என்றென்றும் வேண்டும்- 20
அதர்வண வேதத்தில் 6000 மந்திரங்கள் 760 துதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடப்படும் சில அபூர்வ தாவரங்கள் எவை என்று தெரியவில்லை. அவைகளைத்தான் தாயத்துகளாக அணிந்து வந்தனர்.
அதர்வண வேதத்தை 20 காண்டங்களாகப் பிரித்துள்ளனர். இந்தப் பட்டியலைப் பார்த்தாலேயே அவர்கள் சிறந்த நாகரீகமும் உயர்ந்த சிந்தனையும் உடையவரகள் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி என விளங்கும்.
முதல் காண்டம்:
முதல் காண்டத்தின் முதல் மந்திரமே வாசஸ்பதி என்னும் வாக் (பேச்சு) தேவனையும் வசோஸ்பதி என்னும் செல்வ தேவனையும் வணங்கும் மந்திரம் ஆகும்.
கல்விக்கான மந்திரங்கள்-வெற்றிக்கான மந்திரங்கள்-எதிரிகளை அழிப்பதற்கான மந்திரங்கள்-நோயை அகற்றுவதற்கான மந்திரங்கள்-தண்ணீர் தேவதை பற்றிய மந்திரங்கள்-வரங்களைப் பெறும் மந்திரங்கள்-தர்மம் தொடர்பான மந்திரங்கள்.
2 ஆம் காண்டம்:
இதில் ஒவ்வொன்றிலும் 5 மந்திரங்களைக் கொண்ட 36 துதிகள் காணப்படுகின்றன.-நோயைக் குணப்படுத்தும் மந்திரங்கள்-ஜங்கிடா மணி என்னும் தாயத்து மந்திரங்கள்-அக்னி, இந்திரன், பரப்பிரம்மம் பற்றிய துதிகள் இந்தக் காண்டத்தில் இருக்கின்றன.
3 ஆம் காண்டம்:
ரிக் வேதத்தில் இடம்பெற்ற வசிஷ்ட மஹரிஷியின் முக்கிய மந்திரம், கொஞ்சம் மாறுதல்களுடன் இதில் உள்ளது. இது செல்வத்தை வேண்டும் மந்திரமாகும்.-எதிரிகளைத் தோற்கடிப்பதற்கான மந்திரம்-தேச ஒற்றுமைக்கான மந்திரம்-பட்டாபிஷேக மந்திரம்-பர்ண மணி என்னும் அபூர்வ தாயத்து மந்திரம் — இந்தக் காண்டத்தில் இருக்கின்றன.
இதில் ஒவ்வொன்றிலும் 6 மந்திரங்களைக் கொண்ட 31 துதிகள் காணப்படுகின்றன.
4 ஆம் காண்டம்:
இதில் ஒவ்வொன்றிலும் 7 மந்திரங்களைக் கொண்ட 40 துதிகள் காணப்படுகின்றன.
ரிக் வேதத்தில் உள்ள யார்? என்னும் மந்திரம் இதில் இடம்பெறுகிறது. யார் என்றால் சம்ஸ்கிருதத்தில் க: இது பிரம்மாவுக்கும் பெயர்! அதாவது ஓரெழுத்துச் சொல். இதை வைத்து யாரை வணங்குவது என்று மந்திரம் முழுதும் திரும்பத் திரும்ப வரும்.
இதில் அதிசய ஒற்றுமை என்ன வென்றால் தமிழ் “க” பிராமி லிபியிலிருந்து வந்தது. அந்த “க” பிராமியில் சிலுவை வடிவில் இருக்கும். அது எகிப்தில் கடவுளைக் குறிக்கும் சித்திர எழுத்து. ஆனால் வெறும் சிலுவையாக இல்லாமல் இரு புறமும் கைகளை உயரத் தூக்கிய மனிதன் போல மேல் நோக்கிய கோடுகளுடன் இருக்கும்.
