காண்பது எல்லாம் உனது உருவம் 2
எதையோ யோசித்தபடி தன்னறைக்குள் வந்து பார்க்க அறையின் சுத்தம் அவனை மயக்கியது. நேராக குளியறைக்கு போய் சில நிமிடங்களில் குளித்து விட்டு விசிலடித்தபடி தலை துவட்டி கொண்டு வந்தவனை ஃப்ளாஸ்க்கும், டிபன் கேரியரும் வரவேற்றது.
டேய் ராஜா உனக்கு வேட்டை தான் என தனக்குள் சொல்லியபடி கேரியரை திறக்க மெத்தென்று ராகி இட்லியும், காரசாரமான புதினா கொத்தமல்லி சட்னி அவனை பார்த்து ஆதரவு தருமாறு கேட்டது.
உணவின் வாசனை இருந்த பசியை இன்னும் தூண்ட அடுத்த சில நிமிடங்களில் இட்லியும் சட்னியும் அவன் பசியை போக்கியது.
ஃப்ளாஸ்க்கை திறக்க அதிலும் அவனுக்கு பிடித்த மாதிரி இஞ்சி, ஏலக்காய் டீ மணக்க அதை டம்ளரில் ஊற்றி குடிக்க அதின் மிதமான சர்க்கரை சட்னியின் காரத்தோடு இணைய ஆனந்தமாக ரசித்து குடித்து சாப்பிட்ட பாத்திரங்களை அலம்பி வைத்தான்.
அவன் அறையின் கதவு மெல்ல திறக்க "விக்கப்பா..என்ன பண்ற.." என்ற சிறு குழந்தையின் குரல் கேட்டது..
உள்ளே வந்தவளை வாரி அணைத்து தன் அருகில் உட்கார வைத்தவன் "அடியேய்..கண்ணழகி
எங்கண்ணன் பெத்த தவக்கொழுந்தே..விக்கப்பா இல்ல டி என் செல்லம்..விக்கிப்பா..எங்க சொல்லு.."
"விக்கப்பா.."
"மறுபடியும் விக்கப்பா..உன்னை என்ன பண்றேன் பாரு..."
இறங்கி ஓடியவளை பிடித்து கன்னம் கிள்ளி முத்தம் குடுத்தவன் "விக்கிப்பாக்கு டைம் ஆச்சு..சீக்கிரம் வந்தா பைக்ல ஸ்கூல்க்கு கூப்பிட்டு போவேன்..இல்ல நீ உங்க பாட்டி கூட தான் போகணும்.."
"பாத்தி வேணாம்..விக்கிப்பா..
என்னால வேகமா நடக்க முடியலனு
பாத்தி தித்துவாங்க..ப்ளீஸ் நாமளே பைக்ல போலாம்.. விக்கிப்பா..என் செல்லம்ல்ல.."
"பேக் ரெடி..ரத்துமா எனக்கு ஸ்னாக்ஸ் வெச்சாச்சு..வாட்டர் பாட்டில் ரெடி..போலாம்.."
"என்னது..ரத்துமா வா..வாழ்வு தான்..எல்லாம் நேரம் டி..இப்ப மட்டும் விக்கிப்பா எப்டி வந்தது...காரியம் எதாவது ஆகணும்னு செல்லமா..
பொழச்சிப்ப நீ..வா போகலாம்.."
வீட்டுக்கு அருகில் இருந்த ஸ்கூலில் அவளை விட்டவன் அங்கிருந்து நேராக தான் வேலை செய்யும் இடத்தை அடைந்தான்.
அவன் ஆசைப்பட்டபடி விவசாய படிப்பில் பி.எச்.டி படித்து முடித்தவன் தற்போது விவசாயம் சம்பந்தமாக விவரம், சந்தேகம் கேட்பவர்களுக்கு ஆலோசனை சொல்லும் நிறுவனத்தை உள்ளூர் நண்பன் வாசு மற்றும் வெளியூரில் இருக்கும் சில நண்பர்களோடு சேர்ந்து நடத்தி வருகிறான்.
உள்ளே நுழைந்ததுமே அங்கிருந்த அவனுடைய நண்பன் வாசு "வா டா..என்ன காலைல அண்ணன் பொண்ணை ஸ்கூல்ல விடற ட்யூட்டி முடிஞ்சிதா.."
"அதெல்லாம் கரெக்டா முடிஞ்சிது டா..நீ வழக்கம் போல உன் பொண்டாட்டி கிட்ட திட்டு வாங்கிட்டியா.."
"ம்ம்ம் ஆச்சு மச்சி..ஏன் டா நான் தெரியாம கேக்கறேன்..எப்டி தான் சலிச்சுக்காம தினமும் அவளை ஸ்கூல் விடற..அங்க ஏதாவது விசேஷமா டா.."
"ச்சீ..உன் புத்தி போகுது பாரு..கல்யாணம் ஆனவனை பாத்து கேக்கற கேள்வியா டா.."
"கல்யாணம் ஆனா பொண்ணுங்கள சைட் அடிக்க கூடாதுனு சட்டம் ஏதாவது இருக்கா.."
