• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

உனதன்பின் கதகதப்பில் 4

Dhakai

Member
Joined
Mar 23, 2025
Messages
57
"என்னங்க அவன்கிட்ட போய் இப்படிப் பேசிட்டு வந்திருக்கீங்க. நாம முன்ன நின்னு நடத்தி வைக்கிற கல்யாணமா தான் அவன் கல்யாணம் இருக்கனும். அப்ப தான் நம்மகிட்ட நன்றியுணர்ச்சியோட இருப்பான். நாளைக்கே நான் போய் அவன்கிட்ட பேசுறேன்" செல்லத்துரை செந்திலின் கடைக்குச் சென்று பேசியதை உரைத்ததும் கோபம் கொண்டவராய் இவ்வாறு உரைத்திருந்த காஞ்சனா மறுநாள் காலையே செந்திலின் வீட்டிற்குச் சென்றிருந்தார்.

சுந்தரலட்சுமியைப் பார்க்கப் போகிறோமென்ற மகிழ்ச்சியுடன் தனது படுக்கையறையில் நின்று கிளம்பிக் கொண்டிருந்த செந்தில், முகப்பறையில் அத்தையின் குரலைக் கேட்டு, 'இவங்க எதுக்கு இப்ப வந்திருக்காங்க' என்ற யோசனையுடன் வெளியே வந்தான்.

"என்ன செந்திலு! உன் மாமாவையே எதிர்த்து பேசுற அளவுக்கு வளர்ந்துட்டியா நீ" என்று காஞ்சனா அதட்டலாய் கேட்கவும்,

"அப்படிலாம் இல்ல அத்தை!" என்று அவன் ஏதோ கூற வர, "நல்லா கேளுங்க அண்ணி. அந்தப் பொண்ணு நம்ம குடும்பத்துக்கு வேண்டாம்னு சொன்னா கேட்காம அந்தப் பொண்ணு வீட்டுக்குப் போய் நானே என் கல்யாணத்துக்காகப் பேசிக்கிறேன்னு கிளம்பி நிக்கிறான்" என்று புலம்பினார் மீனா.

"ம்மாஅஅ சும்மா இருமா" என்று அதட்டிய செந்தில்,

"நான் இப்ப அந்தப் பொண்ணு வீட்டுக்குப் போய்ப் பேசப் போறேன். வர்றீங்களா அத்தை?" எனக் கேட்டான்.

'இவனை இப்படியே விட்டா நம்ம பேச்சை மீறிப் போய்டுவான் போலயே!' என்று எண்ணியவராய், "இப்ப இப்படிக் கூப்பிட்ட மாதிரி, என்கிட்ட வந்து எனக்கு ஒரு பொண்ணைப் பிடிச்சிருக்கு, எனக்குக் கட்டி வையுங்கனு கேட்டிருந்தா நானே கட்டி வச்சிருப்பேனே செந்திலு! சரி கிளம்பு போவோம்" என்றவர் சொன்னதும் செந்திலின் முகம் பொலிவுற,

"என்ன அண்ணி நீங்க? அந்தப் பொண்ணைக் கட்டிக்கிட்டா விவாகரத்து ஆகிடும்னு ஜோசியர் சொல்றாரு, அந்தப் பொண்ணைப் போய்க் கட்டி வைக்கிறேன்னு சொல்றீங்களே?" எனக் கவலையுடன் கேட்டிருந்தார் மீனா.

"எந்தக் காலத்துல இருக்கோம் மீனா. உங்க அண்ணா தான் இப்பவும் ஜோசியர் சொல்றதை நம்பிட்டு இருக்காருனா நீயும் இப்படிப் பேசுறீயே! நம்ம பிள்ளையோட சந்தோஷம் தான் முக்கியம். மனப் பொருத்தம் இருந்தா மத்த பொருத்தம்லாம் பார்க்கத் தேவையில்ல மீனா" என்றவராய்,

"நீயும் கிளம்பு! பொண்ணு வீட்டைப் போய்ப் பார்த்துட்டு வந்துடுவோம்" என்றார்.

"ஆமா நீயும் வாமா!" என்றான் செந்தில்.

விருப்பம் இல்லாமலே மீனா கிளம்பிக் கொண்டிருக்க, "நான் கேப் புக் செய்றேன் அத்தை" என்றான் செந்தில்.