விஷத்தை அகற்றும் மந்திரம்-எதிரிகளை நாடு கடத்தும் மந்திரம்-பலத்தை அதிகரிக்கும் மந்திரம்-தூக்கமின்மையை அகற்றும் மந்திரம்-சங்கு கிழிஞ்சல்களைக் கொண்டு தாயத்து செய்யும் மந்திரம்-மரங்கள், மழையை நோக்கி உச்சரிக்கும் மந்திரங்கள்-மூலிகைகள் பசுக்களை நோக்கி உச்சரிக்கும் மந்திரங்கள்-பாவங்களைப் போக்கும் மந்திரங்கள்-புழுக்களை அகற்றும் மந்திரங்கள்- சக்தியை அதிகரிக்கும் மந்திரங்கள்
- தொடரும்....
அந்த உணர்வு பகிர்தலுக்குப் பிறகு விஸ்வநாதன் காயத்ரியின் உறவு இன்னும் மேம்பட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
விஸ்வநாதனும் இப்போது காயத்ரியின் கம்பெனியில் கன்சல்டண்டாக இருப்பதால் அவனும் வாரத்துக்கு இரண்டு மூன்று நாட்கள் அவர்கள் கம்பெனிக்கு வர வேண்டி இருந்தது.
அவன் கம்பெனிக்கு வரும் நாட்களில் இன்னும் சிலரது ஏளனப் பார்வை அவனைத் தொடர்ந்தாலும் யாரும் வெளிப்படையாக எதுவம் சொல்வதில்லை.
அவன் உயரம் தெரிந்ததால் ஒதுங்கியே இருந்தனர். விஸ்வநாதனும் அவர்களை கண்டு கொள்வதில்லை.
காயத்ரிக்கு அவன் இருக்கும் ஹெல்த் கேர் டொமைனில் (health care domain) இப்போது வேலை கொடுத்திருப்பதால் அவளும் அவனோடு நடக்கும் சந்திப்புகளில் கலந்து கொள்வாள்.
அவன் கம்பெனிக்கு போகும் நாட்களில் சில சமயம் மாலையில் இருவருக்கும் ஒன்றாக வேலை முடிந்தாலும் விஸ்வநாதன் அவளை அழைக்க மாட்டான். அவள் தோழிகளோடு கம்பெனி பஸ்ஸில் வர விரும்புவாளாய் இருக்கும் என்று அவன் கிளம்பி விடுவான்.
காயத்ரியும் ஒரு நாளும் நானும் உங்க கூட வரவா என்று கேட்டதில்லை என்பதால் அவள் இன்னும் தன்னோடு வெளியில் காணப்பட தயங்குகிறாள் என்றே விஸ்வநாதன் நினைத்துக் கொண்டான்.
அன்றும் அது போல விஸ்வநாதன் வீட்டுக்கு வந்து விட்டான். காயத்ரி இரவு எட்டாகியும் வீட்டுக்கு வரவில்லை என்றதும் எல்லோருக்குமே பதட்டமாக இருந்தது.
பத்மா அவனை திட்டவே ஆரம்பித்து விட்டார்.
"அம்பி! நோக்கு கொஞ்சமானும் பொறுப்பு இருக்கா? வேலை மெனக்கெட்டு கோந்தையோட ஆபீஸ் வரைக்கும் போயிட்டு இப்படி அவளை அழைச்சிண்டு வராம இருப்பியோ? காலம் வேற கெட்டு கிடக்கு, மழை வேற வரும் போல இருக்கு.”
பத்மா புலம்பித் தள்ள அத்தையோ காயத்ரி வருகிறாளா என்று பார்க்க வாசலில் போய் உட்கார்ந்து கொண்டார்.
இருவரும் வழக்கமாக ஏழு மணிக்கெல்லாம் சாப்பிட்டு எட்டு மணிக்குள் தூங்கிப் பழக்கம்.
எப்போதும் ஆறு மணிக்குள் வருபவள் இன்று எட்டு மணியாகியும் காணோமே என்ற கவலையில் சாப்பிடக் கூட இல்லை இருவரும்.
