாய்.

அறைக்கு மாற்றிய சில நிமிடங்களில் விழித்துப் பார்த்த கவிபாலா மருந்து வீரியத்தில் மீண்டும் மயக்கத்திற்கு செல்ல,

"இன்னும் நாலு ஹவர்க்கு அவங்க இப்படி தான் இருப்பாங்க!" என்று கூறி இருந்தார் செவிலியர்.

அடித்து பிடித்து அழுது வடிந்து மொத்தமாய் நொந்து தான் மருத்துவமனையை வந்து சேர்ந்தனர் கவிபாலாவின் பெற்றோர்.

அவர்களிடம் பேச கூட முடியாமல் சித்தார்த் ஏற்கனவே மனதளவில் சோர்ந்திருக்க, மருத்துவரைப் பார்க்க என அவர்களையும் அழைத்துச் சென்றான்.

"காட்ஸ் கிரேஸ் அவங்களுக்கு உடம்புக்குள்ள எந்த அடியும் இல்ல. கால்ல எதுவோ பிடிச்சு இழுத்தததானால தான் அங்க பலத்த அடி. நெத்தியில கூட ஆழமான காயம் தான். உள்ள எந்த பிரச்சனைக்கும் வாய்ப்பில்லை. உங்களுக்கு சந்தேகமாவோ பயமாவோ இருந்தா ஸ்கேன் பார்த்துடலாம்!" என்று மருத்துவர் சொல்ல,

நொடியும் யோசிக்காமல் அதற்கு ஏற்பாடு செய்ய சொல்லிவிட்டான் சித்தார்த்.

"மெடிக்கல் ரிப்போர்ட் பார்த்து சென்னைல கன்சிடர் பண்ணலாம் சித்தார்த்!" அன்னை சொல்ல,

"கண்டிப்பா பண்ணனும் ம்மா! ஆனா இங்கயே எல்லா டெஸ்ட்டும் எடுத்துட்டு போய் பண்ணலாம்!" என்றவன் பயம் புரிந்து அதற்குமேல் கேட்கவில்லை அமலி.

காலை பதினோரு மணி அளவில் தான் தெளிவாய் கண் விழித்தாள் கவிபாலா. அவ்வளவு நேரம் தேவைப்பட்டிருந்தது சித்தார்த் தன் இயல்புக்கு வரவுமே.

நிஜமாய் அங்கிருந்த மற்ற பயணிகளின் நிலையைக் கண்ட போது கவிபாலாவிற்கு ஒன்றுமில்லை என்று தோன்ற, மற்றவர்களுக்காக வருந்தி இருந்தான்.

"என்ன டி நீ! பயந்தே போய்ட்டோம்!" என விஜயா அழ,

"ம்மா!" என்றாள் கவிபாலா வலியின் சாயலோடு.

"ஷ்ஷ்! பேசாத! வலிக்கும்!" என்றான் அவளருகில் அமர்ந்திருந்த சித்தார்த் அவள் நெற்றியின் பக்கமாய் கைவைத்து.

அப்பொழுது தான் அவனை கவனித்தாள். மயக்கத்தில் இரண்டு மூன்று முறை அவனைப் பார்த்ததாய் மங்கலாய் காட்சிகள் நியாபகம். ஆனால் தெளிவாய் அது நிஜமா கனவா என்று தெரியவில்லை கவிபாலாவிற்கு.

"பேச வேண்டாம்னு டாக்டர் சொன்னாங்க டா!" மதி மகளிடம் சொல்ல,

"அழாதீங்க ம்மா!" என்றாள் வலியோடு அன்னையிடம்.

"நான் அழல பாப்பா! நீ பேசாத! ம்ம்?" என்ற அன்னைக்கு கண்ணீர் வடிந்தது.

"அத்தை!" என்றவனுக்கு ஆறுதல் சொல்லவா கண்டிக்கவா என்றும் புரியவில்லை.

ஒற்றை கைகொண்டு தன் நெற்றியில் இதமாய் கைவைத்திருந்த சித்தார்த்தின் கைகளைப் பிடித்தாள் கவிபாலா.

"வலிக்க போகுது டா!" அத்தனை இதமாய் சித்தார்த் சொல்ல, கண்களின் ஓரமிருந்து கண்ணீர் வடிந்தது அவளுக்கு.

"உனக்கு ஒண்ணுமில்ல! எல்லாம் தெளிவா கேட்டுட்டோம்! அழுதுட்டே இருந்தா சரியாகாது! சரியாகாம கல்யாணம் பண்ணிக்க முடியாது!" மென்னகை கொண்டு பேச ஆரம்பித்தவன் குரல் முடிவில் கரகரத்து வர, தன் கையினில் இருந்த அவள் கைகளில் அழுத்தம் கொடுத்தான்.

"எல்லாரும் வெளில இருக்கவா? இங்க இருந்தா பார்த்து பார்த்து அவங்கம் அழுவாங்க நீயும் அழுதுட்டு இருப்ப!" அமலி சொல்ல,

'வேண்டாம்!' என்பதாய் தலையசைத்தாள் கவிபாலா.

"ஒண்ணுமில்ல டா. சரியாகிடும்!" எனும் ஆறுதல் வார்த்தைகள் மட்டும் மீண்டும் மீண்டும் அங்கிருந்தோரிடம் இருந்து வர, அது தான் அவள் உடலுக்கும் தேவையாய் இருந்தது.

சில நிமிடங்கள் விஜயா மதியை கவிபாலாவிடம் விட்டு அவர்களுக்கு தனிமை கொடுத்து எழுந்து வெளியே சென்ற சித்தார்த் தன்னை தானே சீராக்கிக் கொண்டிருந்தான்.

நிச்சயம் தான் உடைந்து போக கூடாது. அவளுக்காகவே அவன் தன்னை சரி செய்ய, அவன் தோள்களில் விழுந்தது அமலியின் கரம்.

"ம்மா!" என அணைத்துக் கொண்டவன் தன் பாரத்தை எல்லாம் அவரிடம் இறக்கி வைக்க,

"சித்து! நீயே இப்படி இருக்கலாமா?" என்ற அமலி மகனைப் புரிந்து தான் அவனோடு வெளியே எழுந்து வந்திருந்தார்.

"எப்படி இருக்கா பாருங்க ம்மா!" என்றவனுக்கு மனம் ஆறவே இல்லை. அவள் மனம், உடல் என அத்தனையும் மீண்டு வர சில மாதங்கள் நிச்சயம் தேவை.

"பாலாக்கு மட்டும் ஏன் ம்மா இப்படிலாம் நடக்குது? மூணு வருஷமா மனசளவுல உடைஞ்சி போயிருந்தா இப்ப...." என்றவனுக்கு அத்தனை கவலை.

"அந்த பொண்ணு என்ன பாவம் பண்ணினான்னு கடவுள் இப்படி அவளை சோதிக்கிறார் ம்மா!" என்றான் மொத்தமாய் வருந்தி.

"இப்ப தான்.. கொஞ்ச நாளா தான் அவ சந்தோசமா இருந்திருப்பா. இந்த வயசில இவ்வளவு கஷ்டம் தேவையா அவளுக்கு? எப்படி ம்மா தாங்குவா? பாவம் ம்மா அவ!" என்று அவன் பேச பேச,

"சித்து!" என அவனை சாந்தப்படுத்த அமலி முயல,

"ஆனா அவளோட எல்லா கஷ்டத்துக்கும் நான் மட்டும் தான் காரணம்! அவளுக்கு எதாவது ஆச்சுன்னா... நானெல்லாம் காணாம கரைஞ்சு போயிடுவேன் ம்மா!" என்றவன் சொல்லில்,

"டேய்!" என்ற அன்னைக்குமே கண்ணீர் அவனை சமாளிக்கவோ ஆறுதல் சொல்லவோ முடியாமல்.

கவிபாலாவின் மேல் அத்தனை அன்பும் அக்கறையும் அமலிக்கு இருந்தாலுமே தன் மகன் என்று வரையில் அவனுக்கு தானே தாயுள்ளம் முன்னுரிமை கொடுக்கும்.

இப்பொழுதும் கூட மகனை எண்ணி தான் தவித்தது அந்த தாயுள்ளம்.

மூன்று வருடங்களாய் தெரியாமல் செய்த தவறுக்கு அவன் வருந்தியதை உடன் இருந்து பார்த்த முழு சாட்சியே அவர் தானே!

திருமணம் செய்து கொள் என்று கூறியதும் 'அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகிருக்குமா ம்மா?' என்றானே! எத்தனை தூரம் அவன் மனதில் அந்த காயம் பதிந்து போயிருந்தால் அவன் நினைவு அங்கேயே நின்றிருக்கும் என மகனுக்காய் மருகியது அந்த அன்னை உள்ளம்.