"நான் நம்ம ஸ்கார்பியோல தான் வந்தேன் செந்திலு. அதுலயே போய்டலாம்" என்ற காஞ்சனா,

"உனக்குனு கார் வாங்கிக்கோ செந்திலு. கல்யாணம் ஆனப் பிறகு மூனு பேரா போறதுக்குத் தேவைப்படும் தானே. வீட்டையும் கொஞ்சம் பெரிசா கட்டப் பாரு. ஒரே ஒரு சின்னப் பெட் ரூம் வச்சிருக்க. அதுலயும் ஏசி கிடையாது. நல்லா பெரிய வீட்டுல வளர்ந்த பொண்ணு இங்கே எப்டி வந்து தங்குவா?" என்றார்.

"ஹ்ம்ம் செய்யனும் அத்தை! சரி கிளம்பலாம் வாங்க. நான் நேத்தே பாலாண்ணாகிட்ட சொல்லி பொண்ணு வீட்டுல பேசச் சொல்லிட்டேன்" என்றவனாய் வீட்டுச் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.

மூவரும் ஸ்கார்பியோ காரில் பெண் வீட்டை நோக்கிப் பயணித்திருந்தனர்.

வழியில் ஒரு கடையில் வண்டியை நிறுத்தி பழங்களைச் செந்தில் வாங்கிக் கொள்ள, "பொண்ணு பார்க்கத் தானே போறோம். ஒப்புத் தாம்பூலம் மாத்த போற மாதிரி எதுக்கு இவ்வளோ பழம் வாங்கியிருக்க?" என்று கேட்டார் காஞ்சனா.

"மொத முறையா ஒருத்தங்க வீட்டுக்குப் போகும் போது வெறுங்கையோடயா போறது அத்தை" என்றான் செந்தில்.

ஒரு மணி நேரப் பயணத்தில் சுந்தரலட்சுமியின் வீட்டை இவர்கள் அடைந்த நொடி, பரபரப்புடன் வாசல் வரை வந்து இவர்களை வரவேற்றார் சுந்தரலட்சுமியின் தந்தை முகுந்தன். அச்சமயம் பாலமுருகனும் அங்கு வந்து சேர்ந்தார்.

வில்லா போன்ற அமைப்புடன் விஸ்தாரமாக இருந்த வீட்டைப் பார்த்ததும் தனது வீட்டை நிச்சயமாகப் பெரிதாகக் கட்ட வேண்டுமென எண்ணிக் கொண்டான் செந்தில்.

வீட்டினுள் நுழைந்ததும் செல்வராணி இவர்களை வரவேற்றவராய் அமரக் கூறிவிட்டு அறையின் உள்ளே செல்ல, "பொண்ணு எங்கே இருக்கா?" என்று கேட்டார் காஞ்சனா.

"உள்ளே அலங்காரம் செஞ்சிட்டு இருக்கா" என்று முகுந்தன் கூறவும், "அப்படியா நான் அங்கேயே போய்ப் பார்த்துட்டு வந்துடுறேன்" என்றவராய் காஞ்சனா முகுந்தன் காண்பித்த படுக்கையறை நோக்கிச் செல்ல, அவரைத் தடுக்க முடியாமல் திருதிருத்து முழித்தார் அவர்.

அதற்குள் அந்தப் படுக்கையறையின் கதவைத் தட்டியவாறு காஞ்சனா நிற்க, கதவைத் திறந்த செல்வராணி, காஞ்சனாவைக் கண்டு திகைத்து நின்றார்.

முகப்பறை ஒட்டியே இருந்த அந்தப் படுக்கையறையின் ஜன்னலருகே போடப்பட்டிருந்த நாற்காலியில் மற்றவர்கள் அமர்ந்திருக்க,

செல்வராணி அமர்ந்திருப்பவர்களைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு கணவரைப் பார்த்து, 'என்ன இது' என்பது போல் முறைத்தவராய் காஞ்சனாவைப் பார்த்து மென்னகைப் புரிந்தார்.

"பொண்ணைப் பார்க்கலாமா?" என்று காஞ்சனா கேட்கவும்,

சிரித்த முகமாய், "உள்ளே வாங்க" என்று அழைத்தார் செல்வராணி.

பட்டுப் புடவை உடுத்தி தலை நிறையப் பூ வைத்து அலங்கார மேஜை முன் அமர்ந்து முக அலங்காரம் செய்து கொண்டிருந்த சுந்தரலட்சுமி எழுந்து நின்றாள்.

'யாரு இவங்க' என்பது போல் அன்னையைப் பார்த்து வைத்தாள்.