"என்னடா விச்சு? நான் சொல்ல சொல்ல அப்படியே உக்காந்துண்டு இருக்கே? அவ செல்லுக்கு போன் போட்டியோ? ஏன் நாழியாரது? எங்க இருக்கா? என்ன எதுன்னு கேளு. அவளுக்கு வர சௌரியப்படலைனா நீ போய் கோந்தைய அழைச்சிண்டு வா. "
பத்மா பொரிந்து தள்ள விஸ்வநாதன் இனி இவர்கள் எதிரில் உட்கார்ந்திருந்தால் சும்மா விட மாட்டார்கள் என்று கிளம்புவதற்காக அறைக்குள் போய் சட்டை அணியப் போனான்.
விஸ்வநாதன் அவள் வழக்கமாக வரும் நேரத்திற்கு அரை மணி நேரம் மேலே ஆனதுமே அவளுக்கு அழைத்து விட்டான்.
ஆனால் அதில் "நீங்கள் அழைக்கும் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது " என்று வாய்ஸ் மெசேஜ் தான் வந்ததே தவிர வேறு அவளிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.
மீண்டும் மீண்டும் முயற்சி செய்தும் அதே பதில் வர அவனுக்கு கவலை அளித்தாலும் யாரை விசாரிப்பது என்று யோசனை. அவளுடன் வேலை செய்யும் யாரும் அவனுக்கு பரிச்சயம் இல்லை. அதோடு முதல் ஒரு மணி நேரம் அவள் தோழிகள் யாருடனாவது ஷாப்பிங் செய்ய மால் எதற்கும் போயிருக்கலாம் என்று நினைத்தான்.
முதல் நாள் தான் அவள் அலுவலகத்திற்கு அணிய சில உடைகள் வாங்க வேண்டும் என்று சொல்லியிருந்தாள். மாலை வந்ததும் அவளுக்கு காசு அக்கௌன்டில் போட்டு விட வேண்டும் என்று நினைத்திருந்தான்.
ஒரு வேளை அதற்கு தான் போயிருப்பாளோ? அங்கு பொருட்கள் வாங்கும் மும்முரத்தில் மணியை பார்க்கவில்லையோ என்று நினைத்திருந்தான். ஆனாலும் அம்மாவும் அத்தையும் சொல்லாமலே அவனுக்கே ஒரு பதட்டம் உள்ளுக்குள் இருந்தது.
ஆனாலும் அவளுக்கு ஒன்றும் ஆகாது என்று உள்ளுணர்வு சொல்ல எட்டரை மணி வரை பாப்போம். அதற்குள் வரவில்லையென்றால் கிளம்பி விடுவோம் என்று நினைத்தவன் அவளை எங்கே என்று தேடுவது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
நேராக சீனிவாச ராகவனுக்கு அடித்து காயத்ரியின் தோழிகள் நம்பரை கேட்கவும் அவனுக்கு தயக்கமாக இருந்தது.
உன் பொண்டாட்டி பத்தி நீ தெரிஞ்சிண்ட லட்சணம் இதானா என்று அவர் நினைத்து விட்டால்? ஆக இப்படியும் அப்படியுமாக யோசித்தபடி குழம்பிக் கொண்டிருந்தவன் இனி யோசித்து பயனில்லை.
அம்மாவையும் அத்தையும் அவள் போன் வேலை செய்யவில்லை என்று சொல்லி பதட்டப்படுத்தாமல் வெளியே போய் சீனிவாச ராகவனை அழைத்து கேட்கலாம் என்று நினைத்தபடி பைக் சாவியை எடுக்கும் போதே வெளியே காயத்ரியின் குரல் கேட்டது.
அதிலேயே மனம் நிம்மதியாக என்னவென்று விசாரிக்க வெளியே வந்தவனை காயத்ரியிடம் பேச முடியாதபடி அத்தையும் அம்மாவும் அவளை கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர்.
அத்தை காயத்ரியை ரொம்ப நாளாய் காணாதது போல அவள் கையை பிடித்துக் கொண்டார்.
பத்மா அவர் பாணியில் அதட்டினாலும் அதில் அன்பும் அக்கறையும் மட்டுமே இருந்தது.
"என்னடாம்மா ..? ஏன் இவ்ளோ நாழி ஆயிடுத்து? வேலை இருந்தா நாளைக்கு பண்றேன்னு உங்க மேலதிகாரிண்ட சொல்லிட்டு வரப்படாதோ?