இப்பொழுதும் கூட உள்ளே வலியில் அவள் முகம் சுருங்க இங்கே இவன் மனம் படும்பாட்டின் நிலை தான் கொடூரமாய் தெரிந்தது அன்னைக்கு.

அத்தனை தைரியம் சொல்லி ஆறுதலாய் அவளருகில் அமர்ந்து அவள் துயர் நீக்க துடிக்கும் இவன் மனம் இப்பொழுது இருக்கும் இந்த உடைந்த நிலையை யாரிடம் சொல்லி அழ என்று தெரியாமல் அவனைக் கட்டிக் கொண்டு கண்ணீர் வடித்தார்.

"உனக்காகவே அவ சரியாகி வரணும் டா!" அமலி சொல்ல,

"வந்துடுவா ம்மா! என் உயிரும் அவகிட்டல்ல இருக்கு!" என்றான் அன்னை முகம் பார்த்து புன்னகைக்க முயன்று.

மீண்டும் சித்தார்த் உள்ளே வரும் நேரம் கவிபாலா விழிகள் அவனிடம் செல்ல, அவள் தலைக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டான் புன்னகைத்து.

தன்னிடம் உடைந்து அழுத மகனின் முகமும் இதோ அவளை பலப்படுத்த புன்னகைக்கும் அதே முகமும் என மனமெல்லாம் பிசைந்தது அமலிக்கு.

விஜயா மதி இருவரும் சற்று தள்ளி சென்று அமர,

"என்னால எவ்வளவு கஷ்டம் உங்களுக்கு?" கவிபாலா மெதுவாய் சித்தார்த்திடம் சொல்ல,

"சரியாகிட்டு வந்து சொல்லு டி! நீ என்ன சொன்னாலும் கேட்டுக்குறேன்!" என்றான் அவளுக்கு வெகுஅருகில் முகம் காண்பித்து.

"சித்து!" என்றவளுக்கு அவன் தைரியம் கொடுக்க முயல, அது தான் அவளை இன்னுமாய் பலவீனப்படுத்தியது.

"பேசாத! நீ சீக்கிரம் சரியாகணும்! நான் சீக்கிரம் உன்னை கல்யாணம் பண்ணிக்கவாவது உனக்கு சீக்கிரம் சரியாகணும்! நீ நினைச்சா தான் அது முடியும்!" சித்தார்த் சொல்ல, தலையை மட்டும் ஆட்டினாள் கவிபாலா.

"சீக்கிரமா என் கைக்குள்ள வா. இங்க இருக்க எனக்கு பிடிக்கல. இதெல்லாம் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தூக்கிப் போட்டுட்டு வா!" என்றவன் குரலில் அவ்வளவு ஏக்கமும் வேகமும் தன்னோடு அவளை வைத்துக் கொள்ள.

"ஐ லவ் யூ!" நீண்ட நேரம் அமைதியாய் முகம் பார்த்த கவிபாலா அத்தனை நேரம் கழித்து இதை சொல்ல,

"இப்ப தான் சொல்லுவியா? நான் வாங்கிக்க மாட்டேன்! நான் உன்னை உணரணும் இதை நீ சொல்லும் போது! அந்தளவுக்கு என் கைக்குள்ள வந்துட்டு இதை சொல்லு!" என்றான் முறைத்து. சிறு மென் புன்னகை அவள் சிந்த, அவனுள்ளம் சிதறி மீண்டது.


தொடரும்..
 

Author: Kota
Article Title: கூழாங்கல் கூவுகின்ற கானம்! 11
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Joined
Mar 21, 2025
Messages
43
ஒரு நொடி நிகழ்வு
ஓராயிரம் தவிப்புகள்
ஒன்னும் இல்லை என்ற
ஒற்றை வார்த்தையில்
ஓராயிரம் நம்பிக்கை....
ஒருவரின் வலி மற்ற ஒருவரை தாக்க....
ஒன்றாய் உருகி தவிக்கும்
ஓர் உயிர் இரு உடல்.... 🤩🤩🤩🤩
 

Kota

Member
Joined
Mar 27, 2025
Messages
60
ஒரு நொடி நிகழ்வு
ஓராயிரம் தவிப்புகள்
ஒன்னும் இல்லை என்ற
ஒற்றை வார்த்தையில்
ஓராயிரம் நம்பிக்கை....
ஒருவரின் வலி மற்ற ஒருவரை தாக்க....
ஒன்றாய் உருகி தவிக்கும்
ஓர் உயிர் இரு உடல்.... 🤩🤩🤩🤩
😍😍
 
Top Bottom