அவளைப் பார்த்த காஞ்சனா, "நான் செந்திலோட அத்தை" என்று தன்னை அறிமுகம் செய்து கொள்ள,

'ஓ அவரோட மாமா குடும்பம்னு சொன்னாரே! அவங்களா?' என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்ட சுந்தரலட்சுமி, மென்னகைப் புரிந்தாள்.

"மகாலட்சுமி மாதிரி இருக்கமா" என்று அவளுக்குத் திருஷ்டிக் கழிப்பது போல் செய்து கூறியவரை மேலும் இதழ் விரிந்த சிரிப்புடன் பார்த்தாள் சுந்தரலட்சுமி.

"சரி மா! நீ ரெடியாகிட்டு வா! நான் வெளில இருக்கேன்" என்றவராய் காஞ்சனா வெளியே செல்ல, நிம்மதி பெருமூச்சு விட்டவராய், "சரி சரி ரெடியாகு லட்சுமி" கதவைச் சாற்றியவராய் அவளைத் துரிதப்படுத்தினார் செல்வராணி.

"இருமா செந்திலை ஒரு வாட்டி எட்டிப் பார்த்துட்டு வந்துடுறேன்" என்றவளாய் அறையிலிருந்த ஜன்னல் வழியாய் எட்டிப் பார்க்க, டிரெஸ்ஸிங் டேபிள் அருகே நின்றிருந்த செல்வராணி, "டைம் ஆகுது லட்சுமி. வெளியே போய் மாப்ளையைப் பார்த்துக்கலாம். இங்கே வா நீ" என்று அழைத்தார்.

'ஏன்மா ஜன்னலை ஒட்டி சேர் போட்டீங்க. அவரோட முதுகு தான் தெரியுது' மெல்லிய குரலில் தாயிடம் கூறியவளாய் ஜன்னலை ஒட்டியிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தவனின் முதுகை அவள் பார்த்திருந்த நொடி அவளின் செவியைத் தீண்டியது காஞ்சனாவின் குரல்‌.

செந்திலின் அருகே இருந்த நாற்காலியில் வந்தமர்ந்த காஞ்சனா, "என்னடா பொண்ணு பார்த்து வச்சிருக்க! பொண்ணை விட எப்பவுமே ஆம்பிளை தான் உசரமா பெரியாளா தெரியனும். அந்தப் பொண்ணோட வளர்த்திக்கும் உடம்புக்கும் நீ அவ பக்கத்துல நின்னா சின்னவனா தெரிவ! இப்படிப் பொண்ணு நமக்குத் தேவையா?" அவரது கட்டைக் குரலில் குசுகுசுவெனக் கூறுவது இவளின் காதினில் தெளிவாக விழுந்தது.

"இந்தம்மாக்கு என்ன ரெட்டை நாக்கா? சரியான விஷமா இருக்கே இந்த அத்தை" என்று மனத்தோடு நினைத்துக் கொண்டவளாய் தாயிடம் சென்று இதனை அவள் கூற,

"இந்தம்மாக்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாகத் தான் இருக்கனும்டி" என்றவராய், "சரி சரி பொட்டு வச்சிட்டு வா! நான் காபி டிரே எடுத்து வைக்கிறேன்" என்றவாறு சமையலறைக்குச் சென்றார்.

சுந்தரலட்சுமி அனைவருக்கும் காபி கொடுத்து விட்டு அங்கேயே நாற்காலியில் அமர்ந்திருக்க, "அப்புறம் நீங்க பொண்ணுக்குச் செய்யப் போற மத்த விஷயங்க பத்திலாம் பேசிடலாமா?" என்று ஆரம்பித்தார் காஞ்சனா.

சுந்தரலட்சுமி சற்று கோபமும் பிடித்தமின்மையுமாய் அவரைப் பார்க்க, "இதுல பேச என்ன இருக்கு அத்தை!" முகுந்தன் பேசுவதற்கு முன் இடை புகுந்தான் செந்தில்.

"எனக்கு வரதட்சணை வாங்குறதுல விருப்பமில்லை சார். நீங்க உங்க பொண்ணுக்கு என்ன செய்யனும்னு நினைக்கிறீங்களோ செய்யுங்க. நானும் உங்க பொண்ணும் சம்பாதிக்கிறோம். அதை வச்சி எங்க வாழ்க்கையை நாங்க வாழ்ந்துப்போம்! நிச்சயதார்த்தம், ரிசப்ஷன்னு எதுவும் வச்சிக்க எனக்கு விருப்பமில்லை. கல்யாணத்தைக் கூடச் சிம்பிளா கோவில்ல செஞ்சிட்டாப் போதும்." என்று அவன் பேச பேச சுந்தரலட்சுமியின் முகம் பொலிவுற, காஞ்சனாவின் முகம் கருத்துப் போனது.