இனிமே இப்படி சொல்லாம வேலை வாங்கினா 'போடா நீயுமாச்சு...உன் வேலையுமாச்சுன்னு கால் கடுதாசி குடுத்துட்டு வந்துரு. வேற இடத்துல நல்ல வேலைக்கு பாத்துக்கலாம்..."
அவர் வேலையால் தாமதம் என நினைத்து பொரிந்து தள்ள காயத்ரியை இருவரும் பேசவே விடவில்லை.
அவர்களின் விடாத பேச்சை கவனித்தபடியே விஸ்வநாதன் காயத்ரியின் முகத்தை பார்க்க என்னவோ சரியில்லையென்று அவனுக்கு தோன்றியது.
முகம் சோர்ந்து தலை கலைந்து கண்கள் கூட லேசாக கலங்கியிருந்தது.
அதோடு அவளுமே வந்ததில் இருந்து அவனையே பார்ப்பது போல தோன்றியது.
அவள் பார்வையில் இருந்த சேதி 'நான் ரொம்ப நொந்திருக்கேன். என்னை கட்டிக் கொண்டு ஆறுதல் சொல்லேன்...' என்பது போல தோன்றியது.
கையிலும் ஏதும் பைகள் கடைக்கு போய் வந்ததற்கான அறிகுறியாக இல்லை எனவும் அவன் புருவங்கள் யோசனையில் முடிச்சிட்டன. என்ன நடந்தது?
"அம்மா! என்ன காரணம்னு முதல்ல அவளை கேளுங்கோ. நீங்க ரெண்டு பேருமே மாறி மாறி பேசிண்டு இருக்கேளே?"
விஸ்வநாதன் அழுத்தமான குரலில் சொல்ல அதன் பிறகே அவர்கள் பேச்சை நிறுத்தினர்.
"சொல்லுடா கோந்தே..! அத்தையும் நானும் இத்தனை நாழி ஆயும் உன்ன காணலியேன்னு பதறி போய்ட்டோம். இப்ப தான் விச்சுவ உன்ன பாத்துட்டு வரச்சொல்லி வெரட்டிண்டு இருந்தேன்.அதுக்குள்ள நீயே வந்துட்டே. ஏன் பஸ் ஏதும் பிரேக் டவுனா?"
மாமியார் சொல்லி முடித்ததும் காயத்ரியின் பார்வை விஸ்வநாதன் மேல் தான்.
'அப்ப நீ என்னை தேடலியா?'
அவள் கேள்வி புரிந்தாலும் அங்கே பதில் சொல்ல விஸ்வநாதன் விரும்பவில்லை. அவளைப் பார்த்து கண்களை மூடித் திறந்தான்.
"நான் ஹாஸ்பிடல் போயிட்டு வரேன் மா. அதான் லேட்டாயிடுத்து..."
மேலே அவள் சொல்லுமுன் அம்மா அத்தை இருவரும் அவளை சூழ்ந்து கொண்டு "கோந்தே..! என்ன ஆச்சு? எங்கேயானும் விழுந்துட்டியா?
இதுக்கு தான் இவனை அப்போலேந்து வெஸ்ஸுண்டு இருக்கேன். ஏன் வரச்சே கோந்தைய கையோட அழைச்சிண்டு வரலேன்னு?"
அவர்கள் மேலும் பதறுவதற்குள் காயத்ரியே பதில் சொன்னாள்.
"நேக்கு இல்லைம்மா..! என் பிரெண்டுக்கு..."
அவளுக்கு இல்லை என்றதும் சற்று ஆசுவாசம் ஆனவர்கள் ஆனாலும் பெண்ணுக்கு என்ன ஆனதோ என்ற கவலையில் கேட்டனர்.
"அடப்பாவமே..! என்னடா ஆச்சு?"
"அவளுக்கு மூணு மாசம். அது கலைஞ்சுடுத்து..." என்றவள் மேலே சொல்லாமல் நிறுத்திக்கொள்ள அவள் முகம் பார்த்தே அவள் அதைப்பற்றி பேசினால் அழுது விடுவாள் என்று விஸ்வநாதனுக்கு தோன்றி விட பேச்சை மாற்றினான்.