"உன் புத்தி ஏன் டா இப்டி போகுது..நல்லதாவே நினைக்க தெரியாதா..தங்கச்சி எப்டி டா உன்னை சும்மா விடறா.."
"இல்லடா..டாண்ணு கரெக்டா காலைல ஸ்கூல்ல கொண்டு விடறயே..அதான் கேட்டேன்.."
"டேய் பைத்தியம்..உனக்கு எங்க வீட்டு விஷயம் தெரியாதா..
எங்கண்ணனுக்கு டூர் போற வேலை..அவன் மாசத்துல நாலு நாள் வீட்டுல இருந்தாலே அதிகம்.."
"எங்கண்ணிக்கு வேலை அதிகம்..துணி தைக்க உட்கார்ந்தா சாப்பிட கூட எழுந்து வர முடியாது..பாவம் டா அவங்க.."
"குடும்பத்துக்காக தானே உழைக்கறாங்க...வயசான அப்பா அம்மாவை குழந்தையை கொண்டு விட சொல்லி வேலை வாங்க முடியுமா..சொல்லு..?
"என் பொண்டாட்டி அவளால முடிஞ்ச வேலைகளை செய்யறா.. என்னால முடிஞ்சதை நான் பண்றேன்..அவ்ளோ தான்.."
"நாங்க இருக்கறது கூட்டு குடும்பம் டா..ஒவ்வொருத்தர் ஒவ்வொரு வேலைய பகிர்ந்தா தான் டா குடும்பம் குடும்பமா இருக்கும்..நீ நான்னு போட்டி போட அது குத்து சண்டை மேடை இல்ல டா.."
"அது சரி..இந்த னொண்ணைலாம் இருக்கட்டும்..சார்..எப்ப பொண்டாட்டி கிட்ட லவ் சொல்ல போறீங்க.."
"எங்க டா..அவ என் முகத்தை பார்த்தா தானே..வீட்டுல என்னை பாத்தாலே எதுவோ துரத்தின மாதிரி ஓடி போயிடறா..பிடிக்காம கல்யாணம் பண்ணா இப்படி தான் போல..ம்ம்ம்..என் வாழ்க்கை எப்டி போக போகுதோ.."
"சரி..சரி..என் கதை இருக்கட்டும்..காலைல வாங்கற காசுக்கு எதாவது உபயோகமான வேலைய பாக்கலாமா..ராஜாங்கம் மாமா வயலோட சாயில் ரிப்போர்ட் வந்திடுச்சா.."
"வந்திடுச்சு விக்ரமா..அவருக்கு தன்னோட வயல் நன்செய் நிலம்னு பெரியவங்க பாகம் பிரிக்கும் போது சொன்னாங்கனு ஏக நம்பிக்கை.."
"நீர் பாய்ச்சல் இல்ல..கடைக்கோடி நிலம்..அதுல நெல் பயிரிட முடியாதுனு நாம சொன்னாலும் ஏத்துக்கல.."
"முப்போகம் நெல் விதைக்கணும்..இல்லேனா ஒரு போகமாவது பயிர் வெக்கணும் அவரோட ஆசையாம் டா.."
"ஆனா அது அந்த நிலத்துல நடக்காது டா..காலம் காலமா அது புன்செய் நிலமாம்...அவங்க வீட்டுல இவரை ஏமாத்திட்டாங்க.."
அதுல சிறு தானியம் மாதிரி தான் பயிரிட முடியும்னு ரிப்போர்ட் வந்திருச்சு..ரிப்போர்ட் வாங்க நாளைக்கு வருவார் டா "
"சரி..என்னால உன்னை மாதிரி ஆளுக்கு தகுந்த மாறி பேச தெரியாது வாசு..எதுவா இருந்தாலும் பட்டுனு சொல்லிடுவேன்.."
"நாளை மாமா வரட்டும்..வந்த பின்ன அவர் மனசு கஷ்டப்படாத மாறி நீயே மாமா கிட்ட சொல்லிடு டா.."
அதன் பின் அவர்கள் வேலையை தொடர ஆரம்பித்தனர். மதியம் ஆனதும் விக்ரமன் சாப்பிட வீட்டுக்கு கிளம்பி போனான்.
அவர்கள் இருப்பது கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத ஊர். அவர்கள் ஊரை ஒட்டி சுற்றி நிறைய கிராமங்கள் இருக்க..
அங்கிருப்போருக்கு எல்லாம் விக்ரமனும், வாசுவும் விவசாயத்தை பாடமாக படித்ததில் ஏக பெருமை. நிலத்தில் எந்த பயிர் இட்டாலும் விக்ரமனிடமும், வாசுவிடமும் ஆலோசனை கேட்காமல் எதுவுமே செய்ய மாட்டார்கள்.
வீட்டுக்கு சென்றவனை வாசலில் நின்று இருந்த நித்யா இடுப்பில் கை வைத்தபடி முறைக்க "நித்யாவுக்கு என் மேல் என்னடி கோபம்..நெருப்பா எரிகிறது.." என பாடியபடி நெருங்கினான்.
"விக்கப்பா..விக்கப்பா..நான் சொல்லுறத கேளுப்பா.." என அவளும் பதில் பாட்டு பாடினாள்.