'ஏன்டா?' என்று மீனா அவனைச் சுரண்ட, "சும்மா இருமா. நான் பேசிக்கிறேன்" என்று தாயை அமைதிப்படுத்தினான்.

'நான் பேச வந்த காரியத்தையே கெடுத்துட்டானே!' மனதிற்குள் கறுவி கொண்டார் காஞ்சனா.

முகுந்தனும் செல்வராணியும் புருவங்களை உயர்த்தியவர்களாய் கண் ஜாடையில் செந்திலை மெச்சி கொள்ள, "அப்புறம் என்ன? இன்னிக்கே கல்யாணத் தேதியைக் குறிச்சிடலாமே" என்று கேட்டார் பாலமுருகன்.

ஆமோதித்தவனாய் செந்தில், "அடுத்த மாசத்துலயே நல்ல முகூர்த்தம் இருக்குனு கூகுள் பஞ்சாங்கத்துல பார்த்தேன்" என்று கூறவும்,

"மாப்பிள்ளை சொல்றதும் சரி தானே! அடுத்த முகூர்த்தத்துல வச்சிக்கலாமே" என்றார் பாலமுருகன்.

முகுந்தன் செல்வராணியைப் பார்க்க, "ஒரு நிமிஷம்! நாங்க கலந்து பேசிட்டு வரோம்" என்ற செல்வராணி, கணவன் மற்றும் மகள் இருவரையும் அறைக்குள் அழைத்துச் சென்றார்.

அவர்கள் உள்ளே நுழைந்த நொடி, "என்னடா நினைச்சிட்டு இருக்க நீ மனசுல! எனக்குப் பொண்ணு பிடிக்கலைனு சொல்றேன்! காதுல வாங்காம நீ பாட்டுக்குப் பேசிட்டு போற! உன் கல்யாணத்தைப் பத்தி பேசும் போது உன் மாமா உன் கூட இருக்கனும்ன்ற எண்ணம் கூட இல்லாம போச்சுல உனக்கு! உன்னை நாங்க வளர்த்ததுக்கு நல்லா நன்றி காட்டிட்டடா" என்று காஞ்சனா பேசிக் கொண்டே போக,

செந்தில் வாய் திறக்க முனைந்த சமயம், "அதுக்கு நன்றி கடனா அவனோட வாழ்க்கையையே உங்களுக்குப் பணயம் வைக்கணும்னு சொல்றீங்களா? என்னமா நியாயம் இது" என்று ஆத்திரத்துடன் கேட்டிருந்தார் பாலமுருகன்.

கதவு திறக்கப்படும் ஓசைக் கேட்டு அனைவரும் அமைதியாக, இங்கே நடந்ததை எல்லாம் ஜன்னல் வழியாகப் பார்த்திருந்த சுந்தர லட்சுமி, 'கல்யாணம் முடிஞ்சதும் மொதல்ல இந்தம்மாக்கு ஆப்பு வைக்கிறேன். என்னா பேச்சு பேசுது' என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டாள்.

"நாங்க எங்க ஜோசியர்கிட்ட பேசிட்டு தேதியைச் சொல்றோம் மாப்ள! முடிஞ்ச வரைக்கும் அடுத்த மாசத்துல வர முகூர்த்தத்துலேயே கல்யாணத்தை வைக்கிறது மாதிரி பிளான் செய்யலாம்" என்று முகுந்தன் கூறவும் செந்திலுக்கும் பாலமுருகனுக்கும் பெரும் மகிழ்ச்சி.

அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு வந்த காஞ்சனா செந்திலிடம் பேச முனைய, உடனே கடைக்குக் கிளம்புவதாய் உரைத்துக் கிளம்பியிருந்தான் செந்தில்.

இனி இவனிடம் பேசிப் பயனில்லையென எண்ணியவராய் செல்லத்துரையிடம் சென்று, "நம்ம பார்த்து வளர்ந்த பய! நம்ம பேச்சை மீறிப் போறதா" என்று புலம்பித் தள்ளினார் காஞ்சனா.