"அம்மா! ஏன் அதைப் பத்தியே இன்னும் விஜாரிச்சுண்டு இருக்கே? அதான் ஒன் மாட்டுப்பொண் பத்திரமா ஆத்துக்கு வந்துட்டாளோன்னோ?
காலா காலத்துல சாப்பிட்டு ரெண்டு பேரும் படுங்கோ...காயத்ரி..! நீயும் போய் கை காலை அலம்பிண்டு வா. சாப்பிட்டு அப்புறமா ட்ரெஸ் மாத்திக்கலாம்.." என்று அவளுக்கும் ஆணையிட்டான்.
காயத்ரி இருந்த மனநிலையில் சாப்பிட முடியுமா என்று தெரியவில்லை. ஆனாலும் தான் சாப்பிடாமல் இருவரும் சாப்பிட மாட்டார்கள் என்று தெரியும். அதனால் விஸ்வநாதன் சொன்னதை மறுக்காமல் போய் கை கழுவிக் கொண்டு வந்தாள்.
சாப்பிடாமல் மூவரும் விட மாட்டார்கள் என்று முயன்று மூன்று இட்லிகளை வாயில் அடைத்துக் கொண்டாள்.
அத்தையும் பத்மாவும் சாப்பிட்டு படுக்கப் போக இருவரையும் கழுத்தை கட்டிக் கொண்ட காயத்ரி "அம்மா குட்டி..! அத்தை குட்டி..! " என்று அவர்களின் கன்னத்தில் முத்தமிட இருவர் முகமும் மலர்ந்தது.
அதுவரை தங்கள் பெண்ணுக்கு என்னவோ என்று கவலை பட்டவர்கள் அவள் கட்டி முத்தமிட்டதும் சரியாகிவிட்டாள் என்று ஆறுதல் அடைந்தார்கள்.
"ஐ லவ் யூ போத் சோ மச்.." ..என்று காயத்ரி சொல்லவும் இருவர் முகத்திலும் சிறு வெட்கம்.
"போடி..! இதெல்லாம் எங்களண்டை சொல்லிண்டு..." என்று அத்தை சிணுங்க மாமியார் செல்லமாய் அதட்டினார்.
"விச்சு ரொம்ப நாழியா காத்துண்டு இருக்கான் பாரு.. போ.."
விஸ்வநாதன் ஏற்கனவே அவள் கொஞ்சுவதை பார்த்து விட்டு சிரித்தபடி அவர்கள் அறைக்கு போய் விட்டான்.
காயத்ரி தங்கள் அறைக்குள் நுழைந்த போது விஸ்வநாதன் கட்டிலில் படுத்தபடி அவள் வரவுக்காக காத்திருந்தான். அவன் பார்வை கூர்மையாய் அவள் மேல் படிந்தது.
அவளாக ஏதாவது சொல்லுவாள் என்று எதிர்பார்த்து அவள் முகம் பார்க்க அவள் உடையை கூட மாற்றாமல் கட்டிலில் அவன் அருகில் படுத்து அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.
சில நொடிகள் அவளை அப்படியே இருக்க விட்டவன் அதன் பிறகு பிடிவாதமாய் தன் நெஞ்சில் புதைந்திருந்த அவள் முகத்தை நிமிர்த்தினான். அவள் முகத்தை கவலையோடு பார்த்து
"பட்டூ .. இப்ப சொல்லு...என்ன ஆச்சு? ஏன் என்னவோ போல இருக்கே?" என்று கேட்டான்.
"அதிருக்கட்டும்..நீங்க மொதல்ல சொல்லுங்கோ..நீங்க என்னை தேடினேளா? இல்ல அத்தையும் அம்மாவும் தான் எனக்காக கவலைப்பட்டாளா..?"
அவனை அணைத்து படுத்திருந்த நொடிகளில் அவள் முகம் சற்று தெளிந்திருந்தது.
அவள் மனநிலையை திசை திருப்பி அவள் கவலையில் இருந்து மீட்க நினைத்து விஸ்வநாதன் விளையாட்டாய் பேச்சை தொடர்ந்தான்.