"என்னடி உன் பிரச்சினை..காலைல வம்பிழுக்கற..மதியம் முறைக்கிற.."
"நீ வேலைக்கு போறதில்லையாம்..வீட்டுக்கு காசே குடுக்கறதில்லனு அத்தை சொத்தை வந்திருக்காங்களே.. அவங்க உன்னை பயங்கரமா திட்டினாங்க..விக்கிப்பா.."
"பாட்டியும் எதுவும் பேசாம இருக்காங்க..என் செல்ல விக்கிப்பா திட்டினா நீ இங்க வராதேனு நான் உனக்காக சண்டை போட்டேன்..அதுக்கு எதுக்கு ரத்து மாவ அசிங்க அசிங்கமா பேசினாங்க..அத்தைனு புரியல பா.."
அதை கேட்டதும் முகம் இறுகி போனவன் குழந்தை தன்னை பார்ப்பதை உணர்ந்து சட்டென முகத்தை மாற்றி புன்சிரிப்புடன் "விட்றி செல்லம்..அவ திட்டலேனா தான் அதிசயம்..நீ சாப்டியா.."
"இன்னும் இல்ல விக்கிப்பா..பாட்டி அத்தைக்கு மட்டும் தான் சாப்பாடு குடுத்தாங்க..வருண் அண்ணாக்கு ஊட்டி விட்டாங்க விக்கிப்பா..எனக்கு எதுவும் குடுக்கல.."
"எவ்ளோ மணி ஆகுது...இன்னும் செல்லக்குட்டி சாப்பிடலயா...
என் செல்ல அம்மாவோட குட்டி தொப்பை பசிக்குமே..வாங்க ராஜாத்தி..நான் ஊட்டறேன்.."
அவளை தன்னறைக்குள் அழைத்து போனவன் தட்டு அலம்பி கேரியரை திறக்க அவனுக்காக சூடான சாதம், நெய் மிதக்கும் பருப்பு, ரசம், கத்திரிக்காய் பொடி கறி,காரமில்லாத கோஸ் கூட்டு, தயிர் என இருந்தது.
"கண்ணம்மா..இன்னிக்கு சாப்பாடு வாசனையே ஆளை அள்ளுதே..ம்ம்ம்..ஒரு கட்டு கட்ட வேண்டியது தான்"
சாதம், பருப்பு சேர்த்து கூட்டு வைத்து குழந்தைக்கு ஊட்டி, கொஞ்சம் தயிர் சேர்த்து தயிர் சாதமும் ஊட்டி முடித்து வாயை துடைத்ததுமே குழந்தைக்கு தூக்கம் வர தோளில் போட்டு தட்டியதும் நிமிடத்தில் தூங்கி விட்டாள்.
தூங்கியவளை படுக்கையில் கிடத்தி விட்டவனுக்கு சாப்பிடும் எண்ணமே இல்லாமல் போனது..ஏதேதோ சிந்தனைகள் அணி வகுக்க ஆரம்பிக்க மெல்ல தலை வலிக்க ஆரம்பித்தது.
சிந்தனையோடு ரத்னா பார்த்து பார்த்து பக்குவமாக அவன் சாப்பிடும் விதத்தில் சமைத்திருந்ததை பார்த்ததும், தன்னை தேற்றி கொண்டு மற்ற சிந்தனைகளை விடுத்து வேகமாக சாப்பிட்டு பாத்திரங்களை அலம்பி வெளியே திண்ணையில் வெயிலில் காய வைத்து விட்டு வந்து நித்யாவின் அருகில் படுத்து கொண்டவனையும் நித்ரா தேவி அணைத்து கொண்டாள்.
அரை மணி நேரம் கழித்து தானாக எழுந்தவன், குழந்தையை சுற்றி தலையணைகளை வைத்து விட்டு சமையலறை பக்கம் போக, அங்கிருந்த தாயும்,தங்கையும் அவனை பார்த்ததும் தாங்கள் பேசிய பேச்சை நிறுத்தினார்கள்.
அவர்களை திரும்பியும் பார்க்காமல் வீட்டில் இருந்து வெளியே வந்தவன் அண்ணியிடம் குழந்தையை தூங்குவதை சொல்லி விட்டு நேராக தங்களது ஆஃபீஸ் போக அங்கு இருந்த வாசு எதுவும் பேசாமல் டீ குடுக்க அதை வாங்கி குடித்தான்.
அதன் பின் சில தகவல்களை நண்பர்களோடு ஃபோனில் பேசியவன், வந்திருந்த மெயில்களுக்கு பதில் சொல்லி விட்டு கடிகாரம் பார்க்க ஆறு என காட்டியதும் "நான் கெளம்பறேன் வாசு..நாளைக்கு பாக்கலாம்.."என சொல்லி கிளம்பியவனின் வண்டி ரத்னா வேலை செய்யும் பத்திர பதிவு அலுவலகத்தின் வாசலில் போய் அமைதியானது.(தொடரும்)

Author: Uppada
Article Title: காண்பது எல்லாம் உனது உருவம் 2
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.