"இப்ப அவன் நம்மளை நம்பி இல்லை காஞ்சனா. நாம தான் அவனை நம்பி இருக்கோம். நம்மளோட கடைகள் எல்லாத்தையும் அவன் தான் நிர்வாகம் செஞ்சிட்டு இருக்கான். அதனால கொஞ்சம் அடக்கி வாசிப்போம். கல்யாணம் முடியட்டும். நாம சொன்ன பொய்யை உண்மையாக்கிடுவோம்" என்று செல்லத்துரை சொல்லவும்,

"அப்படினா விவாகரத்து வாங்க வச்சிடலாம்னு சொல்றீங்களா?" என்று குரூரமான புன்னகையுடன் கேட்டிருந்தார் காஞ்சனா.

"ஆமா! மாமா பேச்சை மீறி செஞ்ச கல்யாணம் என்னைப் படுகுழில தள்ளிடுச்சுனு அவன் வாயாலயே சொல்லி நம்ம கால்ல அவனை விழ வைக்கிறேன்" என்று செல்லத்துரை சூளுரைக்க, "அந்த வேலையை என்கிட்ட விட்டுடுங்க. புருஷன் பொண்டாட்டிக்குள்ள சண்டையை வர வச்சி பிரிய வைக்கிற வேலையை நான் பார்த்துக்கிடுறேன்" என்றார் காஞ்சனா.


இவை எதையும் அறியாது சுந்தர லட்சுமியிடம் கைப்பேசியில் ஸ்வீட் நர்த்திங்க்ஸ் பேசி இன்ப வானில் பறந்து கொண்டிருந்தான் செந்தில்.
 
Last edited:

Author: Dhakai
Article Title: உனதன்பின் கதகதப்பில் 4
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

saradhavasan

Member
Joined
Oct 3, 2024
Messages
52
நீ பற பற சிறகு அடித்து விண்ணில் பற. சுந்தரி பார்வை உன் மேல்.இந்த விஷயத்தை எல்லாம் சமாளிக்க முடியும.
 

saradhavasan

Member
Joined
Oct 3, 2024
Messages
52
பாசமலர். தங்கையாக இருக்கும் அம்மாவை என்ன செய்ய
 
Joined
Mar 21, 2025
Messages
89
வாதம் பண்ணியாச்சு
வழிக்கு வரவில்லை
வேற யோசனையாக வரதட்சணையில் இறங்க
வழி கொடுக்காத செந்தில்
விவரமாய் பேசிட
விவாகம் முடிவாக அடுத்து
விவாகரத்து பிளான்....
வில்லத்தனமான
அத்தை மாமா...
விவரமான சுந்தரி....

சங்கீத ஸ்வரங்கள்
ஸ்வீட் நத்திங்
செந்தில் ❤️ சுந்தரி
சூப்பர்..... 🤩🤩🤩
 

Dhakai

Member
Joined
Mar 23, 2025
Messages
57
நீ பற பற சிறகு அடித்து விண்ணில் பற. சுந்தரி பார்வை உன் மேல்.இந்த விஷயத்தை எல்லாம் சமாளிக்க முடியும.
மிக்க நன்றி 🙏
 

Dhakai

Member
Joined
Mar 23, 2025
Messages
57
வாதம் பண்ணியாச்சு
வழிக்கு வரவில்லை
வேற யோசனையாக வரதட்சணையில் இறங்க
வழி கொடுக்காத செந்தில்
விவரமாய் பேசிட
விவாகம் முடிவாக அடுத்து
விவாகரத்து பிளான்....
வில்லத்தனமான
அத்தை மாமா...
விவரமான சுந்தரி....

சங்கீத ஸ்வரங்கள்
ஸ்வீட் நத்திங்
செந்தில் ❤️ சுந்தரி
சூப்பர்..... 🤩🤩🤩
அருமை 👏 👏 மிக்க நன்றி 🙏
 

Lakshmi

Member
Joined
Jun 19, 2024
Messages
76
பாவம் செந்தில் இவர்களைத் தான் ரொம்ப. .‌‌.ப நல்லவங்க என்று நினைத்து கொண்டு இருக்கிறான்
 

Dhakai

Member
Joined
Mar 23, 2025
Messages
57
பாவம் செந்தில் இவர்களைத் தான் ரொம்ப. .‌‌.ப நல்லவங்க என்று நினைத்து கொண்டு இருக்கிறான்
மிக்க நன்றி 😍
 
Top Bottom