"ஓ தேடினேனே..? கையில கிடைச்சா சொல்லாம போன இந்த காலை ஒடச்சு அடுப்புல வெச்சிடனும்.." என்று அவள் கால்களை தன் கால்களால் நெருக்கிக் கொண்டான்.
"போன் போட்டு சொல்லாத இந்த கைய முறுக்கி சூடு போடணும்.." என்றபடி அவள் கைகளை பிடித்து உள்ளங்கைகளில் உதடுகளை பதித்தான்.
"ஏண்டி சொல்லாம போனேன்னு இப்படி பளார்னு நாலு அறை கன்னத்துலயே விடணும்... இதுக்காகவெல்லாம் தான் தேடினேன்…" என்று அவள் கன்னத்தில் லேசாய் கடித்தான்.
அவன் அன்பான கவனிப்பில் அவள் முகத்தில் இருந்த கவலை மறைந்து சிரிப்பு வந்தது.
"போங்கோன்னா..இதுக்கு பேரு தண்டனையா..?" என்று கிளிக்கி சிரித்தாள் காயத்ரி. அவள் முகம் எப்போதும் போல மலர்ந்து விகசிக்க அதை ரசித்தபடி படுத்திருந்தான் விஸ்வநாதன்.
"பின்ன..? இது போறலியா..? இன்னொரு தடவை இப்படி பண்ணாதபடிக்கி இன்னும் ஸ்ட்ராங்கா குடுக்கவா..?" என்று அவள் உதடுகளை நெருங்க அவள் விலகவே இல்லை.
அந்த முத்தத்தில் தன் முழுவதையும் கொடுத்தாள். அவள் அதீத நெருக்கமே விஸ்வநாதனை கவலைப்படுத்த எதற்கோ அவன் பட்டூ பயந்திருக்கிறாள் என்று புரிந்து கொண்டான்.
மெல்ல அவளிடம் பேசி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தவன் அவளே ஆரம்பிக்கட்டும் என்று காத்திருந்தான்.
காயத்ரி எதுவுமே பேசாமல் திடீரென அவன் தலை உச்சியிலும் காதிலும் முத்தமிட "பட்டூ உனக்கு முத்தம் குடுக்கணும் னா வேற நல்ல இடமெல்லாம் இருக்கு.." என்று சிரித்தான்.
காயத்ரி பதிலே சொல்லாமல் அவன் நெஞ்சில் சாய்ந்து கொள்ள அவள் தலையை மெல்ல வருடி விட்டான் விஸ்வநாதன்.
"சொல்லுடா பட்டூ..! ரொம்ப நேரமா எதோ சொல்லணும்னு நினைச்சிண்டு இருக்கே..! அதை என்கிட்ட சொல்லு..."
அவன் அன்பு ததும்பும் குரலில் காயத்ரிக்கு அதற்கு மேல் மனதில் இருந்ததை மறைக்க முடியவில்லை.
மெல்ல முகத்தை நிமிர்த்தி விஸ்வநாதனை பார்த்தவள் "நளினாவுக்கு அபார்ஷன் ஆயிடுத்துனா. எவ்வளவு ஆசையா இருந்தா தெரியுமான்னா? " குரலில் அவ்வளவு வருத்தம்.
"பாவம் தான்..என்ன .பண்றது..? அடுத்த வாட்டி ஜாக்ரதையா இருந்தா பொறந்துட்டு போறது...அவா ஆத்துல பாத்துப்பா " என்று விஸ்வநாதன் அவள் கன்னத்தை தட்டி ஆறுதல் சொல்ல காயத்ரி மறுப்பாய் தலையசைத்தாள்.
"இல்லேன்னா.. இனிமே பொறக்காது... இதுவே அவ ஆம்படையான் அடிச்சு தள்ளிவிட்டதுல தான் கலைஞ்சது..."
சொல்லும் போதே அவள் கண்ணில் கண்ணீர் தளும்பியது.
Author: SudhaSri
Article Title: என்றென்றும் வேண்டும்- 20
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: என்றென்றும் வேண்டும்- 20
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.