• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

ஒரு பாக்கெட் அப்பளப்பூ - டீசர்

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
91
ஒரு பாக்கெட் அப்பளப்பூ!

“அண்ணே ஒரு பாக்கெட் அப்பளப் பூ குடுங்க அண்ணே!” அரைக்கால் படியை விட கொஞ்சம் பெரியதாக இருந்த சிறுவன், ஐந்து ரூபாய் நாணயத்தை நீட்டிய வண்ணம் கேட்க, மேஜைக்குக் கீழ் குனிந்து அதை எடுக்கப் போன மாணிக்கத்திடம் கண்ணைக் காட்டிவிட்டு, “அப்பளப்பூ முடிஞ்சு போச்சு தம்பி! லேஸ் பாக்கெட் தரவா?” என்று கேட்டார் கடை முதலாளியான நவாஸ் பாய்.

“லேஸா? வேண்டாமே.. ஓகே ஓகே சிப்ஸ் குடுங்க” என்ற அரைக்கால் படி, அதை வாங்கிவிட்டுத் திரும்பி நடக்க,

அன்று தான் புதிதாய் வேலைக்குச் சேர்ந்த மாணிக்கம், “அண்ணே அப்பளப் பூ ஒரு பாக்கெட் மிச்சம் இருந்துச்சுல்ல அண்ணே? நீங்க தூக்கி கல்லாப்பெட்டிக்கு கீழே போட்டிங்கள்ல?” என்று கேட்க,

“அது ஒன்னு ஸ்டாக் இருக்கணும்ப்பா எப்பயும்.. அந்த ஊளைக்காத்தான் கரெக்டா மத்தியானம் பன்னெண்டு மணிக்கு வருவான். கொடுத்து வச்ச மாதிரி ‘அப்பளப் பூ அப்பளப் பூ’ ம்பான்… கொடுக்கலையோ கடையை சாத்த விட மாட்டான்” என்றார் நவாஸ் பாய்.

“என்ன பாய்! புதுப் பயலுக்கு என்ன கதை சொல்லிட்டு இருக்கே?” காதைக் குடைந்தபடியே அங்கே வந்தார் மாசிலாமணி தாத்தா.

“அதான் தாத்தா.. எல்லாம் ஊளைக்காத்தான் கதை தான். ஒத்த பாக்கெட் அவனுக்காக எடுத்து வச்சேன்”

“ஆமா டே! நல்லா இருப்ப.. குடுத்துரு.. இல்ல.. ராத்திரியில ஊருக்கே கேக்குற மாதிரி ஊளை விட்டுட்டு இருப்பான். ஒரு பய தூங்க முடியாது” என்றபடி மீண்டும் காதை குடைந்து கொண்டு வந்த வழியே சென்றார் மாசிலாமணி தாத்தா


யார் இந்த ஊளைக் காத்தான்? அவனுக்கும் அப்பளப் பூவுக்கும் என்ன சம்பந்தம்?

விரைவில்…
 

Author: SudhaSri
Article Title: ஒரு பாக்கெட் அப்பளப்பூ - டீசர